”புலிகள் ஆயுதங்களைக் கைவிடுவது நிரந்தரத் தீர்வுக்கு அவசியம்” பிரான்ஸ் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்கள் அறிக்கை – புலிகளின் கையில் ஆயுதம்? : த ஜெயபாலன்

British_French_Foreign_Ministersஏப்ரல் 15ல் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலர் டேவிட் மிலிபான்ட் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பெர்னாட் கொச்னர் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் எல்ரிரிஈ பயங்கரவாதத்தை புறக்கணிப்பதும் ஆயுதங்களைக் கீழே போடுவதும் நிரந்தரத் தீர்வுக்கு அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏப்ரல் 12ல் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இருநாள் தாக்குதல் தவிர்ப்பை வரவேற்றிருக்கும் வெளிவிவகார அமைச்சர்கள் அது பொது மக்களைப் பாதுகாப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கை என்றும் பாராட்டி உள்ளனர். இத்தாக்குதல் தவிர்ப்பு காலப்பகுதியில் தாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு மோதல் பிரதேசத்தில் இருந்து பெருமளவிலான மக்கள் வெளியேறவில்லை என்பதையும் வெளிவிவகார அமைச்சர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். மக்களை வெளியேறவிடாது புலிகள் பலவந்தமாகத் தடுக்கின்றனர் என்பது மிகவும் தெளிவாகி உள்ளது என்று குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர்கள் புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதை கண்டித்துள்ளனர்.

தாக்குதல் தவிர்ப்பிற்கு சற்று முன் தங்கள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்த வெளியேற முற்பட்டவர்கள் புலிகளால் சுடப்பட்டதில் ஆறு பேர் கொல்லப்பட்டதாக Under-Secretary-General for Humanitarian Affairs  ஜோன் ஹொல்ம்ஸ் இவ்வறிக்கை வெளிவருவதற்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 5ல் இலங்கை இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் புலிகளின் தலைவர் பலத்த இழப்புகளின் மத்தியில் காப்பாற்றப்பட்டார். அத்தாக்குதலுக்கு மறுநாள் முதல் புலம்பெயர் நாடுகளில் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக ஐரோப்பாவில் பிரான்ஸ் பிரித்தானியா ஆகிய நாடுகளில் இப்போராட்டங்கள் இரவு பகலாக பத்து நாட்களுக்கம் மேலாக தொடர்ச்சியாக இடம்பெறுகிறது. இந்நிலையிலேயே இவ்விரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் வெளியிட்டுள்ள அறிக்கை புலிகள் மீது காட்டமான கண்டனத்தையும் கடுமையான குற்றச்சாட்டையும் வைத்து உள்ளது. புலிக்கொடி மற்றும் பிரபாகரனின் படங்கள் தாங்கிய போராட்டங்களுக்கு வழங்கப்பட்ட பளீர் அறையாகவே இக்கூட்டறிக்கை வெளிவந்து உள்ளது.

ஒரு பயங்கரவாத அமைப்பிலும் பார்க்க ஜனநாயக அரசு பொது மக்களைக் காப்பத்தில் உயர்தரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார அமைசர்கள் டேவிட் மில்லிபான்ட் உம் பெர்னாட் கொச்னர் உம் மகிந்த ராஜபக்ச அரசு புதிய தாக்குதல் தவிர்ப்பை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். எல்ரிரிஈ மக்கள் பாதுகாப்பைத் தேடி வெளியேறுவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளனர். பொது மக்கள் வெளியேறுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கக் கூடிய அளவிற்கு நீண்டதாக தாக்குதல் தவிர்ப்பு இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டு உள்ளனர். மேலும் அப்பொது மக்கள் மோதல் பகுதிகளை விட்டு வெளியேறும்பட்சத்தில் அவர்களுக்கு பாகாப்பு இருக்கும் என்ற நம்பிக்கையை யுஎன் ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இரு தரப்பும் சர்வதேச விதிமுறைகளைக் கடைப்பிடித்து பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படத்த வேண்டும் என்ற வழமையான கூற்றுக்களை மீளவும் தெரிவித்துள்ளனர்.

யுஎன் னும் ஏனைய சர்வதேச சமூக உறுப்பினர்களும் இவ்விடயத்தில் தீவிரமாக ஈடுபடுவதற்கு பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளான பிரான்ஸ்ம் பிரித்தானியாவும் தொடர்ந்து ஆதரவு நல்கும் என்றும் அவ்விரு அமைச்சர்களும் தெரிவித்து உள்ளனர்.

Joint UK and French statement on Sri Lanka (15/04/2009)

The Foreign Secretary, David Miliband, and the Foreign Minister of France, Bernard Kouchner, issued a joint statement on the situation in Sri Lanka on Wednesday 15 April. They said:

‘We welcomed President Rajapakse’s announcement on 12 April of a pause in the Sri Lankan government’s military offensive as a first step towards the protection of civilian life. But we are deeply concerned that there was no large scale movement of civilians away from the conflict area to safety as we had hoped to see, in the short period allowed for the pause. It is clear that the LTTE have been forcefully preventing civilians from leaving the conflict area and we deplore their determination to use civilians as a human shield. We do of course continue to call on the LTTE to renounce terrorism and lay down their arms as a necessary element for a long-term solution.

We urge President Rajapakse to announce a new pause . Democratic governments are rightly held to higher standards for civilian protection than terrorist organisations. We also urge the LTTE to allow civilians to move to safety. It is vital that a pause in the fighting should be long enough to give civilians the opportunity to leave the conflict area, and for the UN to build confidence amongst the population that they will be safe if they leave. Both sides must abide by their obligations under international humanitarian law and do all they can to protect civilians. This includes giving international humanitarian agencies unimpeded access to those affected by the fighting so that they can deliver adequate supplies of assistance. France and Britain, as two members of the Security Council, continue to support the active engagement by the UN and by other members of the international community on this urgent issue.’

._._._._._.

யுத்த பிரதேசத்திற்குள் சிக்குண்டுள்ள மக்கள் எவ்வாறானதொரு சூழலுக்குள் வாழ்கிறார்கள் என்பதை எந்தவொரு இலங்கைத் தமிழருக்கும் எடுத்து விளக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் மரண வாயிலில் தள்ளப்பட்டுள்ள மக்களை எவ்வாறாயினும் மீட்டெடுக்க வேண்டும் என்பதிலும் பார்க்க அவர்களுடைய இந்நிலைக்கு இலங்கை அரசா அல்லது புலிகளா காரணம் என்ற விவாதமும் அதையொட்டிய போராட்டங்களும் பரவலாக நடைபெறுகிறது. பாதுகாப்பு பிரதேசங்களுக்கு வாருங்கள் என்று அழைத்துவிட்டு அப்பிரதேசங்கள் மீது தாக்குதல் நடத்தி வன்னி மக்களை இனப்படுகொலை செய்யும் இந்த அரசு தான் இதற்கு முழுப் பொறுப்பும் என்று புலி ஆதரவு அணி புலம்பெயர் நாடுகள் எங்கும் போராட்டங்களை முடுக்கிவிட்டுள்ளது. மறு முனையில் புலிகள் தங்களைப் பாதுகாக்க மக்களை மனிதக் கேடயங்களாக்கி வன்னி மக்களைப் பலியிடுவதால் புலிகளே வன்னி மக்களின் இந்நிலைக்கு முழுப் பொறுப்பும் என அரச அதரவாளர்களும் வாதிடுகின்றனர். இவர்களில் சிலர் அதனையும் தாண்டுகின்றனர். அண்மையில் கொழும்பு சென்ற புலம்பெயர் குழுவில் இடம்பெற்ற ஒருவர் தன்னை வானொலி அறிவிப்பாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ‘சில ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை புலிகள் அழிக்கப்பட வேண்டும்’ என்று இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்கி உள்ளார். இவர்கள் தான் புலம்பெயர் ‘ஜனநாயக்கார்களுக்கு’ ‘மாற்றுக் கருத்தாளர்களுக்கு’ குரல்கொடுப்பவர்கள்.

புலிகளின் தலைவர் உள்ளே – வெளியே என்று உறுதிப்படுத்த முடியாத பல்வேறு செய்திகள் வெளிவருகின்றன. இலங்கை அரச படைகள் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கடைசித்துண்டு நிலத்தை நோக்கி நகர்கின்றனர். புலிகளைப் பொறுத்தவரை இன்று மக்களே அவர்களது மண்மூட்டைகள். இலங்கை அரசு புலிகளை புலிகளின் தலைமையை (அதன் தலைமை அப்பிரதேசத்தில் இருந்தால்) அழிப்பதாக இருந்தால் அந்த மக்களில் கணிசமானவர்களைக் கொன்று குவித்தே தனது இலக்கை அடைய முடியும். அதற்கு தாங்கள் தயார் என்பதை அரசு அறிவித்து உள்ளது. செச்சினிய தீவிரவாதிகளால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்ட ஆயிரம் வரையான மாணவர்களை விடுவிக்க ரஸ்ய இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையை இலங்கை அரசு தனக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளது. அந்த இராணுவ நடவடிக்கையில் பணயக் கைதிகள் 300ற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவ்வாறான ஒரு நடவடிக்கை 150000 பொது மக்கள் அகப்பட்டுள்ள முல்லைத்திவில் மேற்கொள்ள இலங்கை இராணுவம் முயல்கிறது. ஆனால் இவ்விரு நிலமையும் முற்றிலும் வேறுபட்டது. இலங்கை அரசபடைகளின் ஒரே நோக்கம் புலிகளையும் அதன் தலைமையையும் அழிப்பதே. வன்னி மக்களின் பாதுகாப்பு இரண்டாம் பட்சமானதே. இப்போது புலிகளுக்கு உள்ள கடைசி ஆயுதம் வன்னி மக்களே.

இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் பல்வேறு வகைப்பட்ட போராட்டங்களில் குதித்து உள்ளனர். அவர்களது போராட்ட வடிவங்கள் சர்வதேச கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனால் இப்போராட்டங்களில் புலிக் கொடியும் பிரபாகரனின் படங்களும் மேலோங்கி நிற்பது இப்போராட்டங்களின் நியாயத்தன்மையை மழுங்கடிக்கின்றன. வன்னி மக்களின் நியாயமான உரிமைகளுக்கான போராட்டத்தின் மீது சேறடிக்கின்றன. புலிக்கொடியும் வே பிரபாகரனின் படங்களும் தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை உலகிற்கு வெளிப்படுத்துவனவாக இல்லை. சிங்கக் கொடிக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இருக்கும் அதே சமன்பாடு தான் புலிக்கொடிக்கும் வே பிரபாகரனுக்கும் உரியது. இவற்றைக் காவிக்கொண்டு போராட்டம் நடத்த இவையொன்றும் மனிதத்தையும் மனித உரிமையையும் வெளிப்படுத்தவில்லை.

நாங்கள் தீவிரமான தகவல்கள் பரிமாற்ற யுகத்தில் வாழ்கின்றோம். புதினம் படித்து, ஐபிசி கேட்டு, ஜிரிவி பார்த்து விட்டுத்தான் டேவிட் மில்லிபான்ட்டும் பெர்னாட் கொச்னரும் கூட்டறிக்கை விடுவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.

புலிகளின் தலைமைக்கு தமிழ் மக்கள் தங்களுடைய முழுமையான ஆதரவை மட்டுமல்ல தங்கள் 25000ற்கும் மேற்பட்ட உறவுகளைப் போராட்டத்திற்காக கொடுத்தனர். புலிகளுடன் தோளோடு தோள் நின்றனர். அப்படி இருந்தும் புலிகளின் தலைமையால் தமிழ் மக்களுடைய எவ்வித உரிமைகளையும் வென்றெடுக்க முடியவில்லை. மாறாக தங்களுக்கு கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த மக்களின் மீது சவாரி செய்தது தான் மிஞ்சியது. இன்று அந்த மக்கள் மிகவும் களைத்து நொந்து போயிருக்க புலிகளின் பெயரில் புலம்பெயர் புலியாதரவுச் சமூகமும் ஒரு தடவை சவாரி செய்ய முனைகிறது.

பாதுகாப்பிற்கு பதுங்கும் குழிகளே புதைகுழிகளாகும் அந்த மண்ணை அவர்களின் பூர்வீக மண் என்று சொல்லி அவர்களுக்கு வாய்கரிசி போட புலம்பெயர் மண்ணில் போராட்டம் அவசியமில்லை. இன்றைய அவசர தேவை அம்மக்களிற்கான உயிர்ப் பாதுகாப்பு.

புலிகளுக்கு தண்ணி காட்டி பொய்சொல்லி பாஸ் எடுத்துவிட்டு பூர்வீக மண்ணைவிட்டு வெளிநாடு வந்தவர்கள் தான் பெரும்பாலான புலம்பெயர்மக்கள். ஆனால் இங்கு வெளிநாடுகளில் இருந்தகொண்டு தாங்கள் விட்டுவந்த பூர்வீக மண்ணை வன்னி மக்களின் தலையில் கட்டும் அரசியலை ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை எப்போதும் முதல் எதிரி ஒடுக்குமுறை அரசு. அந்த அரசுக்கு எதிரான தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களுக்கு புலிகளும் ஏனைய ஆயுதக் குழுக்களும் மிகப்பெரும் தடையாக உள்ளனர். ஏனைய ஆயுதக் குழுக்கள் அரசுடன் செயற்பட புலிகள் இலங்கை அரசுக்கு எதிராக யுத்தம் புரிகின்றனர். ஆனால் அது தமிழ் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு அல்ல. அதனால் புலிகள் தமிழ் மக்களின் போராட்டத்தை மழுங்கடித்து உள்ளனர். இன்று புலிகளின் கைகளில் உள்ள ஆயுதங்கள் சொந்த மக்களுக்கு எதிராகவும் திரும்பி உள்ளது. ஆயுதங்கள் மீது அதீத காதல் கொண்ட புலிகள் ஆயுதங்களை வைத்திருப்பதம் கைவிடுவதும் நீண்டகாலத்தில் தமிழ் மக்களின் அரசியல் நலனைப் பாதிக்கும் என்றில்லை.

புலிகள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கை இணைத்தலைமை நாடுகளால் பெப்ரவரி நடுப்பகுதியில் வெளியிடப்பட்டது. அதற்குப் பின்னர் இந்தியாவும் தற்போது மீண்டும் இணைத்தலைமை நாடுகளில் அங்கம் பெற்ற பிரான்ஸ்ம் பிரித்தானியாவும் அக்கோரிக்கையை வலியுறுத்தி உள்ளன. இந்நாடுகளின் அரசுகள் தங்களுக்குள் ஒடுக்குமுறையைக் கொண்டுள்ள அரசுகள். இந்நாடுகளில் பல நேட்டோ அணியில் அங்கம் வகிக்கின்றனர். இவர்கள் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் இன்றும் ஆக்கிரமிப்பை மேற்கொண்டு உள்ளன. இந்நாடுகள் புலிகள் ஆயுதங்களைக் கைவிடவேண்டும் என்று கோருவதன் நோக்கம் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி அல்ல என்பதும் கவனிக்கப்பட வேண்டும்.

அதே சமயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் புலிகள் தங்கள் ஆயுதங்களை சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பில் வைத்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு செல்வது பொருத்தமாக இருக்கும் என்று தேசம்நெற்ற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்து இருந்தார். அவர் நேபாளில் மாஓ இஸ்ற்றுக்களின் தந்திரோபாயத்தை புலிகளும் பின்பற்றி இருக்கலாம் என்றும் தெரிவித்து இருந்தார். ஈரோஸ் அமைப்பின் முக்கியஸ்தரான ரவி சுந்தரலிங்கமும் இதே கருத்தைத் தெரிவித்து இருந்தார். மக்களின் பெயரால் ஆயுதம் தூக்கியவர்கள் மக்களுக்காக அவற்றை கைவிடவும் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

புலிகளுடைய ஆயுத பலம் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க பேச்சவார்த்தைகளில் பேரம் பேசுவதற்கு உதவும் என்ற வாதம் பொதுவாக உள்ள ஒன்று. ஆனால் கடந்த மூன்று தசாப்தகால யுத்தத்தில் புலிகள் பலத்த இராணுவ வெற்றிகளைச் சாதித்திருந்தனர். பேச்சுவார்த்தைகளுக்கும் சென்றனர். ஆயினும் இந்த இராணுவ பலத்தை அரசியல் வெற்றியாகவோ தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் கருவியாகவோ மாற்றுகின்ற அரசியல் வல்லமை புலிகளின் தலைமையிடம் இருக்கவில்லை. புலிகளின் கைகளில் இருந்த ஆயுதம் குரங்கின் கையில் இருந்த பூமாலைக்கு ஒப்பானது என்பதனை தற்போதைய வன்னி நிலவரம் நிரூபித்து உள்ளது.

எந்த மக்களைக் காப்பாற்றுவோம் என்று புலிகள் உறுதியளித்தார்களோ இன்று அவர்களே இலங்கை இராணுவத்திற்கு எதிராக புலிகளின் அரணாக மாற்றப்பட்டு உள்ளனர். அரணாக இருக்க மறுத்து தப்பிச் செல்பவர்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். நிலைமை இவ்வாறு இருக்கையில் புலிகளின் கையில் இருக்கும் ஆயுதம் தமிழ் மக்களுக்கோ தமிழ் மக்களின் போராட்டத்திற்கோ உதவபோவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. இன்றைய நிலையில் அந்த ஆயுதங்களைக் கைவிடுவது பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்களின் உயிரைக் காப்பாற்றும். நூற்றுக் கணக்காண போராளிகளை வீணாகப் பலிகொடுப்பதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

யுத்தப் பிராந்தியத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 150000 வரையான மக்களில் பெரும்பாலான இளையவர்கள் கட்டாய ஆட்சேர்ப்பிற்கு உட்படத்தப்பட்டு யுத்தத்தின் முன்னரங்க நிலைகளில் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. கிளிநொச்சி முல்லைத்தீவு கல்விப் பிரதேசங்களில் உள்ள நாற்பதினாயிரம் வரையான மாணவர்கள் இந்த யுத்த பிராந்தியத்திற்குள் சிக்குண்டு உள்ளனர். மறத்தமிழன் வீரத்தமிழன் அடங்கா மண்ணில் பிறந்த தமிழன் என்று சொல்லி அந்த மாணவ மாணவிகளை விதைக்கின்றோம் என்று சொல்லி முளையிலேயே கருக்கி விடாமல் பாதுகாக்க வேண்டும்.

அதற்காக இந்தக் கொல் கருவிகளை தூக்கியெறிவதில் எந்தத் தயக்கமும் அவசியமில்லை.

Show More
Leave a Reply to Stalinistmao Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

41 Comments

  • thevi
    thevi

    சொந்த நாட்டில் மட்டுமல்ல புலம் பெயர் தேசங்களிலும் இளம் சமூகம் நாசமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தகவல்களைப் பெறுவதில் உண்மைகளை அறிவதில் அதிகூடிய வாய்ப்புக்கள் உள்ள நாடுகளில் இருந்து கொண்டு இப்படி முட்டாள்தனமான போராட்டங்களால் உண்மைகளுக்கு எதிரான போராட்டங்களால் புலியின் முக்கிய புள்ளிகளே நன்மையடைவார்கள். தமிழ் மக்கள் அல்ல.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    Deal may allow Tiger leader exile escape

    By Andrew Buncombe in Colombo- Thursday, 16 April 2009

    The Sri Lankan government is attempting to broker a deal with the Tamil Tiger rebels that could see their veteran leader, Velupillai Prabhakaran, allowed to lay down his arms and escape into exile in the hope of ending the island’s bitter conflict.

    In what might represent an attempt to seize on possible divisions within the Liberation Tigers of Tamil Eelam (LTTE), The Independent has learnt that the government has put out “feelers” to the LTTE to see whether such a deal would be possible.

    The arrangement could also see the remaining fighters, who are trapped along with 150,000 civilians in the north of the country, “rehabilitated”.

    Such an arrangement would be highly controversial, both in Sri Lanka and internationally, but some within the government believe it would be a price worth paying to end the conflict.

    “If there was an absolute guarantee ? that he will not dabble in terrorism or politics – that is an Idi Amin situation, then it might work,” said one informed source in Colombo, referring to the former Ugandan dictator who in 1979 went into exile until his death.

    Ironically, news of the initiative came as a two-day ceasefire ended and fighting reportedly resumed. A pro-rebel website claimed that Sri Lankan forces attacked LTTE positions with artillery and heavy machine guns although a military spokesman denied launching a new attack.

    Last night, amid continued protests by UK Tamils in London’s Parliament Square, Foreign Secretary David Miliband called on the Sri Lanka government to announce a new ceasefire, adding that both sides must “abide by their obligations under international humanitarian law”.

    For decades, Velupillai Prabhakaran has led the LTTE in an often brutal fight to secure a Tamil homeland. The war has left at least 70,000 people dead. Mr Prabhakaran once told reporters that he had instructed his fighters to kill him if he ever did anything to betray the cause. But at least some within the Sri Lankan government believe such a deal might be a way to bring an end to the conflict which is endangering many thousands of civilians trapped in the supposed “no-fire zone”.

    One possible location mentioned for the rebel leader’s exile is Thailand, where, in the south of the country, the LTTE is said to have strong support.

    It is far from clear whether Mr Prabhakaran would agree to go into exile. The man who founded the LTTE more than 30 years ago might prefer to make a stand in the no-fire zone, where the government has said it believes he and between 600 and 1,000 fighters remain.

    http://www.independent.co.uk/news/world/asia/deal-may-allow-tiger-leader-exile-escape-1669279.html

    Reply
  • sarma
    sarma

    புலிகள் கைவிட வேண்டியது ஆயுதம் அல்ல. மாறாக இவ்வளவு இழப்புக்கும் காரணமான சாத்தியமற்ற தமிழீழக் கோரிக்கையையே. தேசம் ஆசிரியர் ஜெயபாலன் மற்றும் ரவிசுந்தரலிங்கம் சிவாஸிலிங்கம் போன்றோர் கூறுகிறபடி ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டு தமிழீழம் பற்றி அரசுடன் பேசமுடியுமா என்பதை விளக்குவார்களா?
    முன்பு ஆயுதம் தூக்காமல் தமிழர்களின் ஏகோபித்த ஆதரவுடன் தந்தை சேல்வா பேசினார்.பின்பு அமிர்தலிங்கம் பேசினார்.எதுவும் கிடைக்கவில்லை. அடி உதைதான் கிடைத்தது. எனவேதான் வேறு வழியின்றி ஆயதம் தூக்கினார்கள். இந்த உண்மை அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்க இப்போது ஆயுதத்தை கீழே போடுங்கள். எல்லாம் பேசி வாங்கலாம் என சிலர் முன் மொழிகினறனர். ஆயுதங்களை கீழே போடுங்கள் என்று சொல்பவர்கள் இப்போது ஆயுதம் வைத்திருக்கவில்லை. சரி அவர்கள் நல்ல நோக்கத்தோடு புத்திசாலித்தனமாக சொல்கிறார்கள் என எடுத்துக்கொள்வதற்கு “ஆயுதங்களை கீழே போட்டபின் அரசு எமக்கு உரிமை தரும் என்பதற்கு என்ன உத்தரவாதம்” என்பது குறித்து எதுவம் சொல்கிறார்களில்லை. வலியுறுத்திக்கேட்டால் இந்தியா பெற்றுத்தரும் என்று குசுகுசுக்கின்றனர். இவர்கள் குறிப்பிடுகிற இந்தியா குறித்து ஏற்கனவே நாம் நிறைய அனுபவங்களையும் பாடங்களையும் கற்றுவிட்டோம். சரி இவர்களுக்காக இன்னொரு முறை ஏமாறுவதென்றால் இதற்கு யார் பொறுப்பெடுப்பது?. புலிகள் ஆயுதத்தை கீழே போட்டால் அவர்கள் கூறும் தமிழீழத்தைத் தாராவிட்டாலும் பரவாயில்லை ஒரு கெளரவமான நியாயமான தீர்வையாவது இந்தியா பெற்றுத்தரும் என இதுவரை எந்த ஒரு இந்தி ஆட்சியாளரும் கூறவில்லை. ஏன்… உளவுப்படை சந்திரன் கூட தெரிவிக்கவில்லை. அப்படியிருக்க ஆயுதங்களை கீழே போடுங்கள் என்றால் அது கடைந்தெடுத்த பச்சைத் துரோகமின்றி வேறு என்னவாக இருக்கும்….

    Reply
  • palli
    palli

    புலிகள் கையில் ஆயுதம்??
    புலம் பெயர் புழிகள் கையில் புலிகொடி??
    இது இரண்டும் தமிழருக்கு கேடுதான். கேடுதான்.கேடுதான்.

    Reply
  • ramesh
    ramesh

    இலங்கையில் நடப்பது இனப்பிரச்சனையல்ல. ஒருவித ஆதிக்கவெறிகளின் அதிகார ஆட்டம். ஆனால் பாதிக்கப்படுவதோ அப்பாவித்தமிழ்மக்கள் மட்டும்தான். இந்த லட்சணத்தில் ஆயுதம் கீழே வைக்கப்பட்டால் அதிகாரம் போய்விடுமே. அப்புறம் என்ன செய்வது? அன்று யு.என்.பி ஆட்சிக்காலத்தில் ஆயுதங்களையள்ளி வழங்கிய மேற்குலக நாடுகள் இன்று கீழே போடுங்கள் என்று சொல்வது ஆட்டத்தில் இந்தியா சார்ந்த கிழக்குலக நாடுகள் வட்டத்தில் முன்னிலையிலுள்ளதைக்காண சகிக்க முடியவில்லைப்போலும். எது எப்படியோ மத்தளத்துக்கு(மக்களுக்கு)இரண்டு பக்கமும் அடி என்பது மட்டும் உண்மை.

