‘ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது’ டெஸ் பிரவுண் : தொகுப்பு த ஜெயபாலன்

Des_Brown_27May09‘புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்தை தவிர்த்து அரசியல் பேச்சுவார்த்தையூடாக இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு ஆதரவளிக்க வேண்டும்’ என்று இலங்கைக்கான பிரித்தானிய அரச பிரதிநிதியான டெஸ் பிரவுண் லண்டன் இல்போர்ட்டில் மே 27ல் இடம்பெற்ற சந்திப்பின் போது தெரிவித்தார். ‘ஆயுதப் போராட்டத்திற்கு நிதி வழங்கி அதனை ஊக்கப்படுத்துவதைத் தவிர்த்து மக்களை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்’ என்றும் தெரிவித்தார். இச்சந்திப்பில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் அரசியல் போக்கில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதை டெஸ்பிரவுண் வலியுறுத்தினார்.

தற்போதைய அரசியல் சூழலை தெளிவுபடுத்திய டெஸ் பிரவுண் ‘புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிகள் பற்றி ஆராய வேண்டும்’ எனத் தெரிவித்தார். ‘அடுத்த தலைமுறையினருக்கு இப்பிரச்சினையை சுமத்தாமல் இப்பொழுதே இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வட அயர்லாந்துப் பிரச்சினையைச் சுட்டிக்காட்டிய டெஸ் பிரவுண் 800 ஆண்டுகள் பழமையான இப்பிரச்சினையில் கடந்த 50 அண்டுகளில் முதற் தடவையாக வன்முறையற்ற சூழலுக்குள் ஒரு புதிய தலைமுறை வளர்ந்து வருகின்றது’ எனத் தெரிவித்தார்.

‘நான் பக்கம் சார்ந்து செயற்பட முடியாது’ எனத் தெரிவித்த அவர் சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த யுத்தத்தில் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் மிக மோசமான யுத்தக் குற்றங்களைப் புரிந்து உள்ளனர்’ அதற்கு ‘தகுந்த ஆதாரங்கள் உண்டு’ எனக் கூறினார். ‘இரு தரப்பினரதும் பிரச்சாரங்கள் மோசமானது. பயங்கரமானது.’ என்பதை வலியுறுத்திய டெஸ் பிரவுண் ‘இது இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு மிகவும் தடையாக இருக்கின்றது’ எனத் தெரிவித்தார். ‘இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவும் என் போன்றவர்களுக்கு இரு தரப்பிடம் இருந்தும் ஆதரவு கிடைப்பதில்லை’ என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவர் ‘நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதற்கு ஏற்ப என்னால் பேச முடியாது’ என்றும் ‘எது சாத்தியமானதோ அதனையே நான் பேச முடியும்’ என்றும் தெரிவித்தார்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே கேள்விகள் கேட்க அனுமதிக்கப்பட்டது. பெரும்பாலும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை, இடம்பெயர்ந்த முகாம்களுக்கு மனிதாபிமானப் பணியாளர்கள் சுயாதீனமாக அனுமதிக்கப்படவில்லை. முகாம்களில் உள்ள இளைஞர்கள் கடத்தப்படுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் நடைபெறுகின்றது. என்பது போன்ற விடயங்களே மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது.

‘இலங்கை அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்க எதிராக எனது அரசு தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது. ஆனால் நான் நியுயோர்க் சென்றிருந்த போது எமக்கு கோசங்கள் வைக்கப்படுகிறது. ஆனால் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படுபவர்களுக்கு எவ்வித கோசங்களும் காணப்படவில்லை’ என டெஸ் பிரவுண் தெரிவித்தார்.

தான் இலங்கை சென்றிருந்தபோது கண்டவை உலகின் ஏனைய எப்பாகத்திலும் கண்டிராத கொடுமைகள் என விபரித்தார். ‘ஒரு சிறிய துண்டு நிலப்பரப்பில் 100 000 முதல் 150 000 மக்களை வைத்துக் கொண்டு ஒரு மிக மோசமான யுத்தம் நடத்தப்பட்டு இருக்கின்றது’ எனத் தெரிவித டெஸ் பிரவுண் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தவர்களைச் சந்தித்து அங்கு அவர்கள் புலிகளின் பிடியில் அனுபவித்தவை பற்றியும் அறிந்தள்ளதாகத் தெரிவித்தார். மனிக்பாம் முகாமைப் பார்வையிட்டதாகவும் தெரிவித்தார்.

அப்போது சபையில் இருந்த ஒருவர் அது அரசு சர்வதேச நாடுகளுக்கு காட்டுவதாக வைத்துள்ள முகாம் என்றார் இன்னுமொருவர் தானும் அம்மகாம்களில் உள்ளவர்கள் பலருடன் பேசியதாகவும் அவர்களுடைய அனுபவம் வேறாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். ஒரு முகாமிற்கு சென்று ஒரு சிலருடைய வாக்கு மூலத்தை வைத்து முடிவுக்கு வர முடியாது என்று இன்னுமொருவர் குறிப்பிட்டார்.

இவற்றுக்கு பதிலளித்த டெஸ் பிரவுண் ‘நான் ஒரு முட்டாள் அல்ல. எனக்கு என்ன செய்கின்றேன் சொல்கின்றேன் என்பது தெளிவாகவே தெரியும். நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதைச் சொல்ல என்னால் முடியாது. நான் கண்டதைக் கேட்டதை இங்கு சொல்கிறேன். இதனை வைத்துக்கொண்டு நான் எந்த முடிவுக்கும் வரவில்லை. ஆனால் அவர்கள் என்னிடம் சொன்னதை நான் மற்றவர்களுக்கும் சொல்கிறேன். அதனை யாரும் தடுக்க முடியாது’ என்று நறுக்காகத் தெரிவித்தார்.

மற்றுமொருவர் புலிகளிலும் பார்க்க இலங்கை அரசே கூடுதலான யுத்தக் குற்றங்களை புரிந்தள்ளது என்று குறிப்பிட்ட போது ‘இங்கு யார் கூடுதலாக மனித உரிமை மீறினார்கள் என்று போட்டி வைக்கவில்லை’ எனப் பதிலளித்தார் டெஸ் பிரவுண்.

எவ்வாறான ஒரு தீர்வை நீங்கள் முன் மொழிகிறீர்கள் என ஒருவர் கேட்கப்பட்ட போது ‘நான் தமிழர்களினதோ சிங்களவர்களினதோ பிரதிநிதியல்ல. இலங்கையில் ஒரு சமாதானம் வரவேண்டுமானால் அதற்கு நீங்கள் சமாதானம் வேண்டும் என்பதை விரும்ப வேண்டும். தீர்வும் இலங்கையர்களிடம் இருந்துதான் வரவேண்டும். நாங்கள் தீர்வு சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அதனை நீங்களும் ஏற்றுக்கொள்ள மாட்டிர்கள் அவர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நாங்கள் நீங்கள் பேசுவதற்கான சூழலைத் தான் ஏற்படுத்தித் தருவோம்’ என்றார் டெஸ் பிரவுண். அப்போது அதில் குறிக்கிட்ட ஒருவர் இலங்கை அரசு இனவாத அரசு அதனுடன் பேச முடியாது என்றார். அதற்குப் பதிலளித்த டெஸ் பிரவுண் ‘நாங்கள் யாரும் நண்பர்களுடன் சமாதானத்தைக் கோருவதில்லை. எதிரியுடனேயே சமாதானத்தைக் கோர வேண்டும்’ என்று கூறிய அவர் ‘அரசுடன் பேச முடியாவிட்டால் யாருடன் பேசி சமாதானத்தை ஏற்படுத்தப் போகிறீர்கள்’ என்றும் கேள்வி எழுப்பினார்.

‘நான் சொல்லவில்லை. எல்ரிரியின் அறிக்கையே சொல்கிறது ஆயுதங்களைக் கைவிட்டு அரசுடன் அரசியல் பேச்சுவார்த்தையினூடாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்று’ என்பதைச் சுட்டிக்காட்டிய டெஸ் பிறவுண் அதுவே சரியான வழியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

‘தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை வெளிப்படையான விவாதங்களுடாக ஒன்றாக முடிவு செய்ய வேண்டும்’ என்றவர் ‘அது எதிர்மறையானதாக அமையாமல் (ஏகபிரதிநிதித்துவம் ஆயுதப் போராட்டம் தமிழீழம்) சர்வதேச எதிர்பார்ப்புகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டதற்கு ‘என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்ட அவர் எல்ரிரிஈ இன் தற்போதைய நிலைப்பாடு மதிக்கத்தக்கது எனத் தெரிவித்தார். மேலும் ‘புலம்பெயர்ந்தவர்கள் வழங்கும் ஒவ்வொரு பெனியும் பொருளாதார நோக்கங்களுக்கு மட்டும் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும்’ என்பதை வலியுறுத்தினார். கடந்த காலங்களில் புலம்பெயர்ந்தவர்களின் உதவிகள் எல்ரிரிஈ இன் யுத்த நோக்கங்களுக்குச் சென்றதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டிய அவர் ‘அமெரிக்க ஐரிஸ் பிரஜைகளின் நிதி ஐஆர்ஏ க்கு வழங்கப்பட்டது தடைப்பட்டதும் வட அயர்லாந்தில் சமாதானச் சூழல் தோன்றுவதற்கு ஒரு காரணம்’ எனத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் ‘இலங்கை மக்களைப் பலப்படுத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

இறுதியாக தேசம்நெற் சார்பாக கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த டெஸ் பிறவுண் பிரித்தானிய மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மாற்றியமைக்கப்படுவதன் மூலமே மனித உரிமையை மீறுபவர்களை தண்டிக்க வாய்ப்பு அதிகமாகும் எனத் தெரிவித்தார்.

பெரும்பாலும் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் இருந்த 200க்கும் அதிகமான மக்கள் மத்தியில் மிகவும் உணர்வுபூர்வமான கேள்விகளுக்கு டெஸ் பிரவுண் பதிலளித்தார். அவருடைய பதில்கள் பெரும்பாலும் புலம்பெயர்ந்த தமிழர்களின் அபிலாசைகளை திருப்திப்படுத்தாது என்பதை மிகவும் தெளிவாகவே அறிந்து வைத்திருந்ததை அவரின் பதில்களில் காணக் கூடியதாக இருந்தது. அவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் பதிலளிக்கவும் அவர் முற்படவில்லை. ஸ்கொட்லன்ட் பகுதி பாராளுமன்ற உறுப்பினரான அவருக்கு இல்போர்ட் வாக்கு வங்கி பற்றிய அக்கறையும் இருந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் அவருடை பதில்கள் எவ்வித பூசி மெழுகலும் இன்றி வெளிப்படையானதாக அமைந்திருந்தது.

ஐ நா மனித உரிமைக் குழுவின் தீர்மானம் ராஜபக்ச அரசுக்கு மற்றுமொரு அரசியல் வெற்றி:

இலங்கை அரச படைகளின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் மேற்கு நாடுகளின் கூட்டினால் கொண்டுவரப்பட இருந்த தீர்மானம் இலங்கை அரசின் இராணுவ வெற்றியை வரவேற்கும் வகையில் அமைந்தது. இலங்கை அரச படைகளின் யுத்தக் குற்றங்களுக்கு எதிராக பலத்த எதிர்பார்ப்புடன் கொண்டு வரப்பட இருந்த தீர்மானம் புஸ்வாணமாகியது. மாறாக புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை விடுவித்ததை பாராட்டும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசைப் பாராட்டும் தீர்மானத்திற்கு சாதகமாக 29 நாடுகள் வாக்களித்தன. எதிராக 12 நாடுகள் மட்டுமே வாக்களித்தன. 47 உறுப்பினர்களைக் கொண்ட இந்த மனித உரிமைக் கவுன்சிலில் 6 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்: 29 நாடுகள் – Angola, Azerbaijan, Bahrain, Bangladesh, Bolivia, Brazil, Burkina Faso, Cameroon, China, Cuba, Djibouti, Egypt, Ghana, India, Indonesia, Jordan, Madagascar, Malaysia, Nicaragua, Nigeria, Pakistan, Philippines, Qatar, Russian Federation, Saudi Arabia, Senegal, South Africa, Uruguay, and Zambia.

தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தவர்கள்: 12 நாடுகள் – Bosnia and Herzegovina, Canada, Chile, France, Germany, Italy, Mexico, Netherlands, Slovakia, Slovenia, Switzerland, and United Kingdom.

வாக்களிப்பில் கலந்து கொள்ளாதவர்கள்: 6 நாடுகள் – Argentina, Gabon, Japan, Mauritius, Republic of Korea, and Ukraine.

மனித உரிமைக் கவுன்சிலின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முடிந்த கையோடு இல்போர்டில் இடம்பெற்ற சந்திப்பில் ‘இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதராகக் குரல் கொடுக்கும் பாராளுமன்றத்திற்கு முன் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. ஆனால் அதற்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக எந்தப் போராட்டங்களும் இடம்பெறவில்லை’ என இலங்கைக்கான பிரித்தானிய அரச பிரதிநிதி டெஸ் பிறவுண் தெரிவித்தார். மே 27 மாலை இடம்பெற்ற சந்திப்பிலேயே இதனை அவர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையிலேயே அவரிடம் இருந்து இக்கருத்து வெளிப்பட்டது.

குறைந்தபட்சம் சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் இடப்பெயர்வு முகாம்களுக்கு சுயாதீனமாகச் செல்லக் கூடிய அனுமதியைக் கூட அத்தீர்மானத்தினுள் கொண்டுவர முடியவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்குழு மிகவும் அரசியல் மயப்படுத்தப்பட்ட அமைப்பாக மாறியுள்ளதை இத்தீர்மானத்தின் வாக்களிப்பு வெளிப்படுத்தி உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நாடாகப் பார்க்கப்பட்ட தென் ஆபிரிக்காவும் அரசுக்கு ஆதரவான தீர்மானத்திற்கு ஆதரவாகவே வாக்களித்தது புலிகளின் ஆதரவாளர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. தென் ஆபிரிக்காவின் பொருளாதார நலன்கள் இந்தியாவில் தங்கி உள்ளதால் தென் ஆபிரிக்கா இலங்கை – இந்திய அரசுகளுக்கு ஒத்து வாக்களித்து இருப்பதாக கொள்ளப்படுகிது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் அண்மைய இரு விடயங்கள் அங்கத்துவ நாடுகளிடையே பாரிய விரிசல் ஏற்பட்டு இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. ஏப்ரலில் ஈரானிய அதிபர் அஹமதிநிஜா உரையாற்றிக் கொண்டிருக்கையில் பெரும்பாலான மேற்கு நாட்டு ஐரோப்பிய ராஜதந்திரிகள் எதிர்ப்புத் தெரிவித்து மண்டபத்தைவிட்டு வெளியேறினர். அதே போன்று மே 27 இலங்கை அரசு தொடர்பான தீர்மானத்திலும் மேற்கு நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கை அரசுக்கு எதிராக வாக்களிக்க வளர்ச்சி அடைந்துவரும் நாட்டுகள் இலங்கை அரசுக்கு சாதகமாக வாக்களித்து உள்ளன.

இந்த அரசியல் முரண்பாடுகளிடையே மனித உரிமைகள் கேள்விக்குறியாகி உள்ளது. இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து வாக்களித்த பிரித்தானியா உட்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இஸரேலும் மனித உரிமைக் காவலர்கள் அல்லர் என்பதும் உண்மையே. மனித உரிமைகள் என்பதும் அரசியல் பேரம் பேசலுக்கான ஒரு விடயமாகவே உள்ளது.

