வட்டுக்கோட்டை பிரகடனம் மீதான வாக்கெடுப்பு புலிகளின் அரசியல் வங்குரோத்தின் அப்பட்டமான பதிவு : ரி கொன்ஸ்ரன்ரைன்

Vaddu_Resolution_in_Norwayசின்னஞ்சிறு வயதில் மண்வீடு கட்டி விளையாடிய அனுபவம் எம்மில் பலருக்கு உண்டு. மனதில் எழுகின்ற பெரிய ஆசைகளை, நிறைவேறாத ஆதங்கங்களை ஏதோ எங்களுடைய இயலுமைக்கேற்ப சிறிய அளவில் செய்து மகிழும் ஒரு கற்பனை திருப்தி தான் இது. ஏன் ஒரு சிற்றின்பம் என்று கூட சொல்லி விடலாம். தற்போது ஐரோப்பிய, ஸ்கன்டிநேவிய நாடுகளில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் நடாத்தப்படும் இந்த வட்டுக்கோட்டை பிரகடனம் மீதான வாக்கெடுப்பும் இச் சிறுபிள்ளைத்தன விளையாட்டிற்கு ஒப்பானதே.

கடந்த 30 வருட காலத்திற்கு மேலாக தமிழ் தேசியத்தை வலிந்து தலைமை தாங்கிய தலைவர் பிரபாகரன் எந்தவொரு காலகட்டத்திலும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப் பற்றியோ அல்லது அத்தீர்மானத்திற்கு அத்திவாரமாக இருந்த தமிழ் அரசியல் தலைவர்களைப் பற்றியோ பெரிதாக ஏதும் கூறிவிடவில்லை. அங்கீகரிக்கக் கூட இல்லை. அதற்கு மாறாக………. அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் போன்றவர்களை வரிசையாக சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சுடத் தவறவில்லை. ஏன் அவ்வாறு சந்தர்ப்பம் கிடைத்தால் தொண்டமான் என்ன தந்தை செல்வா உட்பட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடித்தளங்களை கூட சுட்டுத்தள்ள ஒரு கணம் கூட யோசித்திருக்க மாட்டார்கள். அடிப்படை அரசியலுக்கும் குறைந்த பட்ச ஜனநாயகத்திற்கும் கூட எந்தவித இடமும் கொடுக்காத விடுதலைப் புலிகளும் அதன் ஆதரவுகளும் இன்று காலாவதியாகிப் போன வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தூக்கிவைத்து தாண்டவம் ஆடுவது கண்கெட்ட பின் நடத்துகின்ற சூரியநமஸ்காரத்திற்கு ஒப்பானது.

தனித்தமிழ் ஈழம் ஏதோ மூன்றடி தூரத்தில் இருப்பதாக இதுவரை காலமும் கதையளந்து மாவீரர் தினத்திற்கு வரிசையாக போய் விசிலடித்து வந்த இந்த புலம்பெயர்வுகள் இன்று வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்று கூறி வரிசையாக நிற்பதைப் பார்க்கும் போது அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை. ஆக மொத்தமாக பார்க்கும் போது 98.95% நோர்வே மக்கள் தமிழீழத்தை ஆதரிக்கின்றனர் என்று வெளியாகிய செய்தி சதாம் உசைன் மறைவதற்கு சில மாதங்களுக்கு முன் ஈராக்கில் இடம்பெற்ற தேர்தலில் சதாம் உசைன் ஈட்டிய மாபெரும் வெற்றிக்கு ஒப்பானது. 16 ஒக்ரோபர் 2002 ல் ஈராக்கில் இடம்பெற்ற வாக்களிப்பில் சதாம் உசைன் 99.96% வாக்குகளைப் பெற்று மேலும் 7 ஆண்டுகள் ஈராக்கை ஆள மக்களின் ஆதரவை பெற்றுக் கொண்டார். இன்று மே மாதம் 10ம் திகதி 2009ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு 98.95% ஆதரவு கிடைத்துள்ளது.

