April

April

இலங்கையில் ஜனாதிபதியினால் அவசரகால நிலை பிரகடனம் !

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் அமைதியை பாதுகாக்கும் வகையில் இலங்கையில் பொது அவசரகாலநிலையை ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச பிரகடனப்படுத்தியுள்ளார்.

 

ஏப்ரல் 01 ஆம் திகதி( இன்றிலிருந்து) நடைமுறைக்கு வரும் வகையில் இந்த பிரகடனம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசேட வர்த்தமானியையும் அவர் இன்று வெளியிட்டுள்ளார்.

“நேற்றைய போராட்டம் இனவாத – பயங்கரவாத சம்பவமோ அல்ல” – ரணில் விக்கிரமசிங்க

நேற்றையதினம் இரவு மிரிஹானவில் இடம்பெற்றது அடிப்படைவாதிகளுடைய செயற்பாடுகள் எனவும் அரபுவசந்தத்தை மீட்பதற்காக இடம்பெற்றது எனவும் ஜனாதிபதி செயலகம் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த போராட்டம் , இனவாத சம்பவமில்லை. இது பயங்கரவாத சம்பவமில்லை, என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறான இனவாத கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்
அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர்,  மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

பிரஜைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிற்கு தீர்வு எதுவும் காணப்படாததால் நேற்றிரவு மிரிஹான பங்கிரிவத்தை ஆர்ப்பாட்டம் வெடித்தது.

தற்போதைய அரசியல் கட்டமைப்பின் வீழ்ச்சியே இந்த சம்பவத்திற்கு காரணம் என தெரிவிக்கலாம்.
இலங்கை பிரஜைகளை வாட்டும் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளது. எதிர்கட்சியும் தனது பொறுப்பை நிறைவேற்ற தவறியுள்ளது.

அரசாங்கம் இந்த சம்பவங்களிற்கு பல தரப்பட்ட குழுக்கள்மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றது. ஆனால் அவர்கள் தங்கள் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை முன்வைக்கவேண்டும்.

அரசாங்கம்இனவாத கருத்துக்களை தவிர்த்துக்கொள்ளவேண்டும்,அதேவேளை யார் இந்த வன்முறைகளிற்கு காரணம் என்பதை வெளிப்படுத்தவேண்டும்.
இது இனவாத சம்பவமில்லை,இது பயங்கரவாத சம்பவமில்லை,அவ்வாறான விதத்தில் கருத்துக்களை தெரிவிப்பது ஏற்கனவே காணப்படும் நிலையை மேலும் தீவிரப்படுத்தும்.

யூப்பிளி போஸ்டில் அமைதியான விதத்திலேயே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. ஆனால் பங்கிரிமாவத்தையில் அந்த நிலை மாற்றமடைந்தது.
நான் இது குறித்து மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றேன்,அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக எவரையும் காயப்படுத்தக்கூடாது-மக்களிற்கு அமைதியாகவும் சுதந்திரமாகவும் போராட உரிமையுண்டு,பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்களில் அரசியல் கட்சிகள் பங்கெடுக்ககூடாது.

ஆனால் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டங்களையும்,ஆர்ப்பாட்டங்களையும் நடத்துவதற்கான உரிமையுண்டு.
தாமதமாகிவிட்டபோதிலும் நாடாளுமன்றத்திற்கும்கடப்பாடு உள்ளது,பொதுமக்களிற்கு தீர்வை வழங்ககூடிய தீர்வுகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும்,
இந்த நெருக்கடிக்கு வன்முறைகள்இன்றி தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கின்றேன்

உணவுப்பணவீக்கம் தென்னாசியாவில் இலங்கைக்கு முதலிடம் !

இலங்கையில் உணவுப் பணவீக்கம் கடந்த மாதத்தில் 30.2% வீதமாக உயர்ந்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அண்மைய அறிக்கையின்படி, உணவு அல்லாத பணவீக்கம் 13.4% ஆக உள்ளது.
மார்ச் மாதத்தில் ஆண்டு அடிப்படையில் பணவீக்கம் 18.7% ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் உணவுப் பணவீக்கம் பெப்ரவரியில் 25.7% ஆகவும், உணவு அல்லாத பணவீக்கம் 10.1% ஆகவும் இருந்தது.

உணவுப் பணவீக்கத்தின் படி, இலங்கை உலகில் 12ஆவது இடத்திலும், ஆசியாவில் 4ஆவது இடத்திலும், தெற்காசியாவில் 1ஆவது இடத்திலும் உள்ளது.

“இடைக்கால அரசாங்கத்தை அமைத்து பொதுத்தேர்தல் ஒன்றை நடாத்துங்கள்.” – விமல் வீரவங்ச கோரிக்கை!

