வணங்கா மண்: வசூல் மர்மம் தொடர்கிறது! பொருட்கள் இல.அரசிடம் ஒப்படைக்கப்படும்!!! : ரி கொன்ஸ்ரன்ரைன் & த ஜெயபாலன்

Nithiyananthan_DrVanni_MissionMoorthy N S DrThaya_Idaikadar_Clrசெய்தி: கெப்டன் அலி கப்பல் கடற்படையால் கைப்பற்றப்பட்டது.

கெப்டன் அலி என்ற கப்பல் இன்று (SL_June 05 2009) அதிகாலை கடற்படையால் கைப்பற்றப்பட்டது. இலண்டனிலிருந்து அகதிகளுக்கு நிவாரணப் பொருட்களை எடுத்து வந்ததாக கூறப்படும் இக்கப்பல் இலங்கை அரசின் அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் நுழைந்த போதே கடற்படையால் கைப்பற்றப்பட்டது எனக்கூறப்படுகிறது.

ஆயினும் வணங்கா மண் ஏற்பாட்டுக் குழுவினர் ஏற்கனவே இலங்கை அரசுடன் இரகசியமாக மேற்கொண்ட உடன்படிக்கைக்கு அமையவே கப்பல் இலங்கைக் கடற்பரப்பினுள் நுழைய அனுமதிக்கப்பட்டது. எந்தவொரு கப்பலும் அதன் புறப்படும் துறைமுகத்திலிருந்து புறப்படும் போது அது எத்துறைமுகத்திற்குச் செல்கிறது என்பது போன்ற விதிமுறைகளுக்கு அமையவே புறப்பட முடியும். அதற்கு ஏற்ப வணங்கா மண் ஏற்பாட்டாளர்கள் இலங்கை அரசுடன் ஒரு இரகசிய உடன்பாட்டுக்கு வந்தே கப்ரன் அலியை இலங்கைக்கு அனுப்பி வைத்ததாக ‘லண்டன் குரல்’ பத்திரிகைக்கு தெரியவந்துள்ளது. ‘வணங்கா மண்’ ‘கப்டன் அலியாகி’ இலங்கைக்குச் செல்ல இலங்கை அரசு அவர்களைக் கைது செய்வது போல் கைதுசெய்து விடுவிக்க உள்ளது.

லண்டன் வந்துள்ள வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லகமவிடம் வணங்கா மண் தொடர்பாக தேசம்நெற் ஆசிரியர் ரி சோதிலிங்கம் இன்று (யூன் 4) கேள்வி எழுப்பியபோது, கப்பல் தகுந்த ஆவணங்கள் இன்றி இலங்கைக் கடற்பரப்பினுள் நுழைந்தால் இலங்கை அரசு தனது பாதுகாப்புத் தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கும் எனத் தெரிவித்தார். வணங்கா மண் ஏற்பாட்டுக் குழுவினருடன் இரகசிய உடன்பாடு ஒன்று எட்டப்பட்டது தொடர்பாக அவர் எதனையும் குறிப்பிடவில்லை. கப்பலில் உள்ள பொருட்கள் பரிசோதணைக்கு உட்படுத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஆனால் மனிதாபிமான உதவிப் பொருட்கள் விதிமுறைகளுக்கு அமைவாக வழங்கப்பட்டால் அவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதில் எவ்வித தடையும் இல்லை என்பதை இலங்கை உயர்ஸ்தானிகர் தேசம்நெற் இற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்து இருந்தார். இதற்கான இரகசிய உடன்பாடும் ஏற்கனவே ஏற்பட்டு இருந்தது.

செய்தியின் பின்னணி:

இன்று லண்டனில் வெளியான ‘லண்டன் குரல்’ பத்திரிகையின் பிரதான செய்தி. தேசம் நெற் வாசகர்களுக்காக மீள் பிரசுரமாகிறது. இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வணங்கா மண் ஏற்பாட்டுக் குழுவின் நேர்காணலை பார்க்க அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்.

வணங்காமண் ஏற்பாட்டலர்களை நேர்காண்கிறார்கள் GTV www.tubetamil.com 2

வணங்காமண் ஏற்பாட்டலர்களை நேர்காண்கிறார்கள் GTV www.tubetamil.com 3

வணங்கா மண் தொடர்பாக வெளியான முன்னைய கட்டுரை.

புலத்து தமிழ் மக்களின் இஸ்ரேலியக் கனவு ‘வணங்கா மண்’ : த ஜெயபாலன்

வணங்கா மண்: வசூல் மர்மம் தொடர்கிறது! பொருட்கள் இல.அரசிடம் ஒப்படைக்கப்படும்!!!

‘உலகமே கை விட்ட பின் எம் உறவுகளின் உயிர் காப்பதற்க்கான தாயகம் நோக்கிய பயணம்.’ என்று பெரும் எடுப்பில் ஆரவாரித்த வணங்கா மண் ஒருங்கிணைப்புக் குழுவின் வசூல் மர்ம் இன்னும் தொடர்கிறது.

‘சாவுக்குள் வாழ்வாய் வாழும் மக்களை பட்டினியால் சாவு கொள்ள விடுவோமா? வேதனைகள் சோதனைகளை கடந்து வந்து புலம்பெயர்ந்து வாழும் நாம் எம்மினம் அழிய விடுவோமா? அரசுகள் கைவிட்டால் என்ன? மனிதநேயம் கொண்ட மக்களிடம் எடுத்து செல்லுங்கள் எம்துயரை, பெற்றுக்கொள்வோம் அவர்கள் ஆதரவை. காத்திடுவோம் எம் உறவுகளை!!!’ என்று உணர்ச்சிகளைத் தூண்டி முழுவீச்சில் வணங்கா மண் பொருட்களையும் நிதியையும் சேகரித்தது.

ஆனால் பட்டினியால் தவித்த மக்களின் இறுதிப் பகுதியினர் மீட்கப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டு இருவாரங்கள் கடந்தும் இன்னமும் இக்கப்பல் வன்னி மக்களை நெருங்கவில்லை. முல்லைத் தீவு கடற்பரப்பிற்கு கொண்டு சென்று சர்வதேச கவனத்தை ஈர்க்கப் புறப்பட்ட வணங்கா மண் தற்போது இலங்கை அரசிடம் கையளிக்கப்பட உள்ளது. தற்போது சுயஸ் கால்வாயைக் கடக்கும் இக்கப்பல் இலங்கை அரசின் உடன்பாட்டுடன் கொழும்புத் துறைமுகத்தை அடைந்து பொருட்கள் அரசினால் கையேற்கப்பட உள்ளதாக லண்டன் குரலுக்குத் தெரிய வருகிறது. 

புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்த மக்களுக்கு உணவு விநியோகத்தை மேற்கொள்ள ஆரம்பிக்க்பட்ட இந்த வணங்கா மண் கப்பல் திட்டம் அதன் ஆரம்பத்திலேயே விமர்சனத்திற்கு உள்ளானது. தற்போது தங்கள் ஆரம்ப முடிவில் இருந்து U-turn எடுத்து இலங்கை அரசிடம் பொருட்கள் கையளிக்கப்பட உள்ளது.

மார்ச்சில் ஆரம்பிக்க்பட்ட “Mercy Mission to Vanni” என்றழைக்கப்பட்ட இக்கப்பல்த் திட்டத்திற்கு கவுன்சிலர் தயா இடைக்காடர், கலாநிதி நித்தியானந்தன், Dr புவி ஆகியோரைக் கொண்ட Dr மூர்த்தி தலைமையிலான குழு பொறுப்பாக இருந்தது. இக்குழுவில் உள்ள பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவருடன் லண்டன் குரல் தொடர்பு கொண்ட போது இது பற்றிய விபரங்கள் தனக்கு தெளிவாகத் தெரியவில்லை எனத் தெரிவித்தார்.

வன்னிமிசன் என்ற பெயரில் உள்ள உத்தியோகபூர்வ இணையத்தளமும் முக்கிய தகவல்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை. வன்னிமிசனில் அனுப்பப்படும் பொருட்களின் விபரம், அதற்கு சேகரிக்கப்பட்ட நிதி விபரம் அதற்கான செலவு விபரங்கள் எதுவுமே அறிவிக்கப்படாமல் கப்ரன் அலி, சிரியா நாட்டுக் கொடியுடன் கப்பல் இலங்கை நோக்கிச் செல்கிறது.

இக்கப்பலின் கொள்ளளவு Maximum TEU capacity : 5560 Reefer containers : 1080. ஆனால் கப்ரன் அலியின் கொள்ளளவிலும் மிகக் குறைவான தொகையான 900 மெற்றிக்தொன் வரையான உணவுப் பொருட்களும் மருந்துப் பொருட்களுமே அனுப்பப்படுகின்றது.குறைந்த அளவான பொருட்களுக்கு தனியாக ஒரு கப்பலை ஒழுங்கு செய்து அனுப்புவதற்கான செலவுத் தொகை மிக மிக அதிகமாகும்.

பிரித்தானியாவில் உள்ள இந்துக் கோவில்கள் ஒன்றியம் மட்டும் 200 000 பவுண்களை வன்னிமிசனுக்கு வழங்க முன்வந்து 50 000 பவுண்களுக்கு காசோலையை உடனடியாக வழங்கி இருந்ததாக வன்னிமிசன் செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது.

வன்னி மக்களின் அவலத்தை முன்நிறுத்தி ஆபிரிக்காவில் உள்ள உயர்ந்த மலைச் சிகரமான கிளிமொஞ்சதாரோ மலையில் ஏறிய கீரன் அரசரட்ணம் என்ற இளைஞர் 30 000 பவுண்சை சேகரித்து வணங்கா மண் திட்டத்திற்கு வழங்கி உள்ளார்.

இதனைவிட வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஆலயங்கள், வியாபார ஸ்தாபனங்கள், சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், பொது அமைப்புகள், தனிநபர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் இந்த வன்னிமிசனுக்கு பொருளாகவும் நிதியாகவும் உதவிகளை வழங்கி உள்ளனர்.

