கொழும்புப் பல்கலைக்கழகம் ராஜபக்ஷ சகோதரர்களுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கி கௌரவிக்கத் திட்டமிட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புப் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ஆகியோருக்கே இவ்வாறு டாக்டர் பட்டம் அளிக்கப்படவுள்ளது. கொழும்புப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஷானிக்கா ஹிம்புரேகம விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் நாட்டின் நன்மதிப்பைப் பாதுகாக்கவும், இனங்களுக்கு இடையில் நல்லுணர்வை ஏற்படுத்தவும் ராஜபக்ஷ சகோதரர்கள் முழு மூச்சுடன் செயற்பட்டதாகவும், அதற்கு நன்றி பாராட்டும் வகையிலேயே அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பட்டமளிப்பு நடைபெறும் தினம் குறித்து இதுவரையில் தகவல்கள் வெளியாகவில்லை என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Nila
இது கிட்லருக்கு டாக்டர் பட்டம் போல் இருக்கிறது. 28000 அப்பாவித் தமிழ்மக்களை ஒன்றுமறியாத குழந்தைகளை குறிப்பிட்ட குறுகிய காலஎல்லைக்குள் கொன்று குவித்த இராட்சதனுக்கும் அவர் சகோதரர்களுக்கும் டாக்டர் பட்டம் கொடுப்பது கிட்டலுக்கு டாக்கர் பட்டம் கொடுத்தது போலாகிறது. அப்படியாயின் பிரபாகரனுக்கும் தான் டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் பல்லாயிரக்கணக்கான இராணுவத்தையும் தமிழ்மக்களையும் கொன்று குவித்துவரல்லவா அவர். ஏன் இல்லை டாக்டர் பட்டம் பிரபாவுக்கு? மற்றய இயக்கங்களுக்கும் குட்டி டாக்டர்கள் என்று பட்டம் குடுக்கலாமே? கருணாவுக்கு இல்லையா டாக்டர் பட்டம். கருணாவும் கே பியும் தானே புலியழிப்புப் போரின் சூத்திரதாரிகள்.
anpu
கருணாவும் கேபியும்தான் புலியழிவுக்குக் காரணமெண்டால் டாக்டர் பட்டம் கொடுக்கத்தாலும் ஏற்கலாம்.கடலான கடல்கண்ட தலைவருக்கு கரைத்தண்ணி புரியாமல் போனதேனாம்??
Nila
அன்பு! இன்னும் புரியவில்லையா? கடலுக்குள் இருக்கும் மீன் கடலுக்குள்தான் இருக்கு வேண்டும். கரைக்கு வரஆசைப்பட்டால் சாவுதான். இதில் தம்பி பிரபா என்ன விதிவிலக்கு? விதியாரைத்தான் விட்டது?
KUNALAN
நிலா! உங்கள் கருத்தின்படி டாக்டர் பட்டம் கொடுப்பதானால் சில இலட்சம் பட்டங்கள் தேவை. அவற்றை புலம்பெயர் புலிப் புண்ணாக்குகளிலிருந்து கொடுக்கத் தொடங்க வேண்டும். “போர் நிலவரம்/ கள ஆய்வு/ என்று ஊடகங்களில் கிரிக்கட் கொமன்றி சொன்னவர்களுக்கெல்லாம் கொடுக்க வேண்டி வரும். கோயில் பிரசாதமாய் சுண்டல் கொடுப்பதுபோல் கிள்ளிக் கிள்ளிக் கொடுக்க வேண்டிய நிலைதான் ஏற்படும்.
நிலா! டாக்டர் பட்டம் கோயில் சுண்டல் நிலைக்கு வந்துவிட்ட சாதனையைக்கூட நமது போராட்டம் ஏற்படுத்திவிட்டது என்ற பெருமை நமக்குக் கிடைத்தவிட்டது பார்த்தீர்களா. பலே பலே. நடக்கட்டும்.
குணாளன்.
