இசையால் உலகையே ஆட்டிப் படைத்த மைக்கல் ஜாக்ஸன் இன்று காலமானார்!

25michael_jackson.jpg
பிரபல பொப் இசை நட்சத்திரமான மைக்கேல் ஜக்சன் லொஸ் ஏஞ்சலில் இன்று தனது 50வது வயதில் காலமானார்.

ஜக்சனின் சுவாசம் நிறுத்தப்பட்டவிட்டதாக வியாழன் நள்ளிரவு அவசர மருத்துவப்பிரிவினர் லொஸ் ஏஞ்சலில் உள்ள அவருடைய பெவர்ல் கில் இல்லத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இரு மணித்தியாலங்களின் பின்னர் இவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் என அறிவிக்கப்பட்டது.

பல வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இவர் தொடர் இசைநிகழ்வுகளை நடத்ததுவதற்காக யூலை 13ல் லண்டனுக்கு வருவதாக ஏற்பாடாகியிருந்ததது.

Michael Jackson’s Website/Blog:
http://www.michaeljackson.com/

Show More
Leave a Reply to chandran.raja Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

19 Comments

  • accu
    accu

    உலகின் மிகச்சிறந்த இசை,நடனக் கலைஞனுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.

    Reply
  • BC
    BC

    இசை கலைஞன் மைக்கேல் ஜக்சன்னுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இனம், மதம், மொழிகளைக் கடந்து அனைவரையும் தன் இசையாலும், நடனத்தாலும் கட்டிப்போட்ட இசைப்புயல், இன்று நிரந்தரமாக ஓய்ந்து விட்டது. அன்னாருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.

    Reply
  • palli.
    palli.

    மக்கல் ஜக்ச்சனுக்கு பல்லி குடும்பத்தின் கண்ணீர் அஞ்சலிகள்;
    ஆனால் இவரும் ஒரு தற்கொலை செய்தவரே; பல ஆண்டுகளுக்கு முன்பு இவர் தன்னை தானே அழித்து தானே ஒரு புது பிறவியாய் உருவெடுத்து ஆடவும் அத்துடன் பாடவும் செய்து உலகத்தை மட்டுமல்ல சின்னன் சிறுவர்களையும் தனது இதயத்தில் பூட்டிவைத்தார். அதை அவரது சகோதரியே அந்த இதயகதவை துறந்து அவரது இதயம் எப்படி அழுக்கற்றுபோய் இருக்குதென சட்டத்திடம் காட்டினார் அதன் பலன் இசைநாயகன் சமுதாய வில்லன் என அரிவிக்க பட்டார் அத்துடன் அவருக்கு சம்பிரதாய சிறையும் கிடைத்தது;

    ஆனால் இவர் தான் ஒரு கறுப்பினத்தவராய் இருக்க விரும்பாமல் வெள்ளை இனத்தவராக மாற முடிவெடுத்து (அதுதான் அவர் அன்று செய்த தற்கொலை) அதுக்காக தன்னை கூறுபோட்டு கிடைத்த மட்டில் லாபம் என்பது போல் சில அங்கங்கள் மட்டும் செயற்க்கையாகவும் பலது இயற்க்கையாகவும் இருந்தது;ஆக இயற்க்கைக்கும் செயற்க்கைக்கும் (கறுப்புக்கும் வெள்ளைக்கும்) இடையே நடந்த போரை சமாதான புறாக்கள் ஆன மருத்துவர்களாலும் இறுதி வரை காப்பாற்ற முடியவில்லை;

    இலங்கையின் சமாதான ஒப்பந்தம் திசைமாறி போரில் தொடங்கி சர்வதேசம் கைவிட்ட நிலையில் தமிழர் அழிந்தது போல்(கறுப்பு) இங்கேயும் மருத்துவம் பொய்த்துபோய்(சமாதானம்) கறுப்புக்கும் (உடலுக்கும்) வெள்ளைக்கும் தோலுக்கும் போர் தொடங்கி மருத்துவர்களால் கைவிட்ட நிலையில் (சர்வதேசம்) மரணித்து விட்டார் மைக்கல் ஜக்ச்சன் என்னும் கறுப்பு தோலை விரும்பாத கறுப்பின பொப் மேதை:

    Reply
  • vanthijathevan
    vanthijathevan

    எனது 13 வயது மகன் இவர் போதை மருந்தினாலதான் இறந்திருப்பார் என என்னுடன் பந்தயம் கட்ட கேடகிறான். ஒரு குழந்தையின் மனதில் இந்த பாடகனைப் பற்றி என்ன அபிப்பிராயம் என்று பார்த்தீர்களா?

