புலம்பெயர் தேசத்தில் தமிழீழ அரசாங்கம் அமைக்க சட்ட அறிஞர் உருத்திரகுமார் தலைமையில் செயற்குழு : தவிபு அனைத்துலக இணைப்பாளர் பத்மநாதன்

தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான விடுதலைப் போராட்டம் இன்று புதியதோர் கட்டத்தை எட்டியுள்ளது.

தாயகத்தின் யதார்த்த நிலையினைப் புரிந்து கொண்டு, நமது விடுதலை இலட்சியத்தினை முன்னோக்கி நகர்த்துவதற்குத் தேவையான அரசியல் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய காலகட்டம் இது.

இதற்காக பொதுக்கொள்கையின் அடிப்படையிலான ஒரு சீரிய வேலைத் திட்டத்தின் முக்கியத்துவத்தினை உய்த்துணர்ந்து, அதற்குரிய ஆலோசனைகளையும் நமது மக்களிடமிருந்து கோரியிருந்தோம்.

நமது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற கருத்துக்களையும், புலமைசார் அறிஞர்களது ஆலோசனைகளையும் கவனத்திற் கொண்டு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை அமைப்பது (Provisional Transnational Government of Tamil Eelam) எமது அடுத்த கட்டப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு அவசியமானது என உணர்கிறோம்.

இத்தகைய அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கான சகல முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஒரு செயற்குழு, சட்ட அறிஞர் விசுவநாதன் உருத்திரகுமார் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்குழுவிற்கு முழுமையான ஆதரவினையும் ஒத்துழைப்பினயும் வழங்குமாறு அனைத்துத் தமிழ் மக்களையும் தமிழர் அமைப்புக்களையும் வேண்டிக் கொள்கிறோம்.

தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகள் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து கட்டப்பட்டவை.

1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம், 1985 ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தை, 2003 ஆம் ஆண்டு இடைக்கால நிர்வாக அதிகாரசபைத் திட்டம் ஆகியன ஊடாக வெளிப்படுத்தப்பட்டவை.

இந்த அரசியல் அபிலாசைகள் உயிர்ப்பாகப் பேணப்பட்டு பலப்படுத்தப்பட வேண்டியவை.

இதேவேளையில் இன்றைய தாயகச் சூழலில் சிறிலங்காவின் இராணுவ ஆதிக்கப்பிடிக்குள் சிக்கியுள்ள நமது மக்களால் இந்த அரசியல் அபிலாசைகளை ஓங்கி ஒலிப்பது நடைமுறைச் சாத்தியமாகாது.

இந்த யதார்த்த நிலையைப் புரிந்து கொண்டு செயற்படுவது மிகவும் அவசியமானது.

இந்நிலையில் பொதுநோக்குடன் பொது உடன்பாட்டின் அடிப்படையில் தாயகத்திலும் புலத்திலும் இரு சமாந்திரமான செயற்திட்டங்களை தமிழர் தேசம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஜனநாயக முறையில் புலத்தில் அமைக்கப்படவிருக்கும் தமிழீழ அரசாங்கம் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளையும் உரிமைக்குரலையும் பிரதிநிதித்துவப்படுத்தி அனைத்துலக அரங்கில் இயங்க வேண்டும்.

அதேவேளையில் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாஷைகளை தமது அரசியல் அடிப்படைகளாகக் கொண்டிருக்கக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் தாயக நிலைமைகளை பவித்திரமாகப் புரிந்து கொண்டு இயங்கும் வகையிலான தாயகச் செயற்திட்டம் அமைய வேண்டும்.

இந்த இரு செயற்திட்டங்களுக்கிடையில் ஓர் இணைவு இருக்க வேண்டும்.

இப்போது அமைக்கப்பட்டிருக்கும் செயற்குழு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அதேவேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை ஆகிய அரசியல் கோட்பாடுளை அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடிய ஏனைய அரசியல் அமைப்புக்களுடனும் பேச்சுக்கள் நடத்தி ஒரு பொது உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளையும் மேற் கொள்ளும்.

தனது செயற்பாடுகளை ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு சுயாதீனமாக முன்னெடுக்கவிருக்கும் இந்த செயற்குழு தனது செயற்பாட்டுத்திட்ட விபரங்களை மக்களுக்கு அறியத்தந்து மக்களுடன் தொடர்ச்சியாகத் தொடர்புகளைப் பேணிக் கொள்ளும்.