சாதாரண மக்களை ஒரு புறம் விடுவோம். இந்த வாக்கெடுப்பைப் பற்றி ஐரோப்பாவில் பரவலாகச் செயற்படும் தீபம் தொலைக்காட்சி, GTV தொலைக்காட்சி, IBC வானொலி போன்ற நிலையங்கள் நிகழ்த்தும் அரசியல் பதிவேடுகள் மிகவும் கோமாளித்தனமானது. நாளுக்கு நாள் ஏதோ புதிய புதுமையான அரசியல் பரிணாமத்தை விபரிப்பதைப் போல் இவ்வாறான அரசியல் கோமாளித்தனங்களை ஒலிபரப்பி ஒரு மனிதனின் அடிப்படை அறிவுத்திறனை சோதிக்கின்றனர். ஐரோப்பிய சமூகம் இந்த தேர்தல் முடிவுகளை மிகவும் உன்னிப்பாக அவதானிக்கிறதாக கூறுகிறது லண்டனில் இருந்து ஒளிபரப்பப்படும் தீபம் தொலைக்காட்சி.

அமையவிருக்கும் தமிழ் ஈழத்தில் தன்னுடைய பெயர் மட்டும் முதன்மை வகிக்க வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும் அதனை மையப்படுத்தி இடம்பெற்ற 1977ம் ஆண்டு தேர்தலையும் அத்தேர்தலில் மாபெரும் வெற்றியீட்டிய தலைவர்களையும் சுட்டு வீழ்த்திய இயக்கம் இன்று அழிவின் விளிம்பில் நின்று கொண்டு வரலாற்றுத் தவறுகளை திருத்த எத்தணிப்பது காலம் கடந்து வந்த ஞானம். இன்று இடம்பெறுகின்ற அரசியல் முனைப்புகள் எப்போதோ நடந்திருக்க வேண்டும். தொடர்ச்சியாக இடம்பெற்றிருக்க வேண்டும். எங்கோ இருந்து வருகின்ற கைகளுக்கும், கை மாற்றுக்களையும் அடிப்படையாக வைத்து நேச நாடுகளின் தலைவர்களைக் கூட மண்டையில் போடத் துணிந்தவர்கள் இன்று 24 மணி நேரத்தில் 3 கிலோ மீற்றரில் முடங்கிக் கிடக்கும் போது நடாத்துகின்ற இந்த அரசியல் முனைப்புக்கள் எந்தவித மாற்றத்தையும் கொண்டுவரப்போவதில்லை.

Vaddu_Resolution_UTROPஊதறுப் பத்திரிகை (UTROP):

இன்று நோர்வேயை மையப்படுத்தி இடம்பெற்ற இத்தேர்தலின் பின்னணியில் ஊதறுப் பத்திரிகை இருந்துள்ளது. இப்பத்திரிகை நோர்வேயின் பல்லின மக்களால் பல்லின மக்களின் தேவை கருதி 2001ம் ஆண்டில் இருந்து நடாத்தப்படுகின்ற பத்திரிகை. இப்பத்திரிகை இணையத்தளத்தை மையப்படுத்தி நடாத்தப்படுகின்ற ஒரு சமுதாயப் பத்திரிகை. இது நோர்வே மக்களினால் வாசிக்கப்படுகின்ற பத்திரிகை அல்ல. இது தினசரி பத்திரிகையும் அல்ல. இப்பத்திரிகை Europeans Minorities On Line (Eminol.com) என்ற ஸ்தாபனம் ஒன்றுடன் கூட்டாக ஐரோப்பிய ஒன்றிய கூட்டு பண உதவியுடன் நடாத்தப்படுகின்ற ஒரு இணையப் பத்திரிகை. இத்தாபனங்களின் முக்கிய பொறுப்பில் மஜோரன் விவேகானந்தன் என்ற இலங்கைத் தமிழர் ஒருவர் பதவி வகிக்கிறார். மஜோரன் விவேகானந்தன் நோர்வேயில் இருந்து அந்நாட்டின் அமைப்புகளுடன் இணைந்து புலிகளுக்கு சார்பான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக இந்திய கொழும்புப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளன.

இன்று வெளிநாடுகளில் முக்கிய ஸ்தாபனத்தில் அல்லது ஏதோ ஒரு வித்தத்தில் தனிப்பட்ட பலம் உள்ளவர்கள் அமைப்புகள் தமது பலத்தை அல்லது அழுத்தத்தை கொழும்பு அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் கொடுத்து ஏதாவது தீர்விற்கு உந்துதலைக் கொடுக்க வேண்டுமே தவிர காலாவதியாகிப் போன வெத்து அரசியல் கோசங்களுக்கு பலம்கொடுத்து பல நூற்றுக் கணக்கான மக்களைக் கொல்லவும் பல லட்சக் கணக்கான மக்களின் எதிர்காலத்தை இருட்டடிக்கவும் துணை போகக் கூடாது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

14 Comments

 • Rohan
  Rohan

  நல்லது கொன்ஸ்ரன்ரைன்.
  //இன்று வெளிநாடுகளில் முக்கிய இஸ்தாபனத்தில் அல்லது ஏதோ ஒரு வித்தத்தில் தனிப்பட்ட பலம் உள்ளவர்கள் அமைப்புகள் தமது பலத்தை அல்லது அழுத்தத்தை கொழும்பு அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் கொடுத்து ஏதாவது தீர்விற்கு உந்துதலைக் கொடுக்க வேண்டும்// என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

  இதே நீங்கள்,
  //தனித்தமிழ் ஈழம் ஏதோ மூன்றடி தூரத்தில் இருப்பதாக இதுவரை காலமும் கதையளந்து மாவீரர் தினத்திற்கு வரிசையாக போய் விசிலடித்து வந்த இந்த புலம்பெயர்வுகள் இன்று வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்று கூறி வரிசையாக நிற்பதைப் பார்க்கும் போது அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை.// என்றும் சொல்லுகிறீர்கள்.

  என்ன தீர்வு சரி என்றும் மீண்டும் ஒருமுறை சொல்லுங்கள்.

  வட்டுக்கோட்டை முடிவையும் மக்கள் அத்தீர்ப்புக்கு வழங்கிய அங்கீகாரத்தையும் தூக்கி எறிவது எவ்வகையில் சரி?

  ஒரு தீவு ஒரு தேசம் என்பது இன்னமும் சாத்தியம் தானா? இறக்குவானை இலன்கை எங்கும் வியாபிக்க மாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

  சரி – புலிகள் அற்ற ஒரு தனிநாடு என்ற கோரிக்கைக்குநியாயம் இருக்கிறதா இல்லையா? இந்தியாவோ அல்லது ஐநாவோ இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்து தருமாறு கேட்பது ஏற்புடையதா?

  இதே கேள்விக்கு மற்றவகளும் பதில் தரலாம். பார்த்திபன், மாயா போன்ற கருத்தாளர்கள் என்ன மனப்பாங்கில் உளர் எனவும் அறிய ஆவலுடையேன்.

  Reply
 • suban
  suban

  1977ம் ஆண்டு மக்கள் இட்ட ஆணை 30 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டி எடுத்துக்கொண்டு வந்து வைக்கப்படுகிறது.
  இடைக்காலத்தில் புலிகள் நடத்திய ஒப்பந்தங்கள் பேச்சுவார்த்தைகள் எல்லாம் 1977ம் ஆண்டு மக்கள் இட்ட ஆணையை முன்வைத்தா நடத்தினார்கள். ஐந்து வருடத்துக்குள்ளேயே ஏன் ஒருவருடத்துள் தோ;தல் நடந்தாலே மக்கள் அதே கருத்துடன் இருப்பதில்லை. 30வருடங்களிற்குப் பிறகும் மக்கள் அதேகருத்துடன் இருக்கிறார்கள் என்று வாதிடுவது எந்தவகையிலும் பொருத்தமானதல்ல.

  இன்று புலிகளின் இந்தவாக்கெடுப்பு விளையாட்டுகளெல்லாம் இயலாமையில்எழும் சிற்றின்பலீலைகள்தான். அதிலும் இந்த புலம்பெயர்ந்த தமிழர் உடம்புநோகாம நல்லாத்தான் போராடுகிறார்கள். இந்த வாக்கெடுப்புகள் பாருங்கள் எல்லாத்தேசத்திற்கும் பரவும். பிறகு நிழல் அரசாங்கம் மந்திரிசபை எல்லாம் அமைத்து மகிழ்வார்கள்.

  பாருங்கள் ஜெயலலிதா எவ்வளவு சிம்பிளா உலகத் தமிழினத் தலைவியாகிவிட்டார். இப்படி இலகுவாக எங்கட தமிழ்சமூத்திலதான் ஆகலாம்.

