பரமேஸ்வரனின் உண்ணாநிலைப் போராட்டம் சில சொல்ல முடியாத உறுதிமொழிகளைத் தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளது

parameswaran_.jpgபிரித் தானியாவில் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் என்ற மாணவனினால் 25-வது நாளாக முன்னெடுக்கப்பட்ட பட்டினிப் போராட்டம் இன்று வியாழக்கிழமை மதியம் நாடாளுமன்ற உறுப்பினர் Simon Huges பழச்சாறு கொடுக்க முடிவுக்கு வந்துள்ளது.  பிரித்தானியா அரசு தனக்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தான் உண்ணாநிலைப் போராட்டத்தை நிறுத்தியுள்ளதாகவும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில் தன்னுடைய போராட்டம் தொடரும் எனவும் தெரித்தார்.

பிரித்தானிய அரசாங்கம் வழங்கிய சில வெளியிடப்பட முடியாது உறுதி மொழிகளை அடுத்தே இவரது பட்டினிப் போராட்டம் முடிவுக்கு வருவதாக சுப்பிரமணியம் பரமேஸ்மரனினால் விடுக்கப்பட்ட ஊடகச் செவ்வியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களுக்கு சில நிர்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. அதனால் சில விடயங்களை கூறமுடியாது உள்ளது. எனினும் எமது மக்களுக்கு சில விடங்களை தெரியப்படுத்த வேண்டிய கடமை உள்ளது.

பட்டினிப் போராட்டத்தைத் தொடர்வதன் ஊடாக எமக்கு கிடைத்த சில சந்தர்ப்பங்கள் கைநழுவிப் போகின்றன. அந்த வகையில் இரண்டு மூன்று முக்கிய சந்தப்பங்கள் இப்போது கிடைத்துள்ளன.

பட்டினிப் போராட்டத்தை கைவிடுவதன் ஊடாகவே இச் சந்தப்பங்களைப் பயன்படுத்தலாம் என்ற உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது. எங்களுக்கு ஏற்பட்டுள்ள சில நிர்பந்தங்களால் அவற்றை வெளிப்டையாகக் கூறமுடியாது உள்ளது.

எனினும் எமது மக்களுக்கு அவற்றைத் தெரியப்படுத்தக் கடமைப்பட்டுள்ளேன். பிரித்தானியாவில் இரண்டு அல்லது மூன்று உயர் முக்கிய சந்திப்புக்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதுவும் பட்டினிப் போராட்டத்தை கைவிட்டால் மட்டுமே இச்சந்திப்புக்கான வாய்ப்புகள் கிடைக்கும் என உத்தவாரம் அளிக்கப்பட்டுள்ளது.

சந்தர்ப்பங்களை சரிவரப் பயன்படுத்தாது போனால் தீர்வுகளும் கிடைக்காமல் போய்விடும். எமக்கான தீர்வினை அறுவடை செய்ய வேண்டும் என்றால் அதற்காக சில காலம் பொறுத்திருக்க வேண்டும். சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

இன்னும் சிறுதி காலத்தில் என்ன நடந்தது என்பதை அனைவரும் தெரியப்படுத்துவோம்.  அது எமது தலையாய கடமை என்பதைக் கூறி எனது பட்டினிப் போராட்டத்தை முடித்துக்கொள்கின்றேன் என பரமேஸ்வரன் ஊடகச் செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளார்.

பரமேஸ்வரனின் உடல்நிலை மிகவும் தளர்ந்த நிலையில் அவரை பிரித்தானியா அவசர சிகிச்சை பிரிவினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அதன் பின் நாடாளுமன்றத்தில் அவர் சில சந்திப்புகளை தொடர்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பரமேஸ்வரனின் 24 நாள் உண்ணாநிலைப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு மாணவர்களால் சுழற்சி முறையிலான உண்ணாநிலை போராட்டம் தொடர்கின்றது.

