ஆகஸ்ட் மாதம் வடக்கில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் – ஜுன் 17 முதல் 24 வரை வேட்புமனுத் தாக்கல்

north_.jpgவவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்தலுக்கு எதிர்வரும் ஜுன் மாதம் 17ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தலைமையில் அவரது அமைச்சில் இன்று காலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலின் பின்னர் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வட மாகாணத்தில் இறுதியாக கடந்த 1998ஆம் ஆண்டு உள்ளுராட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பின்னர் அங்கு எந்தத் தேர்தல்களும் நடைபெறவில்லை. எனினும் தற்போது வட மாகாண மக்களுக்கு 11 வருடங்களின் பின்னர் மீண்டும் தமது அரசியல் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இவ்விரு உள்ளுராட்சி சபைகளுக்குமான தேர்தலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் நடத்துவதற்கு தேர்தல் திணைக்களம் நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.வட மாகாணத்தில் ஒரு மாநகர சபை, 5 நகர சபைகள் மற்றும் 28 பிரதேச சபைகள் உட்பட 34 உள்ளுராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

2 Comments

 • tax
  tax

  வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது….வன்னியில் அகதிகளாகியுள்ளவர்களும் இதில் அடங்குக்கிறார்கள். இவர்களில் கணிசமானோரிடம் சொந்த அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடிய அடையாள அட்டையிலிருந்து அடைவு வைத்தநகை பற்றுச்சீட்டுவரை இல்லை.ஆக இந்த வாக்காளர்களின் …..அது போக வன்னியில் வவுனியா மாவட்டத்தினை சேர்ந்தவர்களும் யாழ்மாவட்டத்தை சேர்ந்தவர்களுமாக 20ஆயிரம் வாக்காளர்கள் படுகொலை செய்யப்பட்டவர்களில் அடக்கம். ஆக ஏன் இந்த அவசரம்….இனித்தான் பிரபாகரன் இல்லையே…..

  Reply
 • thevi
  thevi

  மகிந்தா தனது கடசியில் சேர்ந்து டக்ளஸை போட்டியிடுமாறு கேட்டிருப்பதாகவும் இனி இலங்கையில் சிறு கட்சிகள் இருக்க தேவையில்லை என மகிந்த கருதுவதாகவும் செய்திகள் கசிகின்றன. இந்த தேர்தலில் யாருடைய உயிர்கள் காவு கொள்ளப்படப் போகின்றனவோ மகிந்தவுக்கே தெரியும். தற்போது புலியின் வழியில் மகிந்த ராஜபக்ச.

  Reply