இந்தியாவின் ‘?’ மிகப்பெரும் துரோகம்!! பிரபா உட்பட புலிகளின் தலைவர்கள் அவர்களின் குடும்பங்கள் சரணடைந்த பின்னரேயே கொல்லப்பட்டு உள்ளனர்!!! த ஜெயபாலன்

Pirabakaran_Vcharles_anthony.jpgLTTE_Leader_Familyதமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ வலிமையால் வெற்றி கொண்டுள்ள அரச படைகள் மிக மோசமாக சர்வதேச யுத்த விதிகளை மீறுவதாக செய்திகள் வெளிவருகின்றது. தங்களிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் படுகொலை செய்து வருவதாக தேசம்நெற்கு நம்பகரமான செய்திகள் தெரிவிக்கின்றன. மே 17ம் திகதி இரவு தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் தோல்வியை ஏற்று ஆயுதங்களைக் கைவிட்டு உள்ளதாகத் தெரிவித்த பின்னரேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

இவருடைய உடல் இன்று கண்டெடுக்கப்படும். இவருடைய உடல் மறுநாள் கண்டெடுக்கப்படும் என்று அறிவித்து ஒரு வகை சாகசமாக இக்கொலைகள் நடத்தப்பட்டு உள்ளது.

இந்த அவலத்தின் கொடுமை என்னவெனில் தங்களது தலைவர்கள் சரணடைய மாட்டார்கள் என்று வாய்ச்சொல் வீரம் மட்டும் பேசும் புலத்து தமிழர்கள் அக்கொடுமையை வெளிக்கொண்டுவரத் தயங்குகின்றனர். தாங்களே கட்டமைத்த விம்பங்களை உடைக்க முடியாமல் பொன் விலங்கு பூட்டிய சூழ்நிலைக் கைதிகள் ஆகி உள்ளனர். சரணடைந்த தலைவர்கள் கொல்லபடுகிறார்கள் என்றால் தாங்கள் கட்டமைத்த அடங்காத் தமிழன், மறத் தமிழன், வீரத் தமிழன் என்ற விம்பங்கள் உடைந்துவிடும் என்ற அச்சத்தில் யதார்த்தத்தை உணர மறுக்கின்றனர்.

அவர்களின் மயிரைக் கூட இராணுவத்தால் தொடமுடியாது, அவர்களின் சாம்பலும் கிடைக்காது என்று புராண காலத்து கதை காலேட்சபம் பாணியில் கதையளப்பிற்கு எவ்வித குறைவும் இல்லை. அரசியல் தஞ்சம் கேட்கும் போது உள்ளுணர்வை கைவிட்டு எதையும் செய்யத் தயாராக இருக்கும் புலத்து உறவுகளுக்கு பல நாள் சரியான நித்திரையின்றி, சரியான உணவின்றி மரணப் போராட்டத்தை நடத்தியவர்கள் வேறு வழியின்றி சரணடைவதை பெரும் இழுக்காக அருவருப்பாக எண்ணுவதில் எவ்வித நியாயமும் இல்லை. புலத்து உறவுகளின் வாய் வீரத்திற்காக விட்டில் பூச்சிகள் போல் போராளிகள் மடிய வேண்டிய அவசியமில்லை.

சரணடைபவர்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேசச் சட்டங்களை உயர்த்திப் பிடித்து அவர்களது உயிரைப் பாதுகாக்கப் போராடுவதை விடுத்து எதற்காகவோ போராடுகிறார்கள். எப்போது? எதற்காகப் போராட வேண்டும்? என்ன கோரிக்கையை முன் வைப்பது தந்திரோபாயமானது? என்பதையெல்லாம் விட்டு சலசலப்பை ஏற்படுத்துவதற்கு அப்பால் அவர்களால் செல்ல முடியவில்லை.

அன்று மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படும் போது மக்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை. வன்னி பூர்வீக மண். அங்கிருந்து மக்களை எழுப்பக் கூடாது என்றார்கள். எங்கள் தலைவர் பிரபாகரன் என்றார்கள்.

கடைசியில் ‘புலிகளை தடுத்து வைத்திருக்கும் மக்களை விடுவிக்கச் சொல்லுங்கள். நாங்கள் மற்றைய விடயங்கள் பற்றி கவனிப்போம்’ என்று கூறி மாணவர் பரமேஸ்வரனின் உண்ணாவிரத்ததை பிரித்தானிய அரசு முடித்து வைத்தது. அதனைத்தான் ‘வெளியே சொல்ல முடியாத முக்கியமான விடயத்தை பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது’ என்று புலிசார்பு ஊதுகுழல்கள் சிறிது காலம் ஊதித் திரிந்தன.

இன்று புலிகளின் தலைவர்களும் அவர்களின் குடும்பங்களும் படுகொலை செய்யப்படுகின்றனர். ஆனால் இவர்களோ எங்கள் தலைவர்கள் எல்லாம் பூர்வீக மண்ணை விட்டுத் தப்பிச் சென்று நலமாக காட்டுக்குள் தீவு ஒன்றில் இருப்பதாக திருப்திப்பட்டுக் கொண்டு ‘தலைவருக்கே சவாலா’ என்று கூறிக்கொண்டு உலா வருகின்றனர். புலிப் போராளிகளும் தலைவர்களும் அவர்களது குடும்பங்களும் அந்த மண்ணோடு மண்ணாக்கப்படுவது பற்றிச் சிந்தித்து செயற்பட அவர்களால் முடியவில்லை.

நிஜமாகவே புலிகளுக்கு இறுதியாக அமைந்த இந்த யுத்தத்தின் கடைசிச் சில நாட்கள் மிக முக்கியமானது. புலிகளை வேரோடு அறுத்தெறியும் திட்டம் மிகக் கச்சிதமாக நிறைவேற்றப்படுகிறது. அதனை அறிய முடியாது புலி ஐதீகத்தை ஏற்றி மயக்கத்தில் உள்ளது புலிகளின் தமிழக புலம்பெயர் ஆதரவுத்தளம். ‘முகம் இளமையாக உள்ளது.’ ‘முகத்தைத் திருப்ப முடியாது.’ ‘சேவ் எடுக்கப்பட்டு இருக்கிறது.’ ‘மீசையில் சில மயிர்கள் மிஸ்ஸிங்’ என்று புலத்து உறவுகள் எல்லாம் குற்றவியல் பரிசோதணையில் நிபுணர்கள் ஆகிவிட்டனர். இதற்கு இந்திய புலனாய்வுச் சமூகத்தில் நன்கு அறியப்பட்ட ஒருவரின் குறிப்புகளை இங்கு தருகிறேன்.

No reason to doubt the statement of the Sri Lankan Army about the death of Prabakaran, the leader of the Liberation Tigers of Tamil Eelam ( LTTE), and other leaders of the LTTE. Doubts about the circumstances relating to their death will remain. These doubts will have no impact on the ground situation. Pointless wasting time and space analyzing the doubts.
20-May-2009 : B. Raman – Secretary (retd), Cabinet Secretariat, Govt. of India, New Delhi, and, presently, Director, Institute For Topical Studies, Chennai.

இந்திய புலனாய்வுச் சமூகத்தை மேற்கோள் காட்டுவதற்கு காரணங்கள் உண்டு. இந்த யுத்தத்தை பின்னிருந்து நடத்துவது இந்தியா. இந்திய புலனாய்வுத்துறை. அவர்கள் யுத்தக் களத்திலும் உள்ளனர். வே பிரபாகரன் கொல்லப்பட்டார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் எப்படிக் கொல்லப்பட்டார் என்பதில் தான் சந்தேகங்கள் என்கிறார் பி ராமன். இந்த சந்தேகங்கள் யுத்த களத்தில் உள்ள நிலைமைகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கூறும் பி ராமன் அந்த சந்தேகங்களை ஆராய்வது அர்த்தமற்றது என்கிறார்.

புலனாய்வுச் சமூகத்தைச் சேர்ந்த பி ராமனுக்கு அது அர்த்தமற்தாக இருக்கலாம் ஆனால் மனிதாபிமான நோக்கில் செயற்படும் ஒவ்வொருவரும் அதனை ஆராய்வது தவிர்க்க முடியாதது. வே பிரபாகரன் மட்டுமல்ல புலிகளின் முக்கிய தலைவர்கள் எப்படிக் கொல்லப்பட்டனர் என்பது ஆராயப்பட வேண்டும்.

அவர்கள் கொல்லப்பட்டுள்ள முறை அதனை தெளிவாக வெளிப்படுத்துகிறது. ஜேவிபி காலகட்டத்தில் ஜேவிபி எவ்வாறு களையெடுக்கப்பட்டதோ அதே போன்றே இன்று புலிகளின் களையெடுப்பும் நடாத்தப்படுகிறது. ஒரு வித்தியாசம் அன்று ஜேவிபி களையெடுப்பில் சிவில் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்த மஹிந்த ராஜபக்ச இன்று புலிகளின் களையெடுப்பை நடத்துகின்றார்.

ஜேவிபி களையெடுப்பில் அதன் தலைவர் ரோகண விஜயவீர உட்பட அவ்வமைப்பின் தலைவர்கள் இளைஞர்கள் யுவதிகள் கொல்லப்பட்டனர். களனியாற்றில் வீசப்பட்டனர். அதே போல் இன்று புலிகளின் களையெடுப்பில் சரணடைந்த அதன் தலவர் பிரபாகரன் உட்பட புலிகளின் தலைவர்கள் அவர்களின் குடும்பங்கள் சுட்டுக்கொல்லப்பட்டு நந்திக் கடற்கரையில் வீசப்படுகின்றனர்.

மே 16ல் இந்திய தேர்தல் தங்களுக்கு எதிராக அமைந்ததைத் தொடர்ந்தே புலிகள் தங்களது இறுதிக் கட்டத்தை உணர்ந்தனர். அன்று (மே 16) காலையே அவர்கள் தங்கள் கணக்குத் தவறியதை அறிந்துகொண்டனர். உடனடியாக புலிகளின் சர்வதேச இணைப்பாளர் செல்வராஜா பத்மநாதன் ‘எதுவும் செய்யத் தயார்’ என அமெரிக் அதிபர் ஒபாமாவிற்கு பகிரங்கமாகத் தெரிவித்தார். ‘எதுவும் செய்யத் தயார்’ என்பது சரணடையவும் தயார் என்பதையே வெளிக்காட்டி நின்றது.

புலிகள் 400 * 600 சதுர மீ பரப்புள்ள ஒரு சிறிய காட்டுப்பகுதிக்குள் சுற்றி வளைக்கப்பட்டனர். இதன் அளவு ஒரு உதைப்பந்தாட்ட மைதானம் அளவே இருக்கும். அந்நிலையில் ஜோர்தானுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி தான் பயங்கரவாத்தில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நாட்டிற்கு செல்லப் போகிறேன் என்று மே 16ல் தெரிவித்துவிட்டு தனது பயணத்தை குறுக்கிக் கொண்டு இலங்கை பயணமானார். ஜனாதிபதி பயணமாகும் போது தெரிவித்த கூற்றும் மறுநாள் மே 17 காலை விமானத்தில் இருந்து இறங்கி தரையில் வீழ்ந்து வணங்கியதும் இராணுவத்தின் வெற்றியை மிக உறுதிப்படுத்தி உள்ளது.

ஒரு சிறு பகுதிக்குள் சுற்றி வளைக்கப்பட்ட புலிகள் தொடர்ச்சியான தாக்குதல்கள் நித்திரையின்மை பசி ஆகியவற்றினால் ஏற்படும் களைப்பு என அவர்கள் மிகக் கடுமையான உடலியல் அசௌகரியத்திற்கு உள்ளாகி இருந்தனர். இந்நிலையில் அவர்களிடம் இருந்த விரக்தி, வெறுமை, மனவுறுதித் தளர்வு அனைத்தும் எதிர்பார்க்கக் கூடியதே. இருந்தும் அன்று (மே 17) வெளிவந்த சூசையின் தொலைபேசி வேண்டுகோள் ‘போர் இப்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இப்போது கடைசி மணித்தியாலச் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.”  எனத் தெரிவித்து இருந்தது.

ஆனால் அதே நேரப்பகுதியில் வந்த செல்வராஜா பத்மநாதனின் வேண்டுகோள் ”இந்த போர் கசப்பான ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றது. எம்மிடம் இப்போது கடைசியாக ஒரே தெரிவுதான் இருக்கின்றது. எமது துப்பாக்கிகளை மெளனிக்கச் செய்வதற்கு நாம் தீர்மானித்திருக்கின்றோம்.”’ என்றது. செல்வராஜா பத்மநாதனின் கூற்றுப்படி மே 17 பிற்பகலுடன் விடுதலைப் புலிகளின் துப்பாக்கிகள் மௌனமாகின. அவர் ”இராணுவத்தினரிடம் சரணடையும் போராளிகள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு அனைத்துலக சமூகத்தை நான் கேட்டுக்கொள்கின்றேன்.” எனத் தெரிவித்து இருந்தார்.