    Reply
  • palli
    palli

    சர்மா இந்த விளையாட்டெல்லாம் நாம் 1984ல் முடித்து விட்டோம். திரும்பவும் அதே விளையாட்டுக்கு நாம் வரவில்லை. சர்மா (புலிகணக்குபடி)24ஆயிரம் புலிகள். 95ஆயிரம் மக்கள் இழப்பு. 11லட்ச்சம் இடம்பெயர்வு. 26 ஆறு வருடங்கள் நகர்வு. இத்தனையையும் இழந்து இன்று புலிகளை காக்க (மக்களை காக்க அல்ல)அம்பலவாணர் தலமையில் 10 இழயோர் சாப்பிடாமல் பட்டிணி கிடக்கின்றனர். முப்படை தளபதிகள் வலம்வர, ஆயுதம் புரியாத ஆயுதம் பல. உளவுக்கு பொட்டர். கடலுக்கு சூசை. குட்டி விமானம் கரும்புலி பல இத்தனை இருந்தும் தலைவரை பாதுகாக்க முடியாமல் புலம் பெயர் நாட்டில் குழந்தைகளை பட்டினி போடும் புலிகள் ஆயுதத்தை வைத்து என்ன பேரிச்சம்பழமா வேண்ட போகிறார்களா??? நாம் (மக்கள்) அனைவரும் துரோகிகள்தான் காரனம் இதுவரை புலியின் புருடாவை நம்பி மக்கள் பற்றி சிந்திக்க மறந்தது துரோகம்தான். அதை நாம் உணர்ந்து விட்டோம் தாங்கள் எப்போது??

    Reply
  • BC
    BC

    புலிகளுடைய கைகளில் உள்ள ஆயுதம் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை பதிலாக மக்களுக்கு எதிராகவே உள்ளது என்ற உண்மையை ஜெயபாலன் கட்டுரையில் சொல்லியுள்ளார்.

    புலிகள் ஆயுதங்களை கீழே போடவில்லை என்றால் அது இலங்கையில் உள்ள தமிழருக்கு செய்யும் கடைந்தெடுத்த பச்சைத் துரோகமின்றி வேறு இல்லை.

    Reply
  • பொட்டர்
    பொட்டர்

    புலி தானே நடக்கமாட்டாமல் தள்ளாடுகின்றது. இனி எப்படி ஆயுதத்தை தூக்க முடியும்? தலைவரை நம்பி நான் மோசம் போய்விட்டேனே!

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    //ஆயுதத்தை கீழே போடுங்கள். எல்லாம் பேசி வாங்கலாம் என சிலர் முன் மொழிகினறனர். ஆயுதங்களை கீழே போடுங்கள் என்று சொல்பவர்கள் இப்போது ஆயுதம் வைத்திருக்கவில்லை. சரி அவர்கள் நல்ல நோக்கத்தோடு புத்திசாலித்தனமாக சொல்கிறார்கள் என எடுத்துக் கொள்வதற்கு “ஆயுதங்களை கீழே போட்டபின் அரசு எமக்கு உரிமை தரும் என்பதற்கு என்ன உத்தரவாதம்” என்பது குறித்து எதுவம் சொல்கிறார்களில்லை. வலியுறுத்திக்கேட்டால் இந்தியா பெற்றுத்தரும் என்று குசுகுசுக்கின்றனர்.//சர்மா

    புலிகளை ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று கேட்பவர்கள் வெவ்வேறு அரசியல் தளங்களில் இருந்து அதனைக் கேட்கின்றனர். நான் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று கோருவதற்கான காரணம் அவர்கள் ஆயுதங்களை வைத்திருந்தும் இதுவரை எதனையும் சாதிக்கவில்லை என்பதும் இனிமேலும் அவர்களால் சாதிக்க முடியாது என்பதும் தான். புலிகளுடையதும் ஏனைய இயக்கங்களினதும் இருந்த ஆயுதங்கள் ஏற்கனவே சகோதரப் படுகொலையில் ஆரம்பித்து இன்று சொந்த மக்களுக்கு எதிராகவும் திருப்ப்பட்டு உள்ளது. ஆயுதங்களைக் கீழே போடுங்கள் பேசித் தீர்க்கலாம் என்பது என்னுடைய வாதம் அல்ல.

    //முன்பு ஆயுதம் தூக்காமல் தமிழர்களின் ஏகோபித்த ஆதரவுடன் தந்தை சேல்வா பேசினார்.பின்பு அமிர்தலிங்கம் பேசினார்.எதுவும் கிடைக்கவில்லை. அடி உதைதான் கிடைத்தது. எனவேதான் வேறு வழியின்றி ஆயதம் தூக்கினார்கள்.// சர்மா
    அன்றைக்கு அடியும் உதையும் கிடைத்தது. உண்மை. சரி ஆயுதம் தூக்கினீர்கள் இன்றைக்கு தமிழீழம் கிடைத்ததா? அடி உதைக்கு பதில் செல் அடிக்கிறார்கள் கொன்று குவிக்கிறார்கள். இனி என்னத்தை தூக்கப் போகிறீர்கள்?

    //வலியுறுத்திக்கேட்டால் இந்தியா பெற்றுத்தரும் என்று குசுகுசுக்கின்றனர். இவர்கள் குறிப்பிடுகிற இந்தியா குறித்து ஏற்கனவே நாம் நிறைய அனுபவங்களையும் பாடங்களையும் கற்றுவிட்டோம்.// சர்மா

    யார் சொன்னது இந்தியா பெற்றுத் தரும் என்று? ஆயுதப் பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் போதே இந்திய அதிகாரிகள் சொல்லி விட்டார்கள் தமிழீழம் எல்லாம் வாங்கித் தர ஏலாது என்று. ரோ வே பிரபாகரனிடம் கூறியது 1985ல் தமிழீழத்தை விட்டுவிட்டு ஒரு தீர்வுக்கு செல்லும்படி.

    ஏன் அவ்வளவு தூரம் செல்வான் உங்கள் செல்வாவும் அமீரும் தமிழீழம் கேட்டபோது கம்யுனிஸ்ட் கட்சி என்ன சொன்னது. தமிழீழம் அமைவதாக இருந்தால் ஒரு ஏகாதிபத்தியத்தின் உதவி இல்லாமல் அது சாத்தியமில்லை. அவ்வாறு உதவிக்கு வரும் ஏகாதிபத்தியம் தமிழ் மக்களின் இலங்கை மக்களின் நலனைப் பற்றி அக்கறைப்படாது என்று. ஆனால் நீங்கள் இன்றைக்கு வந்து இந்தியா குறித்து பாடம் கற்பதாக கதையளப்பது பொருத்தமற்றது.

    //ஒரு கெளரவமான நியாயமான தீர்வையாவது இந்தியா பெற்றுத்தரும் என இதுவரை எந்த ஒரு இந்தி ஆட்சியாளரும் கூறவில்லை. ஏன்… உளவுப்படை சந்திரன் கூட தெரிவிக்கவில்லை. அப்படியிருக்க ஆயுதங்களை கீழே போடுங்கள் என்றால் அது கடைந்தெடுத்த பச்சைத் துரோகமின்றி வேறு என்னவாக இருக்கும்….//
    பாடம் அனுபவம் எல்லாம் கற்கிறம் என்று சொல்கிற நீங்கள் ஏன் இந்தியா தான் தீர்வு பெற்றுத்தர வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறீர்கள். இலங்கைப் பிரச்சினையில் இந்தியா ஒரு தீர்வல்ல. இந்திய இலங்கைப் பிரச்சினையின் ஒரு அம்சம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். சாட்சிக் காரண்ர காலில விழுவதை முதலில் கைவிடுங்கள்.

    தென் ஆபிரிக்காவில் ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் தான் போராடிய பிரிட்டோறிய அரசுடன்தான் நேரடியாகப் பேச்சுவார்த்தையும் நடத்தியது. இந்தியா வரவேண்டும் அமெரிக்கா வரவேண்டும் கூட நோர்வேயும் வர வேண்டும் என்பதைவிட்டுவிட்டு பக்கதில் உள்ள சிங்கள மக்களையும் முஸ்லீம் மக்களையும் கூட்டிக்கொண்டு போய் போராடுவதற்கு பேசுவதற்கு வழி இருக்கா என்று பாருங்கள்.

    //ஆயுதங்களை கீழே போடுங்கள் என்றால் அது கடைந்தெடுத்த பச்சைத் துரோகமின்றி வேறு என்னவாக இருக்கும்….//
    தமிழ் மக்களுக்கு உதவாத, அந்தத் தமிழ் மக்களுக்கு அழிவையும், அவலத்தையும் ஏற்படுத்தும் ஆயுதங்களைக் கீழே போடச் சொல்வது கடைந்தெடுத்த துரோகத்தனம் என்றால் அந்தத் துரோகத் தனத்தைச் செய்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை சர்மா.

    த ஜெயபாலன்

    Reply
  • Raj
    Raj

    ஆயுதத்தை வைத்துக்கொண்டு பேரம் பேச முடியுமானால் கை விடுவதா இல்லையா என யோசிப்பதற்கு இடமுண்டு ஆனால் தலையையே குட்டிபோட்ட பூனை கொண்டு திரிவதுபோல ஒளிக்கத்திரிகையில் என்ன விவாதம். விட்டுவிட்டு சனத்தைக்காக்கும் வழியைப் பாருங்கோ.

    Reply
  • sintha
    sintha

    புலியிடம் ஆயுதம் இருந்தால்தான் புலன்பெயர் ஜனநாயகவாதிகள் இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தலாம். ஆயுதத்தை வைத்துவிட்டு புலியும் பேச்சுக்கு வந்தால் இவர்களால் ஒரே மேசையில் இருந்து பேச முடியாது. இவர்களுக்குத் தேவை புலிஅழிவு. அதற்காகவே புலி ஆயுதத்தை விடக்கூடாது என சர்மா சுத்திவளைக்கிறார்.

    Reply
  • sarma
    sarma

    நண்பர்களே இங்கு நான் இரண்டு விடயங்களை தெளிவாக வலியுறுத்துகிறேன். முதலாவது தமிழீழக்கோரிக்கை. இது ஒரு தவறானதீர்வு. இதனை அனைவரும் கைவிடவேண்டும். இரண்டாவது ஆயுதப்போராட்டமே எமது இலக்கை அடைய வழியாகும். புரட்சிகர சக்திகளை அழித்த புலிகள் இயக்கம் அழிவது பற்றி எனக்கு சிறிதும் கவலை இல்லை. ஆனால் புலிகளை விமர்சிப்பதாக கூறிக்கொண்டு சில இந்திய விசுவாசிகள் ஆயுதப்போராட்டமே தவறு என்று சொல்ல வருகின்றனர். இதனையே நான் கண்டிக்கின்றேன்.

    Reply
  • Adam L.S
    Adam L.S

    அன்பின் சர்மாவுக்கு,
    உங்கள் கருத்து அரிவரி படிக்கின்ற பிள்ளையின் கருத்தைப்போன்று உள்ளது. புலிகளின் ஆயுதத்தால் எதையும் சாதிக்க முடியாது என்பதை இப்போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்றுவரை இலங்கையில் வாழ்ந்த புத்திஜீவிகள் தொடக்கம் சர்வதேச நாடுகள் வரை ஒவ்வோறு சந்தர்பத்திலும் சொல்லியே வந்துள்ளனர். நீங்கள்தான் உணர்ந்து கொள்ளவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு மகிந்தவின் ஆட்சிக் காலத்திற்கு முன்பே இதையே சர்வதேசம் வலியுறுத்துவதாக பாலா அண்ணா மாவீரர் விளக்க உரையில் கூறியுள்ளார். நீஙகள் விசில் அடித்துக் கொண்டிருந்ததால் கவனித்திருக்க மாட்டீர்கள். மீண்டும் ஒருமுறை அதைப் பாருங்கள் தெரியும். ஆகவே இது ஜெயபாலனின் கருத்து அல்ல உலக முழுமையின் கருத்தே அதுவாகும். அந்த சூத்திரத்தை புரிந்து கொண்ட மகிந்த ராஜபக்ஸ பயன்படுத்துகிறார். அது புரியாத பிரபாகரன் பங்கர் தேடுகிறார் அவ்வளவுதான்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    புலிகள் ஆயுதத்தை மட்டுமல்ல அரசியலையும் கைவிடவேண்டும். அல்லது விடப்பண்ண வேண்டும். ஏன்னென்றால் முப்பது வருடத்திற்கு மேலாக ஆயுதத்தைதான் அரசியலாகப் பாவித்தார்கள் புலிகள். இதை விட வேறு என்ன விளக்கம் வேண்டியிருக்கிறது?.

