06

Friday, August 6, 2021

06

“தமிழர் தாயகம் தொடர்பில் அமெரிக்க காங்கிரசில் எழுந்த குரலை சாதாரணமாக எண்ணாதீர்கள்.” – ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை !

“வடக்கு – கிழக்கை தமிழர்களின் பூர்வீக பூமியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற அமெரிக்க காங்கிரஸில் தீர்மானத்தை சாதாரணமாக கருதக்கூடாது.” என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறிய போது,

வடக்கு கிழக்கை தமிழர்களின் பூர்வீக பூமியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற அமெரிக்க காங்கிரஸில் தீர்மானத்தை அரசாங்கம் சாதாரண விடயமாக எடுத்துவிடக் கூடாது.

இஸ்ரேல் எனும் நாடு எவ்வாறு உருவானது என்ற விதத்தை நினைவில் கொண்டு இந்த விடயத்தில் அரசாங்கம் செயற்பட வேண்டும். எனக்குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 20 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக அனைத்து அதிகாரத்தையும் ஜனாதிபதியிடம் வழங்கிவிட்டு, நீதிமன்றம் உள்ளிட்டவற்றின் சுயாதீனம் குறித்து இங்கு விவாதித்து எந்தவொரு பலனும் கிடையாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

19 ஆவது திருத்தச்சட்டத்தினை இல்லாது செய்தமையால் இன்று சர்வதேசத்தின் பகையை சம்பாதித்துள்ளதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.

ஜேர்மனி தோற்றதற்காக கதறி அழுத சிறுமி – 500 பவுண்ட்களை சிறுமிக்காக திரட்டிய இங்கிலாந்துகுடிமகன் !

தற்போது நடைபெற்று வரும் யூரோ 2020 கால்பந்து தொடரிலிருந்து இங்கிலாந்து அணி இறுதி 16 அணிகள் சுற்றில் இருந்து ஜேர்மனியை 2-0 என வீழ்த்திய தொடரிலிருந்து வெளியேற்றியது. 

குறித்த போட்டியின் பிறகு கவலையான சம்பவம் ஒன்று நடந்தது.  இந்தப் போட்டியின் போது ஜேர்மனியின் தோல்வியையிட்டு ஜேர்மனிய சிறுமி  ஒருவர் அழுவது தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து சிலர் சமூக வலைத்தளங்களில் அந்த சிறுமியை பார்த்து கேலி செய்தனர். முக்கியமாக இங்கிலாந்து ரசிகர்கள் சமூக வளைத்தளங்களில் அதிகமாக கிணடல் செய்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஜோயல் ஹுக்ஸ் எனும் வேல்ஸை  சேர்ந்த இங்கிலாந்து குடிமகன், 500 பவுண்ட்களை இலக்காக  கொண்டு ஒரு நிதி திரட்டலை ஆரம்பித்தார். அந்த நிதி திரட்டும் கணக்கில்  அவர் ஒரு செய்தியை எழுதினார்.

“இங்கிலாந்தில் இருக்கும் அனைவரும் மோசமானவர்கள் அல்ல என்பதை காட்டுவதற்கு அந்த ஜெர்மனிய சிறுமிக்காக 500 பவுண்ட்களை இலக்காக  கொண்டு நிதி திரட்ட போகிறேன்” என எழுதினார்.

தொடர்ந்து அவர், “சிறுமியின் பெற்றோர் இதை ஒரு நல்ல விருந்துக்காக செலவிடுவார்கள் என்று நான் நினைக்கிறேன்.  இதனால் இங்கிலாந்தில் இருக்கும்  எல்லோரும் பயங்கரமானவர்கள் அல்ல, நாங்களும்  அக்கறை கொள்கிறோம் என்பதை அந்த சிறுமி அறிவார். இந்த நடவடிக்கை உலகத்தை மாற்ற போவதில்லை ஆனால் அந்த சிறுமிக்கு இது ஏதாவது செய்யும்” என குறிப்பிட்டார்.

தற்போது அந்த நிதி திரட்டும் கணக்கில்  எதிர்பார்த்ததையும் விடத் தாண்டி  26,342 பவுண்ட்கள் நிதி திரட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளியேறிக்கொண்டிருக்கும் அமெரிக்கப்படைகள் – உயிரை காக்க அயல்நாடுகளில் தஞ்சமடையும் ஆப்கான் வீரர்கள் !

அமெரிக்காவில் ‘செப்டம்பர் 11’ தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய ஒசாமா பின் லேடன், அல் கொய்தாவைச் சேர்ந்தவர்களுடன் தலிபான்கள் சேர்ந்து செயற்பட்டதால் அங்கு ஆக்கிரமிப்பு செய்து புதிய ஆளுகையை அமெரிக்கா நிறுவியது.

