இனங்களுக்கிடையிலான ஜக்கியம் – இனியாவது சாத்தியமா? : எஸ். தவராசா

SL_Flag(முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும் சகலகட்சி மகாநாட்டின் அங்கத்துவருமான எஸ். தவராசா அவர்கள் லண்டன் ‘Oxford Union’ இல்  05.06.09 அன்று ஆற்றிய உரையின் தமிழாக்கம்.)

தலைவர் என்னை அறிமுகம் செய்துவைக்கும்போது நான் சார்ந்திருக்கும் கட்சி (ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – ஈபிடிபி) இலைங்கை இந்திய ஒப்பந்தத்தை தொடர்ந்து ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தை தளுவிய ஒன்று என்று குறிப்பிட்டிருந்தார். அந்த அறிமுகத்தில் அவர் முக்கியமான ஓர் விடயத்தை கூற தவறிவிட்டார். அவ்வாறாக ஜனநாயக நீரோட்டத்தை தளுவியமைக்காக நாம் கொடுத்த விலையோ மிக அதிகம். எழுவதுக்கும் மேற்பட்ட கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு சந்தர்ப்பத்தில் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தனது ஜந்து வயது மகளுடன் புத்தளத்தில் சென்று கொண்டிருந்தபோது அவரை சுட்டுவிட்டு அவ் ஜந்துவயது சிறுமியிடம் அம்மாவிடம் போய் அப்பா சுடப்பட்டு இறந்துவிட்டார் எனக் கூறவும் என்று சொல்லி அனுப்பினர். அவ்வாறாக மனிதாபிமானமற்ற கொடூரமான முறையில் எமது உறுப்பினர்கள புலிப் பயங்கரவாதத்தினால் தாக்கப்பட்டனர். இவையாவும் நாம் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டமைக்காக.

எமது கட்சியின் தலைவர் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அவர்கள் பல தடவைகள் புலிகளின் தாக்குதலில் இருந்து உயிர் தப்பியுள்ளார். ஒரு சந்தர்ப்பத்தில் கொழும்பின் தெற்கு புறத்தில் அமைந்திருக்கும் களுத்துறை மறியற் சாலைக்கு பிரதி சட்டமா அதிபர் சகிதம்  அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் பிரச்சனைகள் தொடர்பாக பேசித்தீர்ப்பதற்காக சென்றிருந்த வேளை அங்கிருந்த புலிக்கைதிகளினால் தாக்கப்பட்டார். அத்தாக்குதலின் போது  அவர் பலத்தகாயங்களுக்கு உட்பட்டதுடன் ஒற்றைக்கண்ணின் பார்வையையும் இழந்துள்ளார். அவர் உயிருடன் வாழ்வது ஒரு மறு பிறப்பே என்று கூறவேண்டும். இன்னொரு தாக்குதலின் போது கொழும்பில் அவரின் வாசஸ்தலம்  ‘கொமாண்டோ’ முறையிலான தாக்குதலுக்கு உள்ளானது. அத்தாக்குதலின் போது அவரின் நான்கு மெய்க்காட்பாளர்கள் உயிரிழந்தனர். தனது வதிவிடத்தின் பின்பக்க சுவரினால் பாய்ந்து கொண்டதன் மூலம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தப்பித்துக்கொள்ள முடிந்தது. இன்னொரு முயற்சியாக அவரின் அமைச்சுக் காரியாலயத்திற்கு ஒரு பெண் தற்கொலைக் குண்டுதாரி அனுப்பப்பட்டிருந்தார். அமைச்சரின் காரியாலய அறையின் முன்பு பாதுகாப்பு பிரிவினர் சோதனையிட முயன்றபோது அவர் ஒத்துழைக்காமையினால் அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தன் அங்கியில் இருந்த குண்டை வெடிக்கச் செய்ததன் மூலம் நான்கு பொலீஸ் அதிகாரிகள் உயிரை இழந்ததுடன் அத்  தற்கொலைக் குண்டுதாரியும் இறந்து கொண்டார். நான் குறிப்பிட் கடைசி இரு சந்தர்ப்பங்களிலும் நானும் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் உடனிருந்தமையினால் மயிரிளையில் உயிர் தப்பித்துக்கொண்டேன். நாம் சந்தித்த புலிப் பயங்கரவாதத்தின் பலவடிவங்கள் இவையாகும். 

இப்புலிப் பயங்கரவாதம்  இன்று ஏறத்தாள 380 000 மக்களை அகதி முகாம்களில் வாழும் நிலைக்கு தள்ளியுள்ளது. இம்மக்களின் துயரங்களோ சொல்லிலடங்கா. போராளிகள், பொதமக்கள் உள்ளடங்கலாக 25 000க்கும் மேற்பட்டோர் அங்கவீனர்களாக்கப்பட்டு உள்ளனர். அண்மையில் இடம்பெயர்ந்தவர்களை விட, முன்னைய காலங்களில் இடம்பெயர்ந்த ஏறத்தாள 25 000 குடும்பங்கள் இன்னும் யாழ்ப்பாணத்தில் அகதிகளாக உள்ளனர். 75 000 பேர்வரை இந்தியாவில் 113 அகதி முகாம்களில் உள்ளதாக இந்திய அரச அறிக்கைகள் கூறுகின்றன. யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் இருந்து புலிகளினால் இரு தசாப்தங்களின் முன் விரட்டியடிக்கப்பட்ட 75 000க்கும மேற்பட்ட (முஸ்லீம்) மக்கள் இன்றும் புத்தளத்தில் அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் இன்றைய ஜனத்தொகை இன்னும் அதிகமாக இருக்கும்.
 
இன்றைய இக்கூட்டத்தின் கருப்பொருளாகிய ‘பயங்கரவாதத்திற்கு பிந்திய காலப்பகுதியில்’ அகதி முகாம்களில் வாழும் மக்களின் உடனடித்தேவைக்கு மேலாக அம்மக்களை மீளக்குடியமர்த்தல்,  உள்ளகக் கட்டமைப்புகளை மீள்நிர்மாணித்தல்; யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்திசெய்தல்; மீளக்குடியமர்த்தப்படும் மக்கள் தங்கள் இயல்பு வாழ்பினை மேற்கொள்வதற்கான தொழில்களை ஆரம்பிற்பதற்கு வேண்டிய  உபகரணங்களை வழங்கல் போன்ற பல்வேறு செயற்பாடுகளை செய்யவேண்டி உள்ளது. இவை யாவற்றுக்கும் மேலாக ஓர் முக்கியமான விடயத்தை செய்வதற்கான முனைப்புகளில் ஈடுபட வேண்டி உள்ளது. அதுதான் இனங்களிற்கு இடையில் ஒருமைப்பாட்டை; ஜக்கியத்தை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடு. ‘இனங்களிற்கு இடையிலான ஜக்கியம்’  ஏன்பதே இன்றைய என்னுடைய பேச்சின் தொனியாக அமையப்போகிறது. ஏனென்றால் அவ்வாறான ஜக்கியத்தை ஏற்படுத்தாமல் ‘பயங்கரவாதத்திற்கு பிந்திய காலப்பகுதியில்’ நாம் மேற்கொள்ளும் எந்த வேலைத்திட்டங்களும் வீணானவையாகப் போய்விடும்.

நேற்றைய தினம் (04.06.09) நான் லண்டனில் உள்ள இலங்கைக்கான தூதுவராலயத்தில் வெளிநாட்டலுவர்கள் அமைச்சர் றோகித போகொல்லகம தலைமையிலான ஆலொசனைக் கூட்டமொன்றிற்கு சென்றிருந்தேன். அங்கு சழூகமளித்தவர்களில் ஏறத்தாள அரைவாசியினர் சிங்களவர்கள் அரைவாசியினர் தமிழர்கள். பேச்சாளர் ‘இராணுவத்தின் வெற்றி’ தொடர்பாக குறிப்பிடும்போது அங்கு பிரசன்னமாயிருந்த சிங்களவர்கள் அனைவரும் கைகளை தட்டி ஆரவாரம் செய்ததையும்; அங்கு சழூகமளித்திருந்த தமிழர்களில் ஒருவரேனும் அவ்வாறு  கைகளை தட்டாததையும் காணக்கூடியதாக இருந்தது. இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது அங்கு சழூகமளித்திருந்த தமிழர்கள் பலரை நான் அறிவேன். அவர்கள் புலிகளிற்கு சார்பானவர்கள் இல்லை. நாங்கள் உண்மையில் இலைங்கையில் வாழும் இனங்களிற்கிடையில் ஜக்கியத்தை ஏற்படுத்துவதில் நாட்டமுடையவர்களாயின் நான் கூறிய இவ்விடயத்தை புறந்தள்ள முடியாது. சிங்களவர்கள தமிழர்களிற்கிடையிலான இந்தப் பிரிவானது தினம் தினம் விரிசலடைவதுடன் இரு துருவங்களை நோக்கி மையப்படுத்தப்படுகிறது. இந்த இன விரிசலானது இலங்கையில் மட்டுமல்ல இலங்கையர்கள் கணிசமாக வாளும் நாடுகளில் எல்லாம் பரவலாகக் காணப்படுகிறது. இவ்வாறான இன விரிசலை ஒற்றுமையாக்க வேண்டுமாயின் இதற்கான காரணியை நாம் முதலில் புரிந்து கொள்ளல் வேண்டும்.