    பிரபல்யமான தெரிந்த முகம் எனும்போது இவரின் மரணம் அனுதாபத்தை ஏற்படுத்துகிறது. அதுவும் 50 வயதில் மரணமா?

    Reply
  • accu
    accu

    //மைக்கல் ஜக்ச்சன் என்னும் கறுப்பு தோலை விரும்பாத கறுப்பின பொப் மேதை://
    பல்லி. இது உண்மையல்ல. மைக்கல் ஜக்சனுக்கு விரிலிகொ( vitiligo )எனப்படும் உடலில் திட்டுத்திட்டாய் வெள்ளை நிறத்தில் பரவும் ஒரு வகை நோய் (நம் ஊரில் எலி கடித்தால் வருவதாகக் கூறுவோம்) எண்பதுகளின் நடுப்பகுதியில் ஏற்ப்பட்டது. இதனால்த்தான் அவர் உடல் முழுவதையும் ஒரே நிறத்துக்கு மாற்ற முயன்றார். அவர் மூக்கு, நெற்றி, தாடை, உதடுகள் போன்றவற்றை பிளாஸ்ரிக் சேஜரி மூலம் மாற்றியதுதான் உண்மை. இது உலகில் பல நடிகர், நடிகைகள் செய்வது சாதாரணம்.

    Reply
  • palli.
    palli.

    அக்கு அவரது அண்ணாவின் எழுத்தில் படித்தேன்; அதுமட்டுமல்ல இந்த எண்ணத்தில் பிறகு அவர் சகோதரர்களை கூட இவர்
    மதிப்பதில்லை;அவர்களும் இவரை மதிப்பதில்லை பக்கியாவின் உலக செய்தியில் படித்ததுதான்; இவர் ஆரம்ப காலங்களில் சகோதரங்களுடன்(சிறுவனாக) இசைநிகழ்வுகள் பலதை நான் CD பார்த்துள்ளேன்.மிக அழகானவர் இப்போது உள்ளதை விட:

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    உலக மக்களை தன் வசப்படுத்தி வைத்திருந்த கறுப்பு வெள்ளையன் மைக்கல் ஜாக்ஸன். மைக்கலுக்கு இருந்த அளவு ரசிகர்கள் , உலகத்தில் எந்தவொரு பொப் பாடகருக்கும் இருந்ததில்லை. மைக்கல் மனதில் நல்ல சிந்தனைகள் இருந்த போதும், அதை நடைமுறைப்படுத்த முயன்ற போதும் கறுப்பராக இருந்த காரணத்தால் அமெரிக்கா அவரது புகழுக்கு இழுக்கு உண்டாக்க பல நேரங்களில் முயன்றது.

    விழுந்த போதெல்லாம் தன்னை சுதாகரித்துக் கொண்டு எழ முயன்ற மைக்கல் இறுதியில் மன அழுத்தங்கள் காரணமாக இனி எழாமல் விழுந்து போனார். ஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரங்களை தவிர்த்து பார்த்தால் இந்த நூற்றாண்டின் சிறந்ததொரு கலைஞன் மட்டுமல்ல சமூக சேவகனும் கூட. யாருக்கும் தெரியாமல் மைக்கல் அதிகம் செய்துள்ளார். அவரது அல்பங்கள் பிரமிப்பூட்டுபவை. மகி மிக வித்தியாசமானவை.

    மைக்கலது ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    //palli. on June 26, 2009 12:50 pm அக்கு அவரது அண்ணாவின் எழுத்தில் படித்தேன்; அதுமட்டுமல்ல இந்த எண்ணத்தில் பிறகு அவர் சகோதரர்களை கூட இவர் மதிப்பதில்லை;அவர்களும் இவரை மதிப்பதில்லை பக்கியாவின் உலக செய்தியில் படித்ததுதான்; இவர் ஆரம்ப காலங்களில் சகோதரங்களுடன்(சிறுவனாக) இசைநிகழ்வுகள் பலதை நான் CD பார்த்துள்ளேன்.மிக அழகானவர் இப்போது உள்ளதை விட://

    பல்லி,
    மைக்கல் ஜாக்ஸன் நடத்திய இசை நிகழ்ச்சி ஒன்றின் போது மின்சாரம் தாக்கி எரிந்த போது அவரது உடலில் பல பகுதிகளில் எரிகாயம் வெள்ளையாக தெரியத் தொடங்கியது. அதை மறைப்பதற்கே அவர் தோல் மாற்று சிகிச்சையை செய்து கொண்டார். வேறு அவர் வெள்ளையாகும் எண்ணத்தோடு செய்து கொள்ளவில்லை. அவர் உண்மையிலேயே கறுப்பாகத்தான் அழகாயிருந்தார்.