இடைக்கால அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என  நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

 

“இந்த நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதே முக்கியமான விடயமாகும். சாதாரண நேரத்தில் எடுக்கும் தீர்மானங்கள் இப்போது நாட்டுக்கு பொறுந்தாது.

எனவே, ஜனாதிபதி உடனடியாக தனது அமைச்சரவையை கலைத்துவிட்டு, நாடாளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்தி, இணக்கப்பாட்டுடன் தற்காலிக அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டும்.

அனைத்து அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்புடன் இடைக்கால அரசாங்கமொன்றை ஏற்படுத்தி இவற்றுக்கு தீர்வுக் காணப்பட்டதை அடுத்து, பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இந்த ஒரு நடவடிக்கையே பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தீர்வாக அமையும் என நாம் கருதுகிறோம்.

அதனைவிடுத்து, இடைக்கால தீர்மானங்களை எடுத்தோ தடைகளை விதித்தோ மக்களை கட்டுப்படுத்த முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

அரசாங்கம் மீது மக்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளார்கள். இதனை மாற்றுவது கடினமாகும். இந்தநிலைமையில், இடைக்கால அரசாங்கமொன்றை அமைத்து பொதுத் தேர்தலொன்றுக்கு செல்லாவிட்டால், நாட்டின் நிலைமை இன்னமும் பாரதூரமாக மாற்றமடையும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் ஐக்கிய மக்கள் சக்தியினர் முன்னெடுத்த போராட்டத்தில் பெருங்குழப்பம் – செருப்பால் தாக்கப்பட்ட ஆளுந்தரப்பு ஆதரவாளர் !

நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.

குறிப்பாக தென்னிலங்கையில் பெருமளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது வடக்கிலும் ராஜபக்க அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் “பருத்தித்துறை தொடக்கம் தெய்வேந்திரமுனை நோக்கிய பேரணி” என்ற தொனிப்பொருளில் ஐக்கிய பெண்கள் சக்தியினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக இன்று காலை கச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய இந்த பேரணி செல்கின்றது. அதன் பின்னர் அநுராதபுரம் ஊடாக கொழும்பு நோக்கி கட்டம் கட்டமாக ஏழு நாட்களுக்கு கொழும்பைச் சென்றடையும் என ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

குறிப்பாக பொருளாதார நெருக்கடியினால் குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுவரும் நிலையில் தீர்வு வழங்க வேண்டும் என கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

 

செயலகத்தில் இருந்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்த இறுதி நேரத்தில் அங்கு  அரசாங்கத்துக்கு ஆதரவாக ஒரு ஒரு குழு செயற்படவே அங்கு முறுகல் நிலை உருவானது.

முறுகல் நிலை ஏற்பட்டதுடன் கைகலப்பும் உருவானது.  பதற்றத்தை  தணிப்பதற்காக  பொலிஸார் குவிக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் கைகலப்பில் சிலர் காயமடைந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் கட்சியினர் தொடர்ந்தும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்ததுடன் குழப்பவாதிகளுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.

அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் குழப்பம் விளைவித்த ஆளும் தரப்பு ஆதரவாளர் மீது இளைஞர் ஒருவர் செருப்பினால் தாக்கியுள்ளார்

 

குழப்பத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் அங்கிருந்து பாதுகாப்பாக முச்சக்கர வண்டியில் அனுப்புவதற்கு முயற்சித்த வேளை போராட்டக்காரர்கள் முச்சக்கர வண்டியையும் கடுமையாகத் தாக்கினர். பெரும் பிரயத்தனத்திற்கு மத்தியில் பொலிஸாரே முச்சக்கர வண்டியை செலுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர உமாச்சந்திர பிரகாஷ் உள்ளிட்ட கட்சியின் அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

“சுமந்திரன் வன்முறை என குறிப்பிட்ட பிரபாகரனின் ஆசீர்வாதத்துடன் தான் கூட்டமைப்பே உருவானது.” சுமந்திரனுக்கு அடைக்கலநாதன் பதில் !

விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதத்துடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்கியவ்கள் நாமே.” என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை சீர்குலைக்கிறார் என எம்.ஏ.சுமந்திரன் மீது நீண்டகாலமாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபயவை சந்திப்பதில்லையென ரெலோ எடுத்த முடிவை சுமந்திரன் பகிரங்கமாக விமர்சித்து வருகிறார்.

நேற்று வவுனியாவில் நடந்த நிகழ்வொன்றின் பின்னர் கருத்து தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேறினால் சந்தோசமடைவேன் என கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாவை காப்பாற்ற எமது கட்சி வராததால் சுமந்திரன் ஏன் பதற்றமடைகிறார், கடந்த நல்லாட்சி காலத்திலும் ரணிலை காப்பாற்ற இதுபோலவே ‘விழுந்து விழுந்து’ பணியாற்றினார் என ரெலோ ஆதாரவாளர்கள் சமூக ஊடகங்களில் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், எம்.ஏ.சுமந்திரனின் கருத்து தொடர்பிலும் அவர் முன்வைத்த விமர்சனங்கள் தொடர்பிலும் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறிய போது,

”தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழீழ விடுதலை இயக்கம் விலகிச் சென்றால் தமிழ் அரசு கட்சி சந்தோசப்படும் என சுமந்திரன் தெரிவித்திருந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகி, 10 வருடங்களின் பின்னரே சுமந்திரன் கட்சிக்குள் வந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்தில் ரெலோ முக்கிய பங்காற்றியிருந்தது. கிழக்கில் உள்ள தமிழ் அரசு கட்சியின் பிரமுகர்கள் பலருக்கும் அது தேரியும்.ஆயுதப் போராட்டத்தை வன்முறையென சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். வன்முறையை ஏற்கவில்லையென்றும் குறிப்பிட்டார்.

சுமந்திரன் வன்முறையென குறிப்பிடும் வே.பிரபாகரனின் ஆசீர்வாதத்துடனேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த கூட்டமைப்பில் சுமந்திரன் எப்படி அங்கம் வகிக்க முடியும்.

இதேவேளை, சுமந்திரனின் கருத்து தமிழ் அரசு கட்சியின் கருத்தா என்பதை அந்த கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும், சுமந்திரனின் கருத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்தை என்பதை இரா.சம்பந்தன் தெளிவுபடுத்த வேண்டும்.

போராட்டத்திலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திலும் ஒரு துளியளவு பங்களிப்பையும் செலுத்தாதவர் சுமந்திரன். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் அனைவருக்கும் முன்பாகவே எமது முடிவை அறிவித்தோம். எமது முடிவு ஜனநாயகரீதியிலானது என இரா.சம்பந்தனும் தெரிவித்திருந்தார்.

சுமந்திரன் பல தடவைகள் சீண்டிய போதும், நாம் உருவாக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமை பாதிக்கப்பட கூடாது என்பதற்காக மௌனம் சாதித்தோம். இப்பொழுது சுமந்திரன் சொன்ன கருத்து பாரதூரமானது. அதற்கு பதிலடி கொடுப்போம்.

எம்மை துரோகிகள் போல சுமந்திரன் பொய்யான கருத்தை தெரிவித்திருந்தார். நாம் துரோகிகளாக புலிகளால் பார்க்கப்பட்டிருந்தால், கூட்டமைப்பை உருவாக்கும் பணியை புலிகள் எம்மிடம் தந்திருக்க மாட்டார்கள்.

விடுதலைப் புலிகளும், ரெலோவும் எப்படி அன்னியோன்யமாக செயற்பட்டார்கள் என்பது வரலாறு தெரிந்தவர்களிற்கும், விடுதலைப் புலிகளின் மூத்த போராளிகளிற்கும் நன்கு தெரியும். வவுனியாவில் புலிகளுடன் சேர்ந்து செயற்படுவதாக கூறி, எமது உறுப்பினர்களும், அலுவலகங்களும் தாக்கப்பட்டிருந்தன.

எம்மையும் புலிகளையும் பற்றி பேசும் தகுதி சுமந்திரனுக்கு கிடையாது” என்றார்.

ஆரம்பமானது கைதுகள் – 54 பேர் வரை கைது !

நுகேகொட – மிரிஹான பகுதியில் நேற்று(வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் பொலிஸ் பேருந்து ஒன்றும், ஜீப் ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும், 2 டிராஃபிக் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இராணுவ பேருந்து ஒன்றும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

”நாங்கள் ஆயுதப்போராட்டத்தினை கொச்சப்படுத்தவும் இல்லை. காட்டிக்கொடுக்கவும் இல்லை.” – எம்.ஏ.சுமந்திரன்

“நாங்கள் ஆயுதப்போராட்டத்தினை கொச்சப்படுத்தவும் இல்லை. காட்டிக்கொடுக்கவும் இல்லை.” என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

 

வவுனியாவில் தந்தை செல்வாவின் 124 ஆவது பிறந்தநாள் நிகழ்வின் பின்னர் தமிழரசுக்கட்சியின் தாயகம் அலுவலகத்தில் இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளரொருவர் கடந்த காலங்களில் ஈ.பி.ஆர்.எல்.எப் கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு ரெலோ தமிழரசுக்கட்சியை விமர்சித்து பின்னர் வெளியேறியது அதேபோன்றதான நிலையில் தற்போது காணப்படுகின்றது எனவே ரெலோவும் வெளியேறிவிடும் என்ற அச்சம் உங்களுக்கு உள்ளதா என கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஏன் அவர்கள் வெளியேறிவிடுவார்கள் என்று அச்சமாக இருக்க வேண்டும். அது சந்தோசமாகவும் இருக்கலாம்தானே. எமது கட்சியில் பலருக்கு நீண்ட காலமான எதிர்பார்ப்பு இவர்கள் எப்போது போவார்கள் என்பது. எனினும் நாங்கள் தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்தும் கட்சிகளில் பிளவு இருக்க கூடாது. எல்லோரும் சேர்ந்து இயங்குவது எமது மக்களுக்கு பலமான விடயம் என்பதனால் நாங்கள் எல்லோருடனும் சேர்ந்து பயணிக்கின்றோம்.

