யாழ். தேவி ரயில் சேவை நடவடிக்கை தலைமையகம் நிறுவ அமைச்சரவை முடிவு

யாழ்தேவி ரயில்சேவைக்கான நடவடிக்கைச் செயலக மொன்றை ஸ்தாபிக்கவும் அதற்கு ஊழியர்களைச் சேர்த் துக்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி யுள்ளது.

போக்குவரத்துத் துறை அமைச்சர் டலஸ் அழகப் பெரும சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அனு மதியளித்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கும் தெற்குக்கும் உறவுப் பாலத்தை ஏற்படுத்தும் வகையில்’வடக்கு நட்பு’ வேலைத் திட்டத்தின் கீழ் யாழ்தேவி ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இத்திட்டத்திற்குப் பங்களிப்புச் செய்யுமுகமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது ஒரு மாத சம்பளத்தை முதலில் வழங்கி நிதியத்தை ஆரம்பித்து வைத்திருப்பதாகவும், அதனை அமைச்சர் அழகப்பெரும தொடர்ந்து வருவதாகவும் அமைச்சர் யாப்பா தெரிவித்தார்.

Show More
Leave a Reply to Rohan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Rohan
    Rohan

    இனி நாம் மதவாச்சியிலும் அனுராதபுரத்திலும் வண்டி ஏறும் எமது சிங்கள சகோதரர்களுக்கு சீற் பிடித்துக் கொண்டு போகலாம். கத்தி வைத்துக் கொண்டு குரும்பை தெம்பிலி விற்கும் அன்பான் உடன்பிறப்புகளிடம் அவற்றை வாங்கி குஷாலாக அருந்தலாம். மிக்க நன்றி, மகிந்த.

    Reply