கஞ்சி குடிச்சாறு பிரதேசத்தில் விடுதலை புலி இயக்கத்தில் உயர் பதவியினை வகித்து வந்ததாக கூறப்படும் பெண் ஒருவர் நேற்று (30) சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அக்கரைப்பற்று கண்ணகி புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு சரணடைந்துள்ளார்.
கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் நீண்டகாலமாக விடுதலை புலிகள் அமைப்பில் இணைந்து பணியாற்றியுள்ளதுடன் உயர் பதவிகளையும் வகித்து வந்துள்ள இவர் செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகளின் உதவியுடன் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இவரிடமிருந்து மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் விசாரணைகளை அடுத்து அரச புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
மாயா
விடுதலைப் புலி உறுப்பினராக இருந்து கொல்லப்பட்ட மாத்தயாவின் குடும்பம் நேற்று படையினரிடம் அடைக்கலம் பெற்றுள்ளனர்.