நாடு முழுவதிலுமுள்ள அரசாங்கப் பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாகத் தெரிவு செய்யப்பட்டோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நியமனக் கடிதங்களைக் கையளித்தார். இது தொடர்பான வைபவம் இன்று காலை அலரி மாளிகையில் இடம்பெற்றது.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உட்பட நாடு முழுவதிலுமுள்ள அரச பாடசாலைகளுக்கு 1500 பட்டதாரிகளை நியமிக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக இன்று 959பேருக்கு நியமனம் வழங்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற பட்டதாரிகளுக்கே இந்நியமனம் வழங்கப்படுகின்றது. ஏனையோருக்கான நியமனம் விரைவில் வழங்கப்படும். ஜனாதிபதியின் பணிபுரைக்கு அமைய கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவின் வழிகாட்டலுடனும் பிரதியமைச்சர் சச்சிதானந்தனின் ஒத்துழைப்புடனும் இந்நியமனம் வழங்கப்படுவதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.