Show More
Leave a Reply to desblack Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

14 Comments

  • tax
    tax

    ஜெயபாலன் நீங்கள், பிரித்தானியா வந்த மனித உரிமை குற்றவாளியை ஏன் தப்ப விட்டீர்கள் என்ற கேள்விக்கும் டெஸ்பிறவுண் பதிலளிக்காமல் மெளனமாக இருந்துவிட்டாரே….

    Reply
  • sivaji
    sivaji

    நேற்று இரவு இல்பேட் பிள்ளையார் கோவில் கூட்டத்தில் வந்திருந்த புலிப்பினாமிகள் எல்லோருமே இன்று வரையில் பிரபாகரன் உயிருடன் இருப்பதாயும்- அதை மட்டுமல்ல டெஸ் பிரவுண்னிடம் கேட்ட கேள்விகள் எல்லாம் இன்றுவரையில் இன்னும் திருந்தவில்லை எல்லாமே நடிப்பாகவே இருக்கிறது- டெஸ் பிரவுண் புலிகளும் மனித உரிமை மீறல்களையும் யுத்த மரபகளையும் மீறினவர்கள் என்பதை தெளிவாக கூறினார் அவற்றை எல்லாம் மறந்து விட்டு டெஸ் பிரவுண் பேசியிருக்க வேண்டும் என்ற பாணியிலே கேள்விகளையும் கருத்துக்களையும் முன்வைத்தனர்.

    கூட்டத்திற்கு வந்திருந்த சிறுவனை அவர்களது தாய் தந்தையர் எப்படியாக தவறாக வழி நடத்துகிறார்கள் என்பதை தெட்டத் தெளிவாக தெரிகிறது. இந்த சிறுவன் கூறியது பிரித்தானிய அரசு தமது உதவிகளை புலிகளிடம் கொடுக்க வேண்டும் என்றும் புலிகளால் மட்டுமே எந்த உதவிகளையும் மக்களுக்கு பகிர்ந்தளிக்க கூடியவர்கள் என்றும்- இதற்கு பதிலளித்த டெஸ் புலிகள் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் என்பதை திட்வட்மாக தெரிவித்து அவர்களுடன் தொடர்பு வைப்பதும் சட்ட விரோதம் என்றார்.

    சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்தும் என்று டெஸ் சொன்ன கருத்தை உள்வாங்கியதாக தெரியவில்லை.

    Reply
  • gobi
    gobi

    ரக்ஸ் அந்த மனித உரிமை குற்றவாளி லண்டனில் வைத்திருக்கையில் புலிகள் எல்லாம் ஏனாம் மெளனமாயிருந்தவை???

    Reply
  • maruthu
    maruthu

    கூட்டத்திற்கு வந்திருந்த சிறுவனை அவர்களது தாய் தந்தையர் எப்படியாக தவறாக வழி நடத்துகிறார்கள்..//

    சில வீடுகளில் குழந்தைகள் ஜிரிவி மட்டும் தான் பார்க்கிறார்கள் சிலவேளை வீட்டில் அவர்களது ரிமோட் கன்றோல் செட்டியினுள்ளோ மறைந்து விடும் அவர்கள் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை காரணம் ஜரிவி மட்டும் தாம் பார்ததால் போதும் பிள்ளைகள் அவ்வழியே தானே வளரும். ஆதலால் இப்படியான முதிர்வற்ற கதைகளே வரும்.

    Reply
  • tax
    tax

    கோபி, இது போன்ற பற்பல முட்டாள் தனமான முடிவுகளாலேயே புலிகளுக்கு இந்த நிலை என்பதை நான் மட்டில் ஏற்றுக்கொண்டு ஆவது ஒன்றுமில்லை. இந்த போதைக்கு அடிமைப்பட்டு போனதில் புலிகள் மட்டும் குறைகூறுவதில் அர்த்தமில்லை. மக்கள் இதனை விளங்கிக்கொள்ளாத மரமண்டைகளாக இன்னமும் இருக்கவே செய்கிறார்கள்… இன்னும் இருப்பார்கள். இங்கு அந்த மனித உரிமை குற்றவாளியால் சாதாரணமாக பாதிக்கப்பட்ட எந்த ஒரு தமிழனும் கூட முன்வரவில்லைத்தானே…ஏன்

    Reply
  • SUDA
    SUDA

    //இலங்கையில் ஒரு சமாதானம் வரவேண்டுமானால் அதற்கு நீங்கள் சமாதானம் வேண்டும் என்பதை விரும்ப வேண்டும்.//டெஸ் பிரவுண.
    மிக யதார்த்தமான கூற்று. அதுதான் இங்குள்ள புலிப்பினாமிகள் சமாதானம் வந்து விடக் கூடாதென்றல்லவா விரும்புகின்றார்கள். அவ்வாறு வந்து விட்டால் இங்குள்ள ஏமாளிகளிடம் மண் மீட்பு நிதி கண்ணீர் வெள்ளம் வணங்கா மண் அது இதென்று பணம் கறக்க முடியாதல்லவா?

    Reply
  • palli
    palli

    புலிகள் மட்டுமல்ல நாமும் சில விட்டு கொடுப்புகளுடன் செயல்படுவது அவசியம், தொடர்ந்தும் புலி பகையை மட்டும் பேசாது எமது இனம்பற்றி யாதார்த்தமாக சிந்திக்க வேண்டும்; தயவு செய்து அந்த வர்க்கம் இந்த வர்க்கம், தாலித்தியம், பெண்ணியம், இலக்கியம் இப்படி ஒவ்வொருவரும் தனி பாதையால் செல்லாமல் அவைகளை நடைமுறைபடுத்தும் அதே வேளை தமிழினம் படும் அவஸ்த்தையை சிறிதேனும் சிந்திப்போம், தயவு செய்து அங்கு வறண்டு போய் இருக்கும் மக்களை வைத்து அரசியல் செய்யாது; அவர்கள் புதுணர்வு பெற எம்மால் முடிந்ததை செய்வோம்;அல்லது செய்வோருக்கு வழி விடுவோம்:

    Reply
  • desblack
    desblack

    //இலங்கையில் ஒரு சமாதானம் வரவேண்டுமானால் அதற்கு நீங்கள் சமாதானம் வேண்டும் என்பதை விரும்ப வேண்டும்.//டெஸ் பிரவுண.
    How can u talk about peace when there is a genocide happening?
    We have to resist. The failure of resistance of LTTE is a mistake of methodology. We shouldn’t blame the resistance, we all have to discuss how to fight and self-defend the genocide for which the government of Lanka is recruiting 100 000 more military and planning deliberate colonies and killings.??!!

    Reply
  • suppu
    suppu

    //புலிகள் மட்டுமல்ல நாமும் சில விட்டு கொடுப்புகளுடன் செயல்படுவது அவசியம்இ தொடர்ந்தும் புலி பகையை மட்டும் பேசாது எமது இனம்பற்றி யாதார்த்தமாக சிந்திக்க வேண்டும்// பல்லி

    நேற்றய கூட்டத்தில் ஒரு புலிப்பினாமி கூட்டத்திற்கு வந்த மற்றவரைப்பார்த்து துரோகிகள் கூட்டத்திற்கு வந்திருக்கினம் போல என்று பேசினார் பல்லி சொல்லுங்கோ யார் முதலில் என்பத கூட ஒரு பிரச்சினையான விடயமே.

    Reply
  • thevi
    thevi

    ஜிரிவி யை திறந்து விட்டார்கள். சில பொழுதுகள் நிம்மதியாயிருந்தோம். வெள்ளைக்காரன் உண்ணாவரதம் இருப்பதை காட்டுகிறார்கள். இனவாதிகளுக்கெதிராக போராடிய சொந்த இனத்தவர்களை நெருப்பில் வீசி விட்டு வெள்ளைக்காரனை கொண்டு ஜிரிவி படம் காட்டி தமது வயிற்று பிழைப்பை தொடருகின்றனர். தீபத்தையும் ஜிரிவியையும் மூடினாலே அரசியல் ரீதியில் தமிழ் மக்கள் சிந்திப்பார்கள். இன்று ஜிரிவியில் ஒரு பாட்டு – அதில் சன் ரிவியில் வந்த சோப் விளம்பரத்தையும் கறுப்பு வெள்ளையில் பாடலுக்குரிய காட்சியாக இடைசெருகி புலன் பெயர் மக்களை ஏமாற்றுகிறார்கள். என்ன கொடுமை இது!

