எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி!? ‘வணங்கா மண்’ வரிசையில் ஜனனி ஜனநாயகத்தின் அரசியல் கப்பலும் கவிழ்ந்தது!!! : ரி கொன்ஸ்ரன்ரைன்

Jan Jananayagamதேர்தல்களில் நிற்பவர்கள் எல்லோரும் வெற்றி பெறுவதில்லைத் தான் அதிலும் குறிப்பாக தேர்தலில் நிற்பவர்கள் எல்லோரும் தாம் வெற்றி பெறப் போவதில்லை என்று எண்ணுவதும் இல்லை. சிலர் கட்சியின் சார்பாக நிறுத்தப்படுகின்றனர். சிலர் ஏதோகொள்கையின் நிமித்தம் தேர்தலில் நிற்கின்றனர். சிலருக்குப் பேராசை. இன்னும் சிலருக்கோ நப்பாசை. இதில் லண்டன் தொகுதியில் நின்று தோல்வியுற்ற ஜனனி ஜனநாயகம் எவ்வகை?

யூன் 4ல் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் இடம்பெற்றது. பிரித்தானியா உட்பட 27 நாடுகளில் உள்ள 375 மில்லியன் பிரஜைகள் 736 ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். பிரித்தானியாவில் உள்ள 72 ஆசனங்களில் லண்டனில் 8 ஆசனங்களுக்கு 19 பேர் போட்டியிட்டனர். அதில் ஜனனி ஜனநாயகம் புலியாதரவு அலையுடன் தேர்தலில் நின்றார். தேர்தலின் முடிவுகள் இன்று (யூன் 7) வெளியாகியது. 

இவ்வாரம் வெளியாகிய புலியாதரவு ஈழமுரசு பத்திரிகையில் ‘வணங்கா மண்’ கப்பலைத் தொடர்ந்து ஜனனியின் தேர்தல் பிரவேசம் புலத்து தமிழர்களின் விடுதலைப் பாதையை தெளிவாகச் செப்பனிடுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. வீர காவியங்களோடு புறப்பட்ட ‘வணங்கா மண்’ ‘வணங்கிய மண்’ ணாக போய் சிறிலங்கா அமைச்சரின் காலில் கூனிக் குறுகி நிற்கின்றது.

ஈழப் பிரச்சினையுடன் கூட்டாக பொஸ்னியா தீபெத் பிரச்சினையையும் தீர்க்கப் புறப்பட்ட ஜனனியின் கப்பல் ஈஸ்ற்ஹாமைத் தாண்ட முதலே கவிழ்ந்துவிட்டது. ஈழத் தமிழர்கள் மிகவும் செறிந்து வாழும் ஈஸ்ற்ஹாமில் ஜனனி பெற்ற வாக்குகள் 3520 மட்டுமே. முருகானந்தன், ஒரு பேப்பர் கோபி, பற்றிமாகரன், ராஜாமனோகரன், மற்றும் வெற்றுவாய் அரசியல் ஆய்வாளர்களின் அரசியல் சித்தாந்தங்களை நம்பியும் தீபம் ஜிரிவி ஐபிசி ஒரு பேப்பர் ஈழமுரசு போன்ற ஜால்ரா ஊடகங்களை நம்பியும் நடாத்தப்படும் அரசியலின் விளைவு தான் ஜனனியின் தோல்வி.

ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு லண்டனில் ஒரு ஆசனத்தைப் பாதுகாக்க குறைந்தது 8 வீத வாக்குகளாவது (190 000) தேவையென்று தேசம்நெற்றில் முன்னரே குறிப்பிட்டு இருந்தோம். இம்முறை ஒரு ஆசனத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட ஆகக் குறைந்த வாக்கு 188 440. ஜனனி ஜனநாயகத்திற்குக் கிடைத்த வாக்குகள் 50 014. அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 2.9 வீதமான வாக்குகளை ஜனனி ஜனநாயகம் பெற்றிருந்தார். நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் அவர் தனது கட்டுப் பணத்தை தக்க வைத்துக் கொள்ள 40 000க்கும் அதிகமான வாக்குகளை 2.5 வீதமான வாக்குகள் –  பெற வேண்டி இருந்தது. 2.5 வீதத்திற்கு சற்று அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டதால் ஜனனி ஜனநாயகம் தனது 5000 பவுண் கட்டுப்பணத்தைத் தக்க வைத்துக் கொண்டார். ( தமிழீழத் தேசியத் தலைவி மேதகு ஜன ஜனநாயகம் அவர்களே! : ஈழமாறன் )

எவ்வித பொது அறிவும் இல்லாமல் யதார்த்தமற்ற கொள்கையினாலும் முரட்டுப் பிடிவாதங்களாலும் தடம்புரண்ட ஈழப்போராட்டம் அதே அணுகுமுறையினால் புலத்திலும் தடம் புரண்டது. அதிஸ்டவசமாக தாயகத்தில் ஏற்பட்டது போன்ற மனித அவலம் எதுவும் புலத்தில் ஏற்பட்டுவிடவில்லை.

புலத்து தமிழர்ளும் புலிப் பினாமிகளும் இன்னும் யதார்த்தத்தில் இருந்து வெகுதொலைவில் நிற்கின்றனர். தமிழகத்தில் மம்மியை கொண்டாடி மம்மியை கவிழ்த்து விட்டார்கள். இங்கு பேபியைக் கொண்டாடி பேபியையும் கவிழ்த்து விட்டார்கள். ஒரு பேப்பர் கோபியும் ஈஸ்ற்ஹாம் முருகானந்தனும் வோட்டுப் போடாதவர்களுக்கு இனி ‘துரோகிகள்’ என்று சிறப்புப் பட்டம் கொடுத்து கௌரவிப்பார்கள்.

ஜனனி ஜனநாயகம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் ஒவ்வொரு தமிழரும் 5 வேற்று இனத்தவர்களை அழைத்து வந்து வாக்களிக்க வைப்பார்கள் அதன் மூலம் தனது சீற்றை செக்குயர் (secure)பண்ணலாம் என்று குறிப்பிட்டார். பாவம் ஜனனி புலத்து தமிழர்களைப் போல் முட்டாள்கள் வேற்று இனத்திலும் இருப்பார்கள் என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டார்.

எமது சமூகத்தில் பெண்களின் அரசியல் பங்களிப்பு மிகக் குறைவான நிலையில் ஜனனி ஜனநாயகம் போன்றவர்களின் அரசியல் பிரவேசம் வரவேற்கப்பட வேண்டும். ஆனால் அவர்கள் புலிப் பினாமிகளின் தற்கொலை குண்டுதாரிகள் போன்று அரசியலில் நுழைவது அவர்களுடைய அரசியல் எதிர்காலத்தையே சிதறடித்துவிடுகின்றது.

