December

December

இவர்கள் தானா ஈழத்தைப் பெற்றுத்தர இருந்தார்கள்?! :அழகி

Kuppi_Cynideபுலம்பெயர் தமிழ் மக்களே!
இன்று பனிவிழுந்து வெள்ளை வெளீரென்று ஜரோப்பிய மண்ணெங்கும் அழகாய் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. நத்தார் பண்டிகைக் காலமாதலாலும் அழகினை வேண்டியும் மெழுகுவர்த்திகளை ஏற்றி அதன் அழகை ரசித்துக் கொண்டிருப்பீர்கள். மெழுகுவர்த்தியும் தன்னை எரித்து, தானே உருகி, தன்னையே அழித்தும் ஒளியைக் கொடுத்து மற்றவர்களைச் சந்தோசப்படுத்திக் கொண்டிருக்கும்.

இப்படித்தான் ஒரு போராளி என்பவனும் இருக்க வேண்டும். ஒரு உண்மையான போராளி இப்படித்தான் இருப்பான். ஒரு இனத்துக்காகவும் ஒரு வர்க்கத்துக்காகவும் போராடும் போராளி தன் சுக போகங்களை மறந்து தன் உடன் பிறப்புக்களையும் துறந்து தியாக மனப்பான்மையுடன் வாழ வேண்டும். அத்துடன் சுதந்திரம் வேண்டி நிற்கும் அந்த மக்களையும் நேசிக்க வேண்டும். இப்படிப்பட்ட உத்தமர்கள் தான், மக்களுக்கு தலைமையேற்க வேண்டும். இப்படிப்பட்ட உத்தமர்களைத் தான் வரலாறும் நேசித்துக் கொண்டிருக்கின்றது.

உலகத்தில் இன விடுதலையையும் வர்க்க விடுதலையையும் அடைந்த நாடுகளையும் அதன் வரலாறுகளையும் எடுத்துப் படிக்கும் போது அந்தந்த நாட்டுக்காக தங்களையே அர்ப்பணித்த மாபெரும் தலைவர்கள் பற்றியும் அவர்கள் செய்த தியாகங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். கியூபா புரட்சியைவென்ற சேகுவரா பிடல்கஸ்ரோ, நிக்குரவாவின் புரட்சியை வென்ற சன்ரிஸ்தா ஒட்டகே, ரசியப் புரட்சியைத் தந்த லெனின், சீனாவில் புரட்சியை வெடிக்கச் செய்த மாவோ வியட்நாமில் கொசுமினும் தன் வாழ்க்கையின் அரைவாசிக் காலத்தை தன்னின மக்களுக்காய் சிறையிலே கழித்தனர். இன்றுவரையும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நெல்சன் மண்டேலா பற்றியும் அவர்கள் பட்ட கஸ்ரங்கள் பற்றியும் அறியலாம். அவர்கள் படங்களைப் பாருங்கள் இப்படியான தலைவர்கள் வாடி வதங்கி தோலும் தடியுமாகவே காட்சியளிப்பார்கள். ஏன்….? மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாடி வதங்கியிருக்கும் போது இவர்கள் வயிறு புடைக்கச் சாப்பிட்டுக் கொண்டிருக்கவில்லை. இவர்கள் எப்பொழுதும் மக்கள் சிந்தனையுடனும், மக்களோடுமே சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் முள்ளிவாய்க்காலில் மக்கள் பட்டினியால் செத்து மடிந்து கொண்டிருந்த வேளையில் பிரபாகரனும் அவரது சகாக்களும் தமிழ் நாட்டு நடிகர்கள் போல மினுமினுத்துக் கொண்டே காட்சியளித்தார்கள். இவ்வளவு பிரச்சினைகள் மத்தியில் இவர்களுக்கு உணவு எங்கிருந்து வந்தது….?

புலம்பெயர் தமிழ் மக்களே, இங்கு புலிக்கு பணம் சேர்ப்பவர்களை தயவுசெய்து கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள். அவர்களின் வீடுகளுக்குச் சென்று பாருங்கள். அவர்கள் எல்லோரும் எப்படி எல்லாம் வாழ்கின்றார்கள் என்பதைக் கண்டு கொள்வீர்கள். ஏதாவது விடுதலை உணர்வு கொஞ்சமாவது இருக்கின்றதா…? ஆனால் சில பேர் விடுதலையென்றும் போராட்டம் என்றும் கொக்கரித்துக் கொண்டிருக்கின்றார்கள். நாட்டுக்குப் போய் ஆயுதம் ஏந்திப் போராட இவர்களோ அல்லது தங்கள் பிள்ளைகளையோ அனுப்ப இவர்கள் தயாராக இருக்கின்றார்களா..? இதற்கு புலிக்கொடியைத் தூக்குபவர்கள் எல்லோரும் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளீர்கள்.

நாம் திரும்பத் திரும்ப இந்த விடயங்களைத் தான் எழுத வேண்டியுள்ளது. அத்திவாரம் இல்லாமல் எப்படிக் கட்டிடம் கட்ட முடியாதோ அப்படித்தான் விடுதலை அமைப்புக்களும். ஆனால் எந்தவொரு விடுதலை பற்றியும் தெரியாத, புரியாத ஒரு கூட்டம் தான் புலிக்கொடியுடன் அலைந்து கொண்டு திரிகின்றது. முள்ளிவாய்க்காலில் இறுதி நேரத்தில் நடந்த எம் மக்களின் அழிவுகளைக் காணும் போதும், தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் காணொளிக் காட்சிகளைப் பார்க்கும் போதும் எப்படியெல்லாம் நாம் எப்படிப் புரிந்து கொண்டிருக்கின்றோம். இராணுவத்தாலும் புலிகளாலும் எமது கலாச்சாரம் பெண்மை தாய்மை கிழித்தெறியப்பட்டு சீரழிக்கப்பட்டிருக்கின்றது. இவையெல்லாம் ஏன் நடந்தது. இதைத் தடுத்திருக்க முடியாதா..? எமது பலம் பலவீனம் எல்லாம் புரிந்து கொண்டிருந்தோமோ இவையெல்லாவற்றையும் நாம் ஆராயவில்லை. முயற்சியும் செய்யவில்லை. இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் காரணம் புலிகளும் புலிகளுக்கு ஆதரவான மாமாக்களும் தான். நடந்து முடிந்த போரின் வடுக்களும் வேதனைகளும் இன்னுமே எம்மை உருக்கிக் கொண்டிருக்கும் வேளையிலும்.. ஏன் இறந்து போனவர்களின் இரத்தவாடையும் பிணவாடையும் கூட இன்னும் மாறாத நிலையில் இங்கே அடுத்த கட்டப்போருக்கு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

