கருத்துப்புலிகள் அல்லது சற்றேறக்குறைய காகிதப்புலிகள் : ஆதவன் தீட்சண்யா

Athavan TheedchenvanTamilnathy._._._._._.

(ஈழத் தமிழர்களுடைய பிரச்சினை தமிழகத்திலும் நிறைந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது தெரியாததல்ல. அதேநேரம் இப்பிரச்சினை தமிழக அரசியல் தளத்தைக் கடந்து இலக்கிய மற்றும் சிற்றிதழ் தளங்களிலும் சர்ச்சைக்குரிய விடயமாக ஆகியுள்ளது. ஈழத்தமிழர்கள் மத்தியில் உள்ள அரசியல் முரண்பாடுகள் தற்போது தமிழகத்திலும் பிரதிபலிக்கின்றது. தமிழ்நதி – ஆதவன் தீட்சண்யா போன்றோரின் கருத்துநிலை முரண்பாடுகள் அதனை வெளிப்படுகின்றது.

ஆதவன் தீட்சண்யா தேசம்நெற் க்கு அனுப்பி வைத்துள்ள கட்டுரை இம்முரண்நிலையை வெளிப்படுத்தி நிற்கின்றது. கட்டுரையை வாசிப்பவர்கள் அதன் தொடர்ச்சியை புரிந்து கொள்வதற்காக தமிழ்நதி தனது புளொக்கில் வெளியிட்டுள்ள கட்டுரைகள் பின்னே இணைக்கப்பட்டு உள்ளது.)
._._._._._.

தமிழ்நதி அவர்களுக்கு,
வணக்கம்.                                                                                                                                 

1.
நான் உங்களைப்போல புலியடிமையல்ல. அல்லது மொன்னையான புலி ஆதரவு / எதிர்ப்பு அமைப்பு எதுவொன்றின் உறுப்பினனுமல்ல. எனவே இலங்கை / ஈழம் சார்ந்து உணர்ச்சிப்பிழம்புகள் நடத்தும் எந்தவொரு விவாதத்திலும் குறுகிய ஆதாயங்களுக்காக பங்கேற்கும் நோக்கம் எதுவும் எனக்கில்லை. எனது வாசிப்பு மற்றும் தோழர்கள் நண்பர்களுடனான உரையாடல்கள் வழியே எட்டிய புரிதல்கள் வழியே நான் இலங்கைத் தமிழர் பிரச்னையை புரிந்துகொள்கிறேன். சிங்களப் பேரினவாதத்தால் பீடிக்கப்பட்ட ஒரு அரசின் பயங்கரவாதத்திற்கு ஆளாகிவிட்ட இலங்கைத் தமிழர்களை நான் வாழும் காலத்தின் மிகக்கொடிய துயரமாக கருதுகிறேன்.

அதேவேளையில் ஜனநாயக உரிமைகளுக்காவும் சுயமரியாதைக்காவும் இலங்கை மக்கள் மேற்கொண்ட போராட்டத்தை என்றென்றைக்குமாக மிகப்பெரும் பின்னடைவுக்குள் தள்ளிவிட்டவர்கள் என்ற முறையிலும் ஏகப்பிரதிநிதித்துவம் என்கிற தன்முனைப்பில் பிற இயக்கங்களையெல்லாம் அழித்தொழித்தவர்கள் என்பதற்காகவும் புலிகள் மீது எனக்கு கடும் விமர்சனங்களுண்டு. புலிகள் இயக்கத்தின் பாசிசத்தன்மை, இந்துத்துவ வெறி, இஸ்லாமிய எதிர்ப்பு, சாதியழிப்பு பேசியவர்களையும் கம்யூனிஸ்ட்டுகளையும் தொழிற்சங்கத் தலைவர்களையும் தலையெடுக்கவொட்டாமல் தீர்த்துக்கட்டியவர்கள் என்று அந்த விமர்சனங்களுக்கான காரணங்கள் இன்னும் நீள்கின்றன. ஆகவே இலங்கைத் தமிழர் பிரச்னையில் எனது அக்கறை புலிகள் சார்ந்தது அல்ல, அது எளிய மக்கள் சார்ந்தது. இனவெறி ராணுவத்தின் இலக்காகவும் புலிகளின் கேடயமாகவும் சிக்கித் தவித்த லட்சக்கணக்கான மக்கள் குறித்தது. தமிழ்நாட்டின் அகதிகள் முகாமில் கைதிகளைப் போல வதியும் ஏதிலிகள் பற்றியது. ( இனவுணர்வின் மிகுதியில் எகிறிக் கொண்டிருக்கும் பல தலைவர்கள் இருக்கும் தமிழ்நாட்டில் அகதி முகாம்கள் எந்தளவிற்கு வாழத்தகுதியற்றதாய் இருக்கின்றன என்பது நீங்கள் அறிந்ததுதானே? )

தங்களது உட்சாதிப் பிரிவைக்கூட தாண்டி வெளியே வரத் துணியாத சாதிவெறியர்கள் இங்கே எழுப்பும் தமிழ் இனம் என்கிற முழக்கத்தின்பால் எனக்கு எப்போதும் ஈர்ப்பு ஏற்பட்டதில்லை. தலித்துகள் தாக்கப்படும்போதெல்லாம் இவர்கள் தீண்டத்தக்க சாதியினராகவும், சிறுபான்மையினர் தாக்கப்படுகையில் சுத்த இந்துக்களாகவும் பெண்ணுரிமை குறித்த விவாதங்களில் உள்ளாடையை கழற்றிக் காட்டத் துணிகிற ஆண்களாகவுமே வெளிப்படுகின்றனர். இத்தகைய குறுகிய வட்டங்களுக்குள் அடைபட்டுக் கிடக்கிற இனவுணர்வுத் திலகங்கள்தான் இன்று உங்களைப் போன்றவர்களின் கபடம் நிறைந்த பேச்சுக்கு கைதட்டும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அதிகாரப் பெருமிதமும் சாதிய சிறுமதியும் கொண்ட இவர்கள் இலங்கையின் பூர்வீகத் தமிழர்களை தம் சொந்த இனமாகவும், தமிழ்நாட்டிலிருந்து 150 வருடங்களுக்கு முன்பு இலங்கைக்கு பிடித்து செல்லப்பட்ட தமிழர்கள் குறித்து  பாராமுகமாகவும் இருக்கின்றனர்.

இவற்றையெல்லாம் உள்ளடக்கியே புதுவிசை இதழின் தலையங்கங்கள், நேர்காணலில் எழுப்பப்படும் கேள்விகள் அமைந்துள்ளன. எனவே ஈழப்பிரச்னையில் உள்ளன்று வைத்து புறமொன்று பேசி உங்களை நான் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டதாக கருதவில்லை. உங்களது நிலைப்பாட்டைச் சொல்ல உங்களுக்கிருக்கும் அதே உரிமை எனக்கும் உண்டு. ஆனால் அப்படியரு ஜனநாயகப் பண்பை கடந்தகாலத்தைப் போலவே இனியும்கூட நீங்கள் எட்டப்போவதில்லை என்பதற்கு என்னைப் பற்றிய உங்கள் அவதூறான பதிவே நிரூபணம்.

2.

‘ஓரளவுக்கு பதட்டம் தணிந்தால்கூடப் போதும், நான் ஊருக்குப் போய்விடுவேன்’ என்று கீற்று.காம் நேர்காணலில் தாங்கள் தாய்மண் பாசத்தோடு சொல்லியிருந்தபடியால் இந்நேரம் இலங்கைக்கு பறந்தோடிப்போய் மக்களோடு மக்களாகத்தான் இருப்பீர்கள் என்றெல்லாம் அதீதமாக நான் நினைத்துக்கொண்டிருக்கவில்லை.  ஆகவே மதுரை முகாமில் உங்களைப் பார்த்தபோது (அகதிகள் முகாமில் அல்ல- அங்கு போய் அவதியுற உங்களுக்கு தலையெழுத்தா என்ன?) எனக்கு சற்றும் அதிர்ச்சியில்லை. எனக்குத் தெரியும், இலங்கை முழுவதும் ஏ.சி.செய்யப்பட்டாலும்கூட நீங்கள் நாடு திரும்ப மாட்டீர்கள் என்று. இலங்கை ராணுவத்தாலும் உங்களது பிரியத்திற்குரிய போராளிகளாலும் சுடுகாட்டுச் சாம்பல் கொண்டு நிரவப்பட்டுவிட்ட அந்த மண்ணுக்குத் திரும்புகிற அளவுக்கானதல்ல உங்களது தாய்நாட்டு பக்தி. ஏனென்றால் நீங்கள் நேசித்தது நாட்டையோ மக்களையோ அல்ல, புலிகளை. (உடனே ஆதவன் என்னை நாட்டை விட்டுப் போகச் செல்கிறான் என்று திரித்து அடுத்தப் பதிவு எழுதி மூக்கு சிந்த பதைக்காதீர்கள் தமிழ்நதி. அந்த மலிவான உத்தி எல்லா நேரத்திலும் கைகொடுக்காது. )

ஆனால் நான் ஆச்சர்யப்பட்ட விசயம் என்னவென்றால், ‘இந்த தேவேந்திர பூபதியிடமிருந்து எப்படி என்னை தற்காத்துக் கொள்வது என்பதுதான்  தமிழ்நாட்டில் எனக்கு மிகப்பெரிய சவாலாகவும் திகிலாகவும் இருக்கிறது…’ என்று 2009 ஜனவரியில் அஞ்சி நடுங்கிய தமிழ்நதி இப்போது ஏன் அதே தேவேந்திரபூபதி நடத்துகிற முகாமுக்கு வலிய வந்திருக்கிறார் என்பதுதான். ஒருவேளை பூபதியைக் கையாளும் தற்காப்புக்கலையை அவர் பயின்றிருக்க வேண்டும் அல்லது சிங்கத்தின் குகைக்குள்ளேயே சென்று அதன் பிடரியை உலுக்குவது என்று தீர்மானித்து புறநானுற்று மறத்தமிழச்சியாக மனதளவில் மாறியிருக்கக்கூடும் என்று சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

மதுரை கூடல் சங்கமத்தின் இறுதி அமர்வில் தாங்கள் பேசத்தொடங்கும் போது ‘எனக்கு கதைகள் அவ்வளவாக வராது, அவை எல்லாமே சோதனை முயற்சிகள்தான்’ என்று சொன்னீர்கள். 24 மணிநேர அவகாசம்கூட எடுத்துக்கொள்ளாமல் ரெடிமிக்ஸ் சாம்பார் செய்கிற அதிரடி வேகத்தில் ‘ஆதவன் தீட்சண்யா தந்த அதிர்ச்சி’ என்ற தலைப்பில் பிரமாதமான ஒரு கதையை எழுதத் தெரிந்த  நீங்களே இப்படி உங்களை மட்டம்தட்டிக் கொள்ள வேண்டியதில்லை. ஒட்டுமொத்த நிகழ்விலிருந்தும் உங்களது நோக்கத்திற்கு இயைவான துணுக்குகளை மட்டும் தேர்ந்தெடுத்து நீங்கள் எழுதியிருக்கும் இந்த கதைக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களின் எண்ணிக்கையைப் பார்த்தாலே தெரியவில்லையா உங்கள் கதை வாசகர்களை ஈர்க்கும் வல்லமை கொண்டது என்பது? நீங்கள் திரித்துச் சொன்ன கதையை உண்மையென நம்பி ஈழப்போராட்டத்தின் லேட்டஸ்ட் துரோகி ஆதவன்தான் என்று முத்திரைக் குத்துவதற்கு சிலர் கிளம்பியிருப்பதும்கூட உங்கள் கதைத்திறமைக்கு கிடைத்த வெற்றி என்று கொண்டாடுங்கள் தமிழ்நதி.

(ஷோபா சக்தி ராஜபக்ஷேவிடம் வாங்கியப் பணத்தில்  ஒரு பகுதி ஆதவனிடம் இருப்பதாகவும் அந்தப் பணத்தில்தான் இப்படி மிடுக்காக திரிகிறார் என்றும், செருப்பால் அடிக்கவேண்டும் என்றும் வந்த பின்னூட்டங்களை மகிழ்ச்சியோடு பிரசுரித்துவிட்டு ‘‘ஆதவன் மீதும் ஷோபா சக்தி மீதும் தாக்குதல் தொடுத்து பின்னூட்டங்களை நான் வெளியிடவில்லை, எனக்கென்று சில அடிப்படை நேர்மைகள் உண்டு’’ என்று  மற்றுமொரு சுவாரசியமான கதையை தொடங்கியிருக்கிறீர்கள். இப்படியெல்லாம் பேசுவதற்கு கூசவில்லையா உங்களுக்கு? பணம் பெற்றிருக்கிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தவரும் மற்றும் அதை ‘நேர்மையோடு’ வெளியிட்ட தாங்களும் இந்த அவதூறுக்கான ஆதாரத்தை அவசியம் வெளியிட்டாக வேண்டும். அதுபோலவே செருப்பால் அடிக்கவிரும்புகிறவர் அநாமதேயம்போல் ஒளிந்து கொண்டிருக்காமல் நேருக்குநேர் என்னைச் சந்திக்க வேண்டும். அந்த சந்திப்புக்கான ஏற்பாட்டை அவருடைய நண்பர் என்ற வகையில் தாங்கள்தான் செய்யவேண்டும். இவ்விரண்டு விசயத்திலும் உங்களிடம் ஒருபோதும் சமரசம் கிடையாது) 

28.06.08 அன்று நடந்தவை எல்லாவற்றையும் மீண்டும் நன்றாக நினைவுபடுத்திக்கொண்டு தாங்கள் எழுதியிருப்பதெல்லாம் உண்மையா என்று ஒருமுறை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் என்றெல்லாம் நான் வற்புறுத்தமாட்டேன். அந்தளவிற்கு உங்களுக்கு அறிவு நாணயம் இருந்திருந்தால் இப்படியரு கட்டுக்கதையை எழுதத் துணிந்திருக்கமாட்டீர்கள். எனவே நடந்ததை நானே ஒருமுறை உங்களுக்கு ரீவைண்ட் செய்து காட்டவேண்டியிருக்கிறது. உலகத்திலிருப்பவர்களெல்லாம் எங்களுக்காக ரத்தக்கண்ணீர் வடிக்க வேண்டும், ஆனால் மற்றவருக்காக நாங்கள் ஒரு சொட்டு உப்புக்கண்ணீரைக்கூட சிந்தமாட்டோம் என்று சத்தியம் செய்துவிட்டு வந்திருக்கிற உங்களுக்காகவெல்லாம் எங்களது நேரத்தை செலவிட வேண்டியிருக்கிறதே என்ற ஆற்றாமையோடுதான் இதை எழுதித் தொலைக்க வேண்டியிருக்கிறது.

அந்த அமர்வில் என்முறை வந்தபோது, எழுதுவதில் நான் சந்திக்கும் இடர்ப்பாடுகள் குறித்து மட்டுமே பேசிவிட்டு அமர்ந்துவிட்டேன். எனக்கு அடுத்து நீங்கள் பேச வந்தீர்கள். ‘எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ’ என்று நீங்கள் யாரையோ பார்த்து கேள்வி கேட்டிருந்தால் நான் என்பாட்டுக்கு இருந்திருப்பேன். ஆனால் ‘ சமூக ஒடுக்குமுறைகளை காத்திரமாக எதிர்த்து எழுதுகிற ஆதவன் தீட்சண்யா ஏன் ஈழத்தமிழர் குறித்து எழுத மறுக்கிறார்’ என்று நீங்கள் மிக நேரடியாக என்னைக் கேட்டதை முன்னிட்டே நான் பேசித்தொலைக்க வேண்டியதாயிற்று என்பதையாவது மறுக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். நரியோ நதியோ இடமும் போகாமல் வலமும் போகாமல் என்மீதே குறிவைத்துப் பாய்ந்தநிலையில்தான் நான் பேச வேண்டியிருந்தது என்பதை ஒப்புக்கொள்ளவும்கூட உங்களுக்கு ஆதரவாக ஊளையிட்டவர்கள் தயாரில்லாத நிலையில்தான் இந்த தன்னிலை விளக்கம்.

3.

‘‘நான் ஏன் எழுதவில்லை என்று கேட்க தமிழ்நதிக்கு உரிமையிருப்பதைப் போலவே தமிழ்நதியிடம் கேட்பதற்கு சில கேள்விகளும் அதை கேட்பதற்கான உரிமையும் எனக்கிருப்பதாக கருதுகிறேன். தமிழ்நாட்டில் இருக்கிற தமிழ்நதி இங்கு நிகழும் எத்தனை ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்?

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் தமிழகத்தின் தென்மாவட்டங்களிலிருந்து இலங்கைக்கு தோட்டத் தொழிலாளர்களாக ஆடுமாடுகளைப்போல லட்சக்கணக்கான தமிழர்கள் பிடித்துச் செல்லப்பட்டனர்.  அந்த அடிமைத்தனத்திலிருந்தும் கொடிய சுரண்டலிலிருந்தும் அட்டைக்கடியிலிருந்தும் தம்மை விடுவித்துக் கொள்வதற்காக அவர்கள் நடத்தியப் போராட்டங்களுக்கு ஆதரவாக ஈழப்படைப்பாளிகள் எத்தனைபேரின் கவிமனம் பதறித் துடித்திருக்கிறது? பிறந்தமண்ணை பிரிந்து ஏறத்தாழ 150 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் இலங்கை அரசாங்கம் அவர்களது குடியுரிமையைப் பறித்து சுமார் 10 லட்சம் பேரை நடுத்தெருவில் நிறுத்தியபோது ஈழப்படைப்பாளிகள் எத்தனைபேர் தங்களது ஆவேசத்தை வெளிப்படுத்தினார்கள்? ( இந்தியத் தமிழர்களுக்கு ஆதரவாக செல்வநாயகம் பாராளுமன்றத்தில் பேசியதை படைப்பாளிகளின் கணக்கில் வரவி வைக்கத் துணிந்துவிடாதீர்கள்)

2005 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழக கருத்தரங்கு ஒன்றில் எழுத்தாளர் அந்தனி ஜீவா, ‘இன்றளவும்கூட இலங்கைத்தமிழருக்கும் இலங்கையிலுள்ள இந்தியத்தமிழருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டதை சமீபத்திய செங்கதிர் இதழ் மறுபிரசுரம் செய்துள்ளதே- அதை என்னவென்று புரிந்து கொள்வது? இந்தியத் தமிழர்களை தோட்டக்கூலிகள், கள்ளத்தோணிகள் என்று இலங்கைத்தமிழர்கள் இன்றளவும் ஏளனம் பேசுவதைக் கண்டித்த ஈழப்படைப்பாளிகள் என்று யாரைக் காட்டுவீர்கள்? இந்தியாவிலிருந்து பிடித்து செல்லப்பட்ட இந்த மலையகத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள் என்பதால் அவர்களை தமிழர்கள் என்று இனரீதியாக இணைத்துக்கொள்ள யாழ்ப்பாண வெள்ளாள மனநிலை இடம் கொடுக்கவில்லை என்பதைக் கண்டித்து எழுதிய ஈழப்படைப்பாளிகள் உண்டா? 

தமிழ்பேசும் முஸ்லிம்கள் அனைவரையும் ஈழ விரோதிகள் என்று முத்திரை குத்தி 48 மணி நேர கெடு விதித்து  500 ரூபாய் பணம் அல்லது அதற்கீடான பொருளுடன் வெளியேற்றிய புலிகளின் இனச்சுத்திகரிப்பைக் கண்டித்த படைப்பாளி எவரேனும் உண்டா ஈழத்தில்? 

தமிழ்நாட்டில் வெண்மணியில் 44 பேர் எரித்துக் கொல்லப்பட்டபோது ஈழத்திலிருந்து எந்த குரலும் ஒலிக்கவில்லை. திண்ணியத்தில் தலித்துகள் வாயில் மலம் திணிக்கப்பட்ட கொடுமையை எதிர்த்தோ இதோ இப்போதும் உத்தபுரத்தில் மறித்து நிற்கிற சாதிச்சுவரை இடிக்க வேண்டுமென்றோ ஈழத்திலிருந்து எழுந்த தமிழினக்குரல் எதுவுமுண்டா? 

இதையெல்லாம் நீங்கள் செய்யவில்லை என்பதற்காக நாங்களும் எழுதவில்லை என்று ஏட்டிக்குப் போட்டியாக – டிட் ஃபார் டாட் என்று நான் சொல்வதாக நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது. இலங்கைத்தமிழர் மீது நிகழ்த்தப்படும் கொலைபாதகங்களை ஏற்றுக்கொள்கிறவர்கள் இங்கு யாருமில்லை. அது குறித்த ஆழ்ந்த கவலைகள் எமக்குண்டு. ஆனால் அதற்காக ‘ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை?’ என்று காசி ஆனந்தனைப்போல அதிகாரத்துக்காக நான் எழுத முடியாது.

இலங்கைத் தமிழர் பிரச்னை என்பது மட்டுல்ல, பொதுவாகவே சமகால நிகழ்வுகளை உள்வாங்கிச் செரித்து படைப்பாக வெளிப்படுத்துவதில் தமிழகப் படைப்பாளிகளிடம் ஒரு மனத்தடை இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஏதோ ஒரு கண்ணி அறுபட்டுக் கிடக்கிறது. ஒருவேளை கூட்டாக விவாதித்து அதை கண்டுபிடிப்போமானால் உடனடி நிகழ்வுகள் மீது படைப்புகள் வரலாம். அதுகுறித்து வேண்டுமானால் பேசலாம்…’’

4.
மேற்கண்டவை தான் அந்த அமர்வில் நான் பேசியவை. இவையெல்லாம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் கைவசமிருக்கும் வீடியோ பதிவில் இடம் பெற்றிருப்பது ஒரு ஆறுதலான விசயம்தான். அதை விடுத்து  உங்கள் பதிவில் இட்டுக்கட்டி குறிப்பிட்டுள்ளவாறு ‘நாங்கள் ஈழத்தமிழர்களுக்காக பேசவேண்டுமென்று, குரல் கொடுக்க வேண்டுமென்று நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?’ என்றோ ‘எங்களுக்கே ஆயிரம் பிரச்னைகள் இருக்கின்றன, உங்களுக்காக நாங்கள் ஏன் பேச வேண்டும் எழுத வேண்டும்’ என்றோ நான் பேசவில்லை. பொய் சொல்லியாவது உங்கள் வலைப்பதிவின் வாசகர்களிடம் அப்ளாஷ் பெறுவது என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கும் பட்சத்தில் உங்களது பொய்யின் அளவு இன்னும் கூடும் என்று எதிர்பார்க்கிறேன்.

நான் பேசி முடித்ததும் நீங்கள், ‘நாங்கள் அதையெல்லாம் செய்யவில்லை என்பதற்காக இப்போது எங்களை பழிவாங்குகிறீர்களா ஆதவன்..?’ என்று கேட்டீர்கள். ஏட்டிக்குப் போட்டியில்லை என்றும் சமகாலப் பிரச்னைகளுக்கு முகம் கொடுப்பதில் தமிழகப்படைப்பாளிகளின் மனநிலை குறித்தும் நான் பேசியிருந்த நிலையில் நீங்கள் வேண்டுமென்றே திரித்துப் பேசுகிறீர்கள் என்பதை உணர்ந்தாலும் பொறுப்புடன் பதில் சொல்ல நான் மீண்டும் எழுந்தேன். அவ்வாறு நான் எழுந்ததை ‘ஆதவன் என்னைத் தாக்க எழுந்தார்’ என்று பதிவில் தலைவிரிக்கோலமாக எழுதாமல்  விட்ட உங்களது பெருந்தன்மைக்கு எப்படியாவது நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும். அப்படி நான் எழுந்தபோதுதான் யோக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவரான டி.கண்ணன் துள்ளியெழுந்து- வால் மட்டும் தெரிகிறது சார் என்று சொன்ன மாணவனைப்போல- ‘இது அயோக்கியத்தனம்’ என்று கத்தினார். எது அயோக்கியத்தனம் என்று நான் கேட்கும்போது, லேனாகுமார் ‘இது அவன் ஒருத்தனோட கருத்து. தமிழ்நாட்டு மக்களின் கருத்தல்ல…’ என்று கூறினார். ஒருவேளை என்னைத் தவிர்த்து மீதியுள்ள ஆறரைக்கோடி தமிழர்களும் அவரிடம் ஆதரவு கையெழுத்துப் போட்டு பிரமாணப்பத்திரம் எதுவும் கொடுத்திருக்கிறார்களோ என்னமோ என்று ஒருகணம் அசந்துதான் போனேன். அவர் சொன்னதும் ஒரு தனிமனிதனின் கருத்துதான் என்பதை மறந்துவிடுவதில்தான் உங்களுக்கெல்லாம் எவ்வளவு ஆர்வம்? அப்போது ஒரு கும்பல் எழுப்பிய சத்தத்தைக் கேட்டு ‘ஆதரவாக பல குரல்கள் எழுந்தன’ என்று எழுதி உங்களை நீங்களே இன்னும் எத்தனை காலத்திற்கு ஏமாற்றிக்கொள்ளப் போகிறீர்கள் தமிழ்நதி?

இந்தக்கட்டத்தில்தான் அரசு நுழைந்தார். அரசு என்றால் வன்முறைக்கருவி என்பது வீ.அரசுக்கும் பொருந்தும்போல. ‘ஆதவன் சொன்னதைப்போல இலங்கை வரலாற்றைப் பற்றி பேச இங்குள்ள பலரிடமும் ஏராளமான விசயங்கள் இருக்கு. அங்கு நிகழ்ந்த தவறுகள் ஏராளம். ஆனால் அதைப் பற்றி இப்போது பேசுவது உள்நோக்கம் கொண்டது.  ஆதவன் நடத்தும் புதுவிசை என்ற பத்திரிகையில் ( சிறுபத்திரிகை அரசியல் என்ற புத்தகத்தில் புதுவிசை என்ற பெயரை கவனமாக மறந்திருந்த அரசுவுக்கு இப்போது எப்படியோ ஞாபகம் வந்துவிட்டது பாருங்களேன்) சுரேந்திரன் என்பவருடைய பேட்டியை வெளியிட்டிருக்கிறார். (சுசீந்திரனைத்தான் சுரேந்திரன் என்கிறார்) அந்த சுரேந்திரன் புலிகளை கொச்சைப்படுத்தியிருக்கிறார். அதுவும் உள்நோக்கம் கொண்டது… ’ என்று நீட்டி முழக்கி ‘தவறான புரிதலோடு இருக்கிறீர்கள் என்று சொல்வதற்காக மன்னிக்க வேண்டுகிறேன் ஆதவன்…’ என்று ஆவேசமாக முடித்தார். (பலத்தக் கைத்தட்டல் என்று இவ்விடத்தில் ஒரு பிட்டை ஏன் குறிப்பிடாமல் விட்டீர்கள் தமிழ்நதி?).  நீங்கள்தான் தவறாகப் பேசியிருக்கிறீர்கள் அரசு. ஆகவே நீங்கள் கேட்டபடியே உங்களுக்கு மன்னிப்பு வழங்கத் தயாராக இருக்கிறேன் என்றேன்.

தாங்குமா அரசுவுக்கு? நான் சொன்ன வார்த்தையை வச்சிக்கிட்டு என்கிட்டயே விளையாட்டுக் காட்டுறியா… நான் தமிழ் வாத்தியான். என்கிட்ட வார்த்தை விளையாட்டுக் காட்டாதே… என்று எகிறினார். அவர் சலாமியா பாஷைக்குகூட வாத்தியாராக இருந்துவிட்டுப் போகட்டுமே, எனக்கென்ன அதைப்பற்றி? நான் அவரிடம் இலக்கணப்பாடத்தில் சந்தேகம் கேட்டு வந்த ஸ்கூல் பையனில்லையே? பின் எதற்கு இந்த எகிறாட்டம் என்று யோசிக்கும்போதே அடுத்த ரவுண்டுக்கு இறங்கினார் அரசு. ஈழத்தைப் பற்றி எனக்கொன்னும் சொல்லாதயா… போய்யா உன் வேலையப் பாத்துக்கிட்டு… என்றதும் ‘வாய்யா போய்யான்னு பேசறதுதான்  ஒரு பேராசிரியருக்கு அழகா?’ என்று நான் கேட்டதும் சுதாரித்துக்கொண்ட நமது மாண்புமிகு பேராசிரியப் பெருமகனார், ‘வாய்யா போய்யாங்கறது தமிழ்ல மரியாதையான சொல்தான்’ என்று பதவுரை பொழிப்புரை பகன்றார். ‘அப்படியானால் உங்க மாணவர்களை இனிமேல் உங்களை வாய்யா போய்யான்னே கூப்பிடச்சொல்லய்யா..’. என்று நானும் மரியாதை கூட்டி மறுமொழி பகன்ற பின் ஓரிரு மணித்துளிகளில் முகாம் முடிந்துவிட்டது.

