மெனிக்பாம் பகுதியில் நிரந்தர கட்டுமானங்கள்?

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் 3 இலட்சம் பேரில் 80 சதவீதமானோர் வருட இறுதிக்குள் மீளக்குடியமர்த்தப்படுவர் என்று உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ள போதும் இந்த அகதிகளுக்கு நிரந்தர முகாம்களையே வீடுகளாக நிர்மாணித்து வழங்கப்படவுள்ளதாக தோன்றுவதாக லண்டன் ரைம்ஸ் பத்திரிகை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மெனிக்பாம் பகுதியில் நிரந்தரமான கட்டிடங்கள் எழுப்பப்படுவதாக நிவாரணப் பணியாளர்கள் ரைம்ஸுக்கு கூறியுள்ளனர். மெனிக் பாமில் 6 வலயங்களில் 4 வலயங்களுக்கு தங்களால் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடியதாக இருப்பதாகவும் இரு வலயங்களுக்குச் செல்வது தடுக்கப்பட்டுள்ளதாகவும் இதில் சூன்ய வலயமென மர்மமான பெயர் சூட்டப்பட்டுள்ள பகுதியும் அடங்கும் என்றும் நிவாரணப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பகுதிகளில் பணிபுரிய எமக்கு அனுமதியளிக்கப்படவில்லை என்று இலங்கையிலுள்ள “ரிலீவ்’ இன்ர நெஷனல் அமைப்பின் தலைவர் ராஜித ஜயசிங்க தெரிவித்துள்ளார். ஆனால், கட்டிடங்கள் எழுப்பப்படுவதை வெளியிலிருந்து பார்க்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். தலைநகர் கொழும்பிற்குப் பின்னர் இலங்கையின் இரண்டாவது பெரிய நகரமாக இந்தப்பகுதி உருவாகிவருவதாக சில நிவாரணப் பணியாளர்கள் கூறியுள்ளனர். பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள், வங்கிகள் என்று பாரிய நகரமாக உருவாகுவதாக கூறப்படுகிறது. இங்கு வங்கிகளில் அகதிகள் 100 கோடி ரூபாவுக்கும் மேலான பணத்தை வைப்பிலிட்டுள்ளனர்.

இந்த வலயங்களில் அரசாங்கம் நிரந்தர புகலிடங்களுக்கான வேலைகளை மேற்கொள்கின்றது. சீமெந்து தரைகள், மரக்கட்டமைப்புகள், இரும்புக் கூரைகள் என்பன அமைக்கப்படுகின்றன என்று உதவிப் பணியாளர் ஒருவர் கூறியுள்ளார். தன்னை அடையாளங் காட்டவேண்டாமென அவர் கேட்டுக்கொண்டதாக ரைம்ஸ் பத்திரிகை கூறியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • rohan
    rohan

    இந்தச் செய்திக்கு எனது மன வருத்தத்தைத் தெரிவிக்க எனக்குத் தயக்கமாக இருக்கிறது. எனக்குப் புலி முத்திரை குத்துவது மட்டுமன்றி புலியுடன் இருந்த காலத்தை விட தமிழர்கள் வசதியாக இருக்கிறார்கள் என்று ஒரு பிரசங்கம் கேட்பதற்கும் நேரிடுமே என்ற பயமும் தான் காரணம்.

    Reply
  • vanthijathevan
    vanthijathevan

    180 நாட்களில் சொந்த இடங்களுக்கு போகப் போகின்ற மக்களுக்கு எதற்கு வங்கி கிளைகள் வாசகர்சாலை பாடசாலைகள் . இவையெல்லாம் அவர்கள் திரும்பிப் போகப் போகின்ற இடங்களில் அல்லவா கட்டப்பட வேண்டும். இங்கேயும் அவற்றை செய்து மீள் குடியேற்ற இடங்களிலும் எல்லாம் கட்டித் தர நிதிகளுக்கு எங்கு போவது? 80 வீதமானவர்கள் போக மீதமானவர்கள் எங்கு போகப் போகின்றார்கள்? அவர்களின் நிலங்கள் யாருக்கு?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //தலைநகர் கொழும்பிற்குப் பின்னர் இலங்கையின் இரண்டாவது பெரிய நகரமாக இந்தப்பகுதி உருவாகிவருவதாக சில நிவாரணப் பணியாளர்கள் கூறியுள்ளனர்.//