எமது மக்களையும் எமது மண்ணையும் கொடுரமாகச் சிதைத்த இந்தப் பாசிசப் புலிக்கூட்டம் மீண்டும் தலைமை தாங்க முற்படுவது வேதனைக்கும் வெட்கத்துக்குமுரிய விடயமாகும். உலக நாடுகள் புலிகளை ஏன் தடைசெய்தது எனப் பார்ப்போமாயின் பிரபாகரனுக்கும் பில்லாடனுக்கும் நிறையவே ஒற்றுமைகள் இருக்கின்றது.
1.இரண்டு பேரும் ஆயுதப்பிரியர்கள்
2.இரண்டு பேரும் கல்வியை பற்றிய தெளிவில்லாதவர்கள்.
3.இரண்டு பேரும் பெண்களை மதிக்காதவர்கள்.
4.இரண்டு பேரும் தாக்குதலில்தான் கவனம் கொண்டவர்கள். பின் விளைவுகள் பற்றிய அறிவில்லாதவர்கள்.
5.பில்லாடன் உலகவர்த்தக மையத்தைத் தாக்கி ஈராக் மக்களையும் ஆப்கானிஸ்த்தான் மக்களையும் கொண்டு குவிக்க காரணமானார்.
6.பிரபாகரன் தற்கொலைக் குண்டுதாரிகளைப் பயன்படுத்தி சிங்கள தமிழ் இந்திய அரசியல் வாதிகளைக் கொன்றதோடு சாதாரண அப்பாவிப் பொது மக்களையும் கொன்று குவித்தார்.
7.பில்லாடன் பாடசாலைக்குப் போன பெண்பிள்ளைகளைக் கொலை செய்தார்.
8.பிரபாகரன் பாடசாலைக்குப் போய் கொண்டிருந்த 12 வயதுக்கும் /அதற்குக் குறைந்த வயதொத்தப் பிள்ளைகளையும் கட்டாயமாகப் பிடித்து இயக்கத்தில் சேர்த்து அவர்களுக்கு குண்டுகள் கட்டி வெடிக்கச் செய்து கொலை செய்தார்.
9.பில்லாடன் பல மனைவிமார்களுடன் வாழ்ந்தார். பிரபாகரன் தன் மனைவி குழந்தைகள் குடும்பமென வாழ்ந்தார்.
இப்படியாக இருவரிலும் நிறையவே ஒற்றுமைகள்.

உண்மையில் பிரபாகரன் தமிழ்ப் பெண்களை மதித்திருந்தால் இறுதிக்கட்டப் போரில் இந்தப் பெண் பிள்ளைகளை எல்லாம் இராணுவத்திடம் நிராயுதபாணிகளாக சரணடையச் செய்திருக்க மாட்டார். ஏற்கனவே இராணுவம் பற்றித் தெரிந்திருந்தும் இப்படி நடந்த கொண்டதற்குக் காரணம் தானும் தன் குடும்பமும் அழியும் போது மற்றத் தமிழ் மக்களும் அழியட்டுமே என்ற குறுகிய நோக்கம்தான். மக்களை நேசிக்கும் ஒரு உண்மையான தலைவவன் எந்த இடர் வந்தாலும் இறுதிவரை மக்கள் பற்றியே சிந்தித்திருப்பான். மக்கள் பற்றியே சிந்திக்கவும் வேண்டும். இந்தப் புலம்பெயர் நாடுகளில் மனித நேயமற்றவர்கள் இன்றும் புலிக்கொடியைத் தூக்கிக் கொண்டு திரிகின்றார்கள். சிந்தனை என்பது இவர்களுக்கு இல்லை. தங்களைக் கதாநாயகர்களாகக் காட்டி திருமணம் செய்து கொள்வதற்காகவும் பணம் சம்பாதிப்பதற்காகவுமே திரிகின்றார்கள். இவர்களை இப்படியே விட்டு வைப்பீர்களேயானால் ஈழத்தில் ஒரு தமிழருமே மிஞ்சமாட்டார்கள். இவர்கள் ஈழத்தில் செய்த தியாகம் தான் என்ன…? இவர்கள் ஏன் புலிக்கொடியைத் தூக்குகிறார்கள் என்றால் ஈழநாட்டுக்குப் போய் போராடி மரணிப்பதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே. வாழத்தெரிந்த கூட்டம்.  இவர்கள் கூடவிருந்தே குழிபறிப்பார்கள். தமிழினமே இனிமேலும் மோசம் போகாதீர்கள். தமிழ் மக்கள் புலிகளிடம் மோசம் போனது போதும். எல்லோரும் இனியாவது விழித்திருங்கள்.