சிலரின் கூற்றுப்படீ தெற்கிலங்கையில், குறிப்பாக கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பெரும்பான்மையான தமிழர்கள், சிங்களவர்கள் வாழ்வதைப்போல் வாழ்கிறார்கள். அவர்களுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை;  ஏனைய சிங்களவர்களிற்கு சமானமாகவே அவர்கள் வாழ்கிறார்கள. இவ்வாறான கூற்றிற்கு எனது பதில் அவ்வாறாக வாழம் தமிழர்களின் உள்ளங்களிற்கும் மனதிற்குள்ளும் புகுந்து நீங்கள் சிங்களவர்களிற்கு சமானமானவர்களாக வாழ்வதாக உணர்கிறீர்களா? நீங்கள் பாரபட்சமாக நடத்தப்படவில்லை என நினைக்கிறீர்களா? ஏன்ற கேள்விகளை எழுப்பினால் நிச்சயமாக அவர்களின் பதில் இல்லை என்றே இருக்கும்.

இன்னுமொரு கருத்து உலாவுகின்றது. அதாவது புலிகள்தான் சகல பிரைச்சனைகளிற்கும் காரணம், தற்போது  புலிகள் இலங்கையில் இருந்து முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிட்டது என்பதாகும். பயங்கரவாதம் என்பது அண்மைக் காலங்களில் உருவான ஒன்று. 1970களில் ஆயதப் போராட்டமே முதலில் ஆரம்பமானது. புலிகள் அவ்வாயுதப் போராட்டத்திற்கு பயங்கரவாதத்திற்குரிய செயற்பாடுகளை இணைத்துக் கொண்டதன் மூலம் அதனை ஓர் பயங்கரவாத அமைப்பாக மாற்றிக்கொண்டனர்.

1970க்கு முற்பட்ட காலப்பகுதியில் தமிழர் தரப்பிலிருந்து அரசியல் காரணங்களிற்காக ஒரு துப்பாக்கி வேட்டுவேனும் தீர்க்கப்பட்டது கிடையாது. ஆனால் இலைங்கை சுதந்திரமடைந்த நாள்முதல் தமிழர்களிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாரபட்சமான ஏற்பாடுகள் மற்றும்; அவர்கள் சிங்களவர்களிற்கு சமானவற்றவர்களாக நடத்தப்பட்டமை தொடர்பாக தமிழ்த் தலைவர்கள் பல எதிர்ப்பு நடைவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். அவர்கள் அவ்வாறான எதிர்ப்பு நடைவடிக்கைகளை பாராளுமன்றத்திற்குள்ளும் அதற்கு வெளியிலும் சாத்வீக வளிமுறைகளினால் மேற்கொண்டிருந்தனர்.