இந்த செயற்குழு தனது முயற்சியில் முழுமையான வெற்றி பெற நாம் அனைவரும் இன ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து செயற்படுவோம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

12 Comments

 • varathan
  varathan

  இது மூர்த்தின்ட கப்பலிலும் கொமெடியா இருக்கு
  GOD BLESS OUR PEOPLE….!

  Reply
 • mai
  mai

  காலம் கடந்து மேற் கொள்ளும் இந்த செயற்திட்டம் உண்மையில் வரவேற்கத்தக்கது. புலம்பெயர்ந்த அனைத்து ஈழமக்கள் இதற்கு ஆதரவு அழிக்க வேண்டும்.எம்மினம் மீண்டும் தன்மானத்துடன் வாழவேண்டும்.

  Reply
 • thurai
  thurai

  இலங்கையில் பிறந்து வளர்ந்தும், தமிழகமே எம் தாயகம், தொப்புள்கொடி உறவு எனக் கூறி சிங்களவரிடம் அடிவாங்கியது போதாதென்று உலமுழுவதும் ஈழத்தமிழர் அடிவாங்கவே தமிழீழ அரசாஙக்ம் வழிவ்குக்க்கும்.

  துரை

  Reply
 • நண்பன்
  நண்பன்

  பிரபாகரன் உயிரோடிருக்கும் போது, வெளிநாட்டில இருந்த புலி ஆதரவான படித்தவர்களைப் பேசவிடாத காரணம் இப்ப விளங்குது. இவங்கள் கொடுத்த ஐடியாவை நம்மை தலைவர் கவுண்டார். இனித்தான் தலைவர் பின்னால போன புலத்து சனம் கவிழப் போகுது.

  நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை அமைப்பது (Provisional Transnational Government of Tamil Eelam). போன கப்பலில் மண்ணாவது கொஞ்சம் அள்ளிக் கொண்டு வந்தீங்களோ? சே….கேட்க நல்லாயிருக்கு. யதார்த்தமா நடக்காது. அதுதான் பிரச்சனை.

  Reply
 • santhanam
  santhanam

  புலத்தில் தமிழ்அரசு இது படித்தமுட்டால்களின் குழாம் ஈழத்தில் அகதிவாழ்விற்கான அடித்தளம் இவர்களிற்கெல்லாம் ஆப்பு அடித்து உள்ளே தள்ளவும்.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  உந்த உருத்திரகுமார் தலைமையில்த் தான் மகிந்த சகோதரர்களை அமெரிக்காவில் வழக்கு வைச்சு உள்ளுக்கை தள்ளவும் குழு அமைச்சவை. அந்தச் சுருட்டல் முடிய எனி புலம்பெயர் தேசத்தில் தமிழீழ அரசாங்கம் அமைக்க எனச் சொல்லி அடுத்த சுருட்டலுக்கு முயற்சியோ??

  Reply
 • palli.
  palli.

  அட பயலுகளே இது புலம்பெயர்ந்து வாழும் தமிழரை புலம் பெயர் தேசம் மகிந்தா குடும்பத்திடம் நாடு கடத்தி அவர்கள் மூலம் மிரிவாங்கும் செயலாக அல்லவா படுகுது; ஏற்க்கனவே பல்லிக்கு ரத்தழுத்தம் இதில் சப்பாத்துகாலால் மிரிவாங்குவது லேசுபட்ட காரியமா; அவர்கள்(மகிந்தா குடும்பம்) கனடா எம் பி யையே கால் கடுக்க நிக்க வைத்து அனுப்பியவர்கள் எமக்கு சொல்லவும் வேண்டுமா? உரித்திரா உமது வாததிறமைக்கு நாமா அடி மிரி வாங்கி சாவது;

  Reply
 • msri
  msri

  “அடையமுடியா பொருளின்மீது ஆசை தீராது-அதில் மனமும் மாறாது” என ஓர் சினிமாப் பாடலின் வரிகள் உள்ளது! இதுபோன்றதே புலமபெயர் தேச தழிழ்ஈழமும்- அதற்கான “அசரீதி” அறிவிப்புக்களும்!