நித்திரை கொள்பவனை எழுப்பி விட முடியும். ஆனால் நித்திரை கொள்பவன் போல் இருப்பவனை எழுப்பி விட முடியாது. மனித நேயமுள்ளவர்கள் எல்லோருமாக சேர்ந்து எமது ஈழத்தை மீட்டெடுக்கும் வேலைகளில் இறங்க வேண்டும். எமது உள்ளங்களால் இப்போதும் நாம் ஈழப்போராட்டத்திலே தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முதலில் நாம் முன்பு விட்ட தவறுகளுக்கு எம்மை உட்படுத்தாமல் முன்பு எமது போராட்டத்தினுள் இருந்த மோசடிகாரர்கள் வியாபாரிகள் சந்தர்ப்பவாதிகள் என்போரை இனங்கண்டு இந்தப் போராட்டத்தில் இருந்து அவர்களை ஒதுக்கிவிட வேண்டும். போராட என்ற போர்வையில் இயக்கங்களுக்குள் வந்து சுகபோகங்களை அனுபவிக்கவென கொள்ளையடித்து பழிவாங்கி தங்களது குடும்பங்களை மாத்திரம் முன்னேற்றி இன்று பலர் வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் யார்? இவர்கள் ஏன் இன்னமும் வெளிநாடுகளில் இனங் காணப்படவில்லை? இந்த நிலமைகளுக்கு முதலில் தமிழ் மக்களாகிய நாங்கள் விடை தேட வேண்டும். தயவு செய்து தமிழ் மக்களே, உங்கள் கல்போன்ற இதயங்களை கொஞ்சமேனும் வெடிக்க வைத்து சில பசுமையான தாவரங்களை வளர விடுங்கள். அப்பொழுதுதான் அனாதைகளான எங்கள் உறவுகள் சந்றேனும் ஆறுதலடைய முடியும். மாவீரர்கள் யார்? கப்டன், கேணல், 1ம் கப்டன், வீரவேங்கை இவர்கள் எல்லாம் யார்? போராளிகளை எப்படி தரம் பிரித்தீர்கள்? பலவந்தமாக பிடித்துக் கொண்டு போய் குண்டுகளை கட்டி வெடிக்க வைத்து படம் பிடித்து பணம் சேர்த்தீர்களே இவர்கள் யார்? எதிரியிடம் பிடிபடாமல் சயனைட் விழுங்கி உயிர் இழந்தார்களே இவர்கள் யார்? இவ்வளவு காலமும் மற்றவர்களுக்கு சயனைட் கொடுத்து மற்றவர்களுக்கு குண்டுகளை கட்டி கொன்று தொலைத்த பிரபாகரனும் அவரது சகாக்களும் எக்காளமிட்டு முழங்கி கொண்டு இருந்தார்களே இவர்கள் யார்? முள்ளிவாய்காலில் தம்மை காப்பாற்றுவதற்கு மக்களை பணயமாக்கி கொன்று குவித்தார்களே – தப்பியோட முயன்ற பொது மக்களை தனது வாளினால் வெறிகொண்டு மூர்க்கமாக வெட்டி வெட்டி கொன்றாரே பிரபாகரனின் மகன் சாள்ஸ் இந்தப் புலிப் பிரகிருதிகள் எல்லாம் யார்? மக்கள் பட்டினியால் சாகும்போது அத்தியாவசியப் பொருட்களை விற்று காசு பண்ணினார்களே இவர்கள் யார்?

உங்களை எல்லாம் பத்திரமாக வெளிநாடு ஒன்றிற்கு அனுப்புகின்றோம் என்றவுடனேயே பிரபாகரனும் அவரது குடும்பமும் உடனடியாக சரணடைந்ததே இவர்களெல்லாம் யார்? இறுதியாக முள்ளிவாய்க்காலில் நெஞ்சமெல்லாம் வெடித்து சிதறும் வண்ணம் தமிழ் பெண்கள் இராணுவத்தால் குதறி எறியப்பட்ட காட்சிகளைப் பார்க்கிறோமே இதற்கெல்லாம் காரணமானவர்கள் யார்? இறுதிநேரத்தில் நடந்த எம் மக்களின் அழிவுகளைக் காணும்போதும் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் காணொளிக் காட்சிகளைப் பார்க்கும் போதும் எப்படியெல்லாம் நாம் எப்படிப் புரிந்து கொண்டிருக்கின்றோம். இராணுவத்தாலும் புலிகளாலும் எமது கலாச்சாரம் பெண்மை தாய்மை கிழித்தெறியப்பட்டு சீரழிக்கப்பட்டிருக்கின்றது. இவையெல்லாம் ஏன் நடந்தது. இதைத் தடுத்திருக்க முடியாதா.. ? எமது பலம் பலவீனம் எல்லாம் புரிந்து கொண்டிருந்தோமோ? இவையெல்லாவற்றையும் நாம் ஆராயவில்லை. முயற்சியும் செய்யவில்லை. இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் காரணம் புலிகளும் புலிகளுக்கு ஆதரவான மாமாக்களும்தான். நடந்து முடிந்த போரின் வடுக்களும் வேதனைகளும் இன்னுமே எம்மை உருக்கிக் கொண்டிருக்கும் வேளையிலும். . ஏன் இறந்து போனவர்களின், இரத்தவாடையும் பிணவாடையும் கூட இன்னும் மாறாத நிலையில் இங்கே அடுத்த கட்டப்போருக்கு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

உலக நாடுகளில் பயங்கரவாதப் பட்டியலில் இருக்கும் விடுதலைப் புலிகள் அல்லது தடை செய்யப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் கொடியை எந்த தமிழர் போராட்டங்களிலும் தூக்கி பிடிக்கிறார்களே யார் இவர்கள்? ஈழ மக்கள் குற்றுயிரும் குலையுயிருமாக குதறப்படும் காட்சிகளை விற்று இங்கு காசு சேர்த்தவர்கள் யார்? அடி அத்திவாரத்தோடு பிடுங்கி எறியப்பட்ட பண்பு கெட்ட புலிகளை இன்னும் தூக்கி பிடித்துக் கொண்டிருக்கிறார்களே இந்த புலம்பெயர் தமிழர்கள் இவர்கள் யார்?