    Reply
  • லார்ட் லபுக்குதாஸ்
    லார்ட் லபுக்குதாஸ்

    /அன்றைக்கு அடியும் உதையும் கிடைத்தது. உண்மை. சரி ஆயுதம் தூக்கினீர்கள் இன்றைக்கு தமிழீழம் கிடைத்ததா? அடி உதைக்கு பதில் செல் அடிக்கிறார்கள் கொன்று குவிக்கிறார்கள். இனி என்னத்தை தூக்கப் போகிறீர்கள்?/—
    இதிலிருந்து என்ன தெரிகிறது, எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் பரிணாமம்தான் பிரபாகரன் என்று- சமூகப் பிரச்சனை என்று. இதற்கு வெள்ளைக்காரர்களை, “மை லார்ட்” என்று குறை சொல்லலாம். ஆனால் வெள்ளைக்காரன், நொள்ளைக்காரன் என்று இனரீதியாக குறைக் கூறுவதை விட, அவர்கள் நான்கு நூற்றாண்டுகளாக சாதித்த (குறிப்பாக தொழிற்புரட்சியினால்) சாதனையால், தற்போதைய “சர்வதேச பொதுக் கருத்து (இண்டர் நேஷனல் ஃபப்லிக் ஒப்பீனியன்)” என்பது அவர்களுடையதாகவே உள்ளது. கலைஞர் கருணாநிதி போன்றவர்கள், இதற்கு ஒப்பவே அதை அப்படியே “தமிழாக்கம்” செய்து ஏதோ “தொல்காப்பியர் சொன்னது போல்” கத்துகிறார்கள். அந்த “வேலையையே” செய்யும் “இலங்கைத் தமிழர்கள் மட்டும்” ஏன் மாட்டிக் கொள்கிறார்கள்??. ஏனென்றால், அவர்கள் செய்வது “EXPLOITATION OF INTERNATIONAL OPINIONS “, அதாவது, சர்வதேச கருத்துக்களை தங்களுக்கு தகுந்தமாதிரி “இம்ப்ரோவைஸ் செய்வது” -உதா: “கறுப்பு தோல் உடையவர்கள் எதற்குமே உருப்படமாட்டார்கள் என்று வெள்ளைக்காரர்களின் பொதுக்கருத்து என்றால் அதற்கு சாதகமாக, ஆப்பிரிக்கர்களை “கறுவல்கள்” என்று இகழ்ந்து, தங்களை உயர்த்திக்காட்ட, பல்லை இளித்துக்கொண்டு நிற்பார்கள் -முஸ்லீம்கள் பிரச்சனை இப்படிதான் நிகழ்ந்தது -அதி புத்திசாலிகள் வரப்போவதை எதிர்வு கூறி, “இம்ப்ரோவைஸ்” செய்து, “எக்ஸ்ப்ளாய்ட்” செய்ததன் விளைவுகள்தான் பல தோல்விகள்.

    Reply
  • palli
    palli

    //தமிழ் மக்களுக்கு உதவாத, அந்தத் தமிழ் மக்களுக்கு அழிவையும், அவலத்தையும் ஏற்படுத்தும் ஆயுதங்களைக் கீழே போடச் சொல்வது கடைந்தெடுத்த துரோகத்தனம் என்றால் அந்தத் துரோகத் தனத்தைச் செய்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை சர்மா.//த ஜெயபாலன்

    பாராட்டுக்கள். ஜெயபாலன்.
    இதை விட சர்மாவுக்கு விளக்கம் யாரால்தான் கொடுக்க முடியும்.

    Reply
  • aasa
    aasa

    இங்கே என்ன பேசி என்ன பிரயோசனம்? புலித்தலைமையை காப்பாற்ற இந்தியா முடிவு செய்திருக்கிறது. அழுத்தம் பிரயோகித்து விஜய் நம்பியார் ஐநாவின் இலங்கை தூதுவராக ஆக்கப்பட்டுள்ளார்.

    ஐநா கப்பல்கள் கொண்டுவந்து கடற்கரையில் நிறுத்தப்படுமாம். எதற்கு என்று அறிந்து கொள்ளலாம்.

    Reply
  • guru
    guru

    Thank you Adam L.S – for your answer to சர்மா -who is living in a alian world.

    Reply
  • sus
    sus

    எனக்கொரு சந்தேகம் பிரபாகரன் செத்து புலிகள் அழிந்தால் அதற்கு பிறகு தமிழருக்கு இலங்கையில் பிரச்சனையே இருக்காதா? இல்லையாயின்
    1)ஏன் கிட்ட தட்ட 20 வருடங்களுக்கு முன் மீட்கப் பட்ட யாழ்ப்பாணமும், தற்போது மீட்கப்பட்ட கிழக்கும் ஏன் இன்னும் அவிவிருத்தி அடையாமல் இருக்கு?
    2)பிரபாகரன் பிறப்பதற்கு முன்னர் தமிழருக்கு பிரச்சனையே இல்லையா? இனப் படுகொலையே நடக்கவில்லையா? சிங்கள இட ஆக்கிரமிப்பு நடக்கவில்லையா?
    3)புலிகள் ஆயுதங்களை கைவிட்டால் அதற்கு பிறகு அரசு தமிழருக்கு எல்லா உரிமையும் தந்து விடுமா? அதன் பின்னர் இனப் படுகொலையோ, நில ஆக்கிரமிப்போ நடக்காதா?
    4)கடைசியாக புலிகள் ஆயுதங்கள் வைத்திருந்தும் ஒன்றும் சாதிக்கவில்லை எனச் சொன்னீர்கள் சாதித்திருந்தால் பேசாமல் இருந்திருப்பீங்களா?
    தயவு செய்து பதில் தர‌வும் நன்றி.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    தமிழ் மக்களுக்கு பிரபாவுக்கு முன் பிரபாவுக்குப் பின் பிரச்சினை இல்லை அல்லது இருக்க மாட்டாது என்று யாரும் சொல்லவில்லை. தமிழ் மக்களுடைய பிரச்சினையை தீர்க்கப் போகிறோம் என்று ஆயுதங்களை எடுத்த புலிகள் உட்பட இயக்கங்கள் அப்பிரச்சினையை தீர்க்க முடியாமல் போனது மட்டுமல்ல தமிழ் மக்களுடைய போராட்ட வலிமையையும் மழுங்கடித்துவிட்டனர். தமிழ் மக்களுடைய போராட்டத்தை மொத்தக் குத்தகைக்கு எடுத்தக் கொண்ட புலிகளும் ஒரு முழம் ஏறினால் இரு முழம் இறங்குகிறார்கள்.

    போராட வெளிக்கிட்ட தலைமைகள் தவறானவை என்று சுட்டிக்காட்டுவதன் மூலம் போராட வேண்டிய தேவை இருக்கவில்லை என்ற முடிவுக்கு நீங்கள் வருவது அபத்தமானது. புலிகள் எப்படிப் போனாலும் தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்க்கப்படுவதற்கான வாய்ப்பு அண்மைய எதிர்காலத்தில் இல்லை என்பதே உண்மை.

    தமிழ் மக்கள் தங்கள் உரிமைக்கான போராட்டத்தை வேறுவேறு வழிகளில் உறுதியுடன் முன்னெடுப்பார்கள். அதற்கான சரியான தலைமையையும் காலம் தீர்மானிக்கும். அதற்கிடையே ஒரு வெற்றிடம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்ப தங்கள் பழைய பறிகளைக் காவிக்கொண்டு சிலர் முண்டியடித்துக் கொண்டு முற்படுவார்கள். ஆனால் அவர்களும் நிராகரிக்கப்படுவது தவிர்க்க முடியாதது. இந்த பழைய பறிகளை விட்டுவிட்டு புதிய சக்திகள் போராட்டத்தை வேறு வடிவங்களில் முன்னெடுப்பார்கள். அது வரலாற்று நியதி. அந்த மக்கள் தலைமைகளை இனம்கண்டு பலப்படத்த வேண்டும்.

    த ஜெயபாலன்.

    Reply
  • BC
    BC

    sus , இப்போ உங்கள் தாகம் (கோரிக்கை) உடனடி போர்நிறுத்தம், நிரந்தர போர்நிறுத்தம்.புலிகள் ஆயுதங்களை கைவிட்டால் சுலபமாக நிறைவேறும்.

    Reply
  • palli
    palli

    //1)ஏன் கிட்ட தட்ட 20 வருடங்களுக்கு முன் மீட்கப்பட்ட யாழ்ப்பாணமும், தற்போது மீட்கப்பட்ட கிழக்கும் ஏன் இன்னும் அவிவிருத்தி அடையாமல் இருக்கு//
    அபிவிருத்தி செய்பவர்களை புலி அனுமதிப்பதில்லை. உதாரனத்துக்கு சிவபாலன் (யாழ் மேயர்) லோகேஸ்வரன் மனைவி இரத்தினதுரை. இருப்பினும் புலியையும் மீறி செயல்படுபவர்கள் (ஆயுததாரிகள்) குட்டி புலியாக செயல்படுவதால் ஆயுதம் அற்ற ஒரு அமைப்பு வேண்டும் என ஏங்குகிறோம்.

    //2)பிரபாகரன் பிறப்பதற்கு முன்னர் தமிழருக்கு பிரச்சனையே இல்லையா? இனப் படுகொலையே நடக்கவில்லையா? சிங்கள இட ஆக்கிரமிப்பு நடக்கவில்லையா//

    இருக்கவில்லை என சொல்ல முடியாது. ஆனால் கூட்டனி கட்ச்சியென ஒரு அமைப்பு உருவாகும் நிலை இருந்தது. 37 ஆயுத இயக்கங்கள் உருவாகும் சந்தர்ப்பம் இருந்தது தனிமனித சுகந்திரம் நிறையவே இருந்தது. ஆனால் அனைத்தையும் ஏப்பம் விட்ட புலி அதன்பின் இதுவரை பேச்சுரிமைகூட விடவில்லை. ஆகவே பிரபாவுக்கு முன் தற்போதய நிலையை விட மக்கள் தமது கருத்தை சொல்லும் சுகந்திரம் இருந்தது மறுக்க முடியாது. குறிப்பாக பொட்டர் இல்லை என்பது பார்க்கபட வேண்டும்.

    //4)கடைசியாக புலிகள் ஆயுதங்கள் வைத்திருந்தும் ஒன்றும் சாதிக்கவில்லை எனச் சொன்னீர்கள் சாதித்திருந்தால் பேசாமல் இருந்திருப்பீங்களா.?
    சாதிக்கும் எண்ணம் மனதில் இருந்தால் கூட சகோதர யுத்தம் தொடங்கியிருக்க மாட்டார்கள். இன்று மக்களை தமது பலிகடாவாக முன்நிறுத்த மாட்டார்கள். உலகிலேயே தனிமனிதர்களுக்கு கூட தற்கொலை தாக்குதல் நடத்திய பெருமை இந்த தறுதலை அமைப்புக்கே சேரும்.

    மேல்கொண்டு விபரம் வேண்டுமாயின் இன்று சம்பந்தரின் அறிக்கையையும். புலம் பெயர் புலிகளின் கோரிக்கைகளையும் சரி செய்து பார்க்கவும். நாட்டு நடப்பு ஓர் அளவாவது புரியலாம்.

    Reply
  • thurai
    thurai

    //எனக்கொரு சந்தேகம் பிரபாகரன் செத்து புலிகள் அழிந்தால் அதற்கு பிறகு தமிழருக்கு இலங்கையில் பிரச்சனையே இருக்காதா? //

    உலகில் பிரச்சினை இல்லாத குடும்பமும் இல்லை,பிரச்சினைகள் இல்லாத நாடுமில்லை. பிரச்சினைகளை பெரிதாக்குவதும், சிறிதாக்குவதும் அவரர் அறிவின் திறமையைக்காட்டும்.

    பிரபாகரனும், புலிப்ப்டையினரும் ஈழத்தமிழர் பிரச்சினையை பெரிதாக்கியது மட்டுமல்ல, ஈழத்தமிழர்களிற்கு உலகெங்கும் பகைமையை வளர்த்து விட்டுள்ளார்கள். முதலில் அயலவ்ரின் நட்பே தேவை. உலகெங்கும் வாழும் தமிழரும், தூரநாடுகழும் தமிழரிற்கு விளம்பரத்தைமட்டுமே தேடும். இதனால் புலிகள் வளருமே தவிர பிரச்சினைகள் தீராது.

    முதலில் பிரச்சினகளை வியாபாரமாக்குவதும், வியாபாரிகழும் தடைசெயப்ப்ப்ட்டு ஈழ்த்த்மிழர் தாமே சுயமாக தீர்மானிக்க, வாழ வழிசெய்ய வேண்டும்.