இலங்கையில் கொல்லப்பட்ட 20 000 தமிழர்களின் இரத்தக்கறை ஜனனி போன்றவர்களிலும் இருக்கின்றது. அம்மக்கள் இலங்கை அரசாலும் புலிகளாலும் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் தனது அரசியல் நலன்களுக்காக புலிகளைக் காப்பாற்றுவதிலேயே ஜனனி ஜனநாயகம் மிகத் தீவிரமாக இருந்தார். யுத்தப் பகுதிக்குள் புலிகள் மக்களைத் தடுத்து வைத்திருப்பதை ஜனனி எச்சந்தர்ப்பத்திலும் கண்டிக்கவில்லை. புலிகள் பலவந்தாமாக இளைஞர்களையும் யுவதிகளையும் பிடித்து யுத்த முன்னரங்கிற்கு அனுப்பி அவர்களைப் பலிகொடுத்த போது ஜனனியும் அவரது ஆதரவாளர்களும் பிரபாகரனது படத்தையும் புலிக்கொடியையும் தாங்கிச் சென்றனரேயன்றி அம்மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மிகப்பெரும் மனித அவலத்தில் குறுகிய அரசியல் நோக்குடன் செயற்பட்ட ஜனனி ஜனநாயகம் வன்னி முகாம்களில் தேர்தலில் நின்றிருந்தால் கட்டுக் காசையும் பறிகொடுத்து இருப்பார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

47 Comments

 • suban
  suban

  ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றிருக்கிறார் ஜனனி. இதை குறைத்து மதிப்பிடத் தேவையில்லை. வரும்தேர்தல்களில் தமிழ்வாக்காளர்களை வைத்து பேரம் பேச இது உதவும். ஆனால் என்னபேரம் யாருடன் பேசுவது என்பதுதான் இவர்களுக்குள்ள பிரச்சினையே!

  Reply
 • rony
  rony

  ஐரோப்பாவில் ஜனனி ஜனநாயகத்தின் அரசியல் மந்திரம் என்ன தெரியுமா?:”பிச்சை வேண்டாம் நாயைப்பிடி” என்பதுதான். ஆளைவிட்டால் போதும், கட்டுக்காசு தப்பியதுடா சாமியோ!-அரோகரா—

  Reply
 • Poopalarajah
  Poopalarajah

  Dear Constantine,

  Another good article. However there is one point to make. Politicians are like ” Semmarie AAdugal”- Sheep. They follow the popular trend- no matter whether it is a just and fair cause or not- to secure votes.

  Here Janani also sailed by the wind.Getting 50000 votes doesn’t secure her a seat. But it is a demonstration how the Fascist inclined, emotionally engineered Tamil diaspora will be a destructive force in the building of a Fair and Just and United Sri Lanka.

  Reply
 • Anonymous
  Anonymous

  புலி மிரட்டினால் பொலிஸில் முறையிடுங்கள் : புலிகளின் நோர்வே பொறுப்பாளர்களில் ஒருவர்.
  ilankainet.com/2009/06/blog-post_5283.html

  Reply
 • தாமிரா மீனாஷி
  தாமிரா மீனாஷி

  (தாயகத்தில் மக்கள் அழியாமல் விடுதலை கிடையாது என்ற சித்தாந்தம்! புலத்திலோ மக்கள் அழிந்தாலும் (பரவாயில்லை) எங்களுக்கு பதவியும் பகட்டும் வேண்டும்! படித்தவர் சூதும் வாதும் செய்தால் ஐயோ என்று (சமூகம்)போகும் என்பதற்கு இதைவிட நல்ல உதாரணம் தேவையில்லை. தயவு செய்து இனிமேலாவது அப்பாவி மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள். நீங்கள் புலத்தில் பட்டமும் பதவிகளும் பெறுவதற்கு எத்தனையோ குறுக்கு வழிகள் உண்டு… புலி நண்பர்களிடம் இரகசியமாகப் படித்த பாடங்களை வேறு இடங்களிலும் அப்ளை பண்ணினால் ஈசியாக முன்னேறலாம்… அதற்கு அவர்களிடம் பெர்மிட் வாங்கி விட்டால் சரி…

  Reply
 • Tamil
  Tamil

  50014 பேர்கள்தான் இன்னும் முட்டாள்களாக இருக்கிறார்கள் – அதாவது ஊர்வலம் சென்றவர்களில் கால் பகுதியினர், மிகுதி முக்கால் பகுதியினர் புலித்தலமைகளின் அழிவுடன் தங்களை சுதாகரித்துக் கொண்டுளார்கள் என்றுகொள்ளலாமா!
  பாவம் ஜனனி, அவர் எதிர் பார்க்கவில்லை புலிகளின் அழிவு ஐரோப்பிய தேர்தலுக்கு முன்னாலே ஆகுமென்று!

  Reply
 • rohan
  rohan

  கொன்ஸ்ரன்ரைன் எழுதிய இந்த அலசல் எனக்கு மிக்க ஏமாற்றம் தந்திருக்கிறது. இது ஒரு நடு நிலைமையான குறிப்பாக இல்லாது ஒரு பக்கம் சார்ந்த நையாண்டியாக இருக்கிறது.

  இப்படித் தான் எழுத வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் இந்த மாதிரி எழுதுவதானால் ஊடகவியலாளர் – நடுநிலைமை என்ற தொப்பிகளைக் களைந்து வீசி விட்டு சேற்றில் இறங்குங்கள்.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  உதைத்தானே நான் ஏற்கனவே இரண்டு பாட்டில்கள் மீது சத்தியம் செய்து “வருவா ஆனால் வரமாட்டா” என்று அடித்தக் கூறினேன். அதாவது அம்மணி வாக்களிக்க “வருவா” ஆனால் வென்று “வரமாட்டா” என்பதையே சொன்னேன். அது இப்போது நடந்துள்ளது. அதற்காக பாடுபட்ட இலண்டன் வாழ் என் இனிய தமிழ் மக்களே உங்கள் முன் ஒரு தொண்டனாக உங்களுக்கு வாழ்த்துகள் கூறுவதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.

  Reply
 • BC
  BC

  மிகச்சரியான கருத்துக்கள்.
  //ஜனனி ஜனநாயகம் எவ்வகை?//
  சமாதான காலத்தில் “போரை தொடங்கு தலைவா” என்று கேட்டவர்களின் வகையை சேர்ந்தவர்.

  Reply
 • Segar Chandramohan
  Segar Chandramohan

  Am I right in saying that, if the 50000 votes went to Labour, Robert Evans may have been reelected?. Now LTTE supporters split the labour votes and lost one their strong voice in Robert Evans.
  Looks like a lack of forecsight….

  Reply
 • தாழவெட்டுவான்
  தாழவெட்டுவான்

  மொத்தமாக ஒரு பெண் தோல்வியடைந்தால் எவ்வளவு சந்தததோசமாக ஆண்கள் கூட்டத்துக்கு. விஸ்கியடித்துக் கொண்டு சனநாயகம் பேசும் ஆண்கள் உங்கள் கொள்கைக்கு ஏத்த மாதிரி தேர்தலுக்கு நிக்ககக் கூட வக்கில்லை. வக்கிருந்தால் 50014 வோட்டு வேண்டாம் 5000 வோட்டு எடுத்துக்காட்டுங்ளேன்

  Reply
 • Thalai Aaddi
  Thalai Aaddi

  50, 014 Votes.