Nila
டாக்டர் பட்டம் என்பது கோவிலில் சுண்டல்தான். இந்தியாவில் நடிக்கத்தெரியாத நடிகர் விஜேய்க்கு நடிப்பில் டாக்டர் பட்டம் கொடுக்கவில்லையா? இராஜபக்ச குடும்பத்துக்குக் கொடுக்கப்படும் டாக்கர் பட்டமானது. இன்னும் கத்தி அரிவாளுடன் ஒடித்திரிவதை ஊக்குவிக்க என்பதேயாகும்
palli
குணாளன். டாக்ட்டர் பொட்டலத்தை விட அம்மான் பதவி பெரியது (மாமா அல்ல) ஆகவே கருநாகம் இப்படிதான் செய்யும் என தெரிந்தோ அல்லது தெரியாமலோ அதி மேல் பட்டம் ஏற்க்கனவே இலவசமாக அவரது இன்றய சானகியதனத்துக்கு முன்னாள் தலை கொடுத்து விட்டது, KP வேண்டுமாயின் மாமா பட்டம் நாம்தான் கொடுக்க வேண்டும்; மகிந்தாவுக்கு டாக்ட்டர் பட்டம் நம்ம தலைக்கே நாலு எழுத்து பெயருக்கு முன்பு அலங்கரிக்கும் போது அரசின் தலைக்கு இது கூடவா இருக்க கூடாது, என்ன போலி டாக்கடர் போல் பல ஆயிர உயிர்களை பழியோ அல்லது பலியோ வாங்கி விட்டார் இந்த புதிய டாக்குத்தர் பட்டம் கொடுப்பதில் தலைதான் சாதனை படைத்தது அதிலும் புலியை அரசு தோற்கடித்து விடும் போல் உள்ளது; பல பட்டங்கள் மகிந்தாவின் வீட்டி இன்று; இது அன்று பிரபாவின் பதுங்குழியில் இருந்தது போல்;
சரி இந்த வெற்றி உலாவிலாவது ராணுவத்தில் சேர்ந்த யார் யார் தற்ப்போது உயிருடன் இருக்கிறார்கள் என அரசால் சொல்ல முடியுமா? அல்லது அதுவும் தமிழர் போல் நனைந்து போன கணக்கு கொப்பியா?? மாவீரர் கல்லறைகள் எப்படி ஒரு நிழலான பட்டங்களையும் புகழையும் தம்பிக்கு தர்க்காலிகமாக கடனாக பெற்று கொடுத்ததோ அதே போல் இந்த பட்டம் பரதேசிதனம் எல்லாமே உன்மைகள் வெளிவரும் வரைதான் பிரபாவின் மறைவிடம் போல் மகிந்தா குடும்பத்தை தற்காலிகமாக பாதுகாக்கும் இது பல்லியின் கருத்தல்ல எம் கண் முன்னேநிகழ்ந்த வீதியோர அன்றாட நிகள்வுகளல்ல இளவுகள்:
Vannikumaran
விளக்குமாறுகளுக்கு பட்டுக் குஞ்சம்
அவ்வளவுதான் அலட்டிக் கொள்ள வேறொன்றும் இல்லை
வன்னிக்குமரன்
Thirumalai Vasan
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புப் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ஆகியோருக்கே இவ்வாறு டாக்டர் பட்டம் அளிக்கப்படவுள்ளது. கொழும்புப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஷானிக்கா ஹிம்புரேகம விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.-
-துணை வேந்தர் ஷானிக்கா ஹிம்புரேகம வெள்ளைவானில் கடத்திச்செல்லப்படாமல் இருக்க இப்படி ஏதாவது செய்ததானே ஆகவேண்டும். இதை பல்கலைக்கழகம் தீர்மானித்ததென்றா நம்புகிறீர்கள்? எல்லாம் உயிர்ப் பயம் தான்.
chandran.raja
சர்வதேச ரீதியாக மகிந்தா ராஜயபக்சா குடும்பத்திற்கோ சகோதரர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுப்பது பற்றி எனக்கு தெரியாது. ஆயுதமுனையில் தமிழ்மக்களை.. எல்லா சுகந்திரங்களையும் கட்டிவைத்திருந்த “புலிகளுக்கு” அதற்கு பொறுப்போற்ற பிரபாகரனுக்கு அவனில்லிருந்து விடுவித்த ராஜயபக்சாவுக்கு தமிழ்மக்கள் என்றுமோ கடமைப்பட்டவர்கள் ஏன்னெனில் தமிழ்மக்களால் முடியாதது ஒன்றை எல்லா எதிர்ப்புக்கு மத்தியிலும் செய்துமுடித்து காட்டி வீரனாக எம்முன் நிற்கிறார். யார்யார் பட்டம் கொடுத்து பறிக்கிறார்களோ எனக்கு தெரியாது. தமிழ்மக்கள் ஒரு டாக்டர் பட்டம்மல்ல டபிள் டாக்டர் பட்டம் கொடுத்து கெளரவிக்க வேண்டியவர். இதற்கு எத்தனை தமிழர் கெளரமான முறையில் கைதூக்கக் கூடியவர்கள்?. இதற்கு எதிர்பு தெரிவிப்பவர்கள் தமிழ்மக்களின் சிந்தனைவளத்தை புரியாதவர்களே!
thevi
இந்த பட்டங்களின் பெறுமானம் எனக்கு தெரியவில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு புதிய பாதை திறந்து விடப்பட்டிருக்கிறது. அதன் வழியே அவர்கள் தமது பயணத்தை தொடர முடியம். இப்போது மக்களின் ஒரே எதிரி இந்த அரசாங்கமே. இனி எல்லா போராட்டங்களும் இந்த எதிரியை நோக்கியதே. தடை ஏதும் இல்லை.
rohan
//ராஜயபக்சாவுக்கு தமிழ்மக்கள் என்றுமோ கடமைப்பட்டவர்கள் இதற்கு எதிர்பு தெரிவிப்பவர்கள் தமிழ்மக்களின் சிந்தனைவளத்தை புரியாதவர்களே!//
கடவுளே!!