இங்கு பிரசன்னமாயிருப்பவர்களில் யாராவது தமிழ் மக்களின் பிரச்சனைகள் என்ன என்பதை அறிய விரும்பினால் பண்டாரநாயகா – செல்வநாயகம் ஒப்பந்தம் டட்லி சேனநாயகா – செல்வநாயகம் ஒப்பந்தம் என்பவற்றை படியுங்கள் மின்வலைப்பின்னல் தளங்களில அவை உண்டு, எனது நேரத்தை அவற்றை விபரிப்பதில் செலவிட நான் விரும்பவில்லை. பண்டாரநாயகா (பேச்சாளர் ‘Oxford Union’; கேட்போர் கூடத்தில் தொங்கிக்கொண்டிருந்த பிரமாண்டமான பண்டாரநாயகாவின் படத்தை தன் சுட்டி விரலால் காட்டியவாறு) செல்வநாயகத்துடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டிருக்கிறார் என்பதே தமிழ் மக்களிற்கு பிரச்சனைகள் உண்டு என்பதற்கு அடையாளமாகும். அவ்வொப்பந்தம் நடைமுறைப்படத்தப்படவில்லை எனினும் அதிலிருந்து  இருந்து நாம் கற்றுக்கொள்ளக் கூடியது என்னவெனில்  தமிழ்மக்களின் பிரச்சனைகள் இவ்வொப்பந்தத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டமையாகும். இதேபோன்றே  டட்லி சேனநாயகா – செல்வநாயகம் ஒப்பந்தமும் அமைகிறது.

இவை 1970ஆம் ஆண்டிற்கு முன் அடையாளம் காணப்பட்ட தமிழ்மக்களின் பிரச்சனைகளாகும். 1970ஆம் ஆண்டின்பின் இன்னும் பல இனரீதியான பாகுபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. உதாரணத்திற்கு 1970ஆம் ஆண்டு ,அறிமுகப்படுத்தப்பட்ட இன விகிதாசார அடிப்படையிலான பல்கலைக்கழக அனுமதிமுறை. இந்த முறைமையினால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஓருவன். இந்த இன விகிதாசார அடிப்படையிலான பல்கலைக்கழக அனுமதிமுறையே இளைஞர்களை வன்முறையில் ஈடுபடுவதற்கு வித்திட்டது; அதுவே காலப்போக்கில் ஆயுதப்போராட்டமாகப் பருணமித்தது.
 
ஆயுதப்போராட்டம் பயனையும் ஈற்றுத்தந்தது. இந்திய – இலங்கை ஒப்பந்தமும் அதனைத்தொடர்ந்து கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு மாற்றங்களும் இவ்வடையாளம் காணப்பட்ட பிரச்சனைகளிற்கு, முழுமையாக இல்லையெனினும், ஓரளவிற்கு தீர்வினை ஏற்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டவையாகும். பண்டா – செல்வா ஒப்பந்தத்தை எடுத்துக்கொண்டால் அதில் சில விடயங்களிற்கு பிராந்திய ரீதியில் அதிகாரப்பரவல் செய்யப்படும் என ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. 13ஆவது திருத்தச் சட்டத்தின் மாகாண நிரலை எடுத்துக்கொண்டால் அதில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள விடயங்கள்  பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை விட பன்மடங்காகும். மொழி உரிமை விடயத்தை எடுத்துக்கொண்டால் பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் இணங்கிய வகையில் 13வது திருத்தச்சட்டத்திலும், அதனைத்தொடர்ந்து ஒரு வருட இடைவேளையின்பின் கொண்டுவரப்பட்ட 16வது திருத்தச்சட்டத்திலும் முழுமையாகக் கையாளப்பட்டிருக்கிறது. குறிப்பாக 16வது திருத்தச்சட்டம் நிர்வாக மற்றும் பதிவேட்டு  மொழி தொடர்பாக கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு திருத்தமாகும். இத்திருத்தத்தின்படி வடக்கு கிழக்கு தவிர்ந்த இலங்கையின் எல்லா மாவட்டங்களிலும் நிர்வாக மற்றும் பதிவேட்டு மொழியாக சிங்களமும் வடக்கு கிழக்கில் நிர்வாக மற்றும் பதிவேட்டு மொழியாக தமிழும் அமையும். அவ்வாறாயின் தமிழ் மக்களின் பிரச்சனைகள் யாவும் தீர்க்கப்பட்டு விட்டதே, இதற்குமேலும் என்ன? என்ற கேள்வியை நீங்கள் எழுப்பலாம்.