ஆனால் இந்த வன்னி மிசனின் ஏற்பாட்டுக் குழுவினர் ஒரு கப்பலை ஒழுங்கு செய்து  பொருட்களை அனுப்பினால் தங்கள் பொறுப்பு முடிந்தது என்ற வகையில் நடந்துகொள்கிறார்கள் என இவர்களுடன் தொடர்பு கொண்ட பொதுமக்கள் லண்டன் குரலுக்குத் தெரிவித்தனர்.

இத்திட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவினரான கவுன்சிலர் தயா இடைக்காடர், கலாநிதி நித்தியானந்தன், Dr புவி, Dr மூர்த்தி ஆகியோர் இந்த வன்னிமிசன் தொடர்பாக பொறுப்புடன் நடந்து கணக்கு மற்றும் விடயங்களை முழுமையாக வெளியிட வேண்டும் என்ற குரல்கள் தற்போது எழ ஆரம்பித்து உள்ளது.

Show More

Your email address will not be published. Required fields are marked *

32 Comments

  • defence.lk
    defence.lk

    SL Navy seize LTTE cargo vessel off Colombo

    An LTTE cargo vessel ‘Captain Ali’, was seized by Sri Lankan Navy patrol craft 160 Nm off the Colombo seas this morning (June 4). According to Naval sources, the Syriyan vessel ‘Captain Ali’ had set off from United Kingdom on 20th April, 2009 under the pretext of a ‘mercy mission’ towards Puthumathalan, Sri Lanka, intended to provide essential logistic supply for the diminishing terrorists.

    The vessel is now being towed towards the Colombo harbour with a crew of 15 including its captain Christia Goomesta, an Icelander and a former SLMM member. The vessel is carrying 884T of cargo which is yet to be cleared the sources further said.

    Reply
  • சட்டம் பிள்ளை
    சட்டம் பிள்ளை

    உது வணங்கா மண் கப்பலல்லோ

    Reply
  • Raj
    Raj

    வணங்காமண் கெப்டன் அலியாக மாறியது நகைப்பிற்குரியதே!
    புலன்பெயர் மந்தைக்கூட்டங்களை மேய்க்கும் சொத்தாசையும் கதிரை ஆசையும் கொண்ட தலை களன்ற தலைகளின் அடுத்த முட்டாள் திட்டமே ஐரோப்பிய பாராளுமன்ற கூத்தாகும்.இன்னும் எவ்வளவு காலம் இந்த நாடகங்கள் என்று பொறுமையாக வேடிக்கை பார்ப்போம்.

    Reply
  • thevi
    thevi

    அது வெறுங்கப்பலாக போனதோ பொருட்களோடு போனதோ யாருக்கு தெரியும்!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    வணங்காமண்ணாய் வேசம் கட்டி, இப்ப அலியாய் போய் ஆப்பிட்டு நிக்குது.

    Reply
  • tax
    tax

    வணங்கா மண் கப்பல் போகும் வரைக்கும்நச்சரித்துக்கொண்டு மக்களில் ஏதோ அக்கறை காட்டிய நண்பர்கள் இப்போது சென்றடைந்து விட்டது ஆனால் அலி எலி எனப்பட்டம் சூட்டி மக்களின் அக்கறையை மிக தெளிவாக காட்டிவிட்டீர்கள்…இப்ப சிறிலங்காவுக்கு என்ன அழுத்தத்தை கொடுக்கப்போகிறீர்கள் செம்மணச்செம்மல்களே… இப்போதும் புலிப்பினாமிகள் பற்றியே சொல்லிக்கொண்டிருங்கள்….. அங்கு முகாம்களில் கொழுத்தும் வெயிலில் பாதணியில்லாதவர்களுக்கு உங்கடை செருப்பை கூட அனுப்பி வைக்க உங்களால் முடிந்ததா (வணங்கா மண் பற்றி கொசிப்படித்தவர்களூக்கு மட்டும்) 17ம் திகதி தொடங்கி வைக்கப்பட்ட லிற்றில் எயிட் க்கு இதில் கொசிப்படித்த எத்தனை பேர் பங்களித்துள்ளீர்கள்….. இதுகால வரை புலிக்கு ஒரு சதமும் கொடுக்காத உங்களால் எவ்வளவு கொடுக்க முடிந்தது மக்களுக்காக…. இதுநாள் வரை வணங்கா மண் பெயரில் பல தலைப்பிட்ட தேசம் அலி கப்பல் கைப்பற்றப்பட்டதாக செய்தியை குறுக்கிக்கொண்டுள்ளது…

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    இந்தக் கப்பலுக்கு ‘கப்ரன் அலி’ தான் பெயர். இது அப்பெயரிலேயே கப்பல் சொந்தக்க்காரர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கே எல்லோரும் கவனிக்க வேண்டியது இந்தப்பயணத்துக்குப் பெயரே ‘வணங்காமண்- வன்னியை நோக்கிய பயணம்’ (Vanangaaman- Mercy mission to Vanni). கவனம் சங்கரி கேட்டால் இங்கிலீஸ் தெரியாதவை எண்டு நக்கலடிக்கப்போறார் உங்களை!
    எல்லோரும் நக்கல் அடிப்பதில் முன்னிற்பார்கள் ஆனால் ஒரு துரும்பையும் கிள்ளிப்போடார்கள்.
    இவ்வாறுதான் கப்பலி சாமான் இருக்கா? இன்ரநசனல் மாக்கற்றில விக்கிறாங்கள் சனம் குடுத்த சாமான்களை எண்டெல்லாம் கதைச்சவை.
    அப்பிடியே ஸ்ரீலங்கா நேவிக்கு சொல்லுங்கோ கப்பலை கொள்ளையடிச்சுப்போட்டு ஒண்டுமில்லாத வெறுங்கப்பலை அனுப்பினவை எண்டு கதை விடலாம். ஆனால் இந்தமுறை கப்பலில சுவீடன் காரன் நிக்கிறானாம். உண்மையோ?