வெறும் பணத்திற்காகவும் தமது சுயநல தாகங்களுக்காகவும் ஜிரிவி எனும் விபச்சார தொலைக்காட்சியை நடத்தி கொண்டிருக்கிறார்களே – எப்போதாவது மக்களுக்கு சிறு உண்மையைக் கூட சொல்லாமல் ஐரோப்பாவெங்கும் மந்தைகளாக்கி வைத்திருக்கிறார்களே யார் இவர்கள்? இப்பொழுதும் எமது போராட்டம் வளர முடியாதவாறு புலிகள் என்ற பெயரில் அறிக்கைள் விட்டுக் கொண்டிருக்கிறார்களே இவர்களை நாம் எப்போது இனங்காணப் போகின்றோம்? பிரபாகரன் இன்னமும் காட்டிற்குள் இரண்டாயிரம் போராளிகளுடன் பாதுகாப்பாக இருக்கிறார் என வாய்சவடால் விட்டு மற்றவர்களை மடையர்களாக்கி கொண்டிருக்கிறார்களே இவர்கள் எல்லாம் யார்? புலிகளுக்கு பணம் சேர்த்து திரிந்தவர்களெல்லாம் மிக விலை உயர்ந்த கார்களில் உலா வருகின்றார்களே அவை எங்கனம் சாத்தியம்?
இவை குறித்து முதலில் நாம் தெளிந்த சிந்தனையுடன் சிந்திப்போமானால் என்ன தவறுகள் விட்டிருக்கிறோம் என்பது தெரியவரும். இவ்வளவு காலமும் தவறு செய்துள்ளோம் என்ற சிந்தனை ஒவ்வொருவர் மனதிலும் வர வேண்டும். அப்பொழுதுதான் இந்த அரசியற் பொறுக்கிகளை சமூக விரோதிகளை நமது போராட்டத்தைக் கருவறுத்தவர்களை ஓரங்கட்ட முடியும். ஓரம் கட்ட வேண்டும்.

தனி ஈழம் இல்லாமல் தமிழ் மக்களுக்கு விடிவு இல்லை என்பதையே சமீப காலம் வரை இலங்கைப் பேரினவாதம் இடித்துரைக்கின்றது. தியாக உணர்வுடன் தெளிந்த சிந்தனையுடன் எமது போராட்டத்தை நாம் மீள அமைத்துக் கொள்ள வேண்டும். கும்பலிலே கோவிந்தா என எமது போராட்டம் கொச்சைப்படுத்தப்படக் கூடாது. உண்மையான போராளிகள் எப்போதும் மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. பிரபாகரன் மாதிரி எதிரியிடம் உயிர் பிச்சை கேட்க மாட்டார்கள். பிரபாகரனால் போசித்து வளர்க்கப்பட்ட பலரும் ராஜபக்சவின் காலடியில் வீழ்ந்து உயிர்ப்பிச்சை கேட்டு காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவையாவும் புலம்பெயர் மக்கள் தம் கண்முன்னே பார்த்து தெரிந்து கொண்ட விடயம். மரணபயம் என்பது பயங்கரமானது என்பது உண்மை. ஆனால் தனது கையில் அதிகாரம் இருக்கிறது என்ற நினைப்பில் ஏராளமான அப்பாவி தமிழ் மக்களை பிரபாகரனும் அவனது சகாக்களும் கொன்று குவித்தார்களே. அப்போதெல்லாம் பிரபாகரனுக்கு மற்றவர்களின் மரணபயம் ஏன் விளங்கவில்லை? ஏனெனில் பிரபாகரன் மனிதனாக வாழ்ந்திருக்கவில்லை. எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இந்திய போராட்ட வீரன் பகத்சிங்தான் நினைவுக்கு வருகின்றான். (தேசியத் தலைவர் தனது முன்னுதாரணம் பகவத் சிங் கட்டபொம்மன் என்றெல்லாம் எத்தனை சவடால் விட்டிருக்கிறார்.) தன்னை தூக்கில் போடும் போது தனது தலையை கறுப்புத் துணியால் மூடவேண்டாம் நான் சாகும் போதும் எனது தாய் மண்ணை பார்த்துக் கொண்டே சாக விரும்புகின்றேன் என முழங்கினான். இவனல்லவா வீரன்!! இவனல்லவா போராளி! இவனல்லவா மாமனிதன்! இவனல்லவா தியாகி! இவனல்லவா சூரிய புதல்வன்! இத்தகையவர்களிடம் இருந்து தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நாம் போராடப் புறப்பட வேண்டுமாயின் இலட்சக் கணக்கான மக்களின் குருதியை வீணடித்த தமிழ் பெண்களின் மானத்தை பலி கொடுத்த சரணடைவு என்ற அவமானத்தை பெற்றுத் தந்த புலிக்கொடி முதலில் அழிக்கப்பட வேண்டும். புலி பினாமிகள் தமது தொடர்ச்சியான சுகபோக வாழ்வை தக்கவைத்துக் கொள்வதற்காக ஈழமக்களை விற்பனை செய்வதை இத்தோடு நிறுத்த வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் இன்று ‘சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு’ தொடர்பான சந்திப்பு.

Murugaboopathy_Writterசர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினால் கொழும்பில் அடுத்த மாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள. ‘சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு’ தொடர்பான தகவல் அமர்வுக் கூட்டம் இன்று சனிக்கிழமை யாழப்பாணத்தில் நடைபெறுகின்றது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 6. 7. 8. 9 ஆம் திகதிகளில் கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூட்டமே இன்று பிற்பகல் 2மணிக்கு நல்லூர் நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெறுகின்றது.

இக்கூட்டத்தில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் அமைப்பாளர் லெ.முருகபூபதி மாநாட்டின் நிகழ்ச்சிநிரல் மற்றும், நோக்கங்கள் குறித்து தமிழ் எழுத்தாளர்கள மத்தியில் உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles:

யாதும் ஊரே யாவரும் கேளீர்! தீதும் நன்றும் பிறர்தர வாரா! : முருகபூபதி (அமைப்பாளர், சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு)

புலி ஆதரவு இலங்கை எழுத்தாளர்களும் தமிழக எழுத்தாளர்களும் கொழும்பு எழுத்தாளர் மாநாட்டுக்கு எதிராக கையெழுத்துப் போர்!

யாழ்ப்பாணத்தில் இன்று ‘சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு’ தொடர்பான சந்திப்பு.