துரதிஸ்டவசமாக இவையாவும் அரசியலமைப்பு சரத்துக்களே. இவ்வரசியலமைப்பு சரத்துக்கள் முழுமையாக இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. உதாரணத்திற்கு நான் ஏற்கனவே குறிப்பிட்ட 16வது திருத்தச்சட்டம் எவ்வாறு பாரபட்சமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதைக் காட்ட வினைகின்றேன். இந்த 16வது திருத்தச்சட்டத்தின் உப பிரிவொன்றில் ஐனாதிபதி எந்தவோரு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் கணிசமான மாற்று மொழி பேசுபவர்கள் வாழ்வார்களேயாயின், அந்த உதவி அரசாங்க அதிபர் பிரிவை இரு மொழிப்பிரிவாக பிரகடணப்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் வாழும் சிங்களவர்கள் தாங்கள் வாழும் உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்குள் அடங்கும் அரச காரியாலயங்களில் சிங்களத்தில் கருமமாற்றுவதற்கும் அதேபோன்று தெற்கில் வாழும் தமிழர்கள் தாங்கள் வாழும் பிரதேசங்களில் உள்ள  அரச காரியாலயங்களில் தமிழில் கருமமாற்றுவதற்கும் வகைவகுக்கும்  விதத்திலேயே இச்சரத்து அமைந்துள்ளது.

இதன் அடிப்படையில் இதுவரை 29 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் இரு மொழிப்பிரிவுகளாகப் பிரகடணப்படுத்தப்பட்டு உள்ளது. அவற்றினுள் சில பிரிவுகள் வடக்கு கிழக்கிலும் குறிப்பாக கிழக்கிலும், 20க்கும் மேற்பட்டவை தெற்கில் அமைந்துள்ள உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுமாகும். இப்பிரகடணங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக பார்ப்போமாயின் வடக்கு கிழக்கில் இரு மொழிப்பிரிவுகளாகப் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள அத்தனை உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் சிங்களத்தில் இலகுவாகக் கருமமாற்ற முடியும். ஆனால் தெற்கில் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள ஒரு உதவி அரசாங்க அதிபர் பிரிவிலேனும் தமிழில் கருமமாற்ற முடியாது. இவவுதாரணத்திலிருந்து அரசியலமைப்பின் ஒரே சரத்து எவ்வாறு பாரபட்சமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை காணக்கூடியதாக இருக்கிறது. இங்கு பாரபட்சமென்பது சட்டவாக்கத்தில் இல்லை அதனை நடைமுறைப் படுத்தலிலேயே உள்ளது.

இதை ஓர் உதாரணத்திற்கே எடுத்துக்காட்டியுள்ளேன். இதைப்போல அரசியல் சாசனத்தில் முறையாக நடைமுறைப்படுத்தப்படாத எத்தனையோ விடயங்களை, அதிலும் குறிப்பாக 13வது திருத்தச்சட்டத்தில் உள்ள விடயங்கள் தொடர்பாக, என்னால் விளக்கிக்கொண்டே போக முடியும். எனக்கு ஒதுக்கப்பட்ட நேரம் காரணமாக என்னால் அவை யாவற்றையும் விபரித்து கூறமுடியாமல் உள்ளது. இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் நாம் அரசியல் தீர்வுகளை பற்றி அல்லது அரசியலமைப்பு மாற்றங்களைப்பற்றி எல்லாம் பேசிக்கொள்ளலாம், ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு வேண்டிய மனப்பாங்கு இல்லையெனில் நாம் இப்பிரச்சனைகளிற்கு தீர்வுகண்டு இன ஜக்கியத்தை எற்படுத்த முடியாது. நாம் இப்பிரச்சனைகளை திடசங்கர்ப்பத்துடன்   அணுகினாலேயே உண்மையான இன ஜக்கியத்தை எற்படுத்த முடியும். இன்றைய காலத்தின தேவையானது அரசியலமைப்பின் 13வது மற்றும் 16வது திருத்தங்களில் கொண்டு வரப்பட்ட விடயங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதன்பின்னும் தீர்க்கப்படாத பிரச்சனைகள் இருப்பின் அவற்றை அடையாளம் கண்டு அதற்குரிய முறையில் அரசியலமைப்பு மாற்றங்களைக் கொண்டு வருதல்.

