August

August

பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு ஒரு தங்கம் !

டோக்கியோவில் இடம்பெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கை தனது முதலாவது தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளது.

Herath wins a silver medal | Daily News

எப் 46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத்தால் இந்த தங்கப் பதக்கம் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

அவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்து இந்த தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எப் 46 ஈட்டி எறிதல் போட்டியில் வௌ்ளிப் பதக்கத்தையும், வெங்கலப் பதக்கத்தையும் இந்திய வீரர்கள் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது

“தடுப்பூசி போடாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை.” – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

ஊரடங்கு உத்தரவை மீறுவோரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதன் மூலம் மட்டும் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தலதுடுவ தெரிவித்தார்.

தடுப்பூசி பெற மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

டெல்டா வைரஸ் மிகவும் அபாயகரமானது என்பதுடன் வேகமாகப் பரவுகின்றது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இதை நாட்டு மக்களால் மட்டுமே தடுக்க முடியும் என்று கூறிய அவர், அவசரத் தேவை தவிர வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வலியுறுத்தினார்.

முகக்கவசம் அணியாதவர்களை நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லும் போது கொரோனா கட்டுப்பாட்டில் இல்லை என்றும் ஒவ்வொருவரும் சுய ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இலங்கையில் இன்று மட்டும் 4,612 பேருக்கு தொற்று உறுதி !

நாட்டில் மேலும் 914 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும்  இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் இன்று இதுவரையில் 4,612 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 426,169 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 357,598 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,583 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

கொரோனா தொற்றால் இலங்கைக்கு எவ்வளவு ரூபாய் நட்டம்..? – தகவலை வெளியிட்டார் நிதியமைச்சின் செயலாளர் !

கொரோனா வைரஸ் காரணமாக நாடு கடந்த ஒரு வருடகாலமாக 1500 பில்லியன் ருபாய் இழப்பை சந்தித்துள்ளது என நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் அட்டிகல தெரிவித்துள்ளார்.

2020 மார்ச்சில் கொரோனா வைரஸ்பரவல் ஆரம்பமான காலம் முதல் இலங்கை பல்வேறு செலவீனங்களை சந்தித்துள்ளது எனவும் மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நிவாரணங்களிற்கு தொழில்நுட்ப சேவைகளை செய்வதற்கு தனிமைப்படுத்தல் சேவைகள் நிலையங்களைமுன்னெடுப்பதற்கு என பலவிடயங்களிற்கு அரசாங்கம் புதிதாக நிதியை செலவிடவேண்டிய நிலை காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.


இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்துள்ளது சுற்றுலாத்துறை வருமானங்கள் உட்பட ஏனைய வருமானங்கள் குறைவடைந்துள்ளன என வும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மேலும் 192 பேர் கொரோனா தாக்கி பலி !

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 192 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

109 ஆண்களும் 83 பெண்களுமே உயிரிழந்துள்ளனர் என்பதுன், 60 வயதுக்கு மேற்பட்ட 156 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 36 பேர் மரணித்துள்ளனர்.

அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 8,775 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் மேலும் 4,612 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 426,169 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,203 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 357,598 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 59,796 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

“யாழ்.மக்களை அவர்களின் நிலங்களில் குடியேற்றிவிட்டு ஸ்டாலினை பாராட்டுங்கள்.” – நாமலுக்கு மனோகணேசன் பதில் ட்வீட் !

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை வரவேற்பதை விடுத்து யாழ்ப்பாணத்தில் பத்தாண்டுகளாக இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுங்கள் என அமைச்சர் நாமல் ராஜபக்சவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவதானம் செலுத்தியமையை வரவேற்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தார். அத்துடன் இலங்கைக்கு திரும்ப விரும்பும் அகதிகளை வரவேற்க தயாராக இருப்பதாகவும் அவர் தனது டுவிட்டர் பதவில் நேற்றையதினம் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் வழங்கும் வகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேற்கண்டவாறு தனது டுவிட்டர் பதவில் இன்றையதினம் தெரிவித்துள்ளார்.அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழகத்து இலங்கை அகதிகளை வரவேற்க முன், இன்றும் யாழில், பத்தாண்டுகளாக இடம்பெயர் முகாம்களில் வாழும் தமிழ் மக்களை மீளக்குடியேற்றுங்கள். வலி-வடக்கில் பலாலி உட்பட்ட வளமான காணிகளில் இருந்து இராணுவத்தை அகற்றி இம்மக்களை தம் சொந்த நிலங்களுக்கு போக விடுங்கள் என தெரிவித்துள்ளார்.

