போர்ப்பகுதி மருத்துவர்களுக்கு அமைதி விருதுக்கு ஐ.நா பரிந்துரை

varatharaja.gifஇலங்கையில் 26 ஆண்டுகளாக நடந்து வரும் போர் ஒரு முடிவுக்கு வரும் கட்டத்தை எட்டியிருப்பது போல் தோன்றும் நிலையில் , அந்தப்பகுதியில் மிகவும் கடினமான சூழலில் பணியாற்றிவந்த வரதராஜா, சத்யமூர்த்தி போன்ற மருத்துவர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள், கௌரவிக்கப்படவேண்டியவர்கள் என்று ஐ.நா மன்ற இலங்கை அதிகாரி கோர்டன் வெயிஸ் கூறியுள்ளார்.

இது குறித்து பிபிசியிடம் பேசிய வெயிஸ், இந்த மருத்துவர்கள் இந்த கடினமான மாதங்களில் அப்பகுதியில் மருத்துவ சேவைகளை தன்னந்தனியாக நடத்தும் பொறுப்பை அவர்கள் சுமந்தார்கள். மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை நிலவிய சூழலிலும், பெருந்தொகையான மக்கள் கொல்லப்பட்டு காயமடைந்த சூழலிலும் அவர்கள் தங்கள் பணியை தங்களால் முடிந்த மட்டில் செய்தார்கள். எனவே ஐ.நா மன்றம் அவர்களுக்கு அமைதி பரிசு தர சிபாரிசு செய்திருக்கிறது. அவர்களை பிப்ரவரியிலேயெ இந்த பரிசுக்கு சிபாரிசு செய்துள்ளோம். என்றார் கார்டன் வெயிஸ்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • rohan
    rohan

    இவர்களின் உறவினர்கள் தான் இந்த விருதுகளைக் கண்ணீருடன் போய்ப் பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    rohan உங்கள் எண்ணங்கள் மாறாது. தலைவர் கூட தப்பக் கூடாது சாக வேண்டும் அல்லது சாகடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் நீங்கள்.

    5 வைத்தியர்கள் நேற்றே அரச படைகளிடம் சரணடைந்து விட்டனர். அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள்.

    Reply
  • rohan
    rohan

    நண்பன் //ரொகன் உங்கள் எண்ணங்கள் மாறாது. தலைவர் கூட தப்பக் கூடாது சாக வேண்டும் அல்லது சாகடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் நீங்கள்.//

    இது தான் பக்கம் சாரா மக்களின் தலைவிதி. எப்போதுமே வீண் மரணங்கள் தவிர்க்கப் பட வேண்டும் என்பது எனது நிலைப்பாடு. வன்னியில் உயிர் காத்த மருத்துவர்கள் தெரியாமலோ தெரிந்து கொண்டோ அரச ஆயுதங்களால் கொல்லப்படுவர் என்றே நான் எதிர்பார்த்தேன்.

    எனக்கு மிக நெருக்காமாகத் தெரிந்தோர் உட்பட எத்தனை உயிர்களைப் பிரிய விடாமல் பிடித்து நிறுத்தியவர்கள் இவர்கள். இவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று நான் நினைத்திருப்பேன் என நீங்கள் எழுதியது உங்கள் கணிப்பு வன்மையின் பரிதாபத்தைச் சுட்டுகிறது…..

    Reply
  • நண்பன்
    நண்பன்

    // இவர்களின் உறவினர்கள் தான் இந்த விருதுகளைக் கண்ணீருடன் போய்ப் பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.//- rohan on May 16, 2009 8:23 am

    இது உங்கள் எதிர்பார்ப்பு. அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பதை உங்கள் எழுத்துக்கள் சொல்லியது என்பதை புரிந்து கொள்ள உங்களால் முடியவில்லையா? …

    Reply
  • accu
    accu

    நண்பன் நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ரோகனின் கருத்து உண்மையில் ஒரு தனிப்பட்டவரின் கருத்தல்ல. இவர் புலம்பெயர்ந்த மக்களில் ஒரு கணிசமான பகுதியினரின் குரலாகவே ஒலிக்கிறார். இவர்கள் தாம் வாதிடும் கருத்துக்களுக்குப் பலம் சேர்க்க தினமும் தமிழ் மக்களின் உயிரிழப்புக்கள், கற்ப்பளிப்புக்கள், கருக்கலைப்புக்கள், உடல்ப்பாகங்கள் களவு என கொடுமையான செய்திகளைதான் தேடுவார்கள். அவை கிடைக்கும்போது சந்தோசப்படுவதும் கிடைக்காதபோது கவலை கொள்வதும்தான் இவர்களின் மனநிலை. இந்த வைத்தியர்கள் சரணடைந்த செய்தி கூட இப்படிப்பட்டவர்களுக்கு ஏமாற்றம்தான்.

    Reply