‘இந்தியா எமது விடுதலை அமைப்பின் மீதான தடையை நீக்க வேண்டும்!!!’ ஞா.புகழேந்தி (தலைமைச் செயலகம். த வி பு)

தலைமைச் செயலகம்.
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
ஆனி 02,2009

எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! சிங்கள இனவாத அரசானது எமது தலைமையினையும், விடுதலைப் போராட்டத்தினையும் அழித்து விட்டதாக பலவாறான பொய்யான பரப்புரைகளையும் கட்டுக்கதைகளையும் கூறி வருகின்றது.

இதற்கு சிங்களத்தின் ஒட்டுக்குழுக்களும், ஊது குழல்களாக தீவிரமாகச் செயற்படத் தொடங்கியுள்ளது. இவ்வாறான இறுமாப்பான பரப்புரைகளால் எமது மக்களின் விடுதலை உணர்வை அடியோடு அழித்துவிடலாம் என சிங்கள அரசு எண்ணுகின்றது.

சிங்கள அரசு வெளியுலகிற்குத் தெரியாமல் பாரிய அளவில் இனச் சுத்திகரிப்பைச் செய்து வருகின்றது. இன்று எம் உறவுகள் சொந்த இடங்களைவிட்டு விரட்டப்பட்டு குடும்பம், உறவுகளை இழந்து தாங்கொனாத் துயரை அனுபவித்துக்கொண்டு திறந்தவெளிச் சிறைக்குள் அடைபட்டு இன்னல்ப்படுகின்றார்கள்.

பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொடுமைகள் செய்கின்றார்கள், வயது வந்த ஆண்பிள்ளைகளை விடுதலைப்புலிகள் எனக் கூறி விசாரணைக்கு என அழைத்துச் சென்று காணாமல் போகின்றார்கள். தினம்தினம் நரகவேதனையினை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சிங்கள அரசு எமது மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை வெளியுலகிற்கு மறைப்பதற்கு திட்டமிட்ட பல கற்பனைக்கதைகளைக் கூறிவருகின்றது.

சுயாதீனமாக அரச சார்பற்ற நிறுவனங்களை இயங்கவிடாமல் தடுக்கின்றது. உலகநாட்டுத் தலைவர்களின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு சிங்கள அரசினால் தயார்ப்படுத்தப்பட்;ட பொதுமக்களை அனுமதிக்கின்றது.

ஒட்டுமொத்த ஊடகங்களில் வரும் செய்திகள் பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பின் மத்தியிலேயே இயங்கும் துர்ப்பாக்கியமான நிலையில் ஊடகத்துறையினர் மௌனிகளாக செயற்படுகின்றனர்.

பாதுகாப்பு என்ற போர்வையில் அனைத்து விதமான செயற்பாடுகளையும் முடக்கி வருகின்றது. காலத்துக்குக் காலம் எமது மக்களின் விடுதலை உனர்வை அழிப்பதற்கு பல வழிகளிலும் எதிரி கங்கனம் கட்டி கூட்டாகச் செயற்பட்டுள்ளான் என்பது எமது மக்கள் நன்கறிந்த உண்மை.

எமது தொப்புள்கொடி உறவுகளான தமிழ்நாட்டு மக்கள், தலைவர்கள் எமது மக்களின் விடுதலைக்கு காட்டிவரும் அபரிவிதமான ஆதரவினைக்கண்டு வியந்து நிற்கின்றோம். தொடர்ந்து வரும் காலங்களில் இதனைவிட அதிகமான ஆதரவுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

இந்திய மத்திய அரசு உண்மையான நண்பனை இனம்காணத்தவறியுள்ளதுடன் மாறாக சிங்கள அரசின் செயற்பாடுகளிற்கு ஆதரவுக்கரம் துணைபோகின்றது. சிங்கள அரசின் கபடத்தனத்தை உணரும் காலம் விரைவில் வரும்.

இந்திய மத்திய அரசு எமது விடுதலை அமைப்பின் மீதான தடையை நீக்குவதற்கு இந்திய மக்கள், அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள் மத்திய அரசிற்கு எமதுமக்களின் உண்மையான நிலைப்பாட்டை தெரியப்படுத்தி தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்பதை நாம் வேண்டி நிற்கின்றோம்.

‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

………………………
(ஞா.புகழேந்தி)
செயலாளர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 Comments

  • Balachandran Sivaguru
    Balachandran Sivaguru

    ‘கதிரைக் கனவுகளால் எங்களைச் சாகடிக்காதீர்கள்’

    தமிழீழக் கனவோடு வாழ்ந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் பலி கொள்ளப்பட்டுவிட்டார்கள். அந்த இலட்சியத்திற்காகப் போராடிய போராளிகளும், தளபதிகளும் சுட்டெரிக்கப்பட்டு விட்டார்கள். உயிருக்குப் போராடிய காயமடைந்த மக்களையும் போராளிகளையும் காப்பாற்றவென்ற வேட்கையுடன் மானத்தோடு மாவீரராகும் தத்துவத்தையும் கைவிட்டு, சரணடைய முற்பட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசனும், சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவனும் கூட வெள்ளைக் கொடியுடன் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள்.