ஆனால் இவ்விடத்தைப் பற்றி எழுதும்போதுதான் உங்களது ‘செலக்டிவ் அம்னீசியா’ வேலை செய்கிறது தமிழ்நதி. ‘இருவரும் வாய்யா போய்யா’ என்ற அளவுக்கு இறங்கினார்கள் என்று பொத்தாம் பொதுவாக உங்கள் பதிவில் எழுதிக் கடக்கிறீர்கள். அரசுவின் வாய்த்துடுக்கை கண்டிக்கத் துப்பில்லையா அல்லது தங்களுக்கு ஆதரவாக பேசியதற்கு பிரதிக்கருணையா?

விக்கிரமாதித்யன் இரண்டு நாட்களாக எதெதற்கோ ஸ்பிரிங் போல துள்ளிக் குதித்து என்னவெல்லாமோ பேசினார். அதையெல்லாம் குறிப்பிடாமல் உங்களுக்குத் தேவையானதை மட்டும் வெட்டி ஒட்டிக் காட்டுகிற இந்த எடிட்டிங் வேலையை எங்கே கற்றீர்கள்? அதற்கு பிறகு பேருந்தில் மதுரை வரை என் பக்கத்து இருக்கையில் அமர்ந்து அதே விக்ரமாதித்யன் என்னிடம் சொன்னதையெல்லாம் இப்போது நான் எழுதினால் என்ன சொல்வீர்கள்? 

விசயம் இத்தோடு முடியவில்லை. கூட்டம் முடிந்து வெளியே வரும்போது, ‘நீங்கள் வேறு ஏதோ கணிப்பில் என்னை டீல் செய்யறீங்க ஆதவன். தேவையில்லாமல் என்னை தமிழ் வாத்தியான் என்றெல்லாம் பேசிவிட்டீர்கள்’ என்றார் அரசு. நானொரு தமிழ் வாத்தியானாக்கும் என்று முண்டா தட்டத் தொடங்கியவர் அவர்தான், நானில்லை என்று தெரிவித்துவிட்டு நகர்ந்தேன். நாம் மீண்டும் பேசுவோம் என்றார். ‘இப்படித்தான் பேசுவோம் என்றால் நாம் பேசி என்ன ஆகப்போகிறது என்றேன். கையைப் பிடித்து நிறுத்திய  டி.கண்ணன் ‘நீ சொன்ன விசயமெல்லாம் சரிதாண்டா தம்பி. நேரம்தான் சரியல்ல’ என்றார். வெண்மணியில் இங்க எரியறப்பவும் அங்க அவங்க அநாதையாத்தாண்டா இருந்தாங்க என்று வரலாற்றை ஒரு தீட்டாக்கோணத்திற்கு திருப்பிவைத்தார் கண்ணன்.

இது பொருத்தமான நேரமல்ல, இந்த விசயத்தைப் பேச இதுவா நேரம்?, எப்ப எதைப் பேசணும்னு ஒரு கணக்கிருக்கில்ல என்ற வார்த்தைகள் ஈழப்போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து காதில் விழுந்து கொண்டேயிருக்கிறது. மாற்றுக்கருத்துகளில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொள்ள திராணியற்று நேரப்பொருத்தம் வாய்க்கவில்லை என்று இன்னும் எத்தனை காலத்திற்கு தப்பித்துக்கொள்ள முடியும்? மாற்றுக்கருத்து எதுவொன்றையும் பேச இது தருணமல்ல என்ற அறிவிப்போடு நிகழ்த்தப்பட்ட கொலைகள் தான் எத்தனை? அழிக்கப்பட்ட அமைப்புகள் ஒன்றா இரண்டா?

நேற்று பேச முயற்சித்தபோது, போராட்டக் களத்தில் இருக்கிறவர்களை விமர்சிக்கக்கூடாது என்று குரல்வளையைக் கவ்வினீர்கள். இன்று பேசும்போது அது இழவுவீடு என்கிறீர்கள். கடந்த கால் நூற்றாண்டு காலமாக இலங்கைத் தமிழ்மக்களின் வீடுகளில் தொடர்ந்து இழவு விழுந்து கொண்டேதான் இருக்கிறது. தியாகமென்றும் துரோகமென்றும் நானாவிதப் பெயர்களோடு மரணத்தை அவர்களுக்கு விநியோகித்தவர்கள் இப்போது கொல்லப்பட்ட நிலையில்தான் உங்களுக்கெல்லாம் இழப்பின் வலி உறைக்கிறது. ஆகவே இப்போதும் மௌனம் காக்கச் சொல்கிறீர்கள். இன்னும் நாலைந்து வருடம் கழித்துப் பேசினால், அதுதான் எல்லாம் முடிந்துவிட்டதே இப்போது எதற்கந்தப் பேச்சு என்று அப்போதும் வாயடைக்கப் பார்ப்பீர்கள்.  

நிகழ்ந்துவிட்ட இழப்புகளுக்கு சம பொறுப்பாளியாக இருந்தவர்களை அடையாளம் காட்டி அம்பலப்படுத்திவிடும் எந்தவொரு உரையாடலையும் மறுப்பதற்கே நேரப்பொருத்தம் என்ற வார்த்தைஜாலம் களமிறக்கப்படுகிறது. நேரம் கணிப்பதில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் பட்சத்தில் டி.கண்ணனும்  தமிழாசிரியர் அரசுவும் ஒரு நன்முகூர்த்தத்திற்காக காத்திருக்கட்டும். ஆனால் அதை என்மீது பிரயோகிக்க அவர்களுக்கு உரிமையில்லை.

உங்களுக்கு மேலும் சில விசயங்கள் தமிழ்நதி-

தங்களுக்கு உவப்பில்லாத விசயங்களைப் பேசுகிறவர்களையெல்லாம் ‘சிறுமை கொண்டவர்கள்’ என்று மதிப்பீடு செய்யும் புலிகளின் புத்தி உங்களுக்கும் இருக்கிறது. அதுசரி, ‘கத்த புத்தி செத்தால்தான் போகும்’ என்பது மூத்தோர் வாக்கு. பெருமைக்கும் சிறுமைக்குமான துலாக்கோலை உங்களுக்கு வழங்கியது யார் அம்மணி? அல்லது பாம்பின் கால் பாம்பறிகிறதா? ஒரு மாற்றுக்கருத்தை எதிர்கொள்ளத் திராணியற்று  பின்னூட்டம்  என்ற பெயரில் வசைபொழிகிற பத்து அநாமதேயங்கள் இருக்கிற தைரியத்தில் நீங்கள் எதுவும் எழுதுவீர்களோ?

மாற்றுக்கருத்து எல்லாவற்றுக்கும் ஷோபாசக்திதான் பிறப்பிடமா? அ.மார்க்ஸ் பேசினாலும் ஆதவன் பேசினாலும், நீலகண்டனோ அடையாளம் சாதிக்கோ  புத்தகம் போட்டாலும் அவர்களை உடனே ஷோபாசக்தியின் சீடர்களாக்கிவிடுவதில் உங்களைப் போன்றவர்களுக்கு அப்படியென்ன அலாதிப் பிரியம்? மேய்ப்பனின் கீழ் உழன்ற மந்தை மனோபாவம் பிறரையும் அவ்வாறே பார்க்கப் பணிக்கிறதா? உங்களது குரலுக்கு எஜமானர்களாக யாரையும் வைத்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களின் குரல் சுதந்திரமானதாய் இருக்கக்கூடும் என்று நம்புவதற்கான பயிற்சியை இனியாவது கைக்கொள்ளுங்களேன். எனது குரல் பிரான்சிலிருந்து கேட்கிறதென்றால், உங்களது குரல் எங்கிருந்து ஒலிக்கிறது என்று கேட்பதும் சாத்தியம்தானே? தமிழ்நாட்டின் எந்தவொரு சமூக- அரசியல் பிரச்னையிலும் தலையிடாத சிலர் இலங்கைத் தமிழர் பிரச்னையில் மட்டும் உரத்து முழங்கி உக்கிரவேஷம் போடுவதற்குப் பின்னால் வெறும் இனவுணர்வு மட்டும்தான் இருக்கிறதா என்று கேள்வி எழுப்ப எவ்வளவு நேரமாகும்? உங்களது சந்தேகத்தை திருப்பிப்போட்டு எதிர்மறையாக நீட்டித்தால், இலங்கைத் தமிழர்கள் செரிந்து வாழும் கனடாவை விட்டுவிட்டு தமிழ்நாட்டில் குடியேறியிருப்பதற்கான உள்நோக்கம் என்ன என்றும்கூட ஒருவர் குதர்க்கமாக கேட்டுவிட முடியும்.

உங்களுக்கு நியாயம் கேட்கிற அவசரத்தில் ‘எங்கோ இருக்கிற குஜராத்’ என்கிறீர்கள். தமிழ்நாட்டானைப் பொறுத்தவரை குஜராத் எங்கோ இருக்கிறது என்ற தர்க்கத்தில் இறங்கினால், இலங்கையும் தமிழ்நாட்டானுக்கு எங்கோ இருக்கிற ஒன்றாகிவிடும் என்பதாவது தங்களுக்குப் புரிகிறதா? எங்கோ இருக்கிற இலங்கையில் நடக்கிற பிரச்னைகளுக்கு இங்கே ஏன் 14 தமிழர்கள் தம்முயிரை மாய்த்துக் கொண்டனர் என்ற கேள்வி எழும்பாதா? உங்களுக்கென்ன, வென்றால் ஈழம் தோற்றால் இலங்கை. ஆனால் உங்களுக்காக இறந்துபோன அந்த இந்தியத் தமிழர்கள் 14 பேரின் குடும்பத்துக்கும் என்ன இருக்கிறது? அவர்கள் உங்களை எங்கோ இருக்கிற இலங்கைத்தமிழராக பார்க்கவில்லையே?  ஆனால் இலங்கையில் இஸ்லாமியர்களைக் கொன்றும் எஞ்சியவர்களை இரவிரவாக விரட்டியடித்தும் பெருமிதம் கொண்ட இந்து மனோபாவத்தின் எச்சம் உங்களுக்குள்ளிருந்து, எங்கோ இருக்கிற குஜராத்தின் இஸ்லாமியருக்கு  ஆதரவாக குரல் கொடுப்பவர்களைப் பார்த்து எரிச்சலடைகிறதோ? அதெப்படி உங்களால் அப்படி சொல்ல முடிகிறது? இங்குள்ள தமிழர்கள் யாருக்காக துக்கப்பட வேண்டும் என்பதைக்கூட நீங்கள்தான் தீர்மானிப்பீர்களோ? ஒடுக்கப்படுகிற ஒரு சமூகம் உலகின் பலபாகங்களில் ஒடுக்கப்படுகிற பிற சமூகங்களோடு இயல்பாகவே ஒருமைப்பாடு கொண்டிருக்கும். ஆனால் உங்களுக்கேன் இந்த வன்மம்? எனக்கொன்றும் பதில் சொல்ல வேண்டியதில்லை, முடிந்தால் ஒருமுறை யோசித்துப் பாருங்கள்.

இலங்கையின் ஒரு பகுதிக்குள்ளேயே இருக்கிற இந்தியத் தமிழர்களை ஒதுக்கிவைத்திருக்கிறீர்கள். ‘இந்தியத் தமிழர்களைத் தங்களுடன் அரவணைத்துக் கொள்வது பற்றி இலங்கைத் தமிழர்கள் நினைத்தும் பார்க்கவில்லை’ என்கிறார் அந்தனி ஜீவா ( செங்கதிர்- மே 2009 பக்கம்- 10). ஆனால்   நீங்கள்  இங்கேயுள்ள அவர்களது சொந்தங்களான எங்களிடம் வந்து துளியும் உறுத்தலின்றி ‘‘எங்களுக்காக குரல் கொடுங்கள்’’  என்று கேட்கிறீர்கள். ‘ஆடு பகை குட்டி உறவு’ என்று  எங்களூரில் சொல்லப்படும் ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. அதுகுறித்து நாங்கள் எதுவும் கேள்வி எழுப்பினால் சிறுமைப் புத்தி உள்ளவர்கள் என்று பதிவு எழுதக் கிளம்பி விடுகிறீர்கள். சரி, எங்களுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை என்று உங்களுக்கு வெகு அருகாமையில் ஒட்டியிருக்கும் கிழக்கு மாகாணத்து தமிழனிடமாவது உங்களால் கேள்வி எழுப்ப முடியுமா? அவர்கள் ஏன் உங்களிடமிருந்து பிரிந்து போனார்கள்? அவர்களில் ஒருவரும் ஏன் உங்களுக்காக தீக்குளிக்கவில்லை? உண்ணாவிரதம் ஊர்வலம் என்று ஒரு சுக்கும் நடக்காதது ஏன்? எல்லாவற்றுக்கும் கருணாவையும் பிள்ளையானையும் காரணமாக்கிவிட முடியுமா?

உங்கள் தேவைக்காக தமிழினம் என்று குரல் கொடுத்துக்கொண்டே உடனிருக்கும் தமிழர்களை அண்டவிடாமல் ஒதுக்கிவைத்தீர்கள், ஒழித்துக்கட்டினீர்கள். இந்த சூதுக்கள் அம்பலமாகிவிடும் என்பதால்தான் மாற்றுக்கருத்து தெரிவிப்போரை துரோகிகளாக சித்தரிக்கும் இழிவான செயல்களை கைக்கொள்கிறீர். உங்களையழிக்கும் துரோகிகள் வெளியிலிருந்துதானா வரவேண்டும்? புலிகளின் துரோகிகள் புலிகள்தான் என்ற உண்மையை எப்போது படிக்கப்போகிறீர்கள்?

மாற்றுக்கருத்துக்கு செவிமடுக்கும் ஜனநாயகப்பண்பும் சகிப்புத்தன்மையும் அற்ற புலிகளின் அராஜகப் போக்கு தமிழ்நாட்டிலும் பரவிக் கொண்டிருக்கிறது. அந்தப் போக்குக்கு இரையானவர்கள் இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து தாங்கள் அறிந்திருப்பதே இறுதி உண்மை என்று நிறுவப்பார்க்கிறார்கள். அடுத்தவர் கருத்தை பொறுமையற்று கேட்கிறார்கள். அல்லது கேட்க மறுத்து காதையும் மனதையும் மூடிக் கொள்கிறார்கள். தாங்கள் வைத்திருக்கும் பலவீனமான நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்ள மேலும் மேலும் அவர்கள் குறுங்குழு வாதங்களுக்குள் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு காலமும் புலிகளிடம் இருந்த துரோகி முத்திரையை இப்போது யார் முதுகில் குத்தலாம் என்று ஏந்தி அலைகிறார்கள். ‘புலிகள் ஈழத்தில் இருக்கமாட்டார்கள், ஆனால் புகலிடத்தில் இருப்பார்கள்’ என்றார் சுசீந்திரன். தமிழ்நாட்டிலும் இருக்கிறார்கள் என்று சொல்லும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. அப்படியானவர்களுக்கு ஒரு சாமர்த்தியமான- கற்பனை வளம்மிக்க- கதை ஜோடிக்கத் தெரிந்த ஒரு தலைவி தேவைப்படலாம். எனவே இங்கேயே இருங்கள். வீம்புக்காகவோ ரோஷத்திலோ ஊருக்குப் போறேன்னு கிளம்பிவிட வேண்டாம்.

மற்றபடி படைப்பாளியின் பார்வை எப்படி இருக்கவேண்டும் என்று நீங்கள் சொல்லும் இலக்கணமெல்லாம் சரிதான். ஆனால் அடுத்தவர்களுக்கு உபதேசிக்கும் முன் ஒருமுறையாவது அதை நீங்கள் கடைபிடிக்க வேண்டுமென்பதுதான் இதிலுள்ள அக்கப்போர். அதற்காக குறைந்தபட்சம் இப்போதாவது ஒரு மட்டக்களப்பானை, ஒரு இஸ்லாமியனை, ஒரு மலையகத்தமிழனை, முடிந்தால் ஒரு சிங்களனையும்கூட உங்களைப்போலவே அவர்களும் மனிதர்கள்தான் என்று நினைக்கப் பழகுங்கள்.

பார்த்துப் பழகிய ஆதவனை இனி பார்க்க முடியாது, பொய்யாகவேனும் ஒரு புன்னகையைக்கூட உதிர்க்க முடியாது என்று எழுதியிருக்கிறீர்கள். தனக்கு உவப்பான கருத்தைச் சொல்லாதவன் முகத்தில் விழிக்கக்கூடாது என்ற இந்த நினைப்புதான் சகிப்பின்மையாக உருவெடுத்து சகோதரப் படுகொலைகளை நிகழ்த்த உங்கள் தலைமையை இட்டுச் சென்றது. ஆனால் நான் உங்களை எதிர்கொண்டால் பேசுவேன். உள்ளார்ந்த அன்போடு புன்னகைப்பேன். இன்னா செய்தாரை ஒறுப்பது என்ற ரீதியில் அல்ல, கருத்துகளும் தனிமனித உறவும், ஒன்று மற்றொன்றுக்கான பலியோ பணயமோ அல்ல என்று நம்புவதால்.

._._._._._.

07.01.2009

தோழர் காமராஜுக்கு ஒரு கடிதம்

அன்புத் தோழர் காமராஜூக்கு

முதலில் உங்கள் அக்கறைக்கு நன்றி. இந்தப் பதிலை எழுதுவதற்கு முன்பு உங்களிடம் நான் ஒன்று சொல்லிவிடுகிறேன். “ஈழத்தமிழருக்காக நீங்கள் ஏன் பேசவில்லை, எழுதவில்லை?” என்று இனி இந்தத் தமிழகத்தில் பறக்கும் ஒரு குருவியிடம் கூட கேட்கமாட்டேன். ஏதோவொரு ஆதங்கம், பதைப்பு, நப்பாசை. கண்ணீர் விட்டுக் கதறிக் கேட்டும் கண்திறக்காமல் இருந்தன மத்திய, மாநில அரசாங்கங்கள். மக்களாவது எங்களோடு இருக்கிறார்கள் என்று நம்பியிருந்தோம். தேர்தல் முடிவு வெளியான அன்று அதுவும் பொய்த்தது. (அதிமுக வந்தால் ஒரு தேறுதல் என்று எதிர்பார்த்தோமேயன்றி பெரிய மாறுதல்களையல்ல என்பதை இங்கே சொல்லவிரும்புகிறேன்.) ஈழத்தமிழர்களுக்காக தமிழகத்தில் உழைத்த உண்மையான உணர்வாளர்களை நான் இங்கு மறந்துவிட்டுப் பேசவில்லை. அவர்கள் எங்களுக்காகத் துடித்ததை நாங்கள் அறிவோம். சீமான், நெடுமாறன் ஐயா இன்னபிறர் மற்றும் குறிப்பிட்டளவான மக்களின் இதயம் எங்களுக்காகத் துடித்தது. அந்த நன்றி உணர்ச்சி எங்களிடம் இருக்கிறது. தொடர்ந்தும் இருக்கும்.

நான் அரசியல்வாதி அல்ல. எனக்குத் தெரிந்ததெல்லாம் புத்தகங்களும் எழுத்தாளர்களுந்தான். அவர்களை எனது நண்பர்களாகவும் வழிகாட்டிகளாகவும் முன்னோடிகளாகவும் ஆதர்சங்களாகவும் நம்பியிருந்தேன். இந்த அந்நிய நிலத்தில் அவர்களை எனது உறவினர்களாகக்கூட உள்ளுக்குள் கருதினேன் என்பதுதான் உண்மை. எழுத்து சார்ந்த நெகிழ்வு அது. அதைச் சொல்லிப் புரியவைக்க முடியாது. சாதாரணர்களிலும் ஒருபடி மேலானவர்களாக அவர்கள் இருக்கவேண்டும் என்று நான் பேராசைப்பட்டேன்.

அன்று கடவு கூட்டத்தில் அந்தக் கேள்வியை முன்வைத்தது ஒரு ஆதங்கத்தினால். அங்கே எல்லாம் எரிந்து கரிந்து முடிந்தது. எங்கள் மக்கள் அகதி முகாம்களுக்குள் அடிமைகளாய், விலங்குகளாய் அடைபட்டுவிட்டார்கள். வாழ்விடங்கள் சிதிலமாகி விட்டன. இனி எழுதி ஒன்றும் செய்வதற்கில்லை என்பது எனக்கும் தெரிந்தே இருந்தது. இருந்தும், ‘எம்மவர்கள் நீங்கள் ஏன் மௌனிகளாய் வாய்மூடி இருந்தீர்கள்?’என்று எனக்குக் கேட்கத் தோன்றியது. ஏனென்றால், அப்படிக் கேட்பதற்கான சந்தர்ப்பம் அன்றைக்கு எனக்குக் கிடைத்தது. தமிழக எழுத்தாளர்கள் எழுதி ஈழப்பிரச்சனை தீராது என்பது எனக்குத் தெரியாதா என்ன? ஆனால், உலகில் நடந்த பல தேசிய விடுதலைப் போராட்டங்களில் எழுத்தாளர்களின் பங்கு அளப்பரியதாக இருந்தது. மக்களை அவர்கள் தங்கள் வார்த்தைகளால் வழிநடத்தினார்கள் என்று சொன்னாலும் மிகையில்லை. மக்களுக்குள் இருக்கும் சுதந்திர வேட்கையை எழுத்துக்கள் தூண்டவல்லன என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

வலையிலும் வெளியிலும் ஈழப்பிரச்சனை பற்றிய பல பதிவுகள் வந்துகொண்டிருப்பதாகக் கூறினீர்கள். ஒப்பீட்டளவில் நான் சில என்றே சொல்வேன். நமது மக்களின் மனமானது ‘செலிபிரிட்டீஸ்’ என்று சொல்லப்படுகிற பிரபலங்களால் உதிர்க்கப்படும் கருத்துக்களைக் கையேந்திப் பெற்று நெஞ்சுக்குள் இறக்கிவிடக்கூடியது. காமராஜ் ஆகிய நீங்கள் சொல்வதற்கும் ரஜனிகாந்த் ஒரு கருத்தைச் சொல்வதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் உணர்கிறீர்கள் அல்லவா? அதேபோல இணையத்தில் அறியப்படாத ஒருவர் எழுதுவதற்கும் அதையே எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற பிரபலம் எழுதுவதற்கும் நிச்சயமாக வித்தியாசம் இருக்கும். “எஸ்.ரா. இப்படிச் சொன்னாராம்…” என்று பரவலாகப் பேசவே செய்வர். அதனால்தான், “அந்த வரலாற்றுத் தவற்றை நீங்கள் ஏன் செய்தீர்கள்?” என்று அந்தக் கூட்டத்தில் கூடியிருந்த பிரபல எழுத்தாளர்களைப் பார்த்துக் கேட்டேன்.

அதற்கு ஆதவன் தீட்சண்யா ஆற்றிய எதிர்வினை நியாயமானதாக இருக்கவில்லை. மதிப்பிற்குரிய ஆளுமை என்று நான் கருதிக்கொண்டிருந்தவரிடமிருந்து அப்படியொரு பதில் வந்ததில் நான் ஆடிப்போய்விட்டேன். அந்த அதிர்ச்சியில் எழுதிய பதிவே அது. எனக்கும் ஆதவன் தீட்சண்யாவிற்குமிடையில் தனிப்பட்ட பிரச்சனைகள் எதுவுமில்லை. ஏன்… எனக்கும் ஷோபா சக்திக்குமிடையில் கூட தனிப்பட்ட பிரச்சனைகள் எதுவுமில்லை. ஆனாலும் அவர் தனிப்பட்ட முறையில் என்னை விமர்சித்து எழுதியிருந்தார். கருத்தினால் அடிக்க முடியாதவன் காலால் அடித்தது மாதிரி இருந்தது. நான் இலக்கியக் கூட்டத்திற்குப் போய் அருவியை ரசிப்பது இவருக்கு என்ன முறையில் வலிக்கிறது என்று தெரியவில்லை. கருத்துக்களால் மோதுவதுதான் ஆரோக்கியமாக இருக்கமுடியும். அதுதான் நாகரிகமும்கூட.

தோழர்இ நான் தலித்தியத்தைக் கேலி செய்வதான பின்னூட்டங்களை ஆதரிக்கவில்லை. அப்படிச் செய்யவும் மாட்டேன். தனிப்பட்ட முறையில் ஆதவன் மீதும் ஷோபா சக்தி மீதும் தாக்குதல் தொடுத்து வந்த பின்னூட்டங்களை நான் பிரசுரிக்கவில்லை. எனக்கென்று சில அடிப்படை நேர்மைகள் உண்டு. யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும் எனக்குள் அந்த நேர்மையை வைத்திருக்கிறேன். அது எனக்கு மட்டுமே தெரியும். ஏனென்றால், நானும் பாதிக்கப்பட்டவள். ஈழத்தமிழர்கள், தலித்துகள், அரவாணிகள் எல்லோரும் சிறுபான்மையினர்தான்.

உண்மையில் இவ்வாறான சர்ச்சைகளில் ஈடுபட எனக்கு நேரமில்லை. தெருச்சண்டைகளில் ஈடுபடுவதில் எனக்கு நாட்டமுமில்லை. இயல்பில் அமைதியான ஆள்தான் நான். என் நண்பர்களிடத்தில் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். வீட்டிலும் வெளியிலும் நாட்டிலும் கூட எனக்கு நிறையப் பணிகள் இருக்கின்றன. இந்தக் கடிதத்தின் ஆரம்பத்தில் கூறியதுபோல ‘எங்களுக்காக நீங்கள் ஏன் பேசவில்லை?’ என்று இனி மறந்தும்கூட யாரிடமும் கேட்கமாட்டேன்.

அது எங்கள் கனவு. எங்கள் துயரம். எங்கள் அழிவு. எங்கள் அநாதரவு. எங்கள் பசி. எங்கள் பயம். எங்கள் இனம். எங்கள் கண்ணீர். எங்கள் இழப்பு. எங்கள் இருள். எங்கள் மண். அதற்கு ஏதாவது செய்யமுடிகிறதா என்று இனி நான் முயற்சி செய்கிறேன். என் எழுத்தால் துளியளவு வலி துடைக்க முடியுமெனில் அதற்காக எழுதுவேன்.

தயவுசெய்து எனக்குப் பதில் எழுதாதீர்கள் தோழர். நான் நொந்துபோயிருக்கிறேன். வாழ்க்கை இவ்வளவு குரூரமாக இருந்திருக்கக்கூடாது.
வருத்தங்களுடன்

தமிழ்நதி

._._._._._.

06.29.2009

ஆதவன் தீட்சண்யா தந்த அதிர்ச்சி!

முற்குறிப்பு: கடவு இலக்கிய அமைப்பால் மதுரையில் நடத்தப்பட்ட இரண்டுநாள் ‘கூடல் சங்கமம்’நிகழ்வுக்கு நானும் தோழி உமா ஷக்தியும் சென்றிருந்தோம். அனைவரின் ஒத்துழைப்புடனும் இறுக்கமான நேரக் கட்டுப்பாட்டுடனும் பயனுள்ளதாகவும் அந்தக் கூட்டம் சிறப்பாக நடந்துமுடிந்தது. இந்தப் பதிவு, கூட்டத்தின் முடிவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பற்றியது. இரண்டுநாள் நிகழ்ச்சிகளையும் பற்றி விரிவாக நிதானமாக ஆற அமர்ந்து எழுத எண்ணியிருக்கிறேன். அதற்குள், அக்குறிப்பிட்ட சம்பவம் பற்றி எனக்குள் பொங்கும் ஆற்றாமையைப் பதிவாக்கியிருக்கிறேன். இதைச் சாட்டாக வைத்துக்கொண்டு, ‘அந்தக் கூட்டமும் சொதப்பிட்டாம்ல’ என்று கதைபரப்பிவிட வேண்டாமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன். கூட்டம் நன்றாகவே நடந்தது.