பரமேஸ்வரனின் உண்ணாநிலை இடை நிறுத்தப்பட்டாலும் தங்களுடைய போராட்டம் மக்களின் ஆதரவுடன் தொடரும் என மாணவர்கள் அறிவித்துள்ளனர். அத்துடன் சுழற்சி முறையிலான உண்ணாநிலைப் போராட்டம் தமிழ் மக்களால் பரமேஸ்வரனின் கூடாரத்தில் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

26 Comments

 • chandran.raja
  chandran.raja

  தலைவருக்கு இப்ப போதாத காலம்.இல்லையேல் லண்டனிலும் ஒரு”லண்டன் திலீபன்” னையும் ஏற்படுத்தியிருப்பார்.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  தற்போது GTV யில் பரமேஸ்மரனின் பேட்டி ஒளிபரப்பானது. அதில் அவர் சில வெளியே சொல்ல முடியாத நிர்ப்பந்தங்களால் உண்ணாவிரதம் கைவிடப்பட்டதாகக் கூறினார். ஆனால் ஆளாளுக்கு எனி ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாக எடுத்தவிட்டுக் கொண்டிருப்பினம். வாழ்க தமிழீழம் வளர்க நம்மவர் ரீலுகள்.

  Reply
 • sivaji
  sivaji

  லண்டன் பொலீஸ், தூதரகங்களை தாக்கியதிற்கு பொறுப்பானவர்களை இவரிடம் தொடர்ப படுத்தியதும் இவரை திரும்ப நாட்டுக்கு அனுப்ப முடிவு எடுத்திருப்பார்கள் என்றே பரவலாக கருதப்படுகிறது.
  மக்களை வாருங்கோ வாருங்கோ என்று கூப்பிட்டாங்க? இப்ப ஏன் முடிக்கிறாங்க என்று மட்டும் தெரியாது பிறகு இதெல்லாம் மக்களுக்கான போராட்டம் என்று சொல்லுறாங்க
  30 வரடமாக பேய்க்காட்டடின மாதிரி லண்டனிலும் இன்னு மொர பேய்க்காட்டல் பொறுத்திருங்கோ எல்லாம் சரி வரும்.தலைவர் தப்பிவிட்டாரோ??

  Reply
 • thevi
  thevi

  தம்பி நீர் உயிர் பிழைத்தது சந்தோசம். லண்டனில் உண்மையான புலிகள் இல்லை என்பதனால் தப்பிக் கொண்டீர்!

  Reply
 • murugan
  murugan

  வெளியிடப்பட முடியாது உறுதி மொழிகள் தான் என்ன? இலங்கையை பிரித்து தனிநாடு பிரகடனப்படுத்த லண்டன் உதவப் போகின்றதா? இரகசிய ஆயுத உதவிகள் தரப்போகின்றார்களா? இலங்கையில் மகிந்தவையோ ஏனைய அரசியல் தலைவர்களையோ சதி செய்து கொலை செய்ய உறுதியளித்தார்களா? யாருக்கு இங்கே கதை விடுகிறார்கள்?

  Reply
 • Kullan
  Kullan

  வேடிக்கையாக இருக்கிறது சொல்ல முடியாத உறுதிமொழியைச் சொன்னார்களாம். சொல்ல முடியாததை எப்படிச் சொல்வது. தண்ணிகுடித்து உண்ணாவிரதம் எனும்போதே நாம் யோசித்தோம் இங்கு ஏதோ சூக்குமம் இருக்கு என்று. உண்டாவிரதத்தை முடிப்படிதற்கு ஒரு சொல்லமுடியாத வாக்குறுதி. இதை எப்படிச் சொல்லப்போகிறார்கள்? வேடிக்கைதான் ஏமாருவற்கென்றே பிறந்த இனம்தானே தமிழ் இனம். நடக்கட்டும் நாடகம்

  Reply
 • Rohan
  Rohan

  இந்த பின்னூட்டங்களிலுல்ள்ள தொனியைப் பாருங்கள்.

