02

02

தேசிய பாதுகாப்பு பூஜ்ஜியமாகிவிட்டது – முன்னாள் ஜனாதிபதி ஆதங்கம் !

நாட்டின் தேசிய பாதுகாப்பு தற்போது பூஜ்ஜியமாகிவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று கருத்து தெரிவித்த அவர், கடந்த சில வாரங்களாக நாட்டில் பதிவாகிய குற்றச் செயல்கள், தேசிய பாதுகாப்பு உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது என்றார்.
மேலும் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதே ஆளும்கட்சியின் பிரதான தேர்தல் வாக்குறுதியாக இருந்தது என்றும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் அரசாங்கம் இவ்விடயத்தில் தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்தார்.
அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசியல்வாதிகள் தாக்குதலை நடத்தியமையின் விளைவினாலேயே அமைதியின்மை ஏற்பட்டது என்றும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

“கட்டாரிடம் எடுக்கும் ராஜபக்ஷ அரசு.”- சஜித் பிரேமதாச

எதிர்காலத் திட்டம் இல்லை என்றால், இலங்கையினால் ஏனைய நாடுகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்வது கடினம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கட்டார் தொண்டு நிறுவனத்திடம் இருந்து உதவிகளை நிராகரித்து கொழும்பு அலுவலகத்தின் செயற்பாட்டுக்கு தடை விதித்தவர்கள் இன்று அவர்களின் உதவியை நாடியுள்ளதாக கூறினார்.

எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய, அதே அமைப்பின் மீதான தடையை நீக்குவதற்கு அரசாங்கம் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார்.

கட்டார் அபிவிருத்தி நிதிய அலுவலகம் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டபோது அன்று வீடமைப்பு அமைச்சராக இருந்த தன்னை எதிர்க்கட்சியில் இருந்தவர்கள் விமர்சித்ததாக கூறினார்.

ஆனால் இன்று அந்த நிதியை பெற்றுக்கொள்ள அதே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது பிச்சை பாத்திரத்தை கட்டாருக்கு எடுத்துச் செல்வதாக சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார்.

அவர்களிடம் பிச்சை எடுக்கத் தொடங்கிய பின்னர், கட்டார் அரசாங்கம் மீதான கருத்துக்களும் சில கட்டுப்பாடுகளும் ஒரே இரவில் மாறிவிட்டதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட தாய் எழுதிய கடிதம் மீட்பு !

நேற்று (01) தனது இரண்டு பிள்ளைகளுடன் சந்திரிகா வாவியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய் எழுதிய கடிதம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அவரது வீட்டில் சோதனை செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கு குறித்த கடிதம் கிடைத்தது.

குறித்த பெண் சில காலமாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், மருந்தை உட்கொள்வதற்கு உடலுக்கு மிகவும் சிரமமாக இருந்ததால் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்ததாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

32 வயதான தாய் தனது 5 வயது மற்றும் 11 வயது குழந்தைகளுடன் சந்திரிகா வாவியில் நேற்று குதித்திருந்தார்.சம்பவத்தில் 5 வயது குழந்தையும் உயிரிழந்துள்ளதுடன், 11 வயது குழந்தை உயிர் பிழைத்துள்ளது.

உயிரிழந்த பெண்ணிடம் இருந்து 2000 ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சுரங்கிகா மதுமாலி என்ற 32 வயதுடைய தாய் நேற்று (01) பிற்பகல் தனது இரண்டு குழந்தைகளுடன் சந்திரிகா வாவியில் குதித்துள்ள நிலையில் 11 வயதுடைய சாம் துஷ்மந்த நீந்திக் கரைக்கு வந்து உதவி கோரி சத்தமிட்டுள்ளார்.

அதன்படி பிரதேசவாசிகள் மற்றும் எம்பிலிபிட்டிய பொலிஸ் உயிர்காப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தாயை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.

தாய் மற்றும் 5 வயதுடைய நெதும் நெத்மால் ஆகிய இருவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் 5 வயது குழந்தை மதியம் 1.45 மணியளவில் உயிரிழந்துள்ளது. எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த தாய் நேற்று மாலை உயிரிழந்திருந்தார்.