பளைக் கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்தோர் தங்களை விரைவில் மீள்குடியமர்த்துமாறு கோரிக்கை.

landmines.jpgபளைப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து இன்னமும் நலன்புரி முகாம்களில் வாழ்ந்து வரும் மக்கள் தங்களை விரைவில் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலர் பிரிவைச் சேர்ந்த கச்சார்வெளி, அல்லிப்பளை, அரசர்கேணி ஆகிய கிராமங்களைச் சோந்த மக்களே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அப்பகுதிகளைச் சேர்ந்த சுமார் 25 குடும்பங்கள் தற்போது வவுனியா முகாம்களில் தங்கியுள்ளனர். அங்கு தொழில் வாய்ப்புகள் ஏதுமற்ற நிலையில் நீண்டகாலம் வாழ்ந்து வருதாக அவர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் குறித்த பகுதிகளில் கண்ணிவெடிகள் அதிகளவில் புதைக்கப்பட்டுள்ளதாகவும், அவை தற்போது அகற்றப்பட்ட வருவதாகவும் இதன் காரணமாகவே இப்பகுதி மக்களை மீள்குடியர்த்துவதில் தாமதமேற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவோர் மீது நடவடிக்கை.

Stop_Child_Abuseசிறுவர் களை வேலைக்கு அமர்த்துவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என யாழ்.மாவட்ட உதவித்தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போது யாழ். மாவட்ட உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் ரீதியாக திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்தைகள், கடைகள் போன்ற பல இடங்களில் சிறுவர்களை வேலைக்கமர்த்துவோர் கண்டுபிடிக்கப்ட்டு கடும் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாகவும் இச்செயற்பாடுகள் தொடருமானால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், சிறுவர்களை வேலைக்கமர்த்துவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் போது அவர்களுக்கு 12 மாத சிறைத் தண்டனை அல்லது. 10ஆயிரம் ரூபா தண்டம் நீதிமன்றினால் வழங்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

குடாநாட்டில் மீதமுள்ள கண்ணிவெடிகளை அகற்றி முடிக்க பத்து ஆண்டுகள் தேவை என யாழ்.அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

Imelda_Sugumar_GAயாழ். குடாநாட்டில் மீதமுள்ள கண்ணிவெடிகளை முற்றாக அகற்றி முடிப்பதற்கு இன்னமும் பத்து ஆண்டுகள் தேவை என யாழ். அரச அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகள், மீள்குடியேற்றம், யாழ்.மாவட்டம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் போன்றவை குறித்து நேற்று மாலை மாவட்டச் செயலகத்தில் செய்தியாளர் மாநாடு ஒன்றை யாழ். அரச அதிபர் நடத்திய போது இவ்வாறு தெரிவித்தார்.

குடாநாட்டில் 19அயிரம் குடும்பங்களை மீள்குடியமர்த்தப்பட வேண்டியுள்ளது. 60 ஆயிரம் வீடுகள் அமைக்கப்பட வேண்டியுள்ளது. 27ஆயிரம் விதவைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டியுள்ளது. 246 சிறுவர்கள் கடுமையான நோயுற்ற நிலையில் சிகிச்சைக்கு பணமின்றியுள்ளனர் அவர்களது பிரச்சினையை தீர்க்க வேண்டியுள்ளது என தெரிவித்த அவர் அடுத்த 2011ஆம் ஆண்டு 1648 திட்டங்கள் 18 ஆயித்து 698 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், இந்திய அரசாங்கத்தின் நிதியுதிவியுடன் 5ஆயிரத்து 150 வீடுகள் அமைக்கப்படவுள்ளதாகவும், 2அயிரம் வீடுகள் புனரமைக்கப்பட உள்ளதாகவும், உலக வங்கியின் நிதியுதவியுடன் 2ஆயித்து 700 வீடுகள் இதுவரை புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியமர்த்துவதற்கான நிகழ்ச்சி நிரல் தம்மிடம் இல்லை எனவும், அது இராணுவத்திடம் இருக்கக்கூடும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.

குடாநாட்டிலிருந்து வெளியாகும் பத்திரிகைகள் சுதந்திரமாக செயற்பட தடைகளில்லை என யாழ்.படைகளின் தளபதி தெரிவிப்பு.

Valampuri_Jafffna_Paperபோர் முடிவுற்ற பின் ஏற்பட்டுள்ள புதிய ஜனநாயக சூழலில் யாழ்ப்பாணத்து ஊடகங்கள் கருத்துச் சுதந்திரத்தை தாரளமாக பயன்படுத்த முடியும் என யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். ஊடக சுதந்திரத்திற்கு எவ்வகையிலும் தடைகள் ஏற்படுத்தப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிகைகளின் பிரதிநிதிகளுடன் யாழ். சிவில் நிர்வாக அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். குடாநாட்டுப் பத்திரிகைகள் பல்வேறு பிரச்சினைளுக்கு முகம்கொடுத்து பணியாற்றி வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். குடாநாட்டில் போருக்குப் பின்பு ஏற்பட்டுள்ள இயல்பு நிலையை குழப்புவதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் இச்சந்திப்பின் போது தெரிவித்தார்.

கூட்டமைப்புடன் பேச தமிழ் அரங்கம் சார்பில் வீ ஆனந்தசங்கரி, த சித்தார்த்தன், அ இராசமாணிக்கம் தெரிவு.