  அவரவர் தம் சக்திக்கு ஏற்ப ஓரிரு விடயங்களைச் செய்ய முற்படுவது வழமை தான். ஒரு கட்டத்தில் தமது முயற்சி வெல்லாது என்று தெரிகிற போது அதைக் கை விடுவதில் ஏதும் பிழை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

  எல்லாப் பீடங்களையும் வடக்கு கிழக்குக்கு கொண்டு வருமாறு தமிழ் பல்கலைக் கழக மானவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். பல்கலை கழக கலவரம் போய் இனக் கலவரமும் வந்து போனது. புலி உட்பட எல்லா இயக்கங்களினதும் ஆதரவும் இருந்த்து. ஆனால் அந்தப் போராட்டம் வெற்றி பெற்றீருக்காது. ஜெயவர்த்தனா அசைந்து கொடுத்திருக்க மாட்டார். தலைகளை கவிழ்த்துக் கொண்டு பல்கலைக் கழக மாணவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிட நேர்ந்திருக்கும். புலி தலைவருக்குப் பெண் தூக்கியதால் ஒரு சமாதானத்துடன் உண்ணாவிரதிகள் உயிர்கள் தப்பின.

  ஏதோ ஒரு தைரியத்தில் இருந்த உண்ணாவிரதம், போயிற்று, என்பதை விடுத்து இப்படியே சொட்டை பிடிப்பதில் இருப்பவர்கள் யார் என்று இந்தப் பின்னூட்டகாரர் (கருத்து கந்த்சாமிகள் சொல்வதற்கு ஏதொ வைதிருப்பர்) ஒரு சுய பார்வை விடுவது நலம்.

  எனது அயலில் நடந்த உண்ணாவிரதத்துக்கும் புலிக்கும் எந்த இணைப்பும் கிடையாது. துடிப்புடன் பாய் விரித்து குரல் கொடுத்தார்கள் அந்த இளம் மாணவர்கள். ஆள் சேர்த்து துணை நிற்கக் கூட புலி நண்பர்கள் வரவில்லை.

  இல்லை இல்லை – உண்மைகளைப் பற்றிக் கவலைப் பட எங்களுக்கு நேரம் இல்லை. சில ஆயிரம் தமிழன் செத்தாலென்ன, சில சிறிசுகள் புலம் பெயர்ந்த மண்ணில் நிரந்தர நோய் வாய்ப்பட்டாலென்ன,நாம் பின்னூட்டம் விட்டே காலத்த ஓட்டிவிடலாம், வாருஙகள்…………

  Reply
 • msri
  msri

  உண்ணாவிரதத்தை முடிப்பதற்கான> “ஒர் திறில்”தான் சொல்லமுடியாத உறுதிமொழிகள்! பிரித்தானிய-பிரன்சு வெளிநாட்டமைச்சர்கள் இலங்கை போய் தங்ளால் ஏதுமே செய்யமுடியாதென> அறிவித்துள்ள நிலைஙில்> பரமேசுவரனுக்கு சொல்லமுடியாத உறுதிமொழிகள் கொடுத்திருக்கின்றரார்களோ? அதுசரி பரமேசுவரனோடு உண்ணாவிரதமிருந்த மற்றத் தம்பி எங்கே? ஐ.நா. சபைக்கு போய் வந்து விட்டாரோ?

  Reply
 • Thambiah Sabarutnam
  Thambiah Sabarutnam

  புலி மயக்கத்தில் தமிழ் இனவெறியில் வானொலிகளாலும் தொலைகாட்சிகளாலும் உசுப்பேத்தி உருவந்து பலர் புலன்பெயர்ந்தவர் மத்தியில் இருக்கிறார்கள். பீலா பிரபாகரனுக்கு ஏதாவது ஆச்சு என்றால் தண்ணியில் குதிப்பு, தீயில் குதிப்பு, என குதித்தே பலர் தம்மை அழித்து விடுமளவிற்கு உருவில் இருக்கிறார்கள்.
  இவர்கள் தம்மை அழிக்காமல் தடுக்க ஏதாவது செய்ய வேண்டும்.