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி – சிறப்பு மருத்துவ குழு நியமனம் !

தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னரும் கொரோனா பரவுவது தொடர்ந்தால், அடுத்தகட்ட நடவடிக்கையை பரிந்துரைப்பதற்காக சிறப்பு மருத்துவ குழுக்களை நியமிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, சுகாதார துறை பிரதானிகளிடம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் 100 சதவீதமும், இரண்டாவது டோஸ் சுமார் 56 சதவீதமும் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த ஜனாதிபதி, இந்த மாத இறுதிக்குள் கணிசமான மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.

30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதா அல்லது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவதா அடுத்த முன்னுரிமை என்பதை ஆராய்ந்து கருத்துக்களை முன்வைக்குமாறு சுகாதாரத் துறை பிரதானிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

“வைத்தியசாலைகளை விட வீட்டில் சிகிச்சையளிப்பது நல்ல பெறுபேற்றை தருகின்றது.” – விசேட வைத்திய நிபுணர்

கொவிட் தொற்றுக்குள்ளான நபர்களுக்கு வீட்டினுள் சிகிச்சை அளிக்கும் முறை சாதகமான பெறுபேற்றை தந்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றாளர்கள் குணமடைய நல்ல மன ஆரோக்கியத்தை பராமரிப்பது ஒரு முக்கிய காரணியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வீட்டினுள் சிகிச்சை அளிக்கும் முறையின் கீழ் 24,847 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக வைத்திய நிபுணர் மேலும் குறிப்பிட்டார்.

´நாடு பூராகவும் 41,826 பேர் வீட்டினுள் சிகிச்சை அளிக்கும் முறையின் கீழ் உள்ளனர். 474 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீட்டினுள் சிகிச்சை பெறும் தொற்றாளர்களின் மன ஆரோக்கியத்தை பராமரிப்பது பிரதானமானது என அவர்களின் பதில்களின் இருந்து தெரிகிறது. அவர்களிடம் தொலைப்பேசியில் உரையாடும் போது இது எமக்கு தெரிய வந்தது. இந்த நோய் தீவிரமடைய மன அழுத்தம் முக்கிய காரணியாகும்´.

“இலங்கைத்தமிழர்கள் நம்மவர்கள் அவர்கள் அகதிகளல்ல.”- சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள உத்தரவு !

இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம் என்பது இனிமேல், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

வேளாண்மை, கால்நடை, மீன்-பால் வளத் துறைகள் மானியக் கோரிக்கை மீது நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற விவாதத்தின்போதே முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, அங்கு மேலும் உரையாற்றிய அவர், “மானியக் கோரிக்கையில் இப்போது உறுப்பினா் பேசும் போதும், வெள்ளிக்கிழமை நான் அறிவிப்புகளை வெளியிடும் போதும் இலங்கை தமிழா்கள் அகதிகளாக ஆக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

அகதிகள் முகாம் இனி, இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும். ஏனென்றால் அவா்கள் ஆதரவற்றவா்கள் அல்ல. நாம் அவா்களுக்குத் துணையாக இருக்கிறோம். அந்த உணா்வுடன் அகதிகள் முகாம் என்று அழைக்காமல் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என்று அழைக்க அரசு ஆணையிட்டுள்ளது” என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

“இலங்கைக்கு திரும்பும் அகதிகளுக்கு நாம் பாதுகாப்பு வழங்குவோம்.” – நாமல் ராஜபக்ஷ ட்வீட் !

யுத்தக் காலத்தில் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்று, நாடு திரும்ப விரும்பும் அகதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை அகதிகளுக்கு தமிழக முதலமைச்சர் சிறப்புரிமைகளை அறிவித்த நிலையிலேயே, நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் தளத்தில் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கைக்கு மீள வருகைத் தரும் அகதிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அவர்களுக்கு தமது தாய் நாட்டில் தமது வாழ்க்கையை மீள ஆரம்பிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், இலங்கை அகதிகள் குறித்து தமிழக முதல்வர் அவதானம் செலுத்தியமையை வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்திற்கு அகதிகளாக சென்ற 3,567 குடும்பங்களை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டிற்கு மீள அழைத்து வந்து, அவர்களுக்கு தேவையான வீடுகளை வழங்கியிருந்தார் எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.