மூன்று மருத்துவர்களையும் விடுவிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியிடம் கோரிக்கை

da-de.gifபுலித் தலைமையின் பிடியில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகைதந்த நிலையில் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டுள்ள வரதராசா, சண்முகராசா சத்தியமூர்த்தி ஆகிய மருத்துவர்களை அவர்களது உறவினர்களுடன் இணைப்பதற்கு உதவுமாறு  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்  ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 Comments

  • Pothu
    Pothu

    டக்ளசின் அரசியலுடன் உடன்பாடில்லா விட்டாலும் நல்ல விடயங்கள் செய்யும் போது சற்று தட்டிக் கொடுக்கலாம்.

    Reply
  • sekaran
    sekaran

    அவர்கள் எந்தப் பக்கம் சார்ந்திருந்தாலும் அல்லலுற்ற மக்களுக்கு அத்தனை இடர்ப்பாடுகளிலும் தன்னலங் கருதாது சேவை செய்திருக்கிறார்கள். அது எத்துணை உயர்வானது! மனிதம் செத்துப்போகவில்லை என்று நிரூபித்திருக்கிறார்களே! அவர்களை விடுதலை செய்வது மட்டுமல்ல சிறப்புடன் நடத்தவேண்டும்.

    Reply
  • rohan
    rohan

    அவர்கள் எந்தப பக்கம் சார்ந்திருந்தாலும்…..?

    இதைத் தாண்டி சிந்திக்கவே மாட்டீர்களா?

    அவரகள் ஏன் பக்கம் சார்ந்திருக்க வேண்டும்? நீங்கள் எந்தப் பக்கம் சார்? சாதி பார்த்தோம் – பிரதேசம் பார்த்தோம் – சமயம் பார்த்தோம் – பக்கம் பார்த்தோம். புலி பக்கம் பார்த்து மற்ற இயக்கங்களி அழித்தது என்றும் ஒருநாள் ஓலமிட்டோம். எல்லாம் அடுத்தவனின் அடக்கு முறையிலும் மனித பேரவலத்திலும் அடி பட்டுப் போய் விடும் என்றுநினைத்தோம். சிலர் மாறவே மாட்டர்கள்.

    Reply
  • thevi
    thevi

    மகேஸ்வரி வேலாயுதம் ஏனோ ஞாபகம் வருகிறார்! அவருக்கு கிடைத்த பரிசு….?

    Reply
  • thevi
    thevi

    டக்ளசோ கருணாவோ இந்த மாதிரி விசாரணைகளில் குறுக்கிடுவது தவறு. புலிகளாலும் புலி ஆதரவாளர்களாலும் நமது மக்கள் செலுத்திய விலை அதிகமானது. வைத்தியர்கள் என்றவுடன் அவர்கள் என்ன விதிவலக்கான கடவுள்களா? சண்முகராசா ஒரு புலி என தேசம்நெற்றில்தான் பின்னூட்டம் விடப்பட்டிருந்தது. இந்த மாதிரியானவர்களின் மீதான விசாரணைகளை அவதானித்து அதற்கேற்ப செயற்படுவதே சமூக நீதியாகும்.

    Reply
  • rohan
    rohan

    மகேஸ்வரி வேலாயுதம் இங்கு எவ்வகையில் சம்பந்தப் படுகிறார்? செய்தியிலும் சரி பின்னூட்டங்களிலும் சரி அவர் தொடர்பு என்ன?

    Reply
  • thevi
    thevi

    மகேஸ்வரி வேலாயுதம் ஏராளமான புலிகளை தனது இனம் என்ற காரணத்திற்காக சிறைகளில் இருந்து வெளியே எடுத்து விட்டவர் . அதற்கு நன்றியாக புலிகள் அவரை சுட்டு கொன்றார்கள். அதே பாதைக்கு இப்போது டக்ளஸை இழுக்கிறார்கள். அந்த மூன்று பேரும் புலியா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியதும் புலிகள் தான் என்றால் ஏனைய புலி உறுப்பினர்கள் எவ்வாறு கையாளப்படுவார்களோ அதன் வழியில் இவர்களை கையாள வேண்டியதும் அரசாங்கமே.

    Reply
  • rohan
    rohan

    லொஜிக் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்போர் நிறைந்த இடம் இது.

    மகேஸ்வரி வேலாயுதம் புலிகளை சிறைகளில் இருந்து வெளியே எடுத்து விட்டவர் என்பது சரி. “ஏராளமான” என்பது ஊசித் துளை கிடைத்தால் விமான்ம் விடும் முயற்சி. “தனது இனம் என்ற காரணத்திற்காக” என்பது நாம் காரணம் என்று நினைக்கும் விடயம்.

    கருணா, தமிழ்செல்வன் மற்றும் சூசை குடும்பங்களை வெளியே எடுத்து விடப் போகிறாராம். மாற்ற்க்கருத்துடையோர் (?) காசுக்கு புலி உறுப்பினர்களையே எடுத்து விடுகிறார்கள் என்று வதந்தி. எத்தனையோ உயிர்களை – தம் உயிரை பொருட்படுத்தாது – காத்து விட்ட இம் மருத்துவர்களை சிறையில் அடைத்து அழுத்தினால் தான் சிலர் வெறி அடங்குமோ என்னவொ!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //மாற்ற்க்கருத்துடையோர் (?) காசுக்கு புலி உறுப்பினர்களையே எடுத்து விடுகிறார்கள் என்று வதந்தி.- rohan //
    புலித்தலைமைகளின் குடும்பம் இலட்சக் கணக்கில் கொண்டு வந்த காசை ஏற்கனவே இராணுவம் எடுத்து விட்டது. இப்போ அகதி முகாம்களில் புதிதாக காசு அடிக்கினமோ தம்மை வெளியில் எடுத்து விடுறவைக்கு கொடுக்க. வதந்தி என்று கூறிக்கொண்டே அவற்றை பரப்புவதில் நீங்கள் காட்டும் ஆர்வம், அந்த புலிகளுக்கே இருக்குமோ தெரியாது??

    Reply
  • BC
    BC

    //லொஜிக் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்போர் நிறைந்த இடம் இது.//

    தேசம் புலி ஆதரவாளர்களின் இடமாக மாறிவிட்டதா! புதினத்துக்கு பதிலாக தேசம் படிப்பது மிக நன்று.

    Reply
  • thevi
    thevi

    உண்மைகளை ஏற்க முடியாத நிலையில் லொஜிக் என சொல்லிவிட வேண்டியதுதான்.

    Reply
  • rohan
    rohan

    /தேசம் புலி ஆதரவாளர்களின் இடமாக மாறிவிட்டதா! புதினத்துக்கு பதிலாக தேசம் படிப்பது மிக நன்று.//
    இரண்டு கண்களையும் திறந்து உலகைப் பார்க்க எல்லோரும் பழகிக் கொள்ள வேண்டும்.
    எல்லாக் கருத்துகளையும் நோக்குகளையும் உள்வாங்கி சரியான் விடயங்களைப் புரிந்துகொள்வது அறிவுடமை.

    Reply