போராட்டம் தொடரவேண்டும். : சேனன்

Wanni_War_Welfare_Campஇரத்தக்களறியின் பின்

இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்வதை நிறுத்து பிரச்சார கூட்டம் ஒன்று பிரான்ஸ்ல் நடைபெறவுள்ளது

இந்தக் கூட்டம் இம்மாதம் 28ம் திகதி 2009 அன்று (The meeting place is) AGECA, 144 bd de Charonne, 75011 – Métro Alexandre Dumas (ligne 2) நடைபெறவுள்ளது.

கடந்த ஜனவரி 2ல் இரானுவம் கிளிநொச்சியை பிடித்ததில் இருந்து 20,000 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளின் கட்டுபாட்டு பகுதிக்குள் இருந்த 300 000க்கும் அதிகமான மக்களை சுற்றிவளைத்த இரானுவம் தினமும் கடும் தாக்குதல்செய்து கொலைவெறியாடியது. உணவு மருத்துவம் தங்கும் வசதிகள் இன்றி பட்டினியில் வாடிய மக்கள்மேல் குண்டுமாரி பொழிந்து கொன்று தள்ளியது. மக்கள் கூட்டமாக இருந்த இடங்கள் மருத்துவமனைகள் என்று முரட்டுத்தனமாக செல்கள் அடிக்கப்பட்டு மக்கள் வேட்டையாடப்பட்டதை மனித உரிமை அமைப்புக்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன. அதனால் இராணுவம் இந்த மனித உரிமை அமைப்புக்களையும் பத்திரிகையாளர்களையும் யுத்தபிரதேசத்தில் இருந்து முற்றாக தடைசெய்தது மட்டுமின்றி தெற்கில் தமக்கெதிராக இயங்க அல்லது பேச முற்பட்டவர்ளையும் வேட்டையாடியது.

கடந்த பல மாதங்களாக நடத்திமுடித்த கொலைவெறியாட்டத்தின் பின் மகிந்த ராஜபக்ச மக்களை ‘விடுதலை’ செய்துவிட்டதாக தற்போது அறிவித்துள்ளார். பயங்கரவாதத்தில் இருந்து இலங்கையை காப்பாற்றி விட்டதாக கடந்த மே 18ல் ‘வெற்றி’ யை அறிவித்துள்ளார் ஜனாதிபதி. இலங்கை மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் பாரிய உயிரிழப்புக்காக துக்கம் கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில் 20ம் திகதியை கொண்டாடும் நாளாக அரச விடுமுறையை அறிவித்துள்ளது அரசு. 20 000க்கும் மேற்பட்ட உயிர்களை சில மாதங்களுக்குள் சூறையாடியதை வெற்றியாக அறிவித்து கொண்டாடும் சிங்கள இலங்கை அரசு தமிழர் உரிமை பற்றி பேச எந்த தகுதியும் அற்றது. வெற்றி கொண்டாட்டங்களுக்கு முந்திய சில நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். எதுவித நடவடிக்கைகளையும் எடுக்க மறுக்கும் ஒன்றுக்கும் உதவாத யு.என் கூட இறுதி நாட்கள் நிகழ்வுகளை ‘இரத்தகளறி’ என்று வர்ணித்துள்ளது. மனித உரிமை மற்றும் ஜனநாயக உரிமை பற்றி எந்த அக்கறையு மற்ற வலதுசாரி வியாபரிகளான ஜரோப்பிய ஒன்றியம் கூட யுத்த குற்றம் சார்பாக தனியாக விசாரனை நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.

பாரிய அவலத்தை எதிர்கொண்டுள்ள தமிழ் மக்களை பொறுத்தவரை இந்த யுத்த முடிவு எந்த மாற்றத்தையும் கொண்டு வந்துவிடவில்லை. அரை மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அகதிகளாக்கப்பட்டு – இரண்டரை லட்சத்துக்கு அதிகமானவர்கள் அடிப்படை வசதிகளற்ற முகாம்களில் அடைக்கப்பட்டு –பேச்சுரிமை உட்பட அனைத்து ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்பட்டு பயக்கெடுதிக்குள் வாழும்படி தள்ளப்பட்டுள்ள நிலையில் கொண்டாட என்ன இருக்கு? தெற்குக்கு தப்பியோடியவர்கள்கூட திரும்பிவர ஒன்றுமில்லாதபடி தரைமட்டமாக்கப்பட்ட வாழ்விடங்களை பார்த்து சந்தோசப்பட என்ன இருக்கு? யுத்தத்தால் ஏற்கனவே கொடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்த மக்களை முகாம்களில் அடைத்து தலையாட்டிகள் முன்நிறுத்தி குற்றவாளிகளாக குறுக்கி அவர்களை மேலும் மன உளைச்சல் நோக்கி தள்ளும் அக்கிரமத்தை பார்த்துகொண்டு பேசாமல் இருக்கமுடியாது.

உரிமை போராட்டம் தொடர்வது அவசியதேவை

பயங்கரவாதத்துக்கு எதிரான அரசின் யுத்தம் ஆயிரக்கணக்கான தமிழர் உயிர்களை வேட்டையாடியுள்ளதால் தமிழர்கள் இனி தம்மேல் திணிக்கப்படும் அரசியலை ஏற்றுக்கnhள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. கொலை வெறியாட்டம் மூலம் தமிழர் தம் உரிமைகளை சரணாகதியாக்கிவிடுவார்கள் என்று எதிர்பார்ப்பது மிகத்தவறு. தமிழ் மக்கள் மிகக்கேவலமான வறுமைக்குள் வாழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள இத்தருணத்தில் தமிழ் மக்களின் பாரிய ஒன்றுபட்ட எழுச்சியே அவர்களை அடக்குமுறையில் இருந்து மீட்கக்கூடியது. இருப்பினும் பாதிக்கப்பட்டுள்ள இம்மக்கள் அத்தகைய உரிமை கோரலை தலையெடுக்காவண்ணம் அனைத்து கட்டுப்பாடுகளையும் உருவாக்கியுள்ளது அரசு. இருப்பினும் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம் தொடர்வதும் மக்கள் சுதந்திரமாக தமது தேவைக்கான குரலை வைக்கும் சூழலை உருவாக்குவதும் அத்தியாவசிய தேவை. அதற்கான முதற்கட்ட போராட்டத்தை முன்னெடுக்கும் முயற்சியை நாம் செய்துவருகிறோம். எமது அணிதிரட்டல் பின்வரும் கோரிக்கைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.

1 இராணுவ அடக்குமுறையை உடனடியாக நிறுத்து – தமிழ் மக்கள் வாழும் இடங்களில் இருந்து இராணுவத்தைத் திரும்பப்பெறு. மக்கள் கடத்தப்பட்டும் காணாமற் போய்க் கொண்டிருப்பதை நிறுத்து.

2 தடுப்பு முகாம்களை மூடு – தேர்வு செய்யப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் மூலம் மக்களின் அடிப்படை வாழ்வாதார உரிமைகளான உணவு, தங்கும் வசதி, மருத்துவத் தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்.

3 அனைவருக்குமான ஜனநாயக உரிமைகளை உத்தரவாதப்படுத்து. – பேச்சுரிமை, ஊடக உரிமை, சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களினதும் தொழிற்சங்க உரிமை, இனம் மதம் சாதி பால் வேறுபாடின்றி அனைவரது உரிமைகளையும் சமமாக மதிக்கும் கட்சிகள் சுதந்திரமாக இயங்க தேர்தலில் பங்குபற்றும் உரிமை, முதலான அனைத்து ஜனநாயக உரிமைகளையும் உத்தரவாதப்படுத்து.

4 ஒன்றுபட்ட தொழிற்சங்கங்களை உருவாக்குவதற்கான ஆதரவைத் திரட்டுவோம். – கூட்டமைக்கும் அல்லது அணிதிரள்வதற்கான உரிமையை வழங்கு. கொலை மற்றும் காணாமற் போகின்றவர்கள் பற்றிக் கண்காணிக்கும் ‘மக்கள் கண்காணிப்பு குழு’ போன்ற அமைப்புகள் சுதந்திரமாக பணியாற்றும் உரிமையை வழங்கு.

5 சுயநிர்ணய உரிமையை உத்தரவாதப்படுத்து (நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நியாயமான மக்கள் பிரதிநிதிகளின் கண்காணிப்பில் வாக்கெடுப்பு மூலமோ அல்லது ஒரு சட்ட நிர்ணய சபையை உருவாக்குவதன் மூலமோ அல்லது வேறேதாவது முறையிலோ சுயநிர்ணய உரிமையைப் பாதுகாப்பதற்கான வழியேற்படுத்து.) வறிய மக்கள், தொழிலாளர்கள் ஒன்றுபடுதலின் அடிப்படையில் மக்கள் தம் எதிர்காலத்தைச் சுயமாக நிர்ணயிப்பதற்கான ஆதரவைத் திரட்டுவோம்.

Show More
Leave a Reply to thurai Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

19 Comments

  • Ranjan
    Ranjan

    Lets then call the new movement as LTTE( Senan Faction) There are already 27 LTTE factions
    1. LTTE (KP faction)
    2. LTTE (Pottu followers faction)
    3. LTTE ( VVT faction)
    4. LTTE ( London Santhan Faction)
    5. LTTE (Tamilnet faction)
    6. LTTE (Left overs in Eastern province)
    7. LTTE ( TNA faction)
    8. LTTE (George Master/Dayamaster)
    9. LTTE ( Vaiko/ Nedumaran faction)
    10.LTTE (Mathivathany- Theevu faction)
    11.LTTE (unknown faction)
    12.LTTE (Dalits faction)
    13.LTTE (Eros invalids faction)
    14.LTTE (Black tiger leftovers in Colombo)
    14 LTTE ( New faction)
    15.LTTE (wannabe LTTE faction)
    16.LTTE (Balasingam-Vellalar/catholic Fctn)
    17. LTTE ( Others faction)
    18.LTTE ( The real one faction)
    19.LTTE ( The unreal one faction)
    20.LTTE (Prabhakaran still alive faction)
    21.LTTE (for fun and socialising faction)
    22.LTTE ( global warming sceptics)
    23.LTTE (who cares faction)
    24.LTTE (credit card fraudsters faction)
    25.LTTE ( can’t remember faction)
    26.LTTE(Heirs of LTTE’s war fortunes faction)
    27.LTTE(New members&new purpose needed Fctn)

    Reply
  • vanthiyadevan
    vanthiyadevan

    hi you left one important faction
    ltte(fund raisers faction-international )

    Reply
  • Karan
    Karan

    மேஜர் ஜெனரல் சந்திரசிறி
    தகுதிவாய்ந்த அதிகாரி – இடம் பெயர்ந்தோர் முகாம்
    இராணுவத் தலைமையகம – வவுனியா.

    அன்புள்ள தளபதி

    வன்னிக்கு பொதி ஏற்றிச் சென்ற வாகனங்கள் சம்பந்தமாகவும்.
    விடுதலைப் புலி போராளிகள் என சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெற்றோர்களின் கோரிக்கை

    வவுனியா லொறி சேவையில் கூட்டுறவுச் சங்கத்தினரின் வேண்டுகோளுக்கு அமைய 29-01-2009 இல் வன்னிக்கு பொதிகளை ஏற்றிச் சென்ற 132 லொறிகளும், யுத்தப் பிரதேசத்திலிருந்து வராமையால் அந்த லொறிகளை மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன். துரதிஷ்டவசமாக லொறி சாரதிகளும், சாரதியாக செயல்பட்ட உரிமையாளர்களும், உதவியாளர்களும் யுத்தப் பிரதேசத்தில் அகப்பட்டுக் கொண்டனர். மிகக் கவலைக்குரிய விடயம், உரிமையாளர்கள், உதவியாளர்களில் பலர் கொல்லப்பட்டும், காயப்பட்டவர்களில் எஞ்சியுள்ளவர்களும், தற்போது நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். அத்துடன் முகாம்களில் தங்கியுள்ள வன்னியில் கைவிடப்பட்;ட லொறிகள், வேன்கள், ட்ரெக்டர்கள், டெய்லர், முச்சக்கர வண்டிகள், கார்கள் அவற்றின் சொந்தக்காரர்கள் அவற்றை மீட்டுத் தரும்படி கோரியுள்ளனர்.

    இடம்பெயர்ந்த மக்கள் மிகவும் வற்புறுத்தி மேலும் கூறுவது புலி போராளிகள் என சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தங்கள் பிள்ளைகளை பார்ப்பதற்கும், அவர்களுடன் பேசவதற்கும் அனுமதி கோருகின்றனர். எனவே தயவு செய்து பின்வரும் விடயங்களை உடன் கவனத்திற் கொள்ளவும்

    01.லொறி போக்குவரத்தில் சம்பந்தப்பட்டவர்களை விடுவித்தல்.
    02.லொறி சொந்தக்காரர்களையோ, உரிமையாளர்களையோ தத்தம் லொறிகளை அடையாளம் கண்டு அவற்றை வவுனியாவுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்து தரவும்.
    03.அதேபோல் இம் முகாம்களில் உள்ள வாகனச் சொந்தக்காரர்களை அவர்களின் பழைய இருப்பிடங்களுக்கு அனுப்பி அவரவர் வாகனங்களை அடையாளம் கண்டு அவற்றை வவுனியாவுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்தல.;
    04.தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை பார்த்து பேச பெற்றோரை அனுமதித்தல்.

    இவர்களின் வேண்டுகோள்கள் நியாயமான கோரிக்கையாக இருப்பதால் தயவு செய்து உடன் நடவடிக்கை எடுக்கவும்.
    நன்றி
    வீ. ஆனந்தசங்கரி
    தலைவர்-த.வி.கூ

    Reply
  • thiru
    thiru

    28.LTTE (treditional supporters Faction)
    29.LTTE (property holders Faction)
    30.LTTE (Real tigers Faction)
    31.LTTE (Belive People Faction)
    32.LTTE (money holders Faction)
    33.LTTE (Thugarry section Faction)
    34.LTTE (Temple Faction)
    35.LTTE (Vananga Mann Faction)
    36.LTTE (Oru paper faction)
    37.LTTE (LTTE telo Faction)
    38.LTTE (Eprlf Faction)
    39.LTTE (Money Smoklers fation)
    40.LTTE (communist faction)
    41.LTTE (early lovers faction)
    42.LTTE (We told him fation)
    43.LTTE (we know he will go faction)
    44.LTTE (he can;t do faction)
    45.LTTE (UNP Faction)

    Reply
  • வெள்ளைவாகனன்
    வெள்ளைவாகனன்

    தமிழர் மத்தியில் இருந்த அப்பழுக்கற்ற தலைவர்களான விசுவானந்ததேவன், பத்மநாபா போன்றவர்களையும் அரசியல் சாணக்கியம் மிக்க நீலன் திருச்செல்வம் போன்றவர்களையும் மகத்தான சமுக தலைவர்களான கேதீஸ்வரன், சுபத்திரன்,விமலேஸ்வரன் விஜிதரன் போன்றவர்களையெல்லாம் படுகொலை செய்து இலங்கைத்தமிழர் மத்தியில் தீர்க்கதரிசனமிக்க தீரமிகு தலைவர்கள் எவரும் இல்லாத அரசியல் வெறுமையை ஏற்படுத்தி விட்டு கோழைத்தனமாக சரண் அடைந்து தம்முயிரை காக்க முயன்ற படுகொலை மட்டுமே செய்ய தெரிந்த முட்டாள்கள் ஒழிந்தது இலங்கை மண்ணிற்கு விடிவை கொண்டு வந்துள்ளது.. –வெள்ளைக்கொடி வெள்ளைவாகனன்

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    சேனன்,
    தொடருங்கள் போராட்டத்தை. எனது முழுமையான ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு. நான் …. ’மாற்றுக்கருத்தாளன்’ அல்ல!

    Reply
  • அம்மணி
    அம்மணி

    அடடா… புலி செத்த பிறகும் புலி செய்த அநியாயங்களையும் சொல்லித்தான் மற்றப் பக்கம் போகணும் (நடுநிலமையைக் காக்கணும் இல்லையா, மனுசர் செத்தா என்ன?). ரஞ்சன், உம்மட Faction எதுவோ? Post-Rajini, Wannabe Neutral, but, Not-so/even-Neutral / ‘At Any cost’ Kill the LTTE Faction. Cost: some 20 000 People
    mmm!

    Reply
  • BC
    BC

    Ranjan, Vanthiyadevan, Thiru, தகவலுக்கு நன்றி.

    Reply
  • nallurkantha
    nallurkantha

    My dear tamil friends,
    History is the best teacher.Tamils are big talkers/Kal thonri man thonri story,Aanda inam story,Ippadai thotkin eppadai story.Combination of these brought the Tamils to this situation.Truth is Tamil or Muslims dont have specific problems.If they had they would have fought.Yes a section of our depressed Tamils in Jaffna are discriminated.They have problems.Section of the Upcountry brothers have problem.Still a considerable section of the Sinhalese are very poor.Muslim also there are problems for a number of people.
    Great leader Mao-All the reactionaries are paper tigers.See the words of the great teacher of mankind.
    Pl try to understand the SL army alone has not defeated the LTTE.It is the alliance between the Wanni Tamils and security froces deafeted the invincible.It is a revolution.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்??

    Reply
  • thurai
    thurai

    புலிகள் தங்கள் தவறுகளை பிறர் சொன்னால் அவர்களை போட்டுத் தள்ளினார்கள். புலிகளிற்கு துணையாகவும் கண்மூடித்தனமாகவும் நடந்தவர்களே புலம் பெயர் தமிழர்கள்.

    புலத்தில் வாழும் சிந்தனையற்ர தமிழர்களே புலிகள் பயஙரவாதிகளாவதற்கும், வன்னிமக்களின் அழிவிற்கும் பொறுப்பானவ்ர்கள். இனிமேலாவது ஈழத்தமிழரின் உருமையெனும் பெயரில் போராட்டங்கள் நடத்தி சிஙகளவர்களின் பகைமையை மேலும் தேடவேண்டாம்.

    போராட்டஙளின் மூலம் தமிழர்களிற்கிடையேயும், சிங்களவ்ர்கழுடனும் ஏற்பட்ட பகைமைகைகளை களைந்தெறிந்த பின்னரே தமிழரின் உருமை பற்ரிய பேச்சு உகந்தது. உறவை வளர்க்க துணிவில்லாதவர்கள் உருமைபற்ரிப் பேசினால் அழிவினையே தமிழர்களிற்குத் தேடிக்கொடுப்பார்கள்.

    துரை

    Reply
  • வெள்ளைவாகனன்
    வெள்ளைவாகனன்

    பானையில் இருப்பதுதான் அகப்பையில் வரும்
    கத்தி எடுத்தவன் கத்தியால்தான் சாவான்
    கெடு குடி சொற்கேளாது
    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
    தனவினை தன்னை சுடும்
    வினை விதைத்தவன் வினை அளப்பான்
    தர்மம் தலை காக்கும்
    உண்மை சுடும்

    வெள்ளைக்கொடி வெள்ளைவாகனன்

    Reply
  • rohan
    rohan

    வாருங்கள் வெள்ளைக்கொடி வெள்ளைவாகனன்.

    உங்கள் பட்டியல் உண்மையானால், சகோதரப் படுகொலை என்றால் என்னவென்று தெரியாத டக்ளஸ், பிரபாகரன் கூடாதென்று தெளிந்து (ஆனால அண்ணன கடவுள் – தமிழேந்தி /நடேசன் / பொட்டு தான் குப்பை என்றும் சொல்லி) வெளியேறிய அமைச்சர் கருணா, ஒருவரையும் கொல்லாது 300000 பணயக் கைதிகளை விடுவித்த இலங்கையின் ராஜபக்ச மற்றும் பொன்சேக, வெள்ளை வான் ஆள் பிடிகாரர், அல்லொரும் எப்படி அழிவர் என்றும் சொல்ல முடியுமா?

    Reply
  • வெள்ளைவாகனன்
    வெள்ளைவாகனன்

    முதன் முதலில் சுயாட்சிக் கழக நவரட்னம் தமிழீழ கோரிக்கையை முன்வைத்தார்.அப்போது மக்கள் அவரையும் அவருடைய தீர்வையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்போது இந்த தனிநாட்டு தீர்வை அமிர்தலிங்கம் “தற்கொலைக்கு ஒப்பான தீர்வு” என்றார். இந்த இடைக்கால கட்டத்தில் அமிர்தலிங்கம் சிவசிதம்பரம் ஜி.ஜி.பொன்னம்பலம் போன்றோர் தேர்தலில் தோற்றதைத் தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை. அமிர்தலிங்கம் சிவசிதம்பரம் தமது தேர்தல் சுயநல அரசியலுக்காகவே தமிழீழ தனிநாட்டு தீர்வை முன்வைத்தார்கள் என்பது உணர முடிகிறது.

    1977 ம் ஆண்டு யூலை மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலின்போது தமிழீழக் கோரிக்கையினை முன்வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியினர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமது வேட்பாளர்களை நிறுத்தியபோதும் அக்கோரிக்கை தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த 878,143 தமிழ் வாக்காளர்களில் 394,992 வாக்காளர்கள் மட்டுமே தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு வாக்களித்தனர். இத்தொகை மொத்த தமிழ் வாக்காளர்களில் 45% வாக்காளர்கள் மட்டுமே தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு வாக்களித்தனர். ஒரு தனி இறைமை பெற்ற நாட்டினுள் இன்னொரு நாட்டினை அமைப்பதானால் குறைந்தபட்சம் 67% மக்களின் ஆதரவு பெறவேண்டியது நியதியாகும். வட்டுக்கோட்டை தனி அரசு பிரகடனப் பாதை, ஒரு பிடி சோற்றுக்கும், திறந்த வெளிச் சிறை வாழ்வுக்கும், நிவாரணத்தில் தங்கி வாழ்வதற்கும், நாடோடியாக அகதியாக அலைவதற்கும் வித்திட்டது.

    தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வடக்குகிழக்கில் இருந்த மூன்றில் ஒரு பங்கு தமிழர்கள் நாட்டைவிட்டு நிரந்தரமாக வெளியேறிவிட்டார்கள். இன்னுமொரு மூன்றில் ஒரு பங்கு தமிழர்கள் நிரந்தரமாக தெற்கில் குடியேறிவிட்டார்கள். வடக்கு கிழக்கில் மூன்றில் ஒரு பங்கு தமிழர்களே உள்ளனர். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை என்பது தமிழ் மக்களின் சகல ஜனநாயக உரிமைகளையும் உள்ளடக்கியது. தனி மனிதனின் கருத்து சுதந்திரம் பெண்களின் உரிமைகள் சிறார்களின் உரிமைகள் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்கள் தொழிற்சங்க உரிமைகள் கருத்து வேறுபாடுகளுக்கும் உடன்பாடுகளுக்குமான இடைவெளிகள் இவற்றை நிராகரிப்பதாக இவற்றுடன் முரண்படுவதாக இனங்களின் சுயநிர்ணய உரிமை இருக்க முடியாது.

    சுயநிர்ணயம், சுயாட்சி, சமஸ்டி போன்ற கோட்பாடுகள், இலங்கையைப் பொறுத்தவரையில், சிங்கள – தமிழ் இனவாதிகளால் மக்கள் மத்தியில் அச்சமூட்டும் விடயங்களாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சமஸ்டி பற்றி பேசிய தமிழரசுக்கட்சியாலும், பின்னர் அதை பிரிவினைவாதமாக மாற்றிய தமிழர் விடுதலைக்கூட்டணியாலும், அதையே அடிப்படையாக வைத்து பிரிவினைவாத யுத்தம் நடாத்திய புலிகளினாலும், அந்த கோட்பாடுகள் சிங்களமக்கள் மத்தியில் பிரிவினைவாத தத்துவமாக விளங்கவைக்கப்பட்டுள்ளது. எனவே தமிழர்கள் பிரிவினையை கோரி நிற்கவில்லை என்பதை நடைமுறையில் நிரூபிக்கும் வகையிலான இடைக்கால தீர்வொன்றை நடைமுறைப்படுத்துவது அவசியம்.–வெள்ளைக்கொடி வெள்ளைவாகனன்

    Reply
  • manithan
    manithan

    In my personal opinion regarding about senan article,
    this writer that’s mean senan…….. he forgotten how many innocent civilians killed last vanni operation this foolish encouraging again fight with sl government ,you want to fight go to sri lanka ,now a days ltte recruiting new carders, so go to sri lanka,don’t fight here,

    Reply
  • chandran.raja
    chandran.raja

    முற்றுமுழுதாக மறுக்கவும் முடியவில்லை. ஜீரணிக்கவும் முடியவில்லை.
    சுவரில் தொங்கவிடப்பட்டுள்ள சட்டம்(பிரேம்) வலுவானது. வரையப்படும் சித்திரங்கள் அசிங்கமானது.

    Reply
  • KUNALAN
    KUNALAN

    புலிகள் ஒரு இயக்கமென்ற ரீதியிற் செத்ததைப் பிரகடனப்படுத்தினர்.. சுவிஸ்மக்கள்!!! (சுவிஸ் தமிழர் சங்கத்தின் அறிக்கை)
    புலி ஒரு இயக்கமென்ற ரீதியில் அடிச்சுவடே இல்லாமல் அகற்றப்பட்டு தமிழர் வாழ்வினதும் இலங்கை அரசியலினதும் வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்த நாளான 24.05.2009 இல் சுவிஸ்வாழ் அரசியல் உணர்மைமிக்க தமிழ் மக்கள் ஒன்றுகூடிப் புலிப் பாசிசத்தின் மீண்டெழ முடியாத முடிவைப் பிரகடனப் படுத்தினர். இது ஓரு புதிய வரலாற்றின் தொடக்கமாகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திடீர் ஒன்றுகூடல் சுவிஸ் தமிழர் சங்கத்தின் ஏற்பாட்டில் 24.5.2009 பிற்பகல் 5மணிக்கு சூரிச் மாநகரில் நடைபெற்றது. பாரிய பொறுப்புக்களைச் சுமக்க பல்வேறு கட்சிப் பிரதிநிதிகள் ஆர்வத்தோடு உடன் பட்டனர். பல ஆரோக்கியமான கலந்துரையாடல்களுடனும் விமர்சனங்களுடனும் பரஸ்பர பரிமாறல்களுடனும் தவறுகளின் புரிந்துணர்வுடனும் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடனும் இக்கூட்டம் வெற்றிகரமாக நிகழ்ந்தேறியது. தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு தமிழினத்திற்கேற்படுத்திய அபகீர்த்தியை அகற்றவே முடியாத அவமானத்தை அருவருப்புடன் ஏற்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இன்று தமிழினம் நிற்கிறது. நாம் ஒவ்வொருவரும் இழைத்த தவறே விடுதலைப் புலிகள் என்ற பாசிஷம் எம் இனத்திற்கு இன்னல்களைத் தோற்றுவிக்கக் காரணமாக அமைந்து விட்டது.

    வீரமிகு தலைவரென புலிகள் அமைப்பினராலும் அதன் அடிவருடிகளினாலும் தோற்றுவிக்கப்பட்ட அவ் இயக்கத்தின் தலைவர் அனைத்துத் தமிழினத்தையும் அடகு வைத்தாற் போல் அவமானமாகத் தோற்கடிக்கப்பட்டது இதுகாலவரையான உலக வரலாறு கண்டிராதது. அவர்கள் மிக உணர்வு பூர்வமாகவே இந்தக் காட்டிக் கொடுப்பை மறைக்க கொல்லப்பட்ட தலைவரையும் உயிரோடு இருப்பதாகப் பலநாள் பிரச்சாரம் செய்தனர். அதன் மூலம் அவர்கள் கடந்த காலங்களிலும் சொன்ன பொய்களின் பரிமாணங்கள் அம்பலமாயின. மீண்டும் அவர்கள் சர்வதேசப் பொலிசால் தேடப்படும் போதைவஸ்து மற்றும் ஆயுத வியாபாரியான பத்மநாதனை மீண்டும் தமிழ்மக்களின் தலைமைக்கு உயர்த்துவதன் அசிங்கமான செயலின் மூலம் மீண்டும் தமிழினத்தைக் காவு கொடுக்கும் நிகழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறினர்.
    இதுவரை காலமும் பிரபாகரனது செயற்பாடுகளும் இறுதியில் அவர் மேற்கொண்ட முடிவும் எவரையும் வெட்கப்பட வைக்கும். இலங்கை இராணுவத்திற்கும் உலகிற்கும் சிம்ம சொப்பனம்போல் காட்சி கொடுத்த வே. பிரபாகரன் கொள்கை, கோலம், குறிக்கோள் அண்டப்புழுகு அனைத்தையும் மறந்து தன் உயிர்மேலும் தன் மனைவி பிள்ளைகள் மேல் மட்டும் கொண்ட ஆசையினால் இலங்கை அரச படைகளிடம் மண்டியிட்டது அவமானச் செயலாகும். இச் செயல் தமிழினத்தின் வரலாற்றில் அழியாத அவமானமும் துரோகமும் மிக்க வடுவாக அமைந்து விட்டது.

    இனி ஒரு தமிழனும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற நாமத்தை உச்சரிக்கவே கூடாது. புலிகள் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் என்றால் முட்டாள்கள் அல்லது ஏமாற்றிப் பிழைப்பவர்கள் என்ற உணர்வு ஒவ்வொரு தமிழனிடமும் இருந்தாலும் இலங்கை அரசு மேற்கொண்ட கடந்த காலத் தவறுகள் இம் மனித குல விரோதிகளை ஆயுத கலாச்சாரத்தால் அதி உயர் அடக்கு முறை அரக்கர்களாக எம் மக்கள் மத்தியில் காலூன்றக் காரணமாகியது. புலிகள் அமைப்பு என்பது ஒரு வெறும் மாயையே என்பதை சுவிஸ் தமிழர் சங்கம் கூட்டிய இன்றைய கூட்டத்தில் பலரும் தங்கள் அனுபவங்களாலும் உலக அரசியல் வரலாறுகளின் ஒப்பீடுகளினாலும் நிரூபித்துப் பேசியமை பிரசன்னமாக இருந்த சபையோர் மத்தியில் இனி ஒரு பிழை ஏற்படாது தடுக்க வேண்டுமென்ற வரலாற்றுக் கடமையை சுமக்க ஒருங்கிணைய துணை நின்றது.

    புலிப்பாசிசத்தால் இலங்கையின் எல்லாச் சமூகங்களும் எல்லாக் குடும்பங்களும் ஏன் எல்லாத் தனிமனிதர்களுமே ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப் பட்டிருந்தனர். எமது வரலாறு பலநூறு வருடம் பின்னுக்குப் போய்விட்ட வேதனையோடு இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் அனைவரும் இணைந்து செயற்பட உறுதி கொண்டனர்.
    1. யுத்த அனர்த்தங்களினால் அழியா வடுக்களை சுமந்து அகதிகளாக்கப்பட்ட வன்னி வாழ் மக்களை கூடிய விரைவில் அவர்களின் சொந்த இடங்களில் மீழ் குடியேற்றம் செய்து தமிழ்தேசீய இன உருவாக்கம் ஏற்படுத்தப்பட முன்னின்று உழைப்பர்.
    2. யுத்தம் தோற்றுவித்த அனைத்து அரசியல் கைதிகளும் நிபந்தனையின்றி விடுதலைபெற ஆவன செய்தல்.
    3. ஒரு பிற்போக்கு வரலாற்றுச் சூறாவளியில் தற்செயலாகச் சறுக்கி விழுந்த புலிகள் என்ற பெயரில் கைதாக்கப்பட்டுள்ள இளைஞர்இ யுவதிகட்கு மேல் பழிக்குப் பழி வாங்கும் அநாகரீகச் செயலைச் செய்யாமல் அவர்களை விடுதலைப் போராட்ட யுத்தக் கைதிகளாக அங்கீகரித்து முன்பு ஜே.வி.பி இளைஞர்களுக்குச் செய்தது போலப் புனர் நிர்மாணவாழ்வுக்கு வழி வகுக்கும் திட்டங்களை வகுத்து பயிற்சி அளித்து எதிர்கால நற்பிரஜைகளாக்குமாறு அரசாங்கத்தைக் கோருதல்.
    4.புலிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட எம் தேசத்து மக்கள் தமது அடிப்படை ஜனனாயக உரிமைகளை மீண்டும் பெற்றுச் சுதந்திரமாக அசையும் உணர்வு பெற்று மதிக்கப்படும் மனிதர்களாக வாழஇ யுத்த சூழ்நிலைக்காக ஏற்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவதனூடு சிங்கள மக்களோடான ஐக்கியத்தை நடைமுறையில் ஏற்படுத்துதல.;
    5. பழையபடி இனவாதத்தைத் தமிழர் அரசியலில் புகுத்தவிடாது மிகக் கண்காணிப்போடு நடந்து கொள்ளல்.
    6. மேற்கு நாடுகள் புலிப் பயங்கரவாதத்தைத் தடைசெய்ததன் காரணமாகப் புலியிடமிருந்து பறிக்கப்பட்ட ஏராளமான தமிழர் சொத்துகளை மீண்டும் பெற்று இடம்பெயர்ந்த அகதிகளுக்கு உதவி செய்தல்.
    7. தமிழ் மக்களிடமிருந்து புலி பலாத்காரமாகவும் வேறு விதங்களிலும் பறித்த சொத்துக்களை உச்சியில் இருந்த புலி ஒட்டுண்ணிகளிடம் யுத்தப் பிரபுக்களிடமும் பெறுவதற்குப் பாடுபட்டு, தமிழ்களுக்கு இவர்களின் மோசடிகளை அம்பலப்படுத்துவதன் மூலம் பெருந்தொகையான இந்நிதிகளைப் பெற்று அதை இடம்பெயாந்த அகதிகளின் உடனடித்தேவைகளைப் பூர்த்தி செய்யப் பாடுபடுதல்.
    8. தமிழ்மக்கள் மீழ்வாழ்வு பெறப் பிரயத்தனப்படும் இவ் இடைமருவுகாலங்களில் ஆத்திரமூட்டும் அரசியல் தாக்குதலுக்குத் தமிழ் அரசியல்வாதிகள் போவதைத் தடுத்தல்
    9. சிங்கள முஸ்லீம் சகோதரர்களோடு மீண்டும் நல்லுறவு மலர ஆவன செய்தல்..
    தீர்க்கமான முடிவுகளுடன் எம்மக்களின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு இக்குறிக்கோளுடன் செயற்பட சர்வதேச ரீதியில் ஒருங்கிணைந்து.. தொலைந்து போகாத எம் குறிக்கோளை அடைவோம் என்ற தளரா உறுதியோடு சுவிஸ் தமிழர் சங்கத்தின் ஒன்றுகூடல் இனிதே நிறைவு பெற்றது.
    –சுவிஸ் தமிழர் சங்கம், Postfach 711, 8038 Zürich Switzerland.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    குணாளன்
    தங்கள் தகவலிற்கு நன்றிகள். இந்த “சுவிஸ் தமிழர் சங்கம்” என்ற பெயரை நான் தற்போது தான் கேள்விப்படுகின்றேன். புலிகளுககெதிராக செயற்பட்ட அனைத்த அமைப்புகளும் ஒன்று சேர்ந்து இதை ஆரம்பித்துள்ளார்களா?? அல்லது இவ்வமைப்பு ஏற்கனவே இருந்த அமைப்பா??

    இவர்களது 9 செயற்பாடுகளும் பாராட்டப்படக் கூடியவையாகவே இருக்கின்றன. தொடர்ந்தும் புலியெதிர்ப்பையே இவர்கள் முன்னெடுக்காமல், தமது செயற்பாடுகளினால் மக்கள் மனதை வென்று விட்டால், மீதமிருக்கும் புலிப்பினாமிகளை அம்மக்களே ஓரம் கட்டி விடுவார்கள்.

    Reply
  • KUNALAN
    KUNALAN

    பார்த்திபன்! மேற்படி தகவல் இன்று எனக்கு மெயிலில் கிடைக்கப் பெற்றேன். இதில் எந்தெந்த அமைப்புக்கள் இணைந்துள்ளனர் என்ற விபரம் எதுவும் எனக்குத் தெரியாது. சில நியாயபூர்வமான கோரிக்கைகள் மேற்படி அறிக்கையில் இருக்கக் கண்டதால் அதனை தேசம் வாசகர்களோடு பகிர்ந்து கொண்டேன். தாங்கள் கூறிய கருத்தினையே நானும் முன்மொழிகின்றேன். இனியும் தொடர்ந்து வெறும் புலியெதிப்பு வாதம் மட்டுமே அரசியலாக நினைத்து வெறும் உரலை இடித்துக் கொண்டிருக்காமல் இன்று நமது தேசத்தில் அல்லலுறும் மக்களுக்கான ஆக்கபூர்வமான பணிகளில் இறங்கி செயலாற்ற வேண்டும் இங்குள்ள பொது அமைப்புக்கள் அத்தோடு நாமும். இன்று வன்னி மக்களின் அவலம் தொடர்கதையானதாகவே இருக்கிறது. புலிக் களைவு எனும் பெயரால் ஒரு சந்ததியையே அழிக்கும் சதிகள் நடந்து கொண்டிருக்கின்றது. மகிந்த சகோதரர்களின் அண்மைக்கால வாய்த்தடிப்பான பேச்சுக்களிலிருந்து அவற்றை நாம் இலகுவாகவே புரிந்து கொள்ள முடிகின்றது இல்லையா..?!

    குணாளன்.

    Reply