பிரபாகரன் இடத்தைப் பிடிக்க யாருடனும் சண்டையிடவில்லை : வி. உருத்திரகுமாரன்

rudrakumaaran_v.jpgதமிழ் மக்கள் பிரச்சினைக்கு சுயநிர்ணய அடிப்படையில் தீர்வு காண்பதற்கே நாடு கடந்த “தமிழீழ அரசு – பிரபாகரன் விட்டுச் சென்ற கொள்கைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் மட்டும் தான ஈடுபட்டிருப்பதாக வழக்கறிஞர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.  நியூயோர்க்கைச் சேர்ந்த வழக்கறிஞரும் அரசியல் ஆலோசகருமான விசுவநாதன் உருத்திரகுமாரன் ஜுனியர் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியின் விபரம் வருமாறு:-

”நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு, புலம் பெயர்ந்த அனைவரின் உதவியும் அவசியம் தேவை. இந்தியாவின் உதவி மிகவும் அவசியம். இந்தியாவை நாங்கள் என்றுமே எதிரி நாடாக பாவித்ததில்லை. உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் தமிழர்கள்தான் இந்த இயக்கத்தின் தூண். ஆயுதம் எங்கள் குறிக்கோள் அல்ல.

இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழ்த் தலைவர்கள் அமிர்தலிங்கம், செல்வா போன்றோர் அறவழியில் போராடினார்கள். நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்கள். ஆனால், இலங்கை அரசு இதை நசுக்கியது. கயமைத்தனமாக அடியோடு அழிக்க முனைந்தது. வேறு வழியின்றி ஆயுதம் எடுத்தோம். அதன் பின்னரே வெளியுலகுக்கு தமிழினத்தின் துன்பங்கள் தெரியவந்தன. ‘போராட்ட வடிவங்கள் மாறினாலும், லட்சியம் ஒன்றுதான்!’ என்று சுதுமலையில் எங்கள் தலைவர் கூறினார்.

தமிழர்களின் தேசியப் பிரச்னைக்கு சுயநிர்ணய அடிப்படையில் ஒரு தீர்வு காண்பதற்கு இது அமைக்கப்பட்டது. பேச்சு வார்த்தைக்கு சமபல நிலை அவசியம். அரசுக்கு சமமாக இருந்தோம். நாடு கடந்த தமிழ் ஈழ அரசு, இப்போது அந்த இடைவெளியை நிரப்ப மிகவும் அவசியம். புறநிலை அரசுக்கும் [Government in excile] நாடு கடந்த அரசுக்கும் [Transnational Government] பல ஒற்றுமைகள் இருந்தாலும், சில வேறுபாடுகள் உள்ளன.

ஒரு நாட்டில் அரசு அமைக்க இயலாதபோதே புறநிலை அரசு பிறக்கும். தலாய்லாமா, பாலஸ்தீனர்கள், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் போன்றவை இந்த வகை. நாங்களோ, உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்களை ஒருங்கிணைக்க இதைக் கையில் எடுத்திருக்கிறோம். நாடு கடந்த தமிழ் ஈழ அரசு இன்னமும் அமைக்கவில்லை.

அதை அமைப்பதற்காகவே செயற்குழுவை ஏற்படுத்தியுள்ளோம். பலர் இந்தியாவில் இருந்து தொடர்புகொண்டு, ‘உலகத் தமிழர் வரலாற்றில் இது ஒரு புதிய சகாப்தமாயிற்றே. எங்களை ஏன் சேர்க்கவில்லை?’ எனக் கேட்கின்றனர்.  எங்கள் அறிக்கையை இராஜதந்திரிகள், தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பி, அவர்களின் கருத்துகளையும் கேட்டிருக்கிறோம். அடுத்தது, ஒவ்வொரு நாடுகளிலும் செயற்குழுவினை அமைக்கவிருக்கிறோம். கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளன. இந்தக் குழுக்களுக்குப் பயிற்சிப் பட்டறையும் நடத்தி வருகிறோம்.

தமிழ் ஈழப் பிரச்னையில், குறிப்பாக கடந்த நான்கு மாதங்களாக நடந்த சம்பவங்களில், இந்தியாவின் பங்கை பல கோணங்களில் ஆராய்ந்து வருகிறோம். எங்கள் திட்டம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றுதான் கூறுகிறோம். இனி ஆயுதப் போராட்டம் இல்லை. இந்தியாவின் இறையாண்மையையோ அல்லது பூகோள நலன்களையோ எம்முடைய செயல்கள் பாதிக்காது என உறுதி அளிக்கிறோம்.