ஆஃப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த தலிபான்களை 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை அகற்றியது.

முன்னதாக, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அல் கொய்தா அல்லது வேறு தீவிரவாத குழுக்கள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று தலிபான் இயக்கத்தினர் அளித்த உறுதிமொழியின்பேரில், ஆஃப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்கா, நேட்டோ கூட்டுப்படை அங்கிருந்து வெளியேற கடந்த ஆண்டு ஒப்புக் கொண்டன.

ஆஃப்கானிஸ்தானில் செப்டம்பர் மாதத்துக்குள் எஞ்சிய வெளிநாட்டு படையினர் விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் அங்கிருந்து வெளியேறி விட்டனர்.

இந்நிலையில், தலிபான் ஆயுதமேந்திய தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் இதுநாள்வரை வெளிநாட்டு துருப்புகளின் உதவியுடன் போரிட்டு வந்த ஆஃப்கான் படையினர் பலவீனம் அடையலாம் என்ற கவலை அதிகரித்துள்ளது.

ஆஃப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுடன் மோதலில் ஈடுபட்ட அந்நாட்டு வீரர்கள் 1,000பேர், தங்களின் உயிரை காப்பாற்றிக் கொள்ள அருகாமை நாடான தஜிகிஸ்தானில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஆஃப்கானிஸ்தான் எல்லையில் கண்காணிப்பை கவனித்து வரும் தஜிகிஸ்தான் தேசிய பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) காலையில் தங்கள் எல்லைக்குள் ஆஃப்கானிஸ்தான் படையினர் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் இரவு முழுவதும் அவர்கள் தலிபான் ஆயுதமேந்திய தீவிரவாதிகளுடன் சண்டையிட்ட பிறகு தங்கள் பகுதிக்குள் வந்ததாகவும் தஜிகிஸ்தான் தேசிய பாதுகாப்பு குழு விளக்கம் அளித்துள்ளது.

ஆஃப்கானிஸ்தான் படையினர் தஜிகிஸ்தான் எல்லைக்குள் தஞ்சம் அடைவது கடந்த மூன்று நாட்களில் இது மூன்றாவது முறை. கடந்த இரு வாரங்களில் இது ஐந்தாவது முறையாகும்.

அதே சமயம், அந்த நாட்டு படையினர் பலரும் சமீப காலமாக பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் எல்லைக்குள் தஞ்சம் அடைவதாக தகவல்கள் வருகின்றன.

அமெரிக்க மற்றும் நேட்டோ கூட்டுப்படையினர் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவரும் நிலையில், ஆப்கானிஸ்தானில் பத்தில் மூன்று பங்கு இடத்தை கட்டுப்படுத்திவரும் தலிபான்கள், குறிப்பாக, தஜிகிஸ்தான் எல்லைக்கு வெகு அருகே உள்ள பாதக்ஷான், தக்கார் மாகாணங்களில் வெகுவாக முன்னேறி வருகிறார்கள்.

 

எனினும், ஆஃப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகளை எதிர்கொள்ள முழு திறன் பெற்றுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரஃப் கானி வலியுறுத்தி வருகிறார்.

 

இரட்டை கொலை வழக்கில் கைதான பிள்ளையானின் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் விடுதலை !

மட்டக்களப்பு – ஆரையம்பதி பகுதியில் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி அரசாங்க பாடசாலையொன்றின் ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரன் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக கிருஸ்ணபிள்ளை மனோகரனின் சகோதரியொருவர் காத்தான்குடி பொலிஸாருக்கு வாக்கு மூலமொன்றை அளித்திருந்தார்.

இதனையடுத்து, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் பூபாலப்பிள்ளை ஹரன் ஆகிய இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் , தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தனுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

கொவிட் 19 அச்சுறுத்தல் நிலையினைக் கருத்திற் கொண்டு இன்றைய தினம் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக குறித்த வழக்கு விசாரணைகள் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே பிணை வழங்கப்பட்டுள்ளது.

பிரசாந்தன் சார்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த மேன்முறையீட்டின் அடிப்படையிலேயே நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

“ஆப்கானிஸ்தான் கூட டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. ஆனால் இலங்கை..?” – ரணதுங்கவுக்கு ஆகாஷ் சோப்ரா பதில் !