    துரை

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //எனக்கொரு சந்தேகம் பிரபாகரன் செத்து புலிகள் அழிந்தால் அதற்கு பிறகு தமிழருக்கு இலங்கையில் பிரச்சனையே இருக்காதா? இல்லையாயின் – sus//

    உங்கள் கேள்விகளுக்கு தெளிவாக விடை தந்தாலும் அவை உங்களுக்கு விளங்கினாலும் விளங்காத மாதிரித் தான் காட்டிக் கொள்வீர்கள். காரணம் உங்களைப் போன்றவர்களுக்கு அங்கு அல்லறுரும் மக்களை விட புலிகள் தப்பிப் பிழைப்பது தான் முக்கியம். புலிகள் தப்பிப் பிழைத்தால் தான் புலிகளைச் சாட்டி பலர் சுனாமிச் சுருட்டல், வன்னிமக்களுக்கு உடனடி நிவாரணச் சுருட்டல், வணங்கா மண் சுருட்டல் என்று தொடர்ந்து கொண்டே போகலாம். புலிகள் அழிந்து விட்டால் பின் எவரை சாட்டி சுருட்டுவது?? சரி இனி உங்கள் கேள்விகளுக்கு வருவோம்.

    //1)ஏன் கிட்ட தட்ட 20 வருடங்களுக்கு முன் மீட்கப் பட்ட யாழ்ப்பாணமும், தற்போது மீட்கப்பட்ட கிழக்கும் ஏன் இன்னும் அவிவிருத்தி அடையாமல் இருக்கு? – sus//

    ஒரு தகவலைக் கூட உங்களால் சரியாக அறிய முடியவில்லை. யாழ்ப்பாணம் சந்தரிகா ஆட்சியின் போது தான் மீட்கப்பட்டது. அது நடந்து கிட்டத்தட்ட 14 வருடங்கள். அதே போல் கிழக்கு தற்போதைய மகிந்தவின் ஆட்சியின் போது மீட்கப்பட்டது. இவை இரண்டும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததை விட தற்போது அபிவிருத்தி அடைந்து தான் உள்ளன. ஆனால் முழுமையாக இன்னும் அடையவில்லை என்பதே உண்மை. அரசாங்கத்துடன் சமீபத்தில் சந்தித்த தமிழர்களுக்கு அரசு சுட்டிக் காட்டிய உண்மை ஒன்று. கிழக்கில் சிவில் நிர்வாகத்தை திறைமையாக எடுத்தச் செல்லக் கூடிய தமிழ் நிர்வாகிகள் இன்று கிழக்கில் இல்லை. இதற்கு யார் காரணம். புலிகள் நாட்டிலிருந்த புத்திசாலிகளைப் போட்டுத் தள்ளினார்கள். தப்பியவர்கள் நாட்டை விட்டே சென்று விட்டார்கள். இளைய சமுதாயத்தை போராட்டடமென்ற போர்வையில் படிப்பறிவில்லாத முட்டாள்களாக்கி 2 தலைமுறையைப் பாழடித்தார்கள். ஆனால் பிரபாகரன் தனது பிள்ளைகளுக்கு மாத்திரம் அடல் பாலசிங்கம் மூலமும் வெளிநாட்டிலிருந்த சில புத்திசாலி மாணவர்களை வரவழைத்தும் கல்வியறிவு ஊட்டினார். அப்படி வந்த புத்திசாலி மாணவர்களையும் மூளைச்சலவை செய்து தற்கொலைப் போராளிகளாக மாற்றியே திருப்பியனுப்பட்டனர். அவர்கள் தான் பின்னாளில் தீக்குளிப்பு உண்ணாவிரதமென்று ஆரம்பித்து வைத்தவர்கள். இதே நிலைதான் இன்று யாழிலும் தொடருகின்றது.

    //2)பிரபாகரன் பிறப்பதற்கு முன்னர் தமிழருக்கு பிரச்சனையே இல்லையா? இனப் படுகொலையே நடக்கவில்லையா? சிங்கள இட ஆக்கிரமிப்பு நடக்கவில்லையா? – sus//

    இனப்பிரைச்சினை இருந்தது அதை சிங்கள அரசியல்வாதிகள் வளர்த்து விட்டது அனைத்தும் உண்மை. ஆனால் ஆரம்பித்திலிருந்த நிலையை விட ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த பின்பு தான் அது விசுபரூபம் எடுத்தது. மாறி மாறி வந்த சிங்கள அரசுகள் மூர்க்கத் தனமான தாக்குதல்களையும் ஆரம்பித்தார்கள். அதற்காக புலிகளோ மற்றைய இயக்கங்களோ ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தது தப்பு என்று நான் சொல்ல வரவில்லை. அந்த ஆயுதப் போராட்டங்களை ஒருங்கிணைந்து நடத்தாமல் மற்றைய இயக்கங்களை அழிக்க சகோதரப் படுகொலைகளை புலிகள் என்று ஆரம்பித்தார்களோ அன்று போராட்டத்தின் திசையே மாற ஆரம்பித்து விட்டது. அதன் பின் நடந்தவற்றைத் தானே நீங்களும் நானும் மற்றவர்களும் தற்போது பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

    //3)புலிகள் ஆயுதங்களை கைவிட்டால் அதற்கு பிறகு அரசு தமிழருக்கு எல்லா உரிமையும் தந்து விடுமா? அதன் பின்னர் இனப் படுகொலையோ, நில ஆக்கிரமிப்போ நடக்காதா? – sus//

    25 வருடகாலமாக அரசியல்க் கட்சிகள் ஒன்றும் கிளிக்கவில்லையெனக் கூறியே இளைஞர்கள் கையில் ஆயுதமெடுத்தார்கள். ஆனால் அந்த இளைஞர்கள் இன்று 30 வருடங்களைக் கடந்தும் என்ன கிளித்தார்கள். தமிழ் அரசியல்க் கட்சிகள் அகிம்சைரீதியாக போராடி போது சிங்கள அரசு செய்த அட்டுழியத்தை விட இளைஞர்கள் ஆயுதமேந்திய பின் செய்தவை தான் அதிகம். அதுபோல் முன்பு சிங்கள அரசுகள் குடியேற்றமென்ற போர்வையில் ஆக்கிரமித்ததை விட போராட்ட காலத்தில் ஆக்கிரமித்தவை தான் அதிகம். இளைஞர்கள் ஆயுதப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன் சிங்கள அரசால் கொல்லப்பட்ட மொத்த தமிழர்களை விட ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த பின் குறுகிய காலத்தினுள்ளேயே புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்கள் அதிகம். பின் யாருக்காக போராட்டம்?? எதற்காக போராட்டம்?? ஆயுதமேந்தியதால் அழிவுகள் தான் அதிகம் என்ற பின் அந்த ஆயுதங்களைக் கீழே போடுவது தானே முறை. சரி புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டால் உரிமை கிடைத்து விடுமா என்கின்றீர்கள். நிச்சயம் சிங்கள அரசு ஒரு நல்ல தீர்வை எட்டியே ஆகவேண்டிய சூழ்நிலை தான் தற்போது உள்ளது. காரணம் சிங்கள மக்களும் தொடரும் யுத்தங்களினால் பொருளாதாரச் சுமைகளை தாங்க முடியாமலும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டும் உள்ளார்கள். இதனால் அவர்களும் ஒரு தீர்வை எட்ட அரசிற்கு உதவும் நிலையிலேயே உள்ளார்கள். இவையெல்லாவற்றையும் விட மேலாக அரசிற்கு வெளிநாட்டு அழுத்தங்கள் இது விடயத்தில் கூடியுள்ளன. எனவே எல்லோரையும் திருப்திப் படுத்தும் வகையில் அரசு ஒரு தீர்வுக்கு வந்தேயாக வேண்டும். அப்போதும் அரசு தவறு செய்ய முனைந்தால் இன்று வெளிநாட்டில் போராட்டம் நடந்தும் நாம் அந்தப் போராட்டத்தை மீண்டும் தொடரலாம். ஆனால் புலிக்கோசங்களையோ புலிப்பதாதைகளையோ விட்டுவிட்டு தமிழ் மக்களாக மக்களுக்காக குரல் கொடுப்போம். இன்று இலட்சக் கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடாத்தியும் எந்த அரசும் காணா முகமாக இருப்பதற்கு இந்தப் புலிக்கொடியும் புலிக் கோசமும் தான் காரணம் என்று உண்மை ஏன் உங்களைப் போன்றவர்களுக்கு உறைக்கவில்லை??

    //4)கடைசியாக புலிகள் ஆயுதங்கள் வைத்திருந்தும் ஒன்றும் சாதிக்கவில்லை எனச் சொன்னீர்கள் சாதித்திருந்தால் பேசாமல் இருந்திருப்பீங்களா?
    தயவு செய்து பதில் தரவும் நன்றி. – sus//

    நிச்சயமாக சாதித்திருந்தால் இன்று சரித்திரமே மாறியிருக்கும். ஒவ்வொரு தமிழனும் புலிகளை தலைமேல் வைத்து கூத்தாடியிருப்பார்கள். ஆனால் இன்று நடந்தது என்ன?? சாதித்திருந்தால் பேசாமலிருந்திருப்பீர்களா என்ற உங்களின் கேள்வியே புலிகள் சாதிக்கவில்லையென நீங்கள் ஒப்புக் கொண்டதை காட்டுகின்றது. சாதிக்க முடியாதவர்கள் அந்த நிலையிலிருந்து இறங்குவதே தானே முறையானது.
    புலிகளுக்கு பல சந்தர்பங்கள் சாதிப்பதற்கு கிடைத்திருந்தும் அவற்றை அவர்கள் தமது சுயநலத்திற்காக மட்டுமே பாவித்தார்கள். உதாரணமாக.

    1)இந்திய இலங்கை ஒப்பந்தம் வந்த போது அதை நிறைவேற விடாது செய்ததில் புலிகளின் பங்கும் பெரிதானது. அதை நிறைவேற்ற இந்திய அரசிற்கு உதவியிருந்தால் பின்னாளில் படிப்படியாக எமது அதிகாரங்களைப் பெற்றுத் தர இந்திய அரசும் உதவியிருக்கும். இவ்விடயத்தை அப்போது இந்திய அரசுடன் தொடர்பிலிருந்த அமிர்தலிங்கம் அவர்களே அன்றைய இந்திய அரசின் நோக்கத்தை பின்னாளில் சுட்டிக் காட்டியுமிருந்தார்.

    2)பினபு இந்திய இராணுவத்தை எதிர்க்க பிரமேதாசா அரசுடன் கைகோர்த்து நாங்கள் சகோதரர்கள் இன்று அடித்து கொள்வோம் நாளை அணைத்துக் கொள்வோம் எமது பிரச்சினைகளை நாமே பார்த்துக் கொள்வோம் என்று கூடிக் குலாவினர் புலிகள். இந்தச் சந்தர்ப்த்தைப் பாவித்து பிரேமதாசா அரசுடன் ஏதாவது பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வு பெற்றார்களா புலிகள்?? மாறாக தமது அரசியல் எதிரிகளை போட்டுத் தள்ள பிரேமதாசா அரசின் மறைமுக உதவிகளையும் ஆயுதங்களையும் கோடிக்கணக்காக பணத்தையும் பெற்றுக் கொள்ளவே புலிகள் முயன்றனர்.

    3)ரணில் அரசுடன் போர் நிறுத்த ஒப்பத்தம் செய்யப்பட்ட போது கூட புலிகள் தம்மை வளப்படுத்தவே அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு கருணா புலிகளிலிருந்து பிரிந்த பின் கருணாவிடமிருந்து ஆயுதக் களைவைச் செய்யச் சொல்லியே அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ரணில் அரசுடன் சுவிசில் பலமுறை பேச்சு வார்த்தை நடாத்திய புலிகள் ஒருமுறையாவது தமிழ்மக்களுக்கான தீர்வைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தினார்களா?? மாறாக வரி என்ற பெயரில் பகல் கொள்ளை அடித்ததும் வெளிநாட்டுத் தமிழர்களிடமும் வெளிநாட்டு உதவி நிறுவனங்களிடமும் தமிழ் மக்களுக்கு நிவாரணமளிக்க என்று சுருட்டிய பணத்தில் தமகு்கு ஆடம்பர பங்களாக்களும் நீச்சல் தடாகங்களும் கட்டி சொகுசு வாழ்க்கை நடத்தத் தொடங்கினார்கள். ஆனால் வன்னியில் புலிகளின் பிடியில் மாட்டுப்பட்ட மக்கள் வழமைபோல் அன்றும் இன்றும் மரங்களின் கீழ் வாழ்க்கையெனும் கற்கால வாழ்க்கைக்கு அழைத்துச் சென்றவர்களே புலிகள். இவர்களை நம்பி எனியும் நம் எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கையையும் அழித்துக் கொள்ள விரும்புகின்றீர்களா??

    Reply
  • paramu
    paramu

    Dear Parthipan!! Well done. I salute you for the answer to SUS questions.Once more Parthipan.. Well done man

    Reply
  • Stalinistmao
    Stalinistmao

    தோழர் சர்மாவுக்கு எமது புரட்சிகர வணக்கங்கள்.