‘நான் மநுவிரோதன்’ என்ற நேர்காணல் தொகுப்பு வெளியீட்டின்போது முதன்முதலில் ஆதவன் தீட்சண்யாவைப் பார்த்தேன். பரிச்சயம் செய்துகொள்ள வாய்ப்பு ஏற்படவில்லை. பின்னர் ‘மணல்வீடு’ ஹரிகிருஷ்ணனால் சேலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘களரி’நிகழ்ச்சியில் அவரைச் சந்தித்தபோது பேசக்கூடியதாக இருந்தது. சேலம் நிகழ்ச்சி முடிந்ததும், திருச்சி ‘யுகமாயினி’ கூட்டத்தில் கலந்துகொள்ளவெனப் புறப்பட்ட எழுத்தாளர் பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா இருவருடனும் நானும் கவிஞர் குட்டி ரேவதியும் இணைந்துகொண்டோம்.(சித்தனின் அழைப்பின்பேரில்) திருச்சி சென்ற வழி ஆரோக்கியமான உரையாடலில் கழிந்தது. ஆதவன் தீட்சண்யாவின் கவிதைகளிலுள்ள அரசியல் எனக்குப் பிடிக்கும். (புலியெதிர்ப்பு அரசியலை இங்கு நான் குறிப்பிடவில்லை) ஆதவன் தீட்சண்யா ஆசிரியராக இருக்கும் ‘புது விசை’ குறிப்பிடத்தக்க அளவில் அதிகார மையங்களின் மீது விமர்சனங்களை முன்வைப்பது, சாதி-மதம் போன்ற புனிதங்களின் மீது கேள்விகளை எழுப்புவதும் கண்டிப்பதுமான போக்கினால் அவர்மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தேன். மதமும் சாதியும் மக்களை எவ்விதம் அடிமைப்படுத்துகின்றன என்று குட்டி ரேவதியும் ஆதவனும் பிரபஞ்சன் அவர்களும் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்த அன்றைக்கு எனக்குள் ஆதவன் மீதான மதிப்பின் ‘மீட்டர்’ மேலும் எகிறியதைச் சொல்லியாக வேண்டும்.

ஆளுமைகள் என்று நாம் நினைத்துக்கொண்டிருப்பவர்களின் அடிமனங்களில் சிறுமைகள் புற்றெடுத்துக் குடிகொண்டிருப்பதைக் காணநேரும் காலமோ இது என்று தோன்றுகிறது.

நேற்றைய நிகழ்ச்சி முடிவில் ஒழுங்கமைக்கப்பட்ட கலந்துரையாடலில், சில எழுத்தாளர்களை அவர்களது படைப்பு மனோநிலை குறித்து வந்திருந்த ஏனைய எழுத்தாளர்களோடும் பார்வையாளர்களோடும் பகிர்ந்துகொள்ளும்படி கேட்கப்பட்டது. கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், பிரபஞ்சன், சுரேஷ்குமார இந்திரஜித், உதயசங்கர், ஆதவன் தீட்சண்யா, நாஞ்சில் நாடன் இவர்களோடு எனது பெயரும் திடுமுட்டாக அறிவிக்கப்பட்டபோது, தயக்கத்தோடும் கொஞ்சம் பதட்டத்தோடும் முன்னால் சென்று அமர்ந்தேன். “இந்த ஜாம்பவான்களோடு என்னை ஏன் அழைத்தார்கள். இலக்கியத்தைப் பற்றி நான் என்னதான் பேசுவது?”என்று அருகிலிருந்த பிரபஞ்சன் அவர்களிடம் கேட்டேன். அவருக்கும் எனக்கும் இடையில் மதிப்பும் அன்பும் கலந்த ஒரு நல்லுறவு இருக்கிறது. தோழனைப்போலவும் தந்தையைப் போலவும் ஒரேசமயத்தில் இருக்கக்கூடிய எளிமையான மனிதர் அவர். “ஏதாவது பேசுங்கள்… இது கலந்துரையாடல்தானே… ஒன்றும் பேசமுடியாவிட்டால் ஆம் இல்லை என்று சமாளியுங்கள்”என்றார்.

எனது முறை வந்தபோது நான் என்ன பேசுவதென்று தீர்மானித்திருந்தேன்.

“பெரிய எழுத்தாளர்களெல்லாம் எழுதுவதைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார்கள். எனது ஒரு சிறுகதைத் தொகுப்பும் கவிதைத் தொகுப்பும் மட்டுமே வெளியாகியிருக்கின்றன. அவற்றைஇ எழுத்துப் பயணத்தில் சிறு முயற்சிகள் என்றே சொல்வேன். எனவே அவர்களிலிருந்து வித்தியாசப்பட்டு ‘எழுதிய விடயங்களைத் தவிர்த்து, ஏன் எழுதப்படவில்லை?’என்பதைக் குறித்துப் பேசலாமென்று நினைக்கிறேன்.

சில மைல்கள் அருகில் இருக்கும் இலங்கையில் இத்தனை இனப்படுகொலைகள் நடந்தும் உங்களில் யாரும் அதைப் பற்றி ஒன்றும் பேசாமல், எழுதாமல் இருந்ததன் காரணந்தான் என்ன? நான் வாசித்தவரையில் நாஞ்சில் நாடன் எழுதிய கட்டுரைகள் சிலவற்றில் ஈழப்பிரச்சனை பற்றி எழுதியிருக்கிறார். எழுத்தாளர்கள் என்பவர்களுக்கு சமூக அக்கறை, பொறுப்புணர்வு இருக்கவேண்டும். எனக்குத் தாங்கவியலாத வியப்பாக இருந்தது. இவர்களால் எப்படி இப்படி மௌனம் சாதிக்க முடிகிறது என்பது நெஞ்சை அறுக்கும் கேள்வியாக இருந்தது. ஈழப்பிரச்சனையைப் பற்றி எழுத அதைப்பற்றி எங்களுக்கு முழுவதுமாகத் தெரியாது என்று சொல்லி நீங்கள் ஒதுங்கிக்கொண்டுவிட முடியாது. பெண்களின் மனவுலகம் பற்றி எழுதுகிறீர்கள். அதற்கு நீங்கள் பெண்களாயிருக்க வேண்டியதில்லை. எங்கோ குஜராத்தில் நடக்கும் மதக்கலவரம் பற்றி அங்கு பிரசன்னமாக இருக்காமலே எழுதுகிறீர்கள். இங்கே பக்கத்தில் இருக்கும் இலங்கையில் நடக்கும் மனிதப்பேரழிவை, படுகொலையைப் பற்றி மட்டும் முழு அரசியலும் தெரிந்துகொண்டுதான் எழுதுவோம் என்று எப்படிச் சொல்லமுடியும்?

இங்கே இந்தக் கூட்டத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் நாங்கள் பெண்கள் இருக்கிறோம். இவ்வளவு பெரிய கூட்டத்தில் இப்படி மிகச்சில பேராக இருப்பது எங்களுக்கு சங்கடமாக இருக்கிறது. இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீடு என்றெல்லாம் பேசுகிறீர்கள். ஆனால், இங்கே இந்தக் கூட்டத்தில் பெண்களின் விகிதாசாரம் எவ்வளவு? அவர்கள் ஏதோவொரு பிரச்சனையால் வரவில்லை என்றால், அதை நிவர்த்தி செய்ய, சமரசம் செய்ய, நீங்கள் ஏன் முயற்சிக்கவில்லை? பேசித் தீர்க்க முடியாத பிரச்சனைகள் என்று இலக்கியச் சூழலில் இருக்கிறதா என்ன?

இங்கே கூடியிருக்கும் எழுத்தாளர்களில் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் எனக்கு மிகப்பிடிக்கும். பிரபஞ்சன் அவர்களைப் பிடிக்கும். நாஞ்சில் நாடன் அவர்களது எழுத்தும் அப்படியே. ஜெயமோகனுடைய சில தடாலடியான கருத்துக்களில் – எல்லோருக்கும் சரியென்று தோன்றுவதைத் தவறெனும் நிலைப்பாடுகளில், அரசியல் அதிரடிக் கருத்துக்களில் எனக்கு மாறுபாடுகள் இருந்தாலும், அவருடைய புனைவுலகம் அழகியது. நாம் அவருடைய புனைவுகளை விரும்பிப் படிக்கிறேன். உங்களிடமெல்லாம் நான் கேட்பது ஒன்றுதான். ஈழத்தமிழர்கள் விடயத்தில் இப்படி மௌனமாக, பாராமுகமாக, மனச்சாட்சியில்லாமல் நீங்கள் நடந்துகொண்டதற்குக் காரணந்தான் என்ன? நீங்கள் அதிகாரங்களுக்கு அஞ்சுகிறீர்களா? அசிரத்தையா? தயவுசெய்து எனக்குப் பதில் சொல்லுங்கள்”

கோணங்கியும் எஸ்.ராமகிருஷ்ணனும் அதற்குப் பதிலளித்தார்கள். அவர்களது பதில் திருப்திகரமாக இருக்கவில்லை. “எங்களுக்குள் அந்த நெருப்பு எரிந்துகொண்டுதான் இருக்கிறது. அது இனிக் கொழுந்து விட்டெரியும்” என்பது மாதிரியான பதில் ஏறத்தாழ முற்றுமுழுதாக எரிந்துமுடிந்து சாம்பலில் புகை அடங்காத ஒரு சமூகத்தைப் பார்த்துச் சொல்லக்கூடிய பதிலாக எனக்குத் தோன்றவில்லை.

அதையடுத்து ஆதவன் தீட்சண்யா ஒலிபெருக்கியை கையில் வாங்கிப் பேசத் தொடங்கினார்.

“நாங்கள் ஈழத்தமிழர்களுக்காகப் பேசவேண்டுமென்று, குரல்கொடுக்கவேண்டுமென்று நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? என்று ஆரம்பித்தார்.

‘அம்பாளா பேசுவது?’என்ற திக்பிரமை படர, அவருடைய அறிவார்த்தமான பேச்சை உன்னிப்பாகக் கவனிக்கவாரம்பித்தேன்.

“இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக, வெள்ளைக்காரர்களால் இந்தியாவிலிருந்து இலட்சக்கணக்கான தமிழர்கள் கொண்டுசெல்லப்பட்டார்கள். அவர்கள், ஏற்கெனவே அங்கே இருந்த பூர்வீகத் தமிழர்களால், சாதித்தமிழர்களால் கீழ்த்தரமாக நடத்தப்பட்டார்கள். ‘கள்ளத்தோணி’ என்று அழைக்கப்பட்டார்கள். மலையகத் தமிழர்களது வாக்குரிமை பறிக்கப்பட்டபோது, இலங்கைப் பாராளுமன்றத்தில் இருந்த தமிழ் எம்.பிக்களில் சிலர்கூட ஆதரவாக வாக்களித்தார்கள். எங்கள் மக்கள் சாதித் தமிழர்களால் அலட்சியப்படுத்தப்பட்டார்கள்.

முஸ்லிம் மக்கள் வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளால் இரவிரவாக விரட்டியடிக்கப்பட்டார்கள். நீங்கள் அதைக் கேட்டீர்களா? திண்ணியத்தில் எங்களது தலித் மக்களின் வாயில் மலம் திணிக்கப்பட்டது. ஈழத்தமிழர்கள் அதற்கெதிராகக் குரல் கொடுத்தீர்களா? சாதிக்கலவரங்களில் அவர்கள் கொல்லப்பட்டபோது நீங்கள் குரல் கொடுத்தீர்களா? வெண்மணியில் எரிக்கப்பட்டபோது பேசினீர்களா?

எங்களுக்கே ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன. நாங்கள் ஏன் உங்களுக்காகப் பேசவேண்டும்? எழுதவேண்டும்?”

ஒலிவாங்கியை என்னிடம் தரும்படி கேட்டு வாங்கினேன். அப்போது எனக்கு ஆதவன் தீட்சண்யா இதே சாயலுடைய கேள்வியை ஆனந்த விகடன் நேர்காணலில் கேட்டிருந்தது நினைவில் வந்தது.

“எழுத்தாளர்கள் என்பவர்கள் சாதாரண மக்களிலிருந்து சற்றே வித்தியாசப்பட்டுச் சிந்திக்கிறவர்கள். பெருந்தன்மையானவர்கள், சமூகப் பொறுப்புணர்வுடன் இயங்க வேண்டிய கடப்பாடு அவர்களுக்கு இருக்கிறது இல்லையா? ஆக, மலையகத் தமிழர்களை நாங்கள் கேவலமாக நடத்தினோம் என்பதற்காக இப்போது நீங்கள் எங்களைப் பழிவாங்குகிறீர்களா ஆதவன்?”என்று கேட்டேன்.

ரி.கண்ணன் என்பவரும், ‘யாதுமாகி’யின் ஆசிரியர் லேனா குமாரும் எழுந்து வந்து “தமிழ்நதி! ஆதவன் தீட்சண்யா அப்படித்தான் பேசுவான். நீங்கள் அதை ஒட்டுமொத்தத் தமிழகத்தின் குரலாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அது ஆதவன் தீட்சண்யா என்ற தனியொருவனின் குரல் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்”என்றார்கள். கூட்டத்திலிருந்து அதற்கு ஆதரவாகப் பல குரல்கள் எழுந்தன.

இதற்குள் பேராசிரியர் வீ.அரசு எழுந்து வந்து ஒலிவாங்கியை வாங்கினார்.

“தமிழ்நதி எழுப்பிய கேள்வி மிகச்சரியானது. அதற்கு ஆதவன் நீங்கள் பதிலளித்த விதம் சரியல்ல. இலங்கைத் தமிழர்களுக்குள் யாழ்ப்பாணத் தமிழன், வன்னித் தமிழன், மட்டக்களப்புத் தமிழன் என்ற வேறுபாடுகள் எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன. மட்டக்களப்புத் தமிழனை வவுனியாத் தமிழன் ஏற்றுக்கொள்ள மாட்டான். வவுனியாத் தமிழனை யாழ்ப்பாணத் தமிழன் ஏற்றுக்கொள்ள மாட்டான். இவர்கள் எல்லோரும் சேர்ந்து மலையகத் தமிழர்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இவையெல்லாம் உண்மைதான். ஆனால், இந்தச் சமயத்தில் ஆதவன் இப்படிப் பேசுவது தவறு. ஈழத்தமிழினம் பிணக்காடாகி எரிந்துகொண்டிருக்கிறது. பிணங்கள் குவிக்கப்பட்டிருக்கும் மேட்டிலே ஏறிநின்றுகொண்டு நீங்கள் இப்படிப் பேசுவது மனிதாபிமானமுடையதல்ல. எந்த நேரத்தில் என்ன பேச்சுப் பேசுகிறீர்கள்? தவறான புரிதலோடு இருக்கிறீர்கள். மன்னிக்கவேண்டும் ஆதவன்”என்றார்.

அப்போது ஆதவன் எழுந்திருந்து, “நான் உங்கள் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால், நீங்கள் தவறாகப் பேசியிருக்கிறீர்கள்”என்றார்.

பேராசிரியர் அரசு போனவேகத்தில் கோபத்தோடு திரும்பிவந்தார்.

“நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. நீ இந்த விசயத்தில் தவறான புரிதலோடு இருக்கிறாய் என்பதை அப்படி வெளிப்படுத்தினேன். நானே தமிழாசிரியன். இந்த வார்த்தை விளையாட்டுக்களெல்லாம் என்னோடு வைத்துக்கொள்ளாதே. எனக்கு எத்தனையோ ஆண்டுகளாக ஈழத்தமிழர்களோடு பரிச்சயம் இருக்கிறது. அவர்களின் வரலாற்றை நான் நன்கு அறிந்தவன். நீ புதிதாக ஒன்றும் சொல்லவராதே” என்றார் கடுமையாக.

இருவரும் ‘வாய்யா…போய்யா…’என்ற அளவுக்கு இறங்கினார்கள். ‘புதையல் எடுக்கப் போனால் பூதம் வருகிறதே’என்று நான் திகைப்போடு அமர்ந்திருந்தேன்.

இதற்குள் கவிஞர் விக்கிரமாதித்யன் வேட்டியைப் பிடித்துக் கொண்டு தடக்கித் தடக்கி எழுந்து வந்து ‘ஐம்பதினாயிரம் தமிழர்கள் செத்துப் போனாங்கய்யா… என்னய்யா பேச்சுப் பேசுற’ என்றார். கவிஞர் தேவேந்திர பூபதி அவரைக் கொண்டுபோய் மறுபடியும் இருத்திவிட்டு வந்தார். கவிஞர் விக்கிரமாதித்யனோ ‘ஸ்பிரிங் பந்து’ போல மீண்டும் மீண்டும் எழுந்து வந்துகொண்டேயிருந்தார். அவர் முன்னே வரும் ஒவ்வொரு தடவையும் இறந்துபோன ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனது.

அருமையான ஒரு கூட்டத்தை ஆரவாரமாக முடித்துவைத்த பெருமை என்னைச் சேர்ந்தது.

இப்போது ஆதவன் தீட்சண்யாவிடம் கேட்பதற்கு என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன. அவரிடமிருந்து அவற்றுக்கான பதிலை நான் எதிர்பார்த்துக் கேட்கவில்லை. கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்த ‘அறிவில்’நான் ஏற்கெனவே ஆடிப்போயிருக்கிறேன்.

என்னால் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்த விதத்தை நான் எப்படிப் பார்த்தேனென்றால், “நீ அன்னிக்கு என் கோலிக்குண்டைக் கிணத்துல தூக்கிப் போட்டுட்டயில்ல… அதான் இன்னிக்கு உன் பொம்மை கால உடைச்சுப்புட்டேன்”என்ற குழந்தைக் கோபமாக அது இருந்தது. பெரியவர்களிடம் அன்றேல் நாங்கள் பெரியவர்களாக நினைத்துக் கொண்டிருப்பவர்களிடமிருந்து இப்படியான பதில்கள் வருவது அயர்ச்சியையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

யோசித்துப் பாருங்கள் ஆதவன் (முன்னிலைக்கே வருகிறேன்) நாங்கள் மலையகத் தமிழர்களை அந்நாளில் மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர்களை எங்கள் வீடுகளிலும் தோட்டங்களிலும் வேலைக்காக வைத்திருந்தபோது அவர்களைச் சகமனிதர்களாகக் கருதாமல் நடந்துகொண்டோம் என்பதை ஒத்துக்கொள்கிறேன். “அன்று எங்களை நீங்கள் மதிக்கவில்லை. கள்ளத்தோணி என்றீர்கள். ஆகவே நீங்கள் கொல்லப்படுவதை எதிர்த்துக் கேள்வி கேட்காமல் இருந்தோம் இது உங்களுக்கு வேண்டியதுதானே…” என்று நீங்கள் சொல்வது எந்தவகையில் நியாயம்?

சமூகத்திலுள்ள சாதிஇ மதச் சதிகளை எதிர்ப்பேன். ஆனால், சகமனிதன் கொல்லப்படுவதை ரசிப்பேன் என்றவகையில் இருக்கிறது உங்கள் விவாதம்.

எழுத்தாளன் என்பவன் சாதாரணர்களிலும் அல்லது வாசகர்களிலும் பெருந்தன்மையோடும் மனிதாபிமானத்தோடும் பரந்த மனப்பாங்கோடும் சமூகப் பொறுப்புணர்வோடும் சிந்திக்கக்கூடியவன் அன்றேல் சிந்திக்க வேண்டியவன் என்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

விடுதலைப் புலிகள் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளே அல்ல என்பதே உங்கள் நிலைப்பாடாக இருக்கிறது. அப்படிச் சொல்லும் நீங்கள், விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை விரட்டியடித்தார்கள் என்பதையும் உங்கள் வாதத்திற்கு வலுச்சேர்க்க நேற்று உள்ளடக்கிப் பேசினீர்கள். ஆக, முஸ்லிம்களை விரட்டியடித்த விடுதலைப் புலிகளைத் தலைமையாகக் கொண்ட மக்களை நீங்கள் காப்பாற்ற விரும்பவில்லை என்றாகிறது அல்லவா? விடுதலைப் புலிகள் ஈழத்தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லையென்றால், மிகுதித் தமிழர்களுக்காக நீங்கள் ஏன் பேசவில்லை?

ஈழத்தின் தலித்துகளையும் மலையகத் தமிழரையும் மதிக்காத சாதித்தமிழர்கள் என்ற தொனியை நேற்றுக் கேட்க முடிந்தது. அப்படியானால் குண்டடிபட்டுச் செத்துப்போனவர்களும் இன்று அகதி முகாம்களில் இருப்பவர்களும் யாவரும் வெள்ளாளப் ‘பெருங்குடி’மக்களா? நீங்கள் தலித்துகளுக்காகவாவது பேசியிருக்கலாமே?

ஆக, உங்களது புரட்சிகர பரந்த அறிவு உங்கள் நாட்டிலுள்ள தலித்துகளின் முன்னேற்றத்துக்காக மட்டுமே பேசும். சகோதரத்துவம், சமத்துவம், எல்லைகளற்ற அன்பு என்பதெல்லாம் சும்மா! ‘நியாயமாகப் பார்த்தால் கொல்லப்பட வேண்டியவர்களே’என்ற தொனி சமூக மாற்றத்திற்கான சஞ்சிகையை நடத்துகிற ஒருவரிடமிருந்து வந்திருப்பது வியப்பளிக்கிறது.

படைப்பாளி என்பவன் நாடு, மதம், மொழி, நிறம், எல்லைகள், முன்விரோதங்கள், பின்குரோதங்கள் எல்லாவற்றையும் கடந்தவன் என்ற எண்ணங்களெல்லாம் தவிடுபொடியாகச் செய்தீர்கள் நண்பரே! நன்றி.

பார்த்துப் பழகிய ஆதவன் தீட்சண்யாவை இனிப் பார்க்க முடியாது. ‘எங்களை வருத்தினாய். நன்றாக அனுபவித்தாய் போ’என்ற முகத்தைப் பார்த்து பொய்யாகவேனும் ஒரு புன்னகையைக்கூட உதிர்க்க முடியாது.

இந்தக் கூத்தெல்லாம் முடிந்து வெளியே வரும்போது, “அவன் ஷோபா சக்தியின் குரலால் பேசுகிறான். பிரான்சிலிருந்தல்லவா அவன் குரல் ஒலிக்கிறது” என்றார் ஒருவர். அவரும் எழுத்தாளரே.

சத்தியக்கடதாசியில் ‘அமரந்தாவின் கடிதம்’ என்ற பதிவில் ஷோபா சக்தி என்னைச் சாடியிருப்பதாக ஒரு நண்பர் சொன்னார். தேடினேன். கிடைக்கவில்லை. ‘தமிழ்நதி போன்ற புலிச்சார்புப் பொய்மையாளர்கள்’என்று எழுதியிருப்பதாகக் கேள்வி. மேலும், ஈழத்தமிழருக்காக அழுகிறார். அதேசமயம், வால்பாறைக் கூட்டத்துக்கும் போகிறார் என்றும் எழுதியிருப்பதாகத் தகவல்.

நன்றாக இருக்கிறது உங்கள் ‘கட்டுடைப்பு’! தன் இனத்திற்காக அழுகிறவள் இலக்கியக் கூட்டத்திற்குப் போகக்கூடாது என்ற ஒற்றைச்சாயலுள் நீங்கள் என்னை எப்படிப் பொருத்தலாம்? அங்கே கொத்துக்குண்டுகள் வீசப்பட்டபோதும் நாங்கள் மூன்று வேளை சாப்பிட்டுக்கொண்டுதான் இருந்தோம். காலையில் எழுந்ததும் கக்கூசுக்குப் போகவும் தவறவில்லை. என்ன அனர்த்தம் ஆனாலும் எல்லாம் நடக்கிறபடி நடந்துகொண்டுதானிருக்கும். அங்கே பிணங்கள் விழுகிறதே என்ற துக்கம் இருக்கும். ஆனால், கூடலும் ஊடலும் தேடலும் எல்லாமும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கும். “அப்படி இல்லை. நான் நாள் முழுவதும் அழுதுகொண்டே அமர்ந்திருந்தேன்” என்று யாராகிலும் சொல்வார்களேயாகில், அது பொய்!

மேலும், நான் புலிகளை நேசிக்கிறேன்தான். அதற்காக நான் எழுதும் எல்லாவற்றுக்கும் நீங்கள் மஞ்சளும் கறுப்பும் கலந்து புலிச்சாயம் பூசவேண்டியதில்லை. என்னால் முன்வைக்கப்படும் கேள்விகளையெல்லாம் ‘நீ புலிக்குச் சார்பானவள். அப்படித்தான் பேசுவாய்’என்பதாக ஏன் அணுகுகிறீர்கள்? கேள்விகளிலுள்ள நியாயங்களைப் புரிந்துகொள்ளுங்கள். என்னையொரு சட்டகத்துள் அடைத்துப் பதில்சொல்ல விளையாதீர்கள்.

ஆதவன் தீட்சண்யாவும் ஷோபா சக்தியும் நண்பர்களா என்னவென்பது எனக்கு நிச்சயமாகத் தெரியாது. இருவரும் நண்பர்கள் என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ஷோபா சக்தி! உங்கள் நண்பர் கேட்கிறார். “மலையகத் தமிழர்களை ஈழத்தின் சாதித்தமிழர்கள் மதிக்கவில்லை. அதனால், அவர்கள் மீது நடத்தப்பட்ட இனவழிப்பை நாங்கள் தட்டிக் கேட்கவில்லை. நாங்கள் கேட்கவேண்டுமென்று நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?”என்று. நீங்கள் விடுதலைப் புலிகளது அராஜகங்களுக்கு எதிரானவர்தானே? ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர் அல்லவே? உங்கள் நண்பரின் கேள்விக்கான உங்களது பதில் என்னவாக இருக்கும்?

மீண்டும் சொல்கிறேன். இந்தக் கட்டுரையிலுள்ள விடயங்களைக் கதையுங்கள். எனது வார்த்தைகள் எல்லாமே கறுப்பும் மஞ்சளும் நீண்ட வாலும் கொண்டவையல்ல.

Show More
Leave a Reply to haran Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

36 Comments

  • KUNALAN
    KUNALAN

    திரும்பவும் தமிழ்நதியா…? ஏற்கனவே இவர் கீற்றில் கடந்த மாசிமாதம் கொடுத்த வீரப்பிரதாபப் பேட்டியிலிருந்து இன்னமும் மீளவில்லையே. அந்தப் பேட்டியை ஒரு கவிதையோடு தொடங்கினார் பாருங்கள்… அதுதான் எல்லாவற்றிற்குமே ஹைலைட்! அந்தக் கவிதையே ஒரு தீர்க்கதரிசனம் என்பதைப் பின்புதான் புரிந்து கொண்டேன்.

    //………எறிகணைகளுக்கும் விமானங்களுக்கும் தப்பி
    எஞ்சிய வீடுகளையும் கோயில்களையும்
    நாங்களே தரைமட்டமாக்கிவிடுகிறோம்.
    கைவிடப்பட்ட கடவுளர் சிலைகளை
    கடலின் ஆழத்துள் புதைத்துவிடுகிறோம்.
    சுவர்களிலும் மரங்களிலும்
    எங்கள் குழந்தைகளின் தலைகள் சிதறடிக்கப்படும்போதில்
    வழியும் வெண் மூளைச்சாற்றின்
    கனவில் இருப்பவர்களே!
    சற்றே அவகாசம் கொடுங்கள்
    எங்கள் குழந்தைகளுக்கு
    நாங்களே நஞ்சூட்டிக் கொன்றுவிடுகிறோம்.
    மேலும் நீங்கள்
    வன்புணர்ந்து சிதைக்கவிருக்கும்
    எங்கள் பெண்கள்
    இழிவின்முன் தற்கொலைசெய்துகொள்ள
    சற்றே அவகாசம் கொடுங்கள்……//
    இப்படி நீள்கின்றது இவரின் கவிதை. இவர் இதில் எழுதியபடியே புலிகள் செய்தார்கள். அந்தப் பேட்டியில் மேலும் சொல்கிறார் பாருங்கள்…

    //கேள்வி:புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மையா?

    அது எப்படி உண்மையாக இருக்கமுடியும்? அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் ‘அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் போர் நடக்கும் வன்னிப் பகுதிக்கு வந்து உண்மை நிலையை அறியவேண்டும்’ என்று திரு.நடேசனால் அழைப்பு விடுக்க முடியுமா? விடுதலைப் புலிகள் வேற்றுக் கிரகத்திலிருந்தோ வேறு நாட்டிலிருந்தோ வந்தவர்கள் அல்லர். அவர்கள் அங்கே செத்துக்கொண்டிருக்கும் மக்களின் பிள்ளைகள் சகோதரிகள் சகோதரர்கள். தங்கள் பிள்ளைகளை சகோதரர்களை ஆபத்துக் காலத்தில் விட்டுவிட்டுப் போகமுடியாமல் மக்கள்தான் அவர்களோடிருக்கிறார்கள். தங்களைக் காக்க ஆயுதம் ஏந்தியவர்களை மக்களால் பிரித்துப் பார்க்க முடியாது.

    1995ஆம் ஆண்டிலே ‘ரிவிரச’ இராணுவ நடவடிக்கையின் மூலமாக யாழ்ப்பாணத்திலிருந்து பல இலட்சக்கணக்கான மக்கள் விரட்டியடிக்கப்பட்டபோது அவர்கள் ஏன் விடுதலைப் புலிகள் இருந்த வன்னியை நோக்கிப் போனார்கள்? புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்றால் அண்மையில் இலங்கை இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்றியபோது மக்களும் விடுதலைப் புலிகளோடு சேர்ந்து வெளியேறிச் சென்றது ஏன்? //தமிழ்நதி

    தமிழ்நதி! யாழ்ப்பாணத்தை விட்டுப் புலிகள் வெளியேறும்போதும் கிளிநொச்சியை விட்டு புலிகள் ஓடும்போதும் மக்களைப் பலவந்தமாகத்தான் கொண்டு போனார்கள் என்பது அந்த மக்களின் வாயாலேயே இன்று வெளிவந்து விட்டன. (அது மட்டுமல்ல எனது குடும்பமும் இதில் அடக்கம்)செத்தது போக எஞ்சிய பாதிக் குடும்பம் இன்னமும் வவுனியாத் தடுப்பு முகாமில்த்தான்)

    //கேள்வி: சிங்கள இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழர்களை விட புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்களே அதிகம் என்று சொல்லப்படுவதில் உண்மை இருக்கிறதா?

    …சில புலி எதிர்ப்பாளர்களாலும் இலங்கை அரசாங்கத்தாலும் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட பிரச்சாரங்களில் நீங்கள் கேட்டதும் ஒன்றுதானேயன்றி வேறில்லை. ஏதோவொரு மனக்கசப்பில் விடுதலைப் போராட்டத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் புலிகளால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டவர்களை ‘புலியெதிர்ப்புக் காய்ச்சல்’ பீடித்திருக்கிறது. மிகுந்த முனைப்போடு, திட்டமிட்டு அவ்வாறான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களது காழ்ப்புணர்வு கலந்த பரப்புரை உலகநாடுகளில் மறைமுகமாக ஈழப்போராட்டத்திற்கெதிரான சூழ்நிலையைத் தோற்றுவிக்கிறது. அது அரசியல் தளத்தில் உள்ளார்ந்து இயங்கி பாதகமான விளைவுகளுக்குக் காரணமாகிறது. இவ்வாறான பரப்புரைகளால் தமது சொந்த மக்களின் நலன்களுக்கே எதிரிகளாகிறார்கள்…//

    இவரின் இந்தப் பேட்டியில் ஒருபேப்பர் சாத்திரியாரும் தன் பங்கிற்கு ஒத்துப்பாடியிருந்தார்………… இது பற்றியெல்லாம் இப்போ இதில் எழுதிக்கொண்டிருக்க முடியாது. ஏற்கனவே தேசத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவை பதியப்பட்டுள்ளன. தவிரவும் இது ஆதவனுக்கும் இவருக்குமிடையில் நடக்கும் விவாதம்(?) பற்றிய பதிவு. எனவே இதுபற்றியே பேசுவோம்.

    //”நாங்கள் ஈழத்தமிழர்களுக்காகப் பேசவேண்டுமென்று குரல்கொடுக்க வேண்டுமென்று நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?”// என்று ஆதவன் கேட்டிருந்தால் அது எமக்கும் கொஞ்சம் வருத்தமாகவும் சங்கடமாகவும்தான் இருக்கிறது. அவரது பதில் கடிதத்தைப் படிக்கும்போது அவரை உசுப்பேற்றிய ஒரு சூழலில் அப்படிப் பேசித் தொலைத்ததாகக் குறிப்பிடுவதை அவதானிக்க முடிகின்றது.

    //இந்தியத் தமிழர்களை தோட்டக்கூலிகள் கள்ளத்தோணிகள் என்று இலங்கைத்தமிழர்கள் இன்றளவும் ஏளனம் பேசுவதைக் கண்டித்த ஈழப்படைப்பாளிகள் என்று யாரைக் காட்டுவீர்கள்? இந்தியாவிலிருந்து பிடித்து செல்லப்பட்ட இந்த மலையகத்தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள் என்பதால் அவர்களை தமிழர்கள் என்று இனரீதியாக இணைத்துக்கொள்ள யாழ்ப்பாண வெள்ளாள மனநிலை இடம் கொடுக்கவில்லை என்பதைக் கண்டித்து எழுதிய ஈழப்படைப்பாளிகள் உண்டா?

    தமிழ்பேசும் முஸ்லிம்கள் அனைவரையும் ஈழ விரோதிகள் என்று முத்திரை குத்தி 48 மணி நேர கெடு விதித்து 500 ரூபாய் பணம் அல்லது அதற்கீடான பொருளுடன் வெளியேற்றிய புலிகளின் இனச்சுத்திகரிப்பைக் கண்டித்த படைப்பாளி எவரேனும் உண்டா ஈழத்தில்?

    தமிழ்நாட்டில் வெண்மணியில் 44 பேர் எரித்துக் கொல்லப்பட்டபோது ஈழத்திலிருந்து எந்த குரலும் ஒலிக்கவில்லை. திண்ணியத்தில் தலித்துகள் வாயில் மலம் திணிக்கப்பட்ட கொடுமையை எதிர்த்தோ இதோ இப்போதும் உத்தபுரத்தில் மறித்து நிற்கிற சாதிச்சுவரை இடிக்க வேண்டுமென்றோ ஈழத்திலிருந்து எழுந்த தமிழினக்குரல் எதுவுமுண்டா?// என்று ஆதவன் கேட்கும் கேள்விகளில் நியாயங்கள் நிறையவே உண்டு. ஆனாலும் உங்களை எந்தக் கொம்பாதி கொம்பன் உசுப்பேற்றியிருந்தாலும் நீங்கள் அந்த வார்த்தையைப் பாவித்திருக்கக் கூடாதென்றே நினைக்கின்றேன் ஆதவன்.

    ஏனென்றால் தாங்கள் அத்தகையதொரு கருத்தைக் கொண்டவரல்ல என்பது எம்மைப்போன்ற பலருக்கு நன்றே தெரியும்.

    தமிழகத்து புலிரசிக எழுத்தாளர்களை வேறொரு வகையில் நாம் கேள்விகள் கேட்க நினைத்தோம். ஆனால் இன்று அவர்கள் உங்களை முன்னுக்குத் தள்ளிவிட்டு தாங்கள் ஒளிந்துகொள்ளப் போகிறார்கள் என்ற கவலை இப்போ எங்களுக்கு. இனிமேல் கொஞ்சக் காலத்திற்கு இந்தப் புலிரசிகர்கள் “ஆதவன்தான் ஈழத்தமிழ்த் துரோகி” என்று கை காட்டிவிட்டு தங்கள் சந்தர்ப்பவாதப் பிழைப்பை நடத்துவார்கள். 3லட்சம் தமிழ் மக்களையும் தங்கள் பாதுகாப்பு அரணுக்கான மண்மூடைகளாகப் பயன்படுத்திய வேளையில் இந்தத் தொப்புள் கொடி எழுத்தாளர்களெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார்கள்…? ஒரு இலட்சம் இலங்கைத் தமிழர் 25வருடங்களுக்கும் மேலாக சிறப்பு முகாம் என்ற பெயரிலுள்ள நரகச் சிறைச்சாலைகளில் தமிழ் நாட்டில் அவதியுற்றுக்கொண்டு கிடக்கிறார்களே அது பற்றி இந்த எழுத்தாள உணர்வாளர்களுக்கு எழுதுவதற்கு ஒரு வரிகூடவா கிடைக்கவில்லை. இப்போதுமட்டும் ஏன் எகிறப் பாய்கிறார்கள். பதில் மிகச் சுலபம் ஆதவன். அதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

    அடுத்து தமிழ்நதி பற்றி நீங்கள் ஏதோ பெரியதொரு பிம்பத்தை வளர்த்து வருவதாகவே தெரிகிறது. இப்போதும் புலிப்புராணம் பாடும் இவர் தனது உறவுப் பிள்ளைகளை புலிகள் பிடித்துச் சென்று விடாமல் பாதுகாத்து மிகவும் பவுத்திரமாக தமிழ்நாட்டில் கொண்டுவந்து கல்வி பயில வைக்கின்றா. ஆனால் ஏழை பாளைகளின் பிள்ளைகள் மட்டும் நஞ்சைக் கழுத்திலும் குண்டை வயிற்றிலும் துவக்கைத் தோழிலும் சுமந்து கொலைக் களத்துக்குப் போக வேண்டும். இவரப் போன்றவர்கள் இப்படித்தான் என்பது எங்களுக்கு தெரியும் ஆதவன். ஆனால் பாவம் நீங்கள்.

    திரும்பத் திரும்ப புலியின் மாயைத் தனத்துக்குள் முடங்கிக் கிடக்கும் வேலைகளையே புலிப்பக்த கோடிகள் செய்து கொண்டிருக்கின்றன. அதை விடுத்து அந்த வெறும் மாயை பிம்பத்தை உடைத்து ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு இன்று முக்கியமாகப் பேசப்படவேண்டிய விடையங்கள் பல உண்டு.
    தடுப்பு முகாம்களுக்கள் அடைத்து வைக்கப்பட்டுத் துன்புறுத்தப்படும் 3இலட்சம் மக்களையும் தத்தமது இடங்களுக்கு சென்று குடியமரும் உரிமைகளை உடனே இலங்கை அரசு செய்ய வேண்டும். தமிழ் மக்களுக்கான சரியான தீர்வை இலங்கையரசு தாமதியாது வழங்க வேண்டும்.
    சரணடைந்த புலிகளை பொது மன்னிப்பு வழங்கி நிபந்தனையற்று விடுவிக்கப்பட வேண்டும்…. இப்படி நாம் இன்று பேச வேண்டியதும் செய்ய வேண்டியதும் நிறைய இருக்கிறது ஆதவன். அதை விட்டுவிட்டு இன்னமும் புலி வாலில் தொங்கி நாடகம் போட்டுக் கொண்டிருப்போருடன் ஏன் உங்கள் சக்திகளை விரையமாக்குகிறீர்கள்.

    -குணாளன்-

    Reply
  • KUNALAN
    KUNALAN

    இந்த வேளையில் இதுவும் பொருத்தமாக இருப்பதாக நான் கருதுவதால் இங்கே இணைக்கின்றேன்.

    23.05.2009 தேசம்நெற் செய்தி:
    தமிழகம்:117 முகாம்களில் 75 738 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளனர்

    இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக தொடர்ந்து கடும் சண்டை நடைபெற்றது. இதை தொடர்ந்து இலங்கையில் இருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்தனர். கடந்த 1983-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகளில் கடும் சண்டை நடந்தது. அப்போது 1 லட்சத்து 34 ஆயிரத்து 53 பேர் அகதிகளாக தமிழ் நாட்டுக்கு வந்தனர். இவர்கள் அனைவரும் ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது 117 முகாம்களில் 75, 738 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளனர்.

    இதற்கான பின்னூட்டம்:

    KUNALAN. May 23. 2009 6:30 pm
    இந்த மக்களின் பரிதாபத்தையும் ஒடுங்கிய வாழ்வையும் பற்றிப் பேசவே இன்று நாதியில்லாமல் போயிற்று.
    தமிழ்நாட்டில் கடைவாயால் நுரை தள்ளள தொப்புள்கொடி உறவு பற்றி வாய் கிழியப் பேசி ஓட்டுப் பொறுக்கும் சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளாயிருந்தாலென்ன அல்லது நெடுமாறன் வைக்கே திருமாவளவன் சீமான் போன்ற ஈழ ஆதரவு பேசுவோராய் இருந்தாலென்ன இந்த மக்கள் பற்றி எதுவுமே பேச மாட்டார்கள். சிறப்பு முகாம் என்ற பெயரால் அந்த மக்கள் கால்நூற்றாண்டுகளுக்கு மேலாக அடைபட்டுக் கிடப்பதும் அவர்களது வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்ட நிலையில் உழுத்தல் அரிசிக்காக ஏங்கிக் கிடப்பதும் கொடுமையிலும் கொடுமை. தமிழ்நாடு அரசு இந்த அகதிகளுக்காக ஆண்டுக்கு ஆயிரம்கோடி ரூபாய்களை ஒதுக்குகிறது. ஆனால் அந்த மக்களுக்கு ஆயிரத்தில் ஒருசதவீதம்கூட போய்ச் சேருகிறதா என்றால் சந்தேகம்தான். பல ஆயிரக்கணக்கான வெவ்வேறு துறைகளில் சிறப்புள்ள தொழிலாளர்கள் இதற்குள் முடக்கப் பட்டுள்ளார்கள். இந்த ஆயிரம்கோடி ரூபாயில் ஒரு பகுதியை சிறுதொழிற் கூடங்கள் அமைத்து குறைந்த பட்சம் இவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை அந்தந்த இடங்களில் ஏற்படுத்திக் கொடுத்தாலே அந்த மக்கள் தங்கள் காலில் நிற்பதான உணர்வோடு ஒருவேளை கஞ்சியாவது நல்ல அரிசியில் காய்ச்சிக் குடிப்பார்கள்.
    “ஓயாத அலைகளாய் சுழன்றடிப்போம்…
    துவண்டு கிடக்கும் நாமும்..
    விழிகளை துடைத்துக்கொண்டு…
    ஒரு தேசம் உருவாக களத்தினை இங்கே கட்டி எழுப்புவோம்..
    உயிர்த்தெழுவோம். உருவாவோம்.
    தமிழர்களின் தாகம்…. தமிழீழ தாயகம்.”
    என்ற கோசத்தை முன்வைத்து இப்போ தமிழ் நாட்டில் ஒரு புதிய இயக்கம் (இணையத் தமிழர் இயக்கம்) தொடங்கப்பட்டுள்ளது.
    “அப்பழுக்கற்ற தியாகமும் நேர்மையும் வீரம் செறிந்த
    அறமும் உடைய தன்னிகரற்ற மாமனிதன் நம் தேசிய தலைவர் அவர்கள். கல் தோன்றா மண் தோன்றா காலத்து முன் தோன்றிய நம் இனத்து ஒட்டு மொத்த வரலாற்றின் பெருமை மிகு அடையாளமும் அவரே.”
    என்று கூறிக்கொண்டு இப்போ கூத்தடிக்கப் புறப்பட்டு விட்டார்கள். இவர்களுக்கென்ன இட்லி வடை பொங்கல் சாம்பாரென உருட்டி விழுங்கிவிட்டு சமிபாட்டுக்காகக் கத்துகிறார்கள. எங்கள் மக்களோ ஒட்டி உலர்ந்த எலும்பும் தோலுமான உடல்களோடு போஷாக்கின்மையால் சருகாய் துவண்டுபோய் போரால் களைத்துக் கிடக்கிறார்கள். இவர்களோ “உலக வரலாற்றில் எந்த விடுதலைப் போராட்டமும் இழப்புகள் ஏதுமின்றி நிகழ்ந்ததில்லை. அதற்கு நாமும் விதிவிலக்குகள் அல்ல” என்று கொழுப்பெடுத்த பேச்சுப் பேசிக் கிளம்பி விட்டார்கள்.
    இந்த இனஅழிப்பின் கொடும்போர் ஏற்படுத்திய காயமும் வடுவும் வலியும் ஆறுவதற்கே எமது மக்களுக்கு இன்னமும் அரைநூற்றாண்டுகள்கூடப் போதாதே ஐயா. இந்த இந்தியப் பொடியள் தனித்தமிழீழம் காண எழுந்து திரண்டு மீண்டும் வரும்படி அறைகூல் விடுகிறார்கள். ஒரு கைக்குண்டைக் கையில் ஏந்துவதற்கே கையில் வலுவில்லாமல் நாலுபக்கமும் அடைபட்ட வேலிக்குள் பட்டினியாய்க் கிடக்கும் மீதிச் சனத்தையும் காவு கேட்க தமிழகத்தில் கிழம்பி விட்டார்கள். இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே பாதித் தமிழன் ஈழத்தில் அழிந்து போனான். மீதமிருப்போரையும் புதைகுழிக்குள் கொண்டு போக இப்போ புதிதாய் தமிழகத்தில் புலியெனப் புறப்பட்டு விட்டார்கள் வெட்டிப் பேய்கள். கேட்டால் தமிழுணர்வாளர்களாம். தொப்புள்கொடி உறவாம். அங்கு உங்கள் தேசத்தில் 25வருடங்களுக்கும் மேலாக ஒரு லட்சம் அகதிகள் சிறைவாழ்வை அனுபவிக்கிறார்கள் அது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? நீங்கள் உண்மையான உணர்வாளர்களாயிருந்தால் இதையல்லவா முதலில் கவனிக்க வேண்டும். சினிமாவைப் பார்த்துப் பார்த்தே வீரவசனம் பேசி வளர்ந்த கூட்டம் இது. இதனால் இப்படி எதையாவது குண்டக்க மண்டக்கயாத்தான் செய்ய முடியுமே தவிர ஆக்கபூர்வமாகச் செயற்படுபவர்களல்ல என்பது எங்களுக்குத் தெரியும்

    எனவே இவர்களுக்கு சொல்லக் கூடிது இப்போதைக்கு ஒன்று மட்டும்தான்: ஈழப்பெருங்கதையாடல் செய்து இதுவரை நீங்கள் எங்களுக்குச் செய்த அனைத்து உதவிகளுக்கும் நன்றி! எங்கள் எஞ்சியுள்ள மக்களை விட்டுவிடுங்கள். வீரமும் மானமும் உள்ள மறவர்கள்தானே நீங்கள் உங்களுக்கு வேண்டுமானால் நீங்கள் விரும்பினால் இந்தியாவுக்குள் உங்களுக்கென்றொரு தனிநாட்டுக்காகப் போராடுங்கள். உங்களுக்கும் உதவ தொப்புள்கொடி உறவுகள் வராமலா போகும். எங்களை விட்டு விடுங்கள்.

    குணாளன்

    Reply
  • haran
    haran

    ஆதவன் உங்கலின் பதில் ஒரு யாழ்பானீயின் சொல்கட்டுகலின் மீது வீசபட்ட கன்னிவெடி

    உரயாடலுக்காக , ஆதவன்

    புலிகலின் தலமை ஒன்ரும் வெள்ளாள தலமை அல்ல
    4வது ஈழ்போரடம்தான் வெள்ளாள தலமையை உருவாக்கிசெல்கிரது T.N.A, T.A.N.A, E.P.D.P, P.L.O.T, S.L.F.P, U.N.P ….

    Reply
  • KUNALAN
    KUNALAN

    //”வன்முறை நமது சமூகத்தில் காட்டுச்செடி போல பரவிவிட்டது. வன்முறை என்பது வன்முறையாளர்களின் குற்றம் மட்டுமே என்று கூறிவிட முடியாது. தன்மீது அவிழ்த்துவிடப்படும் வன்முறையை அமைதியாக ஏற்றுக்கொள்ளும் எல்லோருக்கும் இந்தக் குற்றத்தில் பங்கு உண்டு” என்ற கனிமொழியின் வார்த்தைகளோடு நான் முழுமையாக உடன்படுகிறேன்// என்று தனது தளத்தில் எழுதும் தமிழ்நதி இதுவரை காலத்தில் ஒரு தடவையேனும் புலிகள் தமிழ் மக்கள்மீதும் ஏனைய இயக்கங்கள் மீதும் அறிவாளிகள் மீதும் இப்பாவி சிங்கள மக்கள் மீதும் முஸ்லிம் மக்கள் மீதும் புரிந்த வன்முறைகளை விமர்சித்து ஒரு வரி எழுதியிருப்பாரா…?

    ஆதவன் உங்களுக்கு ஒரு விடையத்தை மட்டும் இப்போதைக்கு சொல்லி வைக்கலாமென நினைக்கிறேன். “நானொரு மனு விரோதன்” என்று உங்கள் கதைக்குத் தலைப்பு வைத்ததுபோல் உங்களது அடுத்த கதைக்கு “நானொரு தமிழீழ விரோதன்” என்று துணிந்து தலைப்பிடுங்கள். தப்பேயில்லை.

    இன்று தமிழ் நாட்டில் அடித்துக்கொண்டிருக்கும் புலியலையானது இந்தப் புலிப் புண்ணாக்குகளுக்கு இவர்கள் எதிர்பார்க்கும் இலாபத்தைக் கொடுக்கப் போவதில்லை என்பதே நிஜம். விரைவில் பல்ட்டி அடிப்பார்கள் பாருங்கள்(தமிழ்நதி உட்பட) .

    -குணாளன்-

    Reply
  • london boy
    london boy

    மேலே இருக்கிற கட்டுரை எதை நோக்கி உள்ளது

    இலங்கையர்க்கும் இந்தியர்க்கும் உள்ள அடிபாடா?
    புலி புலிஎதிர்ப்பு அடிபாடா?
    இலக்கியப் போட்டியா?
    இல்லை சாதிப்பிரச்சினையா?

    Reply
  • Thanga. Mukunthan
    Thanga. Mukunthan

    மதிப்புக்குரிய ஆதவன் தீட்சண்யா அவர்களுக்கு வணக்கம்.

    //மலையகத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள் என்பதால் அவர்களை தமிழர்கள் என்று இனரீதியாக இணைத்துக்கொள்ள யாழ்ப்பாண வெள்ளாள மனநிலை இடம் கொடுக்கவில்லை என்பதைக் கண்டித்து எழுதிய ஈழப்படைப்பாளிகள் உண்டா?

    தமிழ்பேசும் முஸ்லிம்கள் அனைவரையும் ஈழ விரோதிகள் என்று முத்திரை குத்தி 48 மணி நேர கெடு விதித்து 500 ரூபாய் பணம் அல்லது அதற்கீடான பொருளுடன் வெளியேற்றிய புலிகளின் இனச்சுத்திகரிப்பைக் கண்டித்த படைப்பாளி எவரேனும் உண்டா ஈழத்தில்? //

    மேற்குறிப்பிட்ட 2 விடயங்களில் நான் ஒரு படைப்பாளியாக இல்லாமல் மனிதத் தன்மையோடு சில விடயங்களைக் குறிப்பிட்டு பத்திரிகைகளுக்கும் செய்திகளை அனுப்பியிருந்தும் இன்றுவரை பிரசுரிக்காத காரணத்தால் நானே ஒரு வலைப்பதிவை உருவாக்கி அதில் எனது சகல பதிவுகளையும் பதிவிட்டுக்கொண்டு வருகின்றேன். இந்த வலைப் பதிவை உருவாக்கி எனக்கத் தந்தவர் ஒரு மலையகத் தமிழர். எனக்கும் மலையகத் தமிழர்களுக்குமிடையில் ஒரு இறுக்கமான பிணைப்பு உண்டு.

    கடந்த முதலாம் திகதி நான் எழுதிய இலங்கை(ஈழம்) – தமிழீழம் – போராட்டம்! ஆறறிவுடைய மனித இனத்திற்கு ஒரு மனிதாபிமான வேண்டுகோள்! – சிந்தித்துச் செயற்படுங்கள் என்ற கட்டுரையை தேசம் நெற்காரர் போட்டிருந்தால் உங்கள் குற்றச்சாட்டிலிருந்து நான் தப்பித்திருக்க முடியும். நேரமுள்ளபோது எனது வலைப்பதிவில் உள்ள முக்கியமான பகுதிகளைப் பார்த்தால் நாம் ஏதோ எம்மால் இந்தச் சமூகத்திற்கு முடிந்ததைச் செய்ய முனைந்ததை அறியலாம். ஒரு சிலர் எழுதுவதற்காக மொத்த ஈழத்தவரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முயற்சிக்க வேண்டாம். பலர் சகோதரப் படுகொலைகளில் கொல்லப்பட்டு விட்டனர். புலம்பெயர்ந்தவர்களும் – ஏன் தமிழகத்திலுள்ள சிலரும் (நீங்கள் சொல்லும் படைப்பாளிகள் பலர் உட்பட அரசியல்வாதிகள் எல்லாரும் அடங்கலாக) எனக்குக் குற்றவாளிகளாகத் தெரிகின்றார்கள். உங்களை இதற்குள் சேர்க்கவில்லை. அதிகம் எழுத விரும்பவில்லை – பின்னர் தேவையேற்பட்டால் வருகின்றேன். எனது வலைத் தளம் – http://www.kiruththiyam.blogspot.com

    Reply
  • chandran.raja
    chandran.raja

    ஆயிரம் பேர் வருவார். ஆயிரம் பேர் போவார். கையளவு அடங்கிப்போன உலகில் ஒவ்வொருவரும் தமக்கொரு மேடைபோட்டு கச்சேரி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த மனிதருக்கு உழைப்பாளிமக்களுக்கு பயன்படும் விதத்தில் இரண்டு வகைப்படுத்தமுடியுமா? இந்த கச்சேரி நடத்ததுபவர்கள் தயார் ஆவார்களா? இறுதியில் இதுவும் பிணத்திற்கு பேன் பார்கிறவேலையாக முடியுமா?

    நீண்டகட்டுரையும் அதே அளவுக்கு பின்னோட்டம் மாறிவரும் எம்மை எங்கேயோ கொண்டுசென்று விட்டுவிடும் போல் தெரிகிறது. ஒன்று காசியாக இருக்கலாம் அல்லது பைத்தியகாரர் தங்குமிடமாக இருக்கலாம். நான் அறிந்த கல்வியில் என்னை சதா-நித்தமும் பிரணவமந்திரமாக ஒலித்தக் கொண்டிருக்கிறது இந்த வாசகம் தான் இதோ- ஒரு உண்மை அறிந்துகொள்ள வேண்டுமென்றால் விஞ்யாணத்திலேயோ வரலாற்றிலேயோ ஒருமதத்திலேயோ சாதி இனத்திலோயோ தேடக்கூடாது ஒருமனிதனுக்கு கிடைக்ககூடிய உணவு உடை உறைவிடம் என்ற நீதியின் ஒளியில் இருந்துதான் உண்மையை புரிந்துகொள்ள முற்படவேண்டும்.

    Reply
  • shantha
    shantha

    யாழ் மேலாதிக்கத்தை விமர்சிக்க வேண்டிய அதே வேளை யாழ்ப்பாணி என்று அழைப்பது இனவாதாமாக படுகிறது!

    Reply
  • Nadchathiran chevinthian.
    Nadchathiran chevinthian.

    Dear Friend Aathavan Theedchanya,

    I agree with U. I am glad to hear that like S.V Rajathurai U have the correct understanding of our Ethnic/Fascist crisis.
    Congratulations.
    Next time when I will come to Tamil Nadu I would like to meet U. I would like to have tea/beer with U.
    Kalachuvadu and Uyirmai have no guts to write the true story of our crisis. U did it. Once again Congratulations.