Show More
Leave a Reply to palli. Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • நண்பன்
    நண்பன்

    எல்லா தமிழ் அமைப்புகளும் எழுதுவதும் பேசுவதும் ஒன்று. உள் நோக்கம் வேறொன்று. யாரும் உண்மையாக இல்லை. இன்னும் ஒரு 30 வருடத்துக்குப் பின்தான் இவர்களுக்குள் அடிப்படை மாற்றம் ஒன்று உருவாகும். அன்றைய இளைய தலைமுறையினர் இன்றும் அதே இனவாத சிந்தனையோடு அரசியலை முன்னெடுக்கிறார்கள். இன்றைய இளைஞர்கள் அந்த அரசியல் சாக்கடையில் தள்ளி வீழ்த்தப்பட்டு மதுபோதைக்குள் தள்ளப்பட்டவர்கள் போல் ஆகி நிற்கிறார்கள். முன்னைய இளைஞர்களது (இன்றைய முதியோர்) சாவுக்கு பின் இன்றைய இளையோரின் முதுமையில் அடுத்த தலைமுறையில்தான் தமிழன் தான் விட்ட தவறை உணர்வான்? அதுகூட கேள்விக்குறிதான். புலத்தில் அவர்கள் தமிழரில்லாதோராகியிருப்பர். இலங்கையில் அவர்கள் பாதிச் சிங்களவர்களாகவும் ஆகலாம்.

    அதுவரை பழி தீர்க்கும் படலங்களையும், தம்மைத் தற்காத்துக் கொள்ளும் அரசியலையும் , கடந்த கால அரசியல் அபிலாசைகளையும் மிஞ்சியிருப்போர் தொடர்ந்தும் நடத்திக் கொண்டேயிருப்பார்கள்.

    தமிழர்கள் தம் தவறை உணரும் போது சிங்களவன் இவர்கள் எட்டவே முடியாத உயரத்துக்கு பயணித்து உலகின் நன் மதிப்போடு சொகுசு வாழ்வைப் பெற்றிருப்பான்.

    சிங்களவர்களோடு பின்னிப் பிணையும் இஸ்லாமிய சமுதாயமும் தமிழனை விட மேலான நிலையில் இருப்பார்கள். தமிழன் மட்டும் தொடர்ந்தும் செத்த பாம்புகளை அடித்துக் கொண்டு சுடூகட்டில் பிணம் எரித்துக் கொண்டிருப்பான்.

    Reply
  • palli.
    palli.

    தெரியவில்லை ஆனால் கண்டிப்பாக தமிழருக்குள் ஜக்கியம் சாத்தியமில்லை; அதிலும் அமைப்புகளுக்கு சத்தியமாய் சாத்தியமில்லை;ஒண்ணும் வேண்டாம் டக்கிளஸையும்; சங்கரியரையும், பிள்ளையானையும் ஒரே விமானத்தில் ஏற்றுங்க பார்க்கலாம்; இதைவிட வடக்குக்கும் கிழக்குக்கும் மதில் கட்ட தொடங்கியாச்சே? இந்த நிலையில் சாத்தியம் சாத்தியமா??

    Reply
  • Rajathurai
    Rajathurai

    Hindus wear ash on forehead to remind themselves that they will all end up as ashes one day.

    Tamils carry flag with lion holding sword at minorities to remind them what happens to people who irk Sinhalese (lion people).

    Don’t blame JRJ, blame yourselves. When Tamils beg to be slaves, carry lion flag and sing Sinhala anthem, no wonder they keep 300, 000 Tamils locked up in internment camps.

    Reply
  • msri
    msri

    பேரினவாதவெறியும்> குறுகிய தேசியஇன வெறி அரசியலுமே> இனஐக்கியத்திற்கு தடையாக இருந்தது! புலிகளின் வீழ்ச்சியுடன்>மகிநதப் பேரினவாதம் இன்று தனது வெற்றியை> சிங்களமக்களுக்கு ஓர் போதையாக ஊட்டுகின்றது! சிறுபான்மை என்ற ஒன்று இல்லையெனச் சொல்லி>எல்லாம் பெரும்பான்மைதான் எனச் சொலலுகின்றது! இந்நிலையில் இன ஐக்கியம் பற்றி பேசுவது>சாத்தான் வேதம் ஓதுவதுபோல் அமையும்!

    Reply