  Reply
 • Rohan
  Rohan

  //பாருங்கள் ஜெயலலிதா எவ்வளவு சிம்பிளா உலகத் தமிழினத் தலைவியாகிவிட்டார். இப்படி இலகுவாக எங்கட தமிழ்சமூத்திலதான் ஆகலாம்.//

  நம்பிக் கெட்டும் ஞானம் வராத இனம் நம்மினம். என்ன செய்வது? ஆனால், சமுத்திரத்தில் அமிழ்பவன் ஒரு சிறு மரக் கட்டையைக் கண்டாலும் அதைப் பற்றிக கொண்டு தப்பிவிடலாம் என்று நினைப்பது போல், தமிழனுக்குக் கிடைத்திருப்பது ஜெயலலிதா என்ற மரக்கட்டை.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  றோகன் உங்கள் உதாரணம் கூட பொருந்துவதாக அமையவில்லையே. மரக்கட்டையைப் பிடித்திருந்தால் அதை வைத்து நீந்தியாவது கரை சேரலாம். ஆனால் எம்மவர் சிலர் கடலில் மிதந்து வருவது பஞ்சு மூட்டை என நம்பி பிடித்திருப்பது கரடியை.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  முதலில் யதார்த்தத்தை அப்படியே தந்த கொன்ஸ்ரன்ரைன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். மகிந்த அரசு புலிகளின் மீதான யுத்தத்தை ஆரம்பித்து மடுவிற்கு முன்னேறிய போது நடேசன் சொன்னார் அரசு உடனடியாக யுத்த நிறுத்தம் செய்ய வேண்டும் தாம் (புலிகள்) யுத்தநிறுத்த உடன்படிக்கையை வரிக்கு வரி நடைமுறைப்படுத்துகின்றோம் என்று. அதன் பின் இராணுவம் படிப்படியாக முன்னேறி கிளிநொச்சி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு என்று தொடர்ந்து வீழ்ந்ததும் நடேசன் சொன்னார் தாம் ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்தம் செய்வதாகவும் திம்பு பேச்சுவார்த்தையில் எட்டிய முடிவுகளை தாம் நடைமுறைப்படுத்த தயாராக இருப்பதாகவும். தற்போது இறுதியில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும் தூசு தட்டி எடுத்து புலன் பெயர்ந்த பெடியளை உசுப்பேத்தி ஏதாவது செய்யலாமா என்று பார்க்கின்றார். புலிகளின் இப்படியான தந்துரோபாய அறிக்கைகளை சரியாக உற்று நோக்கினால் யாவரும் ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். இங்கே புலிகளால் வெளியிடப்பட்ட செய்திகள் யாவும் எந்தத் தீர்மானத்திலும் தெளிவான பிடிப்பில்லாமல் ஏதாவது ஒன்று சரிவராவிட்டால் மற்றைய தீர்மானம் எனத் தொடர்வதும் இதில் எந்தவொரு தீர்மானத்தையும் அரசு ஏற்று உடனடி யுத்த நிறுத்தம் ஒன்றை மேற்கொண்டு தங்கள் தலைகளின் உயிர்களை காப்பாற்ற மட்டுமே முயற்சிக்கின்றார்கள் என்பதும் தெளிவு.

  புலிகள் முன்பு எந்தக் காலகட்டத்திலும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டவர்கள் இல்லை. அவர்களின் தீர்மானம் என்றும் ஆயுதம் சார்ந்ததாகவே இருந்தது. அதனாலேயே அன்று பல அரசியல்வாதிகளையும், புத்திசாலிகளையும் போட்டுத் தள்ளி தமிழ் மக்களை ஆட்டுமந்தைக் கூட்டமாக்கி தாம் சொல்லுவதற்கு மட்டும் துப்பாக்கி முனையில் தலையாட்ட வைத்தார்கள். பின்பு எதற்காக தற்போது வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை கையிலெடுத்தார்கள் புலி பசித்தால் புல்லையும் தின்னும் என்று காட்டவா??

  திம்புப் பேச்சுவார்த்தையில் சில இயங்கங்கள் கொள்கையடிப்படையில் ஒன்றாகச் சேர்ந்து இயங்கவது என முடிவெடுத்து அனைவரும் கையெழுத்து போட்டனர். கையெழுத்துப் போட்ட மை காய முன்னமே அதைக் கிழித்தெறிந்தவர்கள் புலிகள். பின்பு எப்படி தி்ம்பு பேச்சுவார்த்தையில் எட்டிய முடிவுகளை நடைமுறைப்படுத்தவார்கள்??