    எல்லாமே சுடுகாடாக்கப்பட்டு சாம்பல் மேடாகக் காட்சி தருவதை ஐ.நா.வின் பொதுச் செயலர் பான் கி மூனும் வானிலிருந்து பார்வையிட்டுச் சென்றுவிட்டார்.

    வன்னியில் தப்பிப் பிழைத்தவர்கள் முட்கம்பி வேலிச் சிறைக்குள் அடிமைச் சின்னமாக, அடுத்த வேளை உணவுக்கு எதிரியின் கையைப் பார்க்கும் இழி நிலைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார்கள். அங்கும் இளம் வயதினர் வடி கட்டப்பட்டு, வதை முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். சரணடைந்த போராளிகளின் நாட்கள் எண்ணப்படுகின்றன.

    ஆனாலும், சர்வதேசங்கள் இன்றுவரை ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்தரித்து சிங்கள சிறிலங்கா நடாத்திய பரப்புரைகளை ஏற்று, விடுதலைப் புலிகளைத் தமது நாடுகளில் தடை செய்ததன் மூலம் இந்த இனப் படுகொலையில் பங்கு வகித்த உலக நாடுகள் தமிழினத்தின் அத்தனை அழிவுகளுக்குப் பின்னரும் தமிழர்களுக்கான நீதியை வழங்க முன்வரவில்லை.

    வீதியிலிறங்கிப் போராடுகின்றோம்… உண்ணாவிரதங்கள் இருக்கின்றோம்… கண்ணீர் விட்டுக் கதறுகின்றோம்… ‘எஞ்சியுள்ள எமது மக்களையாவது சிங்கள இனவாத அரசின் இன அழிப்பிலிருந்து காப்பாற்றுங்கள்…’ என்று. உவ்வொரு மணித் துளிகளாக… நாட்களாக… வாரங்களாக… காலம் கடந்து செல்கின்றதே தவிர வேறேதும் நடப்பதாகத் தெரியவில்லை.

    ‘தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்’ என்று சிங்களம் மீண்டும் ஒரு கொண்டாட்டத்திற்கு நாள் குறித்துள்ளது. பாதுகாப்பை இழந்த தமிழர்கள் மீது சிங்களனின் காறித் துப்பல்கள்… குனிந்த தலையுடன் அதைத் துடைத்துவிட்டு நகரத்தான் அவர்களால் முடிகின்றது. தமிழ்ப் பெண்கள் நடு ரோட்டில் பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாகிறார்கள்… ஆனாலும் விதியை எண்ணி அழுது கொண்டே வீட்டிற்குச் சென்று தலை முழுக மட்டும்தான் அவர்களால் முடிகின்றது.

    இப்போது டக்ளஸ் தேவானந்தா, கருணா, ஆனந்த சங்கரிகள் முகங்கள் மட்டும் பயம் நீங்கிப் பிரகாசிக்கின்றன. பாவம், தமிழர்கள் தங்கள் பலத்தை இழந்து கூனிக் குறுகி முடங்கிக் கிடக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்ற யாருமே கிடையாது. ஆனால், சிங்கள தேசத்தின் விருப்பங்களை ஏற்று ‘பாலூற்றிக் கடமை செய்ய’ புலம் பெயர் தேசங்களிலும் சிலர் ஆலாய்ப் பறக்கின்றனர்.

    விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக நொருக்கப்பட்டிருக்கலாம்… போராளிகள் பலர் அந்த நெருப்பு வேள்விக்குப் பலியாகிப் போயிருக்கலாம்… தளபதிகள் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டிருக்கலாம்… ஆனாலும் நாங்கள் நம்ப மாட்டோம் ‘எங்கள் சூரிய தேவனை இந்தச் சிறு பொறிகள் சுட்டெரித் திருக்கும் என்று…’

    எம்முள் நிறைந்து… எப்போதும் உடன் இருந்து… எம்மை வழிநடத்தும் எம் தலைவன் மரணம் என்ற எல்லைக்கு அப்பாற்பட்டவன். ‘மனிதன்தான் மரணம் அடைவான். மாவீரனுக்கு ஏதடா மரணம்?’ என்ற இயக்குனர் சீமானின் வார்த்தைகள் எம் நெஞ்சத்தை மீண்டும் உறுதி கொள்ள வைக்கிறது. சத்திரியன் சாவதில்லை. அவன் சரித்திரம் ஆகின்றான்.

    ‘நாம் வீழமாட்டோம்! நாம் வீழமாட்டோம்!!’ என்ற நம்பிக்கைத் துடிப்பு மட்டுமே தமிழர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது. கரிகாலன் மீண்டும் வருவான்… என்ற நம்பிக்கை மட்டுமே அவர்களை மீண்டும் நிமிர வைக்கின்றது. அது அவர்களின் ஆத்மார்த்த உணர்வு. அந்த நம்பிக்கை அவர்கள் சாவு வரை நீடிக்கும். அதைக் கலைக்கும் உரிமை யாருக்கும் கிடையாது.

    ‘கதிரைக் கனவுகளால் எங்களைச் சாகடிக்காதீர்கள்’

    Reply
  • chad
    chad

    PRAPAKARN IS A LIVE .

    Reply
  • Devan
    Devan

    ஞா.புகழேந்தி
    செயலாளர்
    தமிழீழ விடுதலைப் புலிகள்
    தமிழீழம்.

    அன்புடன் புகழேந்தி அண்ணா அவர்களுக்கு
    தற்போது உங்கள் தலைவர் விட்டுப்போன கடமைகளை முன்னெடுத்துச் செய்ய முன்வந்தமைக்கு நன்றிகள் அதே வேளை உங்கள் தலைவர் விட்டுப்போன தவறகளையும் துரோகத்தையும் சேர்த்துக்கொண்டு உமது பணியை தெடருவீர்கள் என் உறுதியாக நம்புகிறோம்.

    உங்கள் தலைவரால் கொல்லப்பட்ட பற்குணம் சுந்தரம் சிறீசபாரதத்னம் பத்மநாபா போன்றோர்களின் கொலைகளின் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளீர்கள் என்றே நாம் முடிவும் எடுத்துள்ளோம்.

    அதேவேளை உமது தலைவரால் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட 20 000 பேர்களின் உயிர்ப் பலிக்குள்ள பொறுப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளீர்கள் என்பதையும் நினைவு படுத்திக் கொள்ளுகின்றோம்.

    இதேவேளை உங்கள் தலைவரால் காட்டீக்கொடுக்கப்பட்டு சிறை சென்று கொலை செய்யப்பட்ட குட்டிமணி தங்கத்துரை மற்றும் வல்வெட்டித்தறை தலைவர்களின் நிலை என்ன என்றும் பதில் சொல்லுங்கள்.

    கடைசியாக ஏப்ரல் மாதம் கிளிநொச்சியில் எமது தலைவன் இளந்திரையன் எப்படி கொல்ப்பட்டார் என்பதையும் ஏன் கொலை செய்ப்பட்டார் என்பதையும் நினைவிற் கொள்க.

    முன்னாள் புலிகள்
    இளந்திரையன் பிரிவு

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    Balachandran Sivaguru ,
    உங்கள் கனவுலக வாழ்க்கையிலிருந்து நிச வாழ்க்கைக்கு வாருங்கள். உங்களைப் போன்றவர்கள் புலிக்கொடியையும், புலித்தலையின் படத்தை பிடித்து கோசத்தை போட்டதை விட்டுவிட்டு, அந்த மக்களுக்காக அன்றே கோசம் போட்டிருந்தால் என்றோ நிலைமை மாறியிருக்கும். உலகங்கள் புத்தி சொன்ன போது புலிகளோ, நீங்களோ கேட்கவில்லை. இன்று அந்த உலகம் சும்மா இருக்கென்று தலையில் அடிப்பதில் என்ன பயன்?? இன்று அந்த மக்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் நீங்கள், அந்த மக்களுக்காக தற்போதாவது ஏதாவது செய்தீர்களா??

    Reply
  • thevi
    thevi

    ஐயா புகழேந்தி கடந்த காலங்களில் புலிகள் செய்த மனித உரிமை மீறல்களுக்கு வழக்கு பதிவு செய்யலாம் என நினைக்கிறோம். இப்போது புலிகளின் தலைமைப் பொறுப்பை நீங்கள் எடுத்துள்ளதால் உங்களையே பொறுப்புச் சொல்லுமாறு கோரலாம் என நினைக்கிறோம். உதாரணமாக புளொட் சுந்தரத்தின் படுகொலையில் இருந்து தொடரும் எண்ணம் உண்டு. தங்கள் நிலையை அறியத் தரவும்.

    Reply
  • msri
    msri

    கடைகளில் லீலா மிளகாய்த்தூள் யாழ்ப்பாண் மிளகாய்த்ததூள் போன்றனபோல்> புலிகளில் புகழேந்தி வி.புலிகள்+பத்மநாதன் வீடுதலைப்புலிகள்+சிவகுருவுடுதலைப் புலிகள் என நீளப்போகின்றது!

    Reply
  • nerudal
    nerudal

    ஜேவிபி ஒரு மரண அறிவித்தல் மூலம் தமது சகாக்களை ஒரேநேரத்தில் கிளர்ச்சி செய்வதற்கான உத்தரவு நினைவில் இருந்தால் …… இந்த அறிவிப்புக்கள் மூலம் புலிகளும் அறிவழகன், புகழேந்தி போன்றவர்களின் அறிவிப்பின் ஊடாக இன்னும் இருக்கும் புலிகளுக்கு கொடுக்கும் சமிக்கை அல்லது அவர்களை ஒன்று சேர்க்கும் அல்லது ஏதோ சமிக்கையை மாறி மாறி கொடுக்கிறார்கள். அல்லது தலைமறைவாக இருக்கும் தலைமையோ அல்லது ஏனையவர்களோ கொடுக்கும் சமிக்கையாக கூட எடுத்துக்கொள்ளலாம்.

    Reply
  • palli
    palli

    வி பு புகழ் காவி புகழ் ஏந்தி அவர்களே; உங்களது முகவரி தமிழ் ஈழம் என போடபட்டுள்ளது; அது வன்னியா? அல்லது கிழக்கா? வடக்கா? புலம் பெயர் தேசமா? ஆபிரிக்காவா?? மலேசியாவா? பல்லிக்கு புரியவில்லை ;அடுத்த கடிதத்தில் உங்கள் முகவரியை(இருந்தால்) சரியாக போடவும்; கடிதம் எழுத தெரியாவிட்டால் ஜயாவிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்; உங்கள் கடிதத்தில் ஆடு மாடு சுகம் பற்றியும்; பக்கது வீட்டு பங்காளியின் சண்டை பற்றியும் விபரமாக இருந்தது; ஆனால் மொப்பது வருடமாக எம்மை எல்லாம் அகதியாய் வாழ வைத்த எம்பெருமான் தலைவன் பற்றி எதுவும் எழுதாதது பல்லிக்கு வலிக்குது;

    அத்துடன் உங்கள் சக மாணவர்களில் எத்தனை பேர் மாவீரர்? மிகுதி யார் யார் மறுபடியும் வீரர் என்பதையும் மறக்காமல்வும்; உங்களுக்கும் மச்சான் K P க்கும் ஏதாவது உரசலா? புலம் பெயர் தம்பிகள் செலவுக்கு ஏதாவது தருகிறார்களா?? இந்த தறுதலையாய் திரிந்த பொட்டர் இப்போது என்ன செய்கிறார்; பல்லி கேட்டதாய் சொல்லவும்(இருந்தால்) வேறு என்ன அடிக்கடி கடிதம் போடுங்கோ; எப்படி பணம் அனுப்புவது என்னும் விபரத்தை சொல்லி அனுப்புங்கோ; இப்படிக்கு பல்லி;

    பல்லி;
    தேசம்;
    ஈழம் இல்லா தேசம்;
    அகதி எண்;576412;
    ஜரோப்பா அல்ல;

    Reply
  • thurai
    thurai

    பகிகங்கரமாகக் கேழுங்கள். எங்களிற்கு கொலை செய்ய, கொள்ளயடிக்க, கடத்தல்செய்ய, மிரட்டிப் பணம் பறிக்க உலகில் உள்ள அத்தனை ச்ட்ட விரோதச் செய்ல்களையும் செய்ய இலங்கைத் தமிழரின் பெயரால் எங்களிற்கு அனுமதி தாருங்கள்.

    துரை

    Reply
  • Anonymous
    Anonymous

    பிரபாகரனை ஒழித்து கட்ட வேண்டும் என்ற வெள்ளாளர்களின் நீண்ட நாள் விருப்பம். அது இப்போது தான் கை கூடி உள்ளது. பிரபாகரனின் மரணம் மாபெரும் சதி..எங்களுக்கு எதிரிங்களை விட இன துரோகிகள்தான் அதிகம்……… என்பவர் அதில் ஒருவர்.

    Reply
  • sekaran
    sekaran

    தமிழீழம் எங்கே இருக்கிறது? தமிழீழ விடுதலைப்புலிகள் எங்கே இருக்கிறார்கள்?
    இந்த நெட் யுகத்தில் யாருமே விலாசமில்லாமல் எழுதிக்கிழிக்கலாம்.
    கெளம்பிட்டாங்கய்யா! கெளம்பிட்டாங்க!

    Reply
  • palli.
    palli.

    அண்ணா அனொய்மோஸ் பிரபாகரனுக்கும் தாங்கள் பின்னோட்டத்தில் விட்ட வெள்ளகாரர்க்கும் என்ன பிரச்சனை என்பதையும்; பிரபாகரன் யார் என்பதையும் பல்லி தெரிந்து கொள்ள ஆசைபடுகிறேன், நேரம் இருந்தால் ஒரு சின்ன பின்னோட்டம் விபரமாக விடவும்;

    Reply