முள்ளி வாய்க்கால் : விஜி

Nanthi_Kadal_lagoon
புல் வெளியும்
கொஞ்ச மரங்களும்
கொண்ட இடங்களெல்லாம்
முள்ளிவாய்க்காலாய்தான்
கண்முன் விரிகிறது.

கடலின் நினைவு
அச்சம் தருகிறது
அதன் ஓ வென்ற
இரைச்சல்; தாண்டி
மனிதர்களின்
மரண ஓலம் மேலெழுகின்றது!

கடல் அறியுமோ
எங்கள் மனிதர்களின்
கண்ணீரின் உப்பையும்
குருதியின் அடர்த்தியையும்!

எந்தக் குழந்தை
தன் இறுதி மூச்சை
எங்கு நிறுத்தியதோ?
இன்னும் குழந்தைகள்
வழிதவறி அங்கு
அலைந்து திரியுமோ?

நீர்க்கரையில்
பாத்திரங்கள் பண்டங்கள்
சிதறிக் கிடக்கின்றன.
யாருக்காய் அவை காத்திருக்கின்றனவோ?

தனியே தொங்கும்
கைப்பை
சோகமாய் பார்த்திருக்கிறதே
போனவர் எப்போது
திரும்பி வருவாரோ?

புலம்பெயர் தெருக்களில்
இப்போது
சுடு சாம்பல்
காற்றில் மணக்கிறது!
சுற்றிலும்
மரண ஓலம் ஓயாது
துரத்துகிறது!

எந்தக்காலம் இனி
முள்ளிவாய்க்கால்
தன்
கதை பேசும்?

 விஜி

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • Karthiha
    Karthiha

    கனமான நினைவுகளை கவிதையாக நினைவுகூர்ந்த விஜிக்குப் பாராட்டுக்கள்.

    “கடல் அறியுமோ
    எங்கள் மனிதர்களின்
    கண்ணீரின் உப்பையும்
    குருதியின் அடர்த்தியையும்!”

    இவ்வரிகளின் ஆழம் அளவிடமுடியாத ஆழம்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    விஜி பாராட்டுகள்.

    வேதனைகளோடு நில்லாது, நாளைய எதிர் காலத்துக்கும் எதையாவது சொல்லுங்கள். அழுதது போதும் ஏமாந்தது போதும், யதார்த்தத்தை உணர வைப்பது கவிகளின் கடமையாகவும் வேண்டும்.

    Reply
  • chocka
    chocka

    கன்னீர் விட்டோ வலர்ததோம் சர்வேசா இல்லை எம் மக்கல் கன்னீரும் குருதியும் விட்டு தானே வலர்கின்ட்ரொம்

    Reply
  • sitharaman
    sitharaman

    pain stil in and hurt is disappearing and solution might come.we will all be brothers.our baby days comming back.no more war, no more tears.

    Reply
  • palli
    palli

    விஜியின் கவியிலே;
    வலி சற்று அதிகம்தான்;
    யார் இந்த விஜி என;
    தேடாத கவிதை இது;

    மாவீரர் தொகை என்ன;
    தமிழ் மக்கள் அழிவென்ன;
    புறமுதுகு காட்டவா;
    முப்பது வருடங்கள்;

    ஆயுதங்கள் தூங்கட்டும்;
    கட்டாய ஓய்வு எடுத்து;
    தமிழர் விடிவுக்காய்;
    கூவட்டும் பேனாக்கள்;

    நெல்சன் சிறை சென்றார்;
    தன் மக்கள் விடுதலைக்கு;
    எம் தலை திமிர் கொண்டார்;
    வன்னி மக்கள் சிறையினிலே;

    பொட்டரின் போர் மோகம்;
    தமிழருக்கு நாசமென ;
    நாள்தோறும் கிறுக்கினோம்;
    துரோகி பட்டங்களுடன்;

    ஆயுதங்கள் தூங்கட்டும்;
    அதனாலே தப்பில்லை;
    பேனாக்கள் விழிக்கட்டும்;
    தமிழரது விடிவுக்காய்;

    பல்லி;

    Reply
  • Kumaran
    Kumaran

    All we want is freedom
    Is that too much to ask
    All we want is freedom
    To forget everything in our past
    All we want is freedom
    To take away all the tears and the pain
    All we want is freedom
    To never feel that way again
    All we want is freedom
    To make all our fears go away

    Reply
  • Thaksan
    Thaksan

    மாண்டவர் திரும்பி வாரார் – மதிக்கு
    இது நன்றே தெரியும்.
    விதியிதுவென வீழ்ந்து போகோம்
    மதி கொண்டு வெல்வோம் பகை!
    வெறும் இரும்பினை பலமாய் இருத்தி
    பல உயிர்களை பலி கொள்ளாமல்-இனி
    ஒரு விதி செய்வோம்- மனிதம்
    தளைத்திட வழி காண்போம்.

    Reply