இன்று அரசாங்கத்துடன் தமிழ் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தும் சூழ்நிலையில் ரெலோ மட்டுமல்ல வெளியில் உள்ள ஈ.பி.ஆர்.எல.எப் விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியாகட்டும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியாகட்டும் எல்லோரும் இதற்கு இணங்கி ஒன்றாக சேர்ந்து நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டை அரசாங்கத்துக்கு முன் வைக்க வேண்டும் என்பதே எனது தாழ்மையான கோரிக்கை. இதனை தமிழரசுகடக்சியின் பேச்சாளர் என்ற வகையிலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் என்றவகையிலும் இந்த அழைப்பை விடுக்கின்றேன்.

நாங்கள் ஆயுதப்போராட்டத்தினை கொச்சப்படுத்தவும் இல்லை. காட்டிக்கொடுக்கவும் இல்லை. ஆயுதப்போராட்டத்தினை நேரடியாகவே காட்டிக்கொடுத்தவர்கள் பலர் நேரடியாகவே கொலை செய்து இன்று தாங்கள்தான் விடுதலைப்புலிகளின் பிரதான ஆதரவாளர்கள்போல் காட்டிக்கொண்டு திரிகின்றனர். அதில் மக்களுக்கு தெளிவு இருக்க வேண்டும்.

எனக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை என்பது ஆயுதப்போராட்டத்திற்கு எதிரான கூற்று அல்ல. எனக்கு நம்பிக்கை இல்லை என்பதேதான். ஆனால் அந்த ஆயுதப்போராட்டம் நடந்த காலத்திலேயே அதனை முன்னின்று நடத்தியவர்களை காட்டிக்கொடுத்து ஆயுதத்தை இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக திருப்பாமல் தங்களுடைய சொந்த போராளிகளுக்கு எதிராக சகோதர இயக்கங்களுக்கு எதிராக திருப்பியவர்கள் இன்று தாம் விடுதலைப்புலிகளுக்கு சார்பாக இயங்கியவர்களை போல பொய்யாக வேடம் போட்டு திரிகின்றனர். இதில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

அண்மையில் எங்களோடு பேச்சுக்கு வரமாட்டோம் என பகிஸ்கரித்த இயக்கத்தின் தலைவர் சொல்லியிருந்தார் சிறிசபாரத்தினமும் பிரபாகரனும் இந்த சந்தர்ப்பத்தில் என்ன செய்திருப்பார்களோ அதனையே தாம் செய்தோம் என்று. பிரபாகரனும் சிறிசபாரத்தினமும் ஒன்றாக பயணித்தவர்கள் போல கூறியிருந்தார். ஆனால் தந்தை செல்வா இந்த சந்தர்ப்பத்தில் என்ன செய்திருப்பாரோ அதனையே நாம் செய்தோம் என தெரிவித்தார்.

 

பஷில் ராஜபக்சவால் வீழ்ந்த ராஜபக்ஷக்களின் ஆட்சி !

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு குடும்ப ஆட்சியே காரணம் என பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் இன்று  தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டி அபயாராமய விகாரையில் இன்று (31) நடத்திய விஷேட சங்க மாநாட்டில் வண.பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் இதனைத் தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பசில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 69 இலட்சம் மக்களுக்கு மாத்திரம் அல்லாது முழு நாட்டையும் நேசிக்கும் மக்களின் உயர்ந்த அபிலாஷைகளுக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சமும் சந்தேகமும் நிலவுவதாக  தெரிவித்தார்.

அனைவரின் கருத்துக்கும் செவிசாய்க்காமல் இரட்டைக் குடியுரிமையை மீண்டும் கொண்டு வந்த அரசாங்கம் பாரிய தவறை இழைத்துள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு குடும்ப ஆட்சியே காரணம் எனவும் மெதகொட அபயதிஸ்ஸ தேரர்  தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற ஆட்சியை மக்கள் எதிர்பார்க்கவில்லை. அன்று கோட்டாபயவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் யார் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதை மகாசங்கம் தீர்மானித்தது போல், இன்று அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை மகாசங்கமே தீர்மானிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் பிச்சைக்காரர்கள்.” – யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் காட்டம் !