லிப்ற் கொடுப்பதாகக் கூறி பாலியல் வல்லுறவு கொண்ட இருவருக்கு, 17 ஆண்டுகள் சிறை!!!

Rapists_Tharmaseelan_and_Arunanலிப்ற் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வல்லறவிற்கு உட்படுத்திய இரு தமிழ் இளைஞர்களுக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. தர்மசீலன் தங்கவேல் (27) அருணன் தனபாலசிங்கம் (30) ஆகிய இரு இளைஙர்களுமே பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுள்ளனர். யூலை 6ல் போற்ஸ்மோத் கிறவுண் நீதிமன்றத்தில் மூன்றுநாள் வழக்கின் முடிவில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவர்களுக்கான தண்டனையை வழங்கிய நீதிபதி கிரகாம் உவைற் தண்டனைக்காலம் முடிந்ததும் அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

மேலும் இவர்கள் குற்றவாளிகளாகக் கணப்பட்டு உள்ளதால் பாலியல் குற்ற ஆவணத்தில் அவர்களது பெயர் விபரம் காலவரையறையின்றி பதிவு செய்யப்படும். இதனால் இவர்கள் தண்டனைக் காலம் முடிந்த பின்னரும் தங்களது நகர்வுகள் இருப்பிடம் வாழ்விடம் பற்றி பொலிசாருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 21 வயதான பல்கலைக்கழக மாணவி சம்பந்தப்பட்டவர்கள் எப்போதும் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று விரும்பினாலும் அவர்கள் நீண்டகாலச் சிறைத் தண்டனை பெற்றது ஆறுதல் அளிப்பதாகத் தெரிவித்தார். இவர் மூன்று நாட்கள் நிதிமன்றத்தில் சாட்சியமளித்தார். தனக்கு நிகழ்ந்த கொடுமையை விபரித்து மற்றையவர்களுக்கும் அவ்வாறு நிகழ்ந்து விடாது தடுத்துள்ள அம்மாணவியின் துணிச்சலை டிடெக்டிவ் சார்ஜன் சூ முரே பாராட்டினார்.

பிரித்தானியாவின் ஹம்பசெயர் என்ற இடத்தில் உள்ள போஸ்ட்மவுத் பிரதேசத்தில் சவுத்சீ பகுதியில் வெளியே சென்று குடித்துக் கொண்டிருந்த மாணவியை தர்மசீலன் தங்கவேலும் அருணன் தனபாலசிங்கமும் வீட்டில் இறக்கி விடுவதாக்க கூறி தங்கள் காரில் ஏற்றினர். காரில் ஏற்றியவர்கள் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு இன்னுமொரு அறை பயன்படுத்தப்படாமல் இருப்பதாகக் கூறி அதில் தங்கலாம் தூங்கலாம் என அந்த மாணவிக்குத் தெரிவித்தனர்.

பின்னர் இருவரும் மாறி மாறி அந்த மாணவியுடன் பாலியல் வல்லுறவு கொண்டுள்ளனர். அந்த மாணவி எவ்வளவோ கெஞ்சிய போதும் இவர்கள் வல்லுறவு கொள்வதை நிறுத்தவில்லை என அம்மாணவி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதன் பின்னர் மீண்டும் அம்மாணவியை காரில் ஏற்றிவந்து சவுத்சீயில் வீதியோரத்தில் அவரை இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் தர்மசீலன் தங்கவேலும் அருணன் தனபாலசிங்கமும் கைது செய்யப்பட்டனர்.
குற்றவாளிகள் இருவரும் மாணவியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதை மறுத்துள்ளனர். அம்மாணவியின் சம்மதத்துடனேயே அவருடன் உறவு கொண்டதாக அவர்கள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

யூரிகள் மூன்று நாட்கள் வாதப் பிரதிவாதங்களைக் கேட்ட பின் மூன்று மணிநேரம் அவற்றை ஆராய்ந்து தர்மசீலன் தங்கவேல், அருணன் தனபாலசிங்கம் இருவரையும் குற்றவாளிகளாகக் கண்டனர்.

இவர்கள் ஒவ்வொருவருக்கும் எட்டு ஆண்டுகளும் ஆறுமாதங்களும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள கடினமான குடிவரவு விதிகளுக்கமைய நீதிபதியின் பரிந்துரைக்கு அமைய குற்றவாளிகள் திருப்பி அனுப்புவதற்கு உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இளைஞர்கள் குழுக்களிடையே வன்முறையைப் போன்று பாலியல் துஸ்பிரயோகங்கள் பல இடம்பெற்றுள்ளன. ஆனால் ஊடகங்களில் மிகச்சிலவே வெளிவந்துள்ளது. வயது குறைந்தவர்களை பாலியல் இச்சைகளுக்கு உள்ளாக்கிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. இவற்றில் ஈடுபட்ட பலர் நீதிக்கு முன் நிறுத்தப்படவில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

13 Comments

 • sinthu
  sinthu

  இது மட்டும் சிங்களவர்கள் செய்திருந்தால் இவ்வளவில் லண்டன் வீதியில் கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்து இருப்பார்கள்.

  Reply
 • Kumaran
  Kumaran

  These people should be deported.
  Some migrants have a wrong idea about European women and they have only one thing in mind when they approach western women. Only jail sentence and deportation will be taught lessons for others.

  Reply
 • நண்பன்
  நண்பன்

  இப்படியானவாகள் உடனே நாடு கடத்தப்பட வேண்டும். அதுவே, இனி வரும் காலங்களில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும்.

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  நண்பா,
  நாடு கடத்தினால் குற்றங்கள் குறையும் என்று யார் சொன்னது? இவ்வாறே இங்கிலாந்தின் கொலனிகளில் ‘குற்றவாளிகளை’ அவுஸ்திரேலியாவுக்கு நாடுகடத்திய சரித்திரம் அறியவில்லையா? அதனால் இங்கிலாந்தில் அல்லது கொலனிகளில் குற்றங்கள் குறைந்ததா?

  குற்றவாளிகள் தண்டனை அனுபவிக்க வேண்டும்! அத்தண்டனைக்காலம் முடிவடைந்த பின்னர் என்ன செய்வது என்று அந்நாட்டு சட்டங்களுக்கேற்ப முடிவெடுக்கவேண்டும்!

  Reply
 • JONATHAN XAVIOR
  JONATHAN XAVIOR

  I AM REALY SORRY FOR THIS YOUNG MENS,THEY SHOULNT DONE WHAT THEY WERE DONE BUT I THINK JAIL TERMS NOT ENOUGH FOR THEM,THEY MIGHT COME BACK DO IT AGAIN.I SEND THIS GUYS BACK WHEREVERE THEY COME from.ITS NOT THAT I DONT LIKE THEM,THEY SIMPLY NOT LOYAL TO THIS COUNTY.THEY NO USE FOR OUR COMMUNITY EITHER.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  இப்படிப்பட்டவர்களுக்கு எட்டரை வருடத் தண்டனையென்பது போதாது. குறைந்தது இருபது அல்லது இருபத்தைந்து வருடமாவது தீட்டலாம். வெளியில் வரும்போது வயதும் ஐம்பதைக் கடந்துவிடும். மிகுதிக் காலத்தை தமது தவறை நினைத்து நினைத்தே, வேதனையுடன் இன்னொரு தண்டனையையும் அனுபவிப்பார்கள்.

  Reply
 • நண்பன்
  நண்பன்

  சுவிஸில் இப்படியான நபர்கள் நாடு கடத்தப்பட்டார்கள். அதன் பின்னர் அந்த இன மக்களிடம் அது குறைந்தது. தண்டனைக்குப் பின் இப்படி நாடு கடத்தப்பட்டவர்கள் தமிழர்களல்ல, துருக்கி மற்றும் யூகோஸ்லாவியர்கள். சில குற்றவாளிகளின் குடும்பம் கூட நாடு கடத்தப்பட்டனர். இந்த அச்சம் ஏனையவர்கள் தவறு செய்வதை இல்லாமல் செய்தது.

  இந்நாடுகளில் இப்படியான தேவைகளுக்கு விபச்சார விடுதிகள் இருக்கின்றன. இவர்களது தேவை காமமாக இருந்தால் அங்கு சென்று அதை தணித்துக் கொள்ள எந்த தடையுமில்லை. இவை ஒன்று ஏதோ பழி வாங்கலாக இருக்கும் அல்லது திட்டமிட்ட ஏதோ ஒரு செயலாகவே இருக்கும். எனவே நீதிமன்ற தண்டனைக்குப் பின் இவர்களை நாடு கடத்துவதே சிறந்தது.

  Reply
 • palli
  palli

  சரியான தீர்ப்பு இவர்களை மகிந்தாவின் தம்பி கோத்த பட்ச்சாவிடம் கொடுப்பதே; அத்துடன் அனைத்து தமிழர் அடிக்கடி வந்து போகும் இடங்களில்(உலகம் யாவும்) இவர்களது படத்துடன் இவர்களது ஈன செயலும் விளம்பர பலகையில் ஒட்ட வேண்டும்;…………

  Reply
 • Kusumbo
  Kusumbo

  ஒரு கொலைக்கு 21 வருடச் சிறை. பாலியல் வல்லுறவுக்கு 8 வருடம் மட்டுமா? ஒரு பெண் வல்லுறவுக்கு உள்ளாகும் போது ஒவ்வொருநாளுமல்லவா சாகிறாள். இந்த எட்டு வருடகால தண்டனையின் பின் புதிய தண்டனைக்காக இலங்கை பொலிசிடம் ஒப்படைத்து அங்கும் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும். இங்குள்ள தண்டனை இந்நாட்டுச் சட்டப்படி. இலங்கை பிரஜை என்பதால் அந்நாட்டுச் சட்டப்படியும் தண்டனை வழங்கப்படவேண்டும்

  Reply
 • மாயா
  மாயா

  //palli on July 9, 2009 9:07 pm சரியான தீர்ப்பு இவர்களை மகிந்தாவின் தம்பி கோத்த பட்ச்சாவிடம் கொடுப்பதே; அத்துடன் அனைத்து தமிழர் அடிக்கடி வந்து போகும் இடங்களில்(உலகம் யாவும்) இவர்களது படத்துடன் இவர்களது ஈன செயலும் விளம்பர பலகையில் ஒட்ட வேண்டும்;…………//

  பல்லியோடு இவ்விடயத்தில் ஒத்துப் போகிறேன். நாடு கடத்தப்பட்ட சில தினங்களில் போலீசாரிடமிருந்து துப்பாக்கியயை பறிக்க முற்பட்ட போது சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி வரும். மட்டக்களப்பு மற்றும் தென் இலங்கை வல்லூறுகளுக்கு நடந்தது தெரியும்தானே? தமிழனாக இருந்தாலும், இவர்களுக்கு பாராபட்சமே காட்டக் கூடாது.

  Reply
 • nallurkantha
  nallurkantha

  This crime should not be linked to any race.It is not good.I have to say one thing.After the gun culture introduced by the so called tamil liberators tamil youths became violent.This is a subject to be discussed by socilogists.

  Reply
 • Nakul (Thevayani)
  Nakul (Thevayani)

  I congratulate The victim- girl to come forward and fought the legal system to make sure his offenders are sentenced. I urge other Tamil girls who were in the past undergone such ordeal like this Tamil girl victim to come forward and complain to the police. Our diaspora society Still a lot of Tamil and non Tamil offenders are at large. Still free.

  Reply
 • Senthan
  Senthan

  இதற்கு தண்டனை ………………. வேண்டும். தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.

  Reply