19

Friday, August 6, 2021

19

அமெரிக்க – பிரித்தானிய கூட்டு வக்சீன் உற்பத்தியை தடுக்கின்றது!!!

பிரித்தானியாவில் சுதந்திர நாள்! வறுமைப்பட்ட நாடுகளில் மரண ஓலம்!
அமெரிக்க – பிரித்தானிய கூட்டு வக்சீன் உற்பத்தியை தடுக்கின்றது!!!

தனது நாட்டு மக்களுக்கு வக்சீனை வழங்கி கோவிட்-19 தாக்கத்தை கட்டுப்படுத்தி உள்ள அமெரிக்க – பிரித்தானியா அரசுகள் வக்சீனை ஏனைய நாடுகள் உற்பத்தி செய்வதற்கான உரிமத்தை சிறிது காலத்திற்கு விட்டுக்கொடுப்பதற்கு மறுத்து வருகின்றது. அதனால் உலகில் பல்லாயிரம் கோவிட் மரணங்கள் சம்பவிக்க உள்ளது. இன்று முற்றிலும் களியாட்டங்களுக்கு நாட்டைத் திறந்துவிட்டுள்ள பிரித்தானிய அரசு உலகின் பல்வேறு பாகங்களிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் மரணமாவதைப் பற்றி எவ்வித கரிசனையும் கொள்ளவில்லை.

நுனிநாக்கில் மனித உரிமை பேசி தங்களை மனித உரிமைகளின் ஜனநாயகத்தின் காவலர்களாகக் காட்டிக்கொள்ளும் அமெரிக்க – பிரித்தானிய நாடுகள் கோவிட் வக்சீன் உரிமத்தை முற்றிலும் லாபநோக்கத்திற்காக தனியார் நிறுவனங்களிடம் கையளித்து உற்பத்தியை தடுப்பதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மரணங்களுக்கு வழிகோலுகின்றனர். எவ்வித மனிநேயமும் அற்று செயற்படுகின்ற அமெரிக்க – பிரித்தானிய கூட்டு எதிர்காலத்தில் உலக நாடுகளுக்கு வழிகாட்டவோ தலைமையேற்கவோ தகுதயற்றவையாகி வருகின்றன.

பிரித்தானியா ப்ரீடம்டே – சுதந்திரநாள் என்று அறிவிப்பதற்கு 48 மணிநேரங்களிற்கு முன்னரே சுகாதார அமைச்சர், நிதி அமைச்சர், பிரதம மந்திரி மூவருமே தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டியேற்பட்டு விட்டது. தற்போதைய டெல்டா வேரியன் மிகவேகமாகப் பரவி வருகின்றது. ஆனால் நாட்டில் வயது வந்தவர்களுக்கு பெரும்பாலும் வக்சீன் போடப்பட்டு இருப்பதால் பாதிப்பு வீதம் மிக மிகக் குறைவான நிலையிலேயே காணப்படுகிறது. மேலும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் வரும் இரு மாதங்களுக்குள் வக்சீன் போடப்பட்டு விடும் என பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இந்த வக்சீன் காரணமாக கோவிட் பாதிப்பும் மரணங்களும் பெரும்பாலும் முற்றாக தடுக்கப்படுகின்ற நிலைக்கு மேற்கு நாடுகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் சனத்தொகை அதிகமான வறிய மற்றும் வளர்ந்துவரும் நாடுகளில் கோவிட் பாதிப்பும் மரணமும் அதிகரித்து வருகின்றது.

இதனைத் தடுப்பதற்கு தேவையான வக்சீனை உற்பத்தி செய்வதற்கு வக்சீன் உற்பத்தி உரிமத்தை அமெரிக்க – பிரித்தானிய அரசுகள் தற்காலிகமாகவேனும் வழங்கினால் உற்பத்தியயை வேறுநாடுகளிலும் வக்சீன் உற்பத்தி செய்து கோவிட் பாதிப்பையும் மரணத்தையும் கட்டுப்படுத்தலாம். வறிய நாடுகளில் ஒரு வீதமான சன்தொகைக்கு கூட வக்சீன் போடப்படவில்லை. அமெரிக்க – பிரித்தானிய அரசுகளின் சுயநலமிக்க முற்றிலும் லாபத்தையீட்டும் நிறுவனங்களுக்கு சாதகமாகச் செயற்படுவது மனித குலத்தை பெரும் அவலத்திற்குள் தள்ளவுள்ளது.

இந்திய அணியுடனான தொடரை படுதோல்வியுடன் ஆரம்பித்தது இலங்கை !

