விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் – அமெரிக்கா

Wanni_War_Bombed_Safe-Zoneஇலங்கையில் மோதலில் ஈடுபட்டுள்ள விடுதலைப்புலிகள் மூன்றாவது தரப்பு ஒன்றிடம் தமது ஆயுதங்களை கையளித்துவிட்டு சரணடைய வேண்டும் என்று கூறியுள்ள அமெரிக்கா, பெரும்பாலான விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு இலங்கை அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இது தொடர்பாக இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் சார்பில் அமெரிக்க அரசுத்துறையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இரு தரப்பும் உடனடியாக மோதலை கைவிட்டு அங்கு மோதல்களில் அகப்பட்டுள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளது.

அத்துடன் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுக்கான மறுவாழ்வுத்திட்டம் மற்றும் இலங்கை பிரச்சினை தீர்வுக்கான அரசியல் பேச்சுவார்த்தைகள் ஆகியவை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை கோருகிறது.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே மற்றும் ஜப்பான் அடங்கலான, இலங்கைக்கு உதவி வழங்கும் கொடையாளிகளின் சந்திப்பு ஒன்று டோக்கியோவில், கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்றதாகவும், அதில், அமெரிக்காவின் சார்பில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணைச் செயலர் ரிச்சர்ட் பௌச்சர் கலந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ள அமெரிக்க அரசுத்துறை, மோதல் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியே வரத்தொடங்கியுள்ளதை இலங்கைக்கு உதவி வழங்குவதற்கான இணைத்தலைமை நாடுகள் வரவேற்றுள்ளதாகவும் கூறியுள்ளது.

மோதல் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கும், அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் ஐ. நா அதிகாரிகளை அனுமதிக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலரின் கோரிக்கையை தாம் ஆதரிப்பதாகவும் அமெரிக்க அறிக்கை கோரியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    அப்ப அமெரிக்கா பின்லாடனுக்கு பொதுமன்னிப்பு வழங்கப் போகுதோ??

    Reply
  • ராஜன்
    ராஜன்

    திரு பார்த்தீபன் தமிழன் பிரச்சனைக்கு ஏன் பின்லாடனை இழுக்கிறீங்கள்?. யாரோ ஒருவர் முன்வந்து மணி கட்டினால் தானே இன்னும் சிக்கியிருக்கிற ஒன்றரை லட்சம் தமிழ் உறவுகளை மீட்கலாம். உங்கள் உறவுகள் வன்னியில் இல்லையா? நீங்கள் அரசின் கொடுமைகளை பார்க்கவில்லையா? ஜெயலலிதாவின் மனமே இரங்கிவிட்டது. நீங்கள் வரட்டுக் கெளரவங்களை விடுத்து மக்களுடைய மனநிலையை புரிந்து கொண்டு கருத்தை சொல்லவும்……

    Reply
  • BC
    BC

    என்னது ஜெயலலிதாவின் மனமே இரங்கிவிட்டாதா? தானும் இலங்கை தமிழர் பிரச்சனையில் பிரச்சனையில் லாபம் அடைய முயற்சிக்கிறார்.தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இலங்கை தமிழர்கள் அமைதியாக வாழ விடமாட்டார்கள் போலிருக்கிறது.

    Reply
  • Rohan
    Rohan

    இது வரையில் ஜெயலலிதாவை நான் அரை சதத்துக்கும் நம்பியதில்லை. ஆனால், இம்முறை அவர் பேச்சு அந்தரங்க சுத்தியானதாகவே எனக்குப் படுகிறது. உணமை தெரியாது இருந்த ஒருவர் அதிர்சசி தரும் தகவலை கேட்ட்வுடன் ஏற்ப்டும் படபடப்புடன் பேசினார் என்றே எனக்குப் பட்டது. ஆனால், தேர்தலின் பின் என்ன செய்வார் என்று அவருக்கே தெரியாது. இனி, றோ போன்ற அமைப்புகளின் அழுத்தம் வேறு இருக்கும். அது சரி, ஜெயலலிதா மாறக் கூடாது என்று டிமாண்ட் பண்ண நாங்கள் யார்?

    Reply
  • msri
    msri

    அமெரிக்காவும் புலிகளின் தடையை நீக்கி> ஓர் முன்னுதாரணம் ஆகலாமே!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //திரு பார்த்தீபன் தமிழன் பிரச்சனைக்கு ஏன் பின்லாடனை இழுக்கிறீங்கள்?. யாரோ ஒருவர் முன்வந்து மணி கட்டினால் தானே இன்னும் சிக்கியிருக்கிற ஒன்றரை லட்சம் தமிழ் உறவுகளை மீட்கலாம். உங்கள் உறவுகள் வன்னியில் இல்லையா? – ராஜன்//

    நீங்கள் உறவினர் வன்னியிலிருந்தால்த் தான் குரல் கொடுப்பீர்களா?? நான் அப்படியல்ல எல்லோரும் எனது சகோதரங்களே?? ஆனால் விடுதலைப்புலிகள் என்றும் சரணடையப் போவதில்லை. அவர்கள் தாம் அழிவதென்றால் தம்முடன் சேர்ந்து மக்களும் அழிய வேண்டுமென்ற பாரிய சிந்தனைகள் கொண்டவர்கள். அமெரிக்கா அடுத்தவருக்கு அறிவுரை கூறுவதற்கு முன்னர் தான் முன்னுதாரணமாக நடந்து காட்டியிருக்க வேண்டும். அதைத் தான் நான் குறிப்பிட்டேன்.

    ஜெயலலிதா, ரவிசங்கர் சாமியார் கொடுத்த ஒளிப்பதிவுகளைப் பார்த்துத்தான் தான் நிலமைகளைப் புரிந்து கொண்டதாக விடும் ரீல்களை சிலர் நம்பி புளங்காகிதம் அடையலாம். அவரது அரசியலைப் புரிந்தவர்களுக்கு இது புலுடா என்று நன்றாகத் தெரியும். பாவம் நம்புபவர்கள் தேர்தல் முடியும் வரை பொறுத்திருங்களேன்.

    Reply
  • BC
    BC

    தலையில் மிக பெரும் நம்பிக்கை வைத்து ஏமாற்றம் அடைந்ததால் ஜெயலலிதா தமிழிழம் உருவாக்கி தருவதாக சொன்னது இவர்களுக்கு மிகவும் சந்தோசத்தை கொடுத்துள்ளது.

    Reply