  மகிந்த அரசிற்கு அடிக்கடி தாங்கள் சமாதான ஒப்பந்தத்தை கிழித்தெறிந்து விட்டு போரை ஆரம்பித்து விடுவோமென பலமுறை மிரட்டல்கள் விட்டுக் கொண்டிருந்தனர் புலிகள். இதன் மூலம் மகிந்த அரசை பயமுறித்தியே தமது வழிக்குக் கொண்டுவரலாமெனவும் சண்டை ஆரம்பித்தாலும் அதை தொடர்ந்து நடாத்தும் ஆற்றலோ ஆதரவோ மகிந்தவிற்கு இல்லையென்றும் புலிகள் கனவு கண்டு கொண்டிருந்தனர். அதன் உச்சக் கட்டமாகவே மாவிலாறை இடைமறித்தனர். அதன் பலனை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். தற்போதைய நிலைமைகள் புலிகளுக்கு பாதகமாக இருப்பதால் இப்படி எதையாவது சொல்லி தம்மை காப்பாற்றிக் கொள்ள முடியாதா என்று அங்கலாய்க்கின்றனர்.

  நோர்வேயில் வாக்கெடுப்பில் பங்குபற்றியவர்களில் 98.5 வீதமானவர்களே வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தள்ளனர். ஆனால் ஊதறுப் பத்திரிகையும் ஏனைய சில ஊடகங்களும் ஏதோ நோர்வேயிலுள்ள தமிழ் மக்களில் 98.5 வீதமானோர் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருப்பதாக ரீல் விட்டுள்ளனர். ஆனால் இத்தீர்மான வாக்களிப்பால் என்ன பயன் ஏற்படப் போகின்றதென்பதை எவரும் விளக்கவுமில்லை.

  இங்கே GTV மற்றும் தீபம், IBC போன்ற ஊடகங்களின் புரளி பற்றியும் சிலர் குறிப்பிட்டுள்ளார்கள். தற்போது தீபம் எப்படி தமிழர்களை முட்டாள்களாக்குகின்றதென்பதையும் நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். காரணம் தீபம் 3 நாட்களுக்கு முன்பு ஒளிப்பதிவு செய்த ஒளிபரப்புகளைக் கூட நேரலை (Live)என்று போட்டுக் காட்டி தமிழ்மககள் அனைவரையும் முட்டாள்களாக்குவதில் முன்னிலை வகிக்கின்றது.

  றோகன் மேலே பதியப்பட்ட எனது கருத்தை உங்களுக்கான பதில்க் கருத்தாகவும் இங்கு தந்துள்ளேன்.

  Reply
 • ross
  ross

  //ஒரு தீவு ஒரு தேசம் என்பது இன்னமும் சாத்தியம் தானா? //Rohan
  NO.Tamil Ealam is the only soluation.

  Reply
 • thurai
  thurai

  வன்னியின் போர் அவலங்கழும், அகதிகளாகி இராணுவத்திடம் ஒருநேர உணவிற்கு கையேந்தும் மக்களின் நிலமையையும் கருத்திற் கொள்ளாத தமிழரே வட்டுக்கோட்டை தீர்மானம் பற்ரிப் பேசுகின்றனர். மக்களின் நலனை மதிக்காத, பதவிமோகம் கொண்டவர்களின் செயற்பாடுகளே இவைளெல்லாம்.

  83 கலவரத்தை காட்டி தொடங்கிய போராட்டம், இன்று அடிதவர்களிடமே தமிழரை கையேந்த வைத்து விட்டது. இனியாவது தமிழரின் உருமை பற்ரி பேசுவோர் முதலில் புலத்தை விட்டு விட்டு வன்னிக்குப் போங்கள். புலத்தில் வாழும் தமிழராவ்து நிம்மதியாக இருக்கட்டும்

