05

05

ஆங்கிலத்தில் பேசியதால் குத்திக்கொலை செய்யப்பட்ட இளைஞர் – பொலிஸில் சரணடைந்த இருவர் !

யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் அமைந்துள்ள மதுபான சாலையில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் இருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை பகுதியில் அமைந்துள்ள மதுபான நிலையத்தில் கடந்த 3ஆம் திகதி இரவு இரு இளைஞர்கள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தர்க்கம் போத்தல் குத்தில் முடிவடைந்ததில் திக்கம் பகுதியை சேர்ந்த குணசேகரம் குணசோதி (வயது 25) எனும் இளைஞன் உயிரிழந்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் நால்வரை அடையாளம் கண்டிருந்தனர்.

அவர்களை கைது செய்தவற்கு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் அல்வாய் பகுதியை சேர்ந்த இருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட இருவர் தொடர்ந்தும் தலைமறைவாகியுள்ளதாகவும் , அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் , சரணடைந்துள்ள இருவரும் அன்றைய தினம் பிரதான சந்தேகநபருடன் மது அருந்திய நபர்கள் எனவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்தவர் மதுபான விடுதியில் ஆங்கிலத்தில் பேசியதால், ஆத்திரமடைந்த இளைஞர் குழுவினர் குறித்த நபரை கொலை செய்ததாகவும் தகவல்கள் தெர

“நாடாளுமன்றத்தில் இன்று பலரின் வேடங்கள் வெளியாகின.”- சஜித் பிரேமதாச காட்டம் !

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் மூலம் பலரின் வேடங்கள் வெளியாகின என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பிரதி சபாநாயராக தெரிவுசெய்யப்பட்ட பின்னரே அவர் இந்த கருத்தை அவர் வெளியிட்டார்.

மொட்டு கட்சியின் ஆதரவு ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவுக்கு கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டமையை அடுத்தே தாம் தமது முடிவை மாற்றிக்கொண்டதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்தநிலையில் அரசாங்க கட்சியின் கைப்பொம்மையாக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய செயற்படுகிறார் என்பது இன்று வெளியானது என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

“The drama of the “dissentients” was exposed today.” – எம்.ஏ.சுமந்திரன் ட்வீட் !

“சியம்பலாப்பிட்டியவுக்கு பதிலாக சியம்பலாபிட்டிய“ என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அண்மையில் பதவியை இராஜினாமா செய்த ரஞ்சித் சியம்பலாபிடிய இன்று (வியாழக்கிழமை) மீண்டும் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “சியம்பலாப்பிட்டியவுக்கு பதிலாக சியம்பலாபிட்டி! எண்ணிக்கை இப்போது தெளிவாகிவிட்டது.

இலங்கை நாடாளுமன்றத்தில் உண்மையான எதிர்க்கட்சி 65 (இன்று இல்லாதவர்கள் +5 பேர் இருக்கலாம்). “அதிருப்தியாளர்களின்” நாடகம் இன்று அம்பலமானது. என அவர் பதிவிட்டுள்ளார்.

“உங்களுக்கு அடிபணிந்து பதவி விலகப் போவதில்லை.” – பிரதமர் மஹிந்த ராஜபக் மஹிந்த ராஜபக்ஷ

“அழுத்தங்களுக்கு அடிபணிந்து பதவி விலகப் போவதில்லை.”  என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கட்சித் தலைவர் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக,  கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கு பேசிய அவர்,

நாட்டின் பொருளாதார, சமூக கூட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்னைகள் மற்றும் முன்னெடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு விலக்கமளிக்கப்படும்.

நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என்பதை அரசங்கம் என்ற ரீதியில் ஒருபோதும் மறுக்கவில்லை. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து மீள்வதற்கு நாடாளுமன்றத்தில் சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்தே சகல தரப்பினரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய பிரச்னைக்கு தீர்வு காண எவரும் ஒத்துழைப்பு வழங்க முன்வராததை தொடர்ந்து, புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்தும் தரப்பினரிடம் அரசாங்கத்தை ஒப்படைக்க எவ்வித ஆட்சேபனையும் கிடையாது. அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட்டால் தற்போதைய அரசியல் மற்றும் பொருளதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் என குறிப்பிட்டுள்ளார்

உலக ஊடக சுதந்திர சுட்டெண் – இந்தியா 150வது இடம் – இலங்கைக்கு.?

உலக ஊடக சுதந்திர தர வரிசையில் இலங்கை 19 இடங்கள் பின்தங்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, உலக ஊடக சுதந்திர சுட்டெண்ணில் இலங்கை 146ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

உலகில் உள்ள 180 நாடுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் நோர்வே முதலிடத்தில் உள்ளது.

இரண்டாம் இடம் டென்மார்க்கிற்கும், மூன்றாம் இடம் சுவீடனுக்கும் கிடைத்தது.
2021ஆம் ஆண்டில், உலக பத்திரிகை சுதந்திர சுட்டெண்ணில் இலங்கை 127ஆவது இடத்தில் இருந்தது. 2020 இல் 127ஆவது இடத்திலும் 2019 இல் 126ஆவது இடத்திலும் 2018 இல் 131ஆவது இடத்திலும் இருந்தது.

இந்த ஆண்டு, உலக ஊடகக் குறியீட்டில் இந்தியா 150ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 162ஆவது இடத்திலும், மியான்மர் 176ஆவது இடத்திலும் உள்ளன.

உலக ஊடக சுதந்திர தர வரிசையில் இலங்கை 19 இடங்கள் பின்தங்கியுள்ளது.
செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, உலக ஊடக சுதந்திர சுட்டெண்ணில் இலங்கை 146ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

உலகில் உள்ள 180 நாடுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் நோர்வே முதலிடத்தில் உள்ளது.

இரண்டாம் இடம் டென்மார்க்கிற்கும், மூன்றாம் இடம் சுவீடனுக்கும் கிடைத்தது.
2021ஆம் ஆண்டில், உலக பத்திரிகை சுதந்திர சுட்டெண்ணில் இலங்கை 127ஆவது இடத்தில் இருந்தது. 2020 இல் 127ஆவது இடத்திலும் 2019 இல் 126ஆவது இடத்திலும் 2018 இல் 131ஆவது இடத்திலும் இருந்தது.

இந்த ஆண்டு, உலக ஊடகக் குறியீட்டில் இந்தியா 150ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 162ஆவது இடத்திலும், மியான்மர் 176ஆவது இடத்திலும் உள்ளன.

பெண்களுக்கு டிரைவிங் லைசென்சஸ் வழங்க தடை – தலிபான்களின் தொடரும் அடக்குமுறை !

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு பெண்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தனியாக பெண்கள் பயணம் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. எந்த நேரமும் தலீிபான்கள் வீதிகளில் துப்பாக்கியுடன் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
இதனால் ஒரு வித பீதியுடன் பொதுமக்கள் உள்ளனர். இந்த நிலையில்  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சில பெண்கள் வாகனங்களை ஓட்டி வந்தனர். இதையறிந்த தலிபான்கள் தற்போது அங்கு பெண்களுக்கு டிரைவிங் லைசென்சஸ் வழங்க தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற வளாகத்தினை முற்றுகையிட்ட பல்கலைகழக மாணவர்கள் !

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தினை கலைக்கும் வகையில் பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

நாடாளுமன்ற வளாகத்தினை முற்றுகையிட்டு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன், தடைகளை தகர்த்து முன்னேற முயற்சித்த நிலையில் போராட்டத்தினை கலைக்கும் வகையில் பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பப்ஜி விளையாட்டால் நேர்ந்த சோகம் – யாழில் இரண்டாவது தற்கொலை !

கைப்பேசியில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிப் போயிருந்த குடும்பத்தலைவர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய இளம் குடும்பத்தலைவரே இவ்வாறு உயிரை தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் கடந்த 2 வாரங்களுக்குள் இரண்டாவது நபர் கைப்பேசியில் இணையவழி போர் விளையாட்டில் ஈடுபட்டு இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“நேற்றிரவு படம் பார்த்துவிட்டு தூக்கத்துக்குச் சென்றோம். காலையில் எழுந்து பார்த்த போது, கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

எப்போதும் பப்ஜி விளையாடுவதில் ஆர்வமாக இருப்பார். வேறு பிரச்சினைகள் அவருக்கு இருக்கவில்லை” என்று மனைவி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் சடலம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தார். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாத இறுதியில் இளவாலையைச் சேர்ந்த இளைஞன் இதே போன்ற காரணத்தினால் தற்கொலை செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ராஜபக்ஷ அரசால் அச்சிடப்பட்ட 300,000 மில்லியன் ரூபா !

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 300,000 மில்லியன் ரூபா அச்சிடப்பட்டதால் அதிக பணவீக்கம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் பேசிய அவர்,

இன்று, நாடு பணவீக்கத்தை அல்ல, அதிக பணவீக்கத்தை எதிர்கொள்கிறது என்றார். நாடு சிக்கலான நெருக்கடியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும், அதற்கு தீர்வு கிடைக்காமல் போகலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று கறுப்புச் சந்தையில் இடம்பெறும் பொருளாதாரப் பணவீக்கம் எங்கும் எழுதப்படவில்லை எனவும் கறுப்புச் சந்தையில் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 30,000 ரூபா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

ஒரு மாத ஊதியத்தை தி்.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் !

இந்திய நாடாளுமன்றத்தில் உள்ள திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை, பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவியாக வழங்குவார்கள் என்று அக்கட்சி இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த நோக்கத்துக்காக ஏற்கனவே ஒரு கோடி ரூபா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை மக்களுக்கு உதவ நன்கொடை வழங்குமாறு ஆளும் திமுகவின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திமுகவின் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என அக்கட்சியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார பாதிப்பில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவ, உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கவும், அவற்றை இலங்கைக்கு அனுப்பவும் தமிழக அரசுக்கு நன்கொடை அளிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் கடந்த செவ்வாய்க்கிழமை வேண்டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.