Tamil_Arangamதமிழ்க் கட்சிகளின் அரங்கம் இன்று மாலை 7.00 மணியளவில் கொழும்பிலுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அலுவலகத்தில் சந்திப்பினை நடத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இருதரப்பு அங்கத்துவம் கொண்ட குழுவை நியமிப்பதென எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய அரங்கம் சார்பிலான குழுவுக்கு இன்று மூவர் தெரிவு செய்யப்பட்டனர். இதன்படி திரு.வீஆனந்தசங்கரி, திரு.த.சித்தார்த்தன், திரு.அ.இராசமாணிக்கம் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

கடந்த 11.12.2010அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்திற்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இனப்பிரச்சினைக்கான தீர்வு, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் என்பன தொடர்பாக ஒருமித்த குரலில் யோசனைகளை முன்வைப்பதற்காக ஒரு வரைபை யாப்பதற்கு இருதரப்பின் அங்கத்துவமும் கொண்ட ஒரு குழுவை அமைப்பதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது. இதற்கமையவே இன்று அரங்கம் கூடி மேற்படி மூவரையும் தெரிவுசெய்ததுடன், மேலும் இருவரை குழுவில் இணைப்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்தாலோசிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆயுதக் குழுக்கள் தமிழ் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அமெரிக்க ராஜாங்க பரிவர்த்தனைகள் தெரிவிக்கின்றது.

Wikileaksஅரசுக்கு ஆதரவாகச் செயற்பட்ட ஆயுதக் குழுக்கள் கப்பம் கொள்ளை கொலை போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தமை பெரும்பாலும் அறியப்பட்ட உண்மைகள். இவற்றை விக்கிலீக்ஸ் இனனால் வெளியிடப்பட்டு வரும் ராஜதந்திர வட்டாரங்களின் பரிவர்த்தனைத் தகவல்கள் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தி உள்ளன. 2008க்கு முன் இடம்பெற்றதாகக் கூறப்படும் ராஜதந்திர பரிவர்த்தனைகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

இளம் பெண்களை விபச்சாரத்திற்கு அடிமைகளாக விற்பதிலும் இராணுவத்தினருக்கு இளம் பெண்களை விநியோகிப்பதிலும்   ஏனைய நாடுகளுக்கு பெண்களைக் கடத்தவதிலும் ஆயுதக் குழுக்கள் ஈடுபட்டதாக அமெரிக்க ராஜாங்க வட்டாரங்களுக்கு தகவல் வழங்கப்பட்டு உள்ளது. தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் கருணா அணி ஈபிடிபி ஆகிய ஆயுதக் குழுக்கள் மீதே இந்த மோசமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு இருப்பது ராஜாங்க வட்டாரங்களின் பரிவர்த்தனையில் வெளியாகி உள்ளது.

இத்தகவல்கள் பரிவர்த்தனை செய்யப்பட்டதில் தகவல்கள் சுயாதீனமானவையா அல்லது அரசியல் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டவையா என்பது தெளிவற்றதாக உள்ளது. தகவல்களை அமெரிக்க ராஜாங்க வட்டாரங்களுடன் தகவல்களை வழங்கியவர்களின் விபரங்கள் அவர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் விக்கிலீக்ஸ் அவற்றை வெளியிடவில்லை.

US embassy cables: Sri Lankan government accused of complicity in human rights abuses
guardian.co.uk, Thursday 16 December 2010 21.30 GMT

Friday, 18 May 2007, 09:22
S E C R E T SECTION 01 OF 06 COLOMBO 000728
SIPDIS
SIPDIS
DEPARTMENT FOR SCA/INS
MCC FOR S GROFF, D TETER, D NASSIRY AND E BURKE
EO 12958 DECL: 05/18/2017
TAGS PGOV, PREL, PTER, PHUM, MOPS, CE
SUBJECT: SRI LANKA: GSL COMPLICITY IN PARAMILITARY
FACTIONS’ HUMAN RIGHTS ABUSES
REF: A. COLOMBO 591 B. COLOMBO 561 C. COLOMBO 463 D. COLOMBO 460 E. 2006 COLOMBO 2056 F. 2006 COLOMBO 1896 G. 2005 COLOMBO 2157 H. 2004 COLOMBO 1219
Classified By: Ambassador Robert O. Blake, Jr., for reasons 1.4(b, d)

1. (S) SUMMARY: Allegations of government complicity in crimes committed by organized paramilitary groups have mounted in the last year. Paramilitaries such as the Liberation Tigers of Tamil Eelam (LTTE)-breakaway Karuna group and Eelam People’s Democratic Party (EPDP) have helped the Government of Sri Lanka (GSL) to fight the LTTE, to kidnap suspected LTTE collaborators, and to give the GSL a measure of deniability. The GSL, which denies any links to paramilitary groups, has recently touted its efforts to improve its human rights record, such as the re-publication of procedures on arrests and detentions and the appointment of a “One-Man Commission” to investigate reported disappearances (ref C). However, these efforts so far appear aimed more at improving Sri Lanka’s image abroad and have yet to produce concrete improvements in the human rights situation. Outside the capital, the incidence of human rights abuses has continued, including extrajudicial killings, abductions, child trafficking, extortion, and prostitution. President Rajapaksa’s government, strapped for cash, has cut direct payments to paramilitaries initiated by former President Kumaratunga and instead turns a blind eye to extortion and kidnapping for ransom by EPDP and Karuna. While many of the charges against the government have been made in public fora, a growing number of trusted Embassy contacts, often at personal risk, have described in detail the extent of the GSL’s involvement with paramilitary groups. END SUMMARY.

GSL Finds Paramilitaries Useful
2. (S) The GSL sees several advantages in allowing paramilitary groups to operate in the country. Paramilitary groups in the North and East help the GSL fight the LTTE and compete with the LTTE for public support and new recruits. These groups also enhance security in Colombo by kidnapping and sometimes killing those suspected of working with the LTTE. Frequent abductions by paramilitaries keep critics of the GSL fearful and quiet. Ultimately, the GSL’s objective is to turn Karuna and EPDP leader Douglas Devananda into pro-GSL political leaders in the East and North, respectively. The government hopes this will ensure long term control over these areas even if some form of devolution is instituted.

3. (S) In the meantime, these paramilitary groups give the GSL a measure of deniability. XXX

told us that some military commanders in JaffnaXXX want to clamp down on paramilitaries but have orders from Defense Secretary Gothabaya Rajapaksa to not interfere with the paramilitaries on the grounds that they are doing “work” that the military cannot do because of international scrutiny. On XXX confided to XXX that the Defense Ministry had instructed him not to interfere with “military intelligence” operations (ref E).

COLOMBO 00000728 002 OF 006

4. (S) The GSL has a history of funding paramilitary groups. XXX pointed out that under former President Kumaratunga, the GSL had begun the practice of paying paramilitaries to refrain from engaging in criminal pursuits. Several Embassy interlocutors have independently confirmed this. However, XXX said that the current government, cash-strapped, has ended this arrangement. Instead, he alleged, Defense Secretary Gothabaya Rajapaksa has authorized EPDP and Karuna to collect the money from Tamil businessmen. This may account for the sharp rise in lawlessness, especially extortion and kidnapping, that many have documented in Vavuniya and Colombo. Even though EPDP and Karuna are each comprised nearly exclusively of ethnic Tamils, the crimes that they commit are almost always against other Tamils.

Karuna Group Becomes Pre-eminent Paramilitary

5. (S) The Karuna faction’s formal name is Tamil Makkal Viduthalai Pulikal (TMVP), which means “Liberation Tigers of the Tamil People” in Tamil. This name is an attempt to sap legitimacy from the LTTE by taking the “Liberation Tigers” part of their name. In less than one year since Karuna returned to Sri Lanka, the TMVP has become the most powerful paramilitary organization in the country. It began in 2004 when Karuna broke away from the LTTE, taking about 4,000 Tiger cadres with him (ref H). After the LTTE struck back, inflicting serious losses, then-President Chandrika Kumaratunga helped Karuna escape to the Indian state of Tamil Nadu, where he remained until July 2006. He remained active in managing his cadres even while living abroad. Since returning to Sri Lanka, Karuna has used strong-arm tactics to establish a powerful paramilitary group that operates under government protection (ref D).

Abductions and Killings

6. (S) The Karuna group is probably the most active Sri Lankan paramilitary in abductions and extrajudicial killings. XXX confided to PolOff that even MPs fear that the GSL will use Karuna to assassinate them. XXX echoed this anxiety to us XXX. A number of XXX MPs, Muslims as well as Tamils, have told us privately that they fear for their lives. XXX stated that he believed Karuna set up the assassination of Tamil MP Joseph Pararajasingham on Christmas Day 2005 (ref G) with the help of EPDP leader Devananda. XXX was also positive that Karuna cadres were employed in the killing in Colombo of popular Tamil MP Nadarajah Raviraj on November 10, 2006 (ref F).

7. (S) XXX confirmed that Karuna has extended his activities to Jaffna from his base in the East. XXX has documented XXX abduction cases in Jaffna XXX, many of which he believes are the responsibility of the Karuna group. XXX told PolOff that he was discouraged XXXXXXXXXXXX told us he has

COLOMBO 00000728 003 OF 006

evidence of XXX. However, because of XXX and limited resources, he was only able to document a sample XXX. XXX described one abduction in which a man suspected of having ties to the LTTE was taken and a “calling card” was left with a picture of Karuna on the front and a calendar on the back, indicating that the man’s “time had run out.”

Child Soldiers

8. (S) The TMVP is allowed to operate throughout the East in close proximity to SLA bases, often with clearly underage cadres guarding its camps with machine guns. XXX stated that the GSL allows Karuna’s cadres to recruit children forcibly from within IDP camps in the East. XXX said the average age of Karuna recruits is 14. XXXXXXXXXXXX’s allegation that Karuna recruits children from IDP camps with the tacit approval of the military was confirmed by XXX. We have received confidential reports of the Karuna group’s recruitment and use of child soldiers from a U.S.-based NGO as well.

Extortion and Prostitution Rings
9. (S) Karuna does not have the international fund-raising network among the Tamil Diaspora that the LTTE has built over the past 25 years. As a result, he has resorted to a wide range of criminal activities. XXX stated that when the GSL brings in shipments of food and supplies to IDP camps from Colombo, Karuna’s cadres are given the opportunity to go through the shipment first. They are allowed to take any food they need for themselves, as well as any supplies they believe they can sell, with only the left-overs making their way to the IDPs.

11. (S) XXX also explained that Karuna operates prostitution rings out of the IDP camps to “take care of” GSL soldiers, stating that the women “had no choice” but to acquiesce to Karuna cadres’ demands. XXX and XXX independently described how women are forced into prostitution, or to give up their children to traffickers. The methods are similar to those in Jaffna (paras 17-18). Families sometimes try to arrange their daughters’ marriages at the age of 12 or 13 in the hope that it will reduce the likelihood of their being forced into prostitution.

12. (S) Although the GSL has consistently denied supporting Karuna, XXX allowed PolOff to listen to tapes of his interview with Gothabaya. The Defense Secretary was effusive in his praise for Karuna and the

SIPDIS benefits the GSLXXX

COLOMBO 00000728 004 OF 006

Making Karuna Legitimate

13. (S) XXX The TMVP does not yet have the status of a formal political party. According to Sri Lanka’s Constitution, new parties cannot register when an election is “pending” in any part of the country. Elections for local councils are long overdue in the Northern and Eastern Provinces, which are now in constitutional limbo following the October 1, 2006 Supreme Court decision to de-merge the two provinces. As a result, the GSL must find an existing political party for Karuna to “join,” perhaps later changing the name to TMVP, in order for Karuna to stand for elections. XXX said thatXXX has so far resisted GSL efforts to force a shotgun marriage with Karuna, but that he may ultimately have to yield.

EPDP: “Political Party” and Paramilitary

14. (S) The EPDP, originally called the Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF), began as a rival to the LTTE. One wing of the EPRLF founded the EPDP as a formal political party when its leader, Douglas Devananda, was elected to Parliament in 1994 and aligned with the government. Devananda continues to hold the single parliamentary seat his party won in the 2004 election. As part of the ruling coalition, he serves as Minister of Social Services and Social Welfare. Although registered as a formal political party, the EPDP remains a feared paramilitary group, wielding non-official power over parts of the Jaffna peninsula and especially the offshore islands with the tacit approval of the Sri Lanka Army.

