04

04

ஹிஷாலினி தங்கியிருந்த அறையில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துருக்கள் – புதிய சர்ச்சை ஆரம்பம் !

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணித்த ஹிஷாலினி என்ற 16 வயதான சிறுமி தங்க வைக்கப்பட்டிருந்த அறையில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துருக்கள் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, ஹிஷாலினியின் குடும்பத்தினர் கோரியுள்ளனர்.

Hisahalini

அதேநேரம், மாத்தறை பிராந்திய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் பொறுப்பதிகாரி வருணி போகஹவத்த தலைமையிலான காவற்துறைக் குழுவினால் இந்த சம்பவம் தொடர்பான பல முக்கிய தடயங்களும் தகவல்களும் துலக்கப்பட்டுள்ளன.

ஹிஷாலினி தங்க வைக்கப்பட்டிருந்த சிறிய அறை ஒன்றின் ஓரத்தை உறங்குவதற்காக அவர் பயன்படுத்திவந்துள்ளார். அந்த அறையின் கதவுக்கு பின்பக்கச் சுவரில் தரையில் இருந்து 4 அடி உயரத்தில் அவரால் எழுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் எழுத்துருக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

(என் சாவுக்கு காரணம்) என ஆங்கில எழுத்துக்களால் எழுத்தப்பட்டுள்ளது.

இது ஹிஷாலினியால் எழுதப்பட்டதுதானா? என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதற்காக இரசாயன பகுப்பாய்வுப் பிரிவின் எழுத்துருக்கள் நிபுணர்கள் குழு ஒன்று செயற்படுவதுடன், ஹிசாலினியால் எழுதப்பட்ட அப்பியாசப் புத்தகங்களும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், தமது தங்கைக்கு ஆங்கில மொழியில் எழுதத் தெரிந்திருக்கவில்லை என்று, ஹிசாலியின் சகோதரர் தெரிவித்துள்ளார்.