    Reply
  • sangar
    sangar

    ஒரு கம்யுனிஸ்ட் கட்சியில் இருக்கும் பொறுப்புவாய்ந்த ஆதவன் தீட்சனயா விடமிருந்து இப்படி ஒரு அடம்பிடிக்கும் அறிக்கையை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

    ஆதவன் அவர்களின் இலங்கைத்தமிழர் தொடர்பான நிலைப்பாடு என்ன என்பதை நான் பூரணமாக அறியாவிடினும் அவரின் கட்சியின் நிலைப்பாட்டை நன்கு அறிவேன். மேற்கு வங்கத்தில் தன் சொந்த மக்களையே கொன்று குவிக்கும் புரட்சி(?)க்கட்சியான அவருடைய கம்யுனிஸ்ட் கட்சி இலங்கைத் தமிழர்கள் பற்றி அக்கறை கொள்ளும் என்று நம்புவதற்கு நாம் முட்டாள்களாக இருக்கவேண்டும் அல்லது பையித்தியக்காரர்களாக இருக்கவேண்டும். இவருடைய கட்சியால் கம்யுனிஸ்ட் நாடுகள் என்று கொண்டாடப்படும் கியூபா வியட்நாம் போன்ற நாடுகள் இலங்கை இனவெறி அரசின் படுகொலைகளுக்கு ஆதரவாக இருப்பது இதுவரை இவர்களை நம்பியவர்களுக்கு ஆச்சரியமாக இருப்பினும் இவர்களை ஒரு போலிக் கம்யுனிஸ்ட்டுகள் என்று தோலுரித்துக்காட்டியவர்களுக்கு சரி என்று சான்று பகிர்கிறது.

    இலங்கையில் சாதிப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர் தோழர் சண்முகதாசன் மட்டுமல்ல அக் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் பலரும் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை ஆதவன் அவர்களுக்கு நினைவூட்ட விரும்கிறேன்.மேலும் உயர்சாதியில் பலரின் ஆதரவு கிடைத்திருக்காவிட்டால் தங்களால் போராடியிருக்கமுடியாது என்பதை தோழர் டானினியல் அவர்களும் கூறியிருப்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மேலும் தோழர் சண் அவர்களின் கட்சியின் தொழிற் சங்கமான “செங்கொடி”யானது மலையகத்தமிழர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க பங்காற்றியதை இலங்கை வரலாறு தெரிந்தவர்கள் யாரும் மறுக்கமாட்டார்கள்.

    புலிக்குட்டிகளுக்கு எதிர்வினையாற்றுவதாக நினைத்துக்கொண்டு தவறான கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்த்து இலங்கை வரலாற்றை நன்கு தெரிந்து கொண்டு பங்காற்ற முன்வரவேண்டும் என ஆதவன் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

    Reply
  • kumar
    kumar

    தாழ்த்தப்பட்ட மக்கள் மீது
    கிழக்கு மக்கள் மீது
    மலையக மக்கள் மீது
    யாழ் உயர்சாதி மக்களின் ஆதிக்க மனோபாவம் பற்றி
    யாருமே கதைக்கவில்லை என்று ஆதவன் தீட்சனயா குற்றம் சாட்டுவது தவறு.பலர் கதைத்துள்ளனர்.குறிப்பாக யாழ் உயர் சாதியினரில் கூட கதைத்துள்ளனர்.ஆனால் துரதிருஸ்டவசமாக அவர்களின் பலம் மிகவும் குறைவானதால் அவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மையாகும்.1960 களில் சண் அவர்களின் தலைமையிலான கம்யுனிஸ்கட்சியும் அதன் பின்னர் பேரவை என்.எல.எவ்.ரி பி.எல்.எவ் .ரி போன்ற இயக்கங்களும் முக்கிய பங்கு ஆற்றின.

    “எச்சாமம் போனாலும் நிச்சாமம்…”என்ற புகழ்பெற்ற சாதி எதிர்ப்பு போராட்ட கவிதையை எழுதியது தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த கவிஞன் அல்ல. மாறாக உயர் சாதியை சேர்ந்த கவிஞன் என்பதை ஆதவன் நினைவில் கொள்ள வேண்டும்.

    மேலும் நாளை கனடாவில் நினைவு கூரப்படும் தோழர் சிவம் அவர்களும் உயர் சாதியைச் சேர்தவராக இருப்பினும் தோழர் சண்முகதாசன் கட்சியில் அவர் சாதிப்போராட்டத்தில் ஆற்றிய பங்கை மறக்கவோ மறுக்கவோ முடியாது.

    Reply
  • kamal
    kamal

    தோழர் ஆதவன் தீட்சனயா அவர்களே !
    புலிக்குட்டி தமிழ்நதியிடம் உங்கள் வார்த்தை ஜாலங்களை காட்டவேண்டாம். பாவம் விட்டுவிடுங்கள். உங்களின் பின்னனி தெரியாமல் கதைத்து விட்டார். அல்லது பிரபல்யம் அடைவதற்காக இருவரும் ஒன்றாக பேசி நாடகம் ஆடுகிறீர்களோ தெரிவில்லை.

    அது சரி தோழரே உங்கள் கட்சி ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில் ஏதோ பிரச்சனையாம்.அது என்னவென்று கொஞ்சம் சொல்ல முடியுமா?அப்பாவி மலைவாழ் மக்களை இராணுவம் கொண்டு அடக்கி ஒடுக்குகிறீர்களே அவர்கள் என்ன அந்நிய நாட்டு மக்களா? அல்லது அவர்களின் பிரச்சனை என்ன எல்லைப் பிரச்சனையா? 25 வருடங்கள் உங்கள் கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்தில் பிரச்சனை என்பதே ஆச்சரியமாக இருக்கிறது? அதுவும் இராணுவம் கொண்டு அடக்க வேண்டிய அளவுக்கு பிரச்சனை என்பது இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது தோழரே? சொந்த மக்களை இராணுவம் கொண்டு கொண்டு கொன்று குவிக்கும் கட்சியில் ஒரு பொறுப்பில் இருக்கும்….. இலக்கியவாதி இன்னொருநாட்டில் அப்பாவி மக்களை இராணுவம் கொன்று குவிக்கும் போது எப்படி மன சுத்தியுடன் குரல் கொடுப்பார் என்று எதிர்பார்க்க முடியும் தோழரே?

    Reply
  • sami
    sami

    புலிகள் மாபெரும் தவறுகள் இழைத்துள்ளனர் எனவே அவர்களை ஆதரிக்க முடியாது என ஆதவன் தீட்சனயா அவர்கள் சொல்வது உண்மை என்றால் அவருடைய கட்சி தனது பொதுக்குழு கூட்டத்திற்கு ஜே.வி.பி கட்சியை எப்படி சிறப்பு விருந்தினராக அழைக்க முடியும்?

    தமிழ்நதி கேட்டதை தன்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் அதனால்தான் உடனடியாக பதில் கொடுப்பதாக கூறிக்கொள்ளும் ஆதவன் தீட்சனயா அவர்கள் அவருடைய கட்சியை “போலிக் கம்யுனிஸ்டுகள்” “ஓட்டுப்பொறுக்கிகள்” என்றெல்லாம் “வினவு” தளம் மற்றும் நக்சல்பாரி இயக்கத்தவரின் “புதிய ஜனநாயகம்” “புதிய காலாச்சாரம்” என்பனவற்றில் எழுதுகின்றனரே.அவற்றுக்கு இதுவரை பதில் அளித்தீர்களா? அவர்களிடம் வராத கோபம் தமிழ்நதியிடம் மட்டும் ஏன் ஆதவன் அவர்களுக்கு வருகிறது?

    Reply
  • niruma
    niruma

    தமிழ்நதி அவர்கள் “எங்களுக்காக நீங்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை” என்று பொதுவாக தமிழ்நாட்டு இலக்கியவாதிகளிடம் கேட்டதற்கு மாறாக ஆதவன் தீட்சனயா அவர்களின் கட்சியின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பியிருக்கலாம். அவ்வாறு கேட்டிருந்தால் ஆதவன் தீட்சனயாவை மட்டுமல்ல அவரின் கட்சியையும் அம்பலப்படுத்தியிருக்க முடியும்.

    தமிழ்நாட்டில் இலக்கியவாதிகள் மட்டுமல்ல அனைவரும் அடிமைகளாகவே இருக்கின்றனர். இதை நான் சொல்லவில்லை. தந்தை பெரியார் சொல்லியிருக்கிறார். அறிஞர் அண்ணா சொல்லியிருக்கிறார். எனவேதான் “ஒரு அடிமை தன் அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே இன்னொரு அடிமைக்கு உதவமுடியும். தமிழ் நாட்டு தமிழர்கள் தமிழ்நாட்டு விடுதலைக்கு போராடுவதன் மூலமே இலங்கைத் தமிழர்களுக்கு உதவமுடியும்” என்று தமிழ்நாட்டு விடுதலைப்படை தளபதி தோழர் தமிழரசன் கூறினார். எனவே தமிழ் நதி கேட்ட கேள்விக்கு விடையளிக்க எத்தனை இலக்கியவாதிகள் தமிழ்நாட்டு விடுதலைக்காக போராடுகிறார்கள் என்பதை காணவேண்டும்.

    Reply
  • தமிழ் தேசியன்
    தமிழ் தேசியன்

    //ஒடுக்கபட்ட தமிழினத்திற்கு ஆரிய ஏகாதிபத்தியம் அளிப்பதுதான் தீர்வா?//

    13-வது அரசியல் அமைப்பு சட்டம் குறித்து வாய்கிழிய பேசி திரியும் காங்கிரசுகாரர் அச்சட்டம் ஈழ தமிழர்களால் ஏற்கெனவே நிராகரிக்கபட்டது எனும் உண்மையை ஏனோ செலக்டிவ் அம்னிஷியா போல் மறந்து போகின்றனர்..அல்லது அத்திட்டதினை வலியுறுத்தும் அவர்கள் இந்தியா போன்று மதசார்பற்ற இலங்கை என அவர்களது ஆரிய கூட்டாளியான ராசபக்சேவிடம் வலியுறுத்த தயாரா? சென்னையில் காங்கிரசு பிரச்சார கூட்டதின் போது ராஜீவ்காந்தி’ஜீ ‘ ஏற்படுத்தி கொடுத்த ஒப்பந்தமே தமிழர்களுக்கு தீர்வு எனசொன்ன சோனியா அந்த ஒப்பந்தித்தின்படி வடக்கு கிழக்கை இணைக்க இலங்கையை மிரட்டுவாரா?

    இளித்தவாயன்கள் மேல் ஏறி மிதிக்கு இந்தி தேசியம்

    ஈழ தமிழர்களின் அரசியல் ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல் தீர்ப்பு சொல்ல இவர்கள் யார்? தெற்காசிய பேட்டை ரவுடி அல்லவா? அங்குள்ள மக்கள் வதைமுகாம்களில் சிக்கி சின்னாபின்னபட்டு கொண்டு இருக்கும் போது ‘இந்தி’யன் ஆயில் கார்பரேசன் மூலமாக பெட்ரோல் பங்கு திறக்கிறார்களாம். அதுவும் தமிழர்கள் இருக்கும் பகுதிகளில் .. அதேபோல கடலுக்கடியில் மின்சாரம் அனுப்ப போகிறார்களாம் .. இதில் கொடுமை என்னவென்றால் அதுவும் தமிழ்நாட்டில் இருந்து.. அங்கே தமிழர்கள் வதைமுகாம்களில் இருக்கும் போது இந்த இந்தியா காரணமில்லாமல் ஏன் இவற்றை செய்கிறது? இங்கே தான் நாம் சிறிது சிந்தித்து பார்க்கவேண்டும்.. ஈழ தமிழர்களை சாகடித்தோர் இனி சாகடிப்போர் இந்திய அரசுக்கு நண்பர்கள். சிங்களர்கள் நண்பர்கள் என்று சொல்வது கூட தவறு. இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அவர்கள் பங்காளிகள். சிங்களரும் இந்திய ஆளும் வர்க்கத்தினரும் ஆரியர்கள். வரலாற்றுக் காலந்தொட்டு அடுத்தடுத்த தலைமுறைக்குத் தமிழர்க்கெதிரான பகைநஞ்சை ஆரியம் கைமாற்றித் தந்துவருகிறது. ஈழத் தமிழர்கள்பால் இந்திய ஆளும் வர்க்கம் கடைபிடிக்கும் அணுகுமுறையும் பகைமை நஞ்சு சார்ந்ததுதான்.. ஆரியர்களுக்கு தூரபார்வை அதிகம்! இதை தமிழர்கள் ஏற்று கொண்டே ஆக வேண்டும் இல்லையென்றால் இவர்கள் இன்று நம் தலை மீது ஏறி மிளகாய அரைக்கும் நிலைவந்திருக்குமா? இந்தி அரசு காரணமில்லாமல் இவ்வேலைகளை செய்யவில்லை.. கூர்ந்து கவனித்தால் ஈழ தமிழர்களை பூண்டோடு ஒழித்துவிட்டு எப்படியும் நம் சிங்கள பங்காளிகள் அங்கு குடியேறிவிடுவார்கள் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற தூர நோக்கிலான செயல்பாடே அது! இதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்..

    இனி புலம்பெயர்ந்த ஈழ தமிழர்கள் செய்யவேண்டியது என்ன?

    இனி ஈழதமிழர்கள் இந்தியா நம் தந்தையர்நாடு பாட்டி நாடு கூறுவதை முதலில் நிறுத்தவேண்டும்..பகைநாடு என்று கூறுதல் வேண்டும்! இவ்வளவுக்கும் காரணமான இந்திய தேசத்தினை இனியும் இவ்வாறு கூற மானமுள்ள ஈழ தமிழன் முன்வரமாட்டான்.. தொப்புள் கொடி உறவு அவரை கொடி என்று வீரமுள்ள ஒரு தலைவர் கூட இல்லை.. சொல்ல போனால் நாங்களே இங்கு அடிமைகளாக உள்ளோம்.. இந்தி தேசியத்தினை பொறுத்தவரை தன் தேசியத்தில் ஒற்றுமை பிறர் தேசியத்தில் வேற்றுமை இதுவே அது கடைபிடிப்பது! இன்று தமிழர்களுக்கு 4 மாநிலம் இலங்கையில் உருவாக்குவோம் என்று இந்தி தேசியத்தின் குரலாய் ஒலிக்கிறதே கோடாலிகாம்பு சிதம்பரத்தின் குரல் காரணம் என்ன? யாழ்பாணத்தான் ,மட்டகிளப்பாண், திரிகோணமலையான், வவுனியான் என பிரித்து தமிழர்களுக்குள்ளேயே ஒருவனை ஒருவன் மோதவிடும் செயல்திட்டங்களே அவை! இவைகளை எப்படி முறியடிப்பது? ஈழ அரசியல் தலைவர்கள் இங்கு முந்தி கொள்வது அவசியமாகிறது! ஈழ அரசியல் தலைவர்கள் ஈழத்திற்கான சுயநிர்ணய அடிப்படையுடன் கூடிய அரசியல் அமைப்பு சட்டத்தினை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.. புதிதாக வேறு ஏங்கும் தேட வேண்டாம் ஏற்கனவே உள்ள பிற நாட்டு அரசியல் அமைப்பை முன்மொழிய வேண்டும்..புதிதாக தமிழீழம் அமைந்த பிறகு நாம் ரூம் போட்டு யோசித்து கொள்ளலாம்! இப்போதைக்கு தேவை சுய நிர்ணய உரிமை! அதை உள்ளடக்கிய நாட்டு அரசியல் அமைப்பு சட்டம் எங்குள்ளது என தேடலாம் உதாரணம் கனடா. அங்கு க்யூபக் மாகாணத்தில் பிரெஞ்சு பேசும் மொழியினருக்காக தனி க்யுபக் நாடு வேண்டுமா என வாக்கெடுப்பு நடைபெற்றது..அதை உதாரணமாக கொள்ளலாம்.

    தமிழக தமிழர்கள் ஈழ தமிழர்களுக்கு எப்படி உதவலாம்?

    நாமக்கல் முட்டையும், கோழியையும், தஞ்சை பொன்னி அரிசியையும் நெய்வேலி மின்சாரம் உட்பட அனைத்தையும் தின்று தமிழன் முகத்தில் காறி உமிழும் இந்த அண்டை மாநில கும்பல்களை விட.. இவ்வளவு புலம் பெயர்ந்த தமிழர்கள் ஈழத்தில் வாழும் தமிழனுக்காக பொன் பொருள் என வாரிவழங்கிட தயாராக இருந்தும் கூட.. கடைசிகாலம் வரை மறைந்த அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் உட்பட சிங்கள் தேசம் .. சர்வதேசம் .. சரியாக உணவு அனுப்பவில்லை என புலம்பி கொண்டு இருந்தது ஏன்? நம்மை நாமே கேட்டு கொள்ள வேண்டிய கேள்வி அனைத்திற்கும் காரணம் நாமே ஆகும்..தனுஸ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் வெறும் 18 கி.மி தொலைவே இருக்கும் அவர்களுக்காக நாம் அனுப்பமுடியாதா? தடுப்பது எது இந்த இந்தி தேசம் தானே? நம் முதுகில் குத்தும் மலையாளிக்கு அரிசி ,பழம் ,பால் அனுப்பும் நாம் .அதையேன் நம் ரத்த உறவுகளுக்கு செய்யமுடியவில்லை? அடசரி வியாபரமாகவே வைத்துகொண்டாலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அதற்காக செய்ய தயராகவே உள்ள நிலையில் தடுப்பது எது? முட்டையில் மயிர் புடுங்கும் இந்தி தேசம் தானே? சிங் எவனையாது இப்படி பட்டினி போட்டு கொல்வார்களா? இங்கு விடுதலை அடையவேண்டியது ஈழதமிழன் மட்டுமல்ல நாமும்தான் என புரிந்து கொள்ளுதல் வேண்டும்!

    எப்படி இந்த இந்தி நாட்டை அணுகுவது?

    சிந்தனை செய்து பாருங்கள்! இந்தியா என்னும் நாடு இந்து என்னும் ஆறிபோன ஆரிய சித்தாந்ததினை அடிப்படையாகவும், இந்தி என்னும் வடமொழியை செயல்திட்டமாக கொண்டு கண்ணுக்குப் புலனாகாத ஒரு பூணூலால் கட்டப் பட்டுள்ளது. பார்ப்பனியம் ஆதிக்கம் செலுத்தும் காங்கிரஸ், மார்க்சிய கம்யூனிஸ்டு, அ தி மு க, போன்ற மிதவாத அரசியல் அமைப்புகள்; ஆர் எஸ் எஸ் , இந்து முன்னணி, பஜ்ரங் தளம், பாரதிய சனதா, மா லெ குழுக்கள், மக இ க போன்ற தீவிர அரசியல் பேசும் இயக்கங்கள், இந்திய இராணுவத் தலைமை, மையப் புலனாய்வுத் துறை, இந்திய தலைமை செயலகம், நீதித் துறை, வானொலி, தொலைக்காட்சி, பத்திரிக்கை ஆகிய அனைத்தும் இந்தப் பூணூல் கட்டமைப்பின் ஒவ்வொரு இழைகளாகும்.

    இந்தக் கட்டமைப்பு மிக நுணுக்கமாக, வஞ்சகமாக பின்னப் பட்டுள்ளதால் தமிழக தமிழர்கள் மிக மிக கவனமாக அணுகப்பட வேண்டும். இல்லையென்றால் நாம் ஒருவருக்கு ஒருவர் அவர்களுடைய வருணா சிரம் தர்மபடி அடித்துகொள்ள நேரிடும் .ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். காசுமீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து ஒடுக்கப்படும் தேசிய இனங்களும் ஒன்று பட்டு விடுதலைகான போராட்டத்தை மேற்கொள்ள முடியும் என்பது, இந்தியா என்கிற பார்ப்பனிய உருவாக்கம் உள்ள வரை சாத்தியமாகக் கூடிய வாய்ப்புகள் மிக மிக குறைவே. ஏன் சாத்தியம் இல்லை என்று கூடக் கூறலாம். இங்குள்ள தேசிய இனங்கள் அடிப்படையிலேயே ஒன்றை ஒன்று முரண்பட்டு நிற்கின்றன. கன்னடன் தமிழனின் தனித்துவ முயற்சி கண்டு மனம் பொறாதவனாய் அவன் தன்னை விட தாழ்ந்தவன் எனக் காட்ட முற்படுகிறான். மலையாளி, இந்தியா என்ற கட்டமைப்புக்குள் அங்கங்கின்னாதபடி நிறைந்து ஒட்டுண்ணியாக வாழ்ந்துகொண்டு, தமிழனின் தனித்துவ வேட்கை தன் அடிப்படை வாழ்வாதாரத்தை பிளந்து விடும் என எண்ணி தமிழனின் மென்னியை திருகுகிறான். பிகாரியையும் ஒரியாக்காரனையும் மதராசியையும் வட நாட்டவன் வெறுக்கிறான், அவமதிக்கிறான். உறங்கும் எரிமலையான பஞ்சாப், எரியும் காசுமீர், அசாம், வட கிழக்கு மானிலங்கள் என எத்தனை முரண்பாடுகள். இத்தனை முரண்பாடுகளிலும் பார்ப்பனியவாதிகளும், பெரு முதலாளிகளும், அரசியல் அற்பர்களும் மட்டுமே ஒருமைப்பாடு, இந்தியா, இந்தியன் என்று அலறிக் கொண்டிருப்பதை கவனியுங்கள். பார்ப்பனியத்தை ஒழிக்க முற்படுங்கள். நீங்கள் புரட்சியெல்லாம் செய்ய வேண்டிய அவசியம் கூட இல்லாமல் இந்தக் இந்தி கட்டமைப்பு தானே உதிர்ந்துவிடும்!!.

    Reply
  • M S Pillai
    M S Pillai

    தயவு செய்து இறுதிவரை வாசியுங்கள் ஈமத்தமிழர்களே திரும்ப திரும்ப சொன்னாலாவது உங்களுக்கு உங்களுக்கு புரியாதா என்ற ஆதங்கத்தில் இப்படி எழுதுகிறேன்………..
    தமிழ் நாட்டில் வசிப்பவர்கள் தமிழர்கள் அல்ல அவர்கள் இந்தியர்கள்.
    தமிழ் நாட்டில் வசிப்பவர்கள் தமிழர்கள் அல்ல அவர்கள் இந்தியர்கள்……………………………..

    அவர்கள் எமக்கு ஈழத்தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களும் சரி எதிராக குரல் கொடுத்தவர்களும் சரி.
    புலிக்கு எதிரானவர்கள் புலியை ஆதரித்த மக்கள்தானே சாகட்டும் என்று விட்டுவிட்டார்கள். அரசாங்கத்தை ஆதரித்தவர்கள் அரசாங்கம் பயங்சரவாதத்தை தானே ஒழிக்கிறது என்று பாராமுகமாக இருந்து விட்டார்கள்.
    ஆனால் அயல் வீட்டில் அவலம் நடக்கும்போது அதை புதினம் காட்டி தன் பிள்ளைக்கு சோறூட்டிய நிகழ்வாகவே தமிழ் நாட்டு இந்தியர்களின் கருணை இலங்கையில் தமிழர்களின் அவலத்தின் போதும் அழிவின் போதும் நிகழ்ந்ததை அவதானிக்கையில் தமிழ் நாட்டு இந்தியர்கள் சரித்திர காலத்தில் இருந்து எம் அழிவிற்கே ஆதரவு வழங்கியிருக்கிறார்கள்.
    இந்தியாவில் தமிழ்நாட்டில் தமிழ் பேசும் இந்திய….
    மக்கள்
    அறிஞர்கள்
    அரசியல வாதிகள்
    மற்றும் அனைத்து தரப்பினரும் தமிழராக நடக்க வேண்டாம் மனிதராக கூட நடக்கவில்லையே
    மனித தன்மையுடன் கூட எம்மை பார்க்காத தமிழ நாட்டு தமிழ் பேசும் இந்தியர்களை இலங்கைத் தமிழர்கள் மனிதர்கள் என்ற பட்டியலில் கூட எமது வரலாற்லில் பதிவு செய்யக் கூடாது.
    அன்புடன்
    எம் எஸ் பிள்ளை

    Reply
  • msri
    msri

    ஆதவன் தீட்சணயாவிறற்கு>ஒடுக்குவோர் மீதா
    ஒடுக்கப்படுவோர் மீதா கோபம!
    பொதுவாக தலித் கம்பனிகளில் உள்ளவர்களுக்கு> உயர் இந்து வேளாள சாதிவெறியர்கள்> அதிகாரவர்க்க பார்ப்பனர்கள் போன்றவர்களுக்கும்> அச்சமூகத்தை சேர்ந்த சாதாரண மக்களுக்கும் வித்தியாசம் தெரியவில்லை! இப்பாங்கிலேயே தீடசண்யா முதல் சோபாசக்தி+சுதன் வரைவலம் வருகின்றனர்! புலிகளின் பாசிசத்தவறுகளுக்காக> முழுத்தமிழ்மக்களையும் புலிகளாக பார்க்கின்றார் தீடசண்யா! இப்பார்வையையே மலையக மக்களின்பாலும் முன்வைக்கினறார்! இலங்கையில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சண் தலைமையிலான அமைப்பு எதைச்செய்தது என்பதை நண்பர்கள் சிலர் பின்னோட்டத்தில் பதிவு செய்துள்ளனர்! அததுடன் சமூக>முற்போக்கு நல்லெண்ணணம் கொண்ட புத்திஜீவிகளும் தங்களால் ஆன பணிகளைச் செய்துள்ளார்கள! இவ்விடயத்தில் தீட்சண்யா கிணற்றுத் தவளையாகவே உள்ளார்! இதைத் தெரிந்த சோபாசக்கி+ சுதன்+ “தூ”தேவதாசன் போன்றோர் கூட தங்கள தலித்கம்பனி கூட்டாளிக்கு சொல்லமாட்டார்கள்! காரணம் இவர்களில் பலர் வேளாளர்கள் ஆச்சே! அத்தோடு தத்துவப் பிசகுகளும் வந்துவிடும் அல்லவோ!

    Reply
  • malathi
    malathi

    தனிப்பட்ட தாக்குதல்களால் தன்னையே தரந்தாழ்த்துகிறார் ஆதவன்.

    சர்ச்சைகள் தொடர்வது அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நிச்சயமாக வலியையும் மனவுளைச்சலையும் நேர விரயத்தையும் தரக்கூடியது. பழிக்குப் பழி பதிலுக்குப் பதில் என்பது அபத்தமாயிருக்கிறபோதிலும், கீற்று இணையத்தளத்தில் ஆதவன் தீட்சண்யாவால் எழுதப்பட்டிருக்கும் கடிதத்தில் என்மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் என்னைப் பேசத்தூண்டுகின்றன. ஒருவருடைய அரசியல் நிலைப்பாடு என்பது அவரது வாழ்வனுபவங்கள், வாசித்து அறிந்துகொண்டவை, தாம் சார்ந்திருக்கும் கட்சி, சூழல் சார்ந்து கட்டமைக்கப்படுகிறது. பட்டறிவில்லாத விவாதங்கள் அதில் பெரிய மாறுதல்களைக் கொண்டுவந்துவிடும் என்று நான் நம்பவில்லை. என்னுடைய தொனியும் விவாதமும் எப்படி இருந்தபோதிலும், ‘புலிகளை விமர்சனங்களற்று ஏற்றுக்கொள்பவர் அன்றேல் புலிகள் மீது ஒற்றை வாக்கியத்தில் விமர்சனங்களை முன்வைத்து அதைக் கடந்து செல்பவர்’என்ற மையப் புள்ளியிலேயே நின்றுசுழல்கிறது என்னைப் பற்றிய பிம்பம். மாற்றுக் கருத்து, மாற்றுக் கதையாடல் என்று பேசிக்கொண்டிருக்கிற சில இணையத்தளங்களும் இவ்வாறு அழுத்தந்திருத்தமாக ‘அவர் அதற்கு மேலில்லை’என்று முத்திரை குத்தி விடுவது வருத்தமாகவே இருக்கிறது.

    எனவே அரசியல் நிலைப்பாடு குறித்த விவாதங்களுக்குள் செல்ல நான் விரும்பவில்லை. ஆதவன் தீட்சண்யாவின் கடிதத்தைப் படித்தபோது, பால்யத்திலிருந்து ஒரு சொல் மிதந்து மேல்வந்தது. ‘ஆத்தாப் போக்கிலி’என்பதுதான் அந்தச் சொல். பேசவந்த, பேசவேண்டிய விடயத்தைவிட்டு வெளியில் சென்று சம்பந்தமில்லாத விடயங்களைப் பேசுவதன் வழியாகத் தனது வாதத்துக்கு வலுச்சேர்க்க முயன்றிருக்கிறார் ஆதவன். தனது பக்கத் தராசைத் தாழ்த்தவேண்டுமே (உண்மையான அர்த்தத்தில் உயர்த்துவது) என்ற பதட்டத்தில் என்மீது சேற்றை வாரியிறைக்க விழைந்திருக்கிறார். ‘இது அறியப்பட்ட ஒரு படைப்பாளிக்கு அழகல்ல’ என்ற வார்த்தைகளை அதை வாசித்த பலரிடமிருந்து நான் கேட்டுவிட்டேன். ‘தமிழ்நதியைத் தாழ்த்துகிறேன் பேர்வழி’ என்று தரந்தாழ்ந்து நிற்பது அவர்தான். அவரது பதில் நெடுகிலும் இழையோடியிருக்கும் நக்கலும் நையாண்டியும் மூன்றாந்தர, வக்கிரமான நகைச்சுவைக் காட்சிகளுக்குச் சற்றும் குறைந்தனவல்ல.

    “ஓரளவுக்கு பதட்டம் தணிந்தால்கூடப் போதும். நான் ஊருக்குப் போய்விடுவேன்”என்று கீற்று.காம் நேர்காணலில் நான் சொல்லியிருந்தது உண்மை. பதினொரு ஆண்டுகள் கனடாவில் வாழ்ந்தபின் 2003ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பிச்சென்று 2006வரை அங்கேதான் வாழ்ந்திருந்தேன் என்பதை இதைப் படிப்பவர்களது தகவலுக்காகச் சொல்லிவைக்கிறேன். மீண்டும் தொடங்கிய போரினால் தமிழகத்திற்குத் தூக்கியெறிப்பட்டவள் நான்.

    ஆதவன் எழுதுகிறார்:

    “எனக்குத் தெரியும் இலங்கை முழுவதும் ஏ.சி.செய்யப்பட்டாலும்கூட நீங்கள் நாடு திரும்பமாட்டீர்கள் என்று. இலங்கை இராணுவத்தாலும் உங்கள் பிரியத்திற்குரிய போராளிகளாலும் சுடுகாட்டுச் சாம்பல் கொண்டு நிரவப்பட்டுவிட்ட அந்த மண்ணுக்குத் திரும்புகிற அளவுக்கானதல்ல உங்கள் தாய்நாட்டுப்பக்தி. ஏனென்றால், நீங்கள் நேசித்தது நாட்டையோ மக்களையோ அல்ல. புலிகளை…”

    புலிகள் இல்லாத மண்ணுக்குப் போவதென்பது என்னளவில் அச்சமும் துயரும் பாதுகாப்பின்மையும் தரக்கூடியதே. நாடு திரும்பமுடியாத ஒருவரை நக்கலடிக்குமளவிற்கு, எள்ளிநகையாடுமளவிற்கு இருக்கிறது ஒரு மார்க்ஸிஸ்டின் மனிதாபிமானம். ‘முடிஞ்சா உங்க ஊருக்குப் போய்ப் பாரேன்…வெவ்வெவ்வே’என்கிற சிறுபிள்ளைத்தனத்தை அதில் பார்த்தேன். மேலும், ‘இலங்கை முழுவதும் ஏ.சி.செய்யப்பட்டாலும் நீங்கள் நாடு திரும்ப மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும்’என்பதன் பின்னுள்ள எள்ளலையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. சில சுயவிளக்கங்களை ஆதவனுக்காக அல்லாது இதனை வாசிக்கும் எனது நண்பர்களுக்காகக் கூறத் தள்ளப்பட்டுள்ளேன். ‘ஐயோ! நான் கஷ்டப்படுகிறேனே…’என்ற அனுதாபம் வேண்டி இதை எழுதவில்லை. சுயபச்சாத்தாபம் என்னிடம் துளியளவும் இல்லை. 2003ஆம் ஆண்டு கனடாவிலிருந்து திரும்பி இலங்கை வந்தபோது கைவசமிருந்த நிலத்தில் கொட்டில் (குடிசை) கட்டி சில காலம் வாழ்ந்திருந்த பின்னால்தான் வீடு கட்டிக் குடிபோனோம். மனிதர்களைப் போல சர்வசாதாரணமாக பாம்புகள் திரிந்த இடம் அது. வெக்கை பிடுங்கித் தின்ற நிலம் அது. அங்கே ஏ.சி.இருக்கவில்லை தூசிதான் இருந்தது. அவ்விதமிருக்க எந்த அடிப்படையிலிருந்து இந்த ஏ.சி.க் கதையை இவர் எழுதுகிறார் என்று தெரியவில்லை. தவிர, ஒருவர் ஏ.சி.யில் வாழ்வதா? வெக்கையைக் குடிப்பதா என்பதெல்லாம் அவரவர் வசதியும் தெரிவும். கடவு கூட்டத்தில் ஆதவன் தீட்சண்யா பேசியதற்கு நான் எழுதிய எதிர்வினைக்கும் மேற்கண்ட தனிப்பட்ட கதைகளுக்கும் எந்தவிதத்தில் தொடர்பிருக்கிறது என்று அவர்தான் சொல்லவேண்டும்.

    ‘தாக்கப்படும்போது மனிதர்கள் சரிந்துவிடுகிறார்கள்’என்பதை இப்போது வேறொரு அர்த்தத்தில் பார்க்கவேண்டியிருக்கிறது.

    “ஆதவன் என்னைத் தாக்க வந்தார்’ என்று பதிவில் தலைவிரிகோலமாக எழுதாமல் விட்ட உங்கள் பெருந்தன்மைக்கு எப்படியாவது நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்”

    “ஆதவன் என்னை நாட்டைவிட்டுப் போகச்சொல்கிறான் என்று திரித்து அடுத்த பதிவில் எழுதி மூக்குச் சிந்தப் பதைக்காதீர்கள் தமிழ்நதி.”

    என்ற வாசகங்களையும் அவரது கீற்று கடிதத்தில் பார்த்தேன். அந்த வாசகங்கள் வழியாக அவர் தனது ஆழ்மனதிலிருக்கும் கசடுகளை வெளியில் கொட்டிவிட்டார். ஏதோ சில படைப்புகளை அண்மைக்காலங்களில் எழுதியவள் என்பதிலும் பார்க்க நான் ஒரு பெண் என்பதுதான் அவருடைய ஆழ்மனதில் பதிந்திருக்கிறது. ஆக, பெண் என்பதை என்மீதான அனுதாப வாக்குச் சீட்டாக, பச்சாத்தாபத்தைத் தூண்டும் ஆயுதமாக நான் பயன்படுத்தக்கூடியவள் என்று அவர் நினைத்திருக்கிறார். ‘மூக்குச் சிந்துவது’, ‘தலைவிரிகோலமாக எழுதுவது’இந்த மலினமான உத்திகளெல்லாம் கைவரப்பெறாதவள் நான். அப்படி எழுதி கூட்டம் சேர்க்கவேண்டிய தேவை எனக்கு இருக்கிறதா என்ன? ‘எழுதுகிறேன் என்பதனால் எழுதுகிறேன்’ என்பதை விட்டுக் கீழிறங்கி கைதட்டல் தேடவேண்டிய தேவையொன்றும் எனக்கில்லை. ஒரு பொதுவெளிக்கு வரும்போது பெண் என்ற விடயத்தை மறந்து தன்னியல்பாக நடந்துகொள்ளவேண்டுமென்ற அறிவும் பிரக்ஞையும் எனக்கு எப்போதுமுண்டு. உண்மையில் காதல் வயப்பட்ட ஆணோடு மட்டுமே பெண்தன்மைகள் எனக் கருதப்படுபவைகள் அன்றேல் வளர்ப்பின் வழியாக கட்டமைக்கப்பட்டிருப்பவைகளை வெளிப்படுத்தக்கூடிய ஆள் நான். மற்றபடி பொதுவெளியில் பழகும்போதோ எழுதும்போதோ ஆண்கள் எனக்கு ஆண் என்ற வேறொரு பாலினமாகத் தோன்றுவதேயில்லை. நெளிவது, குழைவது, உதட்டைச் சுளித்துச் சிரிப்பது, எனக்காக நீ இதைச் செய்யக்கூடாதா என்று கிறங்குவது, சாகசங்கள் செய்வது இன்னபிற விடயங்களையெல்லாம் நான் கடந்துவந்து நாளாகிறது. பழகும்போது கொஞ்சம் தன்மையாகப் பழகுகிறேன் என்பதைவைத்து, ஆதவன் என்னைப் ‘பெண்ணிலும் பெண்ணாக’ச் சித்தரிக்க முயன்றிருக்கிறார். ஆணுக்குள்ள கம்பீரம் பெண்ணுக்கும் உண்டு. ‘அவன் மூக்கைச் சிந்துகிறான் என்றோ, தலைவிரிகோலமாக எழுதுகிறான்’என்றோ அவரால் எழுதிவிட முடியுமா? மேற்கண்ட வார்த்தைகள் ஊடாக அவர் ஒரு ‘ஆணாக’ப் வெளிப்பட்டிருக்கிறார், அவரையறியாமலே. அவரது வார்த்தைகள் அவரைக் கைவிட்டுவிட்டன என்றுதான் சொல்லவேண்டும்.

    மீண்டும் மீண்டும் சொல்கிறேன்: பேசிய விடயத்திற்குள் நின்று பேசுவதுதான் அறிவாளிக்கு அன்றேல் அறிவாளி என்று தம்மைக் கற்பிதம் செய்துகொண்டிருக்கிறவர்களுக்கு அழகு. ‘ஏண்டா என்னைத் தள்ளிவிட்டாய்?’என்றால், ‘எங்கம்மா கடைக்குப் போய்விட்டாள்’என்ற வகையிலான அபத்தங்களைக் கொண்டிருக்கிறது கீற்றுவில் வெளியாகியுள்ள அவரது கடிதம்.

    தேவேந்திர பூபதியை வேறு தேவையில்லாமல் இதற்குள் இழுத்திருக்கிறார். எனக்கும் அவருக்கும் இடையிலான பிரச்சனையை (அப்படி ஒன்று இருந்தால்) நாங்கள் பேசித் தீர்த்துக்கொள்வோம். ஆதவனைக் காட்டிலும் புரிதலுள்ளவர்தான் பூபதி. ‘ஐயகோ! என்னைக் காப்பாற்றுங்கள்’என்று அபலையாக ஆதவனிடம் வந்து தஞ்சமடைந்ததாக எனக்கு நினைவில்லை. இப்படிச் சிண்டு முடிந்துவிடுவதுதான் நான் கேட்ட கேள்விகளுக்கு ஆதவன் ஆற்றுகிற எதிர்வினையா?

    இனியொருபோதிலும் இவ்விடயத்தைக் குறித்துப் பேசுவதில்லை என்று ஒவ்வொரு தடவையும் நினைக்கிறேன். ஆனால், மௌனமாயிருப்பது அதிகாரத்துக்குத் துணைபோவதற்கொப்பானது என்ற பழகிப் புளித்த வாசகம் என்னை இருக்கவிடுவதாயில்லை.

    ‘கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ளத் தெரியாமல் மாற்றுக்கருத்தாளர்கள் எல்லோரையும் சுட்டுக்கொன்றார்கள்’என்று புலிகள் மீது குற்றச்சாட்டை முன்வைக்கும் ஆதவன் வகையறாக்கள், தம் உதடுகளிலிருந்து உதிரும் வார்த்தைகளுக்கு விசுவாசமாக இருக்கிறார்களா? தன் வாதங்களுக்கு வலுச்சேர்க்க தனிப்பட்ட தாக்குதல்களில் இறங்கியிருக்கும் அவர் இதைக்குறித்துச் சிந்திக்கவேண்டும்.

    உயிர்க்கொலைக்கு சற்றும் குறைந்ததன்று மனக்கொலை!

    -தமிழ்நதி
    tamilnathy.blogspot.com/2009/07/blog-post_04.html

    Reply
  • arul
    arul

    அன்புள்ள ஆதவன் தீட்சண்யாவுக்கு,

    நான் உங்களைப் போல போலி மார்க்ஸிய அடிமையல்ல. மாறாக மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்டுகளின் ஜனநாயகப் படுகொலைகளுக்கு எதிராக பழங்குடி மக்களைத் திரட்டி போராடிக் கொண்டிருக்கும் மாவோயிஸ்டுகள் மீது அனுதாபம் கொண்டவனும், நந்திகிராமில் மார்க்ஸ்சிஸ்டுகளால் கொல்லப்பட்ட விவசாயத் தோழர்களின் மீதான படுகொலைகளுக்காகவும், மேற்குவங்க மார்க்சிஸ்டுகளால் காட்டிக் கொடுக்கப்பட்டு இன்று வேட்டையாடப்படும் ஒரு இனமாக மாறியிருக்கிற பழங்குடி இனத்தின் இன்னொரு பிரிவில் பிறந்தவன் என்கிற முறையிலுமே இதை உங்களுக்கு எழுத நேர்ந்தது.

    நீங்கள் தமிழ் நதிக்கு எழுதிய கடிதத்தை வாசிக்க நேர்ந்தது. அவரைப் போட்டு காய்த்து எடுத்து விட்டீர்கள். இதற்கெல்லாம் அவரிடம் என்ன பதில் இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் ஒரு தலித் கிறிஸ்தவன் என்னும் நிலையில் என்னிடம் சில பதில்கள் இருக்கின்றன. அதைப் பதில்களாக நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் சரி இல்லை வழக்கம் போல இதெல்லாம் புலிக் கோஷம் என்று நிராகரித்தாலும் சரி எமக்கு அது குறித்து கவலை இல்லை.

    மதுரையில் ஒரு இலக்கியக் கூட்டத்தில் காரசாரமான உரையாடலின் போது தமிழ்நதி ஈழத்தமிழர்களுக்காக நீங்கள் என்ன எழுதியுள்ளீர்கள் என்று உங்களைக் கேட்டதாகவும், நீங்கள் அதற்கு ‘‘நீங்கள் மலையக மக்களையும், தலித்துக்களையும் முஸ்லீம்களையும் எப்படி நடத்தீனீர்கள்? ஏனைய அமைப்புகளைக் கொன்றீர்கள்? உங்களுக்காக ஏன் நாங்கள் பேச வேண்டும். அதை எப்படி நீங்கள் எதிர்பார்க்க முடியும்?’’ என்று பேசியதாக நண்பர்கள் சொன்னார்கள். சத்தியமாக தமிழ்நதி சொல்லவில்லை.

    நீங்கள் பேசியது குறித்து தேவேந்திரபூபதியிடம் கேட்டபோது, அவர் தமிழ்நதிக்கும் ஆதவனுக்குமிடையிலான விவாதத்தில் வந்தது என்று சொல்லிவிட்டு பிஸியாக இருப்பதாகவும், அப்புறம் பேசுவதாகவும் சொன்னார். நான் அவரை விட பிஸியாக இருந்தேன் என்பதைத் தாண்டி இதை அவர் பேச விரும்புகிறாரோ இல்லையோ என்பதால் அதை விட்டு விட்டு இதை எழுதத் துவங்கிவிட்டேன்.

    நீங்கள் பேசியது உண்மை என்றால் ஒரு தலித் கிறிஸ்தவன் என்ற முறையில் சொல்கிறேன். உங்கள் பேச்சு மிக ஆபாசமானது. ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு மூன்று லட்சம் மக்கள் முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு, தினந்தோறும் கொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகளுக்குள்ளாக்கப்படும் ஓர் இனம் குறித்த உங்களின் இந்தப் பேச்சு தலித் அரசியலின் பெயரால் நீங்கள் செய்த ஆபாசமான வன்முறை. புலிகளின் தவறுகளை மட்டுமே வைத்தும் ஈழத்தின் ஆதிக்க சாதி அமைப்பை வைத்தும் நிகழ்காலத்தில் நடந்துள்ள மாபெரும் இனவெறிக் கொலைகளை, கொடுமைகளை மறைப்பீர்கள் என்றால், நீங்கள் ஈழம் என்கிற கருத்துருவையே மறுக்கிற நிராகரிக்கிற பார்ப்பன தலைமையிலான உங்கள் மார்க்ஸ்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டில் நின்று கொண்டு தலித் அரசியலை துணையாக்கி உங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலேயே இவ்வாறு செய்திருக்கிறீர்கள் என்று கூறுகிறேன்.

    தேசிய இனப்பிரச்சனையின் தீர்வு தொடர்பாக வலதுகளுக்கும் இடதுகளுக்கும் ஏராளமான முரண்கள் உண்டு. புதிய தேசம் ஒன்று அதுவும் வலதுசாரிக் கொள்கை கொண்ட தேசம் ஒன்று உருவாவதை மார்க்ஸிஸ்டுகள் நீங்கள் விரும்பமாட்டீர்கள். இன்னும் சொல்லப்போனால் பிரிந்து போகும் உரிமை கொண்ட சுயநிர்ணய உரிமை என்ற மார்க்ஸிய கோட்ப்பாட்டைக் கூட உங்கள் மார்க்ஸ்சிஸ்ட் கட்சி ஏற்றுக் கொள்ளாது என்கிற நிலையில், நாம் தேர்தல் பரபரப்பில் இருந்தபோது, அங்கே வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது சிங்களப் படைகள். ‘சண்டையை நிறுத்து; பேச்சுவார்த்தை நடத்து’ என்று இன்று லால்கரில் ஒலிக்கிற உங்கள் குரல் ஈழத்திற்காக ஒலிக்கவில்லை.

    தமிழ் மக்களை புலிகள் பணையக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று நீங்கள் சொன்னீர்கள். லால்கரில் ஐம்பது கிராமங்களை இராணுவம் மாவோயிஸ்டுகளிடம் இருந்து கைப்பற்றி விட்டது. அந்த கிராமங்களின் பெரும்பங்கு மக்கள் மாவோயிஸ்டுகளோடு ஜார்க்கண்ட் காடுகளை நோக்கி நகர்ந்து விட்டார்கள். அந்த ஆதிவாசிகள் எப்படி மாவோயிஸ்டுகள் இல்லையோ – ஆனால் மார்க்ஸ்சிஸ்டுகள் செய்த துரோகம் எப்படி அவர்களை மாவோயிஸ்டுகளை நோக்கி நகர்த்தியதோ – இராணுவம் துரத்தும் போது சிக்கினால் சீரழிந்து விடுவோம் என்று எப்படி மாவோயிஸ்டுகளோடு சென்றார்களோ, அப்படியே வன்னி மக்களும் புலிகளுடன் போனார்கள். அதுதான் உண்மை. வன்னி மக்கள் எல்லாம் புலிகள் என்றோ ஈழ மக்கள் எல்லோருமே புலிகள் அமைப்பில் குப்பி சுமந்தவர்கள் என்றோ யாருமே சொல்லவில்லை. அவர்கள் சிங்களனை விட புலிகள்தான் தமக்கு பாதுகாப்பானவர்கள் என்று நம்பினார்கள். அதுதான் உண்மையும் கூட.

    இந்தியா, கம்யூனிச சீனா, பாகிஸ்தான், ஈரான், பிரிட்டன், அமெரிக்கா போன்ற பிராந்திய, ஏகாதிபத்திய வல்லரசுகளின் கூட்டு இராணுவ பலத்துடன் மோதிய புலிகளால் அவர்களையே பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை என்பதோடு மக்களையும் பாதுகாக்க முடியவில்லை என்பதுதான் அப்போரின் கசப்பான முடிவு. உண்மையில் இலங்கை அதன் உண்மையான இராணுவ பலத்தோடு புலிகளை எதிர்கொண்டிருந்தால் கிழக்கையும் மீட்டிருக்க முடியாது வடக்கையும் மீட்டிருக்க முடியாது என்பதோடு இந்தப் போரின் முடிவில் பெரும் அழிவை இலங்கை இராணுவம் சந்தித்திருக்கும் என்பதுதான் இராணுவ யதார்த்தம். ஆனால் அரசியல்? அது துளி கூட புலிகளிடம் இல்லையே? அழிவுக்குப் பிறகு இன்றைக்கு புலி ஆதரவாளர்கள் சொல்கிற அரசியல் போராட்டம் என்கிற கருத்தை மூன்று வருடங்களுக்கு முன்பே, செப்டம்பர் தாக்குதலைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளிலேயே நான் எழுதியிருக்கிறேன். ஆனால் இராணுவ வாதத்தால் எல்லாவற்றையும் வெல்லலாம் என்ற புலிகளின் மிதமிஞ்சிய நம்பிக்கையும் இந்த கசப்பான முடிவுக்கு ஒரு காரணம். இதை நாம் நெடுமாறன் அவர்களிடமிருந்தோ அல்லது சீமான் பேசியோ, அல்லது வரதராஜனிடமிருந்தோ கற்றுக் கொள்ள வேண்டியதில்லை. இதுதான் யதார்த்தம்.

    இன்றைக்கு மாவோயிஸ்டுகளை அரசியல் ரீதியாக வெல்ல வேண்டுமே தவிர அதை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக பார்க்க முடியாது என்று மேற்குவங்கத்தில் சொல்ல வேண்டிய கசப்பான யதார்த்தத்துக்கு வந்திருக்கிற நீங்கள் ஈழம் என்று வந்தால், புலிகள் என்று வந்தால் புலி எதிர்ப்பின் பெயரால் சிங்கள வெறியர்களுக்கு காவடி தூக்குகிறீர்கள். சமீபத்தில் லீனாமணிமேகலை ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் பிரான்சில் இருந்து வந்திருந்த சுகன் சிங்களர்களின் தேசிய கீதத்தை பாடித்தான் தன் உரையை தொடங்கினார். (வாங்குன காசுக்கு ரொம்பத்தாண்டா கூவுறான் கொய்யால). ஆனால் அப்படி பாடுவதற்கு முன்னால் புலிகளையும் அவர்களுக்காக பாடல்கள் எழுதிய காசி ஆனந்தன் அவர்களையும் தன் அறிவால் உடைத்துத் தகர்த்து விட்டே இந்த மொள்ளமாரித்தனத்தை செய்தார் சுகன். மகாசேனனும், துட்டகைமுனுவும் பண்டாரவன்னியனையும், எல்லாளனையும் வென்றதைவிட கடினமான வெற்றி என்று தமிழ்மக்களை வென்றதை ஒரு வார விழாவாக கொண்டாடச் சொன்னான் பயங்கரவாத ராஜபட்சே. அதை சிங்கள தேசிய கீதத்தை சென்னையில் பாடி கொண்டாடிவிட்டுப் போனார் சுகன்.

    தேசத்துரோகிகளும், மறுத்தோடிகளும் எப்படி ஒரு தேசத்தின் அதுவும் பாசிச பயங்கரவாத தேசத்தின் கீதத்தை பாட முடியும் என்று தெரியவில்லை. ஆனால் தமிழ்ப்பற்று என்று தாங்கள் நம்புகிற ஒன்றிற்காக, தமிழர், தமிழினம் என்று உணர்வுப்பூர்வமாக பிணைக்கப்பட்டிருக்கிற ஒன்றிற்காக ஆவேசமாகப் பேசும் தமிழகத்து ஈழ ஆதரவாளர்களை வைத்தே நீங்கள் ஈழ விடுதலையை அணுகுறீர்கள். புலிகளின் தோல்வியில் ஒட்டு மொத்தமாக சிதைக்கப்பட்டுக் கிடக்கும் மக்களின் பிணங்களின் மீது நின்று சிங்கள தேசியகீதத்தைப் பாடும் சுகன் போன்றோருக்கும், உங்களுக்காக நாங்கள் ஏன் போராட வேண்டும் எனக் கேட்கும் உங்களைப் போன்ற தலித்தியப் பார்வை கொண்ட மார்க்ஸ்சிஸ்டுகளுக்கும் என்ன வித்தியாசம்?

    புலி எதிர்ப்பு குறித்தும் இலங்கை இறையாண்மை குறித்தும் இன்றைய சூழலில் பேசுவதில் தான் ஆதாயம் அதிகம். புலி எதிர்ப்பு என்கிற கருத்துக்காக இலங்கை அரசு கோடிக்கணக்கான ரூபாய்களை புலத்தில் கொட்டுகிறது. சிங்கள தேசிய கீதத்தை பௌத்த மரபுக்குள் நின்று பாடுகிற சுகன்கள்தான் இன்றைய இலங்கைச் சூழலில் ஆயிரம் கருணாக்களுக்கு சமம். ஷோபாசக்தியோ, ஆதவனோ இலங்கை அரசிடம் பணம் பெற்றுக் கொண்டு இப்படிப் பேசுகிறார்கள் என்று நான் நம்பவில்லை. பொதுவாக இப்படி பேசுகிறவர்களுக்கு தமிழகத்திலும் புலத்திலும் இலங்கை அரசு செலவு செய்கிறது என்பது உண்மைதான். ஆனால் புலி ஆதரவாளர்களுக்கு புலிகள் காசு கொடுப்பார்கள் என்பதெல்லாம் சுத்தக் கட்டுக்கதை. அவர்கள் நம்மிடம் இருந்து பெற்றுக் கொள்வார்களே தவிர அவர்கள் யாருக்கும் கொடுத்தார்கள் என்பதை நான் நம்பவில்லை.

    ஆனால் புலத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்கள் இங்கு புலிகளை எதிர்ப்போர், ஆதரிப்போர் என இருசாராரையுமே அங்கு அழைத்து விருந்து வைப்பதும் கவனிப்பதும் இருந்தது. அந்த வகையில் சிலர் புலத்திற்கு அழைத்தவர்களுக்கு நன்றியாக செயல்படுகிறார்கள். காப்பி கோப்பை கழுவியும், கார்பெட் துடைத்தும், டாய்லெட் க்ளீன் பண்ணியும் சம்பாதித்த காசில் இங்கிருந்து போய் வந்த சில புலி ஆதரவாளார்கள் இந்தத் தேர்தலின்போது புலிகளுக்கு பச்சைத் துரோகம் செய்தார்கள் என்பதைக் குறிப்பிடுவதோடு புலி ஆதரவாளர்களை விட புலி எதிர்ப்பாளார்களுக்கு கிடைக்கிற அனுகூலம் அதிகம் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். தன்னார்வக்குழுக்கள், இலங்கை அரசு என பலதரப்பிலும் பணம் கொடுக்கிற ஒரு துறைதான் புலி எதிர்ப்பு.

    புலிகளின் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஆயுதப் போராட்டத்தையோ, சகோதரப் படுகொலைகளையோ, சிறுபான்மை முஸ்லீம்களை துரத்தி விட்டதையோ தொடர்பாகவோ எங்களுக்கு மாற்றுக்கருத்தோ கண்டனமோ இல்லை என நினைக்கிறீர்களா? (புலிகளுக்கு மட்டுமல்ல அங்கு ஆயுதம் தூக்கிய எல்லா போராளிக் குழுக்களுக்குமே தெளிவான விடுதலைப் பார்வை இருந்ததில்லை.) இந்தியாவை நம்பியே ஈழப் போரை துவங்கினார்கள். சகோதரப்படுகொலையில் புலிகள் நடந்து கொண்ட விதத்தைத் தவிர, ஏனைய அமைப்புகளை விட புலிகள் சிறந்தவர்கள்தான். என்னைக் கேட்டால் நான் பார்த்த தலைவர்களுள் என்னைக் கவர்ந்தவரும், என்னில் நிறைந்திருப்பவரும் பிரபாகரன்தான். நீங்கள் ஆசியாவின் சேகுவேரா என்று பிரபாவை நக்கல் செய்தாலும் உண்மை அதுதான். தன்னையும் தன் பிள்ளைகளையும் களத்தில் பலியாக்கி வீரமரணமடைந்த பிரபாகரன், (பிரபாகரன் சரணடைந்து கெஞ்சினார்; உயிர்ப்பிச்சை கேட்டார் என்றெல்லாம் புலி எதிர்ப்பு சகோதரக் குழுக்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது தனி) – இலங்கைக்கு எதிராக ஐநாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை முறியடிப்பதில் பெரும் பங்கு வகித்த க்யூபாவின் முன்னாள் போராளியான சேவோடு பிரபாகரனை ஒப்பிடுவதல்ல விஷயம் – உண்மையில் பிரபாகரன் என்கிற பிம்பம் ‘சே’வை தமிழக இளைஞர்களிடம் காலியாக்கி இருக்கிறது என்பதுதான் உண்மை. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதுதான் யதார்த்தம்.