  Reply
 • accu
  accu

  பரமேஸ்வரனின் உண்ணாவிரதத்தை கேலி செய்வதற்க்கு விருப்பமில்லை. ஆனால் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் அதற்க்கு முன் எண்ணித் துணிய வேண்டாமா? அடையாள உண்ணாவிரதம்,சுழற்சிமுறை உண்ணாவிரதம் இப்படி உலகநாடுகளில் நடந்த,நடைபெறுகிற கோமாளித்தனமான உண்ணாவிரதங்களைப்போல் தானும் ஒன்றை செய்திருந்தால் கணக்கெடுக்கப்பட்டிருக்காது. ஆனால் மிக உறுதியான கோரிக்கைகளுடன் தொடங்கி பின் எதுவுமே நடக்காதென தெரிந்தபின் உண்ணாவிரதத்தை கைவிட விரும்பி ஆனால் அது தனக்கு அவமானமென இப்படியாக சாக்குப்போக்குகளை சொல்லி தற்க்காலிகமாய் இடைநிறுத்துவதாய் சொல்லும்போது நகைப்புக்கிடமாவது தவிர்க்கமுடியாது. அதற்க்கு மேலாய் இந்த இருபத்திநான்கு நாட்களில் புலிகள் புரிந்த மனித குலமே வெட்கித்தலை குனியும் செயல்கள் எதையுமே இவர்போன்றவர்கள் கண்டுகொள்ளாதபோது அல்லது தெரிந்தும் பேசவிரும்பாதபோது இவர்கள் மேல் வைக்கப்படும் எவ்வகையான விமர்சனங்களும் ஏற்ப்புடையதே.
  //அவரவர் தம் சக்திக்கு ஏற்ப ஓரிரு விடயங்களைச் செய்ய முற்படுவது வழமை தான். ஒரு கட்டத்தில் தமது முயற்சி வெல்லாது என்று தெரிகிற போது அதைக் கை விடுவதில் ஏதும் பிழை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.// றொகன்.
  உண்மை. இன்றைய காலகட்டத்தில் இந்த விமர்சனத்தை புலிகள் மேல் வைத்தால் மிகப்பொருத்தமாகவும் பயன் உள்ளதாகவும் அமையும்.

  Reply
 • murugan
  murugan

  றோகன் ஏலாமல் போய்விட்டது என்றால் அதை சொல்லி விட்டு எழுந்து போக வேண்டியதுதானே! ஏன் றீல் விடுவான்?

  “உண்ணாவிரதமிருந்த மற்றத் தம்பி எங்கே? ஐ.நா. சபைக்கு போய் வந்து விட்டாரோ”

  அவர் ஐநாவிற்கு போக ஏதோ பாதுகாப்பு பிரச்சனை என மாணவர்கள் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தனர். ஐ.நா போகும் வழியில் இலங்கை படைகள் அவரை கடத்திக் கொண்டு போய் விடுமோ?

  Reply
 • aappu
  aappu

  உண்ணாவிரதத்தை முடித்தகாரணம் என்ன- மக்களை ஏமாற்றி பணம் சேர்த்த வசூல் மன்னர்களிடம் வணங்காமண் கப்பலைப் பற்றிய கேள்விகள் வலுவடைந்துள்ளதுதான் காரணமா.