    Reply
  • santhanam
    santhanam

    சில புலி பினாமிகள் அவர் சூரியதேவன்சாக வரம் பெற்றவர் என்று கஷ்ரோவின்….. கதை அளக்கினம். பாவபட்ட தமிழ்இனம் மக்களை பற்றி சிந்திப்பவர்கள் யாரும் இல்லை

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    ரக்ஸ் கேணல் கருணா லண்டன் வந்திருந்த போது அவர் மீது எவ்வித மனித உரிமை மீறல் நடவடிக்கையையும் எடுக்காத பிரித்தானிய அரசு இப்போது ஐநா வில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்பதன் யதார்த்தம் என்ன என்று டெஸ் பிரவுணிடம் கேட்டிருந்தேன். ஆனால் அவர் சபையில் அதற்குப் பதிலளிக்க மறந்துவிட்டார் என்றே நினைக்கிறேன். பலரும் கேள்விகளோடு இருந்ததால் நான் மீண்டும் தலையீடு செய்யவில்லை. ஆனால் கூட்டம் முடிந்த பின் அவர் பதிலளிக்கவில்லை என்பதை நினைவுபடுத்தியபோது அவர் வருமாறு தெரிவித்தார்.

    ‘எங்களுடைய நாட்டில் உள்ள மனித உரிமை விதிகளுக்கு அமைய எங்களால் கருணா மீது மனித உரிமை மீறல் வழக்கைத் தொடர முடியவில்லை. இந்தச் சட்டமுறைகள் மாற்றப்பட வேண்டும். ஐநாவிலும் இதே நிலையே. அதனால் தற்போதுள்ள மனித உரிமைச் சட்டங்களை மனித உரிமைக் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும்” என டெஸ் பிரவுண் தெரிவித்தார்.

    சுட்டிக்காட்டியதற்கு நன்றி ரக்ஸ்.

    Reply
  • மாயா
    மாயா

    //எங்களுடைய நாட்டில் உள்ள மனித உரிமை விதிகளுக்கு அமைய எங்களால் கருணா மீது மனித உரிமை மீறல் வழக்கைத் தொடர முடியவில்லை. இந்தச் சட்டமுறைகள் மாற்றப்பட வேண்டும். ஐநாவிலும் இதே நிலையே. அதனால் தற்போதுள்ள மனித உரிமைச் சட்டங்களை மனித உரிமைக் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும்” என டெஸ் பிரவுண் தெரிவித்தார்.//

    மகிந்த – கோட்டபய – சரத் மற்றும் ஏனையவர்கள் தப்பிடுவார்கள். அட போங்கப்பா, இந்த அமைப்புக்கு செலவாகும் பணத்தை வேற ஏதாவதுக்கு பயன்படுத்தலாமே?

    Reply
  • palli
    palli

    // கூட்டத்தில் ஒரு புலிப்பினாமி கூட்டத்திற்கு வந்த மற்றவரைப்பார்த்து துரோகிகள் கூட்டத்திற்கு வந்திருக்கினம் போல என்று பேசினார் //
    சுப்பு இதை விட மோசமாகவே எம்மிடம் பேசிஊள்ளனர்; சிலநேரங்களில் எம்மை தீண்ட தகாதவர் போல் கூட நடத்துள்ளனர்;ஆனால் அதுக்காக நாமும் அப்படி நடப்பதா??அதுக்கு இது தருனமா? அப்படியாயின் எமக்கும் அவர்களது அதிகார தனத்துக்கும் என்ன வேறுபாடு, நடந்தவைகள் எமக்கு கெட்டவையாகவே இருக்கட்டும்; நடப்பவை மக்களுக்கு நல்லவையாகவே இருக்கட்டும்:

    Reply