15

15

தமிழர்களுடைய அரசியல் தீர்வுக்காக கூட்டமைப்பினர் அமெரிக்கத் தூதுவரை சந்திப்பாம் – பல சந்திப்புக்கள் நடந்தாயிற்று தீர்வைத்தான் காணவில்லை !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினருடன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தலைமையிலான குழுவினர் இன்று முக்கிய பேச்சு நடத்தியுள்ளனர்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லலத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது அரசியல் தீர்வு தொடர்பில் நீண்ட நேரம் பேசப்பட்டது எனக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அத்துடன் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் உள்ளிட்ட பரந்துபட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்ர்களின் அரசியல் தீர்வுக்காக பேசப்பட்டது என எத்தனையோ சந்திப்புக்கள் நடந்தாகிவிட்டது. இன்று வரை அந்த தீர்வு ஒன்றுமே கிடைக்கவில்லை என்பதே யதார்த்தம். இவர்களுடன் ஒப்பிடும் போது அரச தரப்புடன் உள்ள தமிழ் அரசியல்தலைவர்கள் இவர்களுடைய விமர்சனங்களுக்கு நடுவிலும் ஏதோ சிலவற்றை தானும் மக்களுக்காக செய்து முடித்துவிட்டனர். ஆனால் இந்த தமிழ்தேசியம் பேசுவோர் மட்டும் இன்னமும் துரோகி பட்டம் சூட்டிக்கொண்டும் – இந்தியாவும் சர்வதேசமும் ஏதாவது செய்யும் என்ற மாயையையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் கூறும் சர்வதேச சட்டங்கள் என்ன தீர்வை வழங்கிவிட்டன என்று தான் தெரியவில்லை. அண்மையில் கூட வரிச்சலுகை தரமாட்டோம் என  ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசை  கடிந்து கொண்டது. ஆனால் இலங்கையின் அரசு அதை சட்டைசெய்ததாகவே தெரியவில்லை.

தமிழர்களுக்கு அரசியல் சார்ந்து ஏதாவது தீர்வு கிடைக்க வேண்டுமாயின் தமிழ்தலைமைகள் பேச வேண்டியது அமெரிக்காவுடனோ – இந்தியாவுடனோ – சர்வதேசத்துடனோ அல்ல. இலங்கையின் அரசாங்கத்திடம் பேச வேண்டும். கடந்த நல்லாட்சி கால அரசில் இவர்களால் ஒரு அரசியல்கைதியையாவது விடுவிக்க முடிந்ததா..? இல்லையே.

வீணாக மக்களை இன்னமும் மகிந்த தரப்பு எதிரிகள் என்ற விம்பத்துக்குள்ளேயே வைத்துக்கொண்டு தமிழ் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்க்காது இருப்பதே இவர்களுடைய முக்கியமான இலக்கு போல் தோன்றுகிறது. சில வேளை இருக்கக்கூடும். மக்களுடைய அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டால் இவர்கள் எதை வைத்து அரசியல் செய்வார்கள் ..? என நாடாளுமன்றில் சுரேன் ராகவன் கேட்டது தான் நினைவிற்கு வருகிறது..!