தமிழ் பிள்ளைகளின் கழுத்தில் சயனைட்; பிரபாகரனின் பிள்ளைகளுக்கு லண்டனில் சொகுசு வாழ்க்கை – அமைச்சர் ஹேமகுமார

hemakumara.jpgஅப்பாவி தமிழ் பிள்ளைகளின் கழுத்தில் சயனைட் வில்லைகளை அணிவிக்கும் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமது பிள்ளைகளுக்கு லண்டனில் சொகுசு வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் என்று அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைகள் விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டம், நாட்டைக் கட்டியெழுப்புதல், வரி திருத்தச் சட்டம், உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழான பிரேரணை, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் ஆகியவற்றின் மீதான பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது, தமது இனத்தையே கொன்று உண்டு வாழுபவர் தான் பிரபாகரன். அப்பாவி தமிழ் மக்களையே துன்பப்படுத்தி மகிழுகின்ற பிரபாகரன் அவரது மகனையும், மகளையும் லண்டனிலுள்ள சொகுசு பாடசாலைகளில் படிக்க வைத்துள்ளார். ஆனால் அவர் உருவாக்கிய படைகளுக்கு அப்பாவி தமிழ் பிள்ளைகள் பலவந்தமாக சேர்க்கப்பட்டனர். அப்பிள்ளைகளின் கழுத்தில் சயனைட் வில்லைகளை அணிவிக்கின்றனர்.

புலிகளின் பிடியிலுள்ள அப்பாவி மக்களை விடுவிக்கவென எமது பாதுகாப்பு படையினர் புலிகள் அமைந்திருந்த அணையை உடைத்தனர். மக்கள் வெள்ளம் போல வந்தனர். அந்த அப்பாவி மக்களைக் கூட புலி தற்கொலைதாரிகள் குண்டுகளை வெடிக்கச் செய்து கொன்று குவித்தனர், காயப்படுத்தினர்.

இவ்வாறு குரூரமான பயங்கரவாதிகளுக்குத் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், எம்.பி. என். ஸ்ரீகாந்தா போன்றோரும் ஆதரவு நல்குகின்றனர். எம்.பி என். ஸ்ரீகாந்தா புலிகளின் உளவாளியாவார். இவர் 1994ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மறைந்த காமினி திஸாநாயக்கவின் அல்பிரட் ஹவுஸ் இல்லத்திற்கு வந்து போனார். அதன் பின்னரே மறைந்த காமினி திஸாநாயக்க படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் ஸ்ரீகாந்தா புலிகளிடம் சென்றிருந்தார்.

Show More
Leave a Reply to மாயா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • மாயா
    மாயா

    அதை இணையத்தில் காட்டிய போது
    2அது பிரபாகரனின் மகளில்லை.அது ஒரு சிங்களத்தியின் படம். பார்க்கத் தெரியயில்லையே?” என்று ஒரு புலம் என்னிடம் சொன்னது.

    உண்மையா? இல்லையா என்று கேட்க வேண்டியவரிடம்தான் கேட்டு சொல்ல வேண்டும். இல்லையென்றால் மாவீரர் உரை வரையில்ல காத்திருக்க வேணும். உலகமே எதிர்பார்த்த பேச்சு அடுத்த முறை பழைய டேப்தானோ?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஒரு சிங்கள அமைச்சருக்குப் புரிந்த இந்த உண்மை, புலம்பெயர்ந்த புலிவால் பிடிபவர்களுக்கு இன்னும் புரியவில்லையென்பதே தமிழினத்தின் சாபக்கேடு.

    Reply