    Reply
  • thevi
    thevi

    அண்ணா சாந்தன் எங்களுக்கு தெரியாதா சுவீடன்காரன் என்ன செய்வான் மிலிபான்ட் என்ன செய்வார் எரிக்சொல்கேயம் என்ன சொல்லுவார் யுஎன்ஒ என்ன சொல்லும். அது என்ன நெடுகவும் வெளிநாட்டுகாரனை பிணை வைத்துத் தான் எந்தக் காரியம் என்றாலும் இறங்குகிறீர்கள். உள்ளுரில் அயலில் உங்களுக்கு ஒரு நண்பரை சம்பாதிக்க தெரியவில்லை. அவன் நிற்கிறான் இவன் நிற்கிறான் என சவுண்டு மட்டும் விடுங்கோ.

    ஆனானப்பட்ட உங்கள் கதாநாயகன் உங்கள் பந்தயக் குதிரை பிரபாகரனுக்கே ஆயுதங்களை அனுப்பாமல் பத்மநாதன் அல்வா கொடுத்திட்டார் என கேள்விப்படவில்லையா? இந்த சாப்பாட்டு பொருட்களை சுத்தவதா பெரிய வேலை?

    சும்மா குறுட்டுவளத்தில அநுராதபுரத்திற்கும் கொழும்பிற்கும் அடிக்க பிளேன் அனுப்பின மாதிரித்தான் கப்பலை அனுப்பியிருக்கிறார்கள். முறைப்படி அனுமதி பெற்றோ அல்லது செஞ்சிலுவை சங்கம் மூலமோ அனுப்பாமல் இப்படி பொறுப்பற்று அனுப்பியதே எல்லாத்தையும் நேவிக்காரன் அடிச்சிட்டான் என கதையைக்கட்டி விட்டு சுருட்டிக் கொள்ளத்தான்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    தேவி,
    இந்தக் கப்பல் பற்றியும் உலகில இதைப்போல நடந்த பிறிதொரு சம்பவம் ,அச்சம்பவம் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றியும் முன்னர் திரு.ஜெயபாலன் தேசத்தில் ஒரு கட்டுரை வரைந்திருந்தார். அதையும் அக்கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்கலையும் ஒருமுறை மீண்டும் வாசிக்கவும்.
    செஞ்சிலுவைச்சங்கம்…. முறையான அனுமதி…சரித்திரம் தெரிந்தால் ஏன் இந்தக்கதை?

    அத்துடன் அரசிடம் முறையான அனுமதி பெற்ற பின்னர் ஸ்ரீலங்காவில் நடக்கும் கொலைகளையும் விசாரிக்கச் சொல்லி அட்வைஸ் பண்ணுங்கோ!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //‘வணங்காமண்- வன்னியை நோக்கிய பயணம்’ (Vanangaaman- Mercy mission to Vanni). கவனம் சங்கரி கேட்டால் இங்கிலீஸ் தெரியாதவை எண்டு நக்கலடிக்கப்போறார் உங்களை!- சாந்தன்//

    தங்களுக்கு ஆங்கிலத்தில் மட்டுமல்ல தமிழிலும் தடுமாற்றம் எண்டு நல்லாவே தெரியுது. ‘வணங்காமண்- வன்னியை நோக்கிய பயணம்’ என்றால் வணங்காமண் என்பது என்ன?? கப்பலை கிராபிக் செய்து அதிலை வணங்காமண் என நாங்களா பெயர் எழுதி விட்டோம்?? கப்பல் பற்றி பேட்டிகளிலும் கப்பலின் பெயர் “வணங்காமண்” என குறிப்பிட்டது யார்??

    அகதிகளாகவிருக்கும் அந்த மக்களுக்கு உடனடியாகவே தேசம்நெற் உட்பட பலர் உதவி செய்தார்கள், செய்து கொண்டிருக்கின்றார்கள் விளம்பரமில்லாமல். ஆனால் உங்களைப் போன்றோர் பெரு விளம்பரம் செய்து கத்தை கத்தையாக சுருட்டி வைத்துக் கொண்டு அள்ளி எடுத்ததை கிள்ளிப் போட்டு விட்டு படம் காட்டுவீர்கள். மிகுதியை வைச்சுக் கொண்டு ஆளாளுக்கு பங்கு போடுற பிரைச்சினையில் தானே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெயரில் அறிக்கை விட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு எனியும் ஏமாற்றலாம் எண்டு பார்க்கிறியளோ?? கண்ணீர்த் துளிகள் என்று பெயரில் சுருட்டிய பணம் என்னானது?? அதுவும் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கின்றதோ??