  துரை

  Reply
 • Kullan
  Kullan

  நான் இதை மீண்டும் வலியுறுத்துகிறேன் 98.95வீதம் என்பது முழுப்பிழையானது. சிலவருடங்களுக்கு முன் நகரசபைத் தேர்தலில் தமிழ்மக்கள் இடையே தேர்தல் பிரசாரம் செய்த பிரமுகர்கள் கூறினார்கள் நோர்வே தலைநகரில் மட்டுமே 10 000 விடக்கூடிய வாக்குகள் இருக்கிறன்றன என்று. இப்படி நாடுமுழுவதுமாக சுமார் 8 000 ஆனது. இம்முறை வாக்களிப்பதற்கு நோர்வேயித் தமிழர்கள் மட்டுமல்ல இடைக்கால விசா இருப்பவர்களும் அனுமதிக்கப்பட்டார்கள். எப்படி வாக்குரையுள்ளவர்கள் தொகை குறைந்தது. இங்கேயும் புலிகளின் பிஸ்டல் குழு திரிகிறதா? இது மக்களைக் கேணையர்களாக்கும் வேலை. கொன்ஸடன்டையின் குறிப்பிட்டுள்ளார். புலிகள் வரலாற்றுத் தவற்றைத் திருத்த எத்தனிப்பது காலம் கடந்த ஞானம் என்கிறார். நீங்கள் புலிகளைப் புரிந்து கொண்டவிதம் பிழையானது.¨தம்வரலாற்றுத் தவறுகளுக்கு நியாயம் கற்பிக்க முயற்சிக்கிறார்கள் என்பது தான் உண்மை. இன்னும் வெளிநாட்டுப் பணங்களிலும் அங்குள்ள குழந்தை குட்டிகளின் குருதியிலும் நீச்சல்தடாகம் கட்டி விளையாட விரும்புகிறார்கள்.

  ஒரு முக்கிய விடயம் என்னவென்றால் உத்துறுப் என்ற ஊடகத்தைப்பற்றி எழுதிய அத்தனையும் உண்மை. இந்திய கொழும்புப் பத்திரிகைகளுக்குத் தெரிந்த விடயம் நோர்வே வாழ் தமிழ்சமூகத்துக்கு தெரியவில்லை என்றால் இவர்களின் வாரிசுகள் வன்னியில் அடிவாகிச்சாகாமல் என்ன வேறு என்ன செய்யும். ஒரு செம்மறியாடு முன்னால் கத்திக் கொண்டு போனால் மிச்சம் மீதியான செம்மறிகளும் பபபப என்று கத்திக் கொண்டு போகுமாம். இதுதானே உலகநாட்டுத் தெருக்களில் நடக்கிறது.

  தயவுசெய்து எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள் புலிகள் இவ்வளவு காலமும் நடத்தியது விடுதலைப் போராட்டமல்ல. வெளிநாட்டுத் தமிழர்களைத் திருப்திப்படுத்தி பணம்பற்றித்தலே நடந்தது. அதனால்தான் இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்ற அறிய முயற்சிக்கிறார்கள். இதை நடத்திய உத்துறுப் என்ற சிறு ஊடகம் இந்தத் தேர்தலை ஒரு புரயெக்ட் (செயல்வடிவம் > செயல்திட்டம்) நடைமுறைப்படுத்தப்பட்டது என்று காட்டி அரசிடம் உதவிபணம் பெறுவார்கள்.; இங்கும் வியாபாரம்தான். ஊரையடித்து உலையிலையிலை போடவேண்டும் என்று நிற்கிறீர்கள் எடுபட்டவர்கள் குடுத்துத் தொலையுங்கோ.

  Reply
 • indiani
  indiani

  வட்டுக்கோட்டை தீர்மானத்தின் நாயகனே அமிர்தலிங்கம் இந்த அமிர்தலிங்கத்தை சுட்டுக்கொன்றதிற்கு இன்று என்ன? பதில் புலிகளம் இன்று தீர்மானத்தை கேவலப்படுத்தும் கி பி அரவிந்தன் கோஸ்டி பதில் தரமா? இந்த அமிரின் கொலையை கண்டிக்குமா? இந்த வாக்கெடுப்புக்கு முன்பு அமிரின் கொலைளை கண்டித்து இந்த தீர்மானத்தின் மீது ஏன் இப்படி செய்கிறார்கள் என்பதை யபருக்கும் விளக்கமளித்தாக எமக்கு தெரியவில்லை எல்லாம் இதுவும் ஏக போகபிரதிநிதித்துவத்தின் விளைவோ எடுத்தது எல்லாம் செய்யலாம் நீங்கள் போடு எண்டால் போட வேண்டும் தெருவுக்கு வா எண்டால் வரவேண்டும் இல்லாவிட்டால் அழுது எண்டாலும் கூப்பிடுவியள்.

  கி பி அரவிந்தன் உமது மாக்ஸீய அரசியல் புளித்து விட்டது புலிகளின் திருகு தாளங்களை இப்போ நீங்கள் பிடித்துக்கொண்டு புலிகள் தான் கட்டாயப்படத்தி செய்விக்கிறாங்கள் எண்டு கதையும் வேற அளப்புக்கு குறைவில்லை.