    சிலருக்கு இவை கண்ணுக்குத் தெரிவதில்லை. தற்போது அகதி முகாம்களில் வாழும் மக்களில் 54 சதவீதமான மக்கள் 1977 மற்றும் 1981 கலவரங்களின் போது மலையகததிலிருந்து வந்து வன்னியில் குடியேறியவர்கள். இவர்கள் பல வருடங்களாக தற்காலிக இடங்களிலேயே தங்கியிருந்தவர்கள். இவர்களுக்கென்று சொந்தமாக ஒரு துண்டு காணி கூட இருக்கவில்லை. இப்படியான மக்களுக்கு அரசு வசதி செய்து கொடுக்க வேண்டாமா?? அவர்களுக்கும் அரசு வசதியான வாழ்க்கை அமைத்துக் கொடுப்பது வரவேற்கத் தக்கது தானே??

    Reply
  • msri
    msri

    மலையக மக்கள் லயன்களில் அடைக்கப்பட்டது போல்! வன்னிமக்கள்> இப்போது முட்கம்பி வேலிக்குள்!> அடுத்து கட்டப்படும் லயன்களில்! இம்மக்களின் அசையாச் சொத்துக்கள்> திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களுக்கோ?

    Reply
  • Tamil punchi pannda
    Tamil punchi pannda

    மக்களோ தம் சுதந்திரமான வாழ்வு, சுதந்திரமான உழைப்பு, சுதந்திரமாக நடமாடும் உரிமை மற்றும் சுதந்திரமாக தம் உறவுகளுடன் இணையவும் தடையாக உள்ள இந்த பேரினவாத அரசுக்கு எதிராக, தம்மைத் தாம் தமக்குள் அணிதிரட்டுகின்றனர். பன்நாட்டு முதலாளிகள் தம் மண்ணை, சிங்கள பேரினவாத அரசுடன் சேர்ந்து ஆக்கிரமிப்பதை அவர்கள் கண்கொண்டு காணும் நாள் வெகு தொலைவில் இல்லை. இதை அந்த மக்கள் எதிர்கொண்டு போராடும் நாள், வெகுதொலைவில் இல்லை. இன்று ஏற்பட்டுள்ள சர்வதேச அழுத்தங்களை சமாளிக்க, வன்னிமண்ணில் அவர்களுக்கு ஒரு பங்கு கொடுத்து, அந்த மக்களை கூடியொடுக்க முனைகின்றது இந்த பேரினவாத அரசு. மக்களோ இதை எதிர்த்துப் போராடுவார்கள். இதுதான் மனித வரலாறு

    Reply
  • vadakkan aatham
    vadakkan aatham

    பார்த்திபன்
    நீங்கள் நன்றாக கயிறு விடுகிறீர்கள்! 54 வீதமான மக்கள மலையகத்தை சேர்ந்தவர்களா? அப்படியானால் இடம் பெயர்ந்துள்ள 3 லட்சம் மக்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் (ஒன்றரை லடசத்திற்கும் மேல்) மலையகத் தமிழர்களாக இருத்தல் வேண்டும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //பார்த்திபன்
    நீங்கள் நன்றாக கயிறு விடுகிறீர்கள்!-vadakkan aatham //

    மன்னிக்கவும், நான் மெனிக்பாமில் உள்ளவர்களில் 54 சதவீதமானவர்கள் என்று குறிப்பிட மறந்தது தவறு தான். அதற்காக கயிறு விடுகின்றேன் என்று தாங்கள் நினைப்பதும் தவறு தான்.

    Reply