  Can you win that? No!

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  //முருகானந்தன், ஒரு பேப்பர் கோபி, பற்றிமாகரன், ராஜாமனோகரன், மற்றும் வெற்றுவாய் அரசியல் ஆய்வாளர்களின் அரசியல் சித்தாந்தங்களை நம்பியும் தீபம் ஜிரிவி ஐபிசி ஒரு பேப்பர் ஈழமுரசு போன்ற ஜால்ரா ஊடகங்களை//

  றோகன்
  மேலே உள்ளவர்கள் செயற்பட்டது மட்டும் ஜனநாயகமாக தங்களுக்குத் தெரிகின்றதா?? தமிழர்கள் தலையிலேயே மிளகாய் அரைத்து அவர்களை முட்டாள்கள் ஆக்க நினைக்கும் இவர்களின் முகத்திரைகளை இனம் காட்டும் கொன்ஸ்ரன்ரைனின் இக்கட்டுரை இன்றைய காலத்தின் தேவை.

  Reply
 • ross
  ross

  ஒரு தமிழரின் தோல்வியில் சந்தோசப் படும் ஈனப் பிறவிகள்.
  காழ்ப்புணர்சியின் கொடிய வடிவம். எப்பதான் திருந்த போகிறிங்களோ?

  கொன்ஸ்ரன்ரைன்: வக்கிருந்தால் 50014 வோட்டு வேண்டாம் 50 வோட்டு எடுத்துக்காட்டுங்களேன்.

  Reply
 • BC
  BC

  Tamil, இந்த 50014 பேர்களை இன்னும் தெளிவடையாமல் வைத்திருப்பவை தீபம், ஜிரிவி, ஐபிசி, ஒரு பேப்பர், ஈழமுரசு போன்ற ஊடகங்கள் தான்.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  இங்கே ஒரு பெண் தோற்று விட்டாரென்று எவரும் மகிழ்ச்சியடையவில்லை. மீண்டும் தமிழர்களை ஏமாற்ற முயற்ச்சித்தவர்கள் மண்ணைக் கெளவியுள்ளார்கள். அது தான் சந்தோசத்திற்கு காரணம். 50014 வாக்குகள் பெற்றுள்ளாரே என்று பாராட்டுவோர் ஒன்றை மறந்து விட்டீர்கள்.இவருக்கு செய்யப்பட்ட பிரச்சார முன்னெடுப்புகள்(எத்தனை ஊடகங்கள் எத்தனை ஆய்வாளர்கள் எத்தனை பிரச்சாரகர்கள் எத்தனை விளம்பரங்கள்) பணச்செலவுகளை இன்னொருவருக்கு செய்திருந்தால் அவர் வெற்றிக்கனி பறித்திருப்பார். ஆனால் ஜனனிக்கு குளி பறித்ததே அவர் போட்ட புலி வேசம் தான். மக்களை இன்னும் முட்டாள்களாக நினைத்திருப்போருக்கு இது ஒரு படிப்பனை.

  Reply
 • tax
  tax

  ஒரு ஜனநாயகநாட்டில் ஜனநாயகம் 50000ஆயிரம் வாக்குகள் பெற்று இருக்கிறார். ஆனால் சில ஆயிரம் வாக்குகள் பெற்றூ அமைச்சரான தேவானந்தாவுக்கும், சில ஆயிரம் வாக்கு பெற்று தோற்றுப்போன சங்கரியிலும் பார்க்க ஜனநாயகம் எவ்வளவோ மேல்….அதிலும் மிக குறுகியகால அறிவிப்பிலும் அத்துடன் சேர்த்து புலித்தலைமை தொடர்பான இழுபறி விரக்தி காரணமாகவுமே இந்த தோல்வி ஏற்பட்டது என்பது எனது கருத்து. ……
  ஜனனி ஜனநாயகம் தனது 5000 பவுண் கட்டுப்பணத்தைத் தக்க வைத்துக் கொண்டார். ….. மிஸ்ரர் கொன்சன்ரைன் இந்த ஜனனி ஜனநாயகத்தின் தனிப்பட்ட ஆண்டு வருமானம் என்னவெனத் தெரியுமா…………

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  //இந்த ஜனனி ஜனநாயகத்தின் தனிப்பட்ட ஆண்டு வருமானம் என்னவெனத் தெரியுமா………… – tax //

  இவர் புலிப்பினாமியாகவிருந்து சுருட்டியதையும் சேர்த்து கேட்கின்றீர்களா?? அல்லது அவரின் தனிப்பட்ட வருமானத்தை மட்டும் கேட்கின்றீர்களா??

  Reply
 • ross
  ross

  கொன்சன்ரைன்,
  Jan Jananayagam is from a well-educated family. She is a Professional and already in her Top level as a Professional. She already achieved more than enough in her Life. She already earned more than enough. She doesn’t need any Politics to get any money or get famous.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  ஏற்கனவே நிராஜ் டேவிட் என்ற சிங்கள வேட்பாளர் இந்தளவு பிரச்சார பலமோ, பணபலமோ இல்லாமல் வெற்றியீட்டிதை பலர் இங்கு மறந்து விட்டு கதையளக்கின்றனர். முன்பு வணங்கா மண் போனாலும் வெற்றி, போகாவிட்டாலும் வெற்றி என்றனர். அந்த வகையில் எனி தோற்றாலும் வெற்றி என கதை விடுகினம் போல விழுந்தாலும் மீசையிலை மண் படவில்லை என்பது போல.

  Reply
 • watch
  watch

  Segar Chandramohan
  Don’t you know that Robert Evans didn’t stand in this EU Election?
  You are here to just to criticize the LTTE? Aren’t you?

  Reply
 • thevi
  thevi

  ஐயே! ரக்ஸ் என்ன பேச்சு பேசுகிறீர்கள்? வட கிழக்கில் வாக்குப் போடடவருக்கு விரல் வெட்டுகிற “ஜனநாயக” சூழலில் ஒரு வாக்கு கூட மிகப் பெறுமதியானது. அப்படிப் பார்க்கையில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கிடைத்த வாக்குகளின் மதிப்பு அதிகமானது. ஜனனியின் சூழலோடு இங்கு ஒப்பிடுவது வெறும்காழ்ப்புணர்ச்சியாகும். இதுவொன்றும் நமக்கு புதியதல்ல.

  Reply
 • palli.
  palli.

