பிரான்ஸ் நாட்டின் ஏர் பிரான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று அட்லான்டிக் பெருங்கடல் மீது பறந்தபோது திடீரென மாயமாகி விட்டது. அது விபத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விமானத்தில் 228 பயணிகளும், ஊழியர்களும் இருந்தனர்.
அந்த விமானத்தில் 216 பயணிகளும், 12 ஊழியர்களும் இருந்ததாக ஏர் பிரான்ஸ் தெரிவித்துள்ளது. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை கிளம்பிய இந்த விமானம் இன்று முற்பகல் பாரீஸ் வருவதாக இருந்தது.
ஆனால் வழியில் அட்லான்டிக் கடல் மீது விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரென ரேடார் பார்வையிலிருந்து அது மறைந்து விட்டது. இதையடுத்து பிரேசில் விமானப்படை உடனடியாக தேடுதல் பணியில் முடுக்கி விடப்பட்டது.
ஆனால் விமானம் குறித்த தகவல் இல்லை அந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி கவலையும், அதிர்ச்சியும் தெரிவித்துள்ளார்.