    Reply
  • SUDA
    SUDA

    அலி புலி என்பதுவல்ல முக்கியம் புலத்துப் பினாமிகளின் கிரிமினல் மூளை எப்படி வேளை செய்யுதெண்டு பாருங்கோ.
    ஏற்கனவே சனம் கணக்கு கேட்க ஆரம்பிச்சுட்டுது இனியும் தாக்குப்பிடிக்க இயலாதென்டுதான் இந்த அலியை அனுப்பியருக்கிறாங்கள். அதிலிருந்தவை சேர்த்ததில் 100இல் ஒரு பங்கும் இல்லையென்டும் ஒரு தகவல். ஆக “சிங்கள இனவாத அரசு தட்டிப் பறித்துக் கொண்டது” என் புலத்து மாக்களை உசுப்பேத்தி இன்னும் அவர்களை சுயமாக சிந்திக்க விடாமல் ஆக்குவதுதான் இவர்களின் திட்டம்.

    Reply
  • thevi
    thevi

    “செஞ்சிலுவைச்சங்கம்…. முறையான அனுமதி…சரித்திரம் தெரிந்தால் ஏன் இந்தக்கதை”

    “அத்துடன் அரசிடம் முறையான அனுமதி பெற்ற பின்னர் ஸ்ரீலங்காவில் நடக்கும் கொலைகளையும் விசாரிக்கச் சொல்லி அட்வைஸ் பண்ணுங்கோ”

    எதையும் தடாலடியாக செய்து தானே உங்களுக்கு பழக்கம். சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு காரியமாற்றினால் மற்றவர்ளை ஏமாற்ற முடியாதே. அதனால் எந்தக் காலத்திலும் அப்படி நடக்க முடியாது.

    சிறிலங்காவில் நடக்கும் கொலைகளைப் பற்றி விசாரிப்பதற்கு புலிப்பினாமிகள்தான் தடையாய் இருக்கிறார்கள். பிரபாகரனின் மரணத்தை மூடி மறைப்பதன் ஊடாக இலங்கை அரசையும் தங்களையும் புலிப்பினாமிகள் காப்பாற்றிக் கொண்டுள்ளதோடு அப்பாவி மக்களுக்கும் நீதி கிடைப்பதை தடுத்து விட்டார்கள். அதனால் பிரபாகரனின் மரணத்தை வெளிப்படுத்தி அனைத்து மக்களுக்கும் நடந்த கொடுமைகளுக்கு நீதி தேடலாம் என்பது உங்களுக்கு எனது அட்வைஸ். இந்த சவாலை நீங்கள் எதிர் கொள்ள தயாரா?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    வணங்காமண்- வன்னிப்பயனத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளம் பற்றி பேட்டிகளில் குறிப்பிட்டார்க்களே பார்க்கவில்லை போலும். கப்பலின் பெயருக்கும் அதன் பயணத்தின் பெயருக்கும் வித்தியாசம் சிலருக்கு தெரியாது என்றது எனக்கு ஆசர்யமில்லை என்ற உண்மையை ஒத்துக்கொள்ளதான் வேண்டும்.

    கப்பல் போகாது என்றார்கள் இப்போ போய்ச்சேர்ந்து விட்டது. என்ன செய்யலாம் என்று யோசித்து…………………. அதுதான் ஸ்ரீலங்கா அமைச்சரே சொல்லி இருக்கிறார் ஒரு சதம் கூட தமக்கு லண்டன் வாழ் மக்கள் (33,000 பேர்) தரவில்லை என்று. ஒருவேளை அமைச்சரின் கூற்றை நம்பினால் ”முறைப்படி அனுமதி பெற்றோ அல்லது செஞ்சிலுவை சங்கம் மூலமோ அனுப்பாமல்” பொறுப்பற்று அனுப்பியதாகி விடும் என நினைத்து விட்டார்களோ!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சாந்தனுக்கு கொஞ்சமாவது தெளிவு ஏற்பட புதினம் “வணங்காமண்” பற்றி எழுதிய செய்தியின் இணைப்பைத் தருகின்றேன். தயவுசெய்து தமிழையாவது ஒழுங்காக படியுங்கள்.

    http://www.puthinam.com/full.php?2b1XvMe0djd7N0ecGC6D3b438Eg4d3g3c3cc2FqY2d43cPO3b034Pm3e

    Reply
  • செல்வன்
    செல்வன்

    இலங்கை கடற் பரப்புக்குள் சட்ட விரோதமாக பிரவேசித்த வெளிநாட்டுக் கப்பலை கடற்படையினர் நேற்று அதிகாலை தடுத்து நிறுத்தியிருப்பதாக கடற்படை பேச்சாளர் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார்.

    வன்னியில் வசிக்கும் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் போர்வையிலேயே ‘கெப்டன் அலி’ எனும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய கப்பல் இலங்கை கடற் பரப்புக்குள் பிரவேசித்திருப்பதாகவும் கடற்படை பேச்சாளர் கூறினார். பாணந்துறை கடற் பரப்பிலிருந்து மேற்கே 150 கிலோ மீற்றர் கடற் தூரத்தில் வைத்தே ‘கெப்டன் அலி’ எனும் கப்பல் கடற் படையினரால் நேற்றுக் காலை 4 மணியளவில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    ‘மேர்சி மிஷன் டூ வன்னி’ எனும் தலைப்புடன் வந்த மேற்படி கப்பலில் பயணம் செய்த 15 மாலுமிகளும் அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களனைவரும் வெளிநாட் டவர்களென்றும் கடற்படை பேச்சாளர் டி. கே. பி. தஸ நாயக்க மேலும் கூறினார்.

    பிரிட்டனிலுள்ள இலங்கைத் தமிழர்களால் சேகரித்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களுடன் கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி ‘வணங்கா மண்’ எனும் கப்பல் பிரிட்டிஷ் துறைமுகத்திலிருந்து பிரான்ஸை சென்றடைந்தது. பிரான்ஸிலிருந்து ‘கெப்டன் அலி’ எனும் கப்பல் மே 07 ஆம் திகதி ‘வணங்கா மண்’ கப்பலில் இருந்த நிவாரணப் பொருட்களுடன் இலங்கையை நோக்கி புறப்பட்டதாகவும் கடற்படை பேச்சாளர் கூறினார். வெளிநாட்டிலிருந்து நிவாரணப் பொருட்களுடன் கப்பலொன்று சட்டவிதிகளை மீறி இலங்கை கடற்பரப்புக்குள் வருவதாக வெளியான செய்திகளையடுத்து கடற்படையினர் மிகுந்த அவதானத்துடன் கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததாகவும் பேச்சாளர் தெரிவித்தார்.

    கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட ‘கெப்டன் அலி’ கப்பல் நேற்று மாலையளவில் பாணந்துறை கடற்பரப்புக்கு எடுத்துவரப்பட்டு சோதனையிடப்பட்டு வருகிறது. அதில் பயணித்தவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக பேச்சாளர் கூறினார்.

    ஆரம்ப கட்ட சோதனையின் போது மேற்படி கப்பலில் 884 மெற்றிக் தொன் நிறைகொண்ட உணவு மற்றும் மரு ந்துப் பொருட்கள் இருந்ததாகவும் பேச்சாளர் டி. கே. பி. தஸநாயக்க குறிப்பிட்டார்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    நீண்டகாலமாக புலம்பெயர்தமிழர் மத்தியில் ஒருகூட்டம் “மர்மக்கதை” களைச்சொல்லி தலையில் சம்பல் அரைத்து வருகிறது. இது வேதனைக்குரிய விஷயம் இந்த அப்பாவிமக்கள் இனிமேலும் ஏமாற்றுப்படாமல் இருக்கவேண்டும். இவர்கள் செய்யும் “உதவிகள்” “பங்களிப்புகள்” “நன்கொடைகள்” அவர்களின் நோக்கத்திற்காக சென்றடைய வேண்டும். ஆகக்குறைந்தது கணக்குவழக்கு கேட்கிற “றேஞ்சுக்கு” காவது தம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    Reply
  • anpu
    anpu

    புலிகள் அரசாங்கத்துடன் இரகசிய ஒப்பந்தம் செய்துள்ளார்களா??? அப்படியானால் இவர்கள் இவர்களின் பாஷையில் ‘அவர்கள்’ அல்லவோ….. அடப் பாவிங்களா…………
    பிரபா விடயத்திலும் இப்படித்தான் ஏதும் நடந்ததோ?? யார் கண்டது

    Reply
  • thevi
    thevi

    எழுதி வைத்துக் கொள்ளுங்கள் அன்பு ,இன்னும் சில நாட்களில் பெரும் பெரும் புலிப் பினாமிகள் பெரும் முதலீட்டாளர்களாய் டக்ளஸ் தேவானந்தாவின் பின்னாலும் அரசாங்கத்தின் பின்னாலும் வால் பிடிப்பார்கள். வன்னி மக்களில் இருந்து இந்த ஜெயபாலன் வகையறாக்கள் வரை ஆகாயத்தைப் பார்க்க வேண்டி வரும்!

    Reply
  • Theva
    Theva

    யுத்தம் முடிவிற்கு வந்துவிட்ட நிலையில் சிறுபான்மைக்கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு அரசியல் தீர்வுக்கு ஏற்ற சூழலை உருவாக்க தேசம் அரசியல் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவேண்டுமே தவிர மூர்த்திக்கும் இடக்காடாருக்கும் கருத்தெழுதி என்ன பிரயோசனம்?

    Reply
  • மாயா
    மாயா

    இலங்கையின் மோதல் தவிர்ப்பு காலங்களில் முன்னர் மோதல் தவிர்ப்பு கண்காணிப்பாளராக பணியாற்றிய ஐரிஸ் நாட்டைச் சேர்ந்த கிரிஸ்ஜான் கோமுன்சனும் இக்கப்பலில் இருந்து கைதாகியுள்ளார்.

    Reply
  • palli
    palli

    என்னோடை சண்டைக்கு வராதையுங்கோ பல்லி கடுப்படிக்குதென; எனெகென்னமோ இந்த KP வேலைதான் வணங்கா பொன் கப்பல் இலங்கை அரசிடம் மடங்கியது என தோன்றுகிறது; இப்படிதானே சமாதான பொறுப்பாளரையும்; அரசியல் பொறுப்பாளரையும்; வெள்ளை துண்டை தலையில கட்டிகொண்டு போங்கோ குண்டு போட்டாலும் கவஸம் போல் பட்டு தெறிக்கும் என நாரதர் வேலை பாத்து இருவரையும் அந்த உலகத்துக்கு பேச்சு வார்த்தைக்கு அனுப்பினவர்; அதே போல்தான் கப்பலுக்கும் வெள்ளை வேட்டி கட்டி போனதாய்தானே டாக்குத்தர் பகுதி சொல்லுகினம்;

    படையப்பாவின் மாட்டுக்கு சிவப்பு ஆகாதது போல் மகிந்தா குடும்பத்துக்கு வெள்ளை ஆகாது; இது தெரியாமல் தீபத்திலும் GTV யிலும் புலிகொடி காட்டி காவடி எடுக்க வேண்டியது பின்பு வெள்ளயை காட்டி சமாதானம் என சொன்னால் விடுவார்களா? யாரோ கேட்டார்கள் கப்பல் போகாது என நாம் தம்பட்டம் அடித்தோம் என; உன்மைதான் தமிழரிடம் போகாது என சொன்னோம் கேட்டீர்களா? புலியின் சொத்து யாவும் பறிமுதல் செய்யும் அரசு இந்த கப்பலையும் பறிமுதல் செய்து விட்டது; அடுத்து பலரது வீடுகள் ஏலத்துக்கு வரலாம்; அதனால் கடைகள் வீடுகள் அவசராவசரமாக பெயர் மாற்றங்கள் செய்ய தொடங்கி விட்டனர்; பிடிபட்ட கப்பலுக்கு வரிகட்ட சிலர் பணம் சேர்க்க வரலாம் மக்களே விளிப்பாக இருங்கள்;

    Reply
  • thevi
    thevi

    பல்லி வயிற்றில் புழி கரைக்க வேண்டாம். கப்பல் பிடிபட்டாலும் அதுவும் எங்கள் தலையிலேயா?

    Reply
  • மேளம்
    மேளம்

    பல்லி>சாந்தன்> தேவி> பார்த்திபன்> மாயா ஐயோ ஐயோ உங்கள் விமர்சனங்களைப் பார்க்கும் போது> பேசாமல் உந்த மட்டக்களப்பாங்களோட இருந்து விடலாம் போலிருக்கப்பா

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    “..வணங்காமண்- வன்னிப்பயனத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளம் ..”
    என்று சொன்னால் புதினத்தை இழுக்கிறியளே. இதில் எனக்கு மொழி உபதேசம் வேறு.
    http://vannimission.org

    சரி பரவாயில்லை என புதினத்தை எடுத்துக்கொண்டாலும் அவர்கள் ஒரு இடத்தில் கப்பல் எனச் சொல்லி இருக்கின்றனர் ஆனால் மிகுதி மூன்று இடங்களிலும் கீழ்வருமாறு சொல்லி உள்ளனர். கவனியுங்கள் ’பயணத்திற்கான’ , ‘ஒருங்கிணைப்பு’ , ‘நடவடிக்கை’ என்ற சொற்கள ஆழ்ந்து வாசிக்கவும். புரியும் என நினைக்கிறேன்……..

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஏன் மேளம் நீங்க அடிக்கிற அடியைப் பார்க்க எனக்கு கூச்சமா இருக்குது. ஏன் நீங்களும் உள்ளூராட்சி தேர்தலிலே ஊரவர் பணத்திலை, அவஙக தலையிலேயே மிளகாய் அரைச்சு தேர்தலிலே நிக்க போறேளா??………

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சாந்தன்
    உங்களுக்கு மொழிப் பிரைச்சினை மட்டுமல்ல, பார்வையிலும் கோளாறு உள்ளது. புதினத்தின் தலையங்கமே “தாயகம் நோக்கிய வணங்காமண் கப்பலின் பயண ஏற்பாடுகள் நேற்றுத் தொடங்கியது” என்றே உள்ளது. அதைத் தொடர்ந்து செய்தியிலேயே மூன்று தடவைக்கு மேல் “வணங்காமண் கப்பல்” என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இதைவிடவும் தங்களுக்கு விளக்கம் தேவையென்றால், தங்கள் குறைபாடுகளை தாங்கள் நிவர்த்தி செய்வது, தங்கள் எதிர்காலத்திற்குத் தான் நல்லது. அத்துடன் நீங்கள் குறிப்பிட்ட “வணங்காமண் இணையத்தளம்” ஆரம்பத்திலிருந்த பலவற்றை நீக்கி தற்போது முழுவதுமாக மாற்றியமைத்து விட்டனர். அதனால்த் தான் புதினம் இணையப்பத்திரிகை அப்போது வெளியிட்ட செய்தியை நான் இணைத்திருந்தேன். இதைக்கூட தங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    பார்த்திபன்,
    வணங்காமண் இணையத்தளம் மாற்ரப்பட்டிருப்பின் அவர்களைத் தொடர்பு கொண்டு பழைய செய்திகளை கேட்டு வெளியிடுங்கள். ……. மற்றும் இவர்களின் தளத்தில் ‘Archieves’ என ஒரு பகுதி உண்டு. அங்கு சென்று பழைய செய்திகள் அறிக்கைகள் பெற்றுக்கொள்ளலாம்.

    Reply
  • palli
    palli

    மேளம் அந்த உறவையும் உங்கள் தலை அம்மான் மச்சான் பிரச்சனையால் துண்டித்து விட்டாரே; கிழக்கேயும் போக முடியாது; வடக்கேயும் வாழ முடியாது; தெற்க்கே மகிந்தா குடும்பம் விடவே விடாது; மேற்க்கே போக முடியுமா என உலக படத்தில் பார்க்கவும்; தெரியாவிட்டால் தென்னைமரத்தில் ஏறிநின்று பாருங்கோ;அதை விட்டு எமது பிழைப்பை கெடுக்காதையுங்கோ சாமி;

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சாந்தன்
    வணங்காமண் இணையத்தளத்தில் ஏற்கனவே கிராபிக் செய்து இணைக்கப்பட்ட கப்பலின் பெயரையே “வணங்காமண்” என்று பெயரிட்டு அதை லோகோவாக இணைத்தவர்களே, அதனை இப்போது எடுத்து விட்டார்கள். அத்துடன் தொடர்பு கொள்வதற்காக இணைத்திருந்த தொலைபேசி இலக்கங்களையும் தற்போது எடுத்து விட்டார்கள். இதிலிருந்தே தெரியவில்லையா அவர்களின் நோக்கங்கள். எனவே ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய்யென எடுத்து விடுவதை நிறுத்திவிட்டு, முடிந்தால் சுருட்டிய பல இலட்சம் பிரித்தானிய பெளண்டுகளை அந்த மக்களுக்கு போய்ச் சேர வழி செய்யுங்கள்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    ‘இலங்கை படையினர் நன்றாக நடத்தினர்’- கிருஸ்டன் வுட்ஸ்மன்
    ——————————————————————-
    ஐரோப்பாவில் வாழும் தமிழர்களால், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனுப்பப்பட்டதாக கூறப்படும் உதவிப்பொருட்களை தாங்கிய சிரிய கப்பலான கப்டன் அலி, தற்போது கொழும்பு துறைமுகத்துக்கு வெளியே நங்கூரமிடப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாக அதில் பயணம் செய்த கிருஸ்டன் வுட்மன் தெரிவித்துள்ளார்.

    சம்பந்தப்பட்ட ஆவணங்களை சரிபார்க்கும் நடவடிக்கைகளை தற்போது இலங்கை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும், தாம் நன்றாக நடத்தப்படுவதாகவும், அந்தக் கப்பலில் பயணம் செய்தவரும், இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் முன்னாள் கண்காணிப்பாளருமான ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த கிருஸ்டன் வுட்ஸ்மன் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

    அதேவேளை, இது வெறும் மனித நேய உதவித்திட்டம் மாத்திரமே என்று கூறும் வணங்காமண் அமைப்பைச் சேர்ந்த அர்ஜுனன் எதிரிவீரசிங்கம் என்பவர், இந்த உதவிப் பொருட்களை மக்களிடம் சேர்க்கும் பணியில் தாம் இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படவிருப்பதாகவும் கூறியுள்ளார்.

    Reply
  • msri
    msri

    வன்னிக்கு “கப்லோட்டிய தமிழன்” என்ற பெயர் எடுப்பதே உந்த கப்பல்காரர்களின் முதல் நோக்கம! இரணடாவது நோக்கம் கொள்ளையடித்தலே! கப்பல் பிடிபட்டுவிட்து!வருகினன்ற கணக்கைப் பார்த்தால்>சேர்ந்த பொருட்கள் இன்னும் இரண்டு கப்பலுக்கு ஏத்தலாம்! அது சாத்தியமில்லை> உள்ளதை நித்தியின் தலைமையில் பிரிக்க வேண்டியதுதானே! மக்களின் அவலத்தில் எத்தனைபேர் எத்திப் பிழைப்பு!

    Reply
  • மேளம்
    மேளம்

    அன்புடன் பல்லி. சாந்தன் சத்தியமா சொல்றனுங்கோ… யார்ர பொளப்பையுயும் மேளம் அடிச்சுக் கெடுக்காது… ஏதோ தமிழ மறக்காம இருக்கிறதுக்காக…. எழுத்துப்பிழை இல்லாம எழுதுற ஒண்டுரெண்டு இணையத்தளத்த கட்டாயமா நேரம் மிச்சம் புடிச்சி வாசிக்கிற ஒண்டு ரெண்டு பேருல இந்த மேளம் நீண்டகால ஆளுங்கோ. இப்பதான் அப்பப்ப இடைகிட மேளம் அடிக்குது…. இருந்தும் ஊண்டியடிக்கல்ல….
    மேளம்

    Reply