பா. ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானி டெல்லியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ’’மற்றவர்கள் நம்மை விமர்சித்தாலும் பா.ஜனதா எப்போதுமே அணுகுண்டு தயாரிப்பதை ஆதரித்து வந்திருக்கிறது.
1961, 1971, 1999 ஆகிய ஆண்டுகளில் நாம் பாகிஸ்தானை தோற்கடித்தோம். இதே போன்ற நிலையில் சீனாவுடன் மோத நேர்ந்தால் இந்தியாவிடம் கட்டாயம் அணுகுண்டு இருக்கவேண்டும். அப்போதுதான் 1952-ம் ஆண்டு இந்திய- சீனப் போரின்போது ஏற்பட்ட தோல்வி இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
அணுகுண்டு தொடர்பாக 1964-ம் ஆண்டு பாரதீய ஜனசங்கம் வாரணாசியில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அப்போது அமெரிக்கா கோபமாக இருப்பதாக நம்மை விமர்சனம் செய்தார்கள்.
1998-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி அமைந்த சில நாட்களில் பொக்ரானில் அணுகுண்டு வெடித்து சோதனை செய்யப்பட்டது. இந்தியா முன்னேற வேண்டும் என்றால், முக்கியமான முடிவுகளை எடுக்கவேண்டும். அமெரிக்கா என்ன நினைக்குமோ என்ற சிந்தனை இதில் தவிர்க்கப்படவேண்டும்’’ என்று கூறினார்.