  Reply
 • Vinothan
  Vinothan

  இந்த பின்னூட்டங்களிலுலள்ள தொனியைப் பாருங்கள்– இத்தகைய சுயசிந்தனையற்ற புலியெதிர்ப்பினை மட்டுமே கருத்திற்கொண்ட மாற்றுக்கருத்தாளர்களின் இயலாமையின் வெளிப்பாடுகள். இத்தகைய ஆரோக்கியமற்ற-சுயசிந்தனையற்ற பின்னூட்டக்காரர்களின் தமிழ்மக்கள் பற்றிய உணர்வுவெளிப்பாடற்ற கருத்துக்களால் தான் இன்றும் தேசம்நெற்றின் கருத்துக்கள் ஒரு சிறு வட்டத்தைத் தாண்டி பொதுக்குரலாக வெளிச்செல்ல முடியவில்லை. தேசம் நெற்றும் இத்தகைய சுயதணிக்கையை விரும்பாததால் இந்நிலை தொடர்கின்றது. இதுவே ஜெயபாலனின் நியாயமான பல கருத்துக்களும் இந்தச் சிறிய குழுவைவிட்டு வெளியே செல்லமுடியாமலிருக்கின்றது. இதனை இவர்கள் புரிந்துகொள்ளாதவரையில் குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டிக்கொண்டு இந்தக் கருத்துக் கந்தசாமிகளை வலம்வந்து கொண்டிருக்கவேண்டியது தான்.

  Reply
 • murugan
  murugan

  விநோதன் உலகில் எங்கும் எப்போதும் உண்மை, தவறாத நீதி ,பொது நலன் இவற்றிற்காக இடைவிடாது போராடுபவர்கள் சிறு தொகையினரே! இன்றும் இலங்கை மக்களின் நலன் கருதி பாடுபடுபவர்கள் சிறு தொகையினரே. மாதக் கணக்கில் புலம் பெயர் தேசங்களில் இலடசக்கணக்கில் ஆட்களை தெருவில் இறக்கி ஒரு உயிரையாவது காப்பாற்ற முடிந்ததா? ஆட் தொகையல்ல முக்கியம். நாம் உண்மையின் பக்கம் நிற்கிறோமா ,எமது நடவடிக்கைகளால் மக்களுக்கு நன்மையுண்டா என்பதே முக்கியம்.

  மக்களுக்காக, அவர்களின் நலனுக்காக பாடுபடுபவர்களுடன் கருத்துரைப்பவர்களுடன் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்!

  Reply
 • suban
  suban

  எல்லா விடயங்களையுமே எதிர்நிலையில் இருந்து பார்க்கும் போக்கு நல்லதில்லை. போரட்டம் என்று தொடங்கியபின்னான தமிழ்களின் அழிவிற்கு முக்கிய காரணி புலிதான். கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் தமிழ்மக்கள் நலனில் நின்று பார்க்காது தமது ஏகப்பிரதிநிதித்துவ பேராசையால் நாசமாக்கியவர்கள். இதைகூட புலி அறியாமையில்; செய்ய தங்களது சுயஇருப்புக்காக புலிகளை உசுப்பேத்தி நாசமாக்கியவர்கள் புலிப்புத்திஜீவிகள்.

  இந்தப்புத்திஜீவிகள் சிலகெட்டித்தனமான வேலைகயைும் செய்கிறார்கள்தான். புலத்தில் உருவெடுத்த மாணவர் இழையோர் எழுச்சியை ஒரு வழிக்குநகர்த்திதானிருக்கிறார்கள். பல பாதகமான அம்சங்களோடு ஈழப்போரட்டம் பற்றி எதுவும் அறியாத உருப்படியாகக்கூட கதைக்கத்தெரியாத இந்த இளையோரால் உலகம் அசைக்கப்பட்டுத்தானிருக்கிறது. இந்த அசைப்பிற்கு பரமேஸ்வரனின் போராட்டம் ஒரு முக்கிய காரணி. பரமேஸ்வரனை மையப்ப்புள்ளியாக் கொண்டே ஆட்திரட்டி போராட்டம் நகர்த்தப்பட்டிருக்கிறது. அதில் பரமேஸ்வரனின் உண்ணாவிரதம் ஒருவகையில் வெற்றிதான்.

  பிறகான முடிவு அழுத்தங்கள் சமாளித்தல் என்பவையும்கூட இயல்பானதே. அந்த இடத்தில் இருந்திருந்தால் நாங்களும்கூட இப்படி ஒரு சமாளிப்போடுதான் உண்ணாநோன்பை முடித்திருப்போம். இதை இப்படியே விடலாம். ஆனால புலிப்புத்திஜீவிகள் அழுத்தத்ததை உறுதி மொழி ஆக்கியே தீருவார்கள்.

