ஐக்கிய நாடுகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை புலம்பெயர் மக்கள் மற்றும் சில நாடுகளின் அழுத்தங்கள் காரணமாகவே இலங்கைக்கு எதிராக யுத்த குற்ற விசாரணை செய்யப்பட வேண்டும் என்று கூறுகின்றார் என இடர்முகாமைத்துவ மற்றும் மனித உரிமை அமைச்சின் செயலாளரும் அரசாங்க சமாதான செயலகத்தின் பணிப்பாளருமான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தார். ஆனால் பல நாடுகள் எமது நிலைப்பாட்டை புரிந்து கொண்டுள்ளன. ஜெனிவாவில் இடம்பெற்ற மனித உரிமை பேரவையின் அமர்வில் அதிகமான நாடுகள் எமக்கு ஆதரவளித்தன என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை தெரிவித்துவரும் கருத்துக்கள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: “ஐ.நாவின் மனித உரிமை விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை இலங்கையில் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கூறி வருகின்றார். தனக்கு கிடைத்துள்ள தகவல்கள் தொடர்பிலேயே இவ்வாறு யுத்த குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கோரி வருகின்றார்.
ஆனால் சில நாடுகள் மற்றும் புலம்பெயர் மக்களின் அழுத்தம் காரணமாகவே இவ்வாறு கோரிக்கை விடுக்கின்றார். இதேவேளை யுத்த குற்றம் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று நவநீதம் பிள்ளையின் அலுவலகத்தில் உள்ள அதிகாரி ஒருவர் கூறினால் உடனே நவநீதம் பிள்ளை கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் அண்மையில் இடம்பெற்ற இலங்கை தொடர்பான விசேட பிரேரணையில் நாங்கள் வெற்றிபெற்றோம். ஜெனிவாவில் உள்ள இலங்கை தூதுவர் தயான் ஜயதிலக்க உள்ளிட்ட பலர் இவ்விடயத்தில் பாரிய சேவையாற்றியுள்ளனர். ஆனால் இலங்கை விவகாரம் தொடர்பில் எப்போதும் பிரேரணை கொண்டுவரப்பட முடியும். 48 உறுப்பு நாடுகளில் 16 நாடுகள் கையெழுத்திட்டால் மனித உரிமை பேரவையின் வழமையான அமர்வுகளில் இலங்கை தொடர்பில் விசேட பிரேரணையை கொண்டுவர முடியும். ஆனால் எவ்வாறான பிரேரணைகள் கொண்டுவரப்பட்டாலும் நாங்கள் அவற்றைத் தோற்கடிப்போம்.” இவ்வாறு அவர் கூறினார்.
Nia
நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இந்துசமுத்திர சமாதானத்துக்கான மகாநாடு நடைவெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக இந்த ரஜீவ விஜேசிங்;ஆறுமுகம் தொண்டமான்;பலநாடுகளின் மந்திரிகள்; ஐரோபிய பாராழுமன்றத்தினர் என உயர்மட்டக் குழுக்கள் கலந்து கொண்டனர். அப்போதுதான் வை.கோ வுக்கும் தடா பொடா சட்டங்களை விட்டு வெளியேவரும் வாய்ப்பும் கிடைத்தது. வை.கோ வுக்கு செங்கன் விசா கொடுப்பதாக யேமனி உறுதியளித்தும் உயர்மட்டத்தலையீடுகள் காரணமாக கடசிநேரத்தில் மறுக்கப்பட்டது. இருப்பினும் பல பிரயத்தனங்களுடாக நோர்வே வரும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. ஆனால் வை.கோ வோ இங்கே மேடைகளில் சொன்னார் எரிக் சூல் கெய்ம் தான் தனக்கு விசா தந்தது என்று. அடிபடுவது மத்தளம் பெயர் வித்துவானுக்கு என்றாகி விட்டது. அது இந்தியாவல்ல மந்திரி சொன்னவுடன் எடுத்து விசா கொடுக்க.
நான் இங்கு சொல்லவந்த விடயம் என்னவென்றால் இந்த ரஜிவ என்பவர் பல உயர்மட்ட பிரதானியர்கள் சபையில் புலிகளைப்பற்றி முழுப்பொய்களையும் அரசாங்கம் செய்யும் அட்டடூழியங்களையும் மறைந்து விளாசித்தள்ளினார். இதை புலிகளும் காது குளிரவே கேட்டுக் கொண்டு இருந்தனர். ஆனால் புலிகளல்லாத ஒருவர் அவரே இம்மகாநாட்டுக்கு பொறுப்பாகவும் இருந்தவர் ரஜீதவை இடைமறித்து அவர் முகத்திரையைக் கிழித்தெறிந்தார். வெட்கங்கெட்டு நாணிக் கோனிப்போனார் இந்த அரச தூதுவர் ரஜிவ. புலிகள் ஒரு மூச்சும் விடவில்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது?
rohan
//ரஜீதவை இடைமறித்து அவர் முகத்திரையைக் கிழித்தெறிந்தார். வெட்கங்கெட்டு நாணிக் கோனிப்போனார் இந்த அரச தூதுவர் ரஜிவ.//
இம் மனிதருக்கு வெட்கம் என்று ஒன்று உண்டா?
அண்மையில் இடைத் தங்கல் முகாம்களுக்கு என்ஜீஓக்கள் அனுமதிக்கப பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப் பட்ட போது, “என்ஜீஓ காரர்கள் வன்னியில் உல்லாசம் அனுபவித்தது எங்களுக்குத் தெரியாதா? முகாம்களுக்கு வந்த குழந்தைகளில எத்தனையோ நீலக் கண்களுடன் வந்தன” என்று ஒரு நல்ல பதில் தந்த இராசதந்திரி அல்லவா அவர்? Asia Tribune போன்ற தளங்களில் அவ்வப்போது எழுதி தனது சம்பளத்துக்கு விசுவாசமாக இருந்த உதாரபுருஷர் ரஜீவ!
Nia
புரிவில்லை ரோகான். நீலக்கண்களுடன் வந்தது என்றால் வெண்ணிறப்பிள்ளைகளா அல்லது முகத்தில் குத்துவாங்கி நீலம்பாரித்த கண்களா? இவரை இடைமறித்து பதில் செல்ல சந்தர்ப்பம் இல்லாதவாறு கேட்ட கேள்வியை அடுத்து கூட்டத்தில் கலகலப்பு ஏற்பட்டு குளப்பம் உண்டானது