”தமிழ் புலிகள் சர்வதேச சமூகத்திடம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக தம்மிடம் மிகத் தெளிவாகத் தெரிவித்து உள்ளனர்” என மே 17 2009 மாலை நோர்வே அபிவிருத்தி மற்றும் உதவி நிவாரண அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் ரொய்டர் செய்திஸ்தாபனத்திற்கு தெரிவித்து உள்ளார். மே 17 2009 தமிழ் புலிகளுடன் தான் பல தடவைகள் தொடர்பு கொண்டதாகத் தெரிவித்த எரிக் சொல்ஹெய்ம் அந்தப் பகுதிகளுக்குச் சென்று சுயாதீனமாக நிலைமைகளை ஆராய்வதும் காயப்பட்டவர்களை மீட்பதுமே இப்போதுள்ள முக்கிய விடயம் எனத் தெரிவித்து உள்ளார்.

அதேசமயம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரின் விசேட பிரதிநிதியான விஜேநம்பியாருடன் விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளரான கே.பி. (மே 17 இரவு மே 18 அதிகாலை) தொலைபேசியில் கதைத்துள்ளார். இருவரிடையே நடந்த தொலைபேசி பேச்சுவார்த்தையின் போது இராணுவத்தினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள பிரபாகரனை விடுவிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி நம்பியாரிடம் கே.பி. கேட்டுக் கொண்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்ட இருந்தது. கே.பி.யுடனான இந்த உரையாடலை நம்பியார் கட்டுநாயக்க விமான நிலையத்தின் மலசல கூடத்தில் இருந்து நடத்தி உள்ளார்.

அதேநேரம் முள்ளிவாய்க்காலில் அரச படைகளால் சுற்றி வளைக்கப்பட்டு இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் ஆகிய இருவரும் மே 17 2009 ஞாயிற்றுக்கிழமை இரவு தொடக்கம் மே 18 2009 அதிகாலை வரையில் உலகின் பல்வேறு பாகங்களிலும் உள்ள தமது தொடர்பாளர்களுடன் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். ஐரோப்பா, வட அமெரிக்கா, கொழும்பு உட்பட பல இடங்களின் ஊடாக அவர்கள் தொடர்புகளை ஏற்படுத்த முனைந்ததாகவும் புதினம் இணையத்தளச் செய்தி தெரிவிக்கின்றது.

மே 18 2009 அதிகாலை 5:45 நிமிடம் வரையில் இது தொடர்பான தொலைபேசி அழைப்புக்களை அவர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டிருந்தனர் என்றும் அச்செய்தி கூறுகின்றது. இது தொடர்பாக அனைத்துலக சமூகத்திடம் இருந்தும் சில சாதகமான சமிக்ஞைகள் கிடைத்தாகவும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் தெரிவிக்கும் இவ்விணையத் தளம் இந்தப் பின்னணியிலேயே விடுதலைப் புலிகளின் அரசியல்துறையைச் சேர்ந்தவர்களை சிறிலங்கா படையினரிடம் சரணடையுமாறு அறிவுறுத்தப்பட்டதாக தங்களுக்கு தெரிய வந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம் இராணுவம் மே 17 2009 காலை எல்ரிரிஈயினால் சிறை பிடித்து வைத்திருந்த படைவீரர்களை மீட்டுள்ளதாகத் தெரிவித்து இருந்தது. இவர்கள் மீட்கப்பட்டனரா அல்லது சரணடைவின் போது ஒப்படைக்கப்பட்டனரா என்பதும் உறுதிப்படுத்தப்பட வேண்டிய ஒன்று.

இவற்றைப் பார்க்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மே 17 மாலைக்குப் பின் தாக்குதல் நடத்தக் கூடிய வலுவை இழந்துள்ளனர் அல்லது தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைவதற்குத் தயார் நிலையில் இருந்துள்ளனர் என்ற முடிவுக்கே வரக் கூடியதாக உள்ளது. ஏப்ரல் 5 – 6 ல் புலிகளின் கருமையமான போராளிகள் நூற்றுக் கணக்கில் கொல்லப்பட்ட போது புலிகளின் முக்கிய இராணுவத் தலைவர்கள் ஐவரும் கொல்லப்பட்டு இருந்தனர். அதன் பின்னர் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில தலைவர்கள் கொல்லப்பட்டனர். மே 17 சரணடைவுக்கு முன்னான தாக்குதலில் சொர்ணம் சசி மாஸ்டர் ஆகிய இரு முக்கியஸ்தர்களும் கொல்லப்பட்டனர்.

புலிகளின் தலைவர் வே பிரபாகரன் மற்றும் தலைவர்கள் அனைவரும் மே 18 காலைக்குப் பின்னரேயே கொல்லப்பட்டனர். அதாவது விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்ட பின்னரேயே கொல்லப்பட்டு உள்ளனர். அவர்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டதற்கான உடற் காயங்கள் இதுவரை காட்டப்பட்ட அவர்களின் உடலங்களில் காணப்படவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் சார்ள்ஸ் அன்ரனி, கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை ஆகியோர் உட்பட பலர் தலைப் பகுதியில் சுடப்பட்டே கொல்லப்பட்டு உள்ளனர். புலிகளது பிஸ்டல் குழுவினர் மரண தண்டனை வழங்கும் பாணியிலேயே இலங்கை அரச படைகளும் பழிவாங்கும் வகையில் இப்படுகொலைகளைப் புரிந்திருக்கலாம் என எமக்குக் கிடைக்கும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றது.

கொல்லப்படுபவர்கள் தலையில், காதில், முகத்தில் என சுடப்பட்டுக் கொல்லப்படுகின்றனர். இவர்களின் உடலின் ஏனைய பாகங்களில் சுட்டுக்காயங்கள் இருப்பதாகத் தெரியவரவில்லை. நேற்று (மே 20 2009) கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனது குடும்பத்தினர் அனைவரது உடலிலும் அவர்களது தலைப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரபாவின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, கடைசி மகன் 13 வயதேயான பாலச்சந்திரன் கூட தலையில் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேர்த்தியாக உடலின் குறிப்பிட்ட பாகத்தில் மட்டும் உள்ள துப்பாக்கிச் சுட்டுக் காயங்கள் மிக அருகில் இருந்து சுடப்பட்டு உள்ளதையே புலப்படுத்துவதாக முன்னாள் ஆயுதப் பயிற்சிகளை வழங்கிய போராளியொருவர் தெரிவித்தார். இது முன்பு இயக்கங்கள் மரண தண்டனை வழங்கும் பாணியான படுகொலைகள் என்பது நிச்சயம் என அவர் தெரிவித்தார்.

எமக்குக் கிடைக்கும் மற்றுமொரு தகவல் இப்படுகொலைகள் இந்திய புலனாய்வு அதிகாரிகளின் நேரடிப் பணிப்பில் இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது. அத்தகவலின்படி சரணடைபவர்களில் புலிகளின் கருமையத்தைச் சார்ந்தவர்கள் பிரித்தெடுக்கப்பட்டு இந்திய புலனாய்வு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்ட பின் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இச்செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

ஆனால் புலிகள் ஆயுதங்களைப் போடும் சரணடையும் முடிவுக்கு வந்த பின் மே 17 2009 இலங்கை விவகாரம் தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்து இருந்தது. இந்தியப் பிரதமர் அவர்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் மேற்கொண்ட ஆலோசனை குறித்த மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் புலனாய்வுத்துறைத் தலைவர் பொட்டம்மான் இருவரும் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தி கொலையின் முக்கிய சந்தேக நபர்கள். அவர்கள் மீது இந்திய நீதிமன்றம் பிடியாணையும் விதித்து உள்ளது. அவர்கள் சரணடைந்தால் அல்லது கைது செய்யப்பட்டால் இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட வேண்டும். அவ்வாறான ஒரு சூழல் இந்திய அரசியலில் குறிப்பாக தமிழ் நாட்டு அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பதும் இன உணர்வுகளைத் தூண்டிவிடும் என்பதும் உறுதியானது. அவ்வாறான ஒரு அசௌகரியத்தை தவிர்ப்பதற்காக இந்தியா அவர்களை படுகொலை செய்யும்படி கேட்டிருக்கலாம் என்ற பொருத்தமான வாதம் ஒன்று வைக்கப்படுகிறது.

புலிகளின் தலைவர்கள் தங்களிடம் சரணடைந்து விட்டனர் என்பது இலங்கை அரசுக்கு கௌரவத்தை அளித்தாலும் அவர்கள் பிரிவினைவாதத்தின் குறியீடாக இருப்பதால் அவர்களை அகற்றுவது நீண்ட காலப் போக்கில் இலங்கைக்கு லாபகரமானதாக அமைந்திருக்கும். போராட்டம் பிரிவினை ஈழக் கோரிக்கைகு இதனை ஒரு பாடமாக்கவும் இலங்கை தீர்மானித்து இருக்கலாம்.

புலிகள் ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்தி இருக்காவிட்டாலும் ஒரு போராட்டத்திற்கான முன்னுதாரணமாக அமைந்ததால் அவர்களை இவ்வுலகை விட்டு அகற்றுவதில் சர்வதேச வல்லாதிக்க நாடுகளுக்கும் வேறுபட்ட கருத்து இருக்க வாய்ப்பில்லை. அதனாலேயே பயக்கெடுதியை ஏற்படுத்தும் வகையில் புலிகளின் முக்கிய தலைவர்களும் குடும்பங்களும் குழுக்குழுக்களாக அல்லது குடும்பங்களாகக் கொல்லப்படுகின்றனர்.

இலங்கை – இந்திய அரசுகளின் அதிஸ்டம் இதனைத் தட்டிக் கேட்கக் கூடிய புலம்பெயர் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் புலிகளின் தலைவர்கள் சரணடையவும் இல்லை கொல்லப்படவும் இல்லை அவர்கள் தப்பித்துக் கொண்டனர் என்பதை நிரூபிப்பதிலேயே உள்ளனர். புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் இருக்கும் போது மக்களைத் தடுத்து வைத்தும் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தும் தங்களது பயங்கரவாத நடவடிக்கையால் இலங்கை அரசைப் பாதுகாத்து அரச பயங்கரவாதத்திற்கு நியாயத்தைக் கொடுத்து வந்தனர். அவர்களின் அழிவின் போதும் அரசு மீது கடுமையான யுத்தக் குற்றங்கள் வந்தவிடாமல் ‘நாங்கள் சரணடையவும் இல்லை. அரசு எங்களைக் கொல்லவும் இல்லை’ என்று அரசைக் காப்பாற்றுகின்றனர். மகிந்த ராஜபக்ச அரசுக்கு புலி இருக்கும் போதும் ஆயிரம் பொன் அழிந்த போதும் ஆயிரம் பொன்.

யுத்தம் மே 17ல் முடிவுக்கு வந்து சில நாட்கள் ஓடிய போதும் அரசு இன்னமும் யுத்தப் பகுதிக்குள் சுயாதீன ஊடகங்களையோ மனிதாபிமான அமைப்புகளையோ அனுமதிக்கவில்லை. மாறாக யுத்தப் பகுதியை துப்பரவு செய்து தடயங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் முரண்பட்ட வாக்கு மூலங்கள்:

வெள்ளைக்கொடிகளை ஏந்தியவாறு சரணடைய முன்வந்த எமது போராளிகளும் தலைவர்களும் அனைத்துலக நடவடிக்கைகள் அனைத்தையும் மீறும் வகையில் ஈவிரக்கமற்ற முறையில் சுட்டுக்கொல்லப் பட்டிருக்கின்றார்கள். இந்த விடயத்தில் ஒரு பலமான நிலைப்பாட்டை எடுத்து சிறிலங்கா அரசாங்கத்தை இணங்கச் செய்வதற்கும் அனைத்துலக சமூகம் மறுத்துவிட்டது.

எமது தேசியத் தலைவர் உயிருடனும் நலமாகவும் உள்ளார் என்பதை மட்டும் என்னால் நிச்சயமாகக் கூற முடியும். ஆனால், எமது அமைப்பின் பல மூத்த உறுப்பினர்களும் தலைவர்களும் உயிழந்திருக்கின்றனர் அல்லது துரோகத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உண்மை.
மே 19 2009 : செல்வராஜா பத்மநாதன், சர்வதேச இணைப்பாளர், தமிழீழ விடுதலைப் புலிகள்.

வே பிரபாகரன் உயிருடன் உள்ளாரா? இல்லையா: என்பதற்கு அப்பால் யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டது தொடர்பான முழுமையான சுயாதீனமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக சர்வதேச மன்னிப்புச்சபை போன்ற அமைப்புகள் இவ்விடயத்தில் ஈடுபடுத்தப்படுவதும் கைது செய்யப்பட்டவர்கள் சரணடைந்தவர்கள் கௌரவமாக வாழ உறுதிப்படுத்தப்படுவதும் அவசியம்.

இன்னமும் விடை காணப்பட வேண்டிய கேள்விகள்.

இந்த சரணடைவை மத்தியஸ்தம் செய்தவர்கள் யார்?
எந்த நம்பிக்கையில் இந்த சரணடைவு ஒழுங்கு செய்யப்பட்டது?
எரிக்சொல்ஹெய்ம் விஜய் நம்பியார் ஆகியோரின் ஈடுபாடு என்ன?
புலிகளின் சர்வதேச இணைப்பாளர் ஏன் இது தொடர்பாக மெளனம் காக்கின்றார?
ஐநா அப்பகுதியின் செய்மதிப் பதிவுகளை வெளியிடுமா?
இந்தச் சரணடைவில் இந்தியாவினதும் இலங்கையினதும் பாத்திரம் என்ன???????

