இலங்கை அகதிகளின் நீண்டநாள் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் – எஸ். சீ. சந்திரஹாசன்

s_j_v_son.pngநீண்ட காலமாக அகதிகளாக இருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விடிவொன்று எட்டும் என்ற நம்பிக்கை எற்பட்டுள்ளதாக  கடந்த 25 வருடங்களாக இலங்கை அகதிகளை புனரமைக்கும் அமைப்பின் தலைவராக செயற்பட்டுவரும் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் மகன் எஸ். சீ. சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய இலங்கை அகதிகளின் நிலைப்பாடு தொடர்பான இந்திய ஊடகத்திற்கு வழங்கியுள்ள பேட்டியொன்றின் போதே அவர் இவ்வாறு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில் நீண்டகாலமாக அகதிகளாக இருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விடிவொன்று எட்டும் என்ற நம்பிக்கையினை அவர் வெளியிட்டுள்ளார். 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தை அடுத்து அகதியாக இந்தியா சென்ற அவர் ஏனைய அகதிகளின் நலன்களை பேணும் முகமாக இந்த அமைப்பை நிறுவி நிர்வகித்து வருகின்றார்.

இலங்கை தமிழ் மக்களுக்கு சமனான உரிமைகளை வழங்குவதன் மூலம் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அகதிகளாக உள்ள இலங்கையர்களின் சேவைகளை பெறமுடியும் என தெரிவித்துள்ளதுடன் இதன்மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை சிறந்த முறையில் மேம்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
 
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்த காலப்பகுதியினுள் இந்தியாவில் உள்ள 25 மாவட்டங்களில் 73 ஆயிரத்து 378 இலங்கை அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்சமயம் முகாம்களி;ல் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கைத்தமிழர்களுக்கு மன்னிப்பு வழங்கி ஜனநாயக நீரோட்டத்தில் இணைய சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் எனவும் அந்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.
 
மேலும் ஜனாதிபதியினால் அண்மையில் தேசிய தொலைக்காட்சியில் ஆற்றிய உரையை தாம் வரவேற்பதாக தெரிவித்த சந்திரஹாசன் அதற்கிணங்க தமிழ் மக்களுக்க நிரந்தர தீர்வுடனான அமைதி கிட்டும் எனவும் இந்திய ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

4 Comments

 • tax
  tax

  நீண்ட காலமாக காணமுடியாத பல திருமுகங்கள் இனி எம் உயிரிலும் மேலான தமிழ் மக்களே, என்னச்சொல்லிக்கொண்டு வரப்போகிறார்கள். இந்திய எசமானர்களின் முந்தானைக்குள் இருக்கும் மூம் மூர்த்திகளில் ஒருவர் இவர்.

  Reply
 • Nila
  Nila

  கலோ தாக்ஸ் நீர் இதைக்கூடச் செய்யவில்லை. தன்னாலியன்றவற்றை இவர்கள் செய்தார்கள் நீர் வெட்டிப்பிடுங்கியதை சொல்லும் பார்க்கலாம். நீர்தான் எதுவும் மக்களுக்காகச் செய்யாவிட்டாலும் செய்ய முயலுபவர்களைத் தடுக்காமல் இருந்தாலே புண்ணியம்

  Reply
 • rohan
  rohan

  Nila கருத்துடன் 100% ஒத்துப் போகிறேன். இவ்வாறான சில வரிகளை நான் வரைய நினைத்திருந்தேன்.

  எஸ். சீ. சந்திரஹாசனின் OfERRஅமைப்பு செய்திருக்கும் பணிகளை விஷயம் அறிந்தோர் அறிவர். சர்வதேச அமைப்புகளின் உதவியுடன் கடந்த இரு தசாப்தங்களாக தமிழகம் வந்த அகதிகளின் நலன்களைக் கவனிக்க தம்மாலியன்ற உதவிகளை இவரின் அமைப்பு செய்து வருகிறது. அகதி மாணவர்களுக்கு பாடசாலை, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் இடம் எடுத்துத் தருவதுடன் அடிப்படைப் பண உதவியும் செய்கிறார்கள். பொறியியல், மருத்துவம், சட்டம் என்று இல்லாது அரசியல் விஞஞானம், சமூக விஞஞானம் மற்றும் கலைகளில் இம் மாணவர்கள் கற்க ஊக்குவிக்கப் படுகிறார்கள். தமது வயிற்றுப் பாட்டைப் பார்ப்பதுடன், தம் தொழில் ஊடாக தமது இனத்தின் நலனையும் இம் மாணவகள் பேணுகின்றனர்.

  இதற்கெல்லாம் இவர்கள் உங்களிடமும் என்னிடமும் கையேந்தவில்லை. இலங்கையின் மிகப் பிரபலமான அரசியல் குடும்பங்களின் இணைப்பு சந்திரஹாசனின் குடும்பம். அந்த இணைப்புகளை இனத்தின் நன்மைக்காக முதலீடு செய்யும் இவரகள் எம் பாராட்டுக்கு உரியவர்கள். தமது சேவையைப் பிரசித்தப் படுத்தி நாலு காசோ பெருமையோ விருதுகளொ வான்கவும் இவர்கள் முற்படவில்ல. அண்மையில் முள்ளிவாய்க்காலில் 21ஆக ஆரம்பித்து காக்கிநாடாவில் (ஆந்திரா) 11ஆகப் போய் இறங்கிய குடும்பமும் இவர்கள் வசம் தான் வந்திருப்பதாகவும் அறிந்தேன்.

  தட்டுமுட்டு தமிழ் பேசிய சந்திரஹாசன் பண்டிதத் தமிழ் பேசுவதாகவும் அறிகிறேன். இவர்கள் இந்தியாவில் உள்ளனர் – றோ தொடர்புகளும் இருப்பதாகப் பேசிக்கொள்கிறார்கள். இருந்து விட்டுப் போகட்டுமே.

  Reply
 • palli
  palli

  வந்திட்டார் தந்தையின் புதல்வர் தன்மான சிங்கம்; அது சரி தங்களை இந்தியா முகாமில் இருக்கும் பலர் தேடி திரிவதாக அண்மையில் தான்
  கேள்விபட்டேன்; அது என்ன சமாசாரமுங்கோ? சிரிப்புக்கு இனி குறைவே இல்லை;

  Reply