01

01

வெளிநாட்டு பொருட்களாலே கொரோனா பரவுகிறது – அவதானமாக இருக்குமாறு வடகொரியா அறிவுறுத்தல் !

தென் கொரியா எல்லைக்கு அருகில் அன்னிய பொருட்களை குடிமக்கள் தொடுவதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று, வடகொரியாவுக்குள் பரவியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், தென்பகுதியில் இருந்து எல்லையில் வீசியெறியும் பொருட்களை சுற்றி பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக தெற்கில் உள்ள ஆர்வலர்கள் துண்டு பிரசுரங்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை அனுப்ப பலூன்களை எல்லையில் பறக்கவிட்டனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக, கொவிட் அந்த வழியில் எல்லையைத் தாண்டியிருக்க சாத்தியம் இல்லை என்று தென்கொரியா கூறியுள்ளது.

வட கொரியாவின் மாநில ஊடகங்களின்படி, தென் கொரிய எல்லைக்கு அருகில் அடையாளம் தெரியாத பொருட்களை தொட்டதன் பின்னர், கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் அதிகாரப்பூர்வ விசாரணையில் கண்டறியப்பட்டனர்.

இபோ-ரியில் உள்ள ஒரு மலையில் பொருட்களைக் கண்டுபிடித்த பின்னர், ஏப்ரல் தொடக்கத்தில் 18 வயது சிப்பாய் மற்றும் 5 வயது குழந்தை வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்ததாக அது தெரிவித்துள்ளது.

விசாரணையின் விளைவாக, நாட்டில் உள்ள மக்கள் காற்று மற்றும் பிற காலநிலை நிகழ்வுகள் மற்றும் எல்லைக் கோடு மற்றும் எல்லைகளை ஒட்டிய பகுதிகளில் பலூன்கள் மூலம் வரும் அன்னிய விஷயங்களை விழிப்புடன் கையாள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஒரு விசித்திரமான பொருளைக் கவனிக்கும் எவரும் உடனடியாக அதைப் புகாரளிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். எனவே அவசரகால தொற்றுநோய் எதிர்ப்புக் குழுவால் அதை விரைவாக அகற்ற முடியும்.

அறிக்கை தென் கொரியாவை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் கொவிட் எவ்வாறு நாட்டிற்குள் வந்திருக்க முடியும் என்பதற்கான வடக்கின் விளக்கத்தை கடுமையாக மறுத்தது.

இலங்கையில் ஒரு சைக்கிளின் விலை ஒரு லட்சம் ரூபாய் !

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக சைக்கிள் மற்றும் அதன் உதிரிப்பாக கொள்வனவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைக்கிள்களை கொள்வனவு செய்வதற்காக, நாட்டின் பல பாகங்களிலும் உள்ள சைக்கிள் விற்பனை நிலையங்களை மக்கள் அதிகளவில் நாடிச்செல்வதாகவும் கூறப்படுகின்றது.

மக்கள் சைக்கிள் கொள்வனவு செய்வது அதிகரித்துள்ள நிலையில், அதன் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளது.

தற்போதுவரை சாதாரண சைக்கிள் ஒன்றின் விலை, 50 ஆயிரம் ரூபாயைக் கடந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், புதிய வடிவிலான மற்றும் வெவ்வேறு தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட சைக்கிள், ஒரு இலட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

பலாலி விமான நிலைய சேவைகள் ஸ்தம்பிதம் – இந்தியாவே காரணம் என்கிறார் டக்ளஸ் !

பலாலிக்கும் இந்தியாவிற்கும் இடையிலான விமான சேவைகள் ஆரம்பிக்காததற்கு இந்தியாவே காரணம் என கடல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டியுள்ளார்.

இன்றைய தினம் காக்கை தீவில் புதிதாக அமைக்கவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவில் எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது. விமானங்கள் இங்கு வந்துவிட்டு திரும்பி செல்வதற்கு எரிபொருள் இல்லை. அத்துடன் இந்தியாவில் இருக்கக்கூடிய சில சட்டச் சிக்கல்கள் காரணமாகவும் இந்த காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசினை பொறுத்தவரை இந்த விமான சேவைக்கு இலங்கை அரசு தனது பூரணமான ஒத்துழைப்பினையும் அங்கீகாரத்தினையும் வழங்குகிறது. இந்த சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்பட்டு இந்த விமான சேவைகள் தொடரும் – என்றார்.

இலங்கையில் இப்போதைக்கு இருப்பது 22 ஆயிரம் சுற்றுலாப் பயணிகளே !

இலங்கையில் தற்போது 22 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இருப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

136 நாடுகளில் இருந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் இருந்து 1,785 பேரும், கனடாவில் இருந்து 2,295 பேரும், பிரான்சில் இருந்து 1,310 பேரும், ஜெர்மனியில் இருந்து 1,883 பேரும், இந்தியாவில் இருந்து 2,569 பேரும், ரஷ்யாவில் இருந்து 1,392 பேரும், பிரித்தானியாவில் இருந்து 2,397 பேரும், அமெரிக்காவிலிருந்து 1,379 பேரும் சுற்றுலாப் பயணிகளாக இலங்கைக்கு சென்றுள்ளனர்.

தற்போது இலங்கையில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான தேவைகளை ஆராய்ந்து, அவர்களுக்கு வசதி செய்துகொடுப்பதற்கு தொழில்துறை பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றிவருவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது.

தற்போதைய நெருக்கடிகள் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் எனவும் அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

முதலாவது டெஸ்ட் – இலங்கையை இலகுவாக வீழ்த்தியது அவுஸ்திரேலியா !

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் அவுஸ்திரேலியா அபார வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் இறங்கியது.

இதன்படி களம் இறங்கிய இலங்கை அணி 212 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இலங்கை அணி சார்பாக நிரோஷன் திக்வெல்ல 58 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

அவுஸ்திரேலிய அணி சார்பில் நதன் லயன் 90 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

அதனடிப்படையில் தமது முதல் இன்னிங்ஸை விளையாடிய அவுஸ்திரேலியா அணி சகல விக்கெட்களையும் இழந்து 321 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் கெமரன் கிரீன் 77 ஓட்டங்களையும் உஸ்மான் கவாஜா 71 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் ரமேஷ் மென்டிஸ் 4 விக்கெட்களையும், ஜெப்ரி வென்டர்சே மற்றும் அசித பெர்ணான்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் நதன் லயன் மற்றும் ட்விஸ் ஹெட் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர்.

அதனடிப்படையில் இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் அவுஸ்திரேலியா அணிக்கு 5 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய அவுஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 10 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

“எமது துயரங்களை நாம் தான் போக்கிக் கொள்ள வேண்டும்.” – தம்மிக்க பெரேரா மக்களுக்கு ஆலோசனை!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் ஒரு நாளில் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளும் நிலையங்களை திறக்கவுள்ளதா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், ”வெளிநாடுகளுக்கு பணிக்காக செல்வோரின் நலன் கருதி, ஒரு நாளில் கடவுச்சீட்டை வழங்கும் நிலையங்களை பல இடங்களில் தற்போது நாம் திறந்துள்ளோம்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல், மாத்தறை, வவுனியா, கண்டி போன்ற பகுதிகளில் இந்த நிலையங்களை திறக்கவுள்ளோம்.
எனவே, தூர பிரதேசங்களில் இருந்து பத்தரமுல்லைக்கு எவரும் வரவேண்டியத் தேவைக்கிடையாது.
எமது துயரங்களை நாம் தான் போக்கிக் கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை முன்னேற்ற முடியும் என நினைத்தால், அனைத்தையும் வெற்றிக் கொள்ள முடியும்.
இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள வரிசை யுகத்தினால், சுற்றுலாப்பயணிகள் வருகைத் தரும் வீதம் வெகுவாகக் குறைவடைந்துள்ளது.
இந்த நிலைமையை நாம் மாற்றியமைக்க வேண்டியது எமது கடமையாகும். நாம் முதலீடுகளை மீண்டும் நாட்டுக்குள் ஈர்க்க வேண்டும்.
நான் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இன்னமும் எனது பணிகளை முழுமையாக ஆரம்பிக்கவில்லை. இருப்பினும். நான் வேலை செய்துக் கொண்டுதான் உள்ளேன்”- எனத் தெரிவித்தார்.

தற்கொலைக்கு முயன்ற தாயும் பலி !

தனது இரண்டு பிள்ளைகளுடன் சந்திரிகா குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாயும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாய் ஒருவர் தனது 5 வயது மகள் மற்றும் 11 வயது மகனுடன் சந்திரிகா குளத்தில் குதித்திருந்தார்.
சம்பவத்தில் 5 வயது மகள் உயிரிழந்துள்ளதுடன், 11 வயது மகன் காப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தின் காரணமாக கவலைக்கிடமான நிலையில் உள்ள தாய் எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

நேட்டோ தான் பிரச்சினைகளுக்கான மூல காரணம் – ரஷ்யாவும் சீனாவும் சாடல் !

நேட்டோ நாடுகளுக்கு ரஷியா நேரடி அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும், உலக ஸ்திரத்தன்மைக்கு சீனா கடும் சவால்களை முன்வைக்கிறது என்றும், நேட்டோ மாநாட்டில் பிரகடனம் செய்யப்பட்டது.

சைபர் தாக்குதல்கள் முதல் பருவநிலை மாற்றம் வரை, பெரும் அதிகாரப் போட்டி மற்றும் எண்ணற்ற அச்சுறுத்தல்களின் ஆபத்தான கட்டத்தில் உலகம் மூழ்கியுள்ளது என்று மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நேட்டோ அமைப்பை ரஷியா மற்றும் சீனா கடுமையாக சாடி உள்ளன. எங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், எந்த பிரதேசத்தில் இருந்து உருவாக்கப்படுகிறதோ, அதே அச்சுறுத்தல்களை நாங்களும் உருவாக்குவோம், என ரஷிய அதிபர் புடின் எச்சரித்தார்.

 

நேட்டோதான் உலகம் முழுவதும் பிரச்சினைகளை உருவாக்குகிறது என சீனா குற்றம்சாட்டி உள்ளது. ரஷிய அதிபர் புடினின் அச்சுறுத்தல்கள் புதிது இல்லை என்று எஸ்டோனிய பிரதமர் காஜா கல்லாஸ் தெரிவித்தார்.

ஜப்பான் வழங்கும் ஆதரவுக்கு நன்றி – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக ஜப்பான் தூதுவர் ஹிடேக்கி மிசுகோஷி (Hideaki Mizukoshi) தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் கோட்டாபய ராஜபக்சவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையுடனான பொருளாதார, சமூக மற்றும் கலாசார உறவுகளை தொடர்ந்து பேணுவதாகவும் ஹிடேகி மிசுகோஷி தெரிவித்தார். இலங்கைக்கு ஜப்பான் வழங்கிய ஆதரவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது நன்றியைத் தெரிவித்தார்.

…..

 

இலங்கைக்கு சுதந்திரத்துக்கு பின்னரான கால அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஜப்பான் பாரிய அளவில் கைகொடுத்ததாகவும் எனினும் ராஜபக்ச அரசாங்கத்தின் தூரநோக்கற்ற வெளியுறவுக் கொள்கைகளால் ஜப்பானுடனான உறவு பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் அண்மையில் சாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இரு பிள்ளைகளுடன் தாய் தற்கொலைக்கு முயற்சி – 5 வயது மகள் பலி !

இரு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் வாவியில் குதித்த சம்பவம் எம்பிலிபிட்டியவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் 5 வயதான மகள் உயிரிழந்துள்ள நிலையில், எம்பிலிபிட்டிய காவல்துறை உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்ட 32 வயதான தாயும், 11 வயதான மகனும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

அவர்களில் தாய் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகனின் உடல்நிலை ஆபத்தானதாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எம்பிலிபிட்டிய – சந்திரிகா வாவியில் தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் உயிரை மாய்த்துக்கொள்ளவே குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் இதற்கான காரணம் தெரியவராத நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.