புலிகளின் இறுதிநாட்கள் ஒரு காலக் குறிப்பு:

மே 13 2009: இந்திய பாராளுமன்றத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்களிப்பு. தமிழ்நாட்டில் இன்று (மே 14 2009) இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல்.

மே 14 2009 அமெரிக்க அதிபர்  ஒபாமா:  ”புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்.” இதற்கு சில வாரங்களுக்கு முன் அமெரிக்காவின் பாதுபாப்பு புலனாய்வு மற்றும் முக்கிய அதிகாரிகள் இலங்கை சம்பந்தமாக இரகசிய சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.

May 14, 2009 : Press Trust of India / Washington: A top US official today said the Obama Administration has kept India fully informed and is working very closely with New Delhi on the current Sri Lankan crisis. “We have been working very closely with India,” the Assistant Secretary of State, Richard Boucher, told a group of South Asian journalists at the Foggy Bottom headquarters of the State Department. Boucher, who has been actively involved in the Sri Lankan crisis, said Secretary of State Hillary Clinton has had consultations with her Indian counterparts on several occasions during this period. “We had visits of Indian diplomats wherein we were able to confer closely with India,” he said.

After every co-chair meeting involving France, Britain, the United States and Japan, Boucher said India has always been informed about it. “We always inform India and confer with India. So we are very much involved with India on the Sri Lankan situation,” Boucher said.

மே 14 2009 : முல்லைத்தீவில் குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கியுள்ள புலிகளை இன்னும் 48 மணி நேரத்துக்குள் முழுமையாகத் தோற்கடித்து புலிகளின் பிடியிலுள்ள பொது மக்களை படை வீரர்கள் விடுவித்துவிடுவார்களென நம்புகிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜோர்தான் சென்றுள்ள ஜனாதிபதி அங்கு தொழில் புரியும் இலங்கையர்கள் மத்தியில் மே 14 2009 உரையாற்றியபோதே இவ்வாறு கூறியுள்ளார்.

மே 15 2009 : இலங்கையில் பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றுவது மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க கடற்படையினர் தயார் நிலையில் உள்ளது அமெ. பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் திமேத்தி ஜே கீட்டிங்

மே 15 2009 : படகொன்றின் மூலம் தப்பிச் செல்ல முயன்ற கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி, மகன், மகள், மற்றும் இரு உறவினர்கள் இன்று (மே 15 2009) மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் ஊடகப் பேச்சாளர் கெப்டன் டீ.கே.பி. தஸநயாக்க தெரிவித்தார்.

மே 15 2009: புலிகளின் முக்கிய சிரேஷ்ட தளபதிகளான சொர்ணம் மற்றும் சசி மாஸ்டர் ஆகிய இருவரும் மே 15 2009 கொல்லப்பட்டனர். வெள்ளமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தில் நிலை கொண்டுள்ள பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல்களிலேயே இவர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டுள்ள பிரபாகரனையும் அவரது முக்கிய சகாக்களையும் இலக்கு வைத்து படையினர் தாக்குதல் நடத்திய வண்ணம் முன்னேறி வருவதாகவும் இறுதிக்கட்ட நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மே 16 2009: இன்று (மே 16 2009) காலை இந்தியத் தேர்தல் முடிவுகள் வெளியாகியது. விடுதலைப் புலிகளுக்கு அனுதாபமான அரசியல் கட்சிகள் தோல்வியடைந்தன.

மே 16 2009: ”நாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருக்கிறோம்.” என்று எல்ரிரிஈ சர்வதேசப் பொறுப்பாளர் இன்று அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வெளிப்படையாகத் தெரிவித்து இருக்கிறார். சில தினங்களுக்கு முன் எல்ரிரிஈ ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் விடுத்த வேண்டுகோளுக்கு இந்தியத் தேர்தல் முடிவுவரை காத்திருந்து விட்டு தற்போது ‘நாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருக்கிறோம்’ என எல்ரிரிஈ தெரிவித்து உள்ளது. தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருப்பதாக செல்வராஜா பத்மநாதன் தெரிவித்து உள்ளார்.

மே 16 2009: ஜோர்தானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளில் இருந்து விடுதலைபெற்ற ஒரு நாட்டுக்கு தான் நாளை திரும்புவேன் என்று கூறியுள்ளார். முன்னதாக, பிபிசிக்கு செவ்வி வழங்கிய இலங்கை பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ அவர்கள்இ இன்னமும் ஒரு சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மே 17 2009: வெள்ளைமுள்ளிவாய்கல் பகுதியில் சிவிலியன்களை முற்றாக விடுவித்த இராணுவத்தினர் 400*600 மீட்டர் பெட்டிக்குள் எல்ரிரிஈ தலைவர்களை தற்போது முடக்கியுள்ளதாக களநிலைத்தகவல்கள் தெரிவிக்கின்றன. புலிகளுக்கு எதிரான தாக்குதல் தொடர்வதாகவும்இ இன்றைய இரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் சற்று முன்னைய களநிலைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே 17 2009: இலங்கை விவகாரம் தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவிக்கிறது. இந்தியப் பிரதமர் அவர்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் மேற்கொண்ட ஆலோசனை குறித்த மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.

மே 17 2009: சூசை கடற்புலிகளின் சிறப்புத் தளபதி: ”ஜெனீவாவில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கேட்டுக்கொண்டோம். நாம் அவர்களை (மக்களை) அனுப்பி வைக்கின்றோம் நீங்கள் பொறுப்பு எடுங்கள் எனக் கேட்டோம். இருந்தபோதிலும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை….. இங்கு என்ன நடைபெறுகின்றது என்பதையிட்டு எந்தவிதமான அக்கறையும் இல்லாததாகவே அனைத்துலக சமூகம் இருக்கின்றது…. நாம் படையினருடன் தொடர்ந்தும் சண்டையிட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம். இறுதி வரையில் நாம் அடிபணியப் போவதில்லை. கடுமையான சண்டை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. அதற்குள் பொது மக்களும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அனைத்துலக சமூகம் திரும்பிப் பார்க்கவில்லை.

நாங்கள் நேற்று முன்நாள் (மே 15 2009) இரவு தொடக்கம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்…. போர் இப்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இப்போது கடைசி மணித்தியாலச் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இரண்டு கிலோ மீற்றர் சதுர நிலப் பரப்புக்குள் பரவலாக ஆட்டிலறி தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றனர்…..

மே 17 2009: செல்வராஜா பத்மநாதன், சர்வதேச இணைப்பாளர் தமிழீழ விடுதலைப் புலிகள்: “எமது துப்பாக்கிகளை மெளனமாக வைத்திருப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம் என்ற எமது நிலைப்பாட்டை உலகத்துக்கு நாம் ஏற்கனவே அறிவித்திருக்கின்றோம். ஆனால், எமது இந்தக் கோரிக்கை யாருடைய காதிலும் விழவில்லை.

இராணுவத்தினரிடம் சரணடையும் போராளிகள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு அனைத்துலக சமூகத்தை நான் கேட்டுக்கொள்கின்றேன். இந்த போர் கசப்பான ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றது. எம்மிடம் இப்போது கடைசியாக ஒரே தெரிவுதான் இருக்கின்றது. எமது துப்பாக்கிகளை மெளனிக்கச் செய்வதற்கு நாம் தீர்மானித்திருக்கின்றோம்.”

மே 17 2009: ”தமிழ் புலிகள் சர்வதேச சமூகத்திடம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக தம்மிடம் மிகத் தெளிவாகத் தெரிவித்து உள்ளனர்” என மே 17 2009 மாலை நோர்வே அபிவிருத்தி மற்றும் உதவி நிவாரண அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் ரொய்டர் செய்திஸ்தாபனத்திற்கு தெரிவித்து உள்ளார். மே 17 2009 தமிழ் புலிகளுடன் உடன் தான் பல தடவைகள் தொடர்பு கொண்டதாகத் தெரிவித்து உள்ள எரிக் சொல்ஹெய்ம் அந்தப் பகுதிகளுக்குச் சென்று சுயாதீனமாக நிலைமைகளை ஆராய்வதும் காயப்பட்டவர்களை மீட்பதுமே இப்போதுள்ள முக்கிய விடயம் எனத் தெரிவித்து உள்ளார்.

மே 17 2009: இராணுவம் இன்று (மே 17 2009) காலை எல்ரிரிஈயினால் சிறை பிடித்து வைத்திருந்த படைவீரர்களை மீட்டுள்ளனர். இவ்வாறு 4 கடற்படைவீரர்களையும்ள 3 இராணுவத்தினரையும் மீட்டுள்ளதாக படைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே 17 2009: புலிகளியக்கம் தோற்கடிக்கப்பட்ட இராணுவ வெற்றிச் செய்தியை எதிர்வரும் 19ம் திகதி 9.30 மணிக்கு பாராளுமன்றிலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் நாட்டு மக்களுக்கு வைபவ ரீதியாக தெரிவிப்பார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மே 17 2009: முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் பதுங்கு குழிக்குள் மறைந்திருந்த சுமார் 300 விடுதலைப் புலிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் சூசை, பொட்டு அம்மான் ஆகியோரும் அடங்கி இருக்கலாமெனவும் இந்திய மற்றும் வெளிநாட்டு இணையத் தளங்கள் சற்று நேரத்துக்கு முன்னர் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இதேவேளை, புலிகள் மறைந்திருக்கும் பகுதியிலிருந்து தீச்சுவாலையுடன் வெடிபொருட்கள் வெடித்துச் சிதறும் சத்தம் தொடர்ந்து கேட்ட வண்ணம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் இவ்வாறானதொரு தற்கொலைக்கு முன்னராகத் தம்மிடமிருந்த ஆயுதங்களை அழித்தொழிக்கும் நடவடிக்கையாக அவற்றுக்குத் தீ வைத்திருக்கலாமெனவும் நம்பப்படுகிறது.

மே 18 2009 திவயின : இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரின் விசேட பிரதிநிதியான விஜேநம்பியாருடன் விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளரான கே.பி. தொலைபேசியில் கதைத்துள்ளார். இருவரிடையே நடந்த தொலைபேசி பேச்சுவார்த்தையின் போது இராணுவத்தினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள பிரபாகரனை விடுவிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி நம்பியாரிடம் கே.பி. கேட்டுக் கொண்டுள்ளார். கே.பி.யுடனான இந்த உரையாடலை நம்பியார் கட்டுநாயக்க விமான நிலையத்தின் மலசல கூடத்தில் இருந்து நடத்தி உள்ளார். நம்பியார் இந்தியாவின் வெளிநாட்டு செயல்பாடுகளுடன் தொடர்புபட்டுள்ள அதேநேரம் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக கண்காணிக்கும் ஒரு அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மே 18 2009: இன்று (மே 18 2009) காலை வெள்ளமுள்ளிவாய்கால் பகுதியில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது விடுதலை புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களான நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் ஆகியோரது சடலங்களை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தகவலை பாதுகாப்பு அமைச்சகத்தின் லக்ஸ்மன் உலுகல்ல தெரிவித்துள்ளார்.

அதேவேளை கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர். இது விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவரான வே.பிரபாகரனின் மகனான சாள்ஸ் அன்ரனியினது என சந்தேகிப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மே 18 2009: புதினம் – இணையத் தளம் : தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் ஆகிய இருவரும் நேற்று  (மே 17 2009) ஞாயிற்றுக்கிழமை இரவு தொடக்கம் இன்று  (மே 18 2009) அதிகாலை வரையில் உலகின் பல்வேறு பாகங்களிலும் உள்ள தமது தொடர்பாளர்களுடன் தொடர்புகொண்டு இது தொடர்பாகப் பேசியுள்ளனர். ஐரோப்பா, வட அமெரிக்கா கொழும்பு உட்பட பல இடங்களின் ஊடாக அவர்கள் தொடர்புகளை ஏற்படுத்த முனைந்தனர்.

படுகாயமடைந்த பல ஆயிரம் விடுதலைப் புலிப் போராளிகளும் பொதுமக்களும் ‘மக்கள் பாதுகாப்பு வலயம்’ எனப்படும் பகுதியில் இருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் தரப்பில் இருந்து எந்தவிதமான துப்பாக்கிப் பிரயோகமும் செய்யப்படவில்லை எனவும் தெரிவித்த அவர்கள், இது தொடர்பாக ஜெனீவாவில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துக்குத் தெரியப்படுத்தி படுகாயமடைந்து உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கும் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இன்று (மே 18 2009) அதிகாலை 5:45 நிமிடம் வரையில் இது தொடர்பான தொலைபேசி அழைப்புக்களை அவர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டிருந்தனர். இது தொடர்பாக அனைத்துலக சமூகத்திடம் இருந்தும் சில சாதகமான சமிக்ஞைகள் கிடைத்தாக உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பின்னணியில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறையைச் சேர்ந்தவர்களை சிறிலங்கா படையினரிடம் சரணடையுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவை அனைத்தும் நடைபெற்று ஒரு சில மணி நேரத்தில் – அதாவது இன்று  (மே 18 2009) காலை பா.நடேசன் சீ.புலித்தேவன் உட்பட 18 மூத்த விடுதலைப் புலி உறுப்பினர்களது உடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் செய்தி வெளியாகியிருந்தது.

18 May 09 The Economic Times : The fighting with Prabhakaran and his men erupted at 4 am Monday (May 18 2009) and was over within 90 minutes, leaving the man who had terrorized the country for over a quarter century dead near a lagoon in Mullaitivu district. Karuna, who is also an MP and vice president of the ruling Sri Lanka Freedom Party (SLFP), confirmed that the upper portion of Prabhakaran’s head was blown off. By then, the military had already killed his son Charles Anthony as well as all his top associates.

மே 18 2009: புலிகளின் பொலிஸ் பிரிவின் தலைவர் இளங்கோ, பிரபாகரனின் மகனான சாள்ஸ் அன்ரனியின் நெருங்கிய உதவியாளர் சுதர்மன் மற்றும் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கபில் அம்மான் ஆகிய மூவரின் சடலங்களை படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மே 18 2009: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் அவ்வமைப்பின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் சிறப்புக் கடற்படைத் தளபதி சூசை ஆகிய மூவரும் ஒரு மணி நேரங்களிற்குள் முன் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர்.

May 19 2009: South Asian Media Net: “The government stance is clear. Norway is no longer the facilitators. The LTTE wanted to surrender their arms a little too late,” Dr. Kohona said.

மே 19 2009 : புலிகளின் கடற்படை சிறப்புத் தளபதி சூசையின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டு உள்ளது. கரையமுள்ளி வாய்க்காலின் சதுப்பு நிலப்பகுதியில் இவர்களின் உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

மே 20 2009: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மனைவி மதிவதனி அவருடைய மகள் துவாரகா மகன் பாலச்சந்திரன் ஆகியோர் இன்று (May 20) சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளதாகத் தெரிய வருகிறது. அவர்கள் அனைவரது தலையிலும் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காணப்படுகிறது. நந்திக் கடல் அருகே பிரபாகரனது உடல் இருந்த இடத்திற்கு அருகே இவர்களது உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது. இவர்கள் பாதுகாப்பு வலயத்தில் இருந்து தப்ப முயற்சித்த போது இலங்கைப் பாதுகாப்புப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிய வருகிறது.

Show More

Your email address will not be published. Required fields are marked *

47 Comments

  • மொட்டைத் தலையன்
    மொட்டைத் தலையன்

    “தமிழர் என்ற பதம் சமூக ரீதியானது”, அதை உடைத்து, தமிழ்நாட்டு அரசியலுக்குள் சுருக்கி,”கலைஞர்” போன்றோறை அந்த நாற்காலிக்கு ஆலாய்ப் பறக்க விட்டது, “நேரு” மற்றும் “மேனன்” பரம்பரையினரின் கருத்தியியல். உலகம் முழுக்க இந்திய தூதுவராலயங்களிலும், வெளிஉறவுத் துறைகளிலும், “மலையாளிகள்” இருந்து, இதற்கு முட்டுக் கொடுத்தலும், இந்த இடத்தில் தெலுங்கர்கள், கன்னடர்கள், “ஈழத்தமிழர்கள்” இருந்தாலும் இதைத்தான் செய்வார்கள். தற்போது உள்ள சூழலில் “இலங்கைத் தமிழர்கள்”, இந்த நச்சு சுழற்சியில் சிக்குவது அபாயகரமானது, “கலைஞர் கருணாநிதி” போன்று பழம் தின்று கொட்டைப் போட்டவர்களின், ஆழமான கையாளளில் சிக்க நேரிடும். இலங்கைதமிழர்களின், “வீழ்ந்தவனை விட்டு விட்டு, காற்றடிக்கும் பக்கம் சாயும்” செம்மறியாட்டுக் குணம், இச்சூழலில் பல கோமாளிகளை உருவாக்கும். “கலைஞர் கருணாநிதி, அன்று, இந்திய அமைதிகாப்பு படையை வரவேற்காமல் இருந்தார், இன்று(நேற்று)கனிமொழி கருணாநிதி, இந்திய ஆதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாரயணனை “கட்டிப் பிடித்து” தன் இல்லத்தில் வரவேற்கிறார்.
    -[TamilNet, Tuesday, 19 May 2009, 02:04 GMT]
    It is a well-known fact that certain elements, belonging to a clan operating from Nehru’s time bringing in disasters to India’s foreign policy, were responsible for the second time in India committing war crimes on Tamils in the island of Sri Lanka. In forming the next government, chief minister Karunanidhi should use all his bargaining power to see that these elements never play a role again in Tamil affairs, said a Tamil journalist in Chennai.A slave cannot help another slave is a lame excuse. On the contrary, only a slave can genuinely help another slave if there is heart.–

    அடிமை உதவி செய்ய முடியது என்பதை விட “இந்த வட்டத்துக்குள்” உணர்ச்சி வசப்பட்டு நுழைந்து, கலைஞரின் சில நியாயங்களுக்குள் (தரவுகள்)சிக்கிக் கொள்ள வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். “தமிழர் என்ற பதம் சமுதாய ரீதியானது” இதில் சிங்களவர்களுக்கும் பொறுப்புகள் உள்ளது. அதற்குமுன் தமிழர்கள் பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும். தற்போதைய கடுமையான சூழலில், மகிந்த ராஜ பக்சே தவறிழைத்து விட்டார் என்பதைவிட, துவேஷத்தில் வளர்ந்துவிட்ட கொலை இயந்திரமான, “இலங்கை இராணுவத்திடம்” முட்டாள்தனமாக, குறிப்பிட்ட சில நபர்கள், குடும்பத்தினரை மட்டும், (பொட்டம்மான்?)சரணடைய வைத்தது, நம்பிக்கை ஏற்படுத்தியது யார்?. தற்போதைய சூழலில் “இந்திய இடதுசாரிகள்(நக்ஸலைட்டுகள், மாவோயிஸ்டுகள் அல்ல) “நியாயங்களை” காது கொடுத்து கேட்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பல கேள்விகளை ஆராய வேண்டியுள்ளது. மனிதர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விடவில்லை என்பதை உணர்க, மனிதம் வாழ்ந்தால்தான் மனிதர்கள் வாழமுடியும். உண்ர்ச்சிகளை முன்வைத்து குழப்பத்தை ஏற்படுத்தினால் தவறிழைத்தவர்கள் பலர் இந்த புகைமூட்டத்தில் தப்பித்துக் கொள்ள முடியும். முன்னர் இருந்ததைவிட மனதை மேலும் உறுதியாக்க வேண்டு. இறந்த? பிரபாகரனின் தலையை திருப்பிக் காட்டும் அந்த கையைப் பாருங்கள், சட்டப்படி தன் கடமையை நிறைவேற்றிய ஒரு அதிகாரியின் கை அது. அந்த சட்டத்தின் பின்னால் உள்ள நியாயம் யருடையது?, அதுதான் நமக்கு தேவை!.

    Reply
  • vanthiyadevan
    vanthiyadevan

    wheather ltte is bad or good but they are our blood
    we cant be happy for this
    the whole tamil community specialy tamil diaspora must take the responsibility for what happened in karaya mullivaaikaal
    we who still in belive in our freedom strugle must……
    new start with all this lessons, experience & sprit
    but only for tamil speaking people

    Reply
  • rila
    rila

    நன்றி.

    Reply
  • thurai
    thurai

    ஈழத்ததமிழர்களின் தற்போதைய நிலைமையைப் பற்ரிச் சிந்திப்பதை விடுத்து, பயங்கரவாதிகளின் முடிவைப் பற்ரி ஆராய்வதற்கு இது தருணமாக் நான் கருதவில்லை.

    பயங்கரவாதத்தை வளர்த்தவர்களே ஆராய்ந்து உலகிற்கு விளக்க வேண்டும். ஆரம்பகாலஙளில் புலிகள் சகோதரப் படுகொலைகள் செய்யும்போது அதனை ரசித்து கண்மூடித்தனமாக் ஆதரித்தவர்கழும் இன்னமும் ஆதரிப்பவர்கழுமே எழும் கேள்விகளிற்கு பதில்சொல்ல வேண்டும்.

    துரை

    Reply
  • KUNALAN
    KUNALAN

    பிரபாகரனை இராணுவமும் கொல்லவில்லை. தானாகவும் சாகவில்லை. பிரபாகரனைக் கொன்றது புலம்பெயர் புலிப் புண்ணாக்குகள்தான். அவ்வளவுதான்.

    குணாளன்

    Reply
  • vanakkam
    vanakkam

    புலிகளின் புலம் பெயர் ஆதரவாளர்கள் பிரபாகரன் இறக்கவில்லை என்று ஒருபுறம் மக்களுக்கு சொல்லிக்கொண்டு மறுபுறத்தில் புலிகளின் சொத்துக்களை சுருட்ட ஆரம்பித்துள்ளனர்.

    Reply
  • BC
    BC

    பயங்கரவாத்தால் பட்டது போதும். துரையின் கருத்தோடு உடன்படுதிறேன்.

    Reply
  • Kulan
    Kulan

    17.5.2009 சூசை என வெளியிட்ட ஒலிநாடாவை கூர்ந்து அவதானித்தால் தெரியும் ஆது சூசையின் குரலெ அல்ல. மேலும் 18ம்திகதி சுடப்பட்ட சூசை 19 எப்படிக் கண்டெடுக்கப்பட்டார். சூடு வாங்கிக் கொண்டு ஓடினாரா? நான் அறிந்தவரையில் புலிகள் ஒரு ஊடறுப்புத்தூக்குதலுக்கு தாயராகிறார்கள் என்பதை 17.05.2009 நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறிந்திருந்தேன். ஊடறுப்பத்தாக்குதலில் முப்பெரும்தலைவர்கள் இறந்திருக்கலாம் ஆனால் முப்பெரும் தலைவர்களும் பிரபாகரன் குடுப்பமும் குறிப்பிட்டபடி தலையில் சுடப்பட்டிருந்தால் உயிருடன் பிடிபட்டபின் சுடப்பட்டிருக்கிறார்கள் என்பது திண்ணம். சரணடைந்தவர்களைக் கொலை செய்வது சட்டவிரோதம் என்பதற்கு அப்பால் மனிதவர்க்கத்திலே சுட்டவர்கள் சேர்க்கப்பட முடியாதவர்கள்.13வயதுடைய பாலனை தலையில் சுடும்போது கூடக் கைநடுங்கவில்லை என்றால் இலங்கையில் இயக்கர் எனும் அரக்கர்கள் வாழ்ந்தற்கும் வாழ்வதற்கும் இதுவே சரியான ஆதாரமாகிறது. இதற்காக புலிகள் செய்த கொலைகளை நியாயப்படுத்தவில்லை என்பதனையும் அறிக

    Reply
  • indiani
    indiani

    Tamil Tiger leaders ‘killed trying to surrender’

    NEW DELHI (AFP) — Two top members of the Tamil Tigers may have been shot by their own side or executed by Sri Lankan troops while trying to surrender, according to conflicting accounts of the last days of the rebels. Hours before the Sri Lankan defence ministry announced the entire rebel leadership had been killed and the decades-old war won, Tamil Tiger political chief B. Nadesan and Peace Secretariat head S. Pulideevan were trying to give themselves up.

    On Sunday night, the pair called the International Committee of the Red Cross (ICRC) and the island’s former peace broker Norway, asking for the message to be passed to the Sri Lankan army, diplomats and aid officials said.

    The Red Cross confirmed the Liberation Tigers of Tamil Eelam (LTTE) officials had made contact in the closing hours of the war, after offering to “silence their guns.”

    “We were approached by the LTTE and Norway as part of our role as a neutral intermediary, “ICRC spokeswoman Sarasi Wijeratne said, adding that the message was passed to the Sri Lankan government. “I don’t know what happened. We lost contact with the LTTE in the final stages,” Wijeratne told AFP

    According to a diplomat familiar with the communications, the last message from Pulideevan was that “they were going to cross over with a white flag, with their families.”

    The source asked not to be identified due to the sensitivity of the issue.
    “The next thing we heard was on Monday morning, when the Sri Lankans said they were dead. But what transpired after the satellite phone calls, I don’t know.

    “They may have been shot by their own side for trying to surrender. They may have got out too late, as troops were moving in. They may have been executed by the army. In Sri Lanka, neither side takes any prisoners,” the source said.

    The Tamil Tigers were infamous for wearing cyanide capsules around their necks to avoid being captured alive, and seldom took prisoners during their quarter-century fight for an independent state.

    Government troops were equally ruthless towards an enemy that had perfected the use of the suicide bomber.

    A second diplomatic source said Nadesan and Pulideevan — who always cast themselves as LTTE politicians rather than fighters — did appear to want to live.

    “They were non-stop on the phone, trying to get out,” the diplomat said.

    He refused to speculate on the circumstances of their deaths, but commented that “Sri Lanka is just one big violation of the Geneva Conventions.”

    A senior Sri Lankan official said the two were killed by their own side.

    “I was contacted by a third party (ICRC) saying that the two of them want to surrender,” the island’s foreign secretary, Palitha Kohona, told AFP.

    “I told them to follow the widely accepted procedure — take a white flag and walk slowly towards the army lines in an unthreatening manner. What I learnt subsequently is that the two of them were shot from behind as they tried to come out.

    “They had been killed by the LTTE,” he said.

    The LTTE has accused the Sri Lankan government of carrying out a “well-planned massacre” of unarmed officers with the aim of eliminating the Tigers’ political structure.

    The LTTE’s chief of international relations, Selvarasa Pathmanathan, said in a statement on Monday that “some member states of the international community” had made arrangements with the Sri Lankan military for discussions on an orderly end to the war.

    He claimed Pulideevan and Nadesan “were instructed to make contact with the 58th Division of the Sri Lankan forces in the war zone, un-armed and carrying white flags… When they complied they were both shot and killed.”

    The exact circumstances of the last moments of the LTTE, including of its leader Velupillai Prabhakaran, are unlikely to ever be known.

    Prabhakaran’s corpse has been shown on state television, apparently with a gunshot wound to the head. Defence sources initially said on Monday that he was killed while trying to flee in an ambulance and that his body was badly burned.

    The ICRC, the only neutral organisation that was working in the war zone, had to halt its operations in the final stages of the war because of heavy fighting. The ICRC also has a strict code of secrecy.

    Independent journalists, rights workers and diplomats are also barred from the conflict area.

    http://www.google.com/hostednews/afp/article/ALeqM5hh_jUzJqN5SWjJzM7j3pPD2rkMUA

    Reply
  • மாயா
    மாயா

    கட்டுரைக்கு நன்றி. வெளி வந்திருப்பவை குறைவுதான். வெளிவராதவை அதிகம். அவை இன்னும் வரும்….. புலிகள் ஆயுதங்களை மெளனமாக்கியது போல , புலத்து புலிகளது வாய்களையும் மெளனமாக்குவது எஞ்சியுள்ள தமிழர்களையாவது நிம்மதியாக வாழ வைக்கும். இது இப்போதைய மிக முக்கிய தேவை.

    புலிகளின் அரசியல் ஆய்வாளர்கள் வைத்த ஆப்பு, புலி ஆதரவாளர்களுக்கு மட்டுமல்ல , புலித் தலைமைக்கும்தான். அதீத நம்பிக்கை. கீரோயிசம் நிலை தடுமாற வைத்துவிட்டது. அரச தரப்பு ” அண்ணன் உள்ள விட்டு அடிக்கப் போறார் ” என்றதுமே விசயத்தை உணர்ந்து கொண்டார்கள். மக்களை தம் பக்கம் சார்ந்து நிற்பதற்காக உளறித் தொலைத்தார்கள். எனவே முன்னேறிய படைகள் போகும் வழியெல்லாம் புதைத்த ஆயுதங்களை தோண்டி எடுத்துக் கொண்டே முன்னேறியது. தன் வீரம் குறித்து மட்டும் நினைத்தவர்கள் விஞ்ஞான முன்னேற்றம் குறித்து சிந்திக்கவேயில்லை. உலக வல்லரசான இந்தியாவையே துரத்திய கர்வம் இலங்கை இராணுவம் குறித்து அசமந்தமாக நினைத்ததுதான்?

    இத் தருணத்தில் தோழர் உமா மகேஸ்வரன் அவர்களது தீர்க்கதரிசன கருத்தை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். “புலிகள் அங்கே தாக்குதல் நடத்தி வருகின்றன. நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று யோசிக்கவே இல்லையா?” என்று தாக்குதல் கொடுக்காமல் இருந்த புளொட் குறித்து கேட்ட போது தோழர் முகுந்தன் (உமா) இப்படிச் சொன்னார் ” முட்டாள்தனமான வேலை. அரச படைகளை பலப்படுத்தும் வேலையை பிரபாகரன் மற்றும் சிலர் செய்கிறார்கள். நகத்தால் கிள்ள வேண்டியதை கோடாரியால் வெட்ட வைக்கும் செயல்.”

    உண்மை. பலமற்ற அரச படைகள் தொடர் தாக்குதலால் பலம் பெறத் தொடங்கியது. தவிர சகோதர இயக்க படுகொலைகள் மற்றும் தனிமனித நம்பிக்கை கொண்ட தலைமை இன்று அனைத்து தமிழரையும் கேளிவிக்கு உள்ளாக்கியிருக்கிறது. தலைமை மட்டுமல்ல நம்பிக்கைக்குரிய எவருமே புலிகள் இயக்கத்தில் இன்று இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. புலிகளது பாசையின் துரோகிகள் மட்டுமே அரசோடு பேசும் தகுதியோடும் , மக்களோடும் இருப்பது ஒரு ஆறுதல்.

    இல்லை. பிரபாகரன் இருக்கிறார் என்போர். அவர் இருக்கிறார் என நம்புவதில் தவறில்லை? அந்த நம்பிக்கை தொடரட்டும். ஆனால் ஈழ மண்ணில் புலிகள் இல்லை என்பது மட்டும் உண்மை. இனி அங்கு புலிகளால் போராட்டங்களை தொடர்வதற்கும் வாய்ப்பில்லை. அதற்கான வாய்ப்பொன்று உருவாகவும் வாய்ப்பே இல்லை. அது வேரோடு சாய்ந்து விட்டது.

    மேலும் , வெளியே இருக்கும் தற்கொலைதாரிகள் மற்றும் ஏனைய முக்கிய விடுதலைப் புலி உதவியாளர்கள் இலங்கை முழுவதும் கைதாகி வருகிறார்கள். அத் தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன. சர்வதேச தகவல்களும் அரசு சேகரித்து வருகிறது. எனவே பொட்டு அம்மானும் , தேவையான சிலரும் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள்? என்றே நினைக்கத் தோன்றுகிறது.

    Reply
  • rohan
    rohan

    இவ்வளவும் உணமை என்றால் ஏன் கருணாவைக் கொண்டு வந்தார்கள்? என்ன பிலிம் காட்டுறாங்களா?

    Reply
  • rohan
    rohan

    அரசு தம்மை எப்படிக் கையாளும் என்று பார்க்க என்றே சூசையும் மனவியும் கடல் மூலம் அனுப்பப் பட்டிருக்கக் கூடும் என்றும் ஒரு தியறி இருக்கிறது. அவர்கள் அதிகம் தொந்தரவு இல்லாமல் கரை சேர்ந்தது புலி மேலிடத்துக்கு நம்பிக்கை தந்திருக்கக் கூடும்.

    ஆனாலும், பெரியவர் பிடிபட்டால் அவரிடம் கேட்டறிய இராணுவத்துக்கு 100 கேள்வி இருந்திருக்கும், குறிப்பாக, பொட்டுவிடம் கேட்க 1000 கேள்விகள் இருந்திருக்கும். இவ்வளவு துரிதமாக பொட்டென்று ஏன் போட்டார்கள்?

    புலித்தேவனும் நடேசனும் சரண் அடைய வந்தது வரை இலங்கை ஒப்புக் கொண்டிருக்கிறது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இலங்கை அரசினதும் இலங்கை இராணுவத்தினதும் முன்னுக்கு பின் முரணாண அறிக்கைகள் பல சந்தேகங்களைக் கிளப்புவது உண்மையே. ஆனால் பிரபா முதல் பல தலைகள் போட்டுத் தள்ளப்பட்டுள்ளது உண்மையென்பது தெள்ளத் தெளிவாகவே தெரிகின்றது. ஆனால் புலிகளின் உயிர்வாழ்வுப் பிரச்சாரம் அரசு மீது எந்தவிதக் குற்றச்சாட்டையும் சுமத்த முடியாமல் அவர்களை மெளனிகள் ஆக்கிவிட்டது. மொத்தத்தில் புலிகளின் பிடிவாதமும், தமிழகப் புலி அரசியல்வாதிகள் மீது புலிகள் காடடிய அளவிற்கதிகமான நம்பிக்கையும், “புலன்” பெயர்ந்த புலிகளினதும் புலியாதரவாளர்களினதும் அதீத கற்பனைகளுமே இன்று புலிகளின் இறுதி அத்தியாயத்தை எழுதி முடித்திருக்கின்றன.

    இந்தப் புலிகளுக்கெதிரான போரை மூர்க்கமாக எடுத்துச் சென்றதில் பெரும்பங்கு மற்றவர்களை விட கோத்பாயவிற்கும், சரத் பொன்சேகாவிற்குமே உரியன. காரணம் இருவரும் புலிகளின் தற்கொலைத் தாக்குதலால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்கள். இருவரினதும் முன்னாள் நட்பும் பிடிவாதமும் மகிந்த வெற்றிக் கனியைப் பறிக்க உதவியிருக்கின்றது. ஒருமுறை மகிந்த கூட சொல்லியிருந்தார் பிரபாகரன் இப்போது தான் ஒரு மீசை வைத்த இலங்கை அதிபரை பார்க்கின்றாரென்று. இதன் அர்த்தம் பிரபாகரனுக்கும் அவரின் இறுதி நேரத்திலாவது புரிந்திருக்கும். ஆயிரம் கேள்விகள், சந்தேகங்கள் இலங்கை அரசின் மீது எழுந்தாலும் எனி ஐ.நாவோ அல்லது உலக நாடுகளோ முன்பு கொடுத்த பெரிதான அழுத்தங்களை இலங்கை அரசின் மீது வைக்கப் போவதில்லை. காரணம் அகதிகளாக வந்திருக்கும் அந்த மக்களின் வாழ்வை சகச நிலைக்கு திருபபுவதில் தான் அவர்கள் முன்னுரிமை காட்டுவார்கள். இந்தச் சந்தர்ப்பத்தை எம்மவர்களும் புத்திசாலித்தனமாக பாவித்து எமக்கான தீர்வையும் பெற முனைப்புக் காட்ட வேண்டும்.

    Reply
  • rohan
    rohan

    சர்வ்தேச நாடுகள் உணமையுடன் நடக்குமாயின், மகிந்தவை போர்க் குற்றத்துக்காக மன்றில் ஏற்றுவோம் என்ற பூச்சாண்டி காட்டியே தீர்வு ஒன்றைத் திணிக்க முடியும்.

    Reply
  • mano
    mano

    பயங்கரவாதம்> பயங்கரமாக ஒழித்துக்கட்டப்பட்டிருக்கிறது. ஒரு விடுதலைப் போராட்டத்தை இவ்வாறு இலகுவில் ஒழித்துக்கட்டிவிட முடியாது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். பிரபாகரன் நடத்தியது ஒரு விடுதலைப்போராட்டம் என்று புலம்பெயர் தமிழர்கள் இனியும் சாதிக்க நினைத்தால் தொடர்ந்து இலங்கைத் தமிழர்களுக்கு அநீதி இழைக்கும் துரோகத்தைத் தொடர்வார்கள் என்றே நினைக்கிறேன். நாங்கள் வாழ்வதற்காக போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறோம். எங்களை உணர்ச்சிகரமான வசனங்களால் வசப்படுத்தி> கற்றறிந்த பண்டிதர்கள் அழிவுப் பாதையில் அழைத்துச் செல்ல முற்படாமல் இருக்க வேண்டும். உங்கள் உரிமையை அடித்துப் பெறுங்கள் என்று புலம்பெயர் நாடுகளிலிருந்து துப்பாக்கிகளை வாங்கி அனுப்பாமல் இருக்க வேண்டும்.

    Reply
  • Raj
    Raj

    ஆய்வுகள் நல்கருத்துக்கள் தேவையே.தலையைப்பாவிக்காமல் தலைவலி தரும் தீபம் ஜி.ரி.வி ஓதுவதை மட்டும் தேவவாக்காய் எடுத்து வன்னி மக்களையும் தமிழர்களின் அடிப்படைப்பிரச்சினைகளையும் அடிபட்டுப்போக வைத்த புலன்பெயர்ந்த பலர் இப்போது தேசம்நெற் பக்கம் வந்திருப்பதனால் இக்கட்டுரைகள் இவர்களது தலைப்பித்தத்தை குறைக்க உதவும் என்பது உண்மையே.திரும்பவும் கொடி ஈழம் தலைவர் என்று நாடகம் போடுவதானது நொந்து நுhலாகியுள்ள மக்களின் வாழ்வுரிமை கட்டமைக்கப்படுவதில் இன்னும் சோதனைகளையே கொண்டுவரும்.வெஸ்மினிஸ்டரில் நின்றுகொண்டு சனம் வருகுதில்லையே என ஒப்பாரி வைப்பதை விட்டுவிட்டு ஏன் ஒதுங்குகிறார்கள் என்பதை உணர்ந்து ஏகோபித்த குரலோடு உலகத்தின் வழிமுறைகளுடாக பயணிக்காத எந்த போராட்டமும் வெற்றிபெற வாய்ப்பில்லை.

    Reply
  • thevi
    thevi

    ஆமாம் ராஜ்! இன்று தேவையானது கெளரவமான தீர்வே. இனி என்ன செய்ய வேண்டும் என பேச வேண்டும்.

    Reply
  • palli.
    palli.

    ஜெயபாலன் தங்களிடம் தலைவலிக்கு மாத்திரை மருந்து ஏதும் உள்ளதா?? இருந்தா பல்லிக்கு சிறிதேனும் தாங்க. ஜெயபாலன் ஊகத்தின் அடிப்படையில் எதையும் எழுத வேண்டாம் என பலர் ஊகத்தின் அடிப்படையில் எழுதுகிறர்கள்.

    பல்லியின் இரு கேள்விகள்?
    (1) பிரபாகரன் இருக்கிறாரா? இல்லையா?
    (2)தமிழீழம் கிடைக்குமா? கிடைக்காதா?

    இதுக்கு பதில் தெடிந்தால் தான் புலம் பெயர்தேச சதிராட்டத்தில் கோஸத்தை மாத்தலாம்.

    Reply
  • thevi
    thevi

    சர்வ்தேச நாடுகள் உணமையுடன் நடக்குமாயின்”

    பரமேஸ்வரன் போன்றோரை சர்வதேச நாடுகள் குறிப்பாக மேற்குலகம் தொட்டிலில் இட்டு வளர்க்கும். இலங்கையிடம் பட்ட அவமானத்திற்கு காத்திருந்து பழிவாங்கும்! அதைப் பார்க்க நாங்கள் இருக்க மாட்டோம்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    //rohan on May 21, 2009 12:32 pm சர்வ்தேச நாடுகள் உணமையுடன் நடக்குமாயின், மகிந்தவை போர்க் குற்றத்துக்காக மன்றில் ஏற்றுவோம் என்ற பூச்சாண்டி காட்டியே தீர்வு ஒன்றைத் திணிக்க முடியும்.//

    போர்க் குற்றமும், அரசியல் தீர்வும் ஒன்றல்ல. தலைவன் மாதிரத்தானே தொண்டனும் இருப்பான்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //ஜெயபாலன் ஊகத்தின் அடிப்படையில் எதையும் எழுத வேண்டாம் என பலர் ஊகத்தின் அடிப்படையில் எழுதுகிறர்கள் – palli //

    ஒரு கேள்வியை சந்தேகத்தின் அடிப்படையில் வேண்டுமானால் கேட்கலாமேயொழிய ஊகத்தின் அடிப்படையில் அல்ல. ஊகத்தின் அடிப்படையில் ஒரு செய்தியைத் தான் பரப்பலாம்.

    பிரபாகரன் இருக்கின்றாரர் என்று காட்ட ஒரு படத்தினை சிலர் இணைத்துள்ளனர். அந்தப் படத்தை வடிவாக பாருங்கள் பிரபாகரன் கையிலிருக்கும் தினமணிப் பத்திரிகை எந்தவித பிடிமானமுமில்லாமல் அவர் கையில் மந்திரத்தால் நிற்கின்றது. அதுபோல் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் காட்சியை மீள ஒளிப்பதிவு செய்யும் போதோ அல்லது புகைப்படமெடுக்கும் போதோ அதே தரததில் அதனை எடுக்க முடியாது. உண்மையில் பிரபாகரன் உயிருடன் இருந்தால் இவ்வளவு மினக்கட்டவர்கள் அவரின் 2 நிமிடச் செய்தியை ஒளிபரப்பியிருக்கலாமே?? ஏன் முடியவில்லை?? இது சந்கேமேயொழிய ஊகமல்ல….

    Reply
  • Velu
    Velu

    Dear Comrade, I hope that it is a very good try to document the incident with the available informations.But infuture the more real informations will come from the people of Vanni.Beacause they are the real sources of the informations.
    They will judge the history of the future because they are the revolutionary mass.The better future of the Island nation depend on the Majority of the Sinhala,Muslim, Vanni and Eastern region people but not on the Jaffna hegemonic or the so called Tamil diaspora.After the decimation of the Tamil Tigers ,the Tamil rulling class , particularly the Saiva,Vella diaspora have almost lost its authority and power .
    It is a great lost for the Imperialism but it is a great victory
    for the people of Srilanka,particularly the Tamil people.Not only that it is a basic need for the peace and stability in the Region of the Indian Ocean. It is a very good lesson for the Petty bourgeoisie in Srilanka ,who are Sinhalease or Tamils .Because they are not belong to the revolutionary class but they are really belong to the reactionary and destructive group.One is JVP and other one is LTTE .Both are the barriers of the revolutionary masses of Srilanka and both are almost anihilated.
    If you want to understand more on this group ,you have to read Com.Trotsky’s comment on it, “The petty bourgeoisie ,in order to defeat the worker, soldiers and pesants would combine and join with the Devil”(From Ten Days that Shook the World By com.John Reed)
    (But later after the revolution and in the period of the application of the prolatariot dictatorship Com. Trotsky did just that)

    Reply
  • KUNALAN
    KUNALAN

    பார்த்திபன்! இன்று அந்தப் படம் தமிழ்நாட்டில் நக்கீரன் பத்திரிகையின் முகப்பில் பிரசுரமாகியுள்ளதாம். மினக்கெட்டவர் நக்கீரன் கோபால். அவர் மினக்கெட்டதற்கான இலாபத்தை இன்று தாராளமாகவே பெற்றுள்ளார். நக்கீரன் விற்றுத் தீர்ந்து விட்டதாம். பல்வேறுவிதமான மாறுபட்ட பரப்புரைகளை இலங்கை இந்திய அரசுகள் மட்டுமல்ல ஊடகங்களும் (குறிப்பாகத் தமிழ்நாட்டில்) தங்கள் இலாபத்திற்காக தாராளமாகவே செய்து சம்பாதிக்கிறார்கள். அவரவர் கற்பனை வளத்திற்கேற்ப இலாபம் சம்பாதிக்கிறார்கள். அந்தக் கற்பனைச் செய்திகளையே இங்கு புலிசார் ஊடகங்கள் மீள்பிரசுரிப்புச் செய்துகொண்டிருக்கிறார்கள். ஜெயபாலனின் இந்தக் கட்டுரை பல்வேறு இடங்களில் பிரஸ்தாபிக்கப் படுகிறது என்பது மட்டும் உண்மை.

    குணாளன்

    Reply
  • chandran.raja
    chandran.raja

    ஈழத்துப்புலிகள் இறந்துவிட்டார்கள் அல்லது அழிக்கப்பட்டுவிட்டார்கள். புலம்பெயர் புலிகள் இன்னமும் இறக்கவில்லை. அவர்கள் தங்கள் சாதுரியங்களை காட்டியபடியே இருக்கிறார்கள்.பிழைப்புக்கு மண் விழுந்ததுபற்றியே முழுகவலையும். தீபம் தொலைக்காட்சியும் ஜிரிவியும் காலத்திற்கு விலைபோகக்கூடிய நிகழ்சிகளையே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக… திருப்பலிக்கு ஒப்புக்கொடுத்தல்
    பிராத்தனைகள். மக்களை ஆன்மீகத்தை கற்றுத்தேறுதல் அதாவது சுகி சிவத்தின் சொற்பொழிவுகளை ஒலிபரப்புதல் புலிஆதரவாளர்களுக்கு தற் போதைக்கு மனஅமைதி தருமென கருதுகிறார்களோ தெரியவில்லை.

    Reply
  • palli.
    palli.

    பார்த்திபன் எமக்கு புலிகளின் கோபத்தால் அவர்கள் மீது யார் தவறு சொன்னாலும் அது சரியாகவும் .அவர்களை சரியெனெ வாதிட்டால் அது பிழையாகவும் ஊகிக்கிறோம்.ஆனால் தாங்கள் நக்கீரன் மீது சுட்டிகாட்டிய குற்றடாட்டை விட என்னால் டன் ரிவிமீது காட்ட முடியும். இதில் மிக கவனிக்கபட வேண்டியது டன் ரிவியின் இயக்குனர் குகனாதன் புலிகளால் மரனதண்டனை விதிக்கபட்டவர் மட்டுமல்ல ஒரு காலத்தில் புலியின்
    எடுபிடியும் கூட. ஆனால் நக்கீரன் அப்படியல்ல சில வழக்குகள் கூட நக்கீரனின் எழுத்தை உதாரனம் கட்டி நடந்ததாக படித்துள்ளேன்.

    எல்லாத்துக்கும் மேலாக பிரபாவிடயத்தில் பல்லி பார்த்திபனை விட இந்திய அரசு(டெல்லி)மிக கடுமையான போக்கை கையாளுவது உலகம்
    அறிந்த உன்மை.அப்படி இருக்க இப்படியான ஒரு செய்தியை தொழில்நுட்ப்ப உதவியுடன் போடுவதால் வரும் வில்லங்கங்களை பலகாலம் குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்த கோபால் சிந்த்தித்திருக்க மாட்டாரா? அந்தளவுக்கு அவர் பல்லி போல் முட்டாளாக இருப்பார் என என்னால் ஊகிக்க முடியவில்லை. இதன்படி பார்க்கும் போது குகனாதனை விட கோபாலை நம்பலாமா என மனம் துடிக்குது.

    Reply
  • rohan
    rohan

    ஊரெல்லம் சுற்றும் இந்தப் படம் பிரபாகரன் பாலசிஙத்துடன் சந்தித்த போது எடுக்கப்பட்ட படம் என்று எனக்கு ஒரு `பிரமை. வேறு யாருக்காவது அந்தப் படம்`நினைவில் உள்ளதா?

    பார்த்திபன் போன்ற கருத்தாளர்கள் அந்தப் படம் பிரபாகரன் இருக்கிறார என்று காட்ட பிரசுரிக்கப்பட்ட படம் என்று நினைப்பதே பிரபாகரன் உயிருடன் இருக்கக் கூடுமோ என்று அவர் போன்றவர்கள் கொண்ட பிராந்தியின் வெளிப்பாடே.

    Reply
  • Raj
    Raj

    நக்கீரன் புகைப்பட தலைவரைப் பாருங்கள்! மகனையும் முழுத்தளபதிகளையும் 30 வருடம் நேசித்த ஆயுதத்தளபாடங்களையும் பறிகொடுத்த தலைவரின் முகத்தைப்போலவா உங்களுக்குத் தெரிகிறது? ஒய்யாரமாக உட்கார்ந்து பேப்பர் படித்து ரீ.வி பார்க்கும் நேரமா இது? நல்ல கோமாளிகள். பிழைக்கத் தெரிந்தவர்கள். அதனையும் ஒளிபரப்ப இங்கு உலகப் புலிவால்களுக்கோர் தீபம். முதலில் நடுநிலை தொலைக்காட்சி ஒன்றை நிறுவத்தான் உண்ணாவிரதம் ஒன்று இருக்கலாமென எண்ணுகின்றேன் {இரவில் குளுக்கோஸ் தண்ணீர் கிடைக்கும் தானே?}

    Reply
  • மாயா
    மாயா

    இறுதி நேரத்தில் இராணுவம் செஞ்சிலுவை சங்க பிரதிநிதிகள் வேசத்தில் மீட்பது போல் சென்று முக்கியமான சிலரை கொன்றதாக ஒரு செய்தி வருகிறது? அதே சமயம் கேபீ காட்டிக் கொடுத்து விட்டார் என்றும் ஒரு செய்தி உலா வருகிறது. இதன் நம்பகத் தன்மை சரியாகத் தெரியவில்லை?

    மேலே உள்ள இரு செய்திகளும் ஒன்றுக்குள் ஒன்று தொடர்பு இருப்பது போல தோன்றுகிறது.காரணம் , நடேசன் , வெளிநாட்டில் இருக்கும் தனது உறவினர்களுக்கு தொலைபேசியில் அழைத்து பேசிய போது தம்மை அழைத்துச் செல்ல செஞ்சிலுவைச் சங்கத்தினர் வர இருக்கிறார்கள். நாங்கள் வெள்ளைக் கொடியோடு போக இருக்கிறோம் இதற்கான ஏற்பாடுகளை கேபீ செய்துள்ளார் என தெரிவித்துள்ளார். அதுதான் அவர் கடைசியாக உறவினர்களோடு தொடர்பு கொண்ட நிகழ்வாக இருக்கிறது.அதன் பின் அவரரோடு இருந்தவர்கள் உயிரோடு இல்லை.

    கேபீயின் ( செல்வராசா பத்மநாதன்) பேச்சை நம்பித்தான் அனைத்து முக்கிய புலித் தலைவர்களும் ஒரே இடத்தில் குழுமியிருந்ததாக சொல்லப்படுகிறது. எப்படியும் ஒரு வெளிநாடு வந்து இறங்கும் எனும் கேபீயின் பேச்சை தலைவர் நம்பியதாகவும் , கேபீயோ நேரத்துக்கு ஆயுதங்களைக் கூட அனுப்பாமல் விட்டதோடு , அனைவரது சாவுக்கும் காரணமானார் எனும் கருத்தும் கசிகிறது. கேபீ பழைய டெலோ உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜெயபாலனது புலனாய்வுக்குள் ஏதாவது அகப்பட்டால் இங்கே எழுதுங்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //பார்த்திபன் எமக்கு புலிகளின் கோபத்தால் அவர்கள் மீது யார் தவறு சொன்னாலும் அது சரியாகவும் .அவர்களை சரியெனெ வாதிட்டால் அது பிழையாகவும் ஊகிக்கிறோம்.ஆனால் தாங்கள் நக்கீரன் மீது சுட்டிகாட்டிய குற்றடாட்டை விட என்னால் டன் ரிவிமீது காட்ட முடியும்.- பல்லி//

    நான் புலிகளின் மேலுள்ள ஆத்திரத்தால் அதனைச் சுட்டிக் காட்டவில்லை. ஒரு புகைப்பட நிபுணர் என்பதால் அதிலுள்ள பல ஏமாற்று வேலைகளை இனம் கண்டேன். ஏற்கனவே சிலவறற்றை குறிப்பிட்டுள்ளேன். முக்கியமான இன்னொன்று தொழில்முறை புகைப்படமெடுப்பவர்களுக்குப் புரியும் ஒரு படம் எடுக்கும் போது, படத்திலுள்ள எல்லாம் ஒரே குவியத் தூரத்தினுள்(Focus) வருவதில்லை. நாம் எதனை மையமாக வைத்து குவியத்தூரத்தை(Focus) சரி செய்கின்றோமோ அது கூடிய தெளிவாகவும் மற்றயவை சற்று மாறுபட்டும் காணப்படும். நக்கீரன் வெளியிட்டுள்ள படத்தில் எல்லாம் ஒரே மாதிரியான தெளிவாகவே வந்துள்ளன. இது சாத்தியமில்லை. அத்துடன் நக்கீரனின் செய்திக்கு பின் வந்த இந்தப் பின்னூட்டத்தையும் பாருங்கள்.”நக்கீரன் அட்டை படம் கிராபிக்ஸ் படம் தான். ஏமாற்றப் போட்டதல்ல. அவர்கள் பெரும்பாலும் அட்டை படத்தில் கிராஃபிக்ஸ் மூலம் தான் படம் போடுவர். ஜெ.வை ஹிட்லர் போல வரைந்தது, ராஜபக்சேவுக்கு எலும்பு கூடு மாலை அணிவித்தது போன்றது”. இதே பாணியில் தான் வணங்காமண் கப்பலின் படமும் வடிவமைக்கப்பட்டது. நக்கீரனுக்கு ஏதாவது சட்டச்சிக்கல் வந்தால், இப்படம் எனக்கு தபாலில் வந்தது யார்அனுப்பபியது என்று தெரியாது போன்று ஆயிரம் காரணம் சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம். நக்கீரன் தமிழக அரசியலில் பல தில்லுமுல்லுகளை வெளிக் கொணர்ந்தவர் தான். ஆனால் வீரப்பனை பேட்டி எடுத்து வெளியிட்டதன் பின் கிடைத்த விளம்பரம் அவரை விளம்பரத்திற்காகவும் பரபரப்பிற்காகவும் செயற்படவும் வைத்திருக்கின்றதென்பதும் உண்மை. நீங்கள் நக்கீரனை தொடர்ந்து வாசித்துப் பாருங்கள் இந்த உண்மை புரியும்.

    மேலும் நீங்கள் நக்கீரன் கோபாலையும் டண் தமிழலை குகநாதனையும் வெளியிட்ட செய்திகளின் அடிப்படையில் ஒப்பிடுவது தவறானது. நக்கீரன் பரபரப்பிற்காக கிராபிக் செய்து விடுவதும், டண் தமிழலை இலங்கை அரசு வெளியிட்ட ஆதாரங்களை வெளியிடுவதும் எப்படி ஒன்றாக முடியும். உண்மையில் பொறுத்த நேரத்தில் GTV மற்றும் தீபம் தொலைக்காட்சி போன்றன ஒளிபரப்பிய புரளிகளிலிருந்து மக்களுக்கு உண்மைகளை புரிய வைத்ததில் பெரும்பங்கு குகநாதனின் டண் தொலைக்காட்சிக்கு உண்டு.

    //பார்த்திபன் போன்ற கருத்தாளர்கள் அந்தப் படம் பிரபாகரன் இருக்கிறார என்று காட்ட பிரசுரிக்கப்பட்ட படம் என்று நினைப்பதே பிரபாகரன் உயிருடன் இருக்கக் கூடுமோ என்று அவர் போன்றவர்கள் கொண்ட பிராந்தியின் வெளிப்பாடே- rogan//

    எப்போதும் ஏன் உங்கள் மனநலையில் வைத்தே மற்றவர்களையுயும் எடை போடுகின்றீர்கள். மேலே பல்லிக்கு நான் வழங்கிய பதிலையே நீங்களும் வாசியுங்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    // இறுதி நேரத்தில் இராணுவம் செஞ்சிலுவை சங்க பிரதிநிதிகள் வேசத்தில் மீட்பது போல் சென்று முக்கியமான சிலரை கொன்றதாக ஒரு செய்தி வருகிறது? – மாயா //

    இதனை நம்பவது கடினம். காரணம் செஞ்சிலுவை சங்க பிரதிநிதிகள் அழைத்துச் செல்ல சென்றிருந்தால் அதில் நிச்சயம் வெள்ளைக்காரர்கள் இருந்திருப்பார்கள். செஞ்சிலுவை சங்க பிரதிநிதிகளுடன் பணியாற்றும் சிங்கள மக்களோ அன்றி தமிழ் மக்களோ மட்டும் போவதற்கு வாய்ப்பில்லை. இது புலிகளுக்கும் தெரியும். அதற்காக அரச எடுத்த நடவடிக்கைகளில் தங்களின் சந்தேகம் தவறென்று கூறவரவில்லை. எனக்கே பல சந்தேகங்கள் உள்ளன. ஆனால் எந்த சந்தேகங்களுக்கும் அரசு விளக்கம் தருமென்று நான் நம்பவுமில்லை. அரசைப் பொறுத்தவரை பயங்கரவாதத்தை ஒளித்து விட்டோமென்ற ஒரே பதிலைத் தான் திரும்பவும் சொல்லும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பல்லி,
    அட்டைப்படத்தில் பிரபா தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பது போல் படத்தை போட்ட நக்கீரன், பிரபாகரன் சம்மந்தமாக தான் வெளியிட்ட கட்டுரையில் அந்தப் படத்தைப் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை பார்த்தீர்களா?? இதிலிருந்தே தெரியவில்லையா படம் கிராபிக் செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ளதென்பது.

    Reply
  • அறிவானவன்
    அறிவானவன்

    It is KP or Pottu or both.

    Reply
  • KUNALAN
    KUNALAN

    02.03.2002.இல் தமிழ் நெற்றில் பிரசுரமான பாலசிங்கத்துடன் பிரபாகரன் அமர்ந்திருக்கும் படத்தைத்தான் நக்கீரன் கோபால் உல்டா பண்ணியுள்ளார் என்ற உண்மையை தேனீ இணையத்தளம் வெளியிட்டுள்ளது. அதேவேளை நக்கீரன் கோபாலும் தந்திரமாகவே அந்தப் படத்திற்கான தலைப்பைப் போட்டுள்ளார். அதாவது “சிங்களனின் தசாவதார ஸ்ரைல்!” அத்தோடு கிராபிக்ஸ் செய்யப்பட்டதற்கு குறியீடாய் படத்தின் இடதுபக்கம் கீழிருந்து மேலாக “கோபால்” என்ற தனது பெயரையும் பொறித்துள்ளார். இது சட்டச் சிக்கலில் இருந்து தப்புவதற்காக. ஆனால் “கெட்லைன்” “உயிருடன் உள்ளார் பிரபாகரன்” என்று பென்னாம் பெரிய எழுத்தில் போட்டது மட்டுமில்லாமல் கட்டுரையின் முடிவில் “இச்செய்தி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களிடம் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.”
    என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதுதான் சுத்த மோசடியும் பச்சை அயோக்கியத் தனமுமாகும். இது பொதுமக்களை ஏமாற்றும் கிரிமினல் குற்றம்தான். ஆனால் இந்தியாவில் இதற்கான நடவடிக்கையை யாரும் எடுக்கப் போவதில்லை என்பது தெரிந்த விடையம்தானே!

    குணாளன்

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    விடுதலைப் புலிகள் சரணடைந்தால் அவர்களை அழைத்துச் செல்வதற்கு செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச நாடுகள் வரும் என்ற நம்பிக்கை கொடுக்கப்பட்டு இருக்கின்றது. செஞ்சிலுவைச் சங்கத்தினர் விடுதலைப் புலிகள் சரணடையத் தயாராக இருக்கும் செய்தியை தெரியப்படுத்தியதை பாலித கோகன்ன உறுதிப்படுத்தி உள்ளார். அப்போது புலிகளை வெள்ளைக் கொடி ஏந்தியவாறு மெதுவாக வருமாறு மெதுவாக இராணுவத்தை நோக்கி வருமாறு பணித்ததாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார். இதுவரை அவர் தெரிவித்தது ஏனைய தகவல்களுடன் பொருந்துகிறது.

    ஆனால் வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களை புலிகளே சுட்டதாகவும் கோகன்ன தெரிவித்து இருக்கிறார். இது உண்மைக்கு புறம்பானது. ஏனெனில் தாங்கள் சரணடையத் தயார் என்று முடிவெடுத்த பின் அவர்கள் சுட்டு இருப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.

    ஆனால் சேதுரரூபனின் கூற்றில் உண்மையுள்ளது என்பதை வேறு சில தகவல் மூலங்களில் இருந்தும் உறுதிப்படுத்தக் கூடியதாய் இருந்தது.

    இங்கு புலிகளுடன் இறுதியாகத் தொடர்புகளை வைத்திருந்த எரிக் சொல்ஹெய்ம் விஜய்நம்பியார் செல்வராஜா பத்மநாதன் மிக முக்கியமானவர்கள். விஜய் நம்பியார் ஐ நா பிரதிநிதி மட்டுமல்ல நம்பியார் இந்தியாவின் வெளிநாட்டு செயல்பாடுகளுடன் தொடர்புபட்டுள்ள அதேநேரம் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக கண்காணிக்கும் ஒரு அதிகாரி.

    புலிகளுக்கு ஏதோ ஒரு உறுதிமொழி வழங்கப்பட்டு இருந்தது. நீரில் மூழ்கி மரணத்தைச் சந்திக்க இருந்தவர்களுக்கு அந்த உறுதிமொழி உயிரைக் காப்பாற்றும் மரக்கட்டையாக அமைந்ததும் அவர்கள் அதனைப் பற்றிப் பிடித்ததிலும் வியப்பில்லை.

    பல நாட்களாக ஒரு சிறு நிலப்பரப்பிற்குள் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் இருந்தவர்கள் இறுதிநாட்களில் நீர் உணவு நித்திரை இன்றியும் இருந்திருக்கிறார்கள். இந்தச் சூழல் மிகவும் நெருக்கடியானது என்பதை நாம் உணர வேண்டும். முடிவுகளை எடுக்கும் தகமை அவர்களிடம் இருக்கவில்லை. மற்றையவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டப்பட வேண்டி இருந்தது.

    ஒரளவு உயிரிழப்புகளை மட்டுப்படுத்தி அவர்களை முடிவுக்கு கொண்டு வர ‘நம்ப வைத்து கழுத்தறுக்கும்’ தந்திரத்தையே இங்கு பாவித்து உள்ளனர்.

    த ஜெயபாலன்.

    Reply
  • Mohan
    Mohan

    நண்பர்களே,
    நக்கீரனின் புகைப்படம் குறித்து ஏதோ பிஎச்டி பரீட்சைக்காக ஆய்வுக்கட்டுரை எழுதுவது போல ஆள்ஆளுக்கு ஆய்வு செய்துகொண்டிருக்கின்றீர்களே?
    நக்கீரன் தனது கட்டுரையில் எந்த இடத்திலாவது உயிர்தப்பிய பிரபாகரன் டிவி பார்த்துக் கொண்டிருப்பதை அட்டைப்படத்தில் காண்கின்றீர்கள் என்று எழுதியிருந்தால் நீங்கள் இவ்வாறு விமர்சிப்பது பொருத்தமானது. அவர் தனது கற்பனைக் கதைக்கு உயிர்கொடுக்க முயன்றிருக்கிறார். அதற்காக அவர் ஒரு சிம்பொலிக்காக ஒரு படத்தை தயார் செய்து வெளியிட்டிருக்கிறார். அவரது இந்தக் கற்பனைக்கதையின் நோக்கமே அந்த வார நக்கீரனை விற்றுத் தீர்ப்பதுதான். நாம் அறிந்தவரையில் இந்த இதழ் ஒவ்வொரு கடைகளுக்கும் வழக்கமாகக் கொடுக்கப்படுவதை விட இரு மடங்கு பிரதிகள் விற்பனைக்காக கொடுக்கப்பட்டிருக்கின்றது. அப்படியிருந்தும் பிhதிகள் விற்றுத்தீர்ந்துவிட்டன என்றால் அவரது நோக்கம் 100 வீதம் நிறைவேறிவிட்டது. அதற்கு துணைபுரிந்தது இந்த அட்டைப்படம்தான். அதற்காக நீங்கள் ஏன் இப்படியெல்லாம் உங்கள் நேரத்தை வீணடிக்கின்றீர்கள் என்று தெரியவில்லை.

    படையினரிடமிருந்து தப்பி குறிப்பாக தன் மகனை இழந்து, தன் சக தோழர்கள் பலரை இழந்த பின்னரும் பிரபாரகரன் சர்வசாதாரணமாக ரிவி பார்த்துக்கொண்டிருப்பார் என்று நக்கீரன் நினைத்ததில் கூட தவறு இருப்பதாக தெரியவில்லை. தன்னிடம் சரணைந்த ஒருவரை சீருடை அணியவைத்து, முகம் சவரம் செய்யவைத்து அதன் பின்னர் சுட்டுக் கொன்றுவிட்டு குளக்கரையில் போட்டுவிட்டு தப்பியொட முயற்சித்தபோது சுட்டுக் கnhல்லப்பட்டார் என்று சிறிலங்கா துணிகின்றபோது, நக்கீரன் இப்படி யோசித்ததில் எந்தத் தவறும் இல்லை. பிரபாகரனின் முகத்திற்கு தாடியை வைப்பதோ அல்லது மீசையை வைப்பதோ நக்கீரனுக்கு ஒன்றும் பெரிய வேலையில்லை. அப்படிச் செய்திருந்தால் அவரது வியாபாரத்தில் சின்ன துண்டு விழுந்திருக்கும்.

    Reply
  • karunya
    karunya

    பிரபாகரன் முதல் அத்தனை தலைகளும் போட்டுத் தள்ளப்பட்டுள்ளது உண்மையென்பது தெள்ளத் தெளிவாகவே தெரிகின்றது. ஆனால் புலம்பெயர் மற்றும் தமிழக புலி ஆதரவு புலிகளின் உயிர்வாழ்வுப் பிரச்சாரம் அரசு மீது எந்தவித போர்க் குற்றச்சாட்டையும் சுமத்த முடியாமல் உலகத்தை மெளனிகள் ஆக்கிவிட்டது.

    மொத்தத்தில் புலிகளின் பிடிவாதமும், தமிழகப் புலி அரசியல்வாதிகள் மீது புலிகள் காடடிய அளவிற்கதிகமான நம்பிக்கையும், “புலன்” பெயர்ந்த புலிகளினதும் புலியாதரவாளர்களினதும் கண்மூடித்தனமான ஆதரவும் அவர்களது அளவுக்கதிகமான கற்பனையுமே இன்று புலிகளின் இறுதி அத்தியாயத்தை எழுதி முடித்திருக்கின்றன.

    “அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்”

    Reply
  • மாயா
    மாயா

    தலைவர் வீர மரணம் அடைந்து விட்டார் என புலத்து புலிகள் சனிக்கிழமை அல்லது விரைவில் அறிவிக்க வேண்டிய நிலையில் உள்ளதாக உள்மட்ட பேச்சுகள் நடமாடுகின்றன. அதற்கான முன் ஒத்திகையாக TYO இளைஞர்களுக்கு குறுந் தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன. இப்போது உணர்வுகளோடு நிற்கும் இளைஞர்களை கட்டுப்படுத்த முடியுமா? என்பதே அவர்களது தற்போதைய பீதி. பிரபாகரனின் மரணத்தை யாரைக் கொண்டு அறிவிப்பது என்பது குறித்த குழப்பத்தில் புலத்து புலிகள் இருக்கிறார்கள்? அது கேபீயால் தெரிவிக்க வேண்டிவரலாம்? அல்லது ஒரு அறிக்கையாகக் கூட ஒரு அமைப்பின் பெயரால் பெயரிடாமல் வரலாம். எதையாவது சொல்லி அடி வாங்க புலத்து புலிகள் தயாரில்லையாம். தூண்டப்பட்டுள்ளவர்கள் வன்முறைகளில் இறங்கக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு. அடுத்து இனி ஆயுதப் போராட்டம் சரி வராது. அரசியல் போராட்டத்தில் இறங்க புலத்து புலிகள் ஆலோசித்து வருகிறார்களாம்.

    இது தொடர்ந்தும் மீதமாக உள்ள மக்களை அழிப்பதற்கே வழி வகுக்கும். இலங்கை அரசு புலத்தில் நோட்டமிட தனது விழுதுகளை அகல விரித்துள்ளது. ஏற்கனவே அது ஆரம்பிக்கப்பட்டே இருந்தது.

    இலங்கை அரசியலில் இனி கூட்டணியையும் புலிகளுக்கு ஆதரவான அரசியல்வாதிகளையும் இல்லாமல் செய்து, புதிய தலைமுறையொன்றை அறிமுகப்படுத்தவும், தமிழர் பகுதிகளில் கலந்து மக்களை வாழக்கூடிய விதத்திலேயே புணரமைப்பு வேலைகள் நடைபெற உள்ளன.
    அது இனி தனித் தமிழர் பகுதியாக இருக்காது. இலங்கையின் ஒரு பகுதியாகவே இருக்கும். இராணுவம் அப்பகுதியின் முக்கிய பாதுகாப்பு நிலைகளாக ஆக்கப்படும்.

    Reply
  • BC
    BC

    //புலிகளுக்கு ஏதோ ஒரு உறுதிமொழி வழங்கப்பட்டு இருந்தது. நீரில் மூழ்கி மரணத்தைச் சந்திக்க இருந்தவர்களுக்கு அந்த உறுதிமொழி உயிரைக் காப்பாற்றும் மரக்கட்டையாக அமைந்ததும் அவர்கள் அதனைப் பற்றிப் பிடித்ததிலும் வியப்பில்லை.//

    முன்பு இராணுவத்தினர் புலிகளை கைது செய்ய முயன்ற போது அவர்களை தற்கொலை செய்ய வைத்து சாகடித்தவர்கள் தாங்கள் மட்டும் உயிரைக் காப்பாற்ற பெரும் முயற்ச்சி செய்திருக்கிறார்கள். எவ்வளவு கொடுரமான புலி தலைமை!! இப்போ தான் இவர்களால் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடைந்திருக்கும்.

    Reply
  • Thaksan
    Thaksan

    “துரோகியென்று(அல்பிரட் துரையப்பா) அன்றொருநாள் தீர்த்த வெடி…… சுடச் சொன்னவனை(அமிர் அண்ணா)……பார்த்தவனை(மாற்று கருத்து கொண்டவரை)……சும்மா இருந்தவனை(அப்பாவி பொதுமக்களை)……சுட்டவனையும்(பிரபாகரனை) சுட்டது. ஆயுதங்களைக் களைந்து இனியொரு விதி செய்வோம். அது என்ன விதியென்பதை அனைவரும் தீர்மானிப்போம். நன்றி.

    Reply
  • rohan
    rohan

    வேடிக்கையாக இருக்கிறது!

    ஒரு துரையப்பாவை சுட்ட சம்பவம் இத்தனை பேரைச் சுட்டது என்றால் ஒன்றிலும் ஈடுபடாது அப்பாவியாக அன்றாட்ம் காய்ச்சிகளாக் இருந்த தமிழர்களைத் துடைத்தெறிந்த மகிந்த கூட்டம், ஆதரித்த இந்தியா, கை தட்டி அங்கீகரித்த மாற்றுக் கருத்து நண்பர்கள், பார்த்திருந்த என் போன்ற வலுவற்றோர் எல்லோருக்கும் என்ன தண்டனை?

    Reply
  • ஞானேந்திரன் தேவரஞ்சன்
    ஞானேந்திரன் தேவரஞ்சன்

    தமிழ் தேசிய கூத்தமைப்பு , தலைவரின் உடலை பொறுப்பேற்று சரியான முறையில் இறுதி நிகழ்வுகளை நடத்தி இருக்கலாம். அவர்கள் கூட ஆயிரக் கணக்கில் தமிழர் வந்து …………………. தலைவரை அநாதை மாதிரி அம்போ என்று கை விட்டுவிட்டார்கள்.
    பக்கத்தில் ஒருவர் கூட இல்லாமல் தனியே தலைவரின் உடல் எரிந்து சாம்பலாகிவிட்டது தலைவர் மீண்டும் உயிர்த்து வந்து தமிழ் தேசிய கூத்தமைப்பின் குடலை உருவுவார் நம்புங்கள் நாளை தமிழ் ஈழம் பிறக்கும்.

    Reply
  • santhanam
    santhanam

    இந்த பின்னோட்டத்தில் இந்தியா ஒரு பங்காளி சுமார் முப்பது வருட ஆயுதபோரட்டத்தில் 24வருடங்கள் இந்தியாவும் இலங்கைஅரசுடன் தான் போரடினோம் எப்ப சர்வதேசம் என்று சொல்லிகொண்டு உலகம் சுற்றிகொண்டு வந்தோம் அன்று எங்கள் மீது சர்வதேசம் ஓருதீர்க்கமான முடிவுக்கு வந்தது இவர்களை இராணுவரீதியில் தோற்படிப்பது என்ற முடிவை 2004ல் எடுத்துள்ளதாக நான் அறிந்தேன்

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //ஒரு துரையப்பாவை சுட்ட சம்பவம் இத்தனை பேரைச் சுட்டது என்றால் – rohan //

    துரையப்பாவின் போட்டுத்தள்ளப்பட்டவர்கள் பட்டியலும் சேர்ந்து தான் இன்று புலிகளுக்கு இறுதியுரை எழுதியுள்ளன. உங்கள் கேள்வியைப் பார்த்தால் “குற்றவாளிக்கு குற்றம் செய்ததற்காக தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றால், அந்த தண்டனையை வழங்கிய நீதிபதிக்கு என்ன தண்டனை”?? என்பது போல் உள்ளது. அதற்காக நான் மகிந்தவை நீதிபதியாக்க வரவில்லை. உங்கள் கேள்விக்கான உதாரணத்தைத் தான் கூறினேன்.

    Reply
  • Ahilan
    Ahilan

    திகதி மற்றும் நேரங்களைக் குறிப்பிடும்பொழுது இலங்கை நேரமும் வெளிநாட்டு நேரங்களும் வேறு வேறு என்பதையும் கவனிக்கவேண்டும் போல் இருக்கிறது. ஏனென்றால் அனைவரும் கூறும் ‘நேர கால விபரங்கள்’ குழப்பமாய் இருக்கிறது.

    Reply
  • damilan
    damilan

    பிரபாகரன் உயிருடன் பிடித்த பின்பே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தானாக தற்கொலை செய்திருந்தால் அவரின் உடலும் கிடைக்காது அழித்திருப்பார். சரணடைவதற்கான காரணங்களாக காட்டக்கூடியவை.

    1. புலிகள்விடுவித்த படைவீரர்கள் பற்றிய கதையையே காணவில்லை.
    2. தாம் அழிந்தால் தமது இயக்கம் அழிந்தவிடும் ஆக இயக்கத்தைக் காப்பாற்ற வேறு வழி சரணடைவதே
    3. தமது குடும்ப அங்கத்தவர்களின் நிலை

    4. காப்பாற்றுவதாக கே.பியால் வழங்கப்பட்ட உறுதிமொழி. இது இந்தியா அல்லது நோர்வே இலங்கை சமாதானச் செயலகம் போன்றவற்றால் வழங்கப்பட்டிருக்கலாம்.

    5. இலங்கை அரசின் முன்னுக்குப் பின்னான முரண்பாடான தகவல்கள் பிரபாகரன் கொல்லப்பட்டதாக 17 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை அரச தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டபோதும்.உத்தியோக பூர்வமாக அரசால் அறிவிக்கபடவில்லை. 19ம் திகதியே உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக ராணுவத்தளபதியால் அறிவிக்கப்பட்டது. இடைப்பட்ட நாளில் என்ன நடந்தது.

    6. 20ம் திகதியே சூசையின் உடல காட்டப்பட்டது. அதாவது அன்றைய தினமே அவர் கொல்லப்பட்டுள்ளார்.

    7. பொட்டம்மானின் உடல் இதுவரை காட்டப்படவில்லை. அவரை தகவல்கள் எடுப்பதற்காக ராணுவம் வைத்திருக்கும.

    8. அம்பாறையிலும் திருகோணமலையிலும் சண்டையின் போது கொல்லப்பட்டதாக காட்டப்படும் சடலங்கள் சரணடைந்தவர்களை பிடித்து குறிப்பிட்ட இடங்களில் வைத்துக் கொண்றுவிட்டு குறித்த இடங்களில் உள்ள ஏனைய புலிகளையும் அழித்துவிட்டதாக அரசு காட்டும். இனி இது போன்ற செய்தி ஏனைய இடங்களில் இருந்தும் வரும்.

    9.கே.பியால் ஆயுதங்களுக்கு ஓய்வு அளிப்பதான அறிவிப்பும் பாலித ஹேகனவால் வெள்ளைக் கொடியை மெதுவாக அசைத்துக் கொண்டு வருமாறு சொல்லப்பட்டதும் புலிகள் சரணடைவதற்கு தயார் என்பதையும் அரசு அதை ஏற்பதற்கு தயார் என்பதும் சூசகமான வார்த்தைகளில் சொல்லப்பட்டவை.

    10. இறுதியாக ராணுவமே யாரால் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதை தமது டிபன்ஸ்.எல்.கே.யில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. 53 வது படையணியின் தலைவர் கமல் குணரட்ணவால் புலிகளின் தலைவர் சுடப்பட்டதா அவரது புகைப்படத்தைப் போட்டுசெய்தி வெளியிடப்பட்டுள்ளத.
    Major General Kamal Gunarathne , Commander of the 53 Division that killed the LTTE leader.
    he tried to escape betraying his most loyal followers before a soldier shot him down. We are not going to comment on how he died….. Simply, he was the best of the cowards.

    Reply
  • kanapathi
    kanapathi

    கேளுங்கள் பிரேமச்சந்திரனை
    கேளுங்கள் செல்வம் அடைக்கலநாதனை
    கேளுங்கள் சம்பந்தனை
    கேளுங்கள் சிவாஜிலிங்கத்தை
    சரணடைந்த தங்கடைய உறுப்பினர்களுக்கு நேர்ந்த கதியை அவர்களுக்கு இப்ப எங்க தெரியப்போகுது தங்களுடைய குடும்பமும் தாங்களும் நலமாயிருந்தால் போதும் அடுத்தவன் எப்படியிருந்தால் எவனுக்கென்ன தமிழீழமும் மண்ணாங்கட்டியும்

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    தமிழனின் கேள்விக்கு கணபதியின் பதில் திருப்தி அளிக்காவிட்டாலும் இன்றைய கே.பியின் பதில் திருப்தியளிக்குமோ??

    Reply