  ஜனனி தோற்று விட்டார் என்பது யாருக்கும் மகிழ்வு தராது; இது கூட ஒரு வகையில் ஏமாற்றம்தான்; தோற்று விடுவார் என்பது எமது கருத்தாக இருந்தது; இவர் தேர்தலில் நின்றதால் இவரை நாம் விமர்சிக்க வில்லை; இவர் தேர்தலுக்காக எடுத்த ஆயுதமான (தமிழர் தமிழர் தமிழர்) இதுவரை தமிழருக்கு எதை கிழித்தார்;எனி என்ன கிழிக்க போகிறார் என பார்த்தால் இவரை நாம் ஏன விமர்சித்தோம்; இனி ஒருதரம் தமிழரை வைத்து யார் வியாபாரம் செய்தாலும் அவர்கள் முகமூடி கிழிக்கபடும்: அந்த வகையில் ஜனனி முதல் இடத்தில் இருக்கிறார்; 50ஓட்டாவது எடுத்து காட்டுங்கள் இது சிலரது ஏக்கம்(முதல்வன் படத்தில் ரகுவரன் நாயகனிடம் கேக்கும் கேள்வி இது) 50 என்றால் என்ன 500000 என்றால் என்ன தோல்வி தோல்விதானே; இதில் என்ன குலைப்பு வேண்டி இருக்கு;

  பார்த்திபன் சொன்னது போல் எமது போராட்டத்துக்கும் சரி ஜனனியின் தோல்விக்கும் சரி புலி பினாமிகளே காரனம்; எனி வருங்கலங்களில் புலி வியாபாரிகள் ஜனனிபோல் பலரை மறைமுகமாக தமது பருப்பு அவிவதற்க்காக எங்கெல்லாம் கடைபோட முடியுமோ அங்கேல்லாம் ஆடுவார்கள்; நாமும் அவர்கள் முகம் காட்ட முயல்வோம்; ஆகையால் வியாபாரிகள் கப்பலும் இப்பொது அரசுடன் இனைந்து செயல்பட போவதாக கொழும்பு செய்தி; எண்ணிக்கை முக்கியமல்ல எமது நல்ல எண்ணங்களே எம் சமுதாயத்துக்கு தற்போதய தேவை: ஜனனிக்கு அவரது முயற்ச்சிக்கும் அவர் பெற்ற வாக்குகளுக்கும் பல்லியின் வாழ்த்துக்கள்;

  Reply
 • Tamil
  Tamil

  இந்த 50014 வீணாய்போன வாக்குகளையும் மிகுதி தமிழ் மக்களின் வாக்குகளையும் இந்த புலிப் பிரசார ஊடகங்கள் இங்குள்ள எமது எதிர்கால சந்ததியினரின் நலன்களைக் கருத்தில் கொண்டு சரியான முறையில் பயன்படுத்தியிருந்தால் இன்று BNP போன்ற இனவாத கட்சி 2 ஆசனங்கள் பெறுவதை தவிர்த்தலுக்கலாமே!

  Reply
 • rohan
  rohan

  //வட கிழக்கில் வாக்குப் போடடவருக்கு விரல் வெட்டுகிற “ஜனநாயக” சூழலில் ஒரு வாக்கு கூட மிகப் பெறுமதியானது.//

  இந்த விரல் வெட்டு – கை வெட்டு – ‘செய்தி’அவ்வப்போது வந்து போகும். ஆனால் இந்த செய்தி முதலில் வந்தபோது நானும் கொஞ்சம் விசாரித்துப் பார்த்தேன். எனக்குக் கிடைத்த தகவல்கள் அப்படி ஏதும் நடைபெறவில்லை என்றே சுட்டின. விரல் வெட்டு நடந்தமைக்கான ஆதாரம் ஏதும் உண்டா?

  Reply
 • BC
  BC

  ஜனனி ஜனநாயகம் ஜனநாயகநாட்டில் 50014 வாக்குகள் பெற்றுள்ளார்.ஆனால் டக்ளஸ் தேவானந்தா ஜனநாயகம் என்றால் என்ன என்று கேட்கும் புலி சூழலில் அந்த வெற்றியை பெற்றார்.அவரின் வெற்றி உயர்வானது.

  Reply
 • Segar Chandramohan
  Segar Chandramohan

  Hi Watch
  Thanks for correcting me. That’s just a thought came in my mind, that’s why I put a question “Am I right in saying…?”
  My wider point is we should identify which of the main parties will support our cause (not a seperate state)and strenghten that party rather than pave way for the extremist elements by spliting the votes.

  Reply
 • rohan
  rohan

  //ஏற்கனவே நிராஜ் டேவிட் என்ற சிங்கள வேட்பாளர் இந்தளவு பிரச்சார பலமோ, பணபலமோ இல்லாமல் வெற்றியீட்டிதை பலர் இங்கு மறந்து விட்டு கதையளக்கின்றனர். //

  மிக்க நல்லது.
  நேஜ் (நிரஞ்சன்) தேவா (தேவாதித்ய – டேவிட் அல்ல) பின்னணியையும் பார்த்து விட்டு பின்னோட்டம் விடுவது நல்லது.

  முன்னதாக கொன்சவேற்றிவ் கட்சி சார்பில் பொதுத் தேர்தலில் நின்றவர் இவர். தம் ஆசியப் பின்னணியையும் தமது கறுப்பர் என்ற முத்திரையையும் கொன்சவேற்றிவ் கட்சியின் பாரம்பரிய வாககுகளையும் மாத்திரமன்றி தமது மனைவியின் மொறிஷியஸ் பின்னணியையும் கொண்டு கணிசமான வாக்குகள் பெற்றமை பரந்த மட்டத்தில் இவரால் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை கொன்சவேற்றிவ் கட்சிக்குத் தந்திருந்தது.

  கட்சி சார்பில் போட்டியிடும் போது தனிப்பட்ட அளவில் அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை. முதல் தடவை போட்டியிடும் தனி (சுயேச்சை) வேட்பாளர் அப்படி விட்டு விட முடியாது.

  Reply
 • x anti tigge
  x anti tigge

  மக்கள்(not only tamils) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது இதை ஏன் ஏற்க்க மறுக்கிறீர்கள் எங்கே உங்கள் ஜனநாயகம்- மக்கள் அமைப்பு மக்களுக்காக மக்களால் என்றெல்லாம் புலிகளும் புலிகளின் ஆதரவாளர்களும் பேசியது எவ்வளவு பம்மாத்து என்பதை இப்போது இந்த தேர்தல் நிரூபித்துள்ளது. புலிகளும் இதேமாதிரித்தான் மக்களின் தீர்ப்பை ஏற்கமுடியாதவர்கள் அதே பாணியில் இன்று 92எப் எம் ரேடியோவிலும் புலிஆதரவாளர்களின் கருத்துக்கள் வெளிவந்ததையும் அந்த அறிவிப்பாளர் கூட இது மக்களின் தீர்ப்பு என்பதை விளங்காமல் புலிப்பாணியில் வாக்காளர்களை திட்டீத் தீர்த்தனர்.

