பாதுகாப்பு வலயப் பகுதியில் எறிகணைத் தாக்குதலைக் காட்டும் செய்மதிப் படங்கள் பிபிசிக்கு கிடைத்துள்ளன

_sri_lanka_sat_any.gifஇலங்கையின் வடகிழக்கே மோதல் நடக்கும் பிரதேசத்தில் இருக்கும் பொதுமக்களை பாதுகாப்பதற்காக இலங்கை அரசால் பாதுகாப்பு வலையமாக அறிவிக்கப்பட்டிருக்கும் பகுதியில் எறிகணை தாக்குதல்களும் குண்டுத் தாக்குதல்களும் நடந்திருப்பதை காட்டக்கூடிய செய்மதித் தொலைக்காட்சிப் படங்கள் பிபிசிக்கு கிடைக்கப்பெற்தாக செய்தி வெளியிட்டுள்ளது

இலங்கை ராணுத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடக்கும் மோதல்கள் காரணமாக பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சிறிய கடற்கரைபிரதேசத்தில் அடைபட்டு இருப்பதை, ஐநா மன்றத்தினால் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படங்கள் காட்டுகின்றன.

இந்த எறிகணை மற்றும் குண்டுவெடிப்புகளுக்கு ராணுவம் பொறுப்பல்ல என்று இலங்கை அரசு தெரிவிக்கிறது. இது குறித்து விடுதலைப்புலிகள் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.பாதுகாப்பு வலையப்பகுதிக்குள் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி சுடவேண்டாம் என்று ஐநா மன்றம் இலங்கை அரசை தொடர்ந்து கேட்டுக்கொண்டுவருகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • Rohan
    Rohan

    டெயிலி மிறர் அல் ஜசீரா தொலைக்காட்சித் துண்டு ஒன்றை இணைப்பில் வைத்திருக்கிறது. பாலித கோகன்ன பதில் சொல்ல முடியாது திணறுவதும் சுவையாக இருக்கிறது.

    Reply
  • Kullan
    Kullan

    அப்ப உலகமெல்லாத்துக்கும் தெரிகிறது அங்கே என்ன நடக்கிறது என்று. ஆகாவே இவர்கள் தெரிந்தும் தெரியாததுபோல் தான் இருக்கிறார்கள். இதை புலிகள் சிந்திப்பார்களாக. இதற்கு அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்பதை இனியாவது சரியாக யோசிப்பீர்களா? ஆயுதங்களைப்போடவம் தேவையில்லை அடிபணிய வேண்டிய அவசியமும் இல்லை.

    Reply
  • மாயா
    மாயா

    ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு மூன்றாவது தரப்பு ஒன்றின் மூலம் பிரபாகரன் மற்றும் குழுவினர் சரணடைய தயாராக இருப்பதாக கேபீ எனப்படும் குமரன் பத்மநாதன் மூலம் திரை மறைவு முயற்சிகள் இடம் பெற்று வருகின்றன.

    இது குறித்த மின் அஞ்சல் ஒன்று பாதுகாப்புத் துறையிடம் சிக்கியுள்ளது. நோர்வே போன்ற ஒரு நாட்டினரிடம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைய அவர்கள் முயற்சிப்பதாகவும் , அதை அரசு ஏற்கப் போவதில்லை என முக்கிய இராணுவ பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    Reply