  Reply
 • Tamil
  Tamil

  முதலில் பரமேஸ்வரன் ஓரு மாணவன் என்பது தவறான ஓரு பிரச்சாரமாகும்.
  பரமேஸ்வரன தடை செய்யப்பட்ட (ஆம் இரண்டு வருடங்கள் முன்) TTN தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக கடமையாற்றியவர் புலிகளுடன் (லண்டன்) நெருங்கிய தொடர்புடையவர். இதில் மிகவும் கவலை தரும் (நகைப்புக்கிடமான!) விடையம் என்னவெனில் லண்டன் பாராளுமன்ற உறுப்பினர்களின் இவர்களுக்கான ஆதரவு. நாங்கள் ஒன்றும் இந்திய அரசியல்வாதிகளுக்கு சளைத்தவர் அல்ல வோட்டுகளுக்காக (VOTES) நாம் எதையும் செய்யத்தயார் எனும்மாதிரியான அவர்களது நடவடிக்கைகளும் (புதன் கிழமை லண்டன் பாராளுமன்ற இலங்கைக்கான விவாதத்தை பார்த்தவர்களுக்குப் புரியும்)

  Reply
 • thurai
  thurai

  வாழ்க்கை ஓர் போராட்டம்.
  ஈழவிடுதலைப்போர் ஓர் நாடகம்.
  இதில் இரசிகர்களை விட நடிகர்கள் தொகையே அதிகமாகின்றது.
  புலத்துத் தமிழரின் நவீன பொழுது போக்காக மாறும்
  தமிழீழ மோகம்.

  துரை

  Reply
 • murugan
  murugan

  உண்ணாவிரதம் என்றோ ஆர்ப்பாட்டம் என்றோ போராடுவது தவறில்லை. பின்னால் அடுத்த கட்டம் என்ன என்பதையும் தீர யோசித்து நடத்த வேண்டும். நமக்கான நீதி நியாயத்தை அடைய முடியுமா என்றும் அதை விட இந்தப் போராட்டங்களுக்கு நாம் தகுதியுடையவர்களா என்பதையும் நாம் பார்க்க வேண்டும். மிதவாத தமிழ் கடசிகள் உண்ணாவிரதம் இருந்தபோது புலிகள் சாப்பாடு ஊட்ட அன்று ஏன் முயற்சித்தார்கள். இன்று ஏன் உண்ணாவிரதம் இருந்தார்கள். போகும் பாதை தெரியாமல் தடைபட்டு திணறுகிறார்கள்.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  //இந்த பின்னூட்டங்களிலுல்ள்ள தொனியைப் பாருங்கள்.

  அவரவர் தம் சக்திக்கு ஏற்ப ஓரிரு விடயங்களைச் செய்ய முற்படுவது வழமை தான். ஒரு கட்டத்தில் தமது முயற்சி வெல்லாது என்று தெரிகிற போது அதைக் கை விடுவதில் ஏதும் பிழை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.- Rohan//

  இங்கே உண்ணாவிரதம் கைவிடப்பட்டதை யாரும் கேலி செய்யவில்லை. ஆனால் உங்களைப் போன்ற சிலர் கட்டிவிட்ட “பிரித்தானிய அரசு அளித்த வெளியே சொல்ல முடியாத உறுதி மொழிகளையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டதாக” புலியாதரவு இணையத்தளங்களில் ரீல்களாக வந்த செய்தியைத் தான் கேலி செய்கின்றார்கள். ஆனால் நேற்று GTV யில் பரமேஸ்மரனின் பேட்டி ஒளிபரப்பானது. அதில் அவர் சில வெளியே சொல்ல முடியாத நிர்ப்பந்தங்களால் உண்ணாவிரதம் கைவிடப்பட்டதாகக் கூறினார். உறுதிமொழி என்பதற்கும் நிர்ப்பந்தங்கள் என்பதற்கும் விளக்கம் தெரியாதவர்களாகவா உங்களைப் போன்றோர் இருக்கின்றீர்கள்.