  இவர்கள் தோல்வியையும் மக்களுக்காக மாற்றத் தெரியாதவர்கள் தாம் தோற்பது நிச்சயம் என்றாலும் வாக்களித்தவர்கள் தமது ஆதரவாளர்கள் என்பதை மறந்து செயற்ப்படுவது என்பது வாக்களித்தவர்களை ஏமாற்றிவிட்டு ஏதோ செய்யும் பாணியுடையவர்கள் என்பதையும் நிரூபித்துள்ளார்கள். இவையாவும் புலிப்பாணியிலான வேசங்களே இது போராட்டத்திற்கு உதவாத ஏட்டுச்சுரக்காய்களே இவர்கள் மக்களால் தோற்கடிக்கப்படுவது நிச்சயம்.

  மக்களின் (not only tamils) தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். அதைவிட்டுவிட்டு வாக்களிக்காதவர்களை துரோகிகள் என்று சொல்லி சமூக விரோதியாக்காதீர்கள். ஜனனி பேசும்போது மாற்று இனத்தவர்களும் வாக்களித்தால் மட்டுமே வெல்ல முடியும் என்றும் பேசியிருந்தார்.

  மாற்று இனத்தவர்களும் வாக்களித்தால்தான் வெற்றி வந்திருக்கும் என்று ஜனனிக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் மாற்று இனத்தவர்களை நோக்கி அவர்களின் தேவைகளை நோக்கிய அணுகுமுறைகள் என்னத்தை ஜனனி செய்தவவென்று போய்க் கேளுங்கள் கட்டுரரையாளனைத் திட்டுவதை தவிர்த்து. புலிகளினதும் ஆதரவாளர்களினதும் பார்வையின்படி நோக்கின் லண்டன்வாழ் மாற்று இனத்தவர்களே துரோகிகள்.

  Reply
 • thevi
  thevi

  விரல் வெட்டு நடந்தமைக்கான ஆதாரம் ஏதும் உண்டா?”

  அப்போது பணிபுரிந்த கண்காணிப்பு குழுவினரின் முறைப்பாட்டு ஆவணங்களில் தேடினால் கிடைக்கும்.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  //நேஜ் (நிரஞ்சன்) தேவா (தேவாதித்ய – டேவிட் அல்ல) பின்னணியையும் பார்த்து விட்டு பின்னோட்டம் விடுவது நல்லது.- rohan//

  நான் குறிப்பிட்ட பெயரில் தவறிருக்கலாம். முக்கியமாக நான் குறிப்பிட விரும்பியது ஒரு சிங்கள வேட்பாளர் வெற்றியீட்டியிருப்பதையே. ஒரு கட்சி சார்பாக போட்டியிடும் போது கட்சியின் ஆதரவும் கிடைக்கும் என்பது மட்டுமல்ல, வெற்றியீட்டினால் அந்தக் கட்சியை வைத்தே பல விடயங்களையும் சாதிக்கலாம். ஆனால் சுயேட்சையாகப் போட்டியிடுபவருக்கு இந்த வாய்ப்புகள் அதிகமில்லை என்பது வேட்பாளருக்கோ, அவருக்கு ஆதரவளித்தவர்களுக்கோ புரியாதிருந்தது என்று சொல்ல வாறீர்களா?? அத்தோடு ஒரு சிங்கள வேட்பாளரால் பரந்துபட்ட ஆதரவு தமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்ததால்த் தான் கொன்சவேற்றிவ் கட்சியின் வேட்பாளராக அவரால் முடிந்துள்ளது என்கின்றீர்கள். அந்தக் கண்ணோட்டத்தோடு பார்த்தால் ஜனனி ஜனநாயகத்தினால் எந்தவித பிரயோசனமும் இல்லையென்பதை வெள்ளைகள் உணர்ந்தனால்த் தான் எந்தவொரு கட்சியும் அவவிற்கு ஆதரவளித்து தமது கட்சி வேட்பாளராக்க முன்வரவில்லை என்று எடுக்கலாமா?? மொத்தத்தில் வெள்ளைகளுக்கு உள்ள தெளிவு கூட எமது “புலன்” பெயர்ந்த புண்ணாக்குகளுக்கு இல்லை என்கின்றீர்கள் போல.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  அதுசரி பிரான்ஸிலும் புதுச்சேரியை சேர்ந்த ஒருவர் புலிவேசம் கட்டிக் களம் புகுந்தார். அவர் நிலை என்னானது??

  Reply
 • rohan
  rohan

  //ஒரு கட்சி சார்பாக போட்டியிடும் போது கட்சியின் ஆதரவும் கிடைக்கும் என்பது மட்டுமல்ல, வெற்றியீட்டினால் அந்தக் கட்சியை வைத்தே பல விடயங்களையும் சாதிக்கலாம். ஆனால் சுயேட்சையாகப் போட்டியிடுபவருக்கு இந்த வாய்ப்புகள் அதிகமில்லை என்பது வேட்பாளருக்கோ, அவருக்கு ஆதரவளித்தவர்களுக்கோ புரியாதிருந்தது //

  இங்கிலாந்தில் இல்லாத என்னால் அங்குள்ள நிலைமை பற்றி முழுமையாகக் கூற முடியாது. இருந்தாலும், பொதுவான கருத்து ஒன்றைச் சொல்ல வேண்டும்.

  அங்கொன்றும் இங்கொன்றுமாக, சில தமிழர்கள் புலம் பெயர்ந்த பூமியில் தேர்தல்களில் இறங்குகிறார்கள். சில உள்ளூராட்சி சபைகளில் அவர்கள் சில வெற்றிகளையும் கண்டுள்ளார்கள். ஆனாலும், உரிய முறையில் கட்சி நடவடிக்கைகளில் தமிழர்கள் ஈடுபடுவதில்லை. அடிப்படை உறுப்பினராக இணைந்து, கட்சி வேலை செய்து மற்றைய தமிழர்களையும் அவ்வப்போது இணைத்து கட்சியினதும் உள்ளூர் வாக்காளர்களினதும் நம்பிக்கைகளை இவர்கள் சம்பாதிப்பதில்லை.

  இந்தியாவில் பிறந்த ஒரு சீக்கியர் கனடாவின் ஒரு மானிலத்தின் முதல்வராக வர முடிகிறது. இந்தியப் பின்னணி கொண்ட ஒரு பிஜியரால் நியுசிலாந்தின் கவனர் ஜெனரலாக வர முடிகிறது. ஒரு சிங்கள்வரால் அவுஸ்திரேலியாவின் மாநிலம் ஒன்றில் பிரதிநிதியாக வர முடிந்திருக்கிறது. அதே மாநிலத்தில் தமிழர் ஒருவரும் முன்னர் தேர்தலில் போட்டியிட்டிருந்தாலும் வெல்லவில்லை என்றும் அறிந்தேன்.