    புலிகள் மீதான விமர்சனங்களை ராஜபட்சேவின் தோள்களில் நின்று கொண்டு பேசுவதையோ, பாரதமாதாவின் முந்தானைக்குள் ஒழிந்து கொண்டு பேசுவதையோ நாங்கள் விரும்பவில்லை. காரணம் எமது மக்களை கொன்றொழித்தவர்களை நாம் எப்படி நண்பர்களாகக் கொள்ள முடியும்? இந்தப் போருக்குப் பிறகு ஒரு பேரினவாத, பயங்கரவாத அரசாகவே நான் ராஜபட்சேயையும் இலங்கை அரசையும் பார்க்கிறேன். இனி எப்போதும் தமிழ் மக்கள் சிங்களர்களுடன் சேர்ந்து வாழும் சாத்தியங்கள் இல்லை. ஆனால் இங்குள்ள சி.பி.எம் வரதாராஜனும், பிரகாஷ்காரத்துக்களும் இலங்கையின் இறையாண்மை குறித்தே கவலைப்படுகிறார்கள். விளைவு மேற்குவங்கத்திலும், கேரளத்திலும் உங்களின் கட்சி இறையாண்மை களவு போனது. மேற்கு வங்கத்தில் வரக்கூடிய காலங்களில் உங்கள் கட்சி அப்புறப்படுத்தப்படும்.

    பட்டாச்சார்யாக்களும், நாயனார்களும், யெச்சூரிகளும், நம்பூதிரிகளும், பிரகாஷ்காரத்துக்களும், பாப்பா உமாநாத்துக்களும், வாசுகிகளுமான பார்ப்பன தலைமையே மார்க்ஸ்சிஸ்ட் கட்சியின் தலைமை. கேரளத்தில் அச்சுதானந்தன் தலித் என்று நீங்கள் சொல்லலாம். பாவம் என்ன செய்வது? மக்கள் செல்வாக்குப் பெற்றிருக்கும் அச்சுதானந்தனுக்கு கட்சியில் செல்வாக்கில்லை. கட்சி ஊழல் மன்னன் பிரணாய் விஜயனையே கொண்டாடுகிறது. விளைவு அச்சுதானந்தன் தனிக்கட்சி துவங்கும் ஆலோசனை கூட நடத்தினார்.

    நீங்களும் நானும் நம்பக் கூடிய தலித் அரசியலின் உரையாடலை நீங்கள் ஈழத்துக்கு எதிராக, புலிகளுக்கு எதிராக, எளிய தமிழ் மக்களின் இந்துக் கதையாடலுக்கு எதிராக வைத்து தமிழ் அரசியலை உடைத்தெறிகிறீர்கள். சிங்களப் பேரினவாதத்திற்கு மாறாக தமிழ்ப் பேரினவாதம் என்ற ஒன்றை முன்வைக்கிறார்கள் உங்கள் புலத்து நண்பர்கள். புலிகளின் ஜனநாயக மறுப்பை முன்னிட்டு வைக்கும் இந்த தமிழ்ப் பேரினவாதம் என்கிற அயோக்கியத்தனத்தை உங்களால் நிறுவ முடியுமா? மூன்று லட்சம் மக்கள் முகாம்களுக்குள் வன்னிப் போர் வடக்கில் மட்டும் ஐம்பதாயிரம் விதவைகளை உருவாக்கி இருக்கிறதாம். நான்காயிரம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்தவர்களாக, அன்றாடம் பாலியல் கொடுமை, கொலைகளுக்குள் வாழ்கிறார்கள். இவர்களா தமிழ்ப் பேரினவாதிகள்.

    தமிழர் உரிமைக் கோரிக்கையை உடைக்க நீங்கள் பயன்படுத்தும் தலித் அரசியலை உங்கள் கட்சிக்குள் ஒரு விவாதமாகவாவது வைக்க முடியுமா? நானும் உத்தபுரத்திற்காக எழுதினேன், சட்டக்கல்லூரி நிகழ்விற்காக எழுதினேன். ஆனால் உங்கள் மார்க்ஸ்சிஸ்டுகள் உத்தபுரத்திற்காக எழுதிய அளவுக்கு பிறபடுத்தப்பட்ட ஆதிக்க சாதி வெறியின் பிடியில் இருந்து வதைக்கப்பட்ட சட்டக்கல்லூரி தலித் மாணவர்கள் குறித்து எழுதவில்லையே ஏன்? அதற்காக போராடவில்லையே ஏன்? சங்கரன்கோவிலில் கொல்லப்பட்ட இரண்டு தலித் சிறுவர்கள் குறித்து உங்களுக்குத் தெரியுமா?

    இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை இங்கே தமிழகத்தில் புலி ஆதரவாளர்கள் இட்டுக் கட்டி பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று ஜெர்மனியில் அகதிகளுக்கு விண்ணப்பம் நிரப்பிக் கொடுத்தும், மொழிபெயர்ப்பாளராகவும் வேலை பார்த்தும் இலங்கை அரசின் அனுசரணையோடும் வாழும் சுசீந்திரனை பொறுக்கி எடுத்து புது விசையில் நேர்காணலாக வெளியிட்டிருந்தீர்களே? அந்த நேர்காணலில் பதில்கள் மட்டுமல்ல, நீங்களும் யவனிகாவும் கேட்ட கேள்விகளுமே நக்கலாகத்தான் இருந்தது. ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த தியாகி மரியாதைக்குரிய முத்துக்குமார் குறித்த கேள்விகள் எல்லாமே கிண்டல் தொனியில்தான் இருந்தது. புலி எதிர்ப்பின் பெயரால் பௌத்த மரபுக்குள் ஒழிந்து மக்கள் அழிவை ரசிக்கிற மனோநிலையில் இருக்கும் உங்கள் நண்பர்களும் நீங்களும் பேசுவதுதான் மார்க்ஸியமா? இது மார்க்சிய இனவாதம் இல்லையா? சமணக்காட்டை அழிக்க அன்றைய பார்ப்பான் சமணர்களைக் கழுவுவேற்றியதைப் போல இன்று பௌத்த மரபுக்குள் ஒழிந்து கொண்டு புலி எதிர்ப்பின் பெயரால் தமிழ் மக்களைக் கழுவேற்றுகிறார்கள் உங்கள் புலத்து நண்பர்கள். இதையே நீங்களும் செய்கிறீர்கள். இந்த சுசீந்திரனை அம்பலப்படுத்தி இணையம் வழியே ஏராளமாக எழுதப்பட்டிருக்கிறது அதையும் உங்களுக்குத் தருகிறேன்.

    தமிழ்நதிக்கு நீங்கள் எழுதிய கடிதத்தில், அவர்கள் ஊர் திரும்பிச் செல்வது குறித்து எழுதியிருந்தீர்கள். எந்தத் தமிழனும் வாழ்வதற்குரிய சூழலோ சுதந்திரமாக சென்று வரும் சூழலோ இலங்கையில் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். இன்றைய இலங்கைச் சூழலில் ஷோபாசக்தியோ, சுகனோ, நீங்களோ கொழும்பு சென்றால் உங்களுக்கு இலங்கை அரசின் சிகப்புக் கம்பள வரவேற்பு கிடைக்கும். ஏனென்றால் உங்கள் பௌத்த மரபுதான் அங்கே இப்போது ரத்த வெறியோடு தமிழ் மக்களை வீழ்த்தியதைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்ந்தியோ, புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்த என்னை மாதிரி நபர்களோ இல்லை ஏனைய ஈழ ஆதரவாளர்களோ இலங்கைக்கு அல்ல இராமேஸ்வரத்துக்கே செல்ல முடியாத தமிழர் அரசியல் வீழ்ச்சியுற்ற இந்த நிலையைத்தான் சுகன் தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்.

    தமிழ்நதியால் தற்போது அங்கு செல்ல முடியாது என்பது தெரிந்திருந்தும் அவர் தமிழகத்தில் இருப்பது குறித்து கிண்டல் செய்கிறீர்கள். நீங்களோ நானோ நமக்கு சமூகப் பாதுகாப்பு இருக்கிறோம். மனைவி குழந்தையோடு சந்தோசமாக வாழ்கிறோம். ஒரு அரங்கக் கூட்டம் என்பதும் மாற்றுக்கருத்து என்பதும் இந்த வாழ்வில் நாம் செலவிடுகிற மிகக் குறைவான இன்னொரு பகுதிதான். ஆனால் அவர்களுக்கு அப்படியல்ல. காலம் முழுக்க அவர்கள் இழப்புகளினூடே வாழ்கிறார்கள். இந்தியாவில் இருந்து இந்த அரசால் எப்போது துரத்தப்படுவோம் என்று அஞ்சி வாழ்கிறார்கள். அவர்கள் சகஜமான வாழ்வை இங்கு வாழ முடியவில்லை. ஆனாலும் தமிழகச் சூழல் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது.

    தமிழ்நதிக்கும் உங்களுக்கும் இடையிலான இலக்கிய, அரசியல் விவாதங்களை முன்னெடுக்கும்போதே அவரது உயிர்வாழ்வோடு தொடர்புடைய தமிழக இருத்தல் குறித்து நக்கல் செய்கிறீர்களே? புலத்தில் இருந்து வருகிற தமிழ்நதி ஆனாலும் சுகன் ஆனாலும் ஷோபாசக்தியானாலும் அவர்களுக்குக் கிடைக்கிற மரியாதை இலங்கையில் இருந்து கள்ளத்தோணி வழியாக முகாம்களுக்கு வருகிற ஏழைத் தமிழ் மக்களுக்கு கிடைப்பதில்லை. அகதி என்றால் மேற்குலகில் இருந்து வருவோரே என்கிற எண்ணம் நம்மில் பலருக்கு இருந்தாலும் அவர்கள் இங்கு சந்தோசமாக இல்லை. அவர்களுக்கு வேறு போக்கிடம் இல்லை. போவதற்கு இடம் இருந்தால் போவார்கள். ஆகவே அவர்களை ‘‘இப்போ உங்க நாட்டுக்கு போங்களேன் பாப்போம்’’ என்று வெவ்வே காட்டாதீர்கள். அது அசிங்கமானது.

    தமிழக தமிழ்த் தேசியவாதிகள் குறித்து…

    பொதுவாக புலி ஆதரவாளர்கள் என்றும் தமிழ் தேசியவாதிகள் என்றும் அழைக்கப்படுகிற தமிழக ஈழ ஆதரவாளர்கள் அனைவருமே ஒத்த கருத்துடையவர்கள் அல்ல. சாதி ஒழிந்த தமிழ் தேசியம் பேசும் குழுக்கள், சுயநிர்ணய உரிமை பேசும் மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற இடது அமைப்புகள், பெரியார் திராவிடர் கழகம் போன்ற தீவிர பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்கள், அப்புறம் நெடுமாறன், சீமான் போன்றவர்கள். இதை விட ஆர்.எஸ்.எஸ். நகைமுகன் போன்றோர் கூட தமிழர் விடுதலை குறித்துப் பேசுகிறார்கள். இவர்கள் எல்லாம் நமக்கு பிடித்தவர்களாகவும் பிடிக்காதவர்களாகவும் இருக்கிறார்கள். தலித் அரசியலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதாலேயே ஈழ விடுதலையை எறிந்து விடுவீர்களா என்ன?

    தலித் மக்களின் இட ஒதுக்கீடு கோரிக்கை, அருந்ததியினரின் உள் ஒதுக்கீடு கோரிக்கை, சட்டக்கல்லூரி, உத்தபுரம் போன்ற விவகாரங்களில் தமிழ் தேசியவாதிகளின் கள்ள மவுனத்தை நான் வெளிப்படையாக தீவீரமாக கண்டித்திருக்கிறேன். ஆனால் சீமான் உணர்ச்சிகரமாகப் பேசுகிறார் என்கிறீர்கள். ஈழம் தவிர இட ஒதுக்கீடு, பார்ப்பன எதிர்ப்பு தொடர்பாகவும் ஏனைய பிரச்சனைகள் தொடர்பாகவும் அவர் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறார். அவரது ஈழக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்பது வேறு. உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்படாத, காலியாக உள்ள இடங்களை பொதுப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொன்ன போது அதை வரவேற்று அறிக்கை விட்ட ஒரே தமிழ் தலைவன் யார் தெரியுமா? சி.பி.ஐ.எம் வரதாராஜன்தான். பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் முலாயம் சிங் யாதவ் உள் ஒதுக்கீடு வேண்டும் எனக் கேட்கிறார். மார்க்ஸ்சிஸ்டுகள் குதியோ குதி என்று குதிக்கிறார்கள். எங்கள் ஊரில் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்தது பத்து பார்ப்பனர்கள் தலைவர்களாக வந்தார்கள் என்கிற பழைய டயலாக் இன்றைய சி.பி.ஐ, எம் -க்குப் பொருந்தும்.

    வெறுப்புணர்வுக்கு எதிரான முகங்கள்

    பெருந்தன்மை, அன்பு, கருணை, கரிசனம் இந்த வார்த்தைகளை எல்லாம் இப்போது நான் அதிகமாகக் கேட்கிறேன். சுகன் கூட இப்படி ஏதோ ஒன்றிரண்டு வார்த்தைகளை அன்றைக்குப் பேசினார். கேட்பதற்கு ‘திவ்யமாக’ இருந்தது. ஆனால் இந்த வார்த்தைகளுக்கான உண்மையான அர்ப்பணிப்பு உங்களிடம் இருக்கிறதா? வெறுப்புணர்வுக்கு எதிரான முகமென்றால் உங்களுக்கு உடனே தெரிவது இந்து ராமைத்தான். ஆமாம் கொலைகார ஜெயேந்திரனின் சிஷ்யப் பிள்ளை விஜயேந்திரனை தன் காரில் வைத்து ஹைதராபாத்தில் இருந்து அழைத்து வந்த மார்க்சிய முகமூடியான இந்து ராமிடம் இருந்தே தற்காலத்தில் வெறுப்புணர்வுக்கு எதிரான முகமும் இந்த வார்த்தைகளும் பிறக்கின்றன. சந்திரிகாவிடம் எப்போது அவர் சிங்கள கேல் விருது பெற்றுக் கொண்டாரோ அப்போதே அவரது வெறுப்புக்கு எதிரான முகமூடி கழண்டு அம்மணமாகிவிட்டது. ஆனால் அதே இந்து ராமுடன் கூட்டு சேர்ந்துதான் சிபிஐஎம் ஈழப் பிரச்சனையில் நிலைப்பாடு எடுக்கிறது; வெறுப்புணர்வுக்கு எதிரான கூட்டம் நடத்துகிறது. சிங்கள பாசிஸ்ட் கட்சியும் இனவெறிக் கட்சியுமான ஜே.வி.பி-க்கும் மார்க்ஸ்சிஸ்டுகளுக்குமான தொடர்பு ஆழமாக நோக்கப்பட வேண்டியது. சென்னையில் நடக்கும் இவர்களின் மாநாட்டுக்கு அவர்கள் கொழும்பில் இருந்து வருவதும் கொழும்பில் நடக்கும் அவர்களின் மாநாட்டிற்கு இவர்கள் செல்வதுமாக இந்து ராம், ஜே.வி.பி, மார்க்ஸ்சிஸ்ட் கூட்டுதான் ஈழத்தின் மீதான் கொலை வெறிக் கொள்கையை கொண்டிருக்கிறது. ஆதவனின் ஈழ எதிர்ப்பு நிலைப்பாட்டை தலித்திய அரசியலில் இருந்து அணுகுவதென்பது ஷோபா சக்தியின் சிந்தனை. அவருடைய இன்னொரு கூந்தல் நடிகன்தான் சுகன். ஒருவர் பௌத்தமரபு, ஒருவர் மறுத்தோடி, இன்னொருவர் தலித் அரசியல் நிலைப்பாடு கொண்டவர். புலி எதிர்ப்புக்கு ஒன்று சிங்கள் அரசு ஆதரவிற்கு ஒன்று என்று மிகத் துல்லியமான அமைக்கப்பட்டிருக்கும் குழு.

    சிபிஐஎம்-என் அறிவிக்கப்படாத லோக குரு இந்துராம். இந்துராமின் அயலுறவுக் கொள்கைதான் சிபிஐஎம்-ன் அயலுறவுக் கொள்கை. கட்சி வளர்த்துவிட்ட செக்குமாட்டு சிந்தனைகளின் வார்ப்புதான் ஆதவன் போன்றவர்களின் ஈழப்பிரச்சினை நிலைப்பாடு. தனது நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்களை சுசீந்திரன் போன்ற புலியெதிர்ப்பு குழுவினரிடமிருந்து உருவியெடுத்து தலித் அரசியல் நிலைபாட்டில் இருந்து ஈழத்தை அணுகுகிறார் தோழர்.

    ஈழத்தில் இந்து மதமும் சாதியும் இருக்கிறது என்ற உலக மாகா கண்டு பிடிப்பு ஒன்றை இவர்கள் பிரான்சுக்கும் ஜெர்மனுக்கும் போய் ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார்கள். இன்று வரை இந்துப் பாசிச பார்ப்பனக் கருத்தியல் குறித்து மார்க்ஸ்சிஸ்டுகளுக்கு தெளிவான பார்வையே கிடையாது. பத்தாண்டுகளுக்கு முன்னர் வரை தந்தை பெரியாரை இழிவுபடுத்தி காந்தியை வைத்து ஜல்லி அடித்துக் கொண்டிருந்தவர்கள்தான் இவர்கள். இங்குள்ள மார்க்ஸ்சிஸ்ட் கட்சியில் தலித்தியத்திற்கோ, பெரியார் சிந்தனைகளுக்கோ துளியும் இடம் கிடையாது. நிலைமை இப்படி இருக்க ஆதவன் பேசுகிற நம்புகிற கொள்கைகளை குறைந்த பட்சம் கட்சியின் மாநிலக் குழுவிலாவது வைக்க முடியுமா? என்ன செய்ய? பில்டிங்கு ஸ்டிராங்கு! பேஸ்மெண்டு கொஞ்சம் வீக்கு!!

    சாதி எங்கே இருக்கிறது? இந்து மதம் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் சாதி இருக்கிறது. ஈழத்தில் மட்டுமல்ல, தமிழகத்தில், கேரளத்தில், மேற்கு வங்கத்தில், இங்கிலாந்தில், ஏன் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிடத்தில் என எங்கெல்லாம் சாதி இந்துக்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சாதி இருக்கிறது. அதனால்தான் ஈழத்தில் இந்தியத் தமிழர்களை வெள்ளாளத் தமிழர்கள் அவமானப்படுத்துகிறார்கள்; இங்கு இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் கேட்டு, பார்ப்பன மார்க்சிஸ்ட் தலைவர்கள் குறுக்குசால் ஓட்டுகிறார்கள். வெள்ளாளத் தமிழர்களுக்காக ஈழப்பிரச்சினையை ஒதுக்கும் ஆதவன், கிரீமி லேயர் கேட்கும் சிபிஐஎம் கட்சியை ஒதுக்காமல் அண்டியிருப்பது ஏனோ? எல்லா இடத்திலும் இருக்கிறது ஆகவே அதைக் கண்டு கொள்ளக் கூடாது என்று நான் சொல்லவில்லை. இனவாதமும் இனக் கொலைகளுமே ஒரு நாட்டின் கடந்த கால நிகழ்வாக இருக்கும் போது அதை எதிர்கொள்ளத் துணியாமல் புலிகளையிட்டு தலித்தியத்தின் பெயரால் மக்களுக்கு துரோகம் செய்கிறீர்கள் என்பதற்காகவே இதைச் சொல்கிறேன்.

    புலிகள் சாதியைக் கணக்கில் எடுக்காததால்தான் ஈழப்போராட்டம் பலவீனமடைந்தது என்று கூறும் ஆதவன், சாதி குறித்து மௌனம் காத்துக் கொண்டே தொழிலாளர்களை ஒருங்கிணைக்க முயலும் மார்க்சிஸ்ட் பார்ப்பனர்களால்தான் இந்தியாவில் வர்க்கப்புரட்சி நடைபெறாமல் இருக்கிறது என்ற உண்மையை வெளிப்படையாகக் கூறமுடியுமா? கட்சியின் அடுத்த விசாரணையை அவர் சந்திக்க வேண்டும் என்பதற்காக இதை நான் கூறவில்லை. எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக பல மாநாடுகள், பொலிட்பீரோ கூட்டங்கள் நடத்திய பின்னர்தான், சாதியை ஒரு பிரச்சினையாக பார்க்கும் தெளிவு மார்க்சிஸ்ட்களுக்கு வருகிறதென்றால், அந்தத் தெளிவை உயிர் வாழ்வதற்கு உத்திரவாதம் இல்லாது, போராடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களிடம் ஆதவன் எதிர்பார்ப்பது என்ன நியாயம் என்பதற்காகத்தான் கேட்கிறேன்.

    ஆதவன் நீங்கள் தலித் அரசியலில் இருந்தால் மார்க்ஸ்சிஸ்டாக இருக்க முடியாது. நான் தலித் அரசியலில் இருந்து கொண்டே தமிழ் தேசியவாதியாக இருக்க முடியாது இதுதான் யதார்த்தம். தமிழகத்தில் தமிழ், தமிழன், தமிழினம். திராவிடர் என்கிற ஒற்றை அடையாளத்தின் கீழ் இணைவதை நான் எதிர்க்கிறேன் காரணம், தலித் அரசியல் நிலைப்பாடுதான். ஆனால் ஈழத்தில் அப்படியல்ல. அது சாதீய சமூகமாக இருந்தாலும் இனப்படுகொலையும் இன முரணுமே அங்கு பிரதானம். எப்படி ‘‘வர்க்கப் புரட்சி நடந்தால் சாதி ஒழிந்து விடும்’’ என்று உங்கள் மார்க்ஸ்சிஸ்டுகள் சொல்கிறார்களோ அது போல ஈழத்திலே தமிழ் தேசியப் புரட்சி நடந்தால் சாதி ஒழிந்து விடும் என்று நான் சொல்லவில்லை. அந்த முட்டாள்தனமும் எனக்கில்லை. ஆனால் அந்த தமிழ் மக்களுக்கு விடுதலை வேண்டும். அவர்கள் முடமாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்காக அவர்களின் செயல்படாதன்மையை பயன்படுத்தி தலித்தியம் என்கிற அரசியலை உங்களின் புலி எதிர்ப்பு அரசியலுக்கு இனியும் பயன்படுத்தாதீர்கள். அதிலிருந்து உங்களுக்கு ஆதாயமாக பொய் பிரச்சாரம் செய்யாதீர்கள். “ஆமாம் ஆதவன் ஒரு மநு விரோதி எப்படி மநுவின் நிழலில் அரசியல் செய்ய முடியும்?”

    குறிப்பு:

    (ஈழ நிலைப்பாடு ஒன்றை மட்டுமே வைத்து, ஆதவனின் தலித் அரசியல் – இந்துத்துவ எதிர்ப்பு அரசியல் நிலைப்பாடுகளில் நான் சந்தேகம் கொள்ளவில்லை. மாறாக இவற்றிலெல்லாம், அவரது கட்சி நிலைப்பாடே அவருக்கு எதிராக இருக்கும்போது ஏன் ஷோபா சக்தியின் ஸ்பீக்கரை இங்கே ஒலிக்க வேண்டும்? ஷோபாவே நேரடியாக இங்கே பேசலாம். அதற்குத் தடை ஒன்றும் இல்லை.)

    இந்து ராமின் மார்க்ஸ்சிஸ்ட் முகமூடி

    கட்டுரையை எழுதி முடித்து, ‘அப்பாடா’ என்று கீற்றிற்கு அனுப்ப இணைய தளத்தில் உலாவியபோது இந்தச் செய்தி கண்ணில்பட்டது.

    மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கண்காணிப்பு முகாம்கள் என்று இலங்கை அரசாலும் இந்து ராமாலும் அழைக்கப்படும் வதை முகாம்களுக்குள் சிக்கியிருக்கிறார்கள். அன்றாடம் பாலியல் கொடுமைகள் அதன் விளைவாய் தற்கொலைகள் என்று ஓர் இனமே அழிக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டு பாசிச கொடூர மிருகங்களிடம் சிக்கியிருக்கிறது. முகாம்கள் குறித்து அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளிக்கொண்டு வந்த மேற்குலக ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள். இன்று வரை மனித உரிமை அமைப்புகளையோ தொண்டு நிறுவனங்களையோ முகாம்களுக்குள் அனுமதிக்க மறுக்கிற இலங்கை அரசாங்கம் அங்கு அன்றாடம் கொலைகளையும் பாலியல் வன்முறைகளையும் கேள்விக்கிடமின்றியும் சாட்சியங்களின்றியும் நடத்தி வருகிறது.

    உண்மைகளை வெளிக் கொண்டு வந்த மேற்குலக ஊடவியளார்களை அனுமதிக்காத இலங்கை அரசு முகாம்களைப் பார்க்க அழைத்துச் சென்றது யாரைத் தெரியுமா? மார்க்சிஸ்ட் முகமூடியை அணிந்து முற்போக்கு பேசிவரும் இந்து ராமை… பார்ப்பன வெறி பிடித்த இந்து ராம் இப்போது முகாம்களுக்கு சென்று பார்வையிட்டு இலங்கை அரசிற்கும் ராஜபட்சேவுக்கும் பாராட்டு தெரிவித்திருக்கிறார். தோழர் ஆதவன் அவர்களே வெறுப்புணர்வுக்கு எதிரான முகங்களின் யோக்கியதை இப்போதாவது தெரிகிறதா? அது மட்டுமல்ல இலங்கைக்கு இப்போது ராஜமரியாதையோடு செல்லத் தகுதியானர்கள் யார் என்றாவது தெரிந்து கொள்ளுங்கள்.

    அந்த செய்தி இதோ,

    சர்வதேச ஊடகங்கள் முகாம்கள் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டுள்ளன – இந்து ராம் கூறியதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது:

    இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழான இந்து பத்திரிகையின் ஆசிரியர் என் ராம் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு சென்று பார்வையிட்டுள்ளார். நேற்று முன்தினம் அங்கு சென்ற அவர், முகாம்களை பார்வையிட்டுள்ளார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள ராம், சர்வதேச ஊடகங்கள் முகாம்கள் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டுள்ளன என்பதை இதன்போது தன்னால் அறிந்து கொள்ள முடிந்துள்ளதாக கூறியுள்ளார்.

    சர்வதேச ஊடகங்கள் முகாம்களுக்கு சென்று உண்மை நிலைமையை அறிக்கையிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட தமிழ் சிறுவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக முகாம்களில் இருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த மக்களின் எதிர்காலத்தை சிறந்ததாக மாற்றுவார் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் இந்து பத்திரிகையின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்து பத்திரிகையின் ஆசிரியர் கடந்த காலம் முதல் இலங்கை ஆட்சியாளர்களுக்கு

    Reply
  • Talithu
    Talithu

    /புலிகள் இயக்கத்தின் பாசிசத்தன்மை இந்துத்துவ வெறி இஸ்லாமிய எதிர்ப்பு சாதியழிப்பு பேசியவர்களையும் கம்யூனிஸ்ட்டுகளையும் தொழிற்சங்கத் தலைவர்களையும் தலையெடுக்கவொட்டாமல் தீர்த்துக்கட்டியவர்கள்/

    /தங்களது உட்சாதிப் பிரிவைக்கூட தாண்டி வெளியே வரத் துணியாத சாதிவெறியர்கள் இங்கே எழுப்பும் தமிழ் இனம் என்கிற முழக்கத்தின்பால் எனக்கு எப்போதும் ஈர்ப்பு ஏற்பட்டதில்லை. தலித்துகள் தாக்கப்படும்போதெல்லாம் இவர்கள் தீண்டத்தக்க சாதியினராகவும் சிறுபான்மையினர் தாக்கப்படுகையில் சுத்த இந்துக்களாகவும் பெண்ணுரிமை குறித்த விவாதங்களில் உள்ளாடையை கழற்றிக் காட்டத் துணிகிற ஆண்களாகவுமே வெளிப்படுகின்றனர்//

    இப்பிடியான ஆதவன் தீட்சணியாவின் வசனங்களை அடுக்கிக்கொண்டு போகலாம். அவருக்கு இலங்யையில் என்ன நடந்தது நடக்கிறது எண்டு பற்றிய அறிவு துப்பரவுக்கில்லை என்றே காட்டுகிறது. புலிகளின் போக்கு பாசிஸ்டுக்கள் என்றால் பாசிஸ்டுக்கு இலக்கணம் வகித்த முசோலினி போன்றவர்களை எப்படி சொல்லுறது. போர்காலத்தில் பிரபாகரனாலும் அன்ரன் பாலசிங்கத்தாலும் எந்த மதத்தை மதம்மாற்ற உள்ளே விட்டார்கள். இந்தியாவிலுள்ள மத சாதியத்தை இலங்கைக்குப் பொருத்திப்பாக்க முயற்சிக்கிறார் ஆதவன் தீட்சணியா? இடம்யெர்வுகளால் அழிந்து கொண்டிருக்கும் சாதியத்தைத் தூக்கி நிறுத்த முயற்சிப்பவர்கள் தலித்துக்களே. தலித்தியம் பெண்ணியம் என்ற சொற்களைப் பாவிப்பதும் அக்கறை உள்ளவர்கள் போல் நடிப்பதும் தம்மைப் பெரியாக்களாகக் காட்டிக் கொள்ளும் முயற்சிதான். பேனை இருக்கு எழுத்துச் சுதந்திரம் இருக்கு எண்டு நினைச்சதை எல்லாம் எழுதப்பாக்கிறார் ஆதவன். தலித்தியம் என்றதைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு திரிவது தலித்துக்களே தவிர புலிகளோ வேறுயாருமில்லை. இன்று உலகம் ஆயுதத்தில் இருந்த நட்சத்திரப் போருக்கு வளர்ந்து விட்டது. மாக்ஸ் லெனின் என்று பழைய பாட்டுக்களைப்பாடாது. பதிசாகப் பாடுங்கள் உங்களுக்கு விளங்குகிறமாதிரி சொல்லுறது எண்டால் மாற்றம் எண்டது என்றும் நிலந்தரம் என்று மாக்சித்தில்தான் இருக்குது. நானும் குறைந்த சாதிதான் எனக்கு சாதியும் வேண்டாம் சமயமும் வேண்டாம். ஆதவன் தீட்சணியா என்ன சாதி என்று தான்விரும்பினால் ஒட்டிக் கொண்டு திரியட்டும். நாங்கள் விரும்பேல்லை.

    Reply
  • BC
    BC

    தமிழ் நதி புலிகளை பற்றி தமிழ்நாட்டில் பிரசாரம் செய்பவர் என்பது தெரிந்தது. ஆனால் யார் இந்த அருள்? இதை விட tamilnet , புதினம், தமிழ்வின் படிக்கலாம். இவரின் அறுவை தாங்க முடியவில்லை.

    Reply
  • gobal
    gobal

    //ஒரு தலித் கிறிஸ்தவன் என்ற முறையில் சொல்கிறேன்//அருள்
    இது என்ன புதிய பெயராக உள்ளது இந்த கட்டுரையளர்களும் கட்டுரைகளுக்கு பின்னூட்டம் விடுபவர்களும் இந்த ஒரு தலித் கிறிஸ்தவன் என்ற முறையில் சொல்கிறேன் என்று எழுதுகிறார் என்றால் தலித்தியத்திலிருந்து தப்பிக்க அல்லது புரட்ச்சி செய்ய இவர் அல்லது இவரது பரம்பரை கிறீஸ்த்தவனாக மாறிய பின்பும் இன்று இவர் தன்னை தலித் கிறீஸ்தவன் என்று சொல்வது என்றால் ஏகாதிபத்தியம் எப்படி வென்றுள்ளது என்பதையும் இந்த தலித்துக்கள் எப்படி பேய்க்காட்டப்பட்டுள்ளார்கள் என்பதையும் விளங்குகிறது.

    கடந்த சில வருடங்களாக வன்னியிலும் புலிகளுக்குள்ளும் இப்படியான கத்தோலிக்க கிறீஸ்தவமத பிரச்சாரங்கள் நடைபெற்றது எனவும் அறியப்படுகிறது. இதன்காரணமாகவே இனஅழிப்புக்கு இந்த கத்தோலிக்க மதகுருமார்களை சாட்சியமாக வைப்பது பற்றிய சர்ச்சைகள் எழுகின்றது.

    தலித்து கிறீஸ்தவனை விட தலித்து இந்து/சைவனை நாம் உயர்சாதி என்போம். கடந்த நுற்றாண்டுகளில் இந்த இன்றய தலித்துக்களே கிறீஸ்த்தவ கத்தோலிக்கத்திற்கு எதிராக போராடியவர்கள். இவர்களே உயரந்தோர் -தலித்து கிறீஸ்தவர்கள் பாதைதவறிப் போனவர்களை அரவணைப்போம்.

    தலித்துக்கள் மதம்hமறியும் தலித்தியம் சாகவில்லை மாறாக போக்கரிரகள் சமயம் எம்மிடையே வந்தது

    தலித்துக்கள் பேராடியும் தலித்தியம் சாகவில்லை மாறாக தலித்துக்களை அடக்க போராட்டம் உதவியது

    தலித்துக்கள் சங்கம் அமைத்து சிலர் தமது பைகளை நிரப்புகிறார்கள் இனி ஒரு வழி சமைப்போம் அது நிரந்தரமாக தலித்தியத்தை இல்லாதொழிக்க அது நிரந்தரமாக இல்லாதொழிக்க.

    Reply
  • KUNALAN
    KUNALAN

    //யார் இந்த அருள் //பி.சி.

    இவர்தான் அருள் எழிலன். ”ராஜாங்கத்தின் முடிவு” என்ற நல்லதொரு குறும்படத்தை தானே நடித்துத் தயாரித்தவர். நல்ல படம். இன்னும் கொஞ்சம் சொல்லப் போனால் தமிழ் நாட்டில் முன்பு புலிகளின் ரி.ரி.என் தொலைக்காட்சிக்காக நிகழ்ச்சிகள் தயாரித்தவர். இவர் இங்கே அருள் என்ற பெயரில் இட்டுள்ள பின்னூட்டம் இன்று காலை கீற்று இணையத்தளத்திலும்> இனியொரு> தமிழரங்கம் போன்ற இணையத் தளங்களிலும்> தமிழ்நதியின் ”இளவேனில்” இணையத்தளத்திலும் மறு பிரசுரங்கள் செய்யப் பட்டுள்ளன.

    இதிலே கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில்: இவர் ஆதவனை விமர்சனம் செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில் புலம்பெயர் மாற்றுக் கருத்தாளர்கள் அனைவர் மீதும் துரோகிப்பட்டம் சுமத்தியுள்ளார். கவனியுங்கள்:

    //புலி எதிர்ப்பு குறித்தும் இலங்கை இறையாண்மை குறித்தும் இன்றைய சூழலில் பேசுவதில் தான் ஆதாயம் அதிகம். புலி எதிர்ப்பு என்கிற கருத்துக்காக இலங்கை அரசு கோடிக்கணக்கான ரூபாய்களை புலத்தில் கொட்டுகிறது//

    //பொதுவாக இப்படி பேசுகிறவர்களுக்கு தமிழகத்திலும் புலத்திலும் இலங்கை அரசு செலவு செய்கிறது என்பது உண்மைதான். ஆனால் புலி ஆதரவாளர்களுக்கு புலிகள் காசு கொடுப்பார்கள் என்பதெல்லாம் சுத்தக் கட்டுக்கதை. அவர்கள் நம்மிடம் இருந்து பெற்றுக் கொள்வார்களே தவிர அவர்கள் யாருக்கும் கொடுத்தார்கள் என்பதை நான் நம்பவில்லை. //

    //புலி ஆதரவாளர்களை விட புலி எதிர்ப்பாளார்களுக்கு கிடைக்கிற அனுகூலம் அதிகம் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். தன்னார்வக்குழுக்கள் இலங்கை அரசு என பலதரப்பிலும் பணம் கொடுக்கிற ஒரு துறைதான் புலி எதிர்ப்பு. //

    அருள் எழிலனின் இப்படியான பரப்புரை இந்த நாடுகளில் மாற்றுக் கருத்தாளர்களை எதுவும் செய்யப் போவதில்லை. இதைத்தானே புலிகளும் இத்தனைகாலம் பரப்புரை செய்து> தம்மை விமர்சிப்பவர்கள் எல்லோருக்கும் இனாமாகவே துரோகிப் பட்டம் வழங்கினார்கள். அந்த மிக மலிவான வழியையே அருள் எழிலனும் கையாள்கின்றார்.

    மேலே இவர் புலிகள் தொடர்பாக எழுதியுள்ள அத்தனை விடையங்களும் இங்கு ஏற்கனவே புலிப் பினாமிகள் விவாதித்து முடிந்தாயிற்று.

    //ஏனைய அமைப்புகளை விட புலிகள் சிறந்தவர்கள்தான். என்னைக் கேட்டால் நான் பார்த்த தலைவர்களுள் என்னைக் கவர்ந்தவரும்இ என்னில் நிறைந்திருப்பவரும் பிரபாகரன்தான். நீங்கள் ஆசியாவின் சேகுவேரா என்று பிரபாவை நக்கல் செய்தாலும் உண்மை அதுதான். தன்னையும் தன் பிள்ளைகளையும் களத்தில் பலியாக்கி வீரமரணமடைந்த பிரபாகரன் //

    // தமிழ் மக்களை புலிகள் பணையக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று நீங்கள் சொன்னீர்கள். லால்கரில் ஐம்பது கிராமங்களை இராணுவம் மாவோயிஸ்டுகளிடம் இருந்து கைப்பற்றி விட்டது. அந்த கிராமங்களின் பெரும்பங்கு மக்கள் மாவோயிஸ்டுகளோடு ஜார்க்கண்ட் காடுகளை நோக்கி நகர்ந்து விட்டார்கள். அந்த ஆதிவாசிகள் எப்படி மாவோயிஸ்டுகள் இல்லையோ – ஆனால் மார்க்ஸ்சிஸ்டுகள் செய்த துரோகம் எப்படி அவர்களை மாவோயிஸ்டுகளை நோக்கி நகர்த்தியதோ – இராணுவம் துரத்தும் போது சிக்கினால் சீரழிந்து விடுவோம் என்று எப்படி மாவோயிஸ்டுகளோடு சென்றார்களோஇ அப்படியே வன்னி மக்களும் புலிகளுடன் போனார்கள். அதுதான் உண்மை. வன்னி மக்கள் எல்லாம் புலிகள் என்றோ ஈழ மக்கள் எல்லோருமே புலிகள் அமைப்பில் குப்பி சுமந்தவர்கள் என்றோ யாருமே சொல்லவில்லை. அவர்கள் சிங்களனை விட புலிகள்தான் தமக்கு பாதுகாப்பானவர்கள் என்று நம்பினார்கள். அதுதான் உண்மையும் கூட. //
    இப்படி அருள் எழிவன் சொல்வதுபோல் பலப்பல வண்ணங்களில் இதே தேசத்தில் ”புலிவாய்மொழிப்” புலவர்களால் சொல்லக் கேட்டோம். இவற்றை விடுவோம். தாங்கள் நம்புவதை சொல்கிறார்கள்.

    ஆனால் புலியின் மொழியிலேயே அருள் எழிலனும் ”புலம்பெயர்; நாடுகளிலுள்ள மாற்றுக் கருத்தாளர்களுக்கெல்லாம் இலங்கை அரசிடமிருந்து மூட்டை மூட்டையாகக் காசு கொட்டுப் படுகின்றது” என்ற தொனியில் எழுதும் கோணங்கித் தனமான பேச்சுத்தான் எரிச்சலைத் தருகின்றது. அப்படி அரசிடமிருந்து பணம் வாங்குவோரின் பெயர்களை ஆதாரபூர்வமாய் முன் வையுங்கள். நாங்களே அம்பலத்தில் வைத்து நார் நாராய்க் கிழிக்கிறோம்.

    நண்பரே அருள் எழிலன்! நீங்கள் இப்படிச் சொல்லி விட்டீர்கள் என்பதற்காக இங்கிருக்கும் மாற்றுக் கருத்தாளர்கள் “புலிகளிடம் வாங்கிய பணத்துக்காகத்தான் இப்படியெல்லாம் நீங்கள் பேசுகிறீர்கள்” என்று சொல்ல மாட்டார்கள்.

    அப்படியிருந்திருந்தால் நல்ல நல்ல குறும் படங்களெல்லாம் எடுத்திருப்பீர்களே.
    அருள் எழிலன் உங்களுக்க ஒன்று தெரியுமா? அரசின் கூலி வாங்கிகளாக தாங்கள் இப்போ சித்தரிக்கும் மாற்றுக் கருத்து நண்பர்கள்தான் மாற்றுச் சினிமாவுக்கான தளமொன்றை ஏற்படுத்தும் பொருட்டு தமிழ் நாட்டிலிருந்து ”தப்புக்கட்டை> தங்களது ”ராஜாங்கத்தின் முடிவு” போன்ற நல்ல படைப்புக்களைத் தருவித்து தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடித் திரிந்தனர்.

    இப்போ தேசத்தின் மீதும்தான் இந்தக் குற்றச் சாட்டு என்பதை தேசம் நண்பர்கள் மறக்க வேண்டாம்.

    குணாளன்-

    Reply
  • chandran.raja
    chandran.raja

    அருள் யார் என்பதைவிட இவர் எதைகேட்கிறார்? எதை விரும்புகிறார்?? என்பதை புரிந்தவர்கள் யாராவது நாலுவார்த்தைகளில் புரியவைப்பார்களா??? புரியவைப்பவரும் இலக்கிய பணி செய்ததும் ஆகும்.

    Reply
  • anpu
    anpu

    குணாளன் மாற்றுக்கருத்தாளர்கள் என்பவர்கள் எல்லாரும் புலிஎதிர்ப்பாளர்கள் என்று அர்த்தப்படுத்துவது தப்பானது என்பது என் அபிப்பிராயம். தற்போது புலிகள் பிளவுற்றிருப்பதால் அவர்களுக்குள்ளும் மாற்றுக் கருத்துக்கள் உண்டு.

    Reply
  • BC
    BC

    குணாளன், விளங்கி கொண்டேன் தகவலுக்கு நன்றி.

    Reply
  • Talithu
    Talithu

    அன்பு சொன்னது முற்றிலும் உண்மையானது.

    ஆதவன் தீட்சண்யா முதலில் ……………………………. பிறகு எழுத்தாளர் பட்டம் பதவி எண்டு பாக்கலாம். தலித்தியத்தைக் தூக்கிக் கொண்டு தாங்கள் ஏதோ தீவிரவாதியாயும் போராட்ட வீரர்களாயும் காட்டப்பாக்கிறார் இவர். ஒரே இனம் மொழி கலாசாரம் கொண்ட தமிழ் மக்கள் இலங்கையில் செத்துக் கொண்டிருக்கிறபோது நான் ஏன் கேட்க வேண்டும் என்று கேட்டார். இங்கே நீர் எழுதவோ பேனை தூக்கும் தகுதியையோ இழந்துவிட்டிர்.

    தமிழ்நதி எங்கேயோ இருக்கும் எம்மக்களுக்குத் தொடர்பில்லாத யாரோவிடம் தன் ஆதங்கத்தைக் கேட்கவில்லை. உரிமையுடன் தம்மை முற்போக்காளராக எழுத்தாளராக போராட்ட குணமுள்ளவனாகக் காட்டிக் கொண்ட ஒரு மனிதனிடம் உரிமையுடன் ஆதங்கத்துடன் கேட்ட கேள்விக்கு தீட்சண்யா சொன்ன சொற்கள் மனித இனமே வெக்கப்ட்டுத் தலைகுனியுமாறு இருக்கிறது. என்னித்து மொழியை கலாசாரத்தைக் கொண்ட என் உறவிடம்தானே கேட்டார் தமிழ்நதி. ………………………………

    Reply
  • Talithu
    Talithu

    அருள் யார் எண்டது முக்கியமில்லை. அவர் சொன்ன கருத்துக்கள் தான்முக்கியம். இங்கே கதைக்கப்படுவது ஆதவன் தீட்சண்யாவுக்கும் தமிழ்நதிக்கும் இடையிலான கருத்துமோதல். இதைவிட்டுப்போட்டு அருள் யார்? என்னமதம் சாதி எண்டு குணாளன் எங்கோ கொண்டு போறார். பெரிய விசயம் இல்லாத ஒண்டை பூதராகரமாக்கிப் பாக்கிறார்கள். தீட்சண்யா புதுவிசையின் ஆசிரியராம். ஏதோ பெரிய ஆசிரியர் எண்டு தமிழ்நதி கேட்டுப்போட்டர். உடனை ஆசிரியருக்குக் கொம்பு முளைச்சிட்டுதாம். தன் சகோதரம் இலங்கையில் அழிய இங்கே புரட்சி எண்கிறார் திட்சண்யா. எங்களுக்குத் தெரியும் தானே இந்தியா எங்களுக்கு என்ன செஞ்சது எண்டு. ஆயுதம் தந்த எங்களைக் கொலைக்களத்துக்கு அனுப்பியது சிங்கள அரசாங்கமில்லை. இந்தியாதான். இறுதியாய் எங்களை கொண்டு முடித்ததும் இந்தியாதான். இவர்கள் இந்தியன்கள் அவ்வளவுதான்……….

    Reply
  • rohan
    rohan

    எப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொறருள் காண்பது அறிவு என்று 2000 ஆண்டுகளின் முன்னால் சொன்னான் வள்ளுவன். அவ் வார்த்தைகள் இன்றும் பொருந்தும்.

    கருத்தைப் பார்ப்பதை விடுத்து கருத்து சொன்னவரை ஏன் பார்க்க வேண்டும்?

    அருள் வரிகளில் விடயங்கள் இருந்தன. “இதை விட தமிழ்நெற் , புதினம், தமிழ்வின் படிக்கலாம். இவரின் அறுவை தாங்க முடியவில்லை” என்று சொல்வது வாசிக்கவே பரிதாபம் தரும் கருத்து. உலகை இரு கண்களாலும் பார்க்க ஏன் எல்லோராலும் முடிவதில்லை என்று எனக்குப் புரியவில்லை.

    Reply
  • MSPillai
    MSPillai

    புலி அழிந்து விட்ட பிறகு இங்கு புலிக்கு சார்பான கருத்துக்களே மாற்றுக் கருத்துக்களாக இருக்க முடியும். புலி பற்றி பேசுபவர்களே தமிழின துரோகிகள் என வரையறை செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் தமிழருக்கு எதிரான அரசுக்கு ஆதரவான கருத்துக்களை கொண்டுள்ளவர்களும் மாற்றுக்கருத்தாளர்களும் தமிழினத் துரோகிகளுமாவர். ஆக மொத்தத்தில் தமிழருக்கு எதிரான கருத்தைக் கொண்டு செயல்படும் அணைவரும் மாற்றுக்கருத்தாள துரோகிகளே. எனவே தமிழர் விடயத்தில் அரசும் புலிகளும் தமிழனத் துரோகிகளே. இதனால் எதை உங்களுக்கு கூற விரும்புகிறேன் என்றால் கடந்த கால கசப்பான அனுபவங்களை கருத்தில் கொண்டு புலி மற்றும் அரச சார்பற்ற தமிழகத் தலைமைகள் அதிவிரைவில் உருவாக்கப்பட வேண்டும் என்பதே யதார்த்தமான விடயம்.
    அன்புடன்
    எம் எஸ் பிள்ளை

    Reply
  • KUNALAN
    KUNALAN

    //அருள் யார்? என்னமதம் சாதி எண்டு குணாளன் எங்கோ கொண்டு போறார். பெரிய விசயம் இல்லாத ஒண்டை பூதராகரமாக்கிப் பாக்கிறார்கள்//தலித்த்து! என்ன கதைக்கிறீங்கள்.

    பி.சி கேட்டதற்கு எனக்குத் தெரிந்த நண்பர் அருளின் விபரத்தைக் குறிப்பிட்டேன். இதில் தாங்கள் குறிப்பிடும் பூதாகாரம் எங்கே இருக்கிறது சொல்லுங்கள். எதையாவது உங்கள் பங்கிற்கு பின்னூட்டம் இட்டுவிட வேண்டுமென்ற அவரசம் படித்துப் பார்ப்பதிலும் இருப்பது விரும்பத்தக்கது.

    -குணாளன்-

    Reply
  • BC
    BC

    உலகை இரு கண்களாலும் பார்க்காமல் புலி கண்ணாலேயே எல்லாவற்றையும் பார்க்கும் Rohan க்கு புலிக்கு தாளம் போடுவதை தவிர்ந்த எதுவும் அப்படி தான் பரிதாபமாக தெரியும்.

    Reply
  • மாயா
    மாயா

    //புலி மற்றும் அரச சார்பற்ற தமிழகத் தலைமைகள் அதிவிரைவில் உருவாக்கப்பட வேண்டும் என்பதே யதார்த்தமான விடயம்.
    – MSPillai on July 5, 2009 6:44 am //
    தமிழகத்தில் உள்ள பலருக்கு இலங்கை பிரச்சனை என்ன என்றே சரியாகத் தெரியாது. அவர்கள் அவர்களது அரசியலுக்காகவும் , பிழைப்புக்காகவும் புலி பாட்டு பாடுகிறார்கள்.

    பிரபாகரன் இறந்தது கலைஞருக்கு நன்றாகவெ தெரியும். பிரபாகரன் இறந்து விட்டார் என்று சொல்லி துரோகியாக விரும்பாமல் கவி பாடாது மெளனமாக இருக்கிறார். இந்நிலையில் அடுத்தவர்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை.

    அண்மையில் ஒரு முக்கிய தமிழக அரசியல் பிரமுகரோடு பேசும் போது ” உண்மை தெரியும். வாய் திறந்தால் , இனி வாயே திறக்காமல் பண்ணிடுவாங்க. திருமாவளவன் முகத்தில் வித்தியாசம் புரிகிறது. திருமாவுக்கே புலிகள் துரோகி பட்டம் சூட்டி பேசிட்டாங்க. உண்மைகள் தெரியணுமுண்ணா புலி எதிர்ப்பு இணையங்களை பார்த்தால்தான் உண்டு”என்று சொன்னார்.

    இதுவே தமிழக நிலை. இவை விரைவல் பல்டியடிக்கும். பணத்துக்காக எழுதுவோர் உண்மையானவர்கள் அல்ல.

    Reply
  • M S Pillai
    M S Pillai

    மன்னிக்க வேண்டும் மாயா!

    “தமிழர்களின் தலைமை” என்பது என்கருத்தில் “தமிழக தலைமை” என்று தவறாக எழுத்து தவறு ஏற்பட்டுள்ளது.

    தமிழக தலைமைகளை எமக்காக உருவாக்க நாமென்ன கிறுக்கர்களா?
    அல்லது தமிழக தலைமைகளை நம்பி சட்டியில் இருந்து தணலில் விழவா?

    எம எஸ் பிள்ளை

    Reply
  • M S Pillai
    M S Pillai

    ஜெயபாலன்
    ஏன் இந்திய எழுத்தாளர் பற்றி எழுதிய என் விமர்சனத்தை நீக்கிவிட்டீர்கள். தமிழ் நாட்டு இந்திய எழுத்தாளர்களை பற்றி விமர்சித்திதை ஏன் நீக்கினீர்கள். அப்படியானால் இந்திய தமிழ் எழுத்தாளர்களையும் அவர்கள் கண் ணை மூடிக் கொண்டு ஈமத்தமிழர் பற்றி எழுதுவதை அறிந்தும் அதை மறுக்கிறீர்களா?
    பல பிரபல தமிழக இந்திய எழுத்தாளர்களும் அரசியல் வாதிகளும் ஈழத்தமிழரின் பிரச்சனைகளை தங்கள் வயிற்றுப்பிழைப்புககாக பயன்படுத்தவில்லை என்று நீங்களும் கூறுகிறீர்களா?
    எம் எஸ் பிள்ள

    Reply
  • Varman Canada
    Varman Canada

    தமிழ்நதியை நினைக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது. எதற்காகத் தன்னை இப்படிக் கேலிக்குள்ளாக்கிக் கொள்கின்றார். இலக்கியத்தில் அவருக்கு நிறம்பவே ஈடுபாடு உள்ளது அதனை மட்டும் செய்யலாமே.
    தமிழ்நதி நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று விட்டுக்கொடுக்க மனமின்றி ஒற்றைக் காலில் நிற்கிறீர்களோ என்று அய்யமாக உள்ளது. விடுதலைப்புலிகளால் தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல தீர்வு வரும் என்று நம்பியிருந்த அப்பாவி அசட்டு மக்களில் தாங்களும் ஒருவர். அதில் தவறொன்றும் இல்லை. ஆனால் இப்போதுதான் விடுதலைப்புலிகள் தமிழ் மக்கள் மீது வைத்திருந்த கருணை அப்பட்டமாகி விட்டதே, இது வெளிவந்த பின்பும் அது வன்னி மக்களின் தெரிவு என்று இந்தியாவில் இருந்து கொண்டு கூறும் உங்களை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. ஒன்று தெரியுமா? தாங்கள் இன்னும் வன்னியில் மக்களுக்காகத் தொண்டு செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்று சில அப்பாவி அசட்டு மக்கள் கனடாவில் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் தற்போது மௌனமாக இருக்க, இல்லாவிட்டால் தமது தவறை உணரத்தொடங்கி விட்டார்கள். ஈழப்போராட்டம் பற்றி மௌனமாக இருக்கப்பழகுங்கள், இல்லாவிட்டால் தவறை ஒத்துக்கொள்ளப் பாருங்கள். இல்லாவிட்டால் இப்படித்தான் வீணாகக் கேலிக்குள்ளாக வேண்டியிருக்கும். குறுக்கு வழியில் உங்களை அடையாளப்படுத்த முயலாதீர்கள். தமிழ்நாட்டு இலக்கியவாதிகளைப் பார்த்து ஈழமக்களுக்கான என்ன செய்தீர்கள் என்ற கேள்வியோ, இல்லாவிட்டால் என்னை அழவிடுங்கள் என்ற பாசாங்கோ வேணுமானால் கனடா வாழ் தமிழ் மக்களிடையே எடுபடலாம். தமிழ்நாட்டில் அந்தப்பருப்பு வேகாது. இனிமேலாவது பாசாங்குகளை ஒதுக்கி வைத்துவிட்டு உண்மையாக இருக்க முயலுங்கள். ஈழத்தமிழர் சார்பில் தமிழ் நாட்டில் இருக்கும் ஒரே இலக்கியவாதி தாங்கள் தான். தயதுசெய்து ஈழத்தமிழரைக் கேவலப்படுத்தாதீர்கள். தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் ஈழத்தமிழர் எல்லோரையும் உங்களை வைத்து எடை போடப்போகின்றார்கள். ஏற்கெனவே புலம்பெயர் தமிழர்களை ஆனந்தவிகடன் பேட்டியில் கேவலப்படுத்தி விட்டீர்கள். இப்போது ஒட்டுமொத்த ஈழத்தமிழரையும் கேவலப்படுத்த முயல்கின்றீர்கள் என்றே படுகின்றது. தயவுசெய்து வேண்டாம். கவிதை உங்களுக்கு நன்றாக வருகின்றது அத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

    Reply