    -He won a 1.5 million dollar settlement with PepsiCo in 1984 over being burned during the shooting of a commercial, and donated the entire settlement in order to help establish “The Michael Jackson Burn Center”.

    http://www.examiner.com/x-6844-Anchorage-Family-Entertainment-Examiner~y2009m6d25-Explaining-Michael-Jackson-and-other-forces-of-nature-to-the-next-generation

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    நான் ”அமெரிக்க கறுப்பின சரித்திரம்” என்ற பாடத்தை கல்லூரியில் எடுத்த போது கறுப்பின மக்கள் எவ்வாறு தமது மரியதைக்குரியவர்களை தீர்மானிக்கிறார்கள்ஏனும் விவாத்ததில் மைக்கல் ஜக்சன், சுப்பிரீம் கோட் நீதிபதி கிளரன்ஸ் தோமஸ், விளையாட்டு வீரன் ஓ.ஜே.சிம்சன் போன்றோரின் பெயர்கள் உதாரணம் காட்டப்பட்டன.
    மைக்கல் ஜக்சன் ‘வெள்ளை’ ஆக மாறியதனால் கறுப்பின மக்களின் நக்கலுக்கு உள்ளானார்.
    கிளாரன்ஸ் தோமஸ் கறுப்பினராக ஏழ்மையில் வளர்ந்தும் ஏழைகளின் வேதனையை அனுதாபக்கண்ணோட்டத்துடன் பார்க்காமல் ‘வெள்ளை’ கண்ணோடு பார்த்ததற்காக செனற் விவாதததில் கறுப்பினப் பெண்ணால் பாலியல் குற்றம் சாட்டப்பட்டபோது கறிப்பின மக்களே தூக்கி எறிந்தனர்.
    ஓ.ஜே. சிம்சன் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு விடுவிக்கப்பட்ட போதும் கறுப்பின மக்களால் இன்றுவரை அனுதாபத்துக்குரியவராகவே காணப்படுகிறார்.

    எந்த ஒருவனும் என்னதான் மேலானவனாக இருந்தாலும் சொந்த இனத்தின் விருப்பங்களுக்கு மாறாக நடந்தால் தனது சொந்த இனத்தால் நிராகரிக்கப்படுவான்.

    (மைக்கல் ஜக்சன் தீக்காயம் பட்டோ அல்லது நோயினாலோ திட்டு திட்டாக வெள்ளை ஆகியிருந்தார் அதனாலேயே முழுவதும் வெள்ளை என்கின்ற விவாத்ததில் கறுப்பின மக்களால் வைக்கப்படும் எதிர் வாதம்…
    1.அவர் ஏன் அவ்வெள்ளைத்திட்டுகளை மறைக்க கறுப்பு பிளாஸ்ரிக் சேஜரி செய்திருக்கக்கூடாது?
    2. அப்போ ஏன் உடல் முழுவது வெள்ளையாக மாற்ற வேண்டும்? முகத்தையும் கைகளையும் மட்டும் மாற்றி இருக்கலாமே?
    3.அவர் ஏன் மூக்கினை நீளமாகவும் மெலியதாகவும் மாற்றினார்?
    4. அவரிம் கன்ன எலும்புகள் ஏன் உயர்த்தப்பட்டன?
    5. ஏன் இமைகள் உயர்த்தப்பட்டன்?

    இவ்வாறு பல கேள்விகள்!

    Reply
  • மகுடி
    மகுடி

    உலகமே கண்ணீர் வடிக்கும் போது , அங்கே சொந்த இனத்திலும் சிலர் அடங்குவர். ஓ.ஜே. சிம்சன் தன் வெள்ளையின மனைவியை கொன்றதால் அவரை அவரது இனம் உயர்வாக்கியதா? அடுத்தவன் மகிழ்ச்சிக்காக பொய்யாக வாழ்வதை விட , தனது மகிழ்ச்சிக்காக உண்மையாக வாழ்தலே சிறந்தது.