  Reply
 • kullan
  kullan

  தமிழ் நல்லவிடயம் சொன்னீர்கள். போராட்டத்தில் ஈடுபட்டது மாணவர்கள் இல்லை. அதாவது ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிறீர்கள். நடக்கட்டும் புலியாதரவுகளின் சுத்துமாத்துக்கள். உண்ணாவிரதம் ஆர்ப்பட்டம் என்று புலிகளை மீட்கத் தெருவில் இறங்கிப்போராடுவர்களே. உங்கள் இனத்தில் உங்கள் மக்களில் பற்றிருந்தால் திருப்பிப் புலிகளைக் கேளுங்கள்; அன்றேல் கோசம் போடுங்கள் மக்களை விட்டுவிட்டு புலிகளை வெளியேறுமாறு. அங்கே கொலை செய்யப்படுவது மக்கள் மட்டும் தான்.

  மக்கள் வேறு புலிகள் வேறு என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. 1) யாழ்பாணத்தை விட்டு வெளியேறும் போது புலிகள் மக்களையும் இழுத்துக்கொண்டு தான்போனார்கள். பின் மக்களுக்கு கதியால்களும் கிடுகுகளும் விற்றார்கள் தொணடர் நிறுவனங்களிடம் வாங்கி. புலிகளுக்கு யாரும் விக்கவில்லை. மக்களும் புலிகளும் ஒன்றாய் இருந்தால் மக்களுக்கு உதவிகள் இலவசமாய் புலிகளைப் போன்று கிடைத்திருக்க வேண்டும். இங்கே மக்கள் வேறு புலிகள் வேறு என்றாகிவிட்டது. இன்று புலிகளின் பக்கத்தில் இருந்து மக்கள் வெளியேறியதில் இருந்து தெரியவில்லையா? மக்கள் வேறு புலிகள் வேறு என்று. மக்களும் புலிகளும் ஒன்று என்றால் எங்கே உங்கள் பொங்கு தமிழ். பொங்கு தமிழ் கூட புலிகளின் அழுத்தமா? புலிகளின் கட்டுப்பாடற்ற பகுதிகளில் பொங்குதமிழ் நடக்கவில்லை என்பதால் இந்தப்பொங்குதமிழும் புலிகளின் அழுத்தத்திலேயே நடைவெற்றிருக்க வேண்டும். மறக்க வேண்டாம் புலிகள் வேறு மக்கள் வேறு

  Reply
 • Raviraaj
  Raviraaj

  முருகன்/”உண்ணாவிரதமிருந்த மற்றத் தம்பி எங்கே? ஐ.நா. சபைக்கு போய் வந்து விட்டாரோ”
  அவர் ஐநாவிற்கு போக ஏதோ பாதுகாப்பு பிரச்சனை என மாணவர்கள் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தனர். ஐ.நா போகும் வழியில் இலங்கை படைகள் அவரை கடத்திக் கொண்டு போய் விடுமோ?”

  அப்படி ஒன்றும் இல்லை. என்னவென்றால் தம்பிக்கு ஐநாவினால் பாதுகாப்பு கொடுக்க ஏலாது அந்தளவிற்கு அவர்……
  பொட்டர் படையை ஐ.நா அழைத்திருக்குது. அவர்கள் வந்து பாதுகாப்பு ஏற்பாடு செய்தபின்புதான் தம்பி அங்கு செல்வார் பொறுத்திருங்கோ. எல்லாம் சரி வரும் பயண செலவுதான் என்ன செய்வதென்று யோசிக்கிறம் எதற்கும் மக்கள் நம்பக்கம்தானே எமக்கென்ன பயம்.
  ராஜ்

  Reply
 • sus
  sus

  மாற்று இயக்கங்கள் சொல்லிக் கொண்டு இருப்பார்கள் ஆனால் செய்ய மாட்டார்கள் ஆனால் புலிகள் சொல்ல மாட்டார்கள் செய்வார்கள். அதே போல தான் மாற்றுக்கருத்துகாரரும் இனையத்தில் எழுதுவதை தவிர வேறு ஒண்டும் செய்வதில்லை ஆனால் புலி ஆதரவாளர்கள் சொல்ல மாட்டார்கள் ஆனால் செய்து கொண்டே தான் இருப்பார்கள்.

  Reply
 • Tamil
  Tamil

  //புலி ஆதரவாளர்கள் சொல்ல மாட்டார்கள் ஆனால் செய்து கொண்டே தான் இருப்பார்கள் – sus //

  செய்த பின்பும் சொல்லமாட்டார்கள் – புரிந்தால் சரி !!

  Reply
 • மாயா
  மாயா

  //sus on May 1, 2009 11:00 am மாற்று இயக்கங்கள் சொல்லிக் கொண்டு இருப்பார்கள் ஆனால் செய்ய மாட்டார்கள் ஆனால் புலிகள் சொல்ல மாட்டார்கள் செய்வார்கள். அதே போல தான் மாற்றுக்கருத்துகாரரும் இனையத்தில் எழுதுவதை தவிர வேறு ஒண்டும் செய்வதில்லை ஆனால் புலி ஆதரவாளர்கள் சொல்ல மாட்டார்கள் ஆனால் செய்து கொண்டே தான் இருப்பார்கள்.//

  சயனைட்டை கழுத்தில் போடும் போது சாவாய் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் சாவடித்துவிடுவார்கள்.- ஆயுதம் கொடுக்கும் போது ஆள் முடியப் போகுதென்று சொல்ல மாட்டார்கள். ஆனால் ஆளை முடித்து விடுவார்கள். -புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்பார்கள். ஆனால் மாவீரர் நிகழ்வுக்காகவே புலிகளின் தாகம் தமிழரில்லாத தாயகத்தை உருவாக்குவார்கள்.- நீங்கள் செய்ததின் பலன் நாட்டிலயும் மக்கள் நடு ரோட்டில. புலத்திலயும் மக்கள் நடு ரோட்டில

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  //மாற்று இயக்கங்கள் சொல்லிக் கொண்டு இருப்பார்கள் ஆனால் செய்ய மாட்டார்கள் ஆனால் புலிகள் சொல்ல மாட்டார்கள் செய்வார்கள்.ஆனால் புலி ஆதரவாளர்கள் சொல்ல மாட்டார்கள் ஆனால் செய்து கொண்டே தான் இருப்பார்கள்.- sus//

  எதைச் செய்த கிளிச்சவை எண்டதையும் ஒருக்கால் எடுத்து விட்டிருக்கலாமே. இன்றைக்கு புலிகளிடம் தப்பி வந்த மக்களுக்கு தளத்தில் நின்று வேண்டிய உதவிகளை செய்வதும் நீங்கள் குறிப்பிட்ட மாறறு இயக்கங்களும், சிங்கள மக்களும், முஸ்லீம் சகோதரர்களும் தான். ஆனால் புலிகள் ஒரு பக்கத்தால் அந்த மக்களை அழிக்க, மறுபக்கத்தில் புலம்(ன்) பெயர்ந்த புலியாதரவாளர்களும் புலித்தலைவர்களை காக்க மட்டுமே குரல் கொடுக்கின்றனர்.

  Reply
 • murugan
  murugan

  புலி செய்து கிளித்த விசயங்களால்தான் தாயகத்தில் தமிழினம் தலைவிரி கோலமாய் அலைகிறதே. புலன் பெயர் தேசங்களில் வாயிலும் வயிற்றிலும் அடித்து தெருத் தெருவாய் புரண்டு கொண்டிருக்கிறதே! ஆகா என்னே கண்கொள்ளாக் காட்சி!

  Reply