Extra-Judicial Killings with the Military’s Support

15. (S) Working in concert with SLA soldiers stationed in the Jaffna peninsula, the EPDP is able to conduct extortion, abductions, extra-judicial killings and other criminal acts without fear of consequences, according to numerous sources. XXX told us about EPDP’s involvement in extra-judicial killings in Jaffna. Independently,XXX confirmed much of XXX’s account. He explained that when the EPDP intends to kill a target, they first provide notice to the military. The number of soldiers patrolling the streets of Jaffna (40,000 total on the peninsula) is such that there are literally soldiers stationed at every street corner. At an agreed time, all of the soldiers in the designated area take a five to ten minute “break” at once (although the normal practice is to take breaks in shifts). At that point, armed and masked gunmen, often riding on motorcycles, race down the street and assassinate the intended victim. Shortly after the killing, the soldiers’ break over, they return to their posts to deal with the aftermath. While police investigations are common, they almost never lead to arrests. XXX also told us of a XXX doctor XXX who performs forced abortions, often under the guise of a regular check-up, on Tamil women suspected of being aligned with the LTTE.

COLOMBO 00000728 005 OF 006

16. (S) XXX Child Trafficking

17. (S) XXX said he believes that EPDP is operating child trafficking rings in Jaffna with a base on Delft island, which the EPDP “owns.” XXX explained that because of the large number of widows in Jaffna, men associated with the EPDP, often from neighboring villages, are used to seduce women with children, especially girls, with the promise of economic protection. After establishing a relationship, the men then take the children, sometimes by force and sometimes with the promise that they will be provided a better life. The children are sold into slavery, usually boys to work camps and girls to prostitution rings, through EPDP’s networks in India and Malaysia. XXX maintains that children are often smuggled out of the country with the help of a corrupt Customs and Immigration official at Bandaranaike International Airport in Colombo.

18. (S) XXX’s story was partially verified by XXX who stated that the EPDP works in concert with the Sri Lanka Army (SLA) to operate Tamil prostitution rings for the soldiers. XXX stated that young women were taken and forced to have sex with between five and ten soldiers a night. Sometimes they are paid approximately a dollar for each “service.” The young women’s parents are unable to complain to authorities for fear of retribution and because doing so would ruin the girls’ reputation, making it impossible for them ever to marry. Families have begun arranging marriages for their daughters at a very young age in the hopes that the EPDP and soldiers will be less likely to take them. In addition to trafficking in children, XXX detailed how the EPDP operates an illicit alcohol smuggling ring using child “mules.”

U.S. Takes a Hard Line against Paramilitaries

19. (S) Addressing the activities of these paramilitaries and their blatant disregard for human rights is a top priority of the Embassy. Ambassador, DCM and Pol Chief have met repeatedly with the President, the Foreign Minister, Foreign Secretary, Defense Secretary Gothabaya Rajapaksa, Human Rights Minister Mahinda Samarasinghe and others to emphasize the importance of reining in these groups and ending the abductions, killings, and other human rights abuses. Visiting senior USG officials, including Assistant Secretary for South and Central Asian Affairs (SCA) Richard

SIPDIS Boucher and Principal Deputy Assistant Secretary for SCA Steven Mann have delivered tough messages on human rights to the highest levels of the GSL, noting that continued abuses could affect defense cooperation.

COLOMBO 00000728 006 OF 006

20. (S) COMMENT: While none of the evidence put forward by our contacts constitutes a smoking gun, the preponderance of these statements ) and the extent to which they independently corroborate each other ) points to a pattern of GSL complicity with paramilitary groups on multiple levels. It appears that this involvement goes beyond merely turning a blind eye to these organizations’ less savory activities. At worst, these accounts suggest that top leaders of its security establishment may be providing direction to these paramilitaries. While it is perhaps understandable that the GSL wants to use every possible means in its war against LTTE terror, we must continue to stress to the Government the importance of reining in the paramilitaries and establishing internationally accepted norms for arresting, investigating, prosecuting and, if appropriate, punishing those suspected of cooperating with the LTTE. BLAKE

தமிழர் புனர்வாழ்வுக்கழக முக்கியஸ்தர்களுக்கு நீதிமன்றம் பிடிவிறாந்து.

TRO Logoதமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு கிடைத்த நிதியுதவிகளை நிதி சட்ட மூலங்களுக்கு மாறாக விடுதலைப் புலிகளுக்கு வழங்கியமை தொடர்பான வழக்கில் தமிழர் புனர்வாழ்வக் கழகத்தின் முக்கியஸ்தர்களை கண்ட இடத்தில் கைது செய்வதற்கான பிடிவிறாந்து வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இப்பிடிவிறாந்தை நேற்று வியாழக்கிழமை வழங்கியது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முக்கியஸதர்களைக் கைது செய்து நீதிமன்றின் முன் முற்படுத்துவதற்கான அனைத்து வழிகளையும் கையாளுமாறும் பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழர் புனர்வாழ்வுக்கழகம் அதற்கு கிடைக்கப்பெற்ற நிதியை சட்டவிரோதமான முறையில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் வகையில் விடுதலைப் புலிகளுக்கு வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முக்கியஸ்தர்கள் தொடர்ச்சியாக நீதிமன்றிற்கு சமூகமளிக்கமாலுள்ளதாகவும் இதன் காரணமாகவே அவர்களுக்கெதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் வடபகுதிக்கான வெள்ள நிவாரணப் பணிகளில் கூட்டமைப்பும் கலந்து கொள்ளும்.

Flooding_Jaffnaவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வட பகுதி மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள நிவாரணப் பணிகளில் தமிழ்தேசியக் கூட்டமைப்பும் கலந்து கொள்ளலாம் என மீள் குடியேற்ற அமைச்சர் எம்.எம்.வீரக்கோன் தெரிவித்துள்ளார். வன்னியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும், யாழ்.குடாநாட்டிலும் வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாளை சனிக்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன.

மீள் குடியேற்ற அமைச்சர் விடுத்துள்ள இந்த அழைப்பினை கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரணப் பணிகளில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.