  வாக்களித்தவர்களுக்கு மண்டையில் என்ன இருக்கு தாங்கள் ஜரோப்பிய பிரஜைகள் எப்படி ஈழப்பிரச்சினைக்கு வாக்களிக்க முடியும்.
  முதலில் வெளியேறி கஸ்டப்படும் மக்களுக்கு வணங்கா மண்ணுக்கு சேர்த்த உணவுப் பொருட்களை அனுப்பச் சொல்லி ஒரு ஆர்ப்பாட்டம் நடாத்தினால் பிரயோசனமாக இருக்கும்.

  வணங்காமண் பொருட்கள் எட்மன்டனில் தனியார் களஞசியத்தில் கிடந்து பழுதடைகிறதாம் புலிகள் அவரை வித்துவிட்டு காசுதரும்படி கேட்டுள்ளனர் ஆனால் அந்த கடை முதலாளி பின்னாளில் தனக்கு பிரச்சினை வரப்போகுது எண்டு பயப்பிடுகிறாராம்.

  Reply
 • மாயா
  மாயா

  மக்களுக்காகத்தான் போராட்டம்.
  போராட்டத்துக்காக மக்கள் இல்லை.

  ஆனால் இப்போது நடப்பது போராட்டத்துக்கான நியாயத்தை நிலை நிறுத்துவதற்கு மக்கள் கேடயங்களாக போர்ப் பிரதேசத்திலும் , ஊதுகுழல்களாக புலத்திலும் பலியாக்கப்படுகிறார்கள்.

  இவை அனைத்தும் தமிழருக்கான பிரச்சனையை உலகத்தின் கண்களுக்கு எடுத்துச் சென்றுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் இதனால் பாதிப்புக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை உலகம் அறிந்து கொண்ட நிலையை விட அதிகம்.

  புலிகள் கவர்ச்சியான விளம்பரங்கள் போல் வீர காவியப் பேச்சுகளை நடத்தினார்கள். இப்போது அதை நிறுத்தி விட்டு , இறுதி நேரத்தில் வீரிட்டு கத்துகிறார்கள். ஒரு அபலையின் குரல் கேட்டு எந்தவொரு நாயகனாவது கை கொடுப்பான்? என்பதே போன்ற புலிகளது ஆதங்கம். எதிர்பார்ப்பு.

  இவை அனைத்துக்கும் மேலாக உறவுகளை இழந்த , உறவுகள் குறித்த தகவல் தெரியாத புலத்து மக்களின் சோகம், அவர்களோடு இணைந்து வாழும் எமக்கும் சோகத்தைத்தான் தருகிறது. இவற்றை பார்த்து சிரிப்பவனாக யாராவது இருந்தால் அவன் மன நோயாளியே?

  இதைவிட சோகம் போர் மூண்டுள்ள பகுதிகளிலும் , இடைத் தங்கல் முகாம்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. இங்குள்ளவர்களை விட அந்த மக்களின் சோகமும் , அந்த மக்களின் எண்ணங்களுமே முக்கியமானது.

  இராணுவத்திலிருந்து தப்பி வந்த ஒரு படை வீரனை , இராணுவம் மீண்டும் பிடித்துச் செல்ல முற்படும் போது , மகனை காப்பாற்ற அந்த படை வீரனின் தாய் கதறித் தடுக்க முனைகிறாள். அரசுக்கு சாபமிடுகிறாள்.அது நிறைவேறாது போய் பிடித்துச் செல்ப்பட்டவன் போரில் இறந்த பின், அதே தாய் தன் மகன் மாவீரன் என்று சொல்லிக் கொள்கிறாள்.

  முன்னது நிஜம். பின்னது தன்னையே தான் ஏமாற்றிக் கொள்ளும் மனோபாவம்.

  இதே சோகம்தான் பலியாகும் அத்தனை தமிழ் போராளிகளுக்கும். அத்தனை சிங்கள படையிருக்கும். இதை நிறுத்தும் வல்லமை மக்களிடம் இல்லை. இப்போதும் தலைவர்களிடமே இருக்கிறது.

  இங்கே யார் யாரிடம் தோற்பதென்பது முக்கியமல்ல. யார் தன் மக்கள் குறித்து சிந்திக்கிறார்கள் என்பதே முக்கியம்.

  ஏசு , தன்னை கொலை செய்யத் தேடி வந்தவர்களிடம் , தன் சீடர்களை காட்டி விட்டு தப்பி இருந்தால் ஏசுவை எவருமே ஏறிட்டும் பார்த்திருக்க மாட்டார்கள். புத்தன் தனக்காக அடுத்தவர்களை போதி மரங்களின் கீழ் தியானம் இருந்து இறக்குமாறு பணித்திருந்தால், புத்தனை இந்த உலகம் பின்பற்றியிருக்காது.

  இப்போது நடப்பது என்ன?

  அதை நாம் சொல்லி அடுத்தவர் தெரிய வேண்டியதில்லை.

  மக்களை மீட்கும் பணி என மகிந்த சொல்கிறார். மக்களுக்கான யுத்தம் என பிரபாகரன் சொல்கிறார். ஆனால் சாகும் மக்கள் எவருடையது. அந்த மக்களுக்கு வாழ்வு கொடுத்துவிட்டு தன்னை ஒப்படைப்பதே தலைவனுக்குரிய அல்லது தாய்க்குரிய தன்மையாகும்.

  இங்கே நடப்பது நல்ல தங்காள் கதை. அனைவரையும் சாகடித்து விட்டு தானும் சாக வேண்டும் எனும் எண்ணம்.

  மேலத் தேசங்களிலும் , ஐரோப்பாவிலும், பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர்கள் கருத்துகளை திணிக்க முடியாது. பெற்றோர் விடயத்தில் பிள்ளைகள் அழுத்தங்கள் கொடுப்பதில்லை. அது என் பிரச்சனையில்லை. அது அவர் பிரச்சனை எனும் மனப்பாங்கு இருக்கிறது. அதுவே நடைமுறையாகவும் உள்ளது. உங்கள் வீட்டில் என்ன பிரச்சனை என்ன என்று யாரும் கேட்பதில்லை. உனக்கு என்ன பிரச்சனை என்றே கேட்பார்கள்?

  இப்படியான வாழ்கை முறையில் வாழும் அல்லது கற்ற ஐரோப்பாவுக்குள் உள்ள நோர்வே தமிழர்கள் எப்படி எங்கோ உள்ளவர்களது தலைவிதியை நிர்ணயிப்பது?

  உங்கள் தலைவிதியை அங்குள்ள மக்களால் நிர்ணயிக்க விட்டுத் தருவீர்களா? எனும் கேள்வி எழுந்தால், அது எப்படி முடியும். எம்மைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும் என்ற கருத்தே நம்மிடமிருந்து வரும்.

  எம்மை வழி நடந்த அவர்களுக்குத் தெரியாதது போல அவர்களை வழி நடத்த எமக்கும் தெரியாது என்பதே யதார்த்தம்.

  இனி வரும் எந்தவொரு முடிவும் இலங்கை வாழ் மக்களால் மட்டுமே எடுக்கப்பட வேண்டும். அவை அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களால்தான் தீர்மானிக்கப்பட வேண்டும்.

  Reply
 • msri
  msri

  வேலையில்லாத உடையார் பழைய தோம்பை எடுத்து அடிக்கடி வாசிப்பாராம்! இந்நிலைதான் வட்டுக்கோட்டைத்தீர்மான வாக்கெடுப்பும்> விவாதங்களும்! தமிழ்மக்கள் விடுதலைக்கு ஆற்றையெண்டாலும் பரவாயில்லை ஒரு “தனிஈழம்” என்ற சொல் இருந்தால் போதும்! அது விடுதலை பெற்றது போன்றதொரு தற்திருப்தி! என்று தணியும் இந்த “தனிஈழ” மோகம்!

  Reply
 • siva
  siva

  மாயா உங்களின் கருத்துக்களை நான் வரவேற்கிரேன்.

  Reply
 • அறிவானவன்
  அறிவானவன்

  பார்த்திபன் on May 13, 2009 1:35 pm முதலில் யதார்த்தத்தை அப்படியே ………….

  உங்களின் கருத்துக்களை நான் வரவேற்கிரேன்

  Reply
 • Stalinistmao
  Stalinistmao

  It seems LTTE did not approve this referendum. LTTE would have prefered if the referendum affirmed Tamils support to Tigers.

  Recently Nadesan confirmed that Tigers (Thesia Thalaivar Prabaharan) would consider a political solution based on Thimbu Principles which the LTTE bent on destroying some years ago.

  Nobody knows why the organisers rushed to conduct the referendum in a short space of time. What has been the UK Referendum result?

  Reply