பிரான்சில் இன்று “அடங்காப்பற்று” மாபெரும் பேரணி

adangappattu-2.jpg37 நாட்களாக பிரான்சின் வரலாற்றுப் பேரெழுச்சியும் உண்ணா நிலைப்போராட்டமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதேவேளை இன்று அடங்காப்ற்றுப் பேரணி பேரெழுச்சியோடு நடைபெறவுள்ளது. தமிழின அழிப்பை மேற்கொண்டு வரும் சிங்கள அரசை எதிர்த்தும் அதற்குத் துணைபோகும் நாடுகளை எதிர்த்தும் பிரான்சில் அடங்காப்பற்றுப் பேரணி இன்று பேரெழுச்சியோடு பி.ப.2.30மணிக்கு ஒபேரா எனும் இடத்தில் ஆரம்பமாகவிருக்கிறது. 

35 நாடகளாக உண்ணா நிலைப்போராட்டத்தை மேற்கொள்ளும் இளைஞர்களை நோக்கி நகரவுள்ள இப்பேரணியில் அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு அவசர அழைப்பை விடுத்துள்ளனர்.மேலும் மக்களின் பேரெழுச்சியும் பெரு வரவும்தான் இநதப்போராட்டத்தின் மாபெரும் மாற்றத்திற்க்கு வழி வகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் உடனடியாக மக்கள் அனைவரும் விரைந்து செயற்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • palli.
    palli.

    இந்த ஊர்வலம் அடங்கிய பற்றாக வாயில் துனியை கட்டி நடந்ததாக GTV சொல்லுவது பொய்யா??

    Reply
  • PUYAL
    PUYAL

    அடங்காமண்ணுக்கு என்ன நடந்தது? கப்பல் புறப்பட்டு விட்டதா?

    Reply
  • மாயா
    மாயா

    அடங்கா மண் சுருட்டிக் கொண்டு அடங்கிவிட்டது. அந்தக் காசில் மூர்த்தி புறா விடுறார்.

    Reply
  • murugan
    murugan

    வணங்கா மண் பொருட்கள் திகதிகள் முடிவடைவதால் தமிழ் கடைகளில் விற்கப்பட்டு பணமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன். நல்ல வசூல்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இந்த கேள்வியை எல்லோரும் தான்கேட்டுக் கொண்டிருக்கிறோம். போனவாரம் ரவி என்ற பெயரில் “வங்காமண்”சென்ற மாதம் 20 ம் திகதி பிரித்தானிவில்லிருந்து புறப்பட்டுவிட்டதாக சொன்னார். புறப்படுவதற்கு பி.அரசு அனுமதி கொடுக்கவில்லை என்று நான் கேள்விப்பட்டேன். எது உண்மை பொய் என்று தெரியவில்லை.
    ரவியாவது ஒரு பின்னோட்டம் விடலாம் புறப்பட்ட கப்பல்லுக்கு என்ன நடந்தது என்று. அல்லது எந்த துறைமுகத்தில் நிற்கிறது தூத்துக்குடியா? திருகோணமலையா? கொழும்பா? மக்கள் பசியாற கஞ்சிஊத்த கொடுத்த பணம் பொருள் அல்லவா? இவர் எப்படி அதை புறா பறக்க விடமுடியும்?.
    கப்பல் ஓட்ட இரவுபகலாக குத்திமுறிஞ்ச ஜிரியும் தீபம்தொலைக் காட்சியும் “வணங்காமண்” செய்திபற்றி மூச்சுவிட காணோம். இனி?

    Reply
  • palli.
    palli.

    வணங்காத மண் சிறப்பு ஓட்டுனர் (ஓட்டி) சிவாஜிலிங்கத்துக்கும் KP க்கும் அடங்காத பேச்சாலும் அதிரடி கணக்காலும் முறுக்கல்நிலை. புலியின்
    இலவசைனைப்புகள் இப்போதே சிவாஜியால்தான் வணஙாமண் கரை ஒதுங்கியதாக பத்திபாடல் பாட தொடங்கி விட்டார்கள். இதற்க்கிடையில் சம்பந்தர் சிவாஜி அண்ணையை உடனடியாக கொழும்புக்கு வரும்படி தகவல் சொல்லி விட்டாராம். மிகவிரைவில் புலம் பெயர் துரோகியாக
    சிவாஜிஅண்ணை புலிகளின் வாயில் தேனாக பாய போவது மட்டும் நிழலல்ல நிஜம்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    நான் அறிந்தவரை வணங்காமண் புறப்படவும் இல்லை போய்ச்சேரவும் இல்லை. ஆனால் வணங்காமண் பற்றிய கேள்விகள் எழுவதைத் தடுப்பதற்காக வணங்காமண் ஏற்கனவே போய்ச் சேர்ந்து விட்டதாக புரளியைக் கிளப்பியுள்ளார்கள். பிரிந்தானிய அரசு வணங்காமண் கப்பல் தரித்து நிற்கவோ பொருள் ஏற்றவோ எவ்வித அனுமதியும் கொடுக்கவில்லையென்பதும் பகிரங்கமான உண்மை. எனவே நான் முன்பு குறிப்பிட்டது போல் இதுபற்றிய ஒரு புகாரை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்ளிடமும், கெளன்சிலர்களிடமும் தெரிவிக்கலாம். வணங்கா மண் சுருட்டல்வாதிகள் அவர்களை ஏமாற்ற முடியாது……

    Reply
  • chandran.raja
    chandran.raja

    படித்துப்பட்டம் பெற்றவர்கள் இப்படி “முடிச்சுமாறியள்” போல செயல்படுவது அவமாகத்துக்குரிய செயலாகும். டாக்டர் மூர்த்தியும் அவரோடு சேர்ந்த இயங்கியவர்களும் இதற்கு தகுந்த விளக்கத்தை கொடுக்கவேண்டும். “வணங்காமண்” கப்பல் பற்றி தட்டுதடுமாறி பி.பி.சி க்கு பேட்டிகொடுக்கும் போதே சந்தேகப்பட்டோம். சுனாமிநிதி போலவே இதையும் இழவுவிழுத்தப் போறாங்கள் என்று. சந்தேகப்பட்டது சரியாகவே போயிற்று. பிரித்தானியாவில் இருப்பவர்கள் தான் இதற்கு ஆவனசெய்யவேண்டும்.

    Reply