நாங்கள் திட்டமிடுவது, வெறும் வலைதளத்தில் மட்டுமே வாழும் அரசு அல்ல.தலைவருக்குப் பிறகான பதவிச் சண்டையும் அல்ல. எந்த ஒரு குழுவையோ அல்லது தனிநபரையோ இது முன்னிலைப்படுத்தாது. விரைவில் தேர்தலும் நடத்துவோம். ஜனநாயக முறைப்படி, அதில் யாரும் பங்கு பெறலாம். முகாம்களில் சீரழியும் மூன்று இலட்சம் ஈழ மக்களைக் காப்பாற்றுவதே எங்கள் நோக்கம். எங்கள் இலக்கு, தனி ஈழம். அதை இனி ஜனநாயக முறையில் இந்தியா, உலக நாடுகளின் உதவியுடன் பெறுவோம்.

”பிரபாகரன் இடத்துக்கு நான் வர முயற்சிக்கிறேன்  என்பது சரியல்ல. அவர் இடத்தை இட்டு நிரப்புவதற்கு யாருமில்லை. அதற்கான முயற்சியை நான் மட்டுமல்ல, யாருமே எடுக்க மாட்டார்கள். அவருடைய கொள்கைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சியில்தான் நாங்கள் இறங்கி இருக்கிறோம். ஈழ தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அதற்காகவும் உலக அளவில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது இவ்வாறு உருத்திரகுமாரன் கூறியுள்ளார்.

Show More
Leave a Reply to msri Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

12 Comments

  • itam
    itam

    இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழ்த் தலைவர்கள் அமிர்தலிங்கம், செல்வா போன்றோர் அறவழியில் போராடினார்கள். நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்கள். ஆனால், இலங்கை அரசு இதை நசுக்கியது. கயமைத்தனமாக அடியோடு அழிக்க முனைந்தது. வேறு வழியின்றி ஆயுதம் எடுத்தோம். அதன் பின்னரே வெளியுலகுக்கு தமிழினத்தின் துன்பங்கள் தெரியவந்தன. ‘போராட்ட வடிவங்கள் மாறினாலும், லட்சியம் ஒன்றுதான்!’ என்று சுதுமலையில் எங்கள் தலைவர் கூறினார்.

    Reply
  • Kumaran
    Kumaran

    தலைவர் விட்டதை தொடர்வது என்பது

    முப்பது வருடமாக புலிகள் செய்த பொய் பிரசரங்களையும் மக்களை சுரண்டியதையும் தொடர்வது என்பது அர்த்தமாகும்.

    முதலில் மக்களுக்கு முன் சுய விமர்சனம் செய்யுங்கோ அதற்குப் பிறகு உண்டியலை குலுக்கலாம்.

    Reply
  • தமிழ் தலிபான்கள்
    தமிழ் தலிபான்கள்

    வணக்கம் உருத்திரகுமார் தங்களை விட வயதில் சிறியவன்.

    உங்கள் திட்டம் சரி வரவேண்டுமாக இருந்தால் முதலில் அடிப்படை நியமங்கள் ஒரு பொராட்டதிற்கு இருக்கவேண்டும். அது இருக்கோ?

    Reply
  • நண்பன்
    நண்பன்

    //முகாம்களில் சீரழியும் மூன்று இலட்சம் ஈழ மக்களைக் காப்பாற்றுவதே எங்கள் நோக்கம்//

    முகாம்களில் சீரழியும் மூன்று இலட்சம் ஈழ மக்களையும் கொல்வதே எங்கள் நோக்கம் என்று சொல்லியிருக்கிறார் உருத்திரகுமார் என்று நினைக்கிறேன்.

    உலகத் தமிழருக்கான தமிழ் ஈழம் இப்போது 3 லட்சத்துக்கு நாடு பெற்றுக் கொடுக்க முனைகிறது.

    //‘போராட்ட வடிவங்கள் மாறினாலும், லட்சியம் ஒன்றுதான்!’ என்று சுதுமலையில் எங்கள் தலைவர் கூறினார்.//

    ‘போராட்ட வடிவங்கள் மாறினாலும், லட்சியம் ஒன்றுதான்!’ தமிழரைக் கொன்று நீங்கள் வாழ்வதுதானே? நடத்துங்கோ.

    Reply
  • Kusumbo
    Kusumbo

    /இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழ்த் தலைவர்கள் அமிர்தலிங்கம், செல்வா போன்றோர் அறவழியில் போராடினார்கள். நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்கள். ஆனால், இலங்கை அரசு இதை நசுக்கியது/
    கடந்தகால அரசியல தெரியாமல் அமிரை அரச நசுக்கியதா அன்றி புலிகள் பொசுக்கினார்களா? ஏனையா வயித்தெரிச்சலைக் கிளறுகிறீர்?
    சரி எமக்கு நாம்வாழும் புலத்தில் தேர்தல் அடுத்தது உருத்திரகுமாரின் தேர்தல். வோட்டுப்போட்டு போட்டு வேட்டு வாங்கியது தானையா மிச்சம். நான் ஒரு நல்ல விசயம் சொல்லுறன் இலங்கை முழுவதையும் தமிழ்ஈழமாகப் பிரகடனப்படுத்தினால் அது இலகுவாகக் கிடைக்குமல்லவா? சிங்களவரைச் சிறுபான்மையாக்குமாற்போல் ஒரு குண்டுகொண்டுபோய் போட்டுவிட்டு ஒருவன் தற்கொலை செய்துகொண்டால் நாமே பெரும்பான்மை? சும்மா விடுங்கையா சனத்தை.

    Reply
  • mike
    mike

    இருபதாயிரம் போராளிகளின் இழப்பினால் கிடைத்த தமிழ் பிரதேசங்களை தக்கவைக்க முடியாமல், தான் தனது குடும்பம் வாழ்ந்தால் போதுமென்ற சுயநலத்தலைவனால் ஆறடி நிலத்தைப்பிடித்து அதில் தனது சமாதியைக்கூட அமைக்க முடியாத பிரபாகரனின் இடத்தைப் பிடிக்க யாருடனும் சண்டை பிடிக்கவில்லையென விலாசமே இல்லாத ஒரு உருத்திரகுமார் கூறுவதை யார்தான் ஏற்பார்களோ.

    Reply
  • thurai
    thurai

    வணங்காமண் கப்பல் கல்கத்தா கடலில் உடைக்கப்பபடுகின்றது. தமிழீழம் முல்லைத்தீவுக் கடற்கரையோடு முடிந்து விட்டது. உங்களின் நாடு கடந்த தமிழ் ஈழ அரசிற்கும் இதே கெதிதான். உங்களோடு சுற்ரம் சூழ இருப்பவர்கலெல்லாம் ஈழத்தமிழரின் அழிவில் வாழ்பவர்களே.

    துரை

    Reply
  • Thaksan
    Thaksan

    ஓமோம். இன்னம் கொஞ்ச தமிழர் மிஞ்சியிருக்கினம். அவையையும் வாழவிடக்கூடாது. நீரும் உம்மட குடும்பமும் பாதுகாப்பா அமெரிக்காவில இருந்துகொண்டு இதுவுஞ் சொல்லுவியள்…இதுக்கு மேலயுஞ் சொல்லுவியள். பிச்சை வேண்டாம். நாயைப் பிடி எண்டு இங்க சனம் பட்டுலையிற பாடு உங்களுக்கெங்க தெரியப்போகுது? பாதிக்குடும்பம் பரதேசத்தில மீதிக் குடும்பம் எமலோகத்தில எண்ட நிலையில தான் தமிழீழம் தகதகக்குது. சும்மா பம்மாத்து காட்டாமல் சனத்துக்கு ஏதேனும் செய்யவேணும் எண்டு நினைச்சா இங்க வாரும். இங்க நிண்டு எதைச் செய்யலாம் எப்படிச் செய்யலாம் எண்டு முடிவெடுப்பம். அங்க நிண்டு சும்மா பினாத்தாதையுங்க.

    Reply
  • மகுடி
    மகுடி

    //இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழ்த் தலைவர்கள் அமிர்தலிங்கம், செல்வா போன்றோர் அறவழியில் போராடினார்கள். நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்கள். ஆனால், இலங்கை அரசு இதை நசுக்கியது//

    அடப் பாவிகளா, எங்கட காலத்தில நடந்ததையே எப்படி எல்லாம் மாத்திட்டியள். ஐயா, அமிர்தலிங்கத்தைச் சுட்டுக் கொன்றது புலிகள். மறந்ததை ஞாபகப்படுத்துகிறோம். சில நேரம் இந்த புலத்து இளசுகளுக்கு உருத்திரன் பீலா விடுறார் போல? அதுதானே?

    Reply
  • mano
    mano

    உவர் அங்கே இருந்து கோரிக்கை விட இங்கே பிழைப்பு தேடும் சில பத்திரிகைள் அதைப் பிரசுரிக்க அதைப் பார்க்கும் எங்களுக்கு மீண்டும் துப்பாக்கியைத் துரக்கிவிடலாம் போலிருக்கிறது (எங்களுக்கும் புலிப்பாணி தான் தெரிகிறது) இவர்களையெல்லாம் மண்டையில் தட்டி அடக்க வேறுவழி தெரியவில்லையே……..

    Reply
  • msri
    msri

    புலிப்பினாமிகளின் கனவுலக சஞசாரிகளில் உருத்திரகுமாரும் ஒருவர்! தலைவர் சுதுமலையில் சொல்லி நந்திக் கரையில் முடித்தார்! இவர் புலம்பெயர்வில் “புலன் பெயர்ந்து ” ஆரம்பித்துள்ளார்!

    Reply
  • Kusumbo
    Kusumbo

    உருத்திரகுமார்! தமிழீழத்தைக் கட்டுங்கோ பாவம் தமிழரை விட்டிடுங்கோ. அவர்கள் பட்ட கஸ்டம் போதும். அமெரிக்காவிலை வித்தால் வாங்கி அனுப்பிவிடுங்கோ

    Reply