பிரான்ஸ் பிரிட்டனுடன் இணைந்து இலங்கைக்கு நிவாரண உதவிகளை வழங்கும் திட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரிட்டனுடன் இணைந்து கூட்டாக நிவாரண உதவிகளை வழங்கும் நடவடிக்கை ஒன்றை ஆரம்பிக்க முயற்சித்து வருவதாக பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னர் தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் தொடர்பாக பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட்டுடன் கலந்துரையாட இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.