தமிழ் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகள் எதிர்வரும் 5ம் திகதி ஜனாதிபதியை சந்திக்கவுள்ளன

samthan-2.jpgதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ் கட்சிகள் எதிர்வரும் 5ம் திகதி செவ்வாய்க்கிழமையன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளன.  இந்த சந்திப்பின் போது, இடம்பெயர்ந்த நிலையில் முகாம்களில் உள்ள மக்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடம்பெயர்ந்த மக்களுக்கு ஆற்றப்பட வேண்டிய மனிதாபிமான சேவைகள் மற்றும் வடக்கின் மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளன.  இதற்கிடையில் இந்த சந்திப்பின் போது, இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதாபிமான முன்னெடுப்புகள் குறித்து, தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Show More
Leave a Reply to santhanam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

 

5 Comments

 • மாயா
  மாயா

  புலிகளுக்கு முன் அழிய வேண்டியவர் இவர்கள். இவர்களால்தான் இந்த நாசம்

  Reply
 • sora
  sora

  ஐயா பெரியவரே, ஜனாதிபதியை சந்திக்கும்போது உங்களுடைய ராஜினாமாக் கடிதத்தை சமர்ப்பிக்க மறந்து விடாதீர்கள். இனியாவது மக்களாவது நிம்மதியாக வாழட்டும். நீங்கள் எப்படிப்போனாலும் பரவயில்லை…”நமோ நமோ மாத்தா”.

  Reply
 • palli
  palli

  விட்ட தவறுகளை நிவர்த்தி செய்ய நல்ல சந்தர்ப்பம் விட்டுடாதையுங்கோ. திறமை இருக்கு பேச்சாற்றல் இருக்கு தற்ப்போது பொட்டர் பயம் இல்லை. எல்லாத்துக்கும் மேலாக தங்களை கூத்தமைப்பே கிண்டல் செய்கிறது ஆகவே இந்த இடத்தை உங்களுடைய அரசியல் களமாக்கி தங்களின் அனுபவத்தையும் மக்களுக்காக வெளிபடுத்தினால் இறுதி காலம் மனிதனாக வாள முடியும். இல்லையேல்……………

  Reply
 • santhanam
  santhanam

  இந்த அமைப்பின் காட்டில் தான் எனி மழை……..இதை கட்டவா இவ்வளவு போரளிகள் இழப்பு.

  Reply
 • மாயா
  மாயா

  புலிக் கட்சியிலிருந்தவங்கள்
  ஆளுங் கட்சிக்கு தாவல்

  Reply