  சும்ம அமர்ந்திருப்போரை எந்தக் கட்சியும் கூப்பிட்டு ஆசனம் தராது. வாக்குப் பலம் கொணட அரபு மற்றும் சீனப் பின்னணியினரே இன்னமும் வெள்ளை நாடுகளின் அரசியலில் ஆழமாக உள்வாங்கப்படவில்லை (இவர்களுக்கு ஜனநாயகப் பின்னணி இல்லை என்பது காரணமல்ல). வலதுசாரி அல்லாத கட்சிகள் ஆசியர்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு, அவரகள் வலதுசாரிக் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

  எனது தகவல்கள் ஜனனி ஜனநாயகம் இறுதி நிமிடத்திலேயே களம் இறங்கியதாகச் சொல்கின்றன. அப்படி ஒருவர் இத்தனை வாக்குகள் வாங்கியிருப்பதன் மூலம் அரசியல் கட்சிகளுக்கு ஒரு கவர்ச்சி மிக்க இலக்காகக் காணப்படுவார் என்பதே என் அனுமானம்.

  குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும்போது எத்தனை தடவைகள் விழுகின்றன? பெற்றோரும் உறவினரும் விழுந்த குழந்தையைக் கை தட்டிப் பாராட்டுகிறார்கள். கை தூக்கி ஊக்குவிக்கிறார்கள். உட்கார்ந்திரு என்று கை வண்டியுடன் நடந்திருக்கலாமே என்று கெக்கலி கொட்டி நகையாடுவதோ நன்றாகவா இருக்கும்.

  முழுக் கருத்துக்கும் நான் மறு கருத்து சொல்ல வரவில்லை – தூங்குபவர்களை எழுப்பலாம் ஆனால்….

  Reply
 • ragu
  ragu

  //ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றிலேயே, ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு இவ்வளவு வாக்குகள் இதுவரை கிடைத்ததில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் ஜனனி வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

  இங்கிலாந்தைச் சேர்ந்த சில கட்சிகளின் வேட்பாளர்களை விட ஜனனி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அனைத்து சுயேச்சை வேட்பாளர்களும் மொத்தமாக பெற்ற வாக்குகளை விட 2 மடங்கு அதிக வாக்குகளையும் ஜனனி பெற்றுள்ளார்//

  Reply
 • Mohamed
  Mohamed

  Oh my God!
  JJ’s political advisors and media analysts pls. tell the Tamils about your big idea behind her contest in the EP election. Are you all realy think that you have at least some knowledge of this entire EU business. Why don’t you all start reading basic political book like “civic” book, which was in usage in then Ceylon in mid 1960s to familiarise with basic politics. JJ and the advisors are very very small for this big politics. Believe me I can’t imagine how come such persons, who have some social recognition, are so politically illiterate in this society,which produced people like Pro. Nilan Thiruchelvam of University of Harvard.

  Reply
 • மேளம்
  மேளம்

  எது எப்படி இருந்தாலும்… ஒரு தமிழிச்சி… அதுவும் ஒரு யாழ் மேட்டுக்குடியாள்.. ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில்… தனியே தமிழர்கள் எல்லாம் புலிகள்…. புலிகளெல்லாம் தமிழர்கள்… கோசம் கொண்ட தனித்தமிழரை(புலித்தமிழரை) நம்பி வேட்பாளராகக் களம் இறங்கி… 50.000க்கு மேற்பட்ட வாக்குகள் பெற்றுள்ளா.. இதற்கு மேளத்தின் மேளஒலிகள். இருந்தும் இங்கிலாந்தில் மட்டும் வாக்குரிமையுள்ள…. 50.000க்கு மேற்பட்ட தனித் தமிழ் ஈழ கனவு காண்போர் இன்னும் இருக்கிறார்களே என்பதை எண்ணும்போது தமிழன் திருந்தவே மாட்டான்… மேளமடித்து விடைபெறும்.

  மேளம்

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  //இந்தியாவில் பிறந்த ஒரு சீக்கியர் கனடாவின் ஒரு மானிலத்தின் முதல்வராக வர முடிகிறது. இந்தியப் பின்னணி கொண்ட ஒரு பிஜியரால் நியுசிலாந்தின் கவனர் ஜெனரலாக வர முடிகிறது. ஒரு சிங்கள்வரால் அவுஸ்திரேலியாவின் மாநிலம் ஒன்றில் பிரதிநிதியாக வர முடிந்திருக்கிறது.- rohan //

  இங்கு வெற்றியீட்டியவர்கள் கனடாவில் தேர்தலில் நின்று கொண்டு, இந்தியாவிலோ அல்லது பிஜியில் பிரைச்சினைகளைத் தீர்க்கப் போகின்றோமென கோசம் போடவில்லை. தேர்தலில் நின்ற சீக்கியர் தான் காலிஸ்தான் பெற்றுக் கொடுப்பேனென்று போட்டியிடவில்லை. போட்டியிட்ட சிங்களவர் தான் வெற்றியீட்டினால் புலிகளை அழித்தொழிப்பேனென்று வாக்குக் கேட்கவில்லை. முக்கியமாக இவர்கள் எல்லோரும் தாம் வாழும் நாட்டின் மக்களின் பிரைச்சினைகளைத் தீர்த்து வைப்போமென்றே வாக்குகளைச் சேகரித்தனர். வாக்குப் போட்டவர்களும் வேட்பாளர் வெற்றி பெற்றால் தமக்கு என்ன பலன் கிடைக்குமென்பதை, கூட்டிக் கழித்துப் பார்த்தே வாக்களித்தனர்.

  //எனது தகவல்கள் ஜனனி ஜனநாயகம் இறுதி நிமிடத்திலேயே களம் இறங்கியதாகச் சொல்கின்றன. அப்படி ஒருவர் இத்தனை வாக்குகள் வாங்கியிருப்பதன் மூலம் அரசியல் கட்சிகளுக்கு ஒரு கவர்ச்சி மிக்க இலக்காகக் காணப்படுவார் என்பதே என் அனுமானம்.- rohan//

  இதைத்தான் சொல்லுவார்கள் முழுப்பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் முயற்சியென்று. மாதக் கணக்காக அளவிற்கதிகமான பிரசாரங்கள், விளம்பரங்கள், பணம் தண்ணீராக இறைக்கப்பட்டு யாவும் முடிந்த பின் இறுதி நிமிடத்தில் களமிறங்கினாரென யார் காதில் பூச் சுற்றுகின்றீர்கள்.

  //குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும்போது எத்தனை தடவைகள் விழுகின்றன? பெற்றோரும் உறவினரும் விழுந்த குழந்தையைக் கை தட்டிப் பாராட்டுகிறார்கள். கை தூக்கி ஊக்குவிக்கிறார்கள். உட்கார்ந்திரு என்று கை வண்டியுடன் நடந்திருக்கலாமே என்று கெக்கலி கொட்டி நகையாடுவதோ நன்றாகவா இருக்கும்.- rohan//

  குழந்தை நடக்கப் பழகும் போது தடுக்கி விழுவதை, யாரும் நையாண்டி பண்ண மாட்டார்கள். ஆனால் ஒழுங்காக நடக்கத் தெரியாத குழந்தை தான் ஒலிம்பிக்கில் ஓடப் போகின்றேனென்று படம் காட்டி விழுந்தால் என்ன செய்வது??

  //தூங்குபவர்களை எழுப்பலாம் ஆனால்….- rohan//
  இப்போது தான் உங்களை நீங்களே அடையாளம் கண்டுள்ளீர்கள்.

  Reply
 • மாயா
  மாயா

  ஈழப் பிரச்சனை தொடர்பாக ஜனனி பேசி வந்தார். எனவே இவருக்கு புலிகளின் அலையில் இருந்து வாக்குகள் கிடைத்துள்ளன. அவர் தோல்வியுற்றாலும் , அவரது முயற்சி வரவேற்கத்தக்கது. இருந்த போதும் தமிழர்கள் தொடர்பாக பேசுபவர்கள் தோற்கும் நிலைக்கு இவர்களது அரசியல் பிரவேசம் அமைவது வருத்தமானது. எமக்காக பேசும் வெள்ளை இனத்தவரின் வாக்குகள் இவருக்கு உடைந்து சென்றதை நோக்க முடிகிறது. இதனால் எமக்காக பேசிய குரல் ஒன்று குறைவடைந்து விட்டது. இவர்கள் , தமிழருக்காக குரல் கொடுப்பவர்களுக்காக களம் இறங்கியிருக்கலாம். அது இன்னும் அதிக பலத்தையும், வாழும் நாட்டு மக்களது நன் மதிப்பையும் பெற்றுத் தந்திருக்கும்.

  // Segar Chandramohan on June 8, 2009 8:43 am Am I right in saying that, if the 50000 votes went to Labour, Robert Evans may have been reelected?. Now LTTE supporters split the labour votes and lost one their strong voice in Robert Evans.
  Looks like a lack of forecsight….//

  இங்கே அந்த அவலத்தை உருவாக்கியுள்ளோம். மிக முக்கியமாக தமிழர்கள் தனியாக ஒதுங்கி வாழ்ந்தே பழகியுள்ளார்கள். அது ஆதிகால இலங்கையில் இருந்தே தொடங்குகிறது. இலங்கையின் இனக் கட்சிகளின் உருவாக்கம் தமிழரிலிருந்தே தொடங்குகிறது. தனித்து போட்டியிடுவதை விட இங்குள்ள தமிழருக்கு சார்பான ஒரு கட்சியோடு இணைந்து போட்டியிடுவது அதிக பலனை பெற வழி செய்யும் என்பது எனது நம்பிக்கை.

  வெற்றியோ? தோல்வியோ? இவரது முயற்சி பாராட்டத்தக்கது. ஆனால் இவரது வழியில்தான் இவர் சறுக்கியுள்ளார். அதை மறுபரிசீலைனைக்கு உட்படுத்தலாம். அது நல்லதொரு எதிர்கால அரசியல் தளத்தில் இவரை நிறுத்தும். திரளும் கூட்டத்தில் உள்ளவர்கள் அனைவரும் நமது ஆதரவாளர்கள் இல்லை என்பதை இதிலிருந்து பலரும் உணர வேண்டும். ஆதரவாளர்களை விட எதிர்தரப்பினர்கள் என்ன நடக்கிறது என கூட்டங்களுக்கு அதிகமாக போவது பலரும் உணராத உண்மை.

  Reply
 • Tamil
  Tamil

  //தனித்து போட்டியிடுவதை விட இங்குள்ள தமிழருக்கு சார்பான ஒரு கட்சியோடு இணைந்து போட்டியிடுவது அதிக பலனை பெற வழி செய்யும் என்பது எனது நம்பிக்கை – மாயா//

  இது இங்கு இங்கிலாந்தில் மட்டுமல்ல இலங்கை அரசியலுக்கும் சாலப்பொருந்தும். தேசியவாதம் பேசுவதை விட்டு ஐக்கிய இலங்கைக்குள் ஜனநாயக உரிமைகளை பெற உழைக்கும் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவது பற்றி சிந்தியுங்கள்…

  Reply
 • thevi
  thevi

  “இது இங்கு இங்கிலாந்தில் மட்டுமல்ல இலங்கை அரசியலுக்கும் சாலப்பொருந்தும்”

  இங்கிலாந்தில் இனப்பிரச்சனை கொழுந்து விட்டு எரிகிறதா? எதிர்க் கடசிகள் இனவாதம் கக்குகின்றனவா? எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கை இங்கிலாந்து அளவிற்கு ஜனநாயக பண்பாடுகளை மக்களுக்கான உரிமைகளை கடைப்பிடித்தா ஆட்சி செய்கிறது? எத்தனை வருடமாக அவசரகாலச் சட்டம் இலங்கையில் இருக்கிறது?

  இலங்கைத் தமிழர்களுக்கு ஐக்கிய இலங்கைக்குள் வாழ விருப்பம்தான். அவர்களை புறக்கணக்கத் தக்கவர்களாக கீழ்மைப்படுத்தி நடத்த இலங்கை நிர்வாகம் முற்படுவதே தமிழர்களின் பிரச்சனையாகும். தமது மொழி பிரதேசம் மற்றும் சிவில் உரிமைகள் அரசியல் சாசனத்துள் எழுதி வைக்கப்பட வேண்டும் என முன்னரை விட இப்போது அதிகமாக தமிழர்கள் உணர தலைப்பட்டுள்ளனர். சிங்கக் கொடியை தமக்கு பலவந்தமாக திணிக்க முடியாது எனவும் இலங்கையில் தாம் பாதுகாப்பாக வாழ முடியும் என்ற நம்பிக்கை வந்தாலே சிங்கக் கொடியும் தமக்கு தேசியக் கொடியாகும் என உணருகின்றனர்.

  Reply
 • watch
  watch

  http://news.bbc.co.uk/1/hi/uk_politics/8089744.stm

  This is her success.

  Reply
 • Tamil
  Tamil

  // எத்தனை வருடமாக அவசரகாலச் சட்டம் இலங்கையில் இருக்கிறது – thevi //
  ஏத்தனை வருடகாலமாக இலங்கையில் துப்பாக்கிகள் ஆட்சி செய்கிறது (அரசு தவிர்ந்த) ?