  Reply
 • Kusumbo
  Kusumbo

  எதிரி கூட நல்லவிடையங்களைச் சொல்லலாம்; செய்யலாம். பத்தனின் நாடகத்தைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். தமிழ்ஈழப்புலம் பெயர் அரசாங்கம் என்பதை சட்டவல்லுணர்கள்; சர்வதேச அரசியல் கல்வி பயின்றோர்; அறிவு ஜீவிகள் என்று எப்பவோ கூட்டியிருக்க வேண்டிய விடயம். புலிகள் என்று புத்திஜீவிகளை வாழவிட்டார்கள். இப்படிப் புலத்தில் ஏற்படுத்தப்படும் வெறும் அரசியல் குழுவால் ஈழத்தீர்வை வென்றெடுக்க முடியாது. வளர்த்தால் குடும்பி சிரைச்சால் மொட்டை என்று வாழ்வது வெற்றிதராது. அங்கே ஆயுதப்போராட்டம் நடந்து கொண்டிந்த வேளை புலத்தில் ஒற்றுமையாக ஒரு அரசியல் பின்னணிகொண்ட என்சொல் கவுண்மென்ட் அமைக்கப்பட்டு சர்வதேசத் தொடர்புகளுடன் நோக்கை வென்றிருக்கலாம். முக்கியமாக குறிப்பிட்ட ஊரைச்சார்ந்தவர்களோ; குடுப்ப ; உறவுகளைச் சேர்ந்தவர்களோ பெரும்பான்மையாய் இக்குழுமத்தில் சேராது இருப்பது முக்கியம்.

  Reply
 • Poopalarajah
  Poopalarajah

  A Nazi government in exile. A fascist Tamil government in exile. God save the Tamil People.

  Reply
 • மாயா
  மாயா

  இன்டர்போல் குற்றவாளிகளை காப்பாற்ற இது உதவலாம். அவர்களும் அரசியல்வாதிகள் என்று…. தமிழர்கள் முன் ஜென்ம பாவம் கழிக்கிறார்கள் போலும்.

  ஊரில யாரோ குண்டு வச்சுட்டு ஓட, பக்கத்தில இருந்தவர்கள் அடி வாங்கினார்கள். ஒருத்தன் இயக்கத்துக்கு உதவ குடும்பமே அடி வாங்கிச்சு. யாரோ தமிழீழம் கேட்க சும்மா இருந்த சனம் எல்லாம் குடிகாரன் டேஸ்ட்டுக்கு அப்பாவி மனைவியை அடிக்கிறது போல சனம் அடி வாங்கிச்சு. பொங்கு தமிழ் என்று பொங்கி முன்னால் கூத்தாடிய பலர் பின்னர் என்கவுண்டர் ஆனார்கள். உள்ளவிட்டு அடிக்கிறம் என்று அவன் பிடிச்சு அடிக்கப் பண்ணினார்கள். புலத்தில வீதியெல்லாம் கத்தி நல்ல தமிழர் என்ற பெயரை நாத்த தமிழர் ஆக்கினார்கள். புலத்தில இருந்து இவங்களை ஏத்தி அனுப்பினா கட்டுநாயக்காவிலயே உயிர் போகும். எல்லாம் வீடீயோவில புலி ஊடகங்களே உபயமா பதிவு செய்து நெட்டில போட்டுச்சு.

  இது எல்லாரையும் உள்ள தள்ள இல்ல திருப்பி அனுப்ப வழிதான் செய்யுமே ஒழிய யாருக்கும் ஒன்றும் செய்யாது. வேணுமென்றால் மாதா மாதம் கட்சி உறுப்பினரா பணம் கட்டலாம். இவங்களுக்கு கொடுக்கிற பணத்தை ஒரு பிச்சைக்காரனுக்கு கொடுத்தா நல்லாயிரு என்ற வார்த்தையாவது கிடைக்கும். சொறிஞ்ச கை சும்மா இருக்காது தொடர்ந்து சொறியும். ரணமாவது என்னவோ அப்பாவித் தமிழர்கள்தான்.

  Reply
 • citizen
  citizen

  புலம்பெயர் தமிழ் ஈழம் கார்திகை 27ல் பிரகடனப்படுத்தப்படவுழ்ழது. பூமிப்பந்தின் பல பிரதேசங்கழ் இதில் அடங்கும். பிரித்தானியாவில் கரோ, டுடிங்…பிரான்சில் லஷபல்….சுவிசில்……ஜெர்மனியில் ….அமெரிகாவில நுஜெர்சி, பவலொ கனடாவில் டொர்ரன்டொ, மொன்ரியல் உழ்ழிட்ட இலங்கை தவிர்ந்த பல பகுதிகழ் இதில் அடங்கும்.

  தமிழரின் தாகம் தமிழ் உலக தாயகம்….!

  Reply