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்கு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடச் சென்றுள்ளது. இதையடுத்து, ஷிகர் தவான் தலைைமயில், இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இலங்கையை சந்திக்கவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் கருத்து தெரிவித்த இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்கா, அளித்த பேட்டியில், “இலங்கைக்கு 2-ம் தர இந்திய அணி பயணம் மேற்கொண்டுள்ளது. 2-ம் தர இந்திய அணி இங்கு வந்துள்ளது இலங்கை கிரிக்கெட் அணிக்கு அவமானத்தைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்? தொலைக்காட்சி வர்த்தகச் சந்தை, ரேட்டிங் ஆகியவற்றுக்காக இந்தியாவின் 2-ம் தர அணியுடன் விளையாட ஒப்புக்கொண்ட இலங்கை கிரிக்கெட் சபையைத்தான் குறைகூறுவேன்.

இந்திய கிரிக்கெட் சபை, தங்களின் சிறந்த அணியை இங்கிலாந்து தொடருக்கு அனுப்பிவைத்துவிட்டு, பலவீனமான அணியை இலங்கைக்கு அனுப்பியுள்ளது. இதுபோன்ற செயலுக்கு எங்கள் கிரிக்கெட் சபையைத்தான் குறை கூற வேண்டும்” என விமர்சித்தார்.

இந்நிலையில் அர்ஜுன ரணதுங்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:

”ரணதுங்கா கூறியது முற்றிலும் உண்மைதான். இலங்கைக்குச் சென்றுள்ளது, முழுமையான இந்திய அணி அல்லதான். பும்ரா, விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவிந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் இல்லை. ஆனால், இலங்கையில் உள்ள இந்திய அணியைப் பார்த்தால் B டீம் போலவா இருக்கிறது?

இந்திய அணியின் உத்தேச 11 வீரர்கள் கொண்ட ஒருநாள் அணியை எடுத்துக்கொண்டால் மொத்தமாக 471 போட்டிகளில் விளையாடியுள்ளது. இலங்கை அணியை எடுத்துக் கொள்ளுங்கள். இலங்கை அணியில் உள்ள வீரர்கள் அனைவரையும் சேர்த்தால் கூட இத்தனை போட்டிகளில் விளையாடியிருப்பார்களா எனப் பார்க்கலாம். ஒவ்வொரு போட்டியின் அனுபவத்தோடு, அனுபவத்தை ஒப்பிடும்போதுதான் உற்சாகமானதாக அமையும்.

இப்போதுள்ள இலங்கை அணியின் ஃபார்ம் குறித்து ஏதாவது கூற வேண்டுமா? டி20 உலகக் கோப்பைப் போட்டியின் தகுதிச்சுற்றில் விளையாடிய வேண்டிய நிலையில்தான் இலங்கை அணி இருக்கிறது. ஆனால், புதிதாக வந்த ஆப்கானிஸ்தான் அணி கூட தகுதிச்சுற்றில் விளையாடவில்லை.

ஆதலால், இலங்கை அணி தன்னைத்தானே உற்றுநோக்க வேண்டும், அதுதான் நேர்மையானதாக இருக்கும். இப்போதுள்ள நிலையில் தடுமாற்றம் அடைந்த அணியாக இலங்கை இருப்பதே நிதர்சனம். டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெறாத நிலைகூட ஏற்படலாம், சூப்பர்12 சுற்றுக்குக் கூட வராமல் போகலாம். ஆனால், ஆப்கானிஸ்தான் இதையெல்லாம் கடந்துவிட்டது என்பது நினைவிருக்கட்டும்”.

இவ்வாறு ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஊடக சுதந்திரத்தை வேட்டையாடும் உலகின் தலைவர்கள் – ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கம் !

ஊடக சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் பட்டியலில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் உளளடக்கப்பட்டுள்ளது.

ஊடக சுதந்திரம் குறித்த சர்வதேச அமைப்பான எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள 2021ற்கான பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் பட்டியலில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் முதல் முறையாக இரண்டு பெண்கள் உட்பட பத்திரிகை சுதந்திரத்தின் மீது தாக்குதலை மேற்கொண்ட 37 உலக நாடுகளின் தலைவர்களின் புகைப்படத்தை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

2019 நவம்பரில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் இலங்கை மீண்டும் ஒரு இருண்ட காலத்திற்குள் சென்றுள்ளதாகவும் குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது குறைந்தது 14 ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டனர் என்றும் சுமார் 20 பேர் சித்திரவதை அல்லது மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட பின்னர் நாட்டை விட்டு வெளியேறினர் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த பின்னணியில், தமிழ் சிறுபான்மையினரின் அல்லது இலங்கையில் உள்ள முஸ்லீம் சமூகத்தின் அவலநிலை போன்ற முக்கியமான பிரச்சினைகள் குறித்த புலனாய்வுச் செய்திகளை வெளியிடும் ஆபத்துக்களை எதிர்கொள்கின்றனர் என்றும் குறித்த அமைப்பு கூறியுள்ளது.

