அமைச்சர் முரளிதரன் சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவராக நியமனம்

karuna_amman.jpgதேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று கட்சியின் செயற்குழுக் கூட்டம் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடை பெற்ற போது விநாயகமூர்த்தி முரளிதரனை உப தலைவர்களில் ஒருவராக நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.கட்சி யாப்பின்படி 5 உப தலைவர்களில் ஒருவராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • chandran.raja
    chandran.raja

    அவர் எங்கிருகிறார் என்பதல்ல கேள்வி. அவர் அங்கிருந்து என்ன செய்கிறார் என்பதே நாம் தேடவேண்டிய விடை.அந்தக்கட்சியில் இருந்தால் இந்த இனத்திற்கு கேடு. இந்தக்கட்சியில் இருந்தால் அந்த இனத்திற்கு கேடு என எங்கும் எழுதி வைக்கப்படவில்லை. இனப்பெருமை இனத்திற்கு ஒருகட்சி என பெருமை பேசியே கெட்டுப்போன இனங்களில் தமிழ்இனமும் ஒன்று.

    Reply
  • accu
    accu

    திரு. விநாயகமூர்த்தி முரளீதரன் அவர்களே, அவனவன் சின்னச்சின்ன விசயங்களை சாதிக்கவே பிரயத்தனம் படும்போது நீங்கள் சுலபமாக பெரிய விசயங்களை சாதிக்கிறீர்கள். இதற்க்கான காரணம் ஒன்றும் இரகசியமில்லை. இன்று மகிந்தா அடைந்திருக்கும் வெற்றிக்கு உங்களின் பங்கு மிகப்பெரியதென்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. அதன் நன்றிக்கடன் தான் நீங்கள் சுலபமாக அடையும் இந்தப் பதவிகள். இவையெல்லாம் நீங்கள் கூட எதிர்பார்த்திருப்பீர்களோ தெரியாது? நீங்கள் மகிந்தாவுக்கு மட்டுமல்ல சிங்கள,தமிழ்,முஸ்லிமென ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கே பேருதவி புரிந்துள்ளீர்கள். உங்களை துரோகியென கூறிய பலர் கூட இன்று உங்களின் பழய தலைவரின் உண்மை முகம் கண்டதால் இனி உங்களுக்கு நன்றி சொல்லுவார்கள். ஆனால் உங்களின் கடந்த காலங்கள் நிச்சயமாக பெருமைப்படக்கூடியவை அல்ல. கிழக்கு மக்கள் பலரின் சாபம் உங்களைச் சூழ்ந்துள்ளது. ஆனால் அவை நீங்கள் பிழையான இடத்தில் இருந்தபோதும் அதன் பின் அது தொடர்புபட்டும் ஏற்ப்படுத்திக்கொண்டவை. ஆனால் இப்போ உங்களுக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. உங்கள் பதவி மற்றும் மகிந்தாவின் அனுசரணை இவற்றை பயன்படுத்தி உங்களால் முடிந்தளவு இன,மத பேதமின்றி நீண்ட போரினால் வாழ்க்கையின் கடைநிலைக்கு தள்ளப்பட்ட பாவப்பட்ட மக்களுக்கு சிறிதளவாவது வெளிச்சத்தைக் காட்டுங்கள். ஆயுதங்களின் ஆட்சியை ஒழியுங்கள். மக்களை பயத்தில் இருந்து வெளியெடுங்கள். இவைதான் உங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். உங்கள் பாவங்களை கழுவும்.

    Reply