  // தமது மொழி பிரதேசம் மற்றும் சிவில் உரிமைகள் அரசியல் சாசனத்துள் எழுதி வைக்கப்பட வேண்டும் என முன்னரை விட இப்போது அதிகமாக தமிழர்கள் உணர தலைப்பட்டுள்ளன – thevi //

  நீங்கள் எந்த தமிழரைப் பற்றி இங்கு குறிப்பிடுகிறீர்கள்! நீங்கள் கூறும் “தமிழ் உரிமைகள்” கோரிக்கை எழுபதுகளில் தமிழ்/சிங்கள இடதுசாரி கட்சிகளின் வளர்ச்சியை ஏற்க முடியாமல் யாழ் மேட்டுக் குடியினரால் முன் வைக்கப்பட்டதொன்றே. அது இன்று புலம் பெயர்ந்து வாழும் அவர்களால் புதுப்பிக்கப்படுகிறது…
  இலங்கை வாழ் தமிழ் மக்களின் இன்றையவும், குறைந்தது வரும் ஐந்து தொடக்கம் பத்து வருடங்களுக்கான தேவை அவர்களது இளந்த அன்றாட தேவைகளை மீளக் கட்டி எழுப்புவதே…!

  Reply
 • thevi
  thevi

  “நீங்கள் எந்த தமிழரைப் பற்றி இங்கு குறிப்பிடுகிறீர்கள்!” –tamil-

  நிச்சயமாய் இலங்கையில் வாழும் தமிழர்களைத்தான் குறிப்பிடுகின்றேன்.

  ஏத்தனை வருடகாலமாக இலங்கையில் துப்பாக்கிகள் ஆட்சி செய்கிறது ”

  முப்பது வருடமாக துப்பாக்கிகளை நீடிக்க விட்டவர்கள் யார்? இன்று மகிந்த அரசு செய்தததை முன்னம் ஆடசியில் இருந்தவர்களால் செய்ய முடியாமலா இருந்திருக்கும்? இந்த வெற்றி நீடிக்க வேண்டுமாயின் தமிழ் மக்கள் தாம் சமமானவர்கள் என விரைவில் உணருதல் வேண்டும். அரசு அதற்கேற்ப நேர்மையாக நடக்க வேண்டும்.

  இரண்டு இனங்களும் அமைதியான வாழ்விற்கு திரும்பினால் கால்ப்போக்கில் ஐக்கியப்பட்டு நீங்கள் குறிப்பிடுகின்ற இடதுசாரிய வழிகளில் போராடுவார்கள்.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  //எமக்காக பேசும் வெள்ளை இனத்தவரின் வாக்குகள் இவருக்கு உடைந்து சென்றதை நோக்க முடிகிறது. இதனால் எமக்காக பேசிய குரல் ஒன்று குறைவடைந்து விட்டது. இவர்கள், தமிழருக்காக குரல் கொடுப்பவர்களுக்காக களம் இறங்கியிருக்கலாம். அது இன்னும் அதிக பலத்தையும், வாழும் நாட்டு மக்களது நன் மதிப்பையும் பெற்றுத் தந்திருக்கும்.- மாயா //

  உங்கள் கருத்தோடு நான் முழுதுமாக உடன்படுகின்றேன். சமீபத்தில் நான் அறிந்த செய்திகளின் படி பல விடயங்கள் திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளன. ஜனனி ஜனநாயகத்தைச் சிலர் தமது சொந்த சுயலாபத்திற்காக போட்டியிட வைப்பது என்று ஏற்கனவே முடிவெடுத்து, அவர் வேட்புமனு தாக்கல் செய்து மறுநாள்வரை இச்செய்தியை வெளியிடவேயில்லை. முழுக்க ஜனனி வெல்ல முடியாதென்று தெரிந்தும், அவரை தேர்தலில் போட்டியிட வைத்தன் நோக்கம் ஏற்கனவே வன்னி மக்களுக்கான நிதி என்று சேர்த்த பணத்தை, இந்த தேர்தல் செலவுகணக்கில் காட்டி சமன் செய்யும் நோக்கத்துடனேயே. வன்னி மக்களுக்காக சேர்த்த பணத்தை ஜனனியின் தேர்தலுக்காக பாவிக்க இவர்களுக்கு யார் அனுமதி அளித்தது?? இனி இவர்கள் விரும்பியபடி செலவைக் காட்டி கணக்கைச் சமன் செய்வார்கள்.

  அத்துடன் ஜனனியை இந்த தேர்தலில் இவர்கள் போட்டியிட வைத்ததனால் ஏற்கனவே எமக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த வெள்ளையின வேட்பார்களின் வாக்குகளை பிரித்து அவர்களை தோல்வியுற வைத்தது மட்டுமல்ல துவேச மனப்பான்மை கொண்ட கட்சிகளின் வேட்பாளர்களை இதனால் வெற்றியீட்டவும் இது உதவியிருக்கின்றது. அத்துடன் ஜனனிக்கு விழுந்த வாக்குகளை வைத்து சிலர் ஆதாயம் தேடவும் முயற்சிக்கின்றனர். ஆனால் இவ்வாக்குகள் அவரின் தனிப்பட்ட செல்வாக்கால் கிடைத்தவையல்ல, முழுக்க முழுக்க புலிப்பினாமிகளாலும் புலி ஊடகங்களினாலும் மேற்கொள்ளப்பட்ட அதீத பிரசாரங்களினாலேயே கிடைத்தன என்பதை யாரும் மறந்து விடக் கூடாது.

  Reply
 • watch
  watch

  //இந்த 50014 வீணாய்போன வாக்குகளையும் மிகுதி தமிழ் மக்களின் வாக்குகளையும் இந்த புலிப் பிரசார ஊடகங்கள் இங்குள்ள எமது எதிர்கால சந்ததியினரின் நலன்களைக் கருத்தில் கொண்டு சரியான முறையில் பயன்படுத்தியிருந்தால் இன்று BNP போன்ற இனவாத கட்சி 2 ஆசனங்கள் பெறுவதை தவிர்த்தலுக்கலாமே//Tamil

  Hello Tamil BNP didn’t get any seats in London Region.
  This is Mullu Muttal-Unti Tiger talks.

  Reply
 • Tamil
  Tamil

  watch, of course I know that the BNP did not won any seats in London, but you have not read my other comments nor you could not see the fundamental approach I’m trying to criticize in this wasted votes and the misuse (and waste) of the power of media campaigning, etc…

  “Tiger”, what is that, the animal! Oh…, you mean that fascist group use to terrorise people in Sri Lanka and Tamils abroad! Well, I should be proud of being anti “that”

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  //Hello Tamil BNP didn’t get any seats in London Region.
  This is Mullu Muttal-Unti Tiger talks.- watch//

  சும்மா புலியெதிர்பாளளர்களின் கதை என்று தாங்களும் படம் காட்ட வேண்டாம். இலண்டனில் BNP கட்சி முன்பைவிட இம்முறை கணிசமான அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. அதுபோல் தமிழர்களுக்கு சாதகமான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்குப் பிரிப்புகளினால் தோற்கடிக்கப்பப்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டது நாமும் தான் என்பதை மறந்து விட வேண்டாம். மொத்தத்தில் ஜனனியினால் எமக்கு ஏற்பட்டது பெரும் பாதிப்புத் தான். சிலரின் சுயநல பேரம் பேசலுக்கு வேண்டுமானால் இது சாதகமாகத் தெரியலாம்.

  Reply