    இங்கே //நான் ”அமெரிக்க கறுப்பின சரித்திரம்” என்ற பாடத்தை கல்லூரியில் எடுத்த போது கறுப்பின மக்கள் எவ்வாறு தமது மரியதைக்குரியவர்களை தீர்மானிக்கிறார்கள்ஏனும் விவாத்ததில் மைக்கல் ஜக்சன், சுப்பிரீம் கோட் நீதிபதி கிளரன்ஸ் தோமஸ், விளையாட்டு வீரன் ஓ.ஜே.சிம்சன் போன்றோரின் பெயர்கள் உதாரணம் காட்டப்பட்டன.- சாந்தன் on June 26, 2009 3:30 pm//

    இது நீங்கள் எடுத்த பாடமா?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    மகுடி,
    சொந்த இனம் பெரிதாக கண்ணீர் வடிக்கவில்லை என்பதே உண்மை. 24 மணித்தியால தொலைக்காட்சிக்காரர் செய்ய ஒன்றுமில்லாததனால் அதை ஏதோ பெரிய நிகழ்வாக ‘புனைவது’ வேடிக்கை தான். எனது நண்பர் UCLA இல் கல்வி கற்கிறார். அங்கே வைத்திய சாலை முன்னர் நிற்பதில் முக்கால் வாசிப்பேர் அக்கல்லூரி மானவர்கள். வேடிக்கை பார்க்க நிற்கிறார்கள் எனக் கூறினார். அவர்கள் அங்கே நின்றது மைக்கலின் ‘வினோதமான’ சகோதரி லற்றோயா வந்தால வேடிக்கை பார்க்க. அவர் பலவேளைகளில் மலைப்பாம்பு ஒன்றுடன் வருவா!!!
    மற்றும் நியூ யோர்க்கில் அப்போலோ அரங்கின் முன்னர் கூடியிருப்போர் அப்பகுதி வீதியால் போவோர் வருவோர் ஆடுவதை நின்று பார்த்து செல்கின்றனர். மேலும் மைக்கல் ஜக்சன் பிறந்த வீட்டின் முன்னர் நிற்போர் மிகக்குறைந்த எண்ணிக்கையினரே. செய்தியாளர் ‘இன்னும் சனம் வரவில்லை நேரம் செல்ல செல்ல வருவார்கள் என நினைக்கிறேன்’ என்று சொல்லி தனது ‘கவரேஜை’ நியாயப்படுத்தியது பரிதாபமாக இருந்தது!

    எடுத்த பாடம், கொடுத்த பாடம் எனக் குழப்பியதற்கு மன்னிக்கவும்.
    நான் இது படித்த பாடம்! பாடம் படிப்பிக்க்கும் வல்லமை எனக்கில்ல்லை!

    Reply
  • romeo
    romeo

    இசை உலகிற்கு இது ஒரு துக்ககரமான செய்திதான். ஆனால், ஒரு பிரபல்யமான பாடகர் எதற்காக இயற்கைக்கு மாறாக தனது உடலையும் உருவத்தையும் சத்திரசிகிச்சை மூலம் மாற்ற வேண்டும். இதனாலேனுடல் நோவுகளுக்கு ஆளாகவேண்டும். இளமையில் கறுப்பாக மிகவும் அழகாக தோற்றமளித்த இவர் இறுதியில் ஒரு செயற்கை மனிதனாக, அதிலும் ஓர் நடைப்பிணம் போன்று வாழ்ந்ததில் இவர் எதனை பெரிதாக சாதித்து விட்டார்? இயற்கையான நிறத்துடனும் உடல் அமைப்புடனும் இருந்திருந்தால் இவர் இன்னும் பல்லாண்டுகள் இவ்வுலகில் புகழோடும் உயிரோடும் வாழ்ந்திருக்கலாமென்ற எனது கருத்தில் ஏதாவது தவறிருந்தால் மன்னித்தருளவும். ஏனெனில் நானும் இவருடைய ரசிகர்களில் ஒருவன்.- இயற்கைக்கு செயற்கை எதிரிதான்.