முல்லைத்தீவில் வாள் வெட்டு சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் யாழில் கைது !

வடக்கில் வாள்வெட்டு மற்றும் வன்முறைக்கலாச்சாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. முக்கியமாக யாழ்ப்பாணம் – முல்லைத்தீவு – வவுனியா ஆகிய பகுதிகளில் இந்த சம்பவங்கள் அதிகம் பதிவாகி வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு யாழில் அடுத்தடுத்து வாள்வெட்டுச்சம்பவங்கள் பதிவாகியிருந்ததுடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சிலரும் கைது செய்ய்பபட்டிருந்தனர்.

இந்நிலையில் , முல்லைத்தீவில் வாள் வெட்டு மற்றும் வாகனத்துக்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புபட்ட மூன்று சந்தேக நபர்களை யாழ்ப்பாண பொலிஸார் நவாலியில் வைத்து இன்று (06.07.2021) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கள்ளப்பாடு வடக்கு பகுதியில் கடந்த 27ஆம் திகதி இரவு வீடு புகுந்த சுமார் 7 பேர்கொண்ட கும்பல் வாள் வெட்டுத் தாக்குதலில் ஈடுபட்டனர். இதன்போது வீட்டில் இருந்த நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

முல்லைத்தீவு வாள் வெட்டு சம்பவம் - மூவர் கைதுஅத்துடன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீதும் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியுள்ளதுடன் வாகனம் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்து.

இந்த நிலையில் சி.சி.ரிவி கெமரா மூலம் பதிவு செய்யப்பட்ட காணொளிகளை வைத்து சந்தேக நபர்களை இனம் காணும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் குறித்த சந்தேக நபர்களை கைதுசெய்ய அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்பட்டவர்களாக பிரதான சந்தேக நபர்களாக சந்தேகிக்கப்படும் மூன்று சந்தேக நபர்களை இன்று (6) நாவலியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த யாழ்பாண பொலிஸார் சந்தேக நபர்களை முல்லைத்தீவு பொலிஸாரிடம் கையளிக்க உள்ளனர்.

“பழைய கச்சேரிக்கட்டிடத்தை சீனாவுக்கு விற்பதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை.” – கீதனாத் காசிலிங்கம்

பழைய கச்சேரி கட்டிடத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கும் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அறிய முடிகின்றது.

பழைய கச்சேரி கட்டிடத்தை சீனாவிற்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கை இடம்பெறுவதாகவும் இந்த நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் எனவும்  அண்மையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக பிரதமரின் மீள்குடியேற்ற செயற்றிட்டத்திற்கான வடக்கு, கிழக்கு மாகாணத்தின் விசேட அதிகாரி கீதனாத் காசிலிங்கம் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொண்டாதாகவும் இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்று அதிகாரிகளால் தனக்குத் தெரிவிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனது  பிள்ளைக்கு நீதி கிடைக்கவேண்டும். – வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரால் படுகொலை செய்யப்பட்ட தாயார் !

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரால் படுகொலை செய்யப்பட்ட தனது மகனுக்கு நீதிவேண்டும் என அவரது தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த மாதம் 21ஆம் திகதி, இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய்பாதுகாவலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், (34 வயது) மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவர் உயிரிழந்தார்.

மேலும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மெய்பாதுகாவலர், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு, இன்று (செவ்வாய்க்கிழமை)  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

எனினும் குறித்த மெய்பாதுகாவலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை காரணமாக நீதிமன்றத்திற்கு அழைத்து வரமுடியாத நிலையில் வழக்கு விசாரணை இடம்பெற்றது.

இதன்போது சந்தேகநபரான மெய்பாதுகாவலரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு விசாரணையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த உயிரிழந்தவரின் தாயார், எனது  பிள்ளைக்கு நீதி கிடைக்கவேண்டும். அதை மாத்திரமே எதிர்பார்க்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

வெற்றிடத்துக்கு பசிலின் பெயர் பரிந்துரைப்பு

எம்.பி பதவியிலிருந்து ஜயந்த கெட்டகொடவின் விலகியதையடுத்து வெற்றிடமாக உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய
பட்டியல் இடத்தை நிரப்புவதற்கு பசில் ராஜபக்ஷவின் பெயர் தேர்தல் ஆணையத்துக்கு முன்மொழியப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் எம்.பி. ஜயந்த கெட்டகொட தனது பதவி விலகல்
கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ள நிலையிலேயே காலியாக உள்ள தேசிய பட்டியல் இடத்தை நிரப்ப பசில் ராஜபக்ஷவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது