வெளிநாட்டு இராஜதந்திரிகள் இலங்கை நிலவரத்தை நேரில் பார்வையிட அனுமதியளிக்கப்பட வேண்டுமென மல்வத்த பீடாதிபதி வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இலங்கை குறித்து சர்வதேச நாடுகளிடையே காணப்படும் பிழையான கருதுகோள்களை களைய வேண்டுமாயின் வெளிநாட்டு இராஜதந்திரிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்திருந்த போது, மல்வத்த பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த தேரர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். எதிர்வரும் காலத்தில் பயங்கரவாதம் தலை எடுக்காமலிருக்கத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.