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது.  இந்தப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்தியா வெற்றி பெற 263 ரன்கள் இலக்குஇதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 262 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் எந்த ஒரு வீரரரும் அரைச்சதத்தை கூட எட்டியிராத நிலையில் அதிகபட்சமாக சமிக கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களையும் தசுன் சானக 39 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் தீபக் சஹார், குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இதற்கமைய, 263 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 36.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய அணி சார்பில் அணித்தலைவர் சிகர் தவான் ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். தனது கன்னி ஒருநாள் போட்டியில் விளையாடிய இஷான் கிசான் தனது முதலாவது அரைச்சதத்தினை பதிவு செய்தார். அவர் 42 பந்துகளில் 59 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பிரித்திவ் ஷா 43 ஓட்டங்களையும், மனிஷ் பான்டே 26 ஓட்டங்களையும் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். போட்டியின் ஆட்டநாயகனாக பிரித்திவ் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன்படி, மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றுள்ளது.

74-வது கேன்ஸ் திரைப்பட விழா – சிறந்த நடிகராக காலேப் லாண்ட்ரி ஜோன்ஸ் தெரிவு !

உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கேன்ஸ் திரைப்பட விழா ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த 6-ம் திகதி தொடங்கிய 74-வது கேன்ஸ் திரைப்பட விழா 17-ம் திகதி வரை நடைபெற்றது.  இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருது அமெரிக்காவின் காலேப் லாண்ட்ரி ஜோன்சுக்கு வழங்கப்பட்டது.சிறந்த நடிகைக்கான விருதை நோர்வே நாட்டை சேர்ந்த ரெனடா ரீன்ஸ்வே வென்றார்.
2021 கான்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த விருதை வென்றது டைட்டான்
புகழ்பெற்ற பால்ம் டோர் விருது டைடேன் எனும் பிரான்ஸ் திரைப்படத்துக்கு  வழங்கப்பட்டது. அந்தத் திரைப்படத்தை இயக்கிய ஜூலிய டோகோர்னோ விருதைப் பெறும் இரண்டாவது பெண் இயக்குநர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.

துறைமுக நகருக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட சீனர் உட்பட ஐந்து பேர் கைது !

கொழும்பு துறைமுக நகருக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட சீன நாட்டவர் ஒருவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் அதிவேக நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தில் கடமையாற்றி வந்த சீன நாட்டவர் ஒருவர் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த நால்வரை கொழும்பு துறைமுக நகருக்குள் அழைத்துச் செல்ல முற்பட்டு உள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

துரைமுக நகருக்குள் நுழைவதற்கான நடைமுறைகளை மீறியமை தொடர்பில் குறித்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த ஐந்து சந்தேக நபர்களும் இன்று கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகச் சட்டமூலத்தை நிறைவேற்றும் முயற்சியை தோற்கடிப்போம்.” – சஜித் பிரேமதாச

பல்கலைக்கழகச் சட்டத்தில் திருத்தம் செய்வது, இந்த நாட்டில் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையை பாரிய நெருக்கடிக்கு தள்ளிவிட வழிவகுக்கும். அதனால் அரசாங்கம் தன்னிச்சையாக பல்கலைக்கழகச் சட்டத்தைத் திருத்துத்துவதற்கு அல்லது முன்மொழியப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகச் சட்டமூலத்தை நிறைவேற்ற முற்பட்டால், நாட்டு மக்களை ஒன்றிணைத்துக்கொண்டு அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்படுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொத்தலாவல பாதுகாப்பு அறிவியல் பீடம் 1981 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கேடட் அதிகாரிகளுக்கான பயிற்சி மையமாகவும், இலங்கையில் உயர் கல்வி கற்கும் நிறுவனமாகவும் செயல்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை தற்போதுள்ள விதத்தில் பராமரிப்பதற்கும், இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு இன்னும் நவீன மற்றும் விஞ்ஞான பயிற்சிகளை வழங்குவதற்கும் தேவையான அந்த முடிவுக்கு எங்களது முழுமையான ஆதரவை வழங்குவதற்கும் நாங்கள் முழு மனதுடன் ஒப்புதல் அளிக்கிறோம் என்றார்.

இதே நேரம் ஜனாதிபதி கோட்டாபாயராஜபக்ஷ கொத்தலாவல பல்கலைகழகம் பல்கலைகழக மாயிணங்கள் ஆணைக்குழுவின் கீழேயே செயற்படும் என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.