ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்ப் பெண் ஜனனி போட்டி

01-janani.jpgஐரோப்பிய நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக தமிழ்ப் பெண் ஒருவர் போட்டியிடுகிறார். அவருக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. லண்டனில் வசித்து வருபவர் ஜனனி ஜனநாயகம். இலங்கையைச் சேர்ந்தவர். தமிழ்ப் பெண்ணான ஜனனி ஜனநாயகத்தின் குடும்பத்தினர் நீண்ட காலத்திற்கு முன்பு அகதிகளாக இங்கிலாந்து  சென்றனர். தற்போது அந்த நாட்டில் வசித்து வருகின்றனர்.

ஜனனி ஜனநாயகம் தற்போது ஐரோப்பிய நாடாளுமன்ற எம்.பி தேர்தலில் போட்டியிடுகிறார். எதிர்வரும் வியாழக்கிழமை இந்தத் தேர்தல்  நடைபெறுகிறது. லண்டனிலிருந்து எட்டு பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இங்கிலாந்தின் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களுடன் சில சுயேச்சைகளும் களம் கண்டுள்ளனர். லண்டனிலிருந்து ஜனனி சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.

இவர்களுடன் புலம் பெயர் தமிழர்களின் பேராதரவுடன் ஜனனி போட்டியிடுகிறார். ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கியுள்ள ஜனனி அவர்கள் வெற்றிபெற பிரித்தானிய தமிழர் பேரவை தமது வாழ்த்துக்களையும் ஆதரவினையும் தெரிவித்துள்ளது. அதேபோல பாரீஸில் இன்னொரு தமிழர் போட்டியிடுகிறார். இவர் புதுச்சேரியைச் சேர்ந்தவர். ஜனனி ஜனநாயகம் வெற்றி பெற்று எம்.பி ஆனால், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் எம்.பியான முதல் தமிழர்  என்ற பெருமை அவருக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • thevi
    thevi

    தமிழ் மக்கள் தமது சொந்த நாட்டில் தேர்வு செய்த 22 எம்பிக்களால் ஒரு பலனையும் அடையவில்லை. ஐரோப்பிய பாராளுமன்றில் நீங்கள் கிழிப்பதற்கு ஒன்றுமில்லை. பிரிட்டிஸ் தமிழ் போறத்திற்கு நல்ல வியாபாரம். பார்த்து அம்மணி! தலைவரை மாதிரி ஏமாறப் போகிறீர்கள். கொஞ்ச நாள் உங்களை வைத்துத்தான் இவர்கள் காலத்தை கடத்த வேண்டும்.

    அம்மணி! உங்கள் அரசியல் ஆரம்பங்கள் எப்போது ,எங்கே என சொல்லுங்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    தேவி நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே. ஜனனி எந்தவொரு கட்சி சார்பாக போட்டியிடாமல் சுயேட்சையாகவே போட்டியிடுகின்றார். அதனால் இவரால் ஒன்றும் கிளிக்க முடியாது. இவரை வைத்து மற்றவர்களும் தங்கள் சுருட்டல் வியாபாரத்தை தொடரத் தான் முயற்சிக்கினம். தன்ரை தொகுதியில் என்ன நடக்கின்றதென்ற கவலை ஒன்றுமிலல்லாமல், பத்மினியும் ஜனனிக்கு தொலைக்காட்சிகளில் விளம்பரம் தேடுகின்றார். இவர்கள் எல்லாம் தமிழர்களின் தலைவிதி…….

    Reply
  • Hg
    Hg

    She never have been in Sri lanka. Her parents were teachers in Nigeria and Zambia where she lived in her youth. She is Mrs.Mathivathani Prbakans relativ. She is one of the LTTEs commerce and economics adveicer

    Reply
  • vanthiyadevan
    vanthiyadevan

    she dont have any knowledge about our libration strugle
    BTF and other stunt people trying to use her like LTTE used TNA in srilanka
    we shouldnt waste our vote
    if she is elected she will behave like a BNB MP it will brake tamil peoples relationship with other communitys in uk
    she worked for BTF in the past
    BTF going to arange a demostration rally soon in uk
    after that there are going to start fund raising in uk

    Reply
  • Nia
    Nia

    தமிழருக்கு ஒருவர் உதவ அல்லது பாடுபட வருகிறார் என்றதும் சந்தேகக் கண்ணுடனேயே பார்க்க வேண்டியுள்ளது. இவ என்னதை வெட்டிப்பிடுங்கப் போகிறாவோ. சரி காசில்லா வோட்டு தானே. போடலாம்தான் ஆனால் கியூபிலை நிற்கிற நேரத்துக்கு கழுவிக் கொஞ்சக்காசு உழைக்கலாம் தான். அந்தக்காசையும் ஏதோ பொய் பிரட்டுகளைச் சொல்லி கவிழ்து விடுவாங்கப்பா.. ஆளை விடுங்கப்பா

    Reply