    Reply
  • suban
    suban

    இசைக்கு கறுப்பு வெள்ளை கிடையாது. மைக்கல்ஜக்சன்மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கட்டும். அதில் பல உண்மையானதாகவும் இருக்கட்டும். அந்த மனிதனின் மறைந்தவுடன் உலகத்தில் மேலெழுந்த சோகங்கங்கள்.. பின்னூட்டங்கள் ஜக்சனின் இசைக்கு கலைக்கு கிடைத்த மரியாதை. வரலாற்றில் ஜக்சனுக்கும் மறையாத இடமுண்டு.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /ஆனால் இவர் தான் ஒரு கறுப்பினத்தவராய் இருக்க விரும்பாமல் வெள்ளை இனத்தவராக மாற முடிவெடுத்து (அதுதான் அவர் அன்று செய்த தற்கொலை)/—
    –இந்தப் படிப்பினையை கலைஞர் கருணாநிதி குடும்பம் உணர்ந்ததாக தெரியவில்லையே!,அல்லது,”பச்சோந்தித்தனம்” எப்படி கடைப்பிடிப்பது என்று “மைகேலுக்கு” புலப்படவில்லையோ என்னவோ!.இவர்களின்(மைக் டைசன்,முகமதுஅலி கூட)திறமைகளை வைத்து பணம் பார்க்கும்(புலன் பெயர் த…?)நிகழ்ச்சி அமைப்பாளர்கள் செய்யும் திருகுதாளங்கள் இது.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பணம்படைத்தால் பைத்தியகார வேலைகளே செய்வார்கள். இதற்கு யாரும் அரசியல் சாயம் பூசாதீர்கள். மனிதவாழ்வின் தேவைகளில் இசையும் ஒரு சிறுஅங்கமே! அந்தஅளவில் பெரும்பால இளைஞர்களுக்கு ஏன் இளவயதை தாண்டியவர்களுக்கும் ஒரு “கிளுகிளுப்பை” ஏற்படுத்தி வைத்திருந்தார். இவரின் தகமையை அறிந்து இவரால் பலன்பெற்றவர்கள் ஏராளமான நிறுவனத்தினர். மைக்கல் ஜக்சன் வாழ்வுக்கும் கறுப்பு இனமக்களின் போராட்ட வாழ்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கடைசிக்கால வாழ்வு வேதனை நிறைந்தாகவே இருக்கிறது ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் நீதிமன்றங்களும் அவரை படாதபாடு படுத்திவிட்டன. இந்தநேரத்தில் கறுப்பு வெள்ளைப்பற்றி எந்த அபிராயத்தையும் கொண்டிருக்கவில்லை. அவர் நினைத்தது ஒரு பெட்டிக்கடையோ சதாரணகூலியாள் தரத்திலையோ தனது வாழ்வு அமைத்திருந்தால் நான் நின்மதியாக இருந்திருப்பேன் என்பதே. அவர் ஒருஇசை சக்கரவர்த்தி என்பதைவிட சதாரண மனிதவாழ்வுக்கு உரியபெறுமதி அவருக்கு கிடைக்காமல் போனதைப்பற்றி நான் மிகவும் கவலைப்பட்டேன். அதைத்தான் மைக்கல் ஜக்சனும் இறுதிகாலத்தில் விரும்பினார்.

    Reply
  • palli.
    palli.

    ஒரு இறப்பில் யாரும் இன்பம் கானமுடியாது; ஆனால் விமர்சனம் என வரும்போது முகம் பார்க்க முடியாது, பல்லி அவரது இசையை குறை கூறவில்லை,பொப் மேதை எனதானே கூறி உள்ளேன்; அதுக்காக அவர் செய்த நல்ல காரியங்கள் சட்டம் வரை போய் அது கலப்படம் இல்லாத குற்றவாழிதான் மக்கல் ஜக்ச்சன் என தீர்ப்பு வந்ததையும் யாரும் மறுக்க முடியாது; எனது வாதம் ஒரு இனிமையான இசை மேதை தனது தகாத கரியங்களால் இந்த உலகை விட்டு பிரிந்து விட்டார் என்பதே; இது கவலைதானே தவிர கழிப்புனர்ச்சியல்ல;

    Reply
  • S Murugaiah
    S Murugaiah

    தன் இசையால் உலகையே ஆண்ட இசை நடன சாகரம் சங்கமமான செய்தி கேட்டு இளவயதில் இருந்தே குறிப்பாக திரில்லர்/பிளைக்கோவைற் மூலம் என்மனதை ஆட்கொண்ட அந்த மாமேதை மறைந்த செய்தி என்கண்களில் பனித்த கண்ணீர்த்துளிகளினூடாக என்னை அறியாமலே அஞ்சலி செலுத்தியதை என் கண்ணீர் அஞ்சலியாக சமர்ப்பிக்கிறேன்.

