யேர்மனியில் சீனத் தூதரகம் புலி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது

germany.jpgஇலங்கையில் `யுத்த நிறுத்தம்` கோரி யேர்மனியில் ஆர்ப்பாட்டம் செய்த புலி ஆதரவாளர்கள் சிலர் பேர்லினில் உள்ள சீனத் தூதரகம் மீது இன்று (ஏப். 24) மதியம் தாக்குதல் நடத்தி உள்ளனர். சீன அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறு சீன தூதரகத்தை முற்றுகையிட்ட சுமார் நூற்றுக்கணக்கான ஜேர்மன் வாழ் புலி ஆதரவாளர்கள் தூதரக கட்டிடத்தை நோக்கி சரமாரியான முட்டைகளை எறிந்துள்ளனர்.

மேலும் சிலர் சீன தூதரகத்துக்கு முன்னுள்ள தேசியக் கொடிக் கம்பத்தை முறிக்க முயன்ற வேளை பேர்லின் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். யேர்மன் காவற் துறையினரால் இந்த வன்முறையில் ஈடுபட்ட புலி ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 Comments

  • london boy
    london boy

    தமிழ் இளையோரின் தமிழ் தேசிய எழுச்சியது!!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    புலிக்கும் புலி ஆதரவாளர்களுக்கும் நிறையவே சம்பந்தம் உண்டு. தம்மால் சாதிக்கமுடியாதை இன்னெரு நாட்டைகொண்டு இலங்கையை சிக்கலில்
    மாட்டி குதூகலிக்கவே விரும்புகிறார்கள். இது மகிந்த ராஜபச்சாவில் பலிக்காதது மட்டுமல்ல .உலகநாடுகளும் புலிகளின் நயவஞ்சக புத்தியை பூரணமாக புரிந்துவைத்திருப்பதே எம்மை மகிழ்சிபடுத்தும் செய்தியாகும்.
    பிறந்த நாட்டை தேசத்தையும் காதலிக்காதவனும் அன்பு செலுத்தாவனும் உலகத்தில் யாராவது இருக்க முடியுமா? இதை நாம் புலிகளிடமும் புலிஆதரவாளர்களிடமும் நாம் எதிர்பார்க முடியுமா?.

    Reply
  • mukilvannan
    mukilvannan

    the delight on a commandor face as he opens that extra special message to us.is thing of magic.happy message.

    concentration slip and violence begins not the example for tamil community in germany.we should stop this now.please behave like a man.

    Reply
  • Kanna
    Kanna

    Good luck, all nation (Norway, German, France, UK and now China) will accept our dream land ” Thamil Eelam”.

    Reply
  • thurai
    thurai

    மானமிக்க புலிகளின் ஆதரவாளர்களே, உஙகளில் ஒருவராவது வேலைசெய்யும் சீன ரெஸ்ரோரண்டிற்கு போகாமல் வீட்டில் நிற்பீர்களா? வயித்துப் பிளைப்பிற்கு ஈழத்தமிழன் என்று சொல்லி உலகெல்லாம் அடைக்கலம் கேட்டீரே. இப்போது உலகத்தை அழித்தாவது தலைவரைக்காக்க முயன்றால் அது முடியுமா?

    உங்கள் ஊர்வலம் உங்களிற்குத்தான் புலிகளாகத் தெரிகின்றது. ஆனால் உலகின் கண்களிற்கு நீங்கள் …எலிகள்.

    துரை

    Reply
  • மாயா
    மாயா

    “இன்னம் அடிக்கவே இல்லை. இந்த அடி போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?” என்று கோஸம் போடத் தொடங்கிய போதே நினைச்சேன்.

    அங்கு பிஞ்சுகளின் கழுத்திலே நஞ்சை தொங்கவிட்டார்கள். இங்கே பிஞ்சுகள் நெஞ்சிலே நஞ்சை விதைக்கிறார்கள்.

    Reply
  • murugan
    murugan

    எல்லாம் நன்மைக்கே.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    உந்த இளையோர் தூதுவராலயங்களுக்கு எறியக் கொண்டு போற முட்டையை வாங்கிற காசை அந்த வன்னியிலுள்ள மக்களுக்கு அனுப்பினால் அவை ஒரு நேரக் கஞ்சியாவது குடிக்க உதவுமே?? புத்தி பேதலித்துப் போயிருக்கும் இளையோர் சிந்திப்பார்களா??

    Reply
  • மாயா
    மாயா

    LTTE attack Sri Lanka Embassy in Berlin for the second time
    A group of LTTE supporters attacked the Sri Lankan Embassy in Berlin on Thursday night (Apr 23). According to media reports, the LTTE supporters had thrown two Molotov Cocktails [improvised patrol bombs] to the embassy premises. “They have thrown 2 petrol-bombs to the Embassy premises. Out of the two only one Bomb has exploded; the other one caused minor harm to the building. No one was hurt”, reports said.

    German Police are now investigating the incident. This is the second time the Embassy was attacked within three months.

    Observers say that this attack has again highlighted the hypocrisy of the LTTE sympathisers whose only intension is to protect their asylum status in the Western countries. They point out that the majority of the so-called Tamil Diaspora, who are enjoying asylum status in the Western countries are economic refugees who had successfully mislead the officials of those countries that they had been discriminated in Sri Lanka.

    Reply
  • john
    john

    Pirabaharan native Indian. He is from Palakkadu(before belongs Kerala, now Tamil nadu). many indians are supporting him but…now?

    Reply
  • chandran.raja
    chandran.raja

    புலிகள் உலைவைத்துவிட்டார்கள் புலம்பெயர் தமிழருக்கும்.

    Reply
  • palli
    palli

    பயங்கரவாதத்தின் முதல் வடிவமே வன்முறையான பேச்சு. வன்முறை உயிரற்ற பொருத்களை சூறையாடுவது வன்முறையே. பாரிசில் நடந்த வன்முறை சம்பவத்தை பார்த்த பாரிஸ்நாட்டவர் பல தமிழரிடம்(கூடி வேலை செய்பவர்களிடம்) நீங்கள் (தமிழர்) அகதியாக வந்தநாட்டிலேயே இப்படி வன்முறை செய்கிறீர்களே அப்படியானால் உங்கள்நாட்டில்-(இலங்கையில்) எப்படி அட்டகாசம் செய்திருப்பீர்கள். நினைக்கவே பயமாக உள்ளதென வருத்தபட்டார்களாம். இதுதாண்டா மக்கள் போராட்டம்.

    Reply
  • மாயா
    மாயா

    //john on April 25, 2009 8:22 am Pirabaharan native Indian. He is from Palakkadu(before belongs Kerala, now Tamil nadu). many indians are supporting him but…now?//
    அதனால்தான் மேனனும் , நாரயணனும் அவரைக் காப்பாற்ற மகிந்தவிடம் கேட்கிறார்களோ? …..

    Reply