    தந்தை செல்வாவும் தளபதி அமிர்தலிங்கமும் குட்டி பூர்சுவாக்களை பிரதிநிதித்துவம் செய்த தரகு முதலாளிகளின் தலைவர்கள். அவர்கள் சமரச அரசியல் செய்து பிற்போக்கு சக்திகளுக்குதவும் கரங்களாக இருந்தார்களே தவிர பாட்டாளி மக்களின் உரிமைக்குரலாக ஒலித்து அவர்களின் உரிமைகளையும் உடமைகளையும் மீட்குமுகமாக ஒரு முற்போக்கு வேலைத்திட்டத்தையும் முன்வைக்காது வர்க்கப் போராட்டத்திட்கான அக புறச் சூழல்நிலைளை மார்க்கிய ஆய்வுகளுக்குட்படுத்தாது செயல் பட்டது ஒரு வரலாற்றுத்தவறு மட்டுமல்லாது அவற்றினால் ஏற்பட்ட இழப்புகள் எதிர்பபுரட்சியாளர்களின் கரங்களை மிகவும் பலப்படுத்தியுமுள்ளது.

    மார்க்கிய ஆய்வுகளுக்குட்படுத்தாதது மன்னிக்க முடியாத தவறு எனினும் மாவோவின் கருத்துக்ககளை அடிப்படையாகக்கொண்டு நவகாலணித்துவத்திற்கும் பிராந்திய வல்லாதிக்கத்திட்கும் எதிராக வர்க்கப்போராட்ட்டம் ஒன்றை சமதர்ம சனநாயக பாட்டாளி மக்களாள் ஆட்சி நடாத்தப்படும் சீனாவின் ஆதரவுடன் முன் எடுக்காதது இமாலயத் தவறாகும்.

    அதுமட்டுமல்லாது மக்களை மாவோயிசப்படுத்தாதது மிகப்பாரிய வரலாற்றுத்தவறு என்பதில் எள்ளளவு ஐயப்பாடுமில்லை.

    இவற்றுடன் சீனாவின் ஆட்சி இலங்கைக்கும் விஸ்தரிக்கப்பட்டிருககுமானால் அதனயிட்டு மகிழும் முதலாம் நபர் நானாகத்தானிருக்க முடியும்

    தோழர் சர்மா இப்படியான முற்போக்கு வர்க்கப்போராட்டத்திட்கான முன் எடுப்புகள் பற்றி எடுத்து இயம்பாதது ஏன் இவர் மக்களை அரசியல்மயப்படுத்தத் தயங்குகிறார் என்னும் வினா முற்போக்குச் சக்திகள் மத்தியில் எழுவதில் நியாயமுள்ளது.

    Reply
  • selva
    selva

    நன்றி பார்த்திபன் susக்கு சரியான பதில்களை அளித்துள்ளீர்கள்- ஆனால் ஆயுதம் தூக்கி ஒன்றும் பிரயோசனம் இல்லை காரணம் பெரிசு இப்ப மக்களின் நிம்மதிக்கு பெரிசு ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு கடிப்பதே சரியான முடிவு.

    Reply
  • nadesh
    nadesh

    பார்த்து மகிழுங்கள் தமிழீழ விரும்பிகளே; தலைவர் டாம்பீக வாழ்வும் குடும்ப சந்தோசமும் வன்னி மக்கள் வாழ்வும்
    http://www.youtube.com/watch?v=p4BeBYXGHaI&eurl=http%3A%2F%2F

    Reply
  • london boy
    london boy

    ஜபிசியில் புலியாட்களும் ஜெகனும் சொல்லுகினம். இளையோரை கோஸ் வேர்க்கும் வேண்டாம், கோர்ம் வேர்க்கும் வேண்டாம், எல்லாத்தையும் எறிஞ்சு போட்டு றோட்டுக்கு இறங்குங்கோ எண்டு. போராட்டம் உச்சக் கட்டத்தில் நிக்குதாம். ஆனால் தலைவற்ரை பிள்ளைகள் மட்டும் படிப்பும் சேர்ட்டுபிக்கற்ரும் நல்லாயிருக்குது;
    இதுக்கு மேலையும் உங்களுக்கு போராட்டமும் தமிழீழமும் தலைவரும் தேவைதானா?? கேவலங்கெட்ட பிழைப்பும் வாழ்வும். இந்தவொரு சின்ன வீடியோ துண்டைப் பார்க்கவே கொதிக்குது; இந்த லட்சணத்தில தலையை யாராவது நாடு கடத்துவினமேயானால் அது முழு இலங்கையினர்க்கும் செய்த துரோகமாகும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    நன்றி நடேஸ் இணைப்பிற்கு. இதனைப் பார்த்த பின்பும் புலிக் கொடி பிடித்து கோசமிடுபவர்களுக்கு புத்தி தெளியவில்லை என்றால், அவர்கள் ஒரு மனநல மருத்துவரை அணுகுவது உத்தமம்.

    Reply
  • murugan
    murugan

    இந்த வீடியோவை பார்க்கும் புலன் பெயர் தமிழர், தலைவருக்கு இப்படியான வாழ்வு கிடைத்ததை இட்டும், இளவரசியும் இளவரசர்களும் இருப்பதை இட்டும், அதுவும் நல்லா படிக்க வைத்திருக்கிறார் எனவும் நெஞ்சை நிமிர்த்தி தாங்கள் பெற்ற இன்பம் தலைவரும் பெற்றார் என புளங்காகிதமடையுமே தவிர, தலைவர் வாழக் கூடாதா என கேட்குமே ஒழிய, அதிர்ச்சி ஏதும் அடையாது. வன்னியிலுள்ள மக்கள் சில வேளை மனதிற்குள் அழக்கூடும்.

    Reply
  • sus
    sus

    ஜெயபாலன் நான் இங்கு புலிகளுக்காக கதைக்க வரவில்லை. நீங்கள் நடுநிலையாக இருந்து என் கேள்விக்கு பதிலளீயுங்கள்.
    புலிகள் போராட்டத்தை மழுங்கடித்து விட்டனர் எனச் சொன்னீர்கள் எவ்வாறு மழுங்கடித்தனர் எனச் சொல்வீர்களா? புலிகளும் சில பிழைகள் விட்டு இருக்குறார்கள். நான் இல்லை என சொல்ல இல்லை. புலிகள் மற்ற இயக்கங்களை அழித்ததால் மட்டும் அந்த இயக்கங்கள் அழியவில்லை. அந்த இயக்கங்களுக்கு எல்லாம் உறுதியான தலைமை ,போராடும் குணம் அதை விட மக்கள் நலன் கொஞ்சம் கூட இருக்கவில்லை. அதனால் தான் அவர்கள் அழிந்தார்கள். இடங்களை, தளபதிகளை இழப்பது புலிகளுக்கு ஒன்றும் புதிது இல்லை இந்தியா இரானுவ காலத்தின் போதும் காட்டில் தான் இருந்தார்கள் அதற்கு பிறகு எல்லாவற்றையும் திருப்பி பிடிக்கவில்லையா?

    புலிகளுக்கு மிகப் பெரிய எதிரி கூட இருந்து குழி பறிப்பவர்கள் தான். புலிகளின் மிகப் பெரிய பலவீனமே அவர்களை அடையாளம் காணதது தான். அடுத்தது இந்தியா புலிகளுக்கு எதிராக போர் புரிவது. சிலர் சொல்வார்கள் ராஜீவை புலிகள் கொண்டதால் தான் இந்தியா புலிக்கு எதிராக இலங்கை அரசுக்கு உதவி செய்யுது என அது பொய்.இந்தியா அரசு இலங்கைக்கு உதவி செய்திருக்கா விட்டால் ஒரு போதும் இலங்கை ஆமி போரில் வெண்டிருக்க மாட்டாது. நாங்கள் கொழும்பிற்கு போய் நின்று கொண்டு நாங்கள் புலி இல்லை எனச் சொன்னாலும் சிங்களவர்கள் நம்ப போறது இல்லை அந்த அளவிற்கு புலிகள் மக்களோடு ஒன்றினைந்து உள்ளார்கள்.

    நீங்கள் சொன்ன மாதிரி போராட்டம் புது வடிவம் தான் பெறுகிறது. ஆனால் அதற்கு பின்னாலும் புலிகள் தான் நிற்கிறார்கள். எவ்வளவு நாளைக்கு தான் புலிகள் அரசுக்கு எதிராக யுத்தம் புரிவது அதனால் தான் புலம் பெயர் மக்களை மக்கள் புரட்சி செய்ய வைத்து உள்ளார்கள். தீலிபனின் கனவு கொஞ்சம் கொஞ்சமாக நனவாகிறது. புலிகள் பலத்தோடு இடங்களையும் வைத்திருந்தால் மக்கள் புரட்சி செய்வார்களா? நீங்கள் சொன்ன மாதிரி எல்லாம் உடனே சரி வராது தான் ஏன் என்றால் இப்ப தானே மக்கள் புரட்சி தொடங்கி உள்ளது. கொஞ்ச காலத்தில் சரி வரும் ஆனால் அதற்கு பின்னாலும் புலி தான் நிற்கும் என்பது எனது கருத்து.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    sus க்கு தேவை இப்போ பதில்கள் அல்ல. பிராத்தனைகள். ஆமாம் sus நலமடைய வேண்டுமென்று நாமெலல்லாம் ஆண்டவரைப் பிரார்த்திப்போம்.

    Reply
  • murugan
    murugan

    /புலிகளும் சில பிழைகள் விட்டு இருக்குறார்கள். நான் இல்லை என சொல்ல இல்லை./

    sus- அந்த பிழைகள் என்ன என்பதை சொல்லிப்பாருங்கள். விடை கிடைக்கும்.

    புலி தெடர்ச்சியாக செய்து வந்த படு கொலைகள் குண்டு வெடிப்புக்கள் சட்டமீறல்கள் கடத்தல் கப்பம் எல்லாம் கண்டு உலக நாடுகள் புலியோடு சரிவராது என முடிவெடுத்து விட்டன. அதனாலேயே புலி அழிகின்றது.

    Reply
  • BC
    BC

    Nadesh, தகவலுக்கு நன்றி.

    Sus என்ன சொல்ல வருகிறார்? புலம் பெயர் தமிழ் மக்கள் வெளிநாடுகளில் புரட்சி செய்ய தொடங்கியாச்சா?
    பார்த்திபன் சொன்ன மாதிரி நானும் பிரார்த்தனையில் கலந்து கொள்கிறேன்.

    Reply
  • palli
    palli

    புலிகள் பலவீனம்………பல.
    புலிகள் பலம்…….. கரும்புலி.
    புலிகளின் தோல்வி ஏன்…. பொட்டரின் துறை.
    புலிகளின் அரசியல்…. கருகிய தோசை.
    புலி தமிழக ஆதரவு… கூவம் ஆறு.
    புலம் பெயர் புலி… விபரமான வியாபாரிகள்.
    புலியின் கலை…. தலை புகழ் தினம் பாடல்.
    புலியின் தளபதிகள்… கிராமத்து சண்டியர்கள்.
    புலியின் தலமை…. 25ம் புலிபாஸி.
    புலியின் பொருளாதாரம்…. சிலர் வாழ ஆதாரம்.
    இதுவே புலியின் பத்து அம்ச செயல் திட்டம்.

    Reply
  • murugan
    murugan

    இந்தியா அரசு இலங்கைக்கு உதவி செய்திருக்கா விட்டால் ஒரு போதும் இலங்கை ஆமி போரில் வெண்டிருக்க மாட்டாது.”/sus

    எம்ஜிஆரிடம் காசு வாங்காவிட்டால் புலி எங்கே?

    /நாங்கள் கொழும்பிற்கு போய் நின்று கொண்டு நாங்கள் புலி இல்லை எனச் சொன்னாலும் சிங்களவர்கள் நம்ப போறது இல்லை அந்த அளவிற்கு புலிகள் மக்களோடு ஒன்றினைந்து உள்ளார்கள்.”/sus

    அதுதானே. எங்கே குண்டு வெடிக்கும் யாருக்கு வெடிக்கும் என எத்தனை நாள்தான் சிங்கள சனம் அல்லோலல் படுகிறது? சிங்கள மக்களை வென்றெடுக்க புலியிடம் என்ன வேலைத்திட்டம் இருந்தது?

    Reply
  • Stalinistmao
    Stalinistmao

    //புலிகளும் சில பிழைகள் விட்டு இருக்குறார்கள். நான் இல்லை என சொல்ல இல்லை//

    இதுவரை புலிகள் என்ன சரியாக செய்திருக்கிறார்கள்?

    Reply
  • John
    John

    ஏன் உங்களால் மற்றப்பக்கம் பார்க்க முடியவில்லை. இன்றைய நிலையில் அரசாங்கம் போரை நிறுத்துவதை விட புலிகள் போரை நிறுத்துவதே சுலபமானது. காரணம் இவ்வளவு நிலப்பரப்பை இழந்த புலிகள் இதையும் விட்டுவிட்டு மறைவது எமது உயிர் இழப்புகளைக் குறைப்பதாக அமையும். இன்றும் கூட யுத்தநிறுத்த வலயத்துக்குள் வரும் மக்கள் புலிகளால் காலின் கீழ் சுடப்பட்டிருக்கிறார்கள். தமிழ்மக்கள் அரசை யுத்தநிறுத்தம் செய்யுமாறு கேட்பது புலிகளை மீண்டும் உயிர்பெறச்செய்து போரை மீண்டும் தொடர்த்து இலங்கையை அழிவுப்பாதையில் இட்டுச் செல்வதாக அமையும் என்று போத்தபாய சொல்லியிருப்பது சர்வதாரணமாக யாரும் சிந்திக்கப் கூடிய ஒன்றுதான்.

    மற்றவனைக் கொலையாளி எனச் சுட்டிக்காட்டும் போது எமது கைகளில் இரத்தக்கறையின்றி இருப்பது முக்கியம். நான் கேட்கும் சில கேள்விகளுக்கு பலரால் பதில் சொல்ல முடிவதில்லை.

    1) இன்றையநிலையில் இலங்கை அரசு யுத்தநிறுத்தம் செய்வதை விட மக்களை விட்டுவிட்டு புலிகள் மறைவது மிக இலகுவானது. பாதிப்பும் உயிர் இழப்புகளும் எம்பக்கம் இருக்கும் போது எம்மக்களைக் காக்க வெளிநாட்டுத் தமிழார்கள் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்கலாமே ஏன் செய்யவில்லை? பயமா? திராணியில்லையா?

    2) காசுகாசாய் கொட்டிக் கொடுத்தீர்களே அவை எங்கே போயின? கேட்க முடியுமா உங்களால்? புலிகளால்தான் கணக்குக்காட்ட முடியுமா?

    3) பாடசாலைகளை விட்டுப் 13வயதுக் குழந்தைகளைக் கூடப்பிடித்துச் சென்று கட்டாய இராணுப்பயிற்சி கொடுத்துக் கொலைக்களத்துக்கு அனுப்பும் புலிகள் தலைவன் தன்பிள்ளைகளை வெளிநாட்டில் மிகவசதியான வீடுகளில் வைத்துப் படிப்பித்தார். இவரது பிள்ளைகள் மட்டும் தான்பிள்ளைகள் மற்றவர்களின் பிள்ளைகள் எல்லாம் தொல்லையா?

    4) வெளிநாடுகளில் கொடிபிடிப்பவர்களே உங்களது 13வயதுப்பாலகனை புலிக்குத் தாரைவார்த்துவிட்டு வந்து கொடிபிடியுங்கள் நானும் உங்களுடன் வருகிறேன் தயாரா?

    5) இலங்கையரசை போரை நிறுத்துமாறு நோர்வேயை வற்புறுத்துபவர்களே. இலங்கைத் து}தரகத்தை பலவந்தமாக அடித்துடைத்துவிட்டு நோர்வேயில் பழிகளைப்போட்டுவிட்டு இருக்கிறீர்கள். நோர்வே இனி எந்த முகத்துடன் இலங்கை அரசுடன் கதைக்க முடியும்? ஒருநிமிடம் சிந்திப்பீர்களா? இதன் பின்னணியில் புலிகள் உள்ளார்கள் என்பதை யாராலும் மறுக்க இயலாது

    6) தமிழீழம் வேண்டாம் ஐக்கிய இலங்கை போதும் என்றுதானே புலிகள் பேச்சுவார்த்தைக்கு வந்தீர்கள். சில கிழமைக்கு முன்பாகவும் நடேசன் மூலம் உலகுக்கு அறிவித்தீர்கள். திம்புப்பேச்சு வாத்தையில் அன்று புலிகளால் மறுக்கப்பட்ட முடிவை எத்தனையோ வருடங்கள் கழித்து> பல உயிர்களைக் காவுகொடுத்த பின்பு ஏற்றுக் கொண்வதாக அறிவித்தார்கள். அதாவது ஐக்கிய இலங்கை போது என்று வெளிப்படையாக புலிகள் அறிவித்தபின்பும் வெளிநாட்டு தமிழர்கள் ஊர்வலங்களில் கத்துகிறார்கள்we want Tamil Eelam. அப்படியாயின் நீங்கள் புலிகளை எதிர்க்கிறீர்களா? ஏன் இரண்டு நாக்குகளால் கதைக்கிறீர்கள்.

    7) அரசாங்கம் இனவழிப்பைச் செய்வதற்காக தமிழ்மக்களைக் கொல்கிறார்கள் என்று உரக்கத் கத்துபவர்கள் உங்கள் நெஞ்சைத் தொட்டுக் கேளுங்கள். புலிகள் எத்தனையாயிரம் தமிழ்மக்களை கொன்று குவித்தார்கள் இதை என்ன வென்று சொல்லது. இதையும் இனவழிப்பு என்று ஏன் கூறத் தயங்குகிறீர்கள். அன்று சகோதரப் படுகொலைகளுக்கெதிராக மக்கள் கிளர்ந்து எழுத்திருந்தாம் தமிழ் மக்களுக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்காது. புலிகளும் திருந்தியிருப்பார்கள். மக்களின் கருத்துக்கள் காது கொடுக்கப்பட்டிருக்கும்

    8)புலிகளை எப்படி மக்களின் பிரதிநிதிகள் என்று எப்படிக் கூறமுடியும். எந்தத் தேர்தலில் நின்று மக்களின் ஆணையைப் பெற்றார்கள். மக்கள் ஆணைபெற்ற அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் போன்றோரைக் கொன்றார்கள். மக்களின் ஆணையைக் கொன்றவர்களை எப்படி மக்களின் பிரதிநிதி என்று கூற முடியும்.

    9) விடுதலைக்காகப் போராடுகிறோம்> மக்களைக்களைக் காக்கிறோம் என்று மக்களை ஏமாற்றியது போதும். மக்களைக் காப்பவர்கள் என்றால் யாழ்பாணத்தில் என்ன நடந்தது? கடசி நிமிடம் மட்டும் காசும் பவுணும் விடுதலையின் போரால் வெருட்டி வாங்கிக்கொண்டு தமக்குப் பாதுகாப்பாக யாழ்மக்களை அழைத்துச்சென்று சாவகச்சேரி> கொடிகாமம்> வன்னியெங்கும் நடுரோட்டில் விட்டுவிட்டு கொட்டிலுக்குக் காசு> கோவணத்துக்குக்காசு என்று தட்டிப் பறித்தார்கள். இல்லை என்று யாராலும் சொல்ல முடியுமா? இப்படிப்பட்ட புலிகள் மேல் பக்திவாதம் வைத்திருக்கும் மக்கள் உணராதவரை தமிழர்களுக்கு அழிவுதான். அன்று யாழ்பாணத்தில் இருந்து அழைத்தும் இழுத்தும் கொண்டுவரப்பட்ட மக்கள் இன்னும் தம் சொந்த இடத்துக்குப் போகாமல் புலிகளுக்குக் கவசாமாக்கப்பட்டு புதுமாத்தளன் வரையும் வந்து சாவுக்காகக் காத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட புலிகளா இரட்சகர்கள்?
    உண்மையை எழுதினால் புலி எதிர்பாளர் என்பீர்கள். உங்களின் புலி மயக்கம் தெளியும்போது அங்கே மக்கள் இருக்கமாட்டார்கள். எலும்புக்கூடுகள் மட்டுமே மீர்ந்திருக்கும்.

    9) புலிகள் ஆயுதத்தில் மட்டும் நம்பிக்கை கொண்ட மனநோயாளர்கள் என்பதை இன்று உணரவில்லை என்றால் என்று தான் உணரப்போகிறீர்களோ? இந்தப்புலிகளின் ஆயுத மனநோய்க்கு எதிராக அன்று தமிழ்மக்கள் கொடி பிடித்திருந்தால் சிலவேளை புலிகள் தம்மைத் திருத்தியிருக்கலாம். இன்றும் கூட ஒரு புலித்தலைவனுக்காக ஒரு இனமே அழிகிறது. தலைவனே நீ என்ன செய்தாய் சொல்லு? அன்றில் இருந்து உனக்காக அழிந்த அழிந்து கொண்டிருக்கும் மக்களுக்காக என்ன செய்தாய்? அவர்களின வெளிநாட்டுப் பணத்தில்> வரிப்பணத்தில் உன்பிள்ளைகளுக்கு சொகுசு வாழ்க்கை கொடுத்தாய். உன்மகளை ரேசாப்பூவுடன் ரோசாவாகவே பார்த்தோம். உனக்கு இன்றும் கவசமாக இருக்கும் மக்களை என்றாவது எண்ணிப் பார்த்தாயா? உனது பிள்ளைகள் போர்சூழலில் வாழ்ந்த பிள்ளைகள் போன்றா இருக்கிறார்கள்?

    10) இன்று புலிகள் விட்டுவிட்டுப் போனால் என்ன நடக்கும் சிங்களவன் தின்றுவிடுவான் என்கிறீகளே. இந்தப்புலிகளும் தலைமைகளும் மக்களிடையே இருந்துதான் புறப்பட்டன. புலிகள் ஒரு தமிழர்களுக்கு ஆரோக்கியமான அமைப்பு இல்லை எனும் பொழுது அது அழிக்கப்படுவதில் பாவம் எதுவும் கிடையாது. இன்னும் மக்களை மனதில் கொண்டு போராடக்கூடிய சக்திகளும் வலுக்களும் மக்களிடையே எழுந்து வரும் என்பது திண்ணம். இல்லை புலிகள் தான் வேண்டும் என்றால் தமிழ்மக்களுக்கு சாவதான் பதில். ஒன்று சிங்களவனிடம் இருந்து இன்றேல் புலிகளிடம் இருந்து.

    11) டக்கிலஸ்> கருணா> பிள்ளையான்> சித்தாத்தன்> சங்கரி போன்றவர்களை மதித்தது கிடையாது. துரோகி என்று நான் யாரையும் கூறவிரும்பவில்லை. அப்படிக் கூறினேனாயின் புலிகளும் தமிழ் துரோகிகளே. உண்மையான மக்களையும் விடுதலையையும் நேசிக்கும் சரியான தலைவன் எம்மிடையே உருவாகவில்லை என்பது தான் உண்மை. அதுவரை தமிழ்மக்கள் சகிப்புடன் இருப்பதைத்தவிர வேறுவழியில்லை.

    12) இதை எழுதுவதற்காக சிங்கள பெளத்த பேரினவாதத்துக்கு பணியவோ அல்லது துணைபோகவோ போவதில்லை. நல்ல தலைமையை உருகாக்க தமிழ்மக்கள் இன்றும் அடைகாக்க வேண்டியே இருக்கிறது. புலிகளின் வளர்ச்சி புற்றுநோய் போன்று ஆகியபின் சரியான தலைமையையும்> தெளிவையும் மக்கள் பெற்றிருந்தால் இந்தப் பாவப்பட்ட மக்களை மனதில் சுமக்கும் தலைவன் மக்கள் இடையே இருந்து உருவாக்கப்படுவான். ஒரினம் அழியும் போது சுரப்புக்கள் புத்துயிர் பெற்று தம்மினத்தைக் காப்பதுபோல் புத்துயிர்ப்பு என்பது ஒவ்வொரு ஜீவராசிகளிலும் உள்ளது. இப்போதுதான் தமிழ்மக்கள் விழிப்புடன் இருப்பது முக்கியம். போலித்தலைமைகள் உங்கள் இக்கட்டான நிலையை புலிகள் போன்று பயன்படுத்தி தலைமைவகிக்க முயலும். உங்கள் தலைவிதியை நீங்கள் தீர்மானிப்பதால் உங்கள் தலைவனையும் நீங்களே தீர்மானிங்கள். புலித்தலைமை பிழைத்து விட்டது என்பதற்காக தீர்மானிக்கும் சக்தியை இழந்து விடாதீர்கள். மக்களே! உங்களால் புலிகளை மக்களுக்கான நல்ல தலைமையாக உருவாக்க முடியவில்லை. குறைந்தபட்சம் அவர்களை அழித்து உங்களியையே உள்ள உண்மையான நேர்மையான இராஜதந்திரமும் புத்திசாலித்திறனும் கொண்ட தலைமையை உருவாக்குங்கள். சோர்ந்து விடாதீர்கள். உங்களது எதிர்கால வாழ்வுக்கு புலிகளின் வாழ்வும் ஒரு பாடமாக அமையும். சொந்த மக்களையே சுட்டுத் தள்ளுபவர்களும்> பலாத்காரத்தை தம்மக்கள் மேல் பயன்படுத்துபவர்களும் என்றும் நல்ல தலைமையில் இருக்கத் தகுதியற்றவர்கள் என்பதை அறிக

    Reply
  • மாயா
    மாயா

    John னின் கேள்விகளுக்கு எவராலும் பதில் சொல்ல முடியாது. நாம் அனைவரும் குற்றமிழைத்தவர்களே? சிங்களச் சட்டத்தை எதிர்த்தவர்கள்(கூட்டணியினர்), எம் மக்களுக்கு சிங்களம் படிக்க வேண்டாம் என்று சொன்னவர்கள் சிங்களம் படித்து சிங்களத்தில் அனைவரோடு கதைக்கிறார்கள் தன் தேவைகளை செய்து தம்மை முன்னேற்றிக் கொள்கிறார்கள்.