    தயவு செய்து பல்லி … போன்ற பெயர்களில் விமர்சனம் செய்யும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
    காமாளைக் கண்ணனுக்கு கண்ட தெல்லாம் மஞ்சளாம், என்ற போர்வையில் விளக்கமில்லா அரசியல் பொழுது போக்கு விமர்சனங்களில் குறைகளாகவே எழுதும் நீங்கள் மாமேதை மைக்கல் ஜக்சனின் பிளாஸரிக் சத்திர சிகிச்சையை அவரின் மரணத்தின் பின் விமர்சித்தது உங்கள் அறிவு வரட்சியையும் பண்பில்லா வக்கிர சிந்தனை கொண்டவர்கள் என்பதையும் நீங்களாகவே ஒத்துக் கொண்டதைக் காட்டுகிறது. இதைத்தான் நுணலும் தன்வாயால் கெடும் என்பார்கள். விமர்சனம் எழுதுகிறோம் என்று வந்து எந்த இடத்தில் எதை சொல்வது என்ற பண்பு தெரியாமல் எழுதினால் அது குளிக்கப் போய் சேறுபூசின கதையாய் ஆகிவிடும்.

    ஒரு மாகா இசை இன்வென்ரர் சில புதிய கோணங்களில் சிந்தித்து தன்னை மாற்றியிருக்கலாம். இது அரசியல் அல்ல நீங்கள் நினைத்தபடி விமர்சனம் எழுத.

    நன்றி
    ச முருகையா

    Reply
  • நண்பன்
    நண்பன்

    உலக இசை நடன வரலாற்றில் தனித்துவமான ஒரு முறையை உலகுக்கு கொண்டு வந்ததில் மைக்கலின் பங்கு பெரும் பங்காற்றியுள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஒரு சில கட்டுக்கோப்புகளை உடைத்தெறித்து வித்தியாசமாக உலகத்தின் கண்களை வியக்கச் செய்த பெருமை மைக்கலையே சாரும். இவரது நடனங்களே இன்றைய தலைமுறையினரது மாற்றத்துக்கு வழி கோலியது. இவரது பாதிப்பு இவருக்குப் பின் அனைத்து நடன மற்றும் இசைக் கலைஞர்கள் பின் பற்றத் தொடங்கினர் என்றால் அது மிகையாகாது.

    ஒருவன் தனித்து நின்று வெற்றி பெறுவதற்கு மட்டுமல்ல, அதை கடைசி வரை அதே வகையில் தக்க வைத்துக் கொள்ள அரும்பாடுபட வேண்டும். அதை அவரது அடுத்த நிகழ்ச்சிக்காக காத்திருந்த ரசிகர்களின் காத்திருப்பும் , அந்த நிகழ்வின் டிக்கட்டுகளது விற்பனையும் எமக்கு கட்டியம் கூறுகின்றன.

    சில அரசியல் கண்ணோட்டம் உள்ளவர்களது பார்வைகள் , அவர்களது உண்மையை வெளியே காட்டுகிறது. கலைஞனை கலைஞனாக பார்க்க முயலுங்கள். அவர்களது தனிப்பட்ட விடயங்களை வைத்து சகதி பூசிப் பழகாதீர்கள். கலைஞனும் ஒரு சராசரி மனிதனே. அவனுக்கும் சில பலங்களும் பல பலவீனங்களும் இருக்கும். உலகத்தில் முகம் தெரியாதவர்களை கண்ணீரில் மல்க வைத்தது மைக்கலது திறமையே தவிர, அவரது தனிப்பட்ட வாழ்கையல்ல. மைக்கலது கலைச் சேவையால் மனித மனங்கள் ஆறுதல் அடைந்ததே தவிர , சமுதாய சாவுக்கு வழி கோலவில்லை.

    மென்மையான குழந்தை தனமான இதயம் கொண்டவர் மைக்கல் என்பதை அவரோடு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். கலைஞர்கள் உருவாகுவதில்லை. கலைஞர்கள் பிறக்கிறார்கள் என்பதே உண்மை. அந்த இரத்த துடிப்பு அனைவரிடம் இருப்பதில்லை. அது பிறப்போடு சம்பந்தபட்ட விடயம். எல்விஸ் பிரேஸ்லிக்குப் பின்னர் மைக்கல் அளவு யாரும் கவரப்படவில்லை.

    ஒரு திறமையான கலைஞனின் இழப்பில் துயர் கொண்டு அவனுக்கு அஞ்சலி செய்வோம்.

    மைக்கலுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.

    Reply