இலங் கையில் பணியாற்றிய நோர்வேயைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான ‘போரூட்’ என்ற நிறுவனத்தின் தலைவர் ரான்வி டிவிட்டின்ஸ் நாடு கடத்தப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்ததன் மூலம் இலங்கையில் இறைமைக்கு குந்தகம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ரான்வி வெட்டேனஸ் என்ற இந்த நோர்வே பிரஜை நாடு கடத்தப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கிடைக்கப் பெற்ற யுத்த வெற்றியை கொண்டாடும் வகையில் குறித்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பறக்க விடப்பட்டிருந்த தேசிய கொடியை அகற்றுமாறு ரான்வி கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன். இலங்கை ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்ட இராணுவ வெற்றியை குறிக்கும் விடுமுறை தினத்தில் போருட் நிறுவன பணியாளர்களுக்கு விடுமுறை வழங்க ரான்வி வெட்டேனஸ் மறுப்பு தெரிவித்தார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது