பிரபாகரன் பயன்படுத்திய வீட்டில் ஜனாதிபதி மஹிந்த

mahinda000.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கிளிநொச்சிக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். 30 வருடங்களுக்குப் பின்னர் நாட்டின் தலைவர் ஒருவர் கிளிநொச்சிக்கு விஜயம் செய்தமை இதுவே முதல் தடவையாகும். இன்று காலை 6.00 மணிக்கு முதலில் கிளிநொச்சி வைத்தியசாலைக்குச் சென்ற ஜனாதிபதி அங்கு சிகிச்சை பெற்று வரும் படை வீரர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

படையினரின் சேமநலன்கள் பற்றிக் கேட்டறிந்துகொண்ட ஜனாதிபதி அவர்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். படை வீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து புத்தாண்டு விருந்து நிகழ்ச்சியிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

பின்னர் கிளிநொச்சியிலுள்ள சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, கிளிநொச்சியின் தற்போதைய நிலைமைகள் மற்றும் படை வீரர்களின் முன்னேற்ற விபரங்கள் என்பன தொடர்பாகவும் அறிந்துகொண்டார். எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகளிடமிருந்து படையினரால் அண்மையில் கைப்பற்றப்பட்ட விமான எதிர்ப்பு ஏவுகனைகள் மற்றும் யுத்த தாங்கிகள் உட்பட ஏனைய ஆயுதங்களையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

கிளிநொச்சியில் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய வீடு,  அலுவலகம் மற்றும் புலிகளின் சமாதான செயலகம் ஆகியவற்றையும் ஜனாதிபதி நேரில் சென்று பார்வையிட்டார். வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு புலிகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கட்டிடங்கள் மற்றும் மாநாட்டு மண்டபங்கள் என்பவற்றுக்கும் ஜனாதிபதி விஜயம் செய்தார்.

பின்னர் படை வீரர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி,  பாதுகாப்புப் படையினரின் அர்ப்பணிப்பு மற்றும் திடசங்கற்பம் மிக்க சேவைக்காக அவர்களுக்கு தேசத்தின் கௌரவம் உரித்தாகட்டும் எனப் பாராட்டுத் தெரிவித்தார். பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் புலிகளிடம் சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக மீட்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி இங்கு கோரிக்கை விடுத்தார்.

ஜனாதிபதியின் இவ்விஜயத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 Comments

  • chandran.raja
    chandran.raja

    அவர் நினைத்தாரா? இது நடக்குமென்று. ஆனால் நாம் நினைத்தோம் ஆரூடமும் கூறினோம். டக்கிளஸ்சும் மகிந்தாவும் வன்னிக்கு விஜயம் செய்வார்கள் என்று. அப்போது அவர்கள் சொந்தங்களை இழந்தவர்களுக்கும் பிள்ளைகளை இழந்த தாய் தகப்பன்மார்களுக்கும் அவர்களால் என்ன செய்யமுடியும் என்று.
    வன்னி புயல் வீச்சுக்கு அகப்பட்டு சிதறி சின்னா பின்னப்படுத்தப் பட்டிருக்கிறது. வன்னியை சுற்றியுள்ள கிராமங்களில் மனிதகுடியிருப்பே இல்லையெனலாம். நிர்வாகம் எல்லாம் உருக்குலைந்த நிலை. இது திரும்பவும் சீர்செய்யப்படும். உழைப்பாளிகளான கிளிநொச்சி மக்களையும் கிளிநொச்சி சந்தையும் 90-95 காலப்பகுதியை விட கூடுதலாகவே எதிர்பார்கலாம். அமைதியையும் தான். டக்கிளஸ்சையும் மகிந்தா ராஜபக்சாவையும் நம்பாமல் நன்றி சொல்லாமல் வேறு யாருக்கு நாம் நன்றி சொல்வது?.

    Reply
  • palli
    palli

    இதில் வில்லன் யார்??
    நாயகன் யார்??

    Reply
  • யாழ் மோகன்
    யாழ் மோகன்

    என்னத்தை சொல்ல நிலவும், இருட்டும் மாறி மாறி வரும் என்ற பழமொழி இதற்கு பொருந்தும்

    Reply
  • thurai
    thurai

    எஙகள் தமிழீழத்தலைவர் கூட இப்படி துணிவாக கிளிநொச்சியில் கால்வைத்து நடந்ததாக சரித்திரம் இல்லை. ஆனால் தன்னைக் காக்க உயிர்கொடுத்த மாவீரர்களிற்காக வருடம் ஓர்முறை பாதுகாப்புடன் பேச வந்திருப்பார் பாவ்ம்.

    எ 9 இல் புலத்திலிருந்து புலிக்கு பணம் கொடுக்காமல் போனவர்களை புலிக்குக் காட்டிக் கொடுத்துதவிய, புலத்தில் கொமிசனிற்கு பணம் பிடுங்கிய புலிகள், இனி நிர்வாண ஓட்டம்தான் ஓடிப் பணம் சேர்க்க வேண்டும்.

    துரை

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பல்லில்லாத சீப்புகளுக்கு இருவருமே வில்லன் பாத்திரங்கள் தான்.

    Reply
  • மாயா
    மாயா

    முன்னர் அரசாங்கத்திடம் எடுத்துத்தான்
    புலிகள் அடிக்கிறதா சொன்னாங்க. அது பொய்.
    ஆனால் புலிகள் கட்டியதை அரசு பாவிக்கிறது. இது மெய்.

    கோட்டாபயதான் எல்லாத்துக்கும் நாயகன்.

    Reply
  • Thirumalai vasan
    Thirumalai vasan

    இனியென்ன? சுதந்திரம் கிடைச்சுட்டுதெண்டு ஆடு வெட்டிக் கொண்டாட வேண்டியது தானே? தனக்கு மூக்குப்போனாலென்ன எதிரிக்கு (புலிக்கு) சகுனப்பிழையானால் சரிதானே?

    Reply
  • palli
    palli

    ஆடு வெட்டி கொண்டாடுவது சகசம்தானே. ஆனால் மனிதரை வெட்டி கொண்டாடிய (புலிகள்)போது தங்கள் பங்கு என்ன?? சோடாவும் பிஸ்கற்றும் வேண்டி கொடுத்ததா??
    பல்லு சூத்தையெனில் அதை எடுத்து விடனும். அதை விட்டுவிட்டு இந்த நாக்கு முக்கா நாக்கு முக்கா என தாங்கள் கர்ச்சிப்பது எமக்கு புதிதா என்ன.

    Reply
  • palli
    palli

    சந்திரன் அப்படியாயின் பல்லுள்ள சீப்புகளுக்கு இருவருமே நாயகர்களா??

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    திருமலைவாசன்; மக்களுக்கு சுதந்திரம் கிடைத்ததோ இல்லையோ என்பதை அந்த வன்னி மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த மக்களில் பலர் சொன்ன சேதி “புலிகளின் கெடுபிடிகளிலிருந்து தப்பி நிம்மதியாக இருக்க முடிகின்றது” என்பது. இது கூட ஒருவகை சுதந்திரம் தான்.

    Reply