    தமிழ் தமிழ் என கோஸம் போட்டு தமிழ் வெறியை எம்முள் உருவாக்கிவிட்டு தமிழ் தலைவர்கள் தன் பிள்ளைகளை வெளிநாடு அனுப்பி ஆங்கிலக் கல்வியறிவை கொடுத்து அந்நாடுகளில் வாழ வைத்திருக்கிறார்கள்.தலைவர் பிரபாகரன் உட்பட.

    நாம் : நமது குழந்தைகள் அவர்கள் சொல்வதை தேவ வாக்காக கருதி அதே இடத்தில் இருந்து சிங்களவனை எதிர்த்து கல்லறைகளில் மாவீரர்களாகிப் போனோம்.( கல்லறையையும் சிங்களம் கலைத்துவிட்டது?) அல்லது துரோகிகளாகிப் போனோம். தலைவர்களது குழந்தைச் செல்வங்கள் உலக மொழி வல்லுனர்களாக…….நம் குழந்தைகளோ நம் நாட்டிலுள்ள சகோதர சிங்களவனோடு கதைக்க ஒரு அரைகுறை மொழி பெயர்ப்பாளர் உததவியை நாடுகிறோம். அவனோ சிங்களவன் பெயர் சொல்லி எம்மிடையே கறக்கிறான். அந்த தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் பணம் கறக்க நாம் சிங்களவன் மேல் கோபம் கொள்கிறோம்.ஏன்? நமக்கு அவன் சொல்வது விளங்கவில்லை? நாமும் அந்த மொழியை படித்திருந்தால் இவர்களது தமிழரது சுத்துமாத்துகள் தெரிந்திருக்கும்?

    உலகமெல்லாம் பரவிய தமிழன் உலக மொழி கற்றுள்ளான். அவனுக்கு உலக மொழிகள் எதிர்ப்பு மொழியாகவோ , அந்த நாடுகள் நம்மை சுறையாடி இந்நிலைக்கு தள்ளிய நாடுகளாகவோ தெரியவில்லை. இலங்கையில் வாழும் நாமோ நம் நாட்டிலிருக்கும் சகோதர மொழியை கற்க முடியவில்லை. அதை தடுத்ததால் நாம் பிளவுபட்டு போனோம்.

    சிங்களவர்கள் தமிழ் கற்கிறார்கள். ஜனாதிபதி உட்பட……..உலகத் தமிழர்கள் எவரும் உலக மேடைகளில் தமிழ் பேசாத போது , சிங்களத் தமிழன் தமிழில் பேசுகிறான். தன் நாட்டின் இரு மொழிகள் அவை என்பதை ஏற்றுக் கொள்வதால்தானே?

    பாமரத் தமிழன் சிங்களம் படிப்பது : சிங்களத்தில் கதைப்பது துரோகம். ஆனால் பாராளுமன்றம் சென்றவர்கள் சிங்களத்தில் கதைப்பது நியாயம். விடுதலைப்புலிகள் சிங்களத்தில் ரேடியோ செய்தால் அதுவும் நியாயம்? அவங்கள் எது செய்தாலும் ஞாயம் இருக்கும். அடுத்தவன் செய்தால்?

    “கிளிநொச்சிக்கும் நான்தான் ஜனாதிபதி , அதனால் வன்னியை முன்னேற்றுவேன் என்கிறார் மகிந்த. அவரை நம்பலாம். கடந்த வாரம் மட்டக்களப்பு சென்று வந்தேன். நான் கல்விகற்றது மட்டக்களப்பில் என்பதால் நான் அடிக்கடி அங்கு போய் வருவதுண்டு. மட்டக்களப்பு கடந்த 6 மாதங்களுக்குள் மிகப் பெரும் மாற்றத்தை கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் திருட்டுக் கூட்டம் (பா.உ)தமிழர் பகுதிகளை முன்னேற்ற எதுவும் செய்யவில்லை. தம்மை வளர்த்துக் கொண்டு எம்மை அடிமைகளாகவே வைத்திருத்தமை எமக்கு இதைப் பார்த்தாவது விளங்க வேண்டும். அது பிள்ளையான் : கிஸ்புல்லா : கருணா : ஜனாதிபதி எவர் மூலம் நடந்திருந்தாலும் பரவாயில்லை. மாற்றங்கள் கண்ணுக்கு தெரிகின்றன. யாழிலும் டக்ளஸால் மாற்றங்கள். அதனால்தான சனம் சத்தமில்லாமல் இருக்குது? உலக தமிழர்கள் புலி கோஸத்தோட வீதியெல்லாம் போராட்டம்.யாழ் – மட்டக்களப்பு – மன்னார் – திருகோணமலை மற்றும் கொழும்பு தமிழர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில்? ஏன்? அவன் பக்கத்திலிருந்து பார்க்கிறான். இவன் புலி ஊடகங்களை நம்பி வீதியில் கத்துகிறான்.

    அது வன்னி மக்களது மனங்களையும் நாளை மாற்றும். காரணம் மகிந்தவின் பேச்சு செயல் வடிவமாகும். பிஸ்கட்டும் தேத்தண்ணியும் குடுக்கச் சொன்ன சங்கரி போன்றவர்கள் தன் பிசூனித் தனக் கதையால் தமிழரையே இழிவுக்கும் தலைகுனிவுக்கும் ஆளாக்கியிருப்பதையே கொண்ஸ்டைனின் கட்டுரை சொன்னது.இப்படியான அரசியல்வாதிகள் சிங்களவனிடம் அங்கே திரைமறைவில் கேட்டது தமிழர்களுக்கு இப்படியான தேவைகளைத்தான். ஆனால் பத்திரிகைகளில் தமிழில் வெட்டிப் புடுங்கினாதாகவும் சிங்களம் தருவதில்லை என்று எங்களுக்கு சொன்னான். நாமும் நம்பினோம். சிங்களமும் இந்த பா.ஊக்கள் சொல்வதை நம்பியது. ஏன்? பாமர தமிழனுக்கு சிங்களம் தெரியவில்லை. அனைத்து சிங்களவர்களுக்கும் தமிழ் தெரியவில்லை. மாயானமாக நாட்டை வைத்துக் கொண்டு தமிழ் தலைவர்கள் அனைவரும் பிடுங்கியே திண்டுள்ளனர்.

    இல்லையென்றால் யாழ்பாணத்தை முன்னேற்ற முயற்சித்த துரையப்பாவை கூட்டணி கொல்ல துப்பாக்கி வாங்கி பொடிகளுக்கு குடுத்திருக்காது? அதே துப்பாக்கி அவர்களுக்கே வினையானது “வாளெடுத்தவன் வாளால் சாவான்” நியதி.
    அதையே தலைவரும் அவரது வால்களும் அனுபவிக்க ஆரம்பித்திருக்கின்றன. இன்னும் புலி வாலைப் பிடித்தவர்கள் அதைவிட்டு கொஞ்சம் கண் விழிக்கலாமே?

    அதிக காலமில்லை. விடிவு அனைவர் கண்களுக்கும் தெரியும்.
    உண்மையிலேயே சரியான நேரத்தில் இலங்கை நாட்டின் மாற்றத்தைக் கருத்தில் கொண்டு மகிந்தவை புலிகள் தேர்வு செய்து நமக்கு கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் செய்த ஒரே ஒரு தொலைநோக்கு பார்வையோடு கூடிய நல்ல காரியம் இது. அத்தனை கெடுதல்களிலும் ஒரு நல்ல காரியம் பண்ணியுள்ளார்கள். அதற்காக புலிகளுக்கு தமிழர்கள் முதற்கண் நன்றி சொல்லவே வேண்டும்.

    அதேபோல உலகமெல்லாம் கோஸம் போடும் புலி வால்கள் தமிழர் பிரச்சனையை காலம் தாழ்த்திக் கத்துவதால் கெடுதல் இல்லை. அதுவும் புலிகள் செய்யும் தீர்க்க தரிசனமான காரியம்தான். தமிழர்களுக்கு பிரச்சனை ஒன்று அங்கு உண்டு என்பதை முழு உலகமும் ஏற்றுக் கொண்டுவிட்டன. ஆனால் அதன் தீர்வை புலிகள் கைகளில் கொடுக்கக் கூடாது என்பதையும் தீர்மானித்துவிட்டன.

    எனவே மகிந்த புலிகளை அழித்து தமக்கு நெருக்கமான தமிழர் தரப்புகள் வழி தனது பெயர் நிலைக்க முழு சிறீலங்காவையும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வார். அது அவரது குடும்ப அரசியலை வளர்க்க வழிசெய்யும். சோநாயக்க – பண்டா குடும்பம் போல ராஜபக்ஸ குடும்ப அரசியல் ஒன்று நிலைக்க அது தேவை. எனவே அனைவருக்கும் உரிமையோடு கூடிய தேசத்தை அவர் உருவாக்குவது உறுதி.

    அவரை போட்டுத் தள்ளினால் என்று பலர் யோசிக்கலாம்? அவரது முழுக்குடும்பமே இப்போது அரசியல் ஓட்டத்தில். அதிகமானால் கோட்டாபய இராணுவ ஆட்சியை பிரகனப்படுத்துவார்? அவ்வளவுதான்.

    நடந்ததும் நல்லதுக்கே. நடப்பதும்……..நடக்கவிருப்பதும் நல்லதுக்கே.
    பகவத்கீதைய ஒருக்கா வாசிக்கலாமா?

    Reply
  • palli
    palli

    அன்று கழகத்தினர் என நினைக்கிறேன் இப்படி பாடினார்கள்.
    விடுதலைதான் மூச்சென்ற கூட்டம் இன்று வெளிட்டில் உல்லாச ஆட்டம்.
    அதுக்கு பல்லிக்கு அன்று அர்த்தம் புரியவில்லை. ஆனால் இன்று புலம்பெயர் நாடுகளில் மாணவ சமுதாயத்தையும் புலிகொடி கொடுத்து சதிராட விட்டதை பார்க்கும்போது அந்த வரிகளே பல்லிக்கு நினைவில் வருகிறது.நேற்று மிக சிறந்த ஒரு ஊடகவியாளன்(முன்னாள் போராளி கூட) ஒரு பதினெட்டு வயது பெண்ணிடம் பேட்டி எடுக்கிறார்(சோப்பு விளம்பரம் போல்) இன்றய நாட்டு நிலை பற்றி நீங்கள் என்ன சொல்ல ஆசைபடுகிறீர்கள். அதுக்கு அந்த பெண் மேக்கப் சாதனங்கள் வேண்டி தரும்படி தாயிடம் கேட்ப்பது(வீடியோவில் அப்படிதான் தெரிந்தார்) லண்டன் அரசு உடனடியாக தேசிய தலைக்கு ஈழத்தை வேண்டி தர வேண்டும். இல்லாது போனால் அண்ணன் பரமேஸ்வரன் உண்ணா நோன்பை கைவிட முடியாது என.
    மனைவியின் தாலியை வைத்து சூதாடிய காலம் போய் சிலரது உயிரை வைத்து அனாகரிகமான அரசியல் செய்வது இன்று எம் கண்முன்னே. இதில் பல்லியின் கவலை இப்படியான ஒரு தவறான செயலுக்கு அனுபவம் வாய்ந்த ஊடகவியாளன் கூட(பல்லியின் நண்பரும் கூட)துணை போவது வலிக்கிறது.நேற்று நடந்த ஒரு ஒன்றுகூடலை பற்றி இருவர் பேசும்போது இன்று நல்ல சாப்பாடு தண்ணி வசதி செய்தார்கள். மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனரென.
    நால்வர் சாக (சாப்பாடு இல்லாமல்) இருக்கும் போது இப்படியான செயல் பாடுகள் தவிர்க்க வேண்டாமா??இதில் என்னும் ஒருபடி மேலேபோய் நிகழ்வை நடத்திய சிறுசுகள் சாப்பாடு கொண்டந்தவர்களின் பெயர் விபரம் தொல்லைபேசி எண் அனைத்தையும் பெற்று கொண்டனர் ஏன் என கேட்டதுக்கு சில வேளை குழப்பவாதிகள் விஸம் கலந்து கொடுத்து விட்டால் என்ன செய்வது அதனால் ஒரு முன் எச்செரிக்கைதானாம். இதுவரை தமிழரை விஸம் கொடுத்து கொன்ற ஒரே அமைப்பு புலிகள்தான் என்பதை தெரியாத குழந்தைகள்.இதுவரை நாலு ரூபாவுக்கு விற்க்கபட்ட புழிகொடி நேற்று பத்து ரூபாவாக மாற்ற பட்டது.சில வேளை இதுதான் போராட்டத்தின் முன்னேற்றமோ தெரியவில்லை.பல்லியால் உறுதியாக சொல்ல முடியும் அங்கும் சரி இங்கும் சரி இழய சமூகத்தை அழிப்பதில் புலிகளுக்கு நிகர